நெல்லைத்தமிழன் :
1. அரசு பேருந்தில் முதல் இருக்கை, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு ஒதுக்கியிருப்பாங்க. அவங்கள்லாம் அரசுப் பேருந்தில் போவாங்கன்னு அரசு நம்பிக்கிட்டிருக்குதா?
# 1950 களில் வந்த ஆணை. அப்போது பயன்படுத்தப் பட்டதை அறிவேன். இப்போது நிலவரம் இது தேவையில்லை என்பதே.
& கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு அந்த இருக்கை கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
2. இவங்க நல்ல காடரிங் பண்ணறாங்க (திருமணம் போன்ற விசேஷத்துக்கு) என்று யார் யாரை நீங்க சிபாரிசு செய்வீங்க?
# ஆளாளுக்கு மாறுபடும் அளவீடுகள். நம் தேடல் குறைந்த செலவில் நல்ல உணவா , ஆடம்பரமான சூழலில் நல்ல உணவா என்பது முதலில் தெரிய வேண்டும். மேலும் எத்தனை தலைகள் என்பதும் முக்கியம்.
& எனக்குத் தெரிந்து சென்னையில் எங்கள் ஆஸ்தான caterer ஒருவர் இருக்கிறார். Mahalakshmi Catering Services - Nagarajan. Keelkattalai - Chennai 600117. எங்கள் குடும்ப கல்யாணங்கள் எல்லாவற்றுக்கும் சிறப்பான catering செய்தார்.
3. பசிக்குது, டக்குனு பண்ணிச் சாப்பிடணும்னா நீங்க என்ன பண்ணுவீங்க?
# உப்புமா, கேழ்வரகு அல்லது அரிசி நொய் கஞ்சி.
& வீட்டில் நிறைய ready made mix பொடிகள் இருக்கும். அப்போதைய விருப்பத்திற்கேற்ப ரவா தோசை, கைக்குக் கிடைத்த மாவுகளை எல்லாம் ஒவ்வொரு ஸ்பூன் போட்டு மாவு கரைத்து வார்க்கும் தோசை, அரிசிமாவு உப்புமா. சமீப காலத்தில் kayjee ரெகமண்ட் செய்த பாணி பூரி (pellets கிடைக்கின்றன - Amazon ) ஐந்தாறு எடுத்து மைக்ரோ வேவ் ஓவனில் பத்தே நொடியில் சிறு பூரிகள் பொரித்து - ஃபிரிஜ் ல இருக்கும் நேற்றைய ரசத்தை பாணி பூரிகளின் மீது ஊற்றி, 'ரசம் பூரி ' யாக சாப்பிட்டுவிடுவேன்!
* பசிச்சு சாப்பிட்டே நாளாகிறது! நேரத்துக்கு சாப்பிடுகிறோம்!
4. அம்மா கையால 'இதனைச்' சாப்பிடணும்னு நீங்க இன்னும் ஆசைப்படும் உணவு(கள்) என்ன?
# பருப்புத் துவையல், வாழைப்பூ வடகறி, வற்றல் குழம்பு புளியோதரை.
& அடை.
* மிளகு குழம்பு, அடை,
5. ஒரு வருடமா உருப்படியா திரைப்படம் எதுவும் வரலையே.. நீங்க படங்களை மிஸ் செய்தீர்களா?
# நான் திரைப்பட ஆர்வம் அதிகம் உள்ள நபர் அல்லன்.
& ஒரு வருடமாவா? எனக்குத் தெரிந்து பத்து வருடங்களாக உருப்படியான திரைப்படம் எதுவும் வரவில்லை!
ஏஞ்சல் :
1, பச்சோந்திகள் ..எப்படி இருக்கும் வரையறுக்கவும் ? நான் கேட்டது மனித உருவில் உள்ள பச்சோந்திகளை பற்றி - இரண்டு கால் பச்சோந்திகளை கண்டுபிடிப்பது எப்படி ?
$ பச்சோந்தி வளர்க்கப் போகிறீர்களா?
# கண்டு பிடிக்க முடியுமானால் அது (மனிதப்)பச்சோந்திகளின் இயல்புக்கு முரணாகி விடும்.
& // இரண்டு கால் பச்சோந்திகளை கண்டுபிடிப்பது எப்படி ?// ரொம்ப சிம்பிள். கால்களை எண்ணிப்பாருங்க.
2, கொஞ்சம் வயதில் பெரியவர்களை எத்துறை சார்ந்திருப்பினும் அவர்கள் பொது வெளியில் விமரிசனத்துக்குள்ளாகும்போது மனது கஷ்டப்படுது இதன் காரணம் என்ன ? அவங்க தப்பே செய்திருக்கட்டுமே ஆனாலும் மனம் வருத்தப்படுவதன் காரணம் என்ன ?
$ எதையாவது கவலைப்படுதல் சிலர் சுபாவம். Anxiety reducing drugs உதவக்கூடும்.
# பிரமுகர்களை ஆராதிப்பது ஒரு மனப் பாங்கு. அது செயல்படாமல் இருப்பது அசாத்தியம்.
& யாரு அந்தப் பெரியவர்னு சொல்லிடுங்க.
3, ஒரு காலத்தில் சீரியஸாக எடுக்கப்படாத சின்ன விஷயங்கள் கூட இப்போதெல்லாம் சிலரால் ஊதி பெரிதாக்கப்படுகின்றன இதை பற்றி உங்கள் கருத்து ?
$ பின்னே அவர்கள் பேச்சை மற்றவர் கேட்கவேண்டுமே?
# ஊடகம் வழியாக விரைவில் லட்சக்கணக்கான வர்களைச் சென்றடையும் வசதியைத் தந்த விஞ்ஞான வளர்ச்சிதான் காரணம். படிப்பவர் பக்குவம் பெறும் போது சரியாகிவிடும்.
4, உங்கள் வீட்டு கிச்சனில் எழுதப்படாத சட்டங்கள் எவை ?
$ நிறைய - ஒரு பதிவே எழுதலாம்
ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் வேறு கரண்டிகள்.
டப்பாக்களை உடனுக்குடன் மூடவேண்டும்
பால் காய்ச்சும் பாத்திரத்தில் வேறு எதுவும் வைக்கக் கூடாது.
# எங்கள் கிச்சன் சர்வ சுதந்திர பூமி. எச்சிற்கலப்பு தவிர்த்து எல்லாம் சரியே.
5,// 100 வருஷம் சேர்ந்து இணைபிரியாம வாழணும் // இப்படி வாழணும்னா பிறந்த உடனேயே கல்யாணம் ஆகியிருக்கணுமே ? சும்மா ஜாலிக்காக கேட்டேன் .
