திங்கள், 1 மார்ச், 2021

"திங்க" க்கிழமை : தக்காளி சாதம் -  கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

தக்காளி சாதம். ராகேஷ் ரகுநாதன் செய்முறையில். ஒரு சில மாற்றங்கள் உண்டு.

பொதுவாகத் தக்காளி சாதம் நான் எப்படிப் பண்ணி இருக்கேன் எனில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வதக்கிக் கொண்டு அதில் சாம்பார்ப் பொடி, உப்புச் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா இலைகளைச் சேர்த்துச் சமைத்த சாதத்தில் இந்த தக்காளி மசாலாவுக்குத் தேவையானதைப் போட்டுக் கலந்து விடுவேன்.

இன்னொரு முறையில் தக்காளியை மட்டும் வதக்கிக் கொண்டு அதற்குப் பச்சை மிளகாய், காரப்பொடி, தனியாப் பொடி சேர்த்துக் கொஞ்சம் போல் கரம் மசாலா அல்லது ஏலக்காய், கிராம்பு தாளித்துக் கொண்டும் பண்ணி இருக்கேன். இதிலும் கொத்துமல்லி, புதினா இலைகள் சேர்ப்பேன். பல ஆண்டுகள் முன்னர் என் மாமி தேங்காய்ப் பாலும், தக்காளி+வெங்காயம்+பூண்டை அரைத்துக் கொண்ட மசாலாவை நன்கு வதக்கியும் தேவைப்பட்ட மசாலா சாமான்கள் தாளிதத்தில் சேர்த்து பாஸ்மதி அரிசியை ஊற வைத்து அதில் சேர்த்து உப்புச் சேர்த்துக் குக்கரில் வைத்திருந்தார். அதுவும் நன்றாக இருந்தது. ஆனாலும் நான் அப்படிப் பண்ணவே இல்லை. இப்போ சமீபத்தில் நம்ம ரங்க்ஸ் ராகேஷ் ரகுநாதனின் வீடியோவைப் பார்த்துட்டு இந்த மாதிரித் தக்காளிச் சாதம் ஒரு நாள் பண்ணு என்றார்.

சரினு நேற்றுப் பண்ணினேன். அதற்குத் தேவையான பொருட்கள்.
பாஸ்மதி அரிசி ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம்
தக்காளி இரண்டை எடுத்துக் கழுவி அதன் கண்ணை எடுத்துவிட்டுப்பின்னர் வெந்நீரில் ப்ளாஞ்சிங் செய்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தோலை உரித்துக் கொண்டு தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடித்துச் சாறாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒன்றிரண்டு தக்காளித்துண்டுகள் மசியலைனாப் பரவாயில்லை.  எடுத்த தக்காளிச் சாறு கீழுள்ள படத்தில்

தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசி ரொம்பவும தண்ணீர் தாங்காது என்பதால் ஒரு கிண்ணத்துக்குள்ளாகத் தேங்காய்ப் பால் இருக்கட்டும். ஆதலால் தேங்காய் கொஞ்சமாகவே இருக்கட்டும். நான் சின்னதாக ஒரு பாதி மூடி எடுத்துக் கொண்டேன். 




வெங்காயம் ஒன்று நறுக்கிக் கொள்ளவும்.  பச்சை மிளகாய்.

இங்கே ஒரு வெங்காயம் நறுக்கி வைச்சிருக்கேன். தேங்காய்ப் பால் எடுக்கத் தேங்காய், நறுக்கிய பச்சை மிளகாய், ப்ளாஞ்சிங் செய்திருக்கும் தக்காளிகள், பாத்திரத்தில் ஊறும் அரிசி ஆகியவை மேலே காணலாம்.
இஞ்சி தேவையானால் ஒரு சின்னத் துண்டு. பூண்டு சேர்ப்பவர்கள் இஞ்சியையும், பூண்டையும் சிதைத்துக் கொள்ளவும். \
கொத்துமல்லி, புதினா இலைகள் பொடியாக நறுக்கியது வகைக்கு ஒரு மேஜைக்கரண்டி. என்னிடம் புதினா இல்லை என்பதால் கொத்துமல்லி மட்டும் கடைசியில் தூவினேன். வதக்கும்போது சேர்க்கலை.

தாளிக்க எண்ணெயும் நெய்யுமாக ஒரு மேஜைக்கரண்டி

ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை. இதில் கிராம்பு ராகேஷ் சேர்க்கலை. அதே போல் சோம்பு, ஜீரகமும் சேர்க்கலை. நான் இவை சேர்த்தேன்.  பச்சை மிளகாயையும் இஞ்சியையும் போட்டு வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கினேன்.

