வியாழன், 25 மார்ச், 2021

கோவாக்சின்-கோவிஷீல்ட் -கொரோனா தடுப்பூசி - முன்னும் பின்னும் 

 கொரோனா இரண்டாம் அலை வந்து கொண்டிருப்பது நன்றாய்த் தெரிகிறது.  சென்னையிலும், மற்றும் பல நகரங்களிலும் சட்டென மறுபடி கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருக்கிறது.  




நெருங்கியவர்கள் வட்டத்தில் சட்டென சில இழப்புகள்...  அது சென்றதடவை போல அவ்வளவு நேரம் கொடுக்கவில்லை என்றும் தெரிகிறது.  ஆக்சிஜன் லெவல் ஓகே, டெம்பெரேச்சர் இல்லை என்றவர்கள் மறுநாள் மதியத்துக்குள் மறைந்து போன சம்பவங்கள் மனதைப் பதைபதைக்க வைத்தது.  

இதோ..  இன்றைய நிலையில் நகரில் எந்த அரசு ஆஸ்பத்திரியிலும் பெட் காலி இல்லை.  இத்தனைக்கும் மூடிய பல யூனிட்டுகளை மறுபடி திறந்திருக்கிறார்கள்.  ராமச்சந்திரா உட்பட தனியார் மருத்துவமனைகளிலும் அதே நிலை.

இவ்வளவு இருந்தும் பொதுமக்களுக்கு இதன் தீவிரம் புரியவில்லை என்பதுதான் சோகம்.

என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா அறிகுறி.  தேடிப்பார்க்கும்போது எந்த மருத்துவமனையிலும் இடம் இல்லை.  அடுத்து இன்னொருவர் கணவருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டு, அதன் காரணமாக இவருக்கும் வந்து விட்டது.  ஆஸ்பத்திரியா, வீடா என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உறவினர்கள் குழுவிலும் நண்பர்கள் குழுவிலும்  சட்டையை உயர்த்தி ஊசி போட்டுக்கொள்ளும் காட்சியைப் படமாகப் போட்டு கலக்க ஆரம்பிக்க, அவை யாவும் நீ எப்போது, நீ எப்போது என்று கேட்க ஆரம்பிப்பது போல பிரமை!  பிப்ரவரி 22 வரை முன்கள பணியாளர்களுக்கு மட்டும் என்று சொன்னவரை இந்த ரவுசு இல்லை.  அப்புறம் அகவை அறுபதைத் தாண்டியவர்களுக்கெல்லாம் ஊசி என்றானவுடன்தான் இதெல்லாம் ஆரம்பம்.  போகப்போக வயசு வித்தியாசமில்லாமல் போட்டுக்கொண்டார்கள்.   குழு முழுவதும் ஒருவருக்கொருவர் 'நீ போட்டாச்சா, நீ போட்டாச்சா' கேள்விகள்தான் நிறைந்திருந்தன.

தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது.  இப்போதைய நிலையில் போட்டுக்கொள்வதே பாதுகாப்பு என்று நினைக்க வைக்கிறது தற்போதைய சூழ்நிலை.  அப்படியே போட்டுக்கொண்டாலும் கோவிஷீல்ட்தான் தெரிவில் இருந்தது.  பாதுகாப்பு என்றார்கள்.  ஆனால்...

கோவிஷீல்ட்​ கோவிஷீல்ட் என்று ஜெபித்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் தயக்கத்தை உதறி நானும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது கோவாக்சின் தான் இருந்தது.  முதலில் தடுப்பூசிகள் போட ஆரம்பித்தபோது கோவிஷீல்ட்தான் பெட்டர் என்று சொல்லி வந்தார்கள் இல்லையா?

எனவே இப்போது அது இல்லை என்றதும் கொஞ்சம் பக்கென்று இருந்ததென்னவோ உண்மை.  ஆனால் பின்னர் தேர்வுகளில், முடிவுகளில் கோவாக்சின்தான் பெட்டர் தடுப்பூசி என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.  அதற்கு ஒரு கம்பாரெட்டிவ் ஸ்டேட்மெண்டும் அனுப்பினார்கள் - வாட்சாப்பில்தான்!   சில டாக்டர்கள் வாய்ஸ் மெசேஜ்களில் பரவினார்கள்.

அபிப்ராயங்கள் ஆளாளுக்கு மாறுபட்டாலும் கோவாக்சினே போட்டுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.   நான், என் சகோதரர், என் பாஸ், என் மாமியார் புறப்பட்டோம்.