$ 100 வருடம் என்பதும் ஒரு பேச்சுக்கு சொல்வது தானே?
# நூறாண்டு ஆனாலும் கூட, பிரிவின்றி என்று கொள்ளலாம்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
கணிணி புழக்கத்திற்கு வந்த புதிதில் ஐ.சி.யூ.வில் வைப்பது போல அதை ஒரு குளிரூட்டப்பட்ட தனி அறையில் வைத்திருப்பார்கள்.,தூசு ஆகாது என்று நம் செருப்புகளை அறை வாசலில் விட்டு விட்டு பக்தியோடு உள்ளே செல்ல வேண்டும். ஆனால் மடிக்கணிணி வந்த பிறகு அத்தனை ஆசாரங்களும் அடித்துக் கொண்டு போய் விட்டதே? எப்படி?
$ PDP 11, IBM 1401 போன்ற கணினிகள் ferrite core memory டிரான்சிஸ்டர் core drivers எல்லாமாக நிறைய சக்தி வெப்பம் உண்டாக்குவதில் வீணானது. அதனால், குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டன.
Intel, amdhaal, VIC, Apple போன்ற கணினிகள் சற்று குறைந்த power இல் வேலை செய்தன.
Lap top, tab, android phone கள் வெகு குறைவான சக்தியில் நிறைய வேலை செய்யக்கூடியவை. எனவே குளிர் விட்டுப் போச்சு !
இப்பொழுது புரிந்திருக்கணுமே - ஆச்சார முறைகள் வேண்டாதவற்றை (தூசு) விலக்கி வைக்கவே வந்தன என்று!
# அதுதான் விஞ்ஞான வளர்ச்சி.
எங்கள் ப்ளாக் திங்கற கிழமைக்கு அப்பாதுரை ரெசிபி அனுப்பினால் எப்படி இருக்கும்?
$ திங்கள் கிழமைக்கு. தின்கிற மாதிரி ரெசிபி யாரனுப்பினால் என்ன?
# நான் அனுப்புவதைவிட நன்றாகவே இருக்கும் .
& அமானுஷ்யமாக இருக்குமோ? ரகுவிற்கு சமையல் தெரியுமா?
= = = = =
மின்நிலா சித்திரை சிறப்பிதழுக்காக - இந்தப் படத்தை மையமாக வைத்து ஏதேனும் எழுதி அனுப்புங்கள். உங்கள் படைப்புகளின் தலைப்பில் படம் 210303 என்று குறிப்பிடுங்கள்.
= = = =
//அரசு பேருந்தில் முதல் இருக்கை, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு ஒதுக்கியிருப்பாங்க. அவங்கள்லாம் அரசுப் பேருந்தில் போவாங்கன்னு அரசு நம்பிக்கிட்டிருக்குதா? ///
பதிலளிநீக்குஅவர்களிடம் இருந்து லெட்டர் வாங்கி கொண்டு வருபவர்களுக்கு அதாவது அந்த எம்.பி, எம்.எல்.ஏ அல்லது அவர்களின் உதவியாளர்கலிடம் இருந்து வருபவர்களுக்கு அரசு பேருந்தில் இடம் தருவார்கள்.. நான் சென்னையில் இருந்த போது இப்படி லெட்டர் வாங்கி கொண்டு மதுரைக்கு பல முறை சென்று இருக்கின்றேன்
ஒரு காலத்தில் திருவள்ளுவர் பஸ்ஸில் அதிசயமாக முதல்வரிசை இடம் கிடைத்தால் பயணம் சந்தோஷமாக இருக்கும்.
நீக்குஅரசுப் பேருந்து பயணங்கள் குறித்த சுவையான தகவல்களுக்கு நன்றி.
நீக்கு///இவங்க நல்ல காடரிங் பண்ணறாங்க (திருமணம் போன்ற விசேஷத்துக்கு) என்று யார் யாரை நீங்க சிபாரிசு செய்வீங்க? //
பதிலளிநீக்கு@நெல்லைதமிழன் புதுசா கல்யாணம் ஏதும் பண்ணப் போறீங்களா என்ன?
ஹா..ஹா... கல்யாணம் பண்ணிக்கப் போகிறீர்களான்னு கேட்கலையே...அதுவரை நிம்மதி
நீக்கு:))))
நீக்கு3. பசிக்குது, டக்குனு பண்ணிச் சாப்பிடணும்னா நீங்க என்ன பண்ணுவீங்க?
பதிலளிநீக்கு@நெல்லைதமிழன் எங்கவீட்டு ப்ரிஜில் இருக்கும் மிச்சம் மீதியை எடுத்து சாப்பிடுவேன்...
நீக்குதோசை சுட்டு சாப்பிடுவேன் எப்போது மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல எங்க வீட்டு ப்ரிஜில் தோசை மாவும் எப்போதும் இருக்கும் அப்படி இல்லைன்னா ரவா தோசை பண்ணி சாப்பிடுவேன்
பசியைப் பொறுத்தது அது. கொஞ்சநாள் நம்ம சாப்பாடு இல்லாமல் பயணத்திலிருந்து திரும்பிய உடன், சாதம், வெந்தயக்குழம்பு, உருளை கட் கரேமது செய்வேன். கரைத்தமா தோசை, தடிமனான ஊத்தாப்பம் இல்லைனா சூடா சாதம் பண்ணி தயிர் சாதம்... இவைதான் நான் விரும்புவது.
நீக்குசுவையான பரிமாற்றங்கள் நன்றி.
நீக்குஅம்மா கையால 'இதனைச்' சாப்பிடணும்னு நீங்க இன்னும் ஆசைப்படும் உணவு(கள்) என்ன?
பதிலளிநீக்கு@நெல்லைதமிழன் அம்மா வூட்டுக்கார அம்மாவா அல்லது பக்கத்துவீட்டுகாரம்மாவா அல்லது நம்மை பெற்ற அம்மாவா கேளிவி கேட்கும் போது தெளிவா கேட்கனுமாக்கும்
அம்மா செய்து தரும் ஒரு நான்வெஜ் ஐட்டம் சாப்பிட ஆசை அது என் அம்மாவால் மட்டும்தான் செய்ய முடியும். அதை கடைசியாக சாப்பிட்டது 1996 அதாவது கல்யாணம் செய்வதுவிட்டு வீட்டுக்கு முதன் முதலில் போன போது அம்மா எனக்காக செய்து தந்தது...
