சனி, 6 மார்ச், 2021

மஞ்சள் மகிமை !

 

மைசூர் கலெக்டராக இருப்பவர் ரோஹினி சிந்தூரி. வயது 36. துணிச்சலாக செயல்பட்டு பெண் சிங்கம் என பேர் எடுத்தவர். பல டிரான்ஸ்ஃபர்களை பார்த்த பிறகும் நேர்மையான ஐ.ஏ. எஸ். ஆக செயல்படுபவர். ஒரு வாரத்துக்கு முன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் குடகு மற்றும் சில சுற்றுலா ஸ்தலங்களுக்கு காரில் சென்றார். போன இடத்தில் டயர் பஞ்சர் ஆனது. அந்நேரம் பார்த்து கணவரும் இல்லை. ரோஹினி சற்றும் யோசிக்கவில்லை; ஜாக்கி உதவியுடன் டயரை கழற்றி விட்டு, ஸ்டெப்னி டயரை மாட்டினார்.


= = = = 

மஞ்சளில் எவ்வளவு 'குர்குமின்' உள்ளது?

நம்முடைய பாரம்பரிய வழக்கத்தில், மங்கலப் பொருளாகவும், கிருமி நாசினியாகவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன், வைரசை அழிக்கும் திறன் மஞ்சளுக்கு உள்ளதா என்று ஆராயப்பட்டது.கொரோனா வைரஸ், நுரையீரலை தாக்கும் போது, சுவாசப் பைகளில் வெடிப்பை ஏற்படுத்தி, ரத்தக் கட்டியை உண்டாக்கி, ரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணமே நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தான் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் நுரையீரல் இறுகி, சுவாசிக்க இயலாமல் இறப்பு நேரிடுகிறது. இதற்கு, 'சைட்டோகைய்ன் ஸ்டார்ம்' என்று பெயர். இந்த நிகழ்வு நடக்காமல், 'குர்குமின்' தடுப்பதாக, ஆரம்ப கட்ட ஆய்வு கள் தெரிவிக்கின்றன.அவசியம் இல்லை'ஜிகா, சார்ஸ், ஹெபடைடிஸ்' வைரஸ் கிருமிகள் பரவிய போது, மஞ்சள் நல்ல பலனை கொடுத்து உள்ளது; அதனால் தான், கொரோனா வைரசுக்கும் ஆய்வு செய்யப்படுகிறது.வேக வைத்து, காய வைத்து, பொடி செய்த மஞ்சளை விடவும், பச்சை மஞ்சள் கிழங்கில் தான் அதிக அளவு குர்குமின் உள்ளது.

ஒரு பச்சை மஞ்சள் கிழங்கில், 2 - 9 சதவீதம் குர்குமின் உள்ளது.மஞ்சளை தனியாக சாப்பிடுவதை விட, மிளகுடன் சேர்த்து பயன்படுத்தினால், அதில் உள்ள குர்குமினை முழுமையாக உடல் உறிஞ்சும். சித்த மருத்துவத்தில், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்தே பயன்படுத்தி உள்ளனர். குர்குமின் முழுமையாக உடலில் சேர, மிளகு மற்றும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம்.தினமும், 30 - 75 கிராம் மஞ்சள் சாப்பிட்டால், 2 - 9 சதவீதம் குர்குமின் கிடைக்கும்.மேலை நாடுகளில் மஞ்சள் விளைச்சல் கிடையாது என்பதால், இதில் உள்ள குர்குமினை தனியே பிரித்து, மாத்திரை வடிவில் பயன்படுத்துகின்றனர்; நமக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.நல்ல பலன்சித்த மருத்துவத்தில், நுரையீரல் பிரச்னை, சளி, ஆஸ்துமா, இருமல் இருந்தால், மஞ்சள், மிளகு பொடியை பாலுடன் சேர்த்து, குடிக்கச் சொல்வோம்.

சிறிது மஞ்சளுடன் மிளகு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து, உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் நீங்கும். தோல் வியாதி இருந்தால், மஞ்சளுடன் குப்பைமேனி இலை சேர்த்து அரைத்து, பிரச்னை உள்ள இடத்தில் பூசினால், நல்ல பலனை தரும்.தும்மல், மூக்கடைப்பிற்கு மஞ்சளை தீயில் சுட்டு, அதன் வாசனையை முகர்ந்தால், சரியாவதோடு, ஒற்றைத் தலைவலி குறையும்.மஞ்சளை தேய்த்து குளிப்பதால் தோல் ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் தொடர்ந்து மஞ்சள் சாப்பிடும் போது, மாதவிடாய் பிரச்னைகள், நீர்க்கட்டி வராது. இப்பிரச்னைகள் இருந்தால், விடாமல் மஞ்சளை சாப்பிட்டால், கோளாறு சரியாகி, சீரற்ற மாதவிடாய் சரியாகும்; ஹார்மோன் செயல்பாடும் சீராக அமையும்.



டாக்டர் ஜி.சதீஸ் குமார்,
சித்த மருத்துவர்,
சென்னை.
தொடர்பு எண் : 98400 25847
= = = = =
18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக சாதனை. 

புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமீபத்தில் மஹாராஷ்டிராவின் சோலாப்பூர், கர்நாடகாவின் விஜய்புரா இடையே செல்லும் என்.எச்., 52-ல் 25.54 கிலோ மீட்டருக்கு ஒற்றை வழி சாலை அமைத்து உலக சாதனை படைத்துள்ளது.


latest tamil news


இந்த சாலை ஆனது அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பெங்களூரு - சித்ரதுர்கா - விஜய்புரா - சோலாபூர் - அவுரங்காபாத் - இந்தூர் - குவாலியர் சாலையின் ஒரு பகுதியாகும். அதில் தற்போது விஜய்புரா - சோலாபூர் இடையே 110 கி.மீக்கு நான்கு வழிச்சாலை அமைத்து வருகின்றனர். அக்டோபர் 2021-ல் இச்சாலைப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதில் உலக சாதனை முயற்சியாக 25.54 கி.மீ சாலையை 500 ஊழியர்கள் 18 மணி நேரத்தில் அமைத்துள்ளனர்.

இத்தகவலை நெடுஞ்சாலைகள் துறைக்கான மத்திய அமைச்சர் கட்கரி உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்த விரைவுப் பணி லிம்கா சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர்கள், திட்ட இயக்குனர்கள், அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.” என கூறியுள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோலும் நெடுஞ்சாலை ஆணையத்தின் பணியை பாராட்டியுள்ளார். அவர் தனது அறிக்கையில் “இந்த அரிய சாதனை தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களிலும், வரவிருக்கும் திட்டங்களிலும் பெஞ்ச்மார்க்காக அமையும். இந்த நெடுஞ்சாலை தென் இந்தியாவை வட இந்தியாவுடன் இணைக்கிறது. வடக்கு - தெற்குக்கு இது ஒரு மாற்று பாதையாக அமையும். இச்சாலை பயண நேரம், வாகனங்கள் இயக்க செலவை வெகுவாக குறைக்கும். மேலும் மஹா., கர்நாடக மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும்.” என கூறினார். 

= = = = 


எழுத்தாளர் R இந்துமதி அவர்களின் முகநூல் பதிவு : 


சற்று முன் முகநூலில் ஒரு பதிவு கண்டேன்.  "   மன அழுத்தமா..? தொடர்பு கொள்ளவும். இலவச ஆலோசனை "


    ஆண்களுக்கு ஒரு நம்பர். பெண்களுக்கு ஒரு நம்பர் தனித்தனியாகக் கொடுக்கப் பட்டிருந்தது. தொடர்பு கொண்டு பேசினேன்.  என் பெயர் கொண்ட சைக்காலஜிஸ்ட் பேசினார். பாரத் சேவா சங்க அமைப்பு என்றார், நம்பிக்கை ஏற்பட்டது. 


 " இது நிச்சயமாகப் பல பெண்களுக்கு உதவியாக இருக்கும். எத்தனையோ பெண்கள் வெளியில் சொல்ல முடியாத பிரச்சினைகளில் சிக்கி மன அழுத்தத்தில் தவிக்கிறார்கள். யாரிடம் சொன்னாலும் சங்கடமே. சிக்கலே. அது எந்தெந்த உருவில் விஸ்வரூபம் எடுக்குமோ என்ற பயத்திலும் அதைத் தங்களுக்கு சாதகமாக உபயோகப் படுத்துவார்களோ என்ற நம்பிக்கை இன்மை காரணமாகவும் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிறந்த ஆறுதலாகவும் வடிகாலாகவும் இருக்கும். தகுந்த மனநல நிபுணர்களை அனுப்பி கவுன்சிலிங் கொடுப்பதாகவும் சொன்னார்கள். தற்போதைய முக்கியத் தேவை எனவும் பட்டது. தேவைப் படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம். 


   பெண்கள் மன அழுத்தம் போக்க தொடர்பு கொள்ள கைபேசி எண்:- 7305087895.


= = = = 

பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் கிராமம். 


தெலுங்கானா கிராமம் ஒன்றில், பெண் குழந்தைகள் பிறந்தால், பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கி, ஊர்வலம் நடத்தி, இனிப்பு வழங்கி விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உள்ளது.



தெலுங்கானா மாநிலத்தின், சங்கா ரெட்டி மாவட்டத்தில், ஹரிதாஸ்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு, 300 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள் தொகை, 1,200க்கு குறைவாகவே உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தால், அதை மிக விமரிசையாக கொண்டாடுவதை கிராம பஞ்சாயத்து வழக்கமாக வைத்துள்ளது.


கிராம பஞ்சாயத்து கட்டடம், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. பெண் குழந்தையின் பெற்றோருக்கு, சிறிய ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படுகிறது.கிராம மக்கள் ஒன்றிணைந்து, மேள தாளங்களுடன் நடனமாடி, கிராமத்தை ஊர்வலமாக சுற்றி வருகின்றனர்; இனிப்பு வழங்கப்படுகிறது.பிறந்த பெண் குழந்தையின் பெயரில், 1,000 ரூபாய் வங்கியில், 'டிபாசிட்' செய்யப்படுகிறது.

'பெண் குழந்தைகள், கிராமத்துக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கின்றனர். அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவே, இந்த வழக்கத்தை தொடர்கிறோம்' என, ஹரிதாஸ்பூர் கிராம பஞ்சாயத்து செயலர் ரோஹித் குல்கர்னி தெரிவித்தார்.

= = = = 
தென்னையின் ஊடே வாழை, கோகோ, கொய்யா மரங்கள். 


மதுரை டோக்நகரைச் சேர்ந்த விவசாயி இருளாண்டி ராஜா தென்னையில் ஊடுபயிராக வாழை, கோகோ, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை மரங்கள் நட்டு லாபம் ஈட்டி வருகிறார்.

