வியாழன், 4 மார்ச், 2021

ஆசை இருக்கு புத்தகம் படிக்க...   அதிருஷ்டம் இருக்கு படுத்துத் தூங்க!

 நாய் வாய் வைப்பது போல என்பார்கள்.  கண்ணெதிரே உள்ள பல்வகை உணவுகளிலும் நாய் ஒவ்வொன்றாக வாயை வைத்து ஒன்றையும் முழுசாக சாப்பிடாதாம். 

அதுபோல நான் ஒரே நேரத்தில் லைட்ரீடிங், கனமான ரீடிங்,  மீடியம் ரீடிங் என்றெல்லாம் மனதில் நினைத்து நால்வகைப் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தேன்.  அதில் ஒரு ஒற்றுமை, இரு புத்தகங்கள், அல்லது மூன்று புத்தகங்களில் சில விஷயங்கள் பொதுவான அம்சமாகி மூன்று விதமாக அலசப்பட்டிருந்தன..  எஸ்ரா எழுதிய 'எனது இந்தியா', மபொசி எழுதிய  'விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு',  முகில் எழுதிய 'அகம் புறம் அந்தப்புரம்' ஆகியவை அந்த மூன்று நூல்கள்.  அவற்றை ஒப்பிட்டுப் பார்பபதும் சுவாரஸ்யம்.  

 நடுவில் மீள்வாசிப்பு  வகையறாவாக கொஞ்சம் சுஜாதா, கொஞ்சம் சாண்டில்யன் என்று தொட்டுக்கொள்வேன்!

இதற்கு நடுவிலேயே புத்தக இடைக்காலக் கண்காட்சி வர, அதில் நான்கு வகை புத்தகங்கள் வாங்கி அதுவும் லிஸ்ட்டில் சேர்ந்தன.   வாங்கிய அந்த லிஸ்ட் ஏற்கெனவே கொடுத்திருக்கிறேன்!  ஏற்கெனவே நிறைய படிக்காத புத்தகங்கள் இருப்பதால் புத்தகக்கண்காட்சிப் பக்கம் போகக்கூடாது என்பதுதான் என் நிலை.  எங்கே முடிகிறது!  வாங்கி வாங்கி அடுக்குகிறேன்.

இந்த நேரத்தில் வீட்டில் புக்ரேக் வைக்கும் வேலைகள் தொடங்க, எல்லா வேலைகளிலுமே சுணக்கம் வந்தது.  பொருள்களை இடம் மாற்றி மாற்றி வைத்து, அவற்றை எங்கு வைத்தோம் என்பது மறந்து, தேடும்போது குழம்பி...

இது முக்கியமாக புத்தகங்களுக்கு பொருந்தும்.

புக்ரேக் அமைந்ததும் அனைத்துப் புத்தகங்களையும் தரம்பிரித்து அடுக்குவதில் நேரம் போனதோடல்லாமல் படித்துக் கொண்டிருந்த புத்தகங்கள், அடுத்துப் படிக்க என்று பார்த்து எடுத்து வைக்கப் பட்டிருந்த புத்தகங்கள் எல்லாம் ரேக் குழுமத்தில் சங்கமிக்க...

படித்துக் கொண்டிருந்த புத்தகங்களை எங்கு சேர்த்தோம் என்பது தேட வேண்டிய விஷயமாகிப் போனது.

இந்நேரத்திலா நிதியாண்டு முடிவு வரவேண்டும்?  அலுவலகத்தில் கரும்புச்சாறு பிழியும் மெஷின் ஒன்றை எடுத்து வந்து வைத்து அதற்குள் என்னை நுழைத்துப் பிழிய முற்படுகிறார்கள்.

இடையில் கீதாக்கா சொல்லிச் சொல்லி எனக்குள் அவ்வப்போது ஆர்வத்தைத் தூண்டிய புத்தகம் ஒன்றையும் வாங்கி உள்ளே பத்திரமாக வைத்தாயிற்று.  நீண்ட நாள் ஆசை, திட்டம்.  உடனே படிக்கப்போகிறோமோ இல்லையோ, ஆர்டர் தந்தால் உடனே அது கைக்கு கிடைத்திடவேண்டும்.  அதுவா...  படாத பாடு படுத்தியது....  பணம் கட்டி பத்து நாட்கள் கழித்துதான் தேதி கொடுத்திருந்தது.  தேதி வந்த சமயம் செய்தி வந்தது.  "சேதாரம் காரணமாக விற்பனையாளருக்கே திருப்பி அனுப்பப் படுகிறது".

உடனே அமேசானுக்கு தொலைபேசி, அவர்களிடம் போராடி என்ன ஏது என்று நிலைமையைக் கேட்டு அடுத்த இரண்டு நாட்களில் புத்தகம் கைக்கு வரும்படி பார்த்துக் கொண்டாச்சு.  ஆனால்...   இதுவரை மேலே மூடி இருக்கும் பிளாஸ்டிக் பேப்பரைக் கூட இன்னும் பிரித்துப் புரட்டிப் பார்க்கவில்லை.  வேலை பிழிகிறது!