மிளகாய்த் தூள் கால் தேக்கரண்டி(காரமாக இருப்பதால் கொஞ்சமாகப் போட்டேன்._

ஒரு தேக்கரண்டி தனியாப் பொடி
அரைத்தேக்கரண்டி மஞ்சச்ள் பொடி (கரம் மசாலாப் பொடி தேவையானால் சேர்க்கலாம். நான் சேர்க்கலை) கொத்துமல்லி, புதினா இலைகளை வெங்காயம் வதக்கினதும் சேர்க்கிறாங்க. அது உங்களுக்குப் பிடித்தால் சேர்க்கலாம். நான் சேர்க்கலை. வெங்காயம் வதங்கியதும் தக்காளிச் சாறைச் சேர்த்தேன். அதில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி சேர்த்துத் தக்காளி ப்யூரியை நன்கு சுண்டும்படி கொதிக்க விட்டேன். கொதித்துச் சேர்ந்து வரும்போது மேலே எண்ணெய் பிரியும்.




சுண்ட வைச்ச தக்காளி ப்யூரி கலவை




ஊற வைத்த அரிசியோடு காய்ந்த பட்டாணி ஊற வைச்சு அரைவேக்காடாக எடுத்துச் சேர்த்து வைச்சிருக்
கேன்.


 மேலே சொன்ன கலவையில் ஒரு கிண்ணம் தேங்காய்ப் பால் சேர்த்தது மேலே காணும் படத்தில்


வதக்கிய தக்காளிச் சாறுக் கலவையைத் தேங்காய்ப் பால்+பட்டாணீ+அரிசி சேர்த்த கலவையில் போட்டு ஒரு தரம் நன்கு கலந்து விட்டு ) அரிசி உடையக் கூடாது) உப்புத் தேவையானதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி வெயிட் போட்டேன். ஒரே ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்தேன். குக்கர் திறக்க வந்ததும் சாதம் தயார். மேலே கொத்துமல்லிதூவி விட்டு வெங்காயப் பச்சடி,காரட் சாலட் ஆகியவற்றோடு சாப்பிட்டோம்.






வெந்த சாதம் குக்கரில்.  பாஸ்மதி அரிசியை குறைந்தது அரை மணி நேரமாவது ஊற வைத்துவிட்டுப் பின்னர் சமைத்தால் அரிசி நீளமாகவும், மிருதுவாகவும் வேகும்.பொதுவாக வெந்நீர் கொதிக்கவிட்டு ஒரு கிண்ணம் சேர்ப்பது உண்டு. ஆனால் இதில் தேங்காய்ப் பால் சேர்ப்பதால் ஒரு கொதி விட்ட பின்னர் குக்கரை மூடுகிறோம். சாதம் மிருதுவாகவே இருக்கும். 


84 கருத்துகள்:

  1. முதல் பிளேட் த .சாதம் எனக்கே 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடுங்க, சாப்பிடுங்க, நல்லா இருக்கா?

      நீக்கு
    2. முதல் பிளேட் சாப்பிட்டவங்க மிச்சம் மீதி வைச்சு இருந்தால் அடுத்த பிளேட் எனக்கு

      நீக்கு
    3. //Angel1 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 5:34
      முதல் பிளேட் த .சாதம் எனக்கே ///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா அஞ்சுவை நித்திரை கொள்ளச் சொல்லுங்கோ.. மீதான் இங்கின 1ஸ்ட்டூஊஊஉ:)).. ஆனா சாதம் முழுவதையும் அஞ்சுவுக்கும்.. மிஞ்சினால் அம்பேரிக்கா ட்றுத்துக்கும் குடுங்கோ:) மீக்கு வாணாம்:)) டக்காழி ஒத்துவராதாக்கும்:))

      நீக்கு
    4. @அரண்மனை! அது என்ன தக்கா"ழி"? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இம்பொசிஷன் எழுதுங்க லக்ஷம் தரம். தக்காளி, தக்காளினு!

      நீக்கு
  2. //கரம் மசாலா அல்லது ஏலக்காய், கிராம்பு தாளித்துக் கொண்டும் பண்ணி இருக்கேன்.//எனக்கு தக்காளி இந்த ஏலம்  பட்டை கிராம்பு சோம்பு இதுக்கெல்லாம் பிளேஸ் கொடுக்க இஷ்டமில்லை :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட? ஏஞ்சல்! வாங்க, வாங்க, ராத்திரி வேளையிலே த.சா சாப்பிட்டா ஜீரணம் ஆகணுமே. நானும் இப்போல்லாம் ஏலக்காய், கிராம்பு அதிகம் போடுவதில்லை. போடாமலே பண்ணுகிறேன்.

      நீக்கு
  3. தக்காளி இரண்டை எடுத்துக் கழுவி அதன் கண்ணை எடுத்துவிட்டுப்பின்னர்///
    அவ்வ்வ்வ் வயலன்ஸ் வயலன்ஸ் :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஃகி,இஃகி,இஃகி! தக்காளியின் கண் உடல் நலத்துக்கு நல்லது இல்லையே! அதான் அதை எடுக்கிறோம்.