நீக்குஆம்! அம்மா என்றால் அம்மா தான்!
நீக்குஒரு வருடமா உருப்படியா திரைப்படம் எதுவும் வரலையே.. நீங்க படங்களை மிஸ் செய்தீர்களா?
பதிலளிநீக்கு@நெல்லைதமிழன் வடிவேலி விகேக் சந்தனாம் நடித்த பழையபடங்கள் இருக்கும் வரை புதுசை பற்றி யார் கவலைப்படுகிறார்கள்
ஹா ஹா... நான் சமீபத்துல திருஷ்யம்2 படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. கடைசியா எப்போ தியேட்டருக்குப் போனேன்னு நினைவில்லை (பாஹுபலிக்கு அப்புறம்). வீட்டில் எல்லோருடனும் அஜித் படம் போனேன். படம் பிடித்திருந்தது, ஆனால் சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்காப் பணம் போல, டிக்கெட்டைவிட இரு மடங்குக்குக்கு மேல் தியேட்டரில் உணவுக்குச் செலவானது.
நீக்கு:)))
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பலரும் இரண்டாவது முறையாகக் கோவிட் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அனைவர் உடல்நலனும் மேம்படப் பிரார்த்திப்போம். தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளாதவர்களும் கவனத்துடன் இருந்து தொற்றிலிருந்து முற்றிலும் விடுபடவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவெயிட்டிங்க் லிஸ்டில் இருந்து இன்றுதான் முதன் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன்.. ஊரில் இருந்து வந்த என் மாமியார் மாமனார் போன மாதமே இங்கு ஊசிப் போட்டுக் கொண்டார்கள்
நீக்குஆம். தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்வது நல்லது.
நீக்குஇரண்டு கால் பச்சோந்திகளை கண்டுபிடிப்பது எப்படி ?
பதிலளிநீக்கு@ஏஞ்சல் "எல்லா கணவர்களுமே" பஞ்சோந்திகள்தாம் அம்மா பக்கத்தில் இருக்கும் போது ஒரு மாதிரியாகவும் பெண்டாட்டி பக்கத்தில் இருக்கும் போது ஒரு மாதிரியாகவும் பெண் தோழிகள் பக்கத்தில் இருக்கும் போது ஒரு மாதிரியாகவும் இருப்பார்கள்
பசங்க பக்கத்தில் இருக்கும்போது?
நீக்குநல்ல கேள்வி!
நீக்குஇந்தக் காடரர் விஷயம் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் பொதுவாக அறுசுவைக் குடும்பத்தினரின் (இப்போத் தனித்தனியாச் செய்தாலும்) காடரிங் நன்றாகவே இருக்கின்றது. அதே போல் மும்பை ஏ.எஸ்.ராஜசேகரன்/ இவர் ஒவ்வொரு உணவு வேளைக்கும் இலைக்குப் பக்கத்தில் மெனு கார்ட் வைத்திருப்பதோடு அவருடைய தொடர்பு எண், விலாசம் கூடிய கார்டும் வைத்திருப்பார். அடிப்படையில் திருநெல்வேலிக்காரர். ஆனாலும் எல்லாச் சமையல்களும் நன்றாக இருக்கும். ஐந்து நக்ஷத்திர ஓட்டல்களின் விலைப்பட்டியலைப் போல் இவருடைய சம்பளமும் அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும். ஆனால் செய் நேர்த்தி, சுத்தம், உணவு வீணாகாமல் பரிமாறுவதல் என்பதில் இவரை அடிச்சுக்க ஆளில்லை.
பதிலளிநீக்குநல்ல தகவல்களுக்கு நன்றி.
நீக்குகொஞ்சம் வயதில் பெரியவர்களை எத்துறை சார்ந்திருப்பினும் அவர்கள் பொது வெளியில் விமரிசனத்துக்குள்ளாகும்போது மனது கஷ்டப்படுது இதன் காரணம் என்ன ?
பதிலளிநீக்கு@ஏஞ்சல் நம்ம கூட்டத்தில் வயதில் பெரியவர் நம்ம அதிராதானே ஆமாம் அவர்களை யாரு விமர்சனம் பண்ணுகிறார்கள்
ஹா ஹா ஹா!!
நீக்குஅஆவ் ட்ரூத் in full form :)
நீக்குஎங்க பெண்/பிள்ளை கல்யாணங்களுக்கு உள்ளகரத்தில் உள்ள திரு ராமச்சந்திரன் என்பவர் காடரிங். பிரமாதமாக இருந்தது. நாங்கள் சிபாரிசு செய்து உறவினர் பலர் வீடுகளுக்கும் காடரிங் செய்திருக்கார்.
பதிலளிநீக்குகாடரிங் அனுபவங்கள் எப்படிப்பட்டன என்றால் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சாப்பிட்டோம் என்றால் எல்லாம் நன்றாக இருக்கும். முந்தைய காடரர் சமையல் சுமார்தான் என்றால் இது மிகவும் நன்றாக இருப்பது போல் தோன்றும். ஆனால் நிறைய எதிர்பார்த்து, சமையல் சுமார் ரகம்தான் என்றால் திருப்தி இருக்காது.
நீக்குசமையலறை நிபந்தனைகள் எங்க வீட்டில் நிறையவே உண்டு. முக்கியமாய் $ சொல்லி இருக்கும் பால் பாத்திரங்கள் மாறக்கூடாது என்பதில் கடுமையாகக் கடைப்பிடிப்பேன். ஆனால் அது என்னமோ எங்க வீட்டுக்கு வரும் பலருக்கும் அதில் தான் சாம்பார், ரசம், சாதம் வைக்கணும்னு தோணும். குறிப்பா அதைத் தான் எடுப்பாங்க. அதே போல் கரண்டிகள். மோருக்கென இரு கரண்டிகள். மாற்றி மாற்றிப் பயன்படுத்திப்பேன். வரவங்க மாத்திடுவாங்க!
பதிலளிநீக்குஆம் ! சங்கடமான நிலைதான்.