ஆசை இருக்கு புத்தகம் படிக்க...   அதிருஷ்டம் இருக்கு படுத்துத் தூங்க!

ஆனால் இதன் இடையேயும் வேறொரு புத்தகம் வெகு சுவாரஸ்யமாக படித்துக் கொண்டும் வந்தேன்தான்.  அது அத்திமலை தேவன்.  அவ்வப்போது வந்த சந்தேகத்தை திரு நரசிம்மமாவிடமும் கேட்டுத் தெளிவுற்றேன்.

உறவினர் ஒருவர் மூலமாக படிக்கக் கிடைத்ததால் திருப்பிக் கொடுக்க வேண்டி முடிந்த வரை சீக்கிரம் படிக்க முயற்சி செய்தேன்.  இன்னும் பாக்கி இருக்கு!

இதுதான் இப்போதைய நிலை!

====================================================================================================

இந்த காபிரைட் இன்னும் செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை!  துப்பு அறியும் நாவல்!



==============================================================================================


பார்றா...    

'அன்னையர் தினம்' அறிவேன்...  'தந்தையர் தினம்' அறிவேன்...   இன்னும் சில 'தினங்'களும் அறிவேன்..    இதுவுமா?  இதை நான் இதுவரை அறியேன்!



=====================================================================================================

பழைய கவிதை ஒன்று...



====================================================================================================

"எதை எழுதினாலும் அதை நாலு பேர் பாராட்டவாவது  வேண்டும்.  அல்லது திட்டவாவது வேண்டும்.  இரண்டும் இல்லையென்றால் எழுதுவதைவிட எழுதாமல் இருப்பது நல்லது"

இதைச் சொல்லி இருப்பது யாராய் இருக்கும்?  அமரர் கல்கி எழுத்தாளர் விந்தனுக்குச் சொன்னதாம் இது!  அது மட்டுமல்ல...   விந்தன் கதைகள் பற்றி கல்கியின் தமாஷான அபிப்ராயம் ஒன்று கீழே!

                                   





===========================================================================================================

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்து இப்போது பள்ளிகள் திறக்கப்படுகின்றன.  ஆனால் பெற்றோர்கள் இன்றைய நிலையில் "அபபாடா...  தொல்லை விட்டது" என்று மதன் ஜோக் மாதிரி ஆடிப் பாடுவார்களா, இல்லை பயத்துடன் பள்ளிக்கு அனுப்புவார்களா?  எனக்கென்னவோ பள்ளிகள் திறக்கப்படுவதில் விருப்பமில்லை.  ஆனால் எத்தனை காலம் அபப்டியே போகும் என்பதும் சந்தேகம்தானே!




சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் ஏதோ ஒரு பிரஸ்தாபத்தில் ரெட்டைவால் ரெங்குடு பற்றி பேச்சு வந்தததால் என் சேமிப்பில் தேடி எடுத்து பகிர்கிறேன்.  ஒரு ஜாலிதான்!



109 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வேலைவிட்டு முடிச்சி வீட்டுக்கு லேட்டா வந்தேன் அதான் இப்போ வரகிடைச்சது :)

      நீக்கு
    2. ஆஹா..   நன்றி.   இப்போ இரவா  அங்கு?  சமைத்துச் சாப்பிட்டு சயனிக்க வேண்டுமோ?

      நீக்கு
    3. 12:20 :) .துயில போகிறேன் :)

      நீக்கு
    4. குட்நைட்!  ஸ்வீட் ட்ரீம்ஸ்!

      நீக்கு
  2. படுத்து தூங்க அதிர்ஷ்டம் எல்லாருக்கும் அமையாது :) நல்லா தூங்குங்க .மார்ச் என்ட் வேலை பளுவா !!! சீக்கிரம் மார்ச் ஓடி நீங்க வாங்கிய புக்செல்லாம் படிக்க வாழ்த்துக்கள் .நானல்லாம் புக் படித்து வருஷமாகுது .லைப்ரரிஸ் எல்லாம் மூடிட்டாங்க pandemic காரணாத்தால் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! உடனே தூக்கம் வருவது அதிருஷ்டம் என்று சொல்வீர்கள் என்று தெரியும்.  ஆனால் ஓவரா இல்ல இருக்கு!

      நீக்கு
  3. ஆஆ கசின்ஸ் டேயா /  கசின்ஸ் கெட் டு கெதர் எங்க குடும்பத்தில் பிரசித்தம் :) எங்க திருமணத்துக்கு முந்தினநாள் நடந்தது  இப்போகூட கிறிஸ்த்மஸ் டைமில்  எல்லாம் சேர்ந்து கலாட்டா செய்வாங்க :) .பரிசு கொடுத்துப்பாங்க ஜாலியா இருக்கும் 

    பதிலளிநீக்கு
  4. அரசியல் கவிதை நல்லா இருக்கு :) அதெல்லாம் நமக்கு வேணாம் தான் ஆனாலும் கியூரியாசிட்டி :) 
    விந்தன் கதைகள் அந்த அளவுக்கு பாதித்திருக்கு போல :) கல்கி அவர்களை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி.  விந்தன் அவர்கள் கல்கி அவர்களின் கீழ் கம்பாசிடராக பணிபுரிந்தார்.  இது ஒரு மறைமுக பாராட்டு...   இல்லையா!