      நீக்கு
  4. எண்ட் ப்ராடக்ட் பார்க்க அருமையா இருக்கு .அந்த கி /ஏ /ப  சேர்க்காமல் செய்யப்போறேன் :)  .நானும் ரசத்துக்கு இப்போல்லாம் தக்காளியை சுடுநீரில் குளிப்பாட்டி ட்ரெஸ் சேஞ் பண்ணிவிட்டுதான் ரசத்தில் சேர்க்கிறேன் :) ஹாஹாஹா 

    பதிலளிநீக்கு
  5. ராகேஷ் ரகுநாதன் அம்மாவின் ரெசிப்பி மொத்து இட்லி ஒருமுறை செய்தேன் நல்லா வந்தது சாதா இட்லி போலில்லாம அரிசி உப்மா கலவையை இட்லிபோல் செஞ்சிருந்தாங்க .இந்த தக்காளி சாதத்துக்கு கொஞ்சம் மேக்கப் போட saffron சேர்க்கலாம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னோட மாமியார் கல்லுரலில் அரைக்கவே உட்கார மாட்டாங்க. அவங்களால் அது இயலாது. ஆகவே இப்படித்தான் புழுங்கலரிசியைக் களைந்து உலர்த்தி மாவு மிஷினில் கொடுத்து சன்ன ரவையாக உடைத்துக் கொண்டு அதில் நீர் விட்டுச் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு உளுந்தை மட்டும் ஊற வைத்து மாவாக்கிச் சேர்த்து இட்லி செய்வாங்க. இந்த முறையிலேயே இட்லி பண்ணுவதால் நாம அரிசியை அரைச்சுப் போட்டுப் பண்ணும் இட்லி அவங்களுக்குப் பிடிக்காது. இந்த முறை இட்லி கொஞ்சம் உதிராக இருக்கும். அவங்க இதான் நல்லா இருக்கும் என்பாங்க. எனக்கு இதில் அரிசி ரவையும் உளுந்தமாவும் ஒன்றோடொன்று கலக்காத மாதிரியே இருக்கும். இதில் இட்லி பண்ணினால் எனக்குச் சரியாவும் வராது. பிடிக்கவும் பிடிக்காது.

      நீக்கு
    2. மூன்று நாட்கள் முன்பு ஆன்மீகப் புத்தகங்கள் வாங்க மனைவியுடன் சென்னிருந்தபோது அதன் பக்கத்தில் இணையத்தில் நான் படித்த ஹோட்டல் இருந்தது. அவங்கள்ட நாலு இட்லி வாங்கிக்கொண்டு வந்தேன். அது பழைய கால முறைப்படி ரொம்ப பெரிதாகவும், அரிசி சன்ன ரவை சேர்த்தது போலவும் ரொம்ப நல்லா இருந்தது. மனைவியையும் அதேபோல பண்ணச் சொல்லி நேற்று சாப்பிட்டேன் (இதற்கு முன்பே இட்லி அரிசி ரவை வாங்கிவைத்திருந்தேன்). ஒரு நாளைக்கு ஓகே... ஆனால் நம்ம இட்லிபோல வராது. அரைத்துச் செய்வது மென்மையா இருக்கும். இது-கர்நாடகா ஸ்டைல் உதிர்ந்துவிடும். காலைலதான், மனைவிட்ட இதைச் சொல்லி, இனிமேல் உன் மெதட்லயே பண்ணுன்னு சொல்ல நினைத்தேன். இங்க உங்க பின்னூட்டம் பார்த்ததும் எழுதிட்டேன்.

      நீக்கு
    3. கர்நாடகாவில் ரவை இட்லியே பிரபலம் ஆச்சே. ஆகவே அரிசி ரவையிலும் பண்ணுவாங்க. அரைச்சுப் பண்ணுவது தான் எனக்குச் சரியா வரும்.

      நீக்கு
  6. வரபோற எல்லாருக்கும் இனிய திங்கள் வணக்கம் .நான் துயில போகிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க தூங்கிட்டு வாங்க!

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். லேட்டா துயிலப் போகிற ஏஞ்சலுக்கு குட் நைட்.

      நீக்கு
    3. மாதம் ஆரம்பிக்கும்போதே தூக்கமா? நடத்துங்க நடத்துங்க ஏஞ்சலின்

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை, மாலை வணக்கம்.நல்வரவு, வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் பெருகி மன அமைதி கிட்டவும் பிரார்த்தனைகள். சகோதரர் துரையின் தாயார் பூரண குணம் அடையவும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு

  8. நீங்கள் முதலில் சொன்னபடி என் மனைவி செய்வார் . நான் செய்யும் முறை சற்று மாறானது. வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை நறுக்கி அதை எண்ணெய்யில் சற்று வதக்கி அப்படி வதக்கும் போது அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சிறிது சேர்த்து வதக்கி சாதத்தோட சேர்த்து வேகவைத்து இறக்கி அதன் பின் கொத்தமல்லி இலை தூவி வைத்துவிடுவேன்

    நீங்கள் சொல்லும் தேங்காய் பால் ஊற்றி செய்யும் சாதம் இப்போதுதான் முதல் முறையாக கேட்கின்றேன் அது நான் செய்யும் நெய்சாதம் போல இருக்கிறது அதில் நான் தக்காளியை கட் பண்ணி செய்வேன் நீங்கள் தக்காளியை பேஸ்டாக்கி செய்கிறீர்கள்

    எது எப்படியோ இப்படி வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் சமையம் போரடிக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். நானும் நேரத்துக்கு ஏற்றபடி சமையலில் மாற்றங்களைச் செய்து விடுவேன். கொஞ்சம் சாப்பாட்டில் ருசியும் ஆர்வமும் வரணுமே!