நீக்குசங்கடம் என்பதை விடவும் அவங்க வேணும்னு தான் இதைப் பண்ணுகிறாங்க என்பதைப் புரிய வைப்பது தான். நாங்கல்லாம் எந்தப் பாத்திரத்தில் வேணுமானாலும் எதை வேணும்னாலும் வைக்கிறோமே! உனக்கு மட்டும் என்ன? என்றே சொல்லிவிட்டு மாற்றி வைப்பாங்க! முன்னெல்லாம் அலுமினியக் கரண்டி மோருக்கெனத் தனியாக இருக்கும். பார்த்தால் அலுமினியம்னே சொல்ல முடியாமல் வெள்ளி போல் பளபளக்கும். வரவங்க எல்லோரும் அதைத் தான் குறிப்பாய் எடுத்து சாம்பாரிலோ, ரசத்திலோ போடுவாங்க. பல சமயங்களில் அதை எடுத்து அலம்பிவிட்டு மோரில் திரும்பப் போடுவேன். வாங்கிக் கட்டிப்பேன். அப்புறமா அந்த அலுமினியப் பாத்திரங்களையே பயன்படுத்தாமல் தூக்கி வைச்சுட்டு எல்லாமே எவர்சில்வர் கரண்டிகளாக வைச்சுட்டேன். ஆனாலும் மோருக்கெனத் தனிக்கரண்டி தான்.
நீக்கு
பதிலளிநீக்குசின்ன விஷயங்கள்
@ஏஞ்சல் சின்ன விஷயங்கள் என்றால் சின்ன வீட்டு விஷ்யங்களா?
ஆ! அவ்வ்!!
நீக்குgarrrrrrrrrr :)))
நீக்கு:)))
நீக்குசாப்பிடும் தட்டுகள், மற்ற எச்சில் தட்டுகள், தம்பளர்கள், ஸ்பூன்கள் எல்லாமும் கூடத்தில் உள்ள அதற்கென்று இருக்கும் இடத்தில் வைப்பேன். சமையலறையில் அவற்றுக்கு வேலையே கிடையாது. ஆனால் வரவங்க சாப்பிட்டுவிட்டு அவற்றை முதலில் வாஷ் பேசினில் தேய்த்துக் கழுவி விட்டுப் பின்னர் சமையலறைக்கும் எடுத்துச் சென்று அங்கே உள்ள தொட்டி முற்றத்தில் சாப்பாட்டுப் பாத்திரங்களோடு சேர்த்துப் போடுவார்கள். இதனால் பலரிடம் மனஸ்தாபம் வந்திருக்கிறது. :(
பதிலளிநீக்குரொம்பக் கஷ்டமான நிலைதான்.
நீக்குபெரும்பாலும் யாரும் எச்சில்/பத்து பார்ப்பது இல்லை. நெய்ச் சம்புடத்தின் மேலேயே ரசக்கரண்டியை வைக்கிறாங்க. நாம பார்த்துச் சொன்னாலும் அதை நாங்க வைக்கலை, அங்கேயே தான் இருக்கு என்பார்கள்! என்னத்தைச் சொல்றது. பத்துப் பட்டால் நெய் வீணாகி ஒரு வாசனை வந்துடும். :(
நீக்கு//பத்துப் பட்டால் நெய் வீணாகி// இது யார் யாருக்கெல்லாம் புரிந்திருக்காது என்று தெரிந்துகொள்ள ஆசை.
நீக்குநெல்லை, புரியும்படி சொல்லணும்னா நெய்யை எச்சில் கைகளோடோ, பத்துத் தொட்ட கைகளோடோ எடுத்தால் அதில் நீர் விட்டுக்கும்! பார்த்த உடனே புரிஞ்சுக்கலாம். நெய் சில சமயங்களில் மொழுக்கென்றும் ஆகி மேலே நீர் கோர்த்துக்கும்.
நீக்குமற்றபடி யார் வந்தாலும் சமைக்கலாம். எந்தப் பொருளையும் தேடி எடுக்கும்படி இருக்காது. ஆகவே வீட்டுக்கு விசேஷங்களுக்குச் சமைக்க வருபவர்கள் கூடத் திண்டாடும்படி இருக்காது. அவங்க எடுத்த சாமானை எடுத்த இடத்தில் வைக்க மாட்டாங்க. ஆகவே விசேஷங்கள் முடிந்ததும் ஒரு நாள் இதை எல்லாம் சரி பண்ணுவதிலேயே போயிடும்.
பதிலளிநீக்குஉண்மை.
நீக்குரொம்ப கரெக்ட் கீதா அக்கா. ஒரு முறை சமைக்க வந்தவர் தாருமாறாக சாமான்களை மாற்றி வைத்து விட்டு சென்று விட்டார். அடுத்த நாள் நான் தேடித் தேடி இளைத்தேன்.
நீக்குஆமாம், நமக்கு வசதினு நினைச்சுட்டு விசேஷங்களுக்குச் சமைக்க ஆட்களைக் கூப்பிட்டுவிட்டுத் திரும்ப சமையலறையை நேராக்க 2 நாட்கள் ஆகின்றன.
நீக்குஉங்கள் வீட்டு கிச்சனில் எழுதப்படாத சட்டங்கள் எவை ?
பதிலளிநீக்கு@ஏஞ்சல் ஸ்மைப்பது பாத்திரம் கழுவுவது காய் கட் பண்ணுவது எல்லாம் மதுரைதமிழனுடையது.. சாப்பிட்டுவிட்டு சிங்கில் எச்சில் பாத்திரங்களை கோபரம் போல குவித்து வைப்பது மனைவி மற்றும் குழந்தையின் வேலை இது எங்கள் வீட்டில் எழுதப்படாத சட்டம்
நல்லா இருக்கு!
நீக்குஎனக்கு அம்மாவின் ரசம், கத்திரிக்காய்க் கூட்டு, மோர்க்குழம்பு! அம்மா இருந்தவரையிலும் அதில் பச்சை மொச்சை போடாமல் பண்ணினால் சாப்பிட மாட்டேன்னு அடம் பண்ணுவேன். இப்போக் கத்திரிக்காய்க் கூட்டே அரிது! :))))))
பதிலளிநீக்குஅன்னையோடு அறுசுவை உண்டி போம்!
நீக்குஉண்மை. அப்போல்லாம் தேங்காய் வாங்கி உடைச்சது இல்லை. லக்ஷ்மணன் என்னும் ஒரு செட்டியாரின் மளிகைக்கடையில் முதலில் ஓரணா, இரண்டணாவுக்குத் தேங்காய்ச் சில் வாங்கினோம். பின்னர் ஐந்து பைசா/பத்துப் பைசாவுக்கு! முழுத்தேங்காயை தை மாதப்பிறப்பில் தான் பார்ப்போம். பிள்ளையார் சதுர்த்திக்கு!