      நீக்கு
    2. அது தமாஷாக இல்லை; கல்கி அவர்கள் உணர்ந்து சொன்னது அது. எத்தனை பேரால் இப்படி மனசில் படிவதைப் பொது வெளியில் மறைக்காமல் பகிர்ந்து கொள்ள முடியும்??.. கல்கி அதிலும் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர் தான்.

      நீக்கு
    3. எழுத்தாளர்களில் எத்தனையோ விதம். விந்தனின் நிலைமை எழுதினால் தான் அடுத்த வேளைக்கு வீட்டில் அடுப்புப் புகையும் என்கிற நிலை. அதனால் தான் பட்ட துயரை போலியாக அல்லாமல், யதார்த்தமாக அவரால் எழுத முடிந்தது. சுருங்கச் சொன்னால், கதைக்காக யோசிக்க வேண்டியதில்லை; 'கரு' கிடைக்கக் காத்திருக்க வேண்டியதில்லை. அனுபவித்து அல்லல் பட்ட வாழ்க்கையே கதையாயிற்று.

      அதிகப் பள்ளிப் படிப்பு படித்தவரில்லை விந்தன்,.வாழ்ந்த வாழ்க்கையே கல்வி கொடுத்த பள்ளிக்கூடமாயிற்று. உண்மையிலேயே சொல்ல வேண்டுமானால் கல்கி பத்திரிகையில் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் கோவிந்தன். சாதாரண அச்சுக் கோர்க்கும் தொழிலாளி. கல்கியின் எழுத்துக்களைப் புரிந்து கொண்டு அச்சுக் கோர்த்தவர்.

      கல்கி அவர்கள் லேசில் கதைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்துவிட மாட்டார். மனசில் புதுப்புனலாய் பொங்கிப் பிரவாகிக்கும் கருத்துக்கள் எழுத்துக்களாய் காகித்ததில் அசுர வேகத்தில் ஓடி பக்கம் பக்கமாய் பதிந்து கொண்டிருக்கும்.
      ஒரு பக்க 'ப்ரூப்' வந்தால், அதைப் படித்து அதில் சில திருத்தங்கள் செய்து இன்னும் நாலு சேர்க்கைகளும் செய்வார் கல்கி. அது மீண்டும் 'ப்ரூப்'பாக வரும் பொழுது இன்னும் சில சேர்க்கைகள். கடைசி வரை இந்த 'இறுதி ஷேப்' கொடுக்கிற விஷயத்தில் கல்கிக்கு திருப்தியே வராது. கல்கியே இது பற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டிருப்பதை வாசித்திருக்கிறேன்.

      தன் எழுத்து வேகத்திற்கும், திருத்தங்களுக்கும் ஈடு கொடுத்து சலித்துக் கொள்லாமல் அச்சுக் கோர்த்த கோவிந்தனை மிகவும் பிடித்துப் போய்விட்டது, கல்கிக்கு. கோவிந்தனின் உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து வந்த எழுத்தாற்றலையும், எழுதத் தோன்றிய ஆசைகளையும் மிகச் சரியாகப் புரிஹ்து கொண்ட கல்கி அவரை 'கல்கி' பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக்கி தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.

      -- 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்ற மறக்கமுடியாத தமிழ் எழுத்துலகம் பற்றிய எனது நூலில் 'பாலும் பாவையும்' விந்தன் பற்றி எழுதியது இது.
      இந்தப் புத்தகக் கண்காட்சியில் சந்தியா பதிப்பகம் ஸ்டாலில் இந்த நூல் கிடைக்கிறது.

      நீக்கு
    4. விவரங்களுக்கு நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  5. அந்த மாட்டை  கூட்டி வரும் ரெங்குடுதான் கியூட் .ஸ்கூல் திறப்பதில் இங்கேயும் அப்படிதான் பேரன்ட்ஸ் படும் பாடு :) ஆனால் ஹாஸ்பிடல் கீ வொர்க்கர்ஸ் பிள்ளைங்க  மட்டும் ரெகுலரா ஸ்கூலுக்கு போறாங்க ஒரு பள்ளியில் சுமார் 30 பிள்ளைங்களுக்காக ஸ்கூல் நடத்தறாங்க 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெங்குடு எப்பவுமே ஜாலிதான்!  அவன் முகபாவங்களே ஆயிரம் கதை சொல்லும்!

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் வளமுடன் இருக்க இறைவன் நல்லாசி
    புரியட்டும்.

