சனி, 20 மார்ச், 2021

தடுப்பூசி போட்டுக்கொள்வோர் கவனத்திற்கு


ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்துப்  புகலிடம்  தந்த  பேருந்து ஓட்டுனர். 

The bus driver and his BPO employee wife, converted their rented 3 BHK house into a children’s home and made it their life’s mission to take care of orphaned and abandoned children in distress at different ages. 


= = = = 
கொரோனா தடுப்பு மருந்துகளில் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் முன்னேற்றங்கள்..!

இந்தியப் பூர்விகம் கொண்ட உலக சுகாதார அமைப்பின் முக்கிய விஞ்ஞானி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சௌமியா சுவாமிநாதன். எச்ஐவி, காசநோய் உள்ளிட்ட நோய்கள் குறித்து ஆராய்ந்ததன் மூலமாக இவர் முன்னதாக உலகப்புகழ் பெற்றார்.தற்போது இவர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து கருத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.


அவை பின்வருமாறு:இதுவரை 80க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் உலக அளவில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.இவற்றில் 40க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன. பல தடுப்பு மருந்து சோதனையில் தோல்வி கண்டுள்ளன.
இந்நிலையில் தற்போது உலக அளவில் ஆஸ்ட்ராசெனேகா, பைசர்-பயான்டெக், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சினோவாக், ஸ்புட்னிக் 5, கோவிஷீல்டு, கோவாக்ஸ்ஸின் உள்ளிட்ட 10 தடுப்பு மருந்துகள் உலக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆராய்ச்சி தீவிரம்

தற்போது உலக மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளில் குறைபாடுகள் சில உள்ளன.வரும் 2022 ஆம் ஆண்டு புதிதாக உருவாகும் அதிநவீன தடுப்பு மருந்துகளில் இந்த குறைபாடுகள் களையப்படும். மேலும் தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அதிநவீன தடுப்பு மருந்துகளை மருந்து நிறுவனங்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

தடுப்பு ஊசி செலுத்துவதற்கு பதிலாக எதிர்காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்றார் போல தடுப்பு மருந்து பட்டைகள் மனித உடலில் ஒட்டப்படலாம். எதிர்காலத்தில் மூக்கு துவாரத்தில் அடிக்கும் ஸ்ப்ரே வடிவில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம்.தடுப்பு மருந்துகளை தற்போது குளிர்நிலையில் பாதுகாக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் வரவிருக்கும் தடுப்பு மருந்துகள் எந்த காலநிலையிலும் வீரியம் குறையாமல் இருக்கும் அளவுக்கு தயாரிக்கப்படும். மேலும் முதல் டோஸ் மட்டுமே போதுமானதாக இருக்கும். இரண்டாம் டோஸ் தேவைப்படாது. 2020 இரண்டாம் ஆண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்துகளில் இவ்வாறாக பலவித மேம்பாடுகள் உருவாகும். இதன் காரணமாக வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறையும்.
இவ்வாறு சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 
= = = =

தடுப்பூசி போட்டுக்கொள்வோர் கவனத்திற்கு - - -

(வாட்ஸ் ஆப் மூலம் வந்த உபயோககரமான செய்தி ) 

கோரோனா ஊசி போடுபவர்கள், போட்டுக் கொண்டவர்களின் கவனத்தில் மேற்கொள்ள வேண்டியது...

     மருத்துவர்  கொரோனா தடுப்பூசி தொடர்பாக என்ன சொல்கிறார் என்றால் பொதுவாக  தடுப்பூசி போட்ட உடன் யாருக்கும் உடல் நிலை சிறிது பலவீனமாக இருக்கும்
     
  அதனால் மருத்துவரின் அறிவுரை.

♦️ 1. நடைப்பயணம் / உடற்பயிற்சி  குறைந்தது ஐந்து நாட்களுக்கு கூடாது.🏃🏻‍♂️🏃‍♀️🚶🧑🏼‍🦯🏃‍♀️🏃🏻‍♂️

வீட்டில் முழு ஓய்வு தேவை.