ஊடுபயிர் விவசாயம் குறித்து அவர் கூறியதாவது: சோழவந்தானில் பத்து ஏக்கரில் தென்னை மற்றும் வாழை மட்டுமே நடவு செய்துள்ளேன். இங்கே தண்ணீர் பிரச்னை குறைவு தான். 700 மரங்கள் வளர்கின்றன. 2 கிணறுகள் மூலம் பாசனமும், கண்மாய் மூலம் கிணற்றுக்கு தண்ணீரும் கிடைக்கிறது. 7 ஏக்கரில் நெட்டை ரகமும், மீதி குட்டைரக தென்னையும் வளர்கின்றன. 50 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் எடுத்து விடுவேன். இளநீருக்காக வெட்டி விற்பதில்லை. முற்றிய காயாகவே சந்தையில் விற்கிறேன்.டோக்நகரில் மூன்றரை ஏக்கரில் 300 தென்னை மரங்கள் இருந்தன. தண்ணீரின்றி 200 மரங்கள் பட்டுப் போயின. பட்டுப்போன மரத்தையொட்டி புதிதாக கன்று நட்டு வருகிறேன். தென்னைக்கு ஊடாக வாழை, கொய்யா, பப்பாளி, கோகோ, எலுமிச்சை மரங்கள் வளர்க்கிறேன்.

சில இடங்களில் அடர் நடவு முறையில் வாழைக்கன்றுகளை நெருக்கமாக நட்டுள்ளேன். முதலில் வளரும் வாழை பெரிதாகும். பக்க வாழைகளை இலைகளாக வெட்டி விற்பனை செய்கிறேன். கோகோ பழங்கள் சந்தையில் விற்கிறேன். அவற்றை பதப்படுத்தும் நுட்பம் தெரியவில்லை. கொய்யா, பப்பாளிக்கு உள்ளூர் சந்தையே போதும். ஆங்காங்கே பீர்க்கு, புடலை, காய்கறி பயிர் செய்து வீட்டு தேவைக்கு பூர்த்தி செய்கிறேன்.ஊடுபயிர் மூலம் ஈட்டும் வருமானம் தோட்ட பராமரிப்புக்கு சரியாகிறது. தென்னங்காய்கள் மூலம் லாபம் கிடைக்கிறது என்றார்.

இவரிடம் பேச: 86106 66411
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை. 

= = = =  

அசையாமல் மாறும் லென்ஸ். 


பொதுவாக, ஒளிப்பதிவு கருவிகளில், ஜூம் லென்ஸ் எனப்படும், வெகு தொலைவு காட்சி ஆடிகள் மிகவும் சிக்கலானவை. இந்த ஆடியை திருகி, முன், பின்னாக நகர்த்தினால்தான் படங்களின் துல்லியத்தை, காட்சியின் விரிவை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.ஆனால், அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய - எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள லென்ஸ் வித்தியாசமானது.


பழைய 'சிடி' மற்றும் 'டிவிடி' தயாரிக்க பயன்படும் ஜெர்மானியம், ஆன்டிமனி, டெலுரியம் ஆகியவற்றுடன், புதிதாக செலினியம் என்ற வேதிப் பொருளையும் கலந்து, புதிய ஆடியை, எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.


இந்த ஆடி மீது வெப்பத்தை செலுத்தினால், அதை அசைக்காமலேயே, காட்சியில் மாற்றங்களை கொண்டுவர முடியும். அதே சமயம், ஆடியின் கண்ணாடித் தன்மையில், எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆடியின் குவியப் புள்ளி மட்டும் வெப்பத்திற்கேற்ப மாறுகிறது. இது ஜூம் லென்சின் வேலையை கச்சிதமாக செய்யப் போதுமானது.





இந்நுட்பம் ட்ரோன்கள், செல்போன்கள், இரவு பார்வை கருவிகள் போன்றவற்றுக்கான, சிறிய ஜூம் லென்சுகளை தயாரிக்க வருங்காலத்தில் பயன்படும். இக்கண்டுபிடிப்பை பற்றிய ஆய்வுக் கட்டுரை, 'நேச்சர் கம்யூனிகேசன்ஸ்' இதழில் வெளிவந்துஉள்ளது.

= = = = 


கனியை அளக்கும் கருவி. 


கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ளனவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த, 21ம் நுாற்றாண்டில் கூட, ஒவ்வொரு சுளையையும், ஒவ்வொரு குலையையும், பழுத்திருக்கின்றனவா என்று சோதிக்க, நம்பகமான தொழில்நுட்பங்கள், இன்னும் பரவலாகவில்லை.அண்மையில் தான், ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இதற்கு தீர்வினை கண்டறிந்துள்ளனர். மாங்காய், வாழை போன்ற கனிகளை, கையால் தொடாமல், லேசர் மற்றும் பிளாஸ்மா அதிர்வலைகள் மூலம், துல்லியமாக பழுத்திருப்பதை கண்டறிய முடியும் என, அவர்கள் நிரூபித்துள்ளனர்.


மாம்பழத்தின் மீது, அதிதிறன் லேசர் கதிரை பாய்ச்சினால், தோலுக்கு அடியில் பிளாஸ்மா குமிழ்கள் உருவாகும். அக்குமிழ்களின் மீது, 'லேசர் டோப்ளர் வைப்ரோமீட்டர்' கருவியின் அதிர்வலைகள் பட்டுத் திரும்பும்போது, பழத்தின் காய் மற்றும் கனிந்த தன்மையை தெரிந்துகொள்ள முடியும்.


ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு, இது ஆரம்ப கட்ட வெற்றி தான். மாங்கனி, உள்ளே கெட்டிருந்தாலோ, வண்டு துளைத்திருந்தாலோ, லேசர் கதிர்களின் கணிப்பு தவறாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, இக்கருவியின் துல்லியத்தை மேலும் கூட்ட, ஆய்வுகள் தொடர்கின்றன.

= = = =

தரை மட்டத்திற்கு சென்ற வீடு 5 அடி உயரம் தூக்கி நிறுத்தம். 


கடலுார் :கடலுாரில், சாலை மட்டத்தைவிட, தாழ்வாக உள்ள வீட்டை, 5 அடி உயரத்திற்கு, 'ஜாக்கி' உதவியுடன் துாக்கி நிறுத்தும் பணி நடக்கிறது.


கடலுார், மேற்கு வேணுகோபாலபுரத்தில் வசிப்பவர் குருநாதன், 65; அரிசி வியாபாரி. இவரது கான்கிரீட் வீடு, தரைத்தளம், 1,700 சதுர அடி, முதல் தளம், 900 சதுர அடி என, மொத்தம், 2,600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீடு, அவ்வப்போது சாலைகள் போடப்பட்டதில், 2 அடி பள்ளத்திற்கு போனது. இதனால், மழைக்காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.


வீட்டை இடிக்காமல் மேலே உயர்த்த முடிவு செய்த குருநாதன், சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகினார். தனியார் நிறுவன ஊழியர்கள், 25க்கும் மேற்பட்டோர், 120 ஜாக்கிகளின் உதவியுடன், வீட்டை, 5 அடி உயர்த்தி, இரும்பு தண்டவாளத்தின் மீது நிறுத்தியுள்ளனர். இதை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.



குருநாதன் கூறுகையில், ''12 லட்சம் ரூபாய் செலவில், வீட்டை உயர்த்தும் பணி நடக்கிறது. தொழிலாளர்கள் இங்கு தங்கி, ஒரு மாதமாக பணியில் ஈடுபடுகின்றனர். இரண்டு மாதங்களில், பணிகள் முடிந்து விடும்,'' என்றார்.

= = = = =




69 கருத்துகள்:

  1. இன்றைய செய்திகள் நன்று. டயர் மாற்றிய ஐஏஎஸ் என்பதைப் படித்தவுடன், ராகுல்காந்தி சேற்றில் நடக்கும்போது அவரது செருப்பைக் கையில் எடுத்துக்கொண்ட நாராயணசாமி நினைவுக்கு வந்தார்.

    வீடு உயர்த்துவதை நேற்று படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு உயர்த்தியது ஆச்சரியமான செய்தி.

      நீக்கு
    2. வீடு உயர்த்துவது என்பது இங்கு மிகவும் சகஜம்

      நீக்கு
  2. மஞ்சள்... நம்முடைய பாரம்பர்ய அறிவைப் பறைசாற்றுகிறது. மஞ்சப்பொடி மிளகு கலந்த பால் பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் உபயோகிப்பது.

    செய்தி படித்துவிட்டு பச்சை மஞ்சள் ஊறுகாய் பற்றி கீசா மேடம் எழுதுவாரோ? என எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      இன்றும் என்றும் இறைவன் அருள் நம்முடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

      மூச்சு முட்டும் அளவிற்கு நல்ல செய்திகள்.
      வீட்டை உயர்த்தியது, அதுவும் 12 லட்சத்தில் என்றால்
      மிகப் பெரிய வியப்பு.

      எங்கள் சாலையும் மேலும் மேலும் போடப்படுவதால்
      ஏதோ பயம் வருகிறது.
      அம்பத்தூரில் என் பள்ளித்தோழி வீட்டை இப்போதுதான் உயர்த்திக் கட்டி இருக்கிறார்கள்.
      எப்பொழ்தும் வெள்ளம் வந்து விடும்.
      இந்தச் செய்திக்கு மிக நன்றி.

      நீக்கு
    2. விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    3. @நெல்லை தமிழன்: ஏற்கனவே மஞ்சள் ஊறுகாய்போடுவது பற்றி கீதா அக்கா எழுதியிருக்கிறார்.

      நீக்கு
    4. முன்னரே நானும் மஞ்சள் மஹிமை பத்தியும் பிரசவம் ஆனதும் பச்சை மஞ்சளை அரைச்சுக் கொடுப்பது குறித்தும் சொல்லி இருக்கேன். நெல்லையார் மறந்துட்டார் போல! கீழே காமாட்சி அம்மாவும் சொல்லி இருக்கார் பாருங்க.

      நீக்கு
    5. அம்பத்தூரில் பத்து, பதினைந்து வருடங்கள் முன்னரே இம்மாதிரி வீட்டைத் தூக்கிக் கட்டிக் கொடுப்பது ஆரம்பித்திருந்தது. எனக்கும் அது தான் ஆசையாக இருந்தது. அப்போதைய நிலவரப்படி பத்திலிருந்து பதினைந்துக்குள் ஆகும் என்றார்கள். எங்க பையருக்கும், நம்ம ரங்க்ஸுக்கும் அதில் இஷ்டமே இல்லை. தூக்கும்போது மேலே கூரைக்கு ஆட்டம் கண்டுவிடுமோ என்னும் பயம். ஆனால் நாங்க இருந்த தெருவிலேயே 3,4 வீடுகள் இப்படி உயர்த்திக் கட்டி இருக்கிறார்கள். கடலூர் எல்லாம் இப்போத் தான்! அம்பத்தூருக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன.