    அன்பு ஏஞ்சலுக்கு இனிய இரவுக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. இங்கேயும் பள்ளிகள் திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.நாங்கள் அனுப்புவதாக இல்லை.
    டீச்சர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிந்த பிறகு
    அதைப் பற்றி யோசிக்கலாம்.

    நானும் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
    அடுத்த வாரம் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், முன்னெச்சரிக்கை நல்லது.

      நீக்கு
    2. நல்லது.  நான் நினைத்திருந்தால் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்திருக்கலாம்.  வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. நான் இன்று போட்டுக் கொண்டேன்.  

      நீக்கு
  8. மதன் அவர்களின் நகைச்சுவை
    என்றும் சிரிக்க வைக்கும்.
    அம்மாவும் அப்பாவும் ஆடுவோமே ஆடுவது சிரிப்பு தான்.
    பாகவதர் ஸ்லிங்க் ஷாட் பார்த்து மிரளுவது
    ஹாஹ்ஹா.
    என்ன ஒரு கற்பனை!!

    பதிலளிநீக்கு
  9. ''விந்தன் கதைகளைப் படித்து கல்கி பயந்தாரா.
    என் கதையெல்லாம் படித்து யார் யார்
    பயந்தார்களோ!!!!!!

    பதிலளிநீக்கு
  10. குதம்பை சித்தர் போலவே நீங்கள் எழுதி இருக்கும்
    கவிதை அருமை.
    அரசியல் வேண்டாம் என்றாலும் ஓட்டுப் போட வேண்டும்
    ஒரு நல்ல நபருக்கு'.

    பதிலளிநீக்கு
  11. கஸின்ஸ் டேயா!!!

    கண்டிப்பாக இந்த ஒன்று விட்ட உறவுகள் வேண்டும்.

    என் கசின்ஸ் எல்லோரும் என்னைவிட 15 வயதாவது சிறியவர்கள்:)
    இருந்தும் என்னுடன் உயிராகப் பழகுவார்கள்.
    வாழ்க கசின்ஸ்.

    பதிலளிநீக்கு
  12. புக்ரேக் அமைந்ததும் அனைத்துப் புத்தகங்களையும் தரம்பிரித்து அடுக்குவதில் நேரம் போனதோடல்லாமல் படித்துக் கொண்டிருந்த புத்தகங்கள், அடுத்துப் படிக்க என்று பார்த்து எடுத்து வைக்கப் பட்டிருந்த புத்தகங்கள் எல்லாம் ரேக் குழுமத்தில் சங்கமிக்க...////////
    புக் ராக் படம் எங்கே?

    பதிலளிநீக்கு
  13. 1936 இல் காப்பிரைட்டா!!! அடடா.
    ஜெய ரங்கன் நல்ல எழுத்தாளர் போல இருக்கு.
    ஏனோ வீர தீர சிங்கம் நானே பாடல் நினைவுக்கு வருகிறது:)

    பதிலளிநீக்கு
  14. ரெட்டைவால் ரெங்குடு - எப்போதும் மீண்டும் படிக்கவும் ரசிக்கும்படி இருக்கும்.

    கவிதை ரசித்தேன்.

    எனக்கும் பசங்க கல்லூரி போனால் நல்லது என்றே தோன்றும். குறைந்தபட்சம் டிசிப்பிளின் வரும். ஆனால் போனால் புதுப் பிரச்சனை வருமோ என்றும் பயம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.  ரெட்டைவால் ரெங்குடு, சிரிப்புத்திருடன் சிங்காரவேலு,  முன்ஜாக்கிரதை முத்தண்ணா, துண்டுபீடி துலுக்கணம்....

      நீக்கு
  15. புத்தகங்கள் - எனக்கும் அந்த அனுபவம்தான். நிறைய புத்தகங்கள் ஒரு சமயத்தில் வாங்குவேன்..பிறகு எப்போ படிப்பேன் என்றே தெரியாது. படிக்காமல் இருந்த புதுப் புத்தகங்களையும் கொடுத்துவிட்டு வர நேர்ந்தது.

    இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் ஆஸ்ரமத்திலும் 6 புத்தகங்கள் வாங்கினேன். அவற்றையும் படிக்கணும். அதற்கு முன்பு இங்கு ராமகிருஷ்ணா புத்தக நிலையத்தில் வாங்கின புத்தகங்களும் படிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "கொடுக்கவும் மாட்டேன்; கொள்ளளவு மாட்டேன்...." என்று ஒரு சொலவடை உண்டு.  என் அம்மா அடிக்கடி சொல்வார்.   புத்தகம் விஷயத்தில் நான் அப்படிதான்!

      நீக்கு
    2. 'கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை மாதோ..' என்பது கம்பன் வாக்கு.

      நீக்கு
    3. //கொடுக்கவும் மாட்டேன்; கொள்ளளவு மாட்டேன்...." //


      "கொள்ளவும் மாட்டேன்"  என்று இருக்கவேண்டும்!