♦️ 2. தடுப்பூசியானது இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டதில் இருந்து இரு வாரம் கழித்தே பயன் தரும்.
      
எனவே அதுவரை அஜாக்கிரதையாகவும், இங்கும் அங்கும்  அனாவசியமாக சுற்றுவதும் கூடாது.
      
ஆகவே இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டதில் இருந்து  இரு வாரங்கள் மிகக்கவனமாக இருக்கவும். சரியான ஓய்வில் இருக்கவும்.

♦️3. இரண்டு முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் இருந்து மூன்று நாட்கள் வரை காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது.

அப்போதும் உடல்நிலை சரியாகவில்லை என்றால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

எல்லா மூத்த குடிமக்களுக்கும்  இந்தத் தகவல் தெரிய வாய்ப்பில்லை.

எனவே அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இந்தத்தகவலை கொண்டு செல்ல *வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

♦️ இது தடுப்பூசி போட்டுக்கொண்ட  அல்லது இனிமேல் போட்டுக் கொள்ள உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இந்தத் தகவல் சென்று அடையச் செய்வோம்...

= = = = 

இந்த வாரம் எல்லாம் தேர்தல் செய்திகள் & கிரிக்கட் செய்திகள் மட்டுமே கண்ணில் பட்டதால், நல்ல செய்திகள் என்று சொல்லிக்கொள்ள வேறு எதுவும் இல்லை! 

= = = = 

42 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் , வாழ்க வளமுடன்.

      நீக்கு
    2. @கீதா அக்கா: சாதாரண வேலைகளை செய்ய எந்த தடையும் இல்லை கீதா அக்கா. strenuous வேலைகள்தான் செய்யக் கூடாது.

      நீக்கு
    3. ஹிஹிஹி, மாறி வந்திருக்குப் போல!

      நீக்கு
  2. ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்துப் புகலிடம் தந்த பேருந்து ஓட்டுனர் காணொளி பார்த்தேன். அவரின் நல்ல மனத்திற்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்.

    தடுப்பூசி போட்டுக்கொள்வோர் கவனத்திற்கு - - -

    (வாட்ஸ் ஆப் மூலம் வந்த உபயோககரமான செய்தி ) //

    எனக்கும் என் தோழி அனுப்பினார்.

    இன்று நான் தடுப்பூசி போட்டு கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள் கோமதி. தொடர்ந்து இரண்டாவது ஊசியும் போட்டுக்கொண்டு உடல்நலம் சீராக இருக்கவும் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. உங்கள் பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதா

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தடுப்பு ஊசிகள் வெற்றிகரமாய்ச் செயல்படுவதற்குப் பிரார்த்திக்கிறோம். போட்டுக்கொண்ட/போட்டுக்கொள்ளப் போகும் அனைவருக்கும் உடல்நலம் சரிவர இருக்கவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. முதல் செய்தி அறியாதது. கொரோனா தடுப்பு ஊசி பற்றி சௌம்யா ஸ்வாமிநாதன் சொல்லி இருப்பதும் அறியாதது. மற்றபடி வாட்சப் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அலையக் கூடாது என்பதால் தான் ஊசி போட்டுக்கொள்ள யோசனை. நான் எங்கேயும் போகாமல் இருந்து விடுவேன். அவரால் முடியாது. அவசியத்திற்குப் போயாகணும்! பார்ப்போம். தொடர்ந்து எங்களைத் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யணும். இப்போச் சில நாட்களுக்கு அலைச்சல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளுக்கு எல்லாம் இப்போ தடுப்பூசி போட நேரம் வரவில்லையே!

      நீக்கு
    2. கீசா மேடம்...நான்போட்டுக்கொண்டு பத்து நாட்கள் ஆகின்றன. இரண்டாம் மூன்றாம் நாட்களில் ஊசி போட்ட இடத்தில் வலி இருந்தது. மூன்றாம் நாள் டயர்டாகி தூங்கினேன். அவ்வளவுதான்.