நீக்கு// 100 வருஷம் சேர்ந்து இணைபிரியாம வாழணும் //
பதிலளிநீக்கு@ஏஞ்சல் ஹலோ ஏன் இந்த கொடுர எண்ணம்......
அதானே !
நீக்குஹாஹ்ஹ்ஹ்ஹஹ்ஹா :) எவ்ளோ ஆப்பியா இருக்கு தெரியுமா நீங்கல்லாம் அலறுகிறதை பார்த்து ஹையோ ஹயாயோ
நீக்குஅவ்வ் !
நீக்குஅப்பாதுரை தோசை வார்த்தாலோ இட்லி வார்த்தாலோ அது அந்தரத்தில் நிற்குமோ என்னும் பயம்/கவலை எனக்கு உண்டு. திருப்பிப் போடுவதற்குள்ளாக தோசை நம்ம தட்டில் வந்து விழுந்துட்டால்? அதைச் சாப்பிடுவதா வேண்டாமானு யோசிக்கும்படி இருக்கும். சாப்பிடும்போது திடீர்னு மறைந்து விட்டால்?
பதிலளிநீக்கு:))))
நீக்குவரேன், மத்தியானமா, முடிஞ்சா! 2,3 நாளைக்குக் கொஞ்சம் பிசி! எல்லோரும் சொல்றாங்க குஞ்சுலு கூடச் சொல்றது. நானும் சொல்லாட்டி எப்பூடி?
பதிலளிநீக்குஹா ஹா ஹா !
நீக்குகணிணி புழக்கத்திற்கு வந்த புதிதில் ஐ.சி.யூ.வில் வைப்பது போல அதை ஒரு குளிரூட்டப்பட்ட தனி அறையில் வைத்திருப்பார்கள்.,
பதிலளிநீக்கு@பானுமதி வெங்கடேஸ்வரன்: மிகவும் சிரிக்க வைத்த கேள்வி
இந்தத் துறைக்கு வந்த புதிதில் ஏசி அறை, பெருமையோ பெருமை... எல்லோரும் மின்விசிறிக்கு அடியில் பணியாற்றும்போது எங்களுக்கு மட்டும் ஏசி அறையில் பணி.
நீக்குமேட்டூரில் குளிர் காலத்தில் எனக்கு உடம்புக்கு வந்துடப் போகுதுன்னு, அப்பா ஸ்வெட்டர் வாங்கித் தரவா என்று கேட்டார். அப்புறம் பி.ஸி காலம் வந்தபிறகு மெயின்ஃப்ரேமில் வேலைபார்க்கும் எங்களுக்கு மட்டும் ஏசி அறை. வெளிநாட்டில் பணியாற்றியபோது எப்போதுமே ஏசி அறைதான்.
ஆம்! ஒரு காலத்தில் கணினியும் ஏ சி யும் பிரிக்க முடியாதவையும்!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லா நாட்களும்
பதிலளிநீக்குஇறைவன் கருணையில் நல்ல நாட்களாக இருக்க வேண்டும்.
கேள்வி பதில்கள்.
பதில்களுக்கான பதில்கள். கேள்விக்கான
பதில்கள் எல்லாமே வெகு சுவாரஸ்யம்.
கவனம் எடுத்து எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி
இருக்கும் துரையின் அக்கறை பிரமாதம்.
சமையலறைச் சட்டங்கள் இங்கே மீறப் படுவதில்லை.
விருந்தாளிகள் வந்தாலும்
அவர்களுக்கும் இந்த ஒழுங்கு பழகிவிடுகிறது.
அவர்கள் வீட்டிலும் அப்படியே இருப்பதால்.
திரையில் சினிமாப் படம் பார்த்தது
பாபனாசம் வந்தபோது.
எல்லாமே டிவியில் பார்த்துவிடுகிறோம்.
இரண்டு கால்ப் பச்சோந்திகளைப் பார்த்து பல வருடங்கள்
ஆகிவிட்டது. இறைவன் ஆசீர்வதித்த வாழ்க்கையில்
அவர்களுக்கு இடம் இல்லை@ ஏஞ்சல்.:)
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஉண்மைதான் வல்லிம்மா வீட்டுக்குள் இருக்கும்போது அவை எட்டிப்பாக்கலை இப்போ வட்டம் வேலை என்று செல்லும்போது பல பல பச்சோந்திகள் நடமாடுகின்றன .கவனமா இருக்கணும்னு சொல்லிக்கொண்டே செல்கிறேன்
நீக்குரசிக்க வைத்தன ஜி கேள்வி பதில்கள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகேள்விகளுக்கான பதில்கள் சுவை!
பதிலளிநீக்குஅப்பாதுரை சமையல் பதிவு அனுப்பினால் - :))) ரசிக்க வைத்த பதில்!
நன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குஇனிய புதன்...
பதிலளிநீக்குநல்ல கலகலப்பான கேள்விகளும் பதில்களும்..
நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். கேள்வி பதில்கள் சுவாரஸ்யம். மதுரைத் தமிழனுக்கு இன்று விடுமுறையா? நிறைய பின்னூட்டங்கள்.
பதிலளிநீக்கு:)))
நீக்குஆமாம் அம்மா நேற்று கோவிட் ஊசி போட வேலையில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டதாலும் இன்று எனக்கு லீவு என்பதாலும் பதிவு எனக்கு பிடித்தமாக இருப்பதாலும்தான் இந்த ஆட்டம் ஒருவேளை கோவிட் ஊசியின் எஃப்க்டாக கூட இருக்கலாம்
நீக்குயார் அந்த புது நட்சத்திரம்?
பதிலளிநீக்குமறந்துட்டீங்களா? கீ சா மேடம் சொல்லுவார்.
நீக்குஹாஹாஹா, ஸ்ரீராம், பசிச்சுச் சாப்பிடறதில்லைனு சொல்றாரே! அது சரியில்லை, பசிக்கணும். அம்மா சமையலில் அவருக்குப் பிடிச்சவற்றை முன்னரும் ஒரு தடவை சொல்லி இருக்கார் போல! என்ன இந்த வாரம் அதிசயமா ஸ்ரீராமும் பதில் சொல்ல வந்துட்டார்?
நீக்குஅதானே!