      நீக்கு
  9. எல்லோரையும் எப்பொழுதும் இறைவன் பக்கத்தில் இருந்து காப்பார்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு கீதாமாவின் தக்காளி சாதம் மிக வித்தியாசமா இருக்கு. தேங்காய்ப்பால் விட்டால்
    நல்ல சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    மசாலா சேர்க்கையும் , அதிலேயே சாதம் வேக வைப்பதும்
    மிக அருமை.
    படங்களும் செய்முறை விவரங்களும் மிகச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரேவதி. வெறும் ஏலக்காயும், கிராம்பும் மட்டும் தாளித்துக்கொண்டும் பண்ணலாம். நான் சில சமயங்கள் சோம்பு மட்டும் தாளித்தோ அல்லது கைகளால் கசக்கியோ சேர்ப்பேன். அந்த வாசனையே போதும்.

      நீக்கு
  11. இஃகி,இஃகி,இஃகி! தக்காளியின் கண் உடல் நலத்துக்கு நல்லது இல்லையே! அதான் அதை எடுக்கிறோம். top class😁😁😁😁😁😁😁😁😁

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஃகி,இஃகி,இஃகி! தக்காளியின் அந்தக் கண் நம்மை நன்றாக முழிச்சுப் பார்க்குமே! அதிலிருந்தே தெரியும் அது உடம்புக்கு நல்லதில்லைனு! :)))))

      நீக்கு
  12. கடைசி படம் வெகு ஜோர்.
    அற்புதமாக வந்திருக்கு! இவ்வளவு அருமையாகத் தக்காளி சாதம் செய்து நான்
    பார்த்ததில்லை. மிகமிக நன்றி கீதா மா.

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் காலை வணக்கம். தேங்காய் பால் சேர்த்தும் தக்காளி சாதம் செய்யலாம் என்று தெரிந்து கொண்டேன். படங்களோடு விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  15. இந்த வருடம் திங்கள் கிழமைக்கு கடுமையான போட்டி நிலவும் போலிருக்கிறதே? சென்ற வருடம் தலையைக் காட்டாத நெ.த., அத்திப் பூத்தாற் போல வரும் கீதா அக்கா, வல்லி அக்கா என்று எல்லோரும் களத்தில் குதித்து விட்டார்கள். We miss Geeja Rengan. அவரும் மீண்டும் நம்மோடு விரைவில் இணைய வேண்டும் என்று பிரார்த்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் நிறையச் செய்முறை படங்களோடு அனுப்பாமல் கிடக்கு. இதெல்லாம் இப்போச் செய்தது. இவை முந்திக்கொண்டு விட்டன. இன்னொன்றும் இருக்கு. அனுப்ப முடியுமானு பார்க்கணும். கீதா ரங்கன் என்னுடன் பத்து நாட்கள் முன்னர் பேசினார். விரைவில் வருவேன் என்றார்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா) மீண்டும் கலகலப்பாக இணையத்துக்கு வரணும் என்று அப்போ அப்போ நான் ப்ரார்த்தித்துக்கொள்கிறேன். என் அன்புக்குரிய அக்கா அவர்.

      நீக்கு
  17. காலை வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவு தக்காளி சாதம் நன்றாக உள்ளது. ஒவ்வொரு பக்குவமாக கூறி சிறப்பாக செய்துள்ளீர்கள். படங்கள் அருமையாக வந்துள்ளது. செய்முறை விளக்கங்களும் சுவையாக உள்ளது.

    நானும் முக்கால்வாசி தக்காளியை நறுக்கி சேர்ப்பதை விட அரைத்து விட்டுதான் இதே பக்குவத்தில் தக்காளி சாதம் பண்ணுவேன். ஆனால், இதுவரை இந்த தேங்காய் பாலை மட்டும் தக்காளியுடன் சேர்த்ததில்லை. இனி சேர்த்து செய்து பார்க்கிறேன்.

    தக்காளி கண் பாகத்தை நறுக்காமல் உறவில் சிலர் சமையலில் சேர்த்து விடுவார்கள். அதைக்கண்டதும் எனக்கு அன்று சாப்பாடே சாப்பிட ஒரு மாதிரியாக இருக்கும். அதனால் எங்கள் வீட்டில் அவர்கள் வரும் சமயம் தக்காளியை அவர்கள் நறுக்க விடாமல் ("ரொம்பத்தான் சுத்தம்" என்று அவர்கள் முணுமுணுப்பதையும் பொருட்படுத்தாமல்) பார்த்துக் கொள்வேன். அப்படியும் எனக்கு நேரடியாக திட்டும் கிடைக்கும்.