முன்னரே அங்கு பணிபுரியும் நண்பனிடம் சொல்லி முன்னேற்பாடு செய்து வைத்திருந்தோம்.  அவன் ஏற்கெனவே அங்கு வந்திருந்தவர்களுக்கும் பாதிப்பு இல்லாமல், எங்களையும் தாமதிக்க வைக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்தான்.   நண்பன் எனக்காக கோவிஷீல்ட் எடுத்துக் கொடுக்கவும் ரெடியாகத்தான் இருந்தான்.  நான் கோவாக்சின் போதும் என்று சொல்லி விட்டேன்.

இன்னொரு காரணம் ஒரு மாதத்துக்கு முன் என் நண்பர் சென்று கோவிஷீல்ட் போட்டுக்கொண்டு வர,  இரண்டாவது டோஸுக்குச் சென்றபோது கோவிஷீல்ட் இல்லை, கோவாக்சின்தான் இருக்கிறது என்று சொல்லவும், இவர் பதற, அவர்கள் அங்கிங்கு விசாரித்து, அவர்களே ஒரு இடம் சொல்லி அனுப்பினார்களாம்.  அங்கு கோவிஷீல்டு போட்டுக்கொண்டாலும் அது பாதுகாத்து வைக்கப் பட்டிருந்த வகையில்  இவருக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது என்று சொல்லி இருந்தார்.

இப்போது கோவிஷீல்ட் கம்மியாகவும் கோவாக்சின் அதிகமாகவும் வருவதும் நான் இதைத் தெரிவு செய்ய ஒரு காரணம்.

நேற்றைய செய்தி மேற்கண்ட என் வரியை மறுக்கிறது என்பதோடு இப்போதைக்கு தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு என்றும் சொல்கிறது..  இந்தச் செய்தியைப் படிக்கவும்!  கையிருப்பு 10 நாட்களுக்குத்தான் இருக்கிறதாம்!

BP பார்த்தபோது எங்கள் நால்வரில் எனக்கு மட்டும் சற்று அதிகமாக இருக்க, என்னுடைய ரீடிங் மருத்துவருடைய பார்வைக்கு ஸ்பெஷலாக சென்றது.  ஒருவேளை என் கூட வந்திருந்த மற்ற மூன்று பேர்களுக்கும் நான்தான் பொறுப்பு என்பதால் எனக்கு பிரஷர் சற்று ஏறிவிட்டதோ என்னவோ!  பாஸா, அவர் பயங்களை எல்லாம் சொல்லிச்சொல்லி இரண்டு நாட்களாகவே பயமுறுத்திக் கொண்டே இருந்தார்.

எங்கே எனக்கு மட்டும் பின்னர் வந்து போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்களோ என்று கவலைப்பட்ட நேரத்தில் அங்கிருந்த பொறுப்பு மருத்துவர் இரண்டொரு கேள்விகள் கேட்டு விட்டு கையெழுத்திட்டு தந்து விட்டார்.

1) ஏற்கெனவே உங்களுக்கு ப்ரெஷர் இருக்கா, மாத்திரை சாப்பிடறீங்களா?  2) கோவிட் வந்ததா உங்களுக்கு?

இரண்டு கேள்விகளுக்கும் என் பதில்  "ஆமாங்க!"

நாங்கள் நான்கு பேர்களும் அவசர அவசரமாக சீட்டு போடுதல், கம்பியூட்டர் பதிவு, டெம்பெரேச்சர், பிபி பார்ப்பது என்று இருக்கையில் என்னதான் அங்கு  காத்திருந்தவர்களையும் கூடக்கூட அனுப்பிக் கொண்டிருந்தாலும் ஒரு தாத்தா மட்டும் குறுக்கே புகுந்து 'எனக்கும் அவசரம், வேலைக்குப் போகணும்' என்று சொல்லி அமர, அங்கிருந்த ஊழியர் என் சிபாரிசின் வலிமையால் என்னையே கவனிக்க, நான் அவரை முன்னே செல்ல விட்டு பின்னர் நான் அமர்ந்தேன்!    நியாயங்களை மீறாமல், ஆனால் தெரிந்த இடம் என்று நம்பிக்கையுடன் போட்டுக்கொண்டேன்.

போகப்போக ஆதார் கார்ட் போல வாக்சின் போட்டுக்கொண்டாயிற்றா என்று கேட்டே அரசாங்க சம்பந்தப் பட்ட ஒவ்வொரு செயலும் நடக்கும் என்கிற வதந்தி இருக்கிறது.  எனவே தயக்கங்களை உதறி போட்டுக் கொண்டோம்.