      நீக்கு
  3. இங்கே நிறைய பசு மஞ்சள் நிறையக் கிடைக்கிறது.
    மகள், மாப்பிள்ளை,மற்றும் பேரன் சாப்பிடுகிறார்கள்.
    நானும் இனிமேல் எடுத்துக் கொள்கிறேன்.

    முழங்கால் வலி தாங்க முடிவதில்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளால் பயன் இருக்கிறது என்பது சந்தோஷமான சமாச்சாரம்.

      நீக்கு
    2. அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்கள் அல்லது உடகார்ந்து வேலை செய்பவர்கள் இப்படி முட்டிவலி முதுவலி என்று சொல்லுகிறார்கள் என்பதை நான் கவனித்து வருகின்றேன் அடுத்து உடல் எடை சற்று அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என் உடன் வேலை பார்ப்பவர்கலில் யார் அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கிறார்களோ அவர்கள்தான் முட்டிவலி அதிகம் என்று மாத்திரை எடுத்துவருகிறார்கள் நான் வேலை நேரத்தில் உட்காருவதே இல்லை

      நீக்கு
  4. கார் டயரை மாற்றிய இனிய பெண் கலெக்டருக்கு அன்பு வாழ்த்துகள். தன்னிறைவு பெற்ற பெண்கள் நமக்கெல்லாம் பெருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் பெண்களே பஞ்சர் ஆன டயரை மாற்றுவது போல் விளம்பரங்கள் வருதே!

      நீக்கு
    2. விளம்பரங்களில் நடிப்பது சுலபம். உண்மையாக மாற்றுவது கஷ்டம்.

      நீக்கு
    3. கெளதமன் சார் கார் டயர் மாட்டுவது எளிது அதை எப்படி மாற்றுவது என்பதை மேணுவல் படித்து புரிந்து கொண்டாலே போது இதைவிட பல கடினமான செயல்களை நம் பெண்கள் பலர் செய்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் இங்கு ஐஏஎஸ் படித்தவர் செய்தது என்பதால் ஊடகங்களில் வந்து பேசப்படுகிறது அவ்வளவுதான் மேட்டர்

      எல்லாம் ஒரு வகையான விளம்பரமே இதே பெயரில் ரோகினி ஐஏஎஸ் என்றவரும் இப்படித்தான் செய்து கொண்டிருந்தார் இப்போது அவர் எங்கே என்று கேட்கும்படியாகத்தான் இருக்கிறது

      நீக்கு
  5. தேசிய நெடுஞ்சாலையில்னல்ல சாதனை புரிந்த கர்னாடகா
    அரசுக்கு மனம் நிறைவாழ்த்துகள்.

    இது போலத் துரிதமாக இல்லாவிட்டாலும்
    எல்லா சாலைகளையும் கவனித்தால் நன்றாக இருக்கும்.
    இங்கே உழைத்தவர்களுக்கு நிறை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. பெண் குழந்தைகள் உயர்த்தப் படும் எந்த நாடும் பரிமளிக்கும்.
    மனகளமாக வாழ வேண்டும்.
    திருமதி இந்துமதி பதிவைப் படிக்கவில்லை.
    இந்த ஹெல்ப்லைன் பெண்களுக்கு நல்லதோர் வடிகால்.

    நிறைய மன அழற்சிகள் தவிர்க்கப் படலாம். மகத்தான.
    சேவை. பெண்கள் இந்த எண்ணைப் பற்றியும்
    தெரிந்து கொள்ள வேண்டும்.
    மிக மிக நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொண்டீர்கள்.
    கௌதமன் ஜி ,மிக மிக நன்றிமா.

    பதிலளிநீக்கு
  7. இன்றைய செய்திகள் பாசிட்டிவ் செய்திகள் என்பதைக் காட்டிலும் வித்யாசமான செய்திகள் எனக்கொள்ளலாம். நெடுஞ்சாலை, இந்துமதி டாக்டர், பெண்குழந்தையை கொண்டாடும் கிராமம், ஊடு பயிர், மஞ்சள்  என்பவை பாசிட்டிவ். ஜூம் லென்ஸ், டயர்  மாற்றிய IAS, பழத்தின் கனிவு காணும் கருவி, வீடு உயர்த்துதல் போன்றவை வித்யாசமான செய்திகள். 

    வீடு உயர்த்துதல் இங்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. 

    வர வர சனிக்கிழமை செய்திகள் அதிகம் ஆகிறது. 

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  9. மஞ்சளின் மகிமை இப்படியிருக்க
    நம்மிடம் இருந்து மஞ்சளைப் பிரித்து வைத்த காலக் கொடுமையை என்ன சொல்வது?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரு... ன்னு கேட்டா?..

      எட்டெழுத்தில் பிறந்த ஏழெழுத்துக் கொழுந்து ஒன்று பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மஞ்சளில் ரசாயனம் / அரிசிக்குள் மறைந்திருக்கும் ஆபத்து என்றெல்லாம் பிலாக்கணம் பாடியது...

      டம்ளர்களுக்குத் தான் சொந்தப் புத்தி என்று ஏதும் கிடையாதே!...