    நீங்கள் சொல்லியிருக்கும் முறைகளைனைத்தும் நன்றாக சுவையானதாக உள்ளது. நேற்று எங்கள் உறவுகள் வருகையில் வலைத்தளம் வர இயலவில்லை. அதனால், இரவு தாமதமாக பார்வையிட்டதில் நேற்றைய பகிர்வில், தசாகீசாவுக்கு இன்று பொருள் உணர்ந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கமலா, ஆமாம், அதனால் என்ன என்பார்கள். நானும் கிட்டத்தட்ட உங்களைப் போலத்தான். கூடியவரை தக்காளி, கீரை போன்றவற்றை நானே நறுக்குவேன்.

      //தசாகீசாவுக்கு இன்று பொருள் உணர்ந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.// இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  18. காலை வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவு தக்காளி சாதம் நன்றாக உள்ளது. ஒவ்வொரு பக்குவமாக கூறி சிறப்பாக செய்துள்ளீர்கள். படங்கள் அருமையாக வந்துள்ளது. செய்முறை விளக்கங்களும் சுவையாக உள்ளது.

    நானும் முக்கால்வாசி தக்காளியை நறுக்கி சேர்ப்பதை விட அரைத்து விட்டுதான் இதே பக்குவத்தில் தக்காளி சாதம் பண்ணுவேன். ஆனால், இதுவரை இந்த தேங்காய் பாலை மட்டும் தக்காளியுடன் சேர்த்ததில்லை. இனி சேர்த்து செய்து பார்க்கிறேன்.

    தக்காளி கண் பாகத்தை நறுக்காமல் உறவில் சிலர் சமையலில் சேர்த்து விடுவார்கள். அதைக்கண்டதும் எனக்கு அன்று சாப்பாடே சாப்பிட ஒரு மாதிரியாக இருக்கும். அதனால் எங்கள் வீட்டில் அவர்கள் வரும் சமயம் தக்காளியை அவர்கள் நறுக்க விடாமல் ("ரொம்பத்தான் சுத்தம்" என்று அவர்கள் முணுமுணுப்பதையும் பொருட்படுத்தாமல்) பார்த்துக் கொள்வேன். அப்படியும் எனக்கு நேரடியாக திட்டும் கிடைக்கும்.

    நீங்கள் சொல்லியிருக்கும் முறைகளைனைத்தும் நன்றாக சுவையானதாக உள்ளது. நேற்று எங்கள் உறவுகள் வருகையில் வலைத்தளம் வர இயலவில்லை. அதனால், இரவு தாமதமாக பார்வையிட்டதில் நேற்றைய பகிர்வில், தசாகீசாவுக்கு இன்று பொருள் உணர்ந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்துக்கு வரமுடியலை.. ஓகே... அதுக்கு எதுக்கு இம்போசிஷன் எழுதியிருக்காங்க கமலா ஹரிஹரன் மேடம்?

      நீக்கு
    2. ஹிஹிஹி, சில சமயங்களில் இப்படித்தான் 2,3 தரம் வருது. நான் உடனே நீக்கிடுவேன். கமலா கவனிச்சிருக்க மாட்டாங்க! :)))))

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      சகோதரர் நெல்லைத் தமிழர் சொல்லியிருப்பது போன்று இன்று என் கருத்து இம்போஸிஷனாக வந்து விட்டதை காலையிலேயே கவனித்து விட்டேன். கருத்துரை எண்ணிக்கைக்கு ஏதோ என்னால் ஆன உதவியாக இருக்கட்டுமென விட்டு விட்டேன்.:))

      இரண்டாவது இது என் தவறல்ல.. என் "அலைபேசி"யின் தவறு. முதலிதை வெளியிடும் போது நெட் இல்லை என சொன்னது. அடாடா.. எழுதிய தெல்லாம் போய் விட்டதே என வருத்தத்துடன் பிறகு பின்னால் வந்தும், அது கருத்துரையை காண்பித்ததால் சந்தோஷ அவசரத்தில் "வெளியிடு" என்பதை தொட்டதும் இரண்டு தடவையாக வெளியிட்டு விட்டது.

      சமுத்திரத்தில்"அலைகள்" எப்பவாவது ஒன்றோடு சேர்ந்து இரண்டாக வருவது இயற்கையல்லவா? இதுவும் அதன் பெயரை கொண்டுள்ளதால், இப்படி ஆக்கி விட்டதோ என்னவோ...:) ஆனால், இரண்டுக்கும் நீங்கள் மறுமொழி அளித்திருப்பதற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. தக்காளி சாதம் முதலில் நீங்கள் சொன்ன செய்முறை மாதிரி தான் நான் செய்வேன்.
    இந்த சமையல் குறிப்பை பதிவும் செய்து இருக்கிறேன்.