பிளாஸ்க்கில் வெந்நீரும், தேநீரும் கொண்டு போயிருந்தோம்.  முடிந்து காத்திருக்கையில் அதைக் குடித்து மகிழ்ந்தோம்!!!

கையில் வலி அரைமணியிலேயே தெரிய ஆரம்பித்தது.  மதியம் வரை லேசாக தலைசுற்றல் இருந்தது.

மறுநாள் தலைசுற்றல் தலைவலியும்.  நான் வைத்திருந்த பிபி மெஷின் எனக்கு 155/100 என்றது.  பக்கத்து வீட்டில் வாங்கிப் பார்த்தபோது 142/110 என்றது.  கீழ் வீட்டில் வாங்கிப் பார்த்தபோது 132/90 என்றது..  அந்த மெஷின்களுக்குள் ஒரு ஒற்றுமையே இல்லை.  அருகிலிருந்த கிளினிக்கில் சென்று பழைய மாடல் பிபி மெஷினில் 'புஸ்கு புஸ்கு' என்று அடித்துப் பார்த்தபோது 110/70 என்று குழப்பியது!  அன்று முழுவதும் தலைவலி, அசதி, கால்வலி இருந்தது.  நூறைத் தொடாவிட்டாலும் நெருங்கி ஜுரம் இருந்தது.  அதற்கும் மறுநாள் எல்லாம் ஓகே.

மருத்துவ நண்பர் ஒருவர் சொல்லும்போது 28 நாட்கள், அதாவது நாலு வாரங்கள் கழித்து போட்டுக் கொள்வதை விட ஆறு வாரங்கள் கழித்துப் போட்டுக் கொள்வது சிறந்தது என்றார்.  தான் முதல் செட்டிலேயே போட்டுக் கொண்டதால் தெரியாமல் சரியாக 28 வது நாள் போட்டுக்கொண்டு விட்டதாகவும், என்னை ஆறு வாரங்கள் கழித்து போட்டுக் கொள்ளும்படியும்  சொன்னார்.  மருந்து இருப்பு இருக்க வேண்டுமே...   இதோ இப்போதே தடுப்பூசி பத்து நாட்களுக்குத்தான் கையிருப்பு இருக்கிறது என்கிறார்கள்.  அது வேறு கவலை!   அதற்குள் மத்திய அரசு தந்து விடும் என்று நம்புவதாகச் சொல்கிறார்கள்.  மேலும், 25 நாட்களில் இரண்டாவது டோஸ் என்று இல்லாமல், ஆறு வாரங்கள் கழித்து போடவேண்டியது கோவிஷீல்ட் மட்டுமே...   கோவாக்சின் அல்ல என்றும் நேற்றைய செய்தி சொல்கிறது.   "நீங்கள் ஏற்கெனவே கொரோனா வந்தவர் என்றால் உங்களுக்கு முதல் டோஸே பூஸ்டர் டோஸ் மாதிரி" என்றார் அவர் மேலும்!

புதிய அட்டவணை :  இதன்படி கோவாக்சின் கூட ஆறு வாரங்கள் கழித்துப் போட்டுக் கொள்ளலாம்.





இப்போதும் இருக்கும் சில பேச்சுகள்...

"தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டும் மாஸ்க் போடவேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்!  எப்படியும் மாஸ்க் போடவேண்டுமாம்..   சமூக இடைவெளி வேண்டுமாம்...  ரொம்பப் படுத்தறாங்க..."  காசிக்குப் போயிட்டு வந்தவங்க சிலபேர் கேட்கும் கேள்வி போல இருக்கிறது இது!

"எங்கள் ஆண்டவர் எங்களை இதிலிருந்தெல்லாம் காப்பாற்றுவார்.  பாவம் செய்தவர்களுக்கு மட்டும்தான் தண்டனை"  இதற்கு என்ன பதில் சொன்னாலும் சண்டை வரும்!

"கொரோனாவா?  உதார் விடறாங்க...  அப்படி ஒண்ணு இருக்குன்னு நம்பறீங்களா?"  நானே அனுபவிச்சேனே...

"முதலிலிருந்தே பொய்தான் சொல்றாங்க...  இப்போ தேர்தல் வேற...  வோட்டு வாங்க கதை விடறாங்க..."  - இதில் என்ன வோட்டு வாங்க முடியும் என்று தெரியவில்லை!