      நன்றி ஜீவி ஸார்.  கம்பன் வாக்கு வேறு.  இதன் தொடர்ச்சி வேறு ஒரு வரியும் வரும் ஜீவி ஸார்.  நான் அதைக் குறிப்பிடவில்லை!

      நீக்கு
    4. இனிமேலே புத்தகங்களைக் கொடுக்கையில் என்னை நினைச்சுக்குங்க நெல்லை. எனக்கு அனுப்பி வைங்க!

      நீக்கு
  16. இத்தனை புத்தகங்களை அதுவும் ஹெவி சப்ஜெக்ட்,
    படிப்பது எனக்கு சிரமம். ஒரு புத்தகத்தை எடுத்து பக்கம் பக்கமாகப்
    பாரணை செய்யப் பிடிக்கும். புத்தகங்கள் அலுப்பதே இல்லை.

    கீதாம்மா சொல்லி சொல்லி ஐயர் அவர்களின் என் சரித்திரம் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.
    அது இந்தியாவிலிருந்து வந்தே பத்து மாதங்கள் ஆகிறது.
    சீரியஸ் புத்தகங்களை ரசிக்க முடிவதில்லை.
    நமக்கு பி விஆர், தி.ஜா, சுஜாதா, கல்கி, லக்ஷ்மி
    ,ராச நாராயணன் ஐய்யா இவர்கள் மனதை நிறைக்கிறார்கள்.
    கொத்தமங்கலம் சுப்புவை விட்டுவிட்டேனே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் புத்தகம் என் அப்பா வாங்கி வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.  சமீபத்தில் கீதா அக்கா சொல்லிதான் அழகிய மரம் வாங்கி வைத்திருக்கிறேன்.  

      நீக்கு
    2. கட்டாயமாய் அழகிய மரம் படிங்க ஶ்ரீராம். முடிஞ்சால் தரம்பாலின் எல்லாப் புத்தகங்களுமே படிக்கலாம். குறிப்பாய்ப் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை பற்றி.

      நீக்கு
    3. படிக்கத்தான் வாங்கி இருக்கிறேன்!  எப்போ ஆரம்பிப்பேனோ!  

      // பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை//

      கிடைக்கிறதா, பார்க்கிறேன்.

      நீக்கு
  17. தூக்கம் வராதவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும். உங்களுக்கு மன உழைப்பு அதிகம்.
    அதுதான் உடனே உறக்கம் வருகிறது ஸ்ரீராம்.
    தூக்கம் வரும்போது தூங்கி விடுங்கள்.
    ஓய்வு கிடைக்கும் போது
    படித்தால் ஆச்சு.
    இந்த வாரத்தின் கதம்பம் மிக அருமை.
    நன்றியும் வாழ்த்துகளும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கு நன்றி அம்மா.  தூக்கம் வரும்போது தூங்காமல் இருக்க முடிவதில்லை.  ஆனால் என்ரத்தை வீண் செய்கிறேனோ என்கிற எண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை.

      நீக்கு
  18. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  19. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  வணக்கம்.   இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. //ஆசை இருக்கு புத்தகம் படிக்க... அதிருஷ்டம் இருக்கு படுத்துத் தூங்க!//

    தூக்கம் வரவில்லை என்றால் புத்தகம் படிக்க சொல்கிறார்கள்.
    நேற்று டாக்டர் செக்கப்புக்கு அழைத்து சென்றான் மகன் தமிழ் பேசும் டாகடர் கிடைத்தார் எனக்கு. மிக அருமையாக பேசினார்கள் தூக்கம் வரவில்லை என்றால் பாட்டு கேளுங்கள், புத்தகம் படிங்க என்றார்கள். திருநெல்வேலியில் மூன்று ஆண்டுகள் வேலை செய்ததாக கூறினார்கள். பெயர் அர்ச்சனா நாகராஜன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டரே புத்தகம் படித்தால் தூக்கம்தான் வரும் என்கிறார் போல!   ஹா..  ஹா..  ஹா...     திருநெல்வேலி என்றால் நெல்லைக்குத் தெரிந்தவராய் இருக்குமோ!!!

      நீக்கு
    2. புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் ஓடிப் போயிடாதோ?

      நீக்கு
    3. அப்போதான் சுகமா வருது!  கண்கள் கனத்துப் போகின்றன.

      நீக்கு
  22. கவிதை நன்றாக இருக்கிறது.
    இங்கும் பேரனுக்கு பள்ளி திறந்து விட்டது அனுப்ப பயமாக இருக்கிறது.
    எல்லோரும் ஊசி போட்டு விட்டால் அனுப்பலாம் என்று நினைக்கிறார்கள்.

    ரெட்டைவால் ரங்குடு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா..   இங்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாய்தான் இருக்கும்.  ஆனால் மக்களே பயமின்றி திரிகிறார்களே...