    சகோதரி ஜலீலா அவர்கள் நடத்திய சமையல் போட்டியில் பங்கு கொண்டேன்.
    திருமணம் ஆகாத ஆண்கள் தாங்களே சமைத்துக் கொள்ள எளிதாக இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை.
    தக்காளி சாதம், தனியாபொடி, உருளைகிழங்கு காரக்கறி செய்து அனுப்பினேன்.

    என் தங்கை தேய்காய் பால் சேர்த்து செய்வாள் அவளிடமிருந்து நானும் கற்றுக் கொண்டேன்.

    பாஸ்மதி அரிசியில் செய்தது இல்லை.

    படங்களுடன் செய்முறை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. தேங்காய் பால் சேர்த்த தக்காளி சாதம். வித்தியாசமா இருக்கு. நானும் மசாலாக்கள் (பட்டை சோம்பு இலை...ஆனால் ஏலம் கிராம்பு ஓகே) சேர்க்காமல் செய்தால் ரொம்பப் பிடிக்கும்னு தோணுது.

    நான் பதினைந்து வருடங்களாக பாஸ்மதி சாதம்தான் (அதிலும் பாகிஸ்தான் ப்ராண்டு...அதுதான் நல்லா இருக்கும், விலையும் குறைவு) சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் (அது மட்டும்தான் வாங்குவேன்). அப்புறம் பாஸ்மதியே சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்று விட்டுவிட்டேன். அதன் பிறகு மொத்தமா இத்தனை வருடங்களில் ஐந்து கிலோ வாங்கியிருந்தாலே அதிகம். சமீப வருடங்களாக கோலம் அரிசி மட்டும்தான் உபயோகிக்கிறேன் (பத்து வருடத்துக்கு முன்னால் என் நண்பன், (டயபடீஸ் கிட்னி பிரச்சனைகள் இருந்தவன்) அதுதான் தான் உபயோகிப்பதாகச் சொன்னதிலிருந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் உங்ககிட்டே பாஸ்மதி உடல்நலனுக்குக் கேடுனு சொன்னாங்கனு தெரியலை. நீரிழிவுக்காரங்களுக்கு அது நல்லதுனு பையர் நாங்க அம்பேரிக்காவில் இருக்கையில் அதான் வாங்கிக் கொடுப்பார். இப்போத் தான் ஓராண்டாக ஆர்கானிக் அரிசி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      பாசுமதியும், பொன்னி புழுங்கல் சாப்பாட்டு அரிசியும் திருமங்கலத்தில் உள்ள போது தொடர்ந்து பல வருடங்களாக சாப்பிட்டுள்ளோம். இப்பொது நாங்களும் நீங்கள் கூறும் அரிசிதான், இங்கு வந்த பின் கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வருடங்களாக உபயோகித்து வருகிறோம். வேறு பிராண்ட் எதுவும் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த கொரானாவுக்கு முன்பு எங்காவது உணவகங்களில் சாதம் சம்பந்தப்பட்ட உணவுகள் ஒருவேளை சாப்பிட்டாலும் சற்று ஒத்துக் கொள்ளாமல் போய் விடுகிறது. இனி உறவுகள் வீட்டிற்கு எங்கே போனாலும் கோலம் மட்டும் போடுங்கள் என்றுதான் கேட்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் திருமணங்களில் மா.வீட்டு உபசார சம்பிரதாயத்தை இவர்கள் இன்னும் விடவில்லை போலும் என நினைத்தபடி நமக்கு இலைக்கு/தட்டுக்கு அடியில் கோலம் மட்டும் போட்டு (தட்டில் பரிமாறுவது அப்புறம் அவர்கள் விருப்பம்) விடுவார்கள்.:)). நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. கோலம் அரிசி துபாய்லதான் கிடைத்தது. பஹ்ரைன்ல நான் ஆரம்பத்துல பார்க்கலை. அதுனால துபாய்ல இருந்து வரும்போது வாங்கிவருவேன். அப்புறம் பஹ்ரைன்ல ஒரு முறை பார்த்தபோது அங்கு வாங்க ஆரம்பித்தேன். பாஸ்மதி அரிசியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலை என்று நினைவு. இங்கயும் 60-70 ரூபாய் ரேஞ்ச், சோனா மசூரி 51-57 ரூபாய் விலை.

      மனசுல தோணும்...ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி, கொஞ்சம் பட்டை தீட்டி சின்னதாச்சுன்னா சோனா மசூரியாகவும், ரொம்பவே பட்டை தீட்டி இன்னும் சின்னதாச்சுன்னா கோலம் அரிசியாகவும், அளவுக்கு அதிகமாக பட்டை தீட்டி சீரக அரிசி என்றும் விற்கிறாங்களோ?

      நீக்கு
    4. தொண்ணூறுகளில் ஜெயலலிதா முதல் மந்திரியாக இருந்தப்போ ரேஷனில் நல்ல அரிசியாகவே போட்டார். நாங்க வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். அப்புறமா அதைச் சுத்தம் செய்து நெல், கல் பொறுக்குவதில் எனக்குத் தலைவலி விடாமல் வரவே ரேஷன் அரிசியை வாங்குவதை நிறுத்தினோம். இப்போது ரேஷன் கார்டே இல்லை. திருப்பிக் கொடுத்துட்டோம்.