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம். இந்த வார பாசிட்டிவ்  செய்திகள் வேற லெவல். பல தளங்களில் விஷயங்களை கவர் செய்திருப்பது சிறப்பு. ஜாக்கியின் உதவியுடன் வீட்டை உயர்த்த முடியும் என்று சில வருடங்களுக்கு முன் செய்திகளில் வந்தது. கடலூர் செய்தி நேற்று தினமலரில் படித்தேன். பஞ்சரான டயரை தானே மாற்றிய பெண் கலெக்டரும், பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் ஆந்திர கிராமமும் சிறப்பு. காய் கனிந்து விட்டதா என்று கண்டறிய மிஷினா? போகிற போக்கில் சாதம் வெந்து விட்டதா என்று பார்க்க மிஷின் வந்து விடும் போலிருக்கிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் வீட்டுக்குள் வந்து அரிசி வெந்து விட்டதாக விசில் அடிக்கிறதே!...

      நீக்கு
    2. அதென்னமோ குக்கரில் சாதம் வைத்தாலே பிடிக்கிறதே இல்லை.

      நீக்கு
    3. நாட்டுல, பெண்களின் நன்மைக்காக புதுப் புது சாதனங்கள்லாம் (ஆண்கள் ஹாஹா) கண்டுபிடித்தாலும் அதிலும் குறை கண்டுபிடித்து, மீண்டும் பழைய மெதட்டுக்கே போய், கால் வலி, இடுப்பு வலின்னு சொல்றாங்க.

      அழகா குக்கர்ல சாதம் வைத்துவிட்டு, சோஃபால கால் மேல கால் போட்டுக்கிட்டு உட்கார்ந்து, மனசுல எத்தனை விசில் வந்ததுன்னு பார்த்து, ஐந்து விசில் வந்தால் போய் ஸ்விட்ச் ஆஃப் பண்ணறதை விட்டுட்டு, பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அரிசி போட்டு, ஆகிற வரை கிளறுகிறேன் என்ற சாக்கில், நின்னுக்கிட்டு, கால் வலி, கை வலி என்று வரவழைத்துக்கொள்வர்களை ஆண்கள் எப்படித்தான் திருத்துவது?

      நீக்கு
    4. குக்கரிலே சாதம் வைத்தாலும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்காரலாம் என யார் சொன்னார்கள்> மற்ற வேலைகள் இல்லையா? அதோடு இல்லாமல் குக்கர் சாதம் உடலுக்கு நல்லதே இல்லை. கஞ்சி வடிக்கணும் கூடியவரை! நான் பாத்திரத்தில் அரிசியை ஊற வைச்சுத் தண்ணீர் விட்டுவிட்டுச் சின்னதாக வைத்துவிடுவேன். அந்தச் சூட்டிலேயே சாதம் தயார் ஆகும். கிட்ட நின்று கிளறல்லாம் வேண்டாம். ஒரு காலத்தில் ஏன் நான் கூட வெண்கலப்பானையில் தான் சாதம் வடித்துக் கொண்டிருந்தேன். இதனால் எல்லாம் கால் வலி, கைவலி என வரவழைத்துக் கொள்ள முடியாது. இவை எல்லாம் உடலுக்குத் தேவையான பயிற்சிகளில் சேர்ந்தது.

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. அனைத்தையும் படித்து தெரிந்து கொண்டேன். நிறைய வித்தியாசமான செய்திகளை தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. கடைகளில் விற்கப்படும் மஞ்சள் பொடியில் கலப்படம் இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. நவராத்திரியில் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கும் மஞ்சள் பாக்கெட், சிறிய டப்பா எல்லாம் போலிதான். இனிமேல் வீட்டிலேயே மஞ்சள் பொடி அரைத்துக் கொள்ள வேண்டியதுதான். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே பொங்கல் கழிந்ததுமே நிறையப் பச்சை மஞ்சள் கிடைக்கும். வாங்கிச் சீவிப் பொடியாக நறுக்கிக் காய வைத்துப் பச்சைப்பயறோடு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். இங்கெல்லாம் கஸ்தூரி மஞ்சள் கிழங்கும் கிடைக்கும். வாங்கிக் காய வைத்து அரைத்துக் கொள்வோம். வீட்டுச் சமையலுக்குக் கூட இம்மாதிரித் தயார் செய்த மஞ்சள் பொடி தான். எந்தக் கடைகளில் ஆச்சியின் எந்தத் தயாரிப்பும் வாங்கறதே இல்லை. சக்தி மஞ்சள் பொடி எப்போவானும் அவசரத்துக்கு! ஆனாலும் பெரும்பாலும் தயாரிக்கப்பட்ட மஞ்சள் பொடியேதான். மாயவரம், கும்பகோணம் பக்கம் வயல்களில் கஸ்தூரி மஞ்சள் நிறையப் போடுவார்கள். எனக்கு ஆறுபாதியிலிருந்து ஒரு மாமி வருடா வருடம் கஸ்தூரி மஞ்சள் கிழங்கு கொடுப்பார். இங்கே வந்ததும் வாசலிலேயே வருகிறது.