"மோடி வந்ததிலிருந்து இப்படியேதான் படுத்திக்கிட்டிருக்கான்..."  இதில் அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை!

"தடுப்பூசி நிறைய வாங்கி வச்சுட்டாங்க ..  அதனாலதான் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சொல்லி பயமுறுத்தறாங்க...  கொரோனாவும் திரும்ப அதிகமாகுதுன்னு கதை விடறாங்க..."  

இதையே போன வருடம் "கொரோனா 'டெஸ்ட்-கிட்' நிறைய வாங்கி வச்சுட்டாங்க...  ஊழல்..  அதனால்தான் நிறைய டெஸ்ட் செய்து கூப்பிடறாங்க" என்றனர்!  வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் பாடல் நினைவுக்கு வருகிறது!

"ஜலதோஷம், ஜுரம், உடம்பு வலி எல்லாம் முன்பே இல்லையா?  மனசைத் தொட்டுச் சொல்லுங்க...   உங்களுக்கே இதெல்லாம் முன்னர் வந்ததது இல்லையா?  இப்போ அதுக்கு புது அர்த்தம் கண்டு பிடிக்கறாங்க..   டைஃபாய்ட் காய்ச்சல் எல்லாம் வந்தால் உடம்பு அடித்துப் போட்ட மாதிரிதான் இருக்கும்...  கொரோனா எல்லாம் சும்மா"

"சிகரெட் பிடிச்சு  அதனால் வரும் மரணம் இதைவிட அதிகம்...   புற்று நோயால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகம்...  இதற்கு மட்டும் ஏன் இவ்வளவு ஹைப்?"   சிகரெட் பிடிக்காமல் இருந்தால் பிழைக்க வழி இருக்கிறது.  புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப் பட்டால் அதற்கும் வைத்தியம் இருக்கிறது....!

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ....

என்னவோ சொல்லிட்டுப் போங்க...  நான் தடுப்பூசி போட்டுக்கொண்டாயிற்று..   அவ்வளவுதான்!  ஆனால் இப்படிச் சொன்ன நிறையபேர்கள் எனக்கு முன்னாலேயே போட்டுக்கொண்டு விட்டார்கள்!

சாலைகளில் போலீஸைக் கண்டால் மட்டும் மாஸ்க் போட்டுக்கொண்டிருந்தார்கள்.  இப்போது அதுவும் இல்லை!  நிறைய இடங்களில் போலீஸே மாஸ்க் போடவில்லை.  மால், சூப்பர்மார்க்கெட்டுகளிலும் கேட்பதை நிறுத்தி விட்டார்கள்.

மாஸ்க் என்கிற பெயரில் கைக்குட்டை, துப்பட்டாவெல்லாம் முகத்தில் சுற்றிக் கொண்டு வருகிறார்கள்.  துக்கத்துக்கு வந்திருப்பது போல புடைவை நுனியை முகத்துக்கு நேரே பிடித்தபடி ஒரு பெண்மணி!  ஏதோ மைக் வைத்து பாடப்போவது போல... 

நிறைய பேர்கள் கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் ஏதாவது ஒரு துணியை எடுத்து முகத்தில் மூடிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.  ஒருவர் மஞ்சள் பையை எடுத்து காதில் மாட்டிக் கொண்டார்.

இவர்கள் எல்லாம் தேவலாம் என்பதுபோல ஒருவர் கையால் வாயை மூடிக்கொண்டார்!  

இதெல்லாம் அலட்சிய நிலையா, அறியாமை நிலையா?

சிலர் லூஸாக விழுந்து கொண்டே இருக்கும் மாஸ்க்...   என்னவென்று கேட்டால் போன வருஷம் வாங்கியதாம்!

"ஏம்ப்பா...  மாஸ்க் எங்கேப்பா...?"

"இதோ இருக்கே..."  பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுக்கிறார்.  இது ஒரு வகை.  இன்னொரு வகை மாஸ்க்கை கழட்டி இடது கையில் மணிக்கட்டில் அல்லது விரல்களில் சுழற்றியபடியே வளையவரும்.  ஒரு பழைய படிக்கக் கூடாத ஜோக் நினைவுக்கு வருகிறது!

சில பொதுக்குறிப்புகள் :


அசிட்ரோம், வார்ஃபரின்  போன்ற ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நாட்களில் - அதாவது ஊசி போடுவதற்கு முதல் நாள், போடும் நாள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்வார்கள்.  ஆஸ்பிரின், க்ளோபிலெட் மாத்திரைகளுக்கு பாதகமில்லை.  இது மாதிரி மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் அவரவர் மருத்துவரை ஒருமுறை கேட்டுக்கொண்டு பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.  சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் மாத்திரைகளை நிறுத்தத் தேவை இல்லை.