      தைரியமாக ஊசி போட்டுக்கொள்ளுங்கள். அதைவிட, ஊசி போட்டுக்கொண்ட பிறகு 20 நிமிடங்களாவது ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு எல்லாம் ஓகே என்று தோன்றியதும் கிளம்பிவரவும். அவங்களும் பிபிலாம் திரும்ப செக் பண்ணிட்டுத்தான் அனுப்புவாங்க.

      நீக்கு
    3. @கௌதமன், ஹையா, ஜாலி, ஜாலி, ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! நன்னியோ நன்னி! என்னைக் குழந்தைனு ஒத்துண்டதுக்கு@ ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்! ஸ்வீட் எடு! கொண்டாடு!

      நீக்கு
    4. @நெல்லை, ஏப்ரலில் மைத்துனரின் ஆப்தீகம் வருவதால் ஒருவேளை இரண்டாவது மைத்துனர் (அவர் தான் காரியம் செய்யறார்) வரமுடியலைனா (மும்பையில் பிள்ளையோடு இருக்கார் இப்போ) நாங்க பண்ணியாகணும்னு குடும்பப் புரோகிதர் சொல்லி இருக்கார். ஆகவே யோசிச்சுத் தான் போட்டுக்கணும். அதோடு அதற்கான ஏற்பாடுகள், சாமான்கள் வாங்கிச் சேகரிப்பதுனு கொஞ்சம் அலைச்சலும் இருக்கும்.

      நீக்கு
    5. அப்படி அவங்களே செய்தாலும் எல்லோரும் இங்கே தான் வரப்போறாங்க! ஆகவே எப்படியும் நாலைந்து நாட்கள் ஏப்ரலில் வேலை அதிகமாகவே இருக்கும். எல்லாத்தையும் யோசிக்கணும். :(

      நீக்கு
  5. எனக்கு இல்லன்னா என்ன? மனசு இருக்கு என்று சொல்லும் நல்ல மனம் வாழ்க. அவரை தொடர்பு கொள்ள முடியுமா?

    பதிலளிநீக்கு
  6. தடுப்பூசி தகவல்கள் பயனுள்ளவை.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கம். இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. பயனுள்ள தகவல்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. சமூக நலனில் அக்கறை கொண்டோருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  10. பயனுள்ள தகவல்கள்..
    ஊரும் உலகும் நலம் பெறட்டும்...

    பதிலளிநீக்கு
  11. அவசியமான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ’முன் தோன்றிய மூத்த குடி’களுக்குத்தானா இந்தத் தகவல், எச்சரிக்கையெல்லாம்!

    பதிலளிநீக்கு
  13. நல்ல செய்திகளுக்கு நன்றி. டாக்டர் சௌம்ய சொல்வது
    அருமை. வயதானவர்களுக்குச் சொல்லி இருக்கும் எச்சரிக்கை
    உண்மை.
    எனக்கும் ஊசி போட்ட 5 மணி நேரத்தில் ஆரம்பித்த வலி இப்போது வரை.
    கூடவே காய்ச்சலும்.
    அதற்காக ஊசி போடாமல் இருக்க முடியாதே.
    இரண்டாம் ஊசி சின்னவர்களுக்கே வலிக்கிறதாம்.
    பொறுத்துக் கொள்வோம்.
    நன்மை கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் உங்கள் உடல் நலம் சரியாகட்டும் ரேவதி. பிரார்த்தனைகள். இதனால் தான் வீட்டிலும் அதிகம் வேலை இருக்கும் என்று யோசனை! ஓய்வெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.

      நீக்கு
  14. நான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன்
    பயனுள்ள பதிவு
    நன்றி

    பதிலளிநீக்கு
  15. பயனுள்ள பதிவு.
    குழந்தைகளைப் பராமரிக்கும் தம்பதிக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  16. செய்திகள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!