      நீக்கு
    2. நான் நினைத்தை பானுமதியம்மா சொல்லிவிட்டார்கள் நமது உணவுப் பொருட்கள் பலவற்றில் மருத்துவ குணம் அதிகம்தான் அதை மறுக்க முடியாது... ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருப்பது மிக அவசியம்


      ஒரு காலத்தில் பழைய சோறு சாப்பிட்டு உடல் வலிமை பெற்று உழைத்தவர்கள் இருந்தார்கள் ஏன் நானே சிறுவயத்தில் சாப்பீட்டு உடல்வலம் பெற்று இருந்தேன் ஆனால் இன்று பழைய சோரு சாப்பிட்டு உடல் வலிமை பெற முடியுமா என்பது சந்தேகமே காரணம் அன்று நமக்கு கிடைத்த அரசி இயற்கையாக விளைவிக்கப்பட்டது ஆனால் இன்று மருந்துக்களால் மட்டுமே விளைவிக்கப்படுகிறது அதனால் நாம் சாப்பிடும் சாதம் உடலுக்கு நல்லாதா என்ற கேள்வியே எழூகிறது அதுமட்டுமல்ல அந்த் சாதத்தை ஊற வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது இன்னும் அதிக தீமையை ஏற்படுத்துமோ என்று நான் கருதுகின்றேன்

      நீக்கு
    3. சில பிராண்ட் மஞ்சள் பொடி, பளீர் மஞ்சள் நிறமா இருக்கு. அதுவே முழுக் கலப்படம்னு காட்டிக்கொடுக்குது. அதிலும் வெள்ளை மிளகுப் பொடில மைதா கலந்தாலும் பரவாயில்லை, மென்மையான கோலப்பொடி கலக்கறாங்களாம்.

      நீக்கு
    4. மஞ்சள் பொடி, மிளகு பொடி எல்லாம் வீட்டில் செய்து வைத்துக்கொள்வதே சிறப்பு. நூறு கிராம் வெள்ளை மிளகை வாங்கி வெறும் வாணலியில் சற்றே சூடு பண்ணி ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு நைசாகப் பொடித்து வைத்துக்கொள்ளலாம். சுத்தமானது. சமயங்களில் மிளகில் பப்பாளி விதைகள் கலப்பது உண்டு. அதைக் கவனமாகப் பார்த்து வாங்கணும்.

      நீக்கு
  14. இன்றைக்கு மணமகள் கூட மஞ்சள் பூசிக் கொள்வதில்லை..

    மஞ்சள் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று பாடம் நடத்தும் பள்ளிகளுக்குள் கூட மஞ்சள் முகத்துடன் மங்கையர் வருவதற்கு அனுமதி இல்லை..

    அதிகம் பேசினால் அரசியலாகி விடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பெண் மேக்கப் அதிகம் போட்டுக் கொள்வதில்லை பள்ளியில் நடக்கும் பார்ட்டிகளின் போது போவதற்கு முன்னால் முகத்தில் மிக லைட்டாக மஞ்சள் பூசி குளித்துவிட்டு அப்படியே போவாள் பார்டிக்கு வருபவர்கள் முதலில் கேட்பது எப்படி அழகாக மேக்கப் போட்டு வந்து இருக்கிறாய் என்பதுதான்

      நீக்கு
    2. எங்க வீட்டில் நான், மகள், மருமகள், பேத்திகள் யாருமே இந்த காஸ்மெடிக் சரக்குகளைப் பயன்படுத்துவது இல்லை. சொல்லப் போனால் குழந்தைகளுக்குப் பவுடர் கூடக் கிடையாது.

      நீக்கு
  15. எல்லா செய்திகளுமே வெகு சுவாரஸ்யம் ....

    அதிலும் அந்த அசையாமல் மாறும் லென்ஸ் மிக கவர்ந்தது ..

    பதிலளிநீக்கு
  16. ஹரிதாஸ்பூர் மக்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  17. விவசாயத்தை இனி அரசே எடுத்து நடத்த வேண்டும் இல்லையெனில் அழிவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற. இருக்கறதை எல்லாம் வித்துக் கொண்டு இருக்காங்க. இதுல விவசாயத்தை அரசு நடத்துரதாவாதது. மக்கள் தொகை குறையட்டும் என்று சொல்வார்கள்.

       Jayakumar

      நீக்கு
    2. விவசாயத்தை, விவசாயிகள் கவனிப்பதே நல்லது.

      நீக்கு
    3. //விவசாயத்தை இனி அரசே எடுத்து நடத்த வேண்டும் இல்லையெனில் அழிவுதான்.// - இதைத்தான் கொஞ்சம் தவறா புரிஞ்சுக்கிட்டு, விவசாய நிலத்தை எடுத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க (ஆறு வழி, ஏழு வழிப் பாதை போடறதுக்கு).

      நீக்கு
  18. வீடு உயர்த்தும் செய்திகள் முன்னரே படித்திருக்கிறேன்.

    மற்ற செய்திகளும் தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  19. ஞாபக மறதி நோய்க்கு மஞ்சளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொடுங்கள் என்றும் சொல்கிறார்கள் சாதாரணமாக விட்டு வைத்தியத்தில் மஞ்சள் உபயோகித்து வருகிறோம் சமையலிலும் இல்லாத இடமே கிடையாது என்ன நவ நாகரீக காலத்தில் மஞ்சளின் பூசி குளிக்கும் உபயோகம் குறைந்துவிட்டது மஞ்சளின் மகிமையே அலாதி பிரசவம் ஆன உடனே மஞ்சளை அரைத்து உருட்டிக் கொடுத்து விழுங்கச் சொல்வார்கள் அதெல்லாம் எங்கள் காலம் மஞ்சள் மகிமை சொல்லி மாளாது அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. யாரு... ன்னு கேட்டா?..

    எட்டெழுத்தில் பிறந்த ஏழெழுத்துக் கொழுந்து ஒன்று பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மஞ்சளில் ரசாயனம் / அரிசிக்குள் மறைந்திருக்கும் ஆபத்து என்றெல்லாம் பிலாக்கணம் பாடியது...

    டம்ளர்களுக்குத் தான் சொந்தப் புத்தி என்று ஏதும் கிடையாதே!...