ஏனென்றால் தடுப்பூசி போடும் இடங்களில் விரிவான கேள்வி பதில் எல்லாம் இருக்காது.  ஆதார் கார்ட் எடுத்து வரவேண்டும் என்று கூடத் தெரியாமல் ஒரு பெண் போலீஸ்  தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்து விட்டு ரவுசு செய்து சென்றார்!  "எல்லோரும் கொண்டு வந்திருக்காங்க பாருங்க...  நாங்க சொல்லியா எடுத்து வந்திருக்காங்க?" என்பதுதான் அங்கிருந்தோரின் பதில்.  "ஊசியைப் போடு..   அப்புறம் கொண்டுவ் அரேன்" என்கிற அவரின் நிலை அங்கு செல்லுபடியாகவில்லை.  கணினியில் கையேடு ஏற்றி, இணையத்தில் சேர்க்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

ஆனாலும் எனக்கு ஊசி செலுத்தப்பட்ட நேரம் என்று அன்று இரவைக் காட்டியது எனக்கு வந்த எஸ் எம் எஸ் செய்தி.  அவர்கள் இணையத்தில் ஏற்றிய லட்சணம் போலும்.

அரசாங்க நிலையங்களில் செய்யப்படும் இரத்த அழுத்த சோதனை, ஆக்சிஜன் சாச்சுரேஷன் லெவல், டெம்பெரேச்சர் கூட தனியார் நிலையங்களில் பார்க்கப்படுவது இல்லை.  எனவே சிறப்பு சிகிச்சையில் இருப்பவர்கள் ஊசி போட்டுக்கொள்ளும் முன் அவரவர் மருத்துவரை  ஒருமுறை கலந்தாலோசித்து விட்டுச் செல்வது நல்லது.  மற்றபடி, சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள், கிட்னி செயலிழப்பு போன்றவை உள்ளவர்கள் எல்லோருமே முன்னுரிமையில் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களே.  குறிப்பிட்ட சில மருந்துகள் எடுத்துக் கொள்வதில்தான் கட்டுப்பாடு, விதிமுறைகள், வழிமுறைகள்...  அந்த வழிமுறைகளுடன் அவர்களும் தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ளவேண்டும்.

ரெகுலராக மது அருந்துபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சமயத்தில் பதினாலு நாட்களுக்கு மது அருந்தக கூடாது என்று சொல்கிறார்கள்.  எப்போதாவது மது அருந்துபவர்கள் ஊசி போடும் நாளுக்கு முதல் நாள், ஊசி போடும் நாள், மறுநாள் மட்டும் மது அருந்தக் கூடாது என்றும் சொன்னார்கள்.  என்ன கணக்கோ!

என்னைக் கேட்டால் மது அருந்தவே வேண்டாம்.  அல்லது தடுப்பூசி போடும் நாட்களில் அந்த ஒன்றரை மாதங்களுக்காவது மது வேண்டாம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உடம்பு வலியோ, ஊசி போட்ட இடத்திலோ வலிக்கிறது என்றால் வலி மாத்திரை என்று வேறு எதுவும் எடுக்காமல் வெறும் பாராசிட்டமால் அல்லது டோலோ 650 மட்டும் எடுக்கலாம் - அதுவும் தேவைக்கு மட்டும்.   குறிப்பாக டைக்லோஃபினாக் வேண்டாம் என்கிறார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செல்லும்போது சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்.  உங்கள் ஆதார் கார்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.  சில இடங்களில் அதன் ஜெராக்ஸ் நகல் ஒன்று கேட்பார்கள்.  எதற்கும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் வயது, டெலிபோன் நம்பர், முகவரி,   கேட்பார்கள்.  தயாராகக் குறித்து வைத்துக் கொண்டு சென்றால் தடுமாறி, யோசனை செய்து நேரம் செலவழிக்காமல் சட்டுபுட்டென வேலையை முடிக்கலாம்.  

ஆல் தி பெஸ்ட்.

====================================================================================

பேஸ்புக்கில் அவ்வப்போது என் சுவரில் இது போன்ற சில தகவல்கள் பகிரப்படும்.  அவற்றில் ஒன்று.

விமானத்தை கண்டுபிடித்தது