      நீக்கு
  22. கீசா மேடம்... நீங்க எழுதியிருப்பதுபோல, பல இணையச் செய்முறைகளைப் பார்த்து, எங்க வழக்கத்திற்கு அடாப்ட் செய்து வீட்டில் பண்ணுவோம். அவற்றில் பல நல்லாவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. என்னதான் அவங்க சொன்னாலும் நம்முடைய முறைனு ஒண்ணு இருக்குமே! அப்படிச் செய்தால் தான் சரியா வரும்.

      நீக்கு
  23. ஶ்ரீராம்... இணையத்தைப் பார்த்து செய்துபார்த்து தி பதிவுக்கு அனுப்பலாம்னு சொல்லலையே... அப்போ நானுத் தினம் தினம் அனுப்புவேனே ஹாஹா. (சும்மா கீசா மேடத்தைக் கலாய்க்கத்தான்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானுமே யோசிச்சுத் தான் அனுப்பினேன். ஶ்ரீராம் அங்கீகாரம் கொடுத்துட்டார்.

      நீக்கு
  24. வித்தியாசமான முறை... விரிவான விளக்கம் அருமை...

    பதிலளிநீக்கு
  25. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  26. தக்காளி சாதம் நன்றாகத் தான் வந்திருக்கின்றது... ஆனாலும் செய்முறை இப்படித்தான் என்றில்லை...

    பதிலளிநீக்கு
  27. தற்போதைய தக்காளியின் மூலக்கூறுகள் அவ்வளவு எளிதில் கரைவதில்லை என்று எங்கோ படித்தபின் - தக்காளியை வெகுவாகக் குறைத்துக் கொண்டேன்... இங்கு கிடைக்கும் தக்காளிகளும் ஒரு மாதத்துக்கு மேல் ஆனாலும் கெடாமல் Chiller ல் இருக்கின்றன..

    தக்காளியில் ஒருவித மணம் முசுமுசு என்று இருக்கும்.. அது இங்கே கிடைப்பனவற்றில் இருப்பதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதுக்குத் தான் "பெண்"களூர்த் தக்காளி வாங்குவதே இல்லை. உ.கி.யின் மூலக்கூறுகளோடு இணைக்கப்பட்டு உருவானதாய்ப் படிச்சேன். வாங்கினால் நல்ல உண்மையான நாட்டுத் தக்காளி. இல்லைனால் சாறுள்ள சிவப்புத்தக்காளி. நாட்டுத்தக்காளியின் தம்பி. சென்னையில் இதைத் தான் நாட்டுத் தக்காளினு விற்பாங்க.

      நீக்கு
    2. ஆப்பிளின் தங்கச்சி மாதிரி என்று சொல்ல நினைத்தேன்...

      தக்காளி தான் இங்கு வந்தேறி நமக்கு வாய்க்கு ருசியைக் கொடுத்ததாயிற்றே., அதற்கு எதற்கு " நாட்டு.." என்னும் அடைமொழி!...

      நீக்கு
    3. இந்த நாட்டுத்தக்காளி தான் உண்மையான தக்காளி. கொஞ்சம் புளிப்புச் சுவை இருக்கும். இன்னொன்று சாறு இருந்தாலும் புளிப்பு அவ்வளவா இருக்காது.
      "பெண்"களூர்த் தக்காளி எனில் சாறே வராது. இருக்கவும் இருக்காது. என்னதான் நறுக்கி வதக்கி வேக வைத்தாலும் சீக்கிரம் சுருண்டுக்காது. நாட்டுத்தக்காளி எனப்படும் தக்காளியில் துவையல் செய்தால் வரும் ருசி மற்றத் தக்காளிகளில் வராது.

      நீக்கு
    4. நான் ரொம்ப வருடங்களுக்கு முன்பு படித்தது... நாட்டுத் தக்காளியில், தவளையின் டி.என்.ஏவில் ஒன்றைச் சேர்த்து அதன் தோலைத் தடிமனாக்கிவிட்டார்கள். இன்னும் பல மூலக்கூறுகளைச் சேர்த்து பெங்களூர் தக்காளி என்று நாம் உபயோகிக்கிறோம். அதனால்தான் பெங்களூர் தக்காளி சதைப்பற்றாகவும், தோல் தடிமனாகௌம், விதை கொஞ்சம் குறைந்தும் இருக்கும். நாட்டுத் தக்காளியின் ருசி, பெங்களூர் தக்காளியில் இருக்காது. அழகு பெங்களூர் தக்காளிதான். (பெ.தக்காளி கிலோ 15-20. நாட்டுத் தக்காளி அதைவிட 2 ரூபாய் அதிகம்)

      நீக்கு
  28. Cherry Tomatoes என்றொரு நவீன தக்காளி... புதிய உருவாக்கம்.. இங்கே தாராளமாகக் கிடைக்கின்றது.. இளஞ்சிவப்பு சிவப்பு மஞ்சள் நிறங்களில் ஒத்த வடிவங்களில்... பிளாஸ்டிக் டப்பா / 200 கிராம் நம்மூர் மதிப்புக்கு நூறு ரூபாய்.. இதை குழம்புக்கோ Sauce வகைகளுக்கோ ஆவதில்லை... Salad அலங்காரங்களுக்குத் தான்.. இது என்னென்ன உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றதோ...