    பதிலளிநீக்கு
  21. எல்லாச் செய்திகளும் அருமை, புதுமை! இனிமை! மஞ்சள் மஹிமைனு ஒரு திரைப்படம் வந்ததோ? இங்கே தினம் தினம் பச்சை மஞ்சளை நெல்லிக்காய், பாகற்காய், இஞ்சி, சி.வெ. சேர்த்து அரைத்துக் குடிக்கிறோம். பச்சை மஞ்சளில் ஊறுகாயே போட்டிருக்கேனே! துருவிட்டு மாங்காய்த் தொக்குப் போல் தொக்கும் போட்டு வைச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை, பச்சை மஞ்சள் வாங்கறேன். இங்க பொங்கலன்று வந்தது, அப்புறம் காணலை. கொஞ்சம் பச்சை மஞ்சள் ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டுவிட்டுச் சொல்றேன் (எலுமி பிழியணும் என்பதும் நினைவில் இருக்கு)

      நீக்கு
  22. செய்திகள் எல்லாம் பயனுள்ளவை.
    பெண் குழந்தையை போற்றும் ஹரிதாஸ்பூர் மக்களுக்கு வாழ்த்துகள்.
    வீடு உயர்த்துவது போல் மதுரையில் ஒரு கோவிலை அப்படியே இடம் மாற்றி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  23. இங்கு ரோடு போடும் வேலை என்பது வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு போடும் திட்டமாகவே இருக்கிறது என்பதால் மிகப் பெரிய இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை இங்கே ரோடுகள் போட அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள் உதாரணமாக என் வீட்டுக் அருகிள் உள்ள ஹைவேயில் ஒரு ஐந்து மைல் தூரம் உள்ள ரோட்டை சீர் செய்ய டிராப்பிக்கையும் அதிகம் பாதிக்காமல் செய்ய 10 மாதங்களுக்கும் மேல் ஆகியது

    இவ்வளவிற்கும் அந்த ரோடு ஒன்று மோசமில்லை நன்றாகத்தான் இருந்தது ஆனால் அவர்களின் நீண்டகாலப் பார்வையில் அது மாற்றப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

    அவர்கள் ரோடு போடுவதை நான் கவனித்த போது முதலில் போட்ட தார் ரோட்டை அப்படியே பெயர்த்து எடுத்துவிடுகிறார்கள் அதன் பின் அரையடி ஆழத்திற்கு தோண்டிஎடுத்து அத்ன் பின் அதில் ரோட்டு இஞ்சினை வைத்து முதலில் சமன் படுத்துகிறார்கள் அதன் பின் ஒரு லேயர் துணி கம் பிளாஸ்டிக் கலந்து மெட்டிரியல் போன்ற ஒன்றை அதன் மேல் விரிக்கிறார்கள் மேலும் அதன் மேல் மேலும் ஏதோ ஒரு மெட்டிரியலை ஒரு இஞ் அளவிற்கு போட்டு அதன் பின் கல் மண் நிரப்பி மீண்டும் தார் ரோடுகளைப் போடுகிறார்கள் அப்படி போடும் போது மழை பெயதால் தண்ணிர் தேங்காமல் வடிந்து போடும் படி செய்தும் விடுகிறார்கள் இது நான் நேரில் கண்டதை எழுதி இருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். ஒரு காலத்தில் நம்ம ஊர்களிலும் இப்படித்தான் வீட்டின் மட்டத்தை விடச் சாலை மட்டம் உயர்ந்ததே இல்லை. சாலைகளை இப்படித்தான் போடணும். ஆனால் நம்ம நாட்டில் இந்தப் பழமையான முறையைக் கைவிட்டுவிட்டுப் போட்டிருக்கும் தார்ச்சாலைகளை உடைக்காமல் அதன் மேலேயே மேலே மேலே போட்டுக் கொண்டு வருவதால் அரசுக்கும் நஷ்டம். சரியான அடிப்படையில் சாலையைப் போடாததால் சீக்கிரமே சாலைகள் வீணாவதோடு வீடு கட்டி இருப்பவர்களுக்கும் பிரச்னை. சாலை உயர்ந்து வீடு கீழே போயிடும். மழை பெய்தால் நீர் வெள்ளமாகத் தேங்கும். முன் யோசனை என்பதே யாருக்கும் இல்லை. நாங்க அம்பத்தூரில் சாலை போடும்போது சொல்லிப் பார்த்திருக்கோம். அநாவசியமான வாக்குவாதங்கள் தான் வரும்.

      நீக்கு
  24. கட்டடத்தை உயர்த்துவது மட்டுமல்ல; நகர்த்தியே வைக்கலாம். மத்திய அரசு சாலை வசதிக்காக மேம்பாலங்களை அமைக்கிறார்கள். மதுரை நாராயண புரத்தில் மேம்பாலப் பணிக்கு சில கட்டடங்களை இடிக்கவேண்டிவந்தது. இதில் இடையே ஒரு அம்மன் ஆலயம் இருந்தது. அப்பகுதிவாழ் மக்கள் ஒரு நிறுவன உதவியுடன் ஆலயத்தை 'ஜாக்கிகள்' அமைத்து உயர்த்தி 25முதல்30 மீட்டர்கள் அலுங்காமல்,குலுங்காமல் நகர்த்தி வைத்து கும்பாபிஷேகமும் செய்துவிட்டனர்.

    பதிலளிநீக்கு
  25. மஞ்சள் மகிமை
    அனைவரும் அறியவேண்டும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!