நீக்குஎங்கள் வீட்டிலும் பால் கரண்டி, பால் பாத்திரம் இவைகளை மாற்றக் கூடாது. எச்சில் பண்ணாத ஸ்பூன்களை தனியாக வைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅதே போல ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதற்கேற்ற மூடி உண்டு. அதை மாற்றி மூடுவதும் பிடிக்காது. சிலர் சின்ன பாத்திரத்திற்கு பெரிய மூடி என்று பாந்தமில்லாமல் மூடி விடுவார்கள்.
ஆம், கஷ்டமான நிலைதான். எங்கள் வீட்டு கிச்சனில் உள்ள சிங்க் ல யாரும் வாய் கொப்பளித்துத் துப்பக் கூடாது என்பது மற்றும் ஒரு எழுதப் படாத சட்டம்.
நீக்குஅதை ஏன் கேட்கறீங்க? நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போ ஒரு மருத்துவர் குடும்பத்தினரைச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தோம். அவங்க எல்லாமும் எங்களுக்கு தூரத்து உறவும் கூட. அவங்க மகன், மருமகள் இருவருமே மருத்துவர்கள். ராணுவத்தில் வேலை. சாப்பிட்டு விட்டு மாமனார், மாமியார், மகன் அனைவருமே குளியலறை பக்கத்தில் இருந்த வாஷ் பேசினில் போய்க் கை கழுவி வாய் கொப்பளித்து வர இந்த மருமகள் மட்டும் நேரே சமையலறைக்குப் போய்ச் சமைத்த பாத்திரங்களைத் தேய்க்கப் போட்டிருந்த தொட்டி முற்றத்தில் கை கழுவி வாயைக் கொப்பளித்துப் பாத்திரங்களின் மீதே துப்பினார். இத்தனைக்கும் அவரும் ஒரு மருத்துவர். நாங்க எப்போதுமே சமையலறையில் எந்தவிதமான எச்சில்களையும் கலப்பதில்லை. அது உயர்த்தியான குஞ்சுலுவாக இருந்தாலும். இதில் எங்க மருமகள் ரொம்பவும் நுணுக்கமாகப் பார்ப்பார். சாமான்களில்/துவையல்/சட்னிகளில் போடும் ஸ்பூன்கள், எண்ணெய்/நெய் ஸ்பூன்கள் எல்லாம் சமையலறையை விட்டு வெளியே வந்தால் அந்த அந்த உணவுகளோடு தான் வரும். எச்சல் ஸ்பூன்கள்/கிண்ணங்கள்/தேநீர்க்கோப்பைகள் எல்லாம் கூடத்து அலமாரிகளில். வெண்கலப்பானையைச் சாப்பாட்டுத் தட்டால் மூடுபவர்களைப் பார்த்திருக்கேன்.
நீக்குவரும் திங்கள் புதிய ரெசிஃபி வரலாம்...?!
பதிலளிநீக்குஎங்கேயிருந்து?
நீக்குதிரு தனபாலன் அவர்களிடமிருந்து?
நீக்குவாய்ப்பு இல்லை.
நீக்குஎங்கள் வீட்டு சமையலறையில் பாத்திரங்கள் மாறக்கூடாது. முக்கியமாக பால் பாத்திரங்கள், கரண்டிகள் மாறவே கூடாது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதற்கு சரியான மூடி உண்டு. அதை மாற்றி மூடுவதும் பிடிக்காது. எச்சில் தட்டு, எச்சி்ல் ஸ்பூன் தனி.
பதிலளிநீக்குமளிகை சாமான்களை ஒரு ஆர்டரில் வைத்திருப்பேன்.
ஃப்ரிட்ஜில் மேல் தட்டில் மட்டுமே மீந்து போன சாதம் குழம்பு போன்றவை வைக்க வேண்டும்.
இப்படியெல்லாம் சொல்வதால் நான் ரூல்ஸ் ரங்கநாயகி!
:))))
நீக்குநாங்க குளிர்சாதனப் பெட்டியில் எந்தவிதமான மிச்சம், மீதிகளை வைப்பதில்லை. சில சமயங்களில் கறிக்கு/கிழங்கு மசாலா பண்ண உ.கி. வேகப் போட்டது அதிகமாய்த் தோன்றினால் அவற்றை உரிக்காமல் ஒரு டப்பாவில் போட்டு முதலிலேயே பத்திரப் படுத்தி விடுவேன். சமைச்சது எல்லாம் சரியாக இருக்கும்படியே பண்ணுவது வழக்கம். மிஞ்சினால் அன்றே வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டுக் கொடுத்துடுவேன். ஒரு சிலர் ஸ்ராத்த பக்ஷணங்களைக் கூடக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுச் சாப்பிடுகிறங்க. நாங்க அன்றிரவே சாப்பிட மாட்டோம், என்பதால் பண்ணுவதைக் கொஞ்சமாகப் பண்ணிடுவோம்.சமையல் மாமிக்கு இதற்கான சாமான்களை நானே எடுத்துக் கொடுத்துடுவேன். மிஞ்சினால் 4 வடை, 4 அதிரசம், எள்ளுருண்டைனு மிஞ்சும். அவற்றை உடனே தீர்த்துவிடுவோம். யாருக்கும் கொடுக்க முடியாதே!
நீக்குஅனைவருக்கும் பொருந்துகின்ற தலைப்பு போலுள்ளது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகிட்ச்சன், சாப்பாடு என்று கதை ஆரம்பித்தால் நொடியில் 70-75-என வந்துவிடுகிறதே பின்னூட்டம் !
பதிலளிநீக்குஅதானே!
நீக்குவாசித்து மகிழ்ந்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅம்மா செய்யும் மைசூர் பாக், போளி இரண்டும் ரொம்ப ஃஃபேமஸ்! தினசரி சமையல்களில் அம்மாவை விட பாட்டி செய்த சேப்பங் கிழங்கு ரோஸ்ட், வற்றல் குழம்பு, கத்தரிக்காய் கறி, ரசவாங்கி, பருப்பு உருண்டை மோர் குழம்பு, அப்புறம் குட்டி கத்தரிக்காயில் சாம்பார், ரசம் இரண்டுமாக(மேலாக ஊற்றிக் கொண்டால் ரசம், கலக்கி ஊற்றிக் கொண்ட்டல் சாம்பார்)ஒன்று செய்வார். அதை பாட்டிக்குப் பிறகு யாரும் செய்யவில்லை.