      நீக்கு
  23. ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்றிருந்தது ஒரு காலம். இப்போதெல்லாம் புத்தகங்களை கொறிக்கிறேன். தற்சமயம் கொறித்துக் கொண்டிருக்கும் புத்தகம் சோ எழுதிய மகாபாரதம். இணையத்தில் கண்ணதாசனின் சேரமான் காதலியை படிக்கத் தொடங்கியிருக்கிறேன். புத்தகங்களில் தொடர்கதை படித்தது போல வாரம் ஒரு அத்தியாயம் படிக்கலாம் என்று எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்...  எனது பள்ளி, கல்லூரிக் காலத்திலெல்லாம் அப்படிதான்.  எடுத்த புத்தகத்தை கடகடவென்று படித்து முடித்து, அடுத்த புத்தகம் எடுப்பதுவே வழக்கம்.  இப்போது முடிவதில்லை.   படித்த டுங் மனம் தானாகவே உள்வாங்கிக்கொண்டது.  இப்போது உள்வாங்கிப் படிக்க நினைக்கிறோமோ என்னவோ..  தாமதமாகிறது.

      நீக்கு
  24. புத்தகங்கள் - குறிப்பாக அச்சுப் புத்தகங்கள் இப்போது படிக்க முடிவதில்லை. கிண்டில் வழி நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். புத்தகங்கள் வாங்குவதும் குறைந்திருக்கிறது.

    பதிவின் வழி சொன்ன மற்ற விஷயங்களும் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.   சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்து விமர்சனம் எழுதி இருந்தீர்கள்.  அதற்கே உங்களை பாராட்ட வேண்டும்.

      நீக்கு
  25. படிப்பதில் அசதி வயசாவதைக் காட்டுகிறது. ரெட்டை வால் ரெங்குடுவின் சேட்டைகள் இந்தக் காலத்திற்கும் பொருத்தமாக இருப்பது வியப்பு.அரசியலை தவிர்ப்பது முடியாது. ஆனால் அரசியல் சொந்தக் கருத்தாக மற்றவர்கள் மேல் திணிக்கப் படாமல் இருந்தால் நல்லது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JC ஸார்...   இரண்டு வாரங்களாக உங்களைக் காணோம்.  வரவுக்கு நன்றி.  

      // ஆனால் அரசியல் சொந்தக் கருத்தாக மற்றவர்கள் மேல் திணிக்கப் படாமல் இருந்தால் நல்லது. //

      100 % உண்மை.

      நீக்கு
  26. புத்தகங்கள் படிப்பதில் இவ்வளவு ஞாபக சக்தியா...?!

    பதிலளிநீக்கு
  27. அனைவருக்கும் காலை வணக்கம்! சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்று ஆசை. கடைசியாக படித்தது சு.வெங்கடேசனின் "வீரயுக நாயகன் வேள்பாரி" மற்றும் இந்திரா சௌந்தர்ராஜனின் "இறையுதிர் காடு". இறையுதிர் காடு விகடனில் தொடராய் படித்தது. புத்தகமாய் படிக்க வேண்டும் என்று ஆவல். புத்தகம் படிக்க நேரம் கிடைப்பதில்லை.
    ரெட்டை வால் ரெங்குடுவின் தயவில் சிறிது நேரம் சிரித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வானம்பாடி. அடுத்த கதை எப்போ அனுப்பறீங்க?;

      நீக்கு
  28. 'ஆசை இருக்கு புத்தகம் படிக்க..' 'எழுதுவது எப்படி?' என்பது உங்களுக்கு வசப்பட்டு விட்டது என்று அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன், ஸ்ரீராம். அந்த நினைப்பை உங்களிடம் இப்பொழுதாவது பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. எழுதக் கற்றுக் கொடுக்கும் வகுப்பறையாகவே வியாழன் 'எங்கள் பிளாக்' பகுதிகள் மாறி விட்டதை இந்தத் தருணத்திலாவது சொல்லியே ஆக வேண்டும். உங்கள் சேவைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வியாழன் பதிவு வழக்கம் போல் அருமை...

    பதிலளிநீக்கு
  30. ரெட்டை வால் ரெங்குவின் ரசிகர் படையில் நானும் ஒருவன்.. ரங்குவை விட அவன் அழைத்து வரும் மாட்டின் அழகே அழகு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதனின் எல்லா ஜோக்ஸுமே நன்றாய் இருக்கும் என்றாலும் இவர்கள் ஸ்பெஷல்!  இல்லையா துரை செல்வராஜூ ஸார்?

      நீக்கு
  31. அது நாய் நக்குவது போல என்போம்:)..
    நீங்கள் ஆரம்பிச்சுவிட்ட ஆசைதான் ஶ்ரீராம்... இப்பவும் எப்போதாவது வாசிக்கிறேன் கிண்டிலில்... இப்பொழுது கையில்லாத பொம்மை... நடுப்பகுதியிலயே ஒரு வருடமாக நிக்குது:)... அடுத்துப் படிக்க கியூவரிசையில்:) இருப்பது கற்பூர பொம்மை... இவை எல்லாம் படிச்சிட்டீங்களோ நீங்கள்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் ஒன்றுதான் இல்லையா அதிரா?  கையில்லாத பொம்மை ரா கி ர...   எப்பொழுதோ வாசித்தது.  எங்கள் வீட்டில் பைண்டிங் கலெக்ஷனில் இருந்தது.  இப்போது இல்லை!

      நீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    அழகான தலைப்பு. உண்மை.. தலைப்புக்கேற்றபடிதான் புத்தகங்கள் நிறைய படிக்க ஆசை வருகிறது. ஆனால், நேரந்தான் ஒதுக்க இயலவில்லை அப்படியே ஒதுக்கும் கொஞ்ச இரவு நேரம் உறக்கம் தன் பங்குக்கு கண்களை தழுவி விடுகிறது. மேலும் சின்ன எழுத்துகளை இரவு வெகு நேரம் படிக்க கண்கள் வேறு ஒத்துழைக்க மறுக்கிறது. அழகாக சொல்லியுள்ளீர்கள். இங்கு என் கதையுயையும் இப்படித்தான் என யோசித்தேன். அதுவே இந்த வியாழனிலும் தங்கள் பதிவாக... விடுமுறை நாட்களிலாவது உங்களுக்கு படிக்க கொஞ்சம் நேரம் கிடைக்க வேண்டுமென பிராத்திக்கிறேன்.

    கவிதை அருமையாக உள்ளது.
    கசின் தினம் என்றொன்று உண்டென தெரிந்து கொண்டேன். அது இன்றா?

    பள்ளிகள் திறந்தால் குழந்தைகளுக்கு நல்லதுதான். ஆனால், சின்ன குழந்தைகளை அனுப்ப பயமாகத்தான் இருக்கிறது. அந்த ஜோக்கும் படமும் நன்றாக உள்ளது.

    ரெட்டைவால் ரெங்குடு ஜோக் அனைத்தும் நன்றாக உள்ளது. ரசித்துப் படித்தேன். இந்த வார கதம்பம் அருமையாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் மொபைலில் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் கமலா அக்கா..   அது ரொம்பவே சிரமம்.  நீங்கள் பதிவே மொபைல் மூலமாக வெளியிடுகிறீர்கள்.  அது சாதனைதான்.

      விடுமுறை நாட்களில் வியாழன் வெள்ளி பதிவுகள் எழுத நேரம் எடுத்துக் கொள்கிறேன்!

      //உங்களுக்கு படிக்க கொஞ்சம் நேரம் கிடைக்க வேண்டுமென பிராத்திக்கிறேன்.//

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  33. புத்தகக் கடைகளில், கண்காட்சிகளில் சுற்றுவது, சில தேர்ந்தெடுத்த புத்தகங்களை வாங்கிவருவது பிடிக்கும். அதுவும் எப்போதாவதுதான் நிகழ்கிறது, இப்போதெல்லாம்.

    கிண்டிலில் தரவிறக்கம் செய்துவைத்திருக்கும் சில கவிதை நூல்களையே இன்னும் படிக்கவில்லை சரியாக.

    பொதுவாக ஆர்வமாக, அவசரமாக வாங்கி, சாவகாசமாகப் படிப்பது வழக்கம் எனத் தெரிவிக்கலாயிற்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ கிண்டில் அறிவு எனக்கு வரவில்லை.  அதுபக்கம் செல்வதில்லை.  
      ஜெமோவின் விஷ்ணுபுரம் புத்தகம் வாங்கி மூன்றரை வருடங்கள் ஆகின்றன.  சமீபத்தில்தான் பேக் பிரித்தேன்.  ஆனால் இன்னும் படிக்க ஓடவில்லை!

      நீக்கு
    2. விஷ்ணுபுரம் அவ்வளவு எளிதில் படிச்சுட முடியாது. சித்தப்பா கொடுத்தார் என்னால் பாதிக்கு மேலே படிக்கவே முடியலை.

      நீக்கு
    3. அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

      நீக்கு
    4. ஜெயமோகனின் அதீதமான வர்ணனைகள்/ விபரங்கள், தனக்குத் தெரிந்ததை எல்லாம் கொட்டி விடும் எண்ணம், உளவியல் ரீதியாகத் தன் எழுத்தை மிஞ்ச யாருமில்லை என்னும் எண்ணம், அவருடைய அடிப்பொடிகள் எனப் பல காரணங்கள். நல்ல வேளையாக "வெண் முரசு" ஆரம்பித்த ஒரு சில அத்தியாயங்களிலேயே விட்டு விட்டேன். முதல் புத்தக வெளியீட்டு விழாவில் அதற்குச் சித்தப்பா செய்த விமரிசனத்தைப் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன்.

      நீக்கு
    5. இல்லை. அந்த விமர்சனம் படிக்கவில்லை. நானும் ஆரம்ப அத்தியாயங்களிலேயே கழன்றுகொண்டேன். நாமிருவரும் அப்போதே இதுபற்றி பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்.