    ஆனாலும் நான் விடுவதில்லை... மக்ரோனி, பனீர் சமையல்களில் பயன்படுத்திக் கொள்வேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பேரிக்காவில் பார்த்திருக்கேன் செரி தக்காளியை. அங்கே சாலடில் தான் பயன்பாடு. அதிகம் சாப்பிட்டதில்லை.

      நீக்கு
  29. படங்களோடு சொல்லிய விதம் அருமை சகோ

    பதிலளிநீக்கு
  30. சமையற்குறிப்பு அருமை! இதை நாங்கள் தக்காளி புலவு என்று கூறுவோம். தேங்காய்ப்பால் சேர்ப்பதால் 'ரிச்'சாக இருக்கும். பொதுவாய் பிரியாணி, புலவு 'ரிச்'சாக இருக்க வேண்டுமானால் தேங்காய்ப்பாலும் முந்திரி அரைத்த விழுது சிறிதும் சேர்ப்பார்கள். தேங்காய்ப்பால் இல்லாமல் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து இதையே இஸ்லாமியர் ' குஸ்கா' என்று செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய்ப் பால்/முந்திரி நான் சேர்த்தும் பண்ணுவேன். சேர்க்காமலும் பண்ணுவேன். குஸ்கா செய்முறையும் இப்படித்தானா? பார்க்கணும். பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  31. என்னுடைய கணினி ரிப்பேர் விரிவாக எழுத முடியவில்லை நன்றாக இருக்கிறது ஆனால் குக்கரில் செய்வதால் செய்வதினால் புல வகை சேர்ந்துவிடுகிறது ஓகே ஆனது அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரைஸ் குக்கரிலும் வைக்கலாம் அம்மா. என்னோடது ரைஸ் குக்கர் ரொம்பப் பெரிதாக இருப்பதால் கொஞ்சமாகச் செய்ய முடிவதில்லை. அதிலும் நன்றாக வரும்.

      நீக்கு
  32. மிக அருமையான சாதம் கீசாக்கா, பார்க்கவே சாப்பிடத் தூண்டுது, ஆனால் நாங்கள் தக்காழி பெரிதாக சேர்ப்பதில்லை, எப்போதாவது ஒரு தடவை பிறியாணி அல்லது சம்பல் செய்வதற்கு மட்டும் வாங்குவதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அரண்மனை. உங்களை மாதிரித்தான் மாமாவுக்கும். தக்காளி அவ்வளவாப் பிடிக்காது. நான் நேர்மாறாகத்தக்காளியை எல்லாவற்றிலும் சேர்ப்பேன். இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  33. அனைவருக்கும் காலை வணக்கம்! கீதாம்மா, தக்காளி சாதம் ரெசிபி அருமை! என் மகளுக்கு தக்காளி சாதத்தில், சாப்பிடும் பொழுது இடை இடையே தக்காளி வந்தால் பிடிக்காது. இதைப் போல பார்க்கிறேன் அம்மா.

    பதிலளிநீக்கு
  34. இந்த செய்முறை எனக்கும் பிடிக்கும். தக்காளி சாற்றில் ஊறிய அரிசியில் செய்தால் தக்காளி சாதம் நல்ல மணமும் சுவையும் கூடியதாக இருக்கும். இப்போது தெருவுக்கு தெரு இந்திய உணவகங்கள், அதுவும் தென்னிந்திய உணவகங்கள் கலிபோர்னியாவில் சீப்படுகின்றன. தொண்ணூறுகளில் நியூயார்க் லாஸ் ஏஞ்சலிஸ் சேன்பிரான்சிஸ்கோ நகரங்களில் ஹையத் போன்ற அமெரிக்க ஹோட்டல் சமையல் வல்லுனர்கள் இந்த முறையை பின்பற்றினார்கள்.

    பிரபல சமையல் டிவி ஷோ ஒன்றில் ஒரு பிரிடிஷ் பெண்மணி (பெயர் மறந்து விட்டது - மீனாட்சி சமையல் புத்தகம் பற்றி சிலாகிப்பார்) கலவை சாதம் என்ற பெயரில்.. அரை வெந்த அரிசியில் தக்காளி சாற்றில் ஊறிய பச்சை வெங்காயம், கத்தரிக்காய், சுகினி கலந்து மறுபடி வேக வைத்து எடுப்பார். அதைப் பார்த்து விட்டு என் மாமியார் ஒரு முறை செய்தார். சகிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா! வாங்க அப்பாதுரை! கிட்டத்தட்ட எட்டு மாசம் கழிச்சுப் பார்த்துக் கருத்துச் சொல்ல வந்தமைக்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!