பதிலளிநீக்குநீங்க சொல்லும் குட்டிக்கத்திரிக்காயில் ரசமும் இல்லாமல் சாம்பாரும் இல்லாமல் பண்ணுவது தான் ஒரிஜினல் ரசவாங்கி. தஞ்சாவூர்க்காரங்க அரைச்சு விட்ட கூட்டை ரசவாங்கினு சொல்லிப் பண்ணிடறாங்க. பூஷணிக்காயில் கூட ரசவாங்கிம்பாங்க. கத்திரிக்காயில் மட்டும்/அதுவும் முழுக்கத்திரிக்காயில் மட்டுமே ரசவாங்கி! அம்மா பண்ணுவார். இப்போல்லாம் இங்கே பிடிக்காது என்பதால் அதெல்லாம் சாப்பிட்டே வருஷக்கணக்காச்சு!
நீக்கு// அம்மா செய்யும் மைசூர் பாக், போளி இரண்டும் ரொம்ப ஃஃபேமஸ்! தினசரி சமையல்களில் அம்மாவை விட பாட்டி செய்த சேப்பங் கிழங்கு ரோஸ்ட், வற்றல் குழம்பு, கத்தரிக்காய் கறி, ரசவாங்கி, பருப்பு உருண்டை மோர் குழம்பு, அப்புறம் குட்டி கத்தரிக்காயில் சாம்பார், ரசம் இரண்டுமாக(மேலாக ஊற்றிக் கொண்டால் ரசம், கலக்கி ஊற்றிக் கொண்ட்டல் சாம்பார்)ஒன்று செய்வார். அதை பாட்டிக்குப் பிறகு யாரும் செய்யவில்லை.// ஆஹா !!
நீக்கு1, ஒரு செயலுக்கான அங்கீகாரம் ,பாராட்டு ஒரு நன்றி இதெல்லாம் ஒருவருக்கு சரியான நேரத்தில் கிடைக்காத பட்சத்தில் மனம் நொறுங்கி போகிறது .இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டதுண்டா ?
பதிலளிநீக்கு2, சமீபத்தில் யாருக்காவது நன்றி சொல்லியிருக்கிங்களா ? யாருக்கு ? சொன்னீங்க எதற்கு சொன்னீங்க ?
3, தொலைதூரத்தில் வாசனையை வைத்தே சமையலை கண்டுபிடிக்கும் வழக்கும் உண்டா ?
4, வாழை இலை உணவு ,பீங்கான் ,பிளாஸ்டிக் தட்டு உணவு இதில் எதுஉங்கள் சாய்ஸ் ???
5, எல்லாருக்கும் எப்பவும் நல்லவர்களாகவே இருப்பது போரடிக்குமா ?இப்படிப்பட்ட மனநிலை நல்லதா ? கெட்டதா ?
6, சின்ன வயதில் வெளியில் ஸ்கூலுக்கு செல்லும்போது அம்மாவுக்கு டாடா சொல்லியிருப்பிங்க பிறகு திருமணமானதும் மனைவிக்கு டாடா சொல்லியிருப்பிங்க இப்போ எனது கேள்வி இரண்டு டாடா விற்கும் என்ன வித்தியாசம் ?
//சின்ன வயதில் வெளியில் ஸ்கூலுக்கு செல்லும்போது அம்மாவுக்கு டாடா சொல்லியிருப்பிங்க பிறகு திருமணமானதும் மனைவிக்கு டாடா சொல்லியிருப்பிங்க இப்போ எனது கேள்வி இரண்டு டாடா விற்கும் என்ன வித்தியாசம் ?//
நீக்குஅம்மாவிற்க்க்கு சொல்லும் டாடாவில் சோகம் இருக்கும் அவர்களை விட்டுப் போகிறோமே என்று.. ஆனால் மனைவிக்கு சொல்லும் டாடாவில் சந்தோஷம் இருக்கும் கொஞ்சம் நேரமாவது பிரிந்து நிம்மதியாக இருப்போம் என்று
I'm getting ready for work.wil come later.
நீக்குSeems you are in a happy mood enjoy your day. Take care haaahaaa
நேற்று கோவிட் ஊசி போட வேலையில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டதாலும் இன்று எனக்கு லீவு என்பதாலும் பதிவு எனக்கு பிடித்தமாக இருப்பதாலும்தான் இந்த ஆட்டம் ஒருவேளை கோவிட் ஊசியின் எஃப்க்டாக கூட இருக்கலாம் Take care ma
நீக்குநன்றி. எங்கள் பதில்கள் அடுத்த வாரம்.
நீக்கு5, ////எல்லாருக்கும் எப்பவும் நல்லவர்களாகவே இருப்பது போரடிக்குமா ?இப்படிப்பட்ட மனநிலை நல்லதா ? கெட்டதா //
பதிலளிநீக்குமூளை வளர்ச்சி இல்லாதவர்களால் மட்டுமே எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியும் இப்ப சொல்லுங்க அப்படி இருப்பது நல்லதா கெட்டதா என்று
எல்லாருக்கும் நல்லவராக எப்படி இருக்க முடியும்? அப்படி இருந்தால், அவங்கள்ட பெரிய தவறு இருக்குன்னுதான் அர்த்தம். ஒருவேளை பாலிடீஷியனாக இருப்பாரோ?
நீக்கு//வாழை இலை உணவு ,பீங்கான் ,பிளாஸ்டிக் தட்டு உணவு இதில் எதுஉங்கள் சாய்ஸ் ???//
பதிலளிநீக்குவாழை இலைதான் சாய்ஸ் என்றாலும் அதில் என்ன உணவு வகைகள் இருக்கிறது என்பதை பொருத்துதான் தீர்மானம் செய்யமுடியும் . ஒரு வேளை வாழை இலையில் அதிரா சமைத்த உணவு என்றால் எனது சாய்ஸ் பீங்கான் தட்டு உணவுதான் ஹீஹீஹி.. அதிரா பிஸியாக இருப்பதால் என்ன வேண்டுமானுலும் சொல்லிட்டு போகலாம்
நீக்குஏஞ்சல் உங்க பேரு வரலைன்னு சந்தோஷப்பட்டிருந்தா சாரிங்க வாழை இலையில் உங்க பெயரையும் சேர்த்துக்குங்க. ஹீஹீ
//தொலைதூரத்தில் வாசனையை வைத்தே சமையலை கண்டுபிடிக்கும் வழக்கும் உண்டா ?//
பதிலளிநீக்குஎஸ் சட்டி கருகிய வாசம் வந்தால் ஏதோ பெண்கள் சமைக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிடுவேன் அதிலும் தேம்ஸ் நதிக்கரையோரம் யாரு சமித்தாலும் அமெரிக்கவின் ஹட்சன் நதியில் இருந்தே வாசனையை வைத்து அது டார் சமைத்தது என்று கண்டுபிடித்துவிடுவேன்
:>)
நீக்கு//சமீபத்தில் யாருக்காவது நன்றி சொல்லியிருக்கிங்களா ? யாருக்கு ? சொன்னீங்க எதற்கு சொன்னீங்க ?/
பதிலளிநீக்குஇறைவனுக்குத்தான் காலையிலும் இரவிலும் ஒரு நாளை வாழ்வில் கூட்டி தந்ததற்காக நன்றி சொல்வேன் அதில்லாமல் வேலையில் அங்கு வரும் கஸ்டம்ர்களுக்கு போலியாக ஆட்டோமேட்டிக்காக நன்றிகளை தினம் தினம் சொல்லிக் கொண்டு இருக்கின்றேன். உடன் வேலை பார்ப்பவர்களுக்கு என் நன்றியை நான் வீட்டிலில் இருந்து அவர்களுக்காக தயாரித்து செல்லும் உணவு மூலமும் அல்லது பேக்கிரியில் இருந்து வாங்கி செல்லும் கேக்குகள் மூலமாகவும் வாரத்திற்கு ஒரு முறை நன்றியை செலுத்திவிடுவேன்
ஸ்ஸ்ஸ்ஸ் வேலைக்கு போற அவசரத்தில் கடவுள் தவிர்த்து யாருக்கு நன்றி சொல்வீங்கன்னு சேர்க்க மறந்துட்டேன் :)பரவாயில்ல .
நீக்குஅது சரி அப்போ அந்த அப்பாவி இளகிய மனம்கொண்ட குழந்தைஉள்ளம்கொண்ட மாமிக்கு நன்றி சொல்ல மாட்டீங்களா ட்ரூத் ?///???? இதனை வருஷமா உங்களை டேக் கேர் பண்றவங்க அவங்க தானே ????
/ஒரு செயலுக்கான அங்கீகாரம் ,பாராட்டு ஒரு நன்றி இதெல்லாம் ஒருவருக்கு சரியான நேரத்தில் கிடைக்காத பட்சத்தில் மனம் நொறுங்கி போகிறது .இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டதுண்டா ?//
பதிலளிநீக்குஎதிர்பார்த்து செய்யும் போது மனம் நொருங்க வாய்ப்பு உண்டு அதனால் நான் ஏதையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்துவிடுகின்றேன்
எங்கள் பதில்கள் அடுத்த வாரம்.
பதிலளிநீக்குபுதன்கிழமை கேள்வி பதில்கள் அதனின் பின்னூட்டங்கள் என்று திரும்பத் திரும்ப படித்து மகிழ்வதாக இருக்கிறது அருமையான கேள்விகளும் அதற்கேற்ற பதில்களும் அருவியாகக் கொட்டுகிறது சாரலில் சந்தோஷமாக நினைக்கிறேன் அன்புடன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகேள்விகளும் பதில்க்ளும் அதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமை.
பதிலளிநீக்குசீராக பாத்திரம் கொடுக்கும் போது ஒவ்வொறு பாத்திரத்தின் பேர் எழுதி கொடுப்பார்கள். பால்சட்டி, நெய்தூக்கு, வெண்ணெய்சட்டி, மாவு பாத்திரம் , அரிசி கழுவி கல் எடுக்க ஒரு பாத்திரம் அதன் பேர் சருவச்சட்டி என்று நினைக்கிறேன் . அந்த காலத்தில் கல், குருணை நீக்கிய அரிசி கிடையாதே! கல் அரித்து போட சருவசட்டிதான் சரியான பாத்திரம்.
போனிசட்டிகள் ஒன்றுக்குகுள் ஒன்றாக போடும் அடுக்கு பாத்திரம், அதில் மாவு அரைத்துவைக்கும் அளவுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார்கள். குழம்பு சட்டி அதில் குழம்பு மட்டுமே வைப்பார்கள்.
ரஸசட்டி அந்த பாத்திரத்திற்கு மூக்கு இருக்கும் அதன் வழியாக தெளிவாக ரஸத்தை ஊற்றுவார்கள். கரண்டி போட்டால் கலக்கி விடுவோம் என்று.
இன்னும் நிறைய பாத்திரங்கள் இருக்கு. ரயில் அடுக்கு என்று பெரிய தூக்கு சட்டிக்குள் எந்த ஊருக்கு போனாலும் சமைத்து கொள்ள உதவும் பாத்திரங்கள் உள்ளே இருக்கும்.குறிப்பாக குலதெய்வம் கோயில் போனால் உதவும் இந்த பாத்திரங்கள்.
சுவாரஸ்யமான தகவல்கள். எங்கள் வீட்டில் இப்படி பெயர் பொரித்த பாத்திரங்கள் கிடையாது. போனிகள் இருக்கு. ரசசட்டி பார்த்ததில்லை.
நீக்குஈயச் செம்பு தான் ரசத்துக்குனு கொடுப்பாங்க. குடும்பத்து அங்கத்தினரைப் பொறுத்துப் பெரிய செம்பில் இருந்து இரண்டு பேருக்கு ரசம் வைக்கிற ஈயச் செம்பு வரை, நாலாவது இருக்கும். கோமதி சொல்லும் அரிக்கும் சட்டிக்குப் பெயரே அருக்கஞ்சட்டி தான். அடியில் ரவுன்டாக இருக்கும். அதில் அரிசி களைந்து அரித்தால் கல் எல்லாம் அடியில் தங்கி விடும். சருவச் சட்டி என்பதை நாங்க கொப்பரை என்போம். இட்லி வார்க்கப் பயன்படுத்துவதும் உண்டு. ஆனால் எனக்கெல்லாம் இட்லித்தட்டோடு அதை வைக்கச் சீனாச்சட்டி தான் கொடுத்தாங்க. இப்போதுள்ளவர்களுக்குச் சீனாச் சட்டினா என்னனே தெரியாது.
நீக்குபாத்திரத்தில் பெயர் இருக்காது ஶ்ரீராம் பெயர் எழுதிய காகிதம் பாத்திர பெட்டியில் போட்டு அனுப்புவார்கள் .
பதிலளிநீக்குஆமாம், எவர்சில்வர், பித்தளை, வெண்கலம், ஈயப்பாத்திரங்களுக்குப் பட்டியல் போட்டு வைப்பாங்க.
நீக்கு