      நீக்கு
  34. புத்தக் காப்புரிமை பற்றிய தகவல்

    70 ஆண்டுகள்

    ஒரு குறிப்பிட்ட படைப்புக்கான பதிப்புரிமை காலமானது பல காரணிகளைப் பொறுத்தது, அது வெளியிடப்பட்டதா, அப்படியானால், முதல் வெளியீட்டின் தேதி. ஒரு பொது விதியாக, ஜனவரி 1, 1978 க்குப் பிறகு உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கு, பதிப்புரிமை பாதுகாப்பு ஆசிரியரின் வாழ்நாள் மற்றும் கூடுதலாக 70 ஆண்டுகள் நீடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  முன்னர் ஐம்பது ஆண்டுகள் என்று இருந்ததாய் ஞாபகம். மேலும் ஆசிரியரின் வாழ்நாள் மற்றும் கூடுதலாக 70  ஆண்டுகள் என்பது தகவல்.  நன்றி மதுரை.

      நீக்கு
  35. புத்தகப் படிப்பு
    நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கலாம்

    பதிலளிநீக்கு
  36. நான் இப்போது சிவசங்கரியின் 'சூரிய வம்சம்' நினைவலைகள் பகுதி 1 வாசித்துக் கொண்டிருக்கிறேன். பகுதி 2 உள்ளது.அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்தால் படிக்க மாட்டேன் என்றா சொல்லப் போகிறேன்!

      நீக்கு
  37. விடிய வந்து முதல்பகுதி மட்டுமே படிக்க முடிஞ்சுது, இப்போதான் போஸ்ட் முழுவதும் படிக்கிறேன்...

    //"எதை எழுதினாலும் அதை நாலு பேர் பாராட்டவாவது வேண்டும். அல்லது திட்டவாவது வேண்டும். இரண்டும் இல்லையென்றால் எழுதுவதைவிட எழுதாமல் இருப்பது நல்லது"///

    ஹா ஹா ஹா சூப்பர்:)).

    பள்ளி ஆரம்பம், பாவம் ஸ்ரீராம் பிள்ளைகளும் பெற்றோரும்.. வீட்டில வைத்து சும்மா சமாளிப்பது ஓகே, ஆனா ஓன்லைன் வகுப்பு என கொம்பியூட்டரை ஓன் பண்ணி, பிள்ளைகளைப் படிக்க வச்சு, அது கொனெக்ட் ஆகாட்டில் ரீச்சருடன் மல்லுக்கட்டி, பின்பு ஹோம் வேர்க் எல்லாம் செய்ய வச்சு அதை ரீச்சருக்கு அனுப்பி.. இப்படி பெற்றோர் பாடுதான் ரொம்பப் பாவம்.. இங்கும் பிறைமறி ஸ்கூல் மட்டும் அதிலும் சில வகுப்புக்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்குது, ஏனையவை இனித்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை  அந்தப் பள்ளிக்கால அனுபவங்களைத் தாண்டி விட்டோம் நாங்கள்!

      ஆமாம்..   எழுதியதற்கு ஏதாவது ஒரு பின்விளைவு இருக்க வேண்டுமல்லவா!

      நன்றி அதிரா...

      நீக்கு
  38. காப்புரிமை 60 ஆண்டுகள் எனக் கேள்விப்பட்ட நினைவு. ஜே.ரங்கராஜூ கதைகள்/ வடுவூர்/ஆரணி/வை.மு.கோ ஆகியவர்கள் என் தாத்தா மூலம் அறிமுகம் ஆனவர்கள். வடுவூரின் ஒரு நாவல் தான் "அறிவாளி"யாக வந்ததாய்ச் சொல்லுவார்கள். ரெட்டைவால் ரங்குடுவெல்லாம் எப்போது ரசிக்கக் கூடிய பட்டியலில் உண்டு.

    பதிலளிநீக்கு
  39. நானும் ஓசியில் கிடைச்ச "அத்திமலைத்தேவன்" புத்தகத்தில் 3 பாகங்கள் முடிச்சுட்டு நான்காம் பாகம் வந்திருக்கேன். நடு நடுவில் படிக்க நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கையில் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. இருக்கும் புத்தகங்களை வாசித்த பின்னரே மேலும் வாங்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகவும் இருக்கிறது. .. கஸின்ஸ் டே, கொண்டாடப்பட வேண்டிய ஒன்று! .. பள்ளிகள் திறப்பதில் தெளிவான முடிவுக்கு வர முடியாமல்தாம் பெரும்பாலான பெற்றோர் தவிக்கின்றனர். ரெங்குடு.. ரசித்தேன். நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  ஆனால் முன்னளவு இலலாவிடினும் இப்பவும் கூட கொஞ்சம் புத்தகம் வாங்கி வைத்து விட்டேன்.  அதேபோல கொஞ்சம் சுறுசுறுப்பாக வாசிக்கவும்  ஆரம்பித்துள்ளேன்!  அந்த சுறுசுறுப்பு தொடரவேண்டும்.  பார்ப்போம்.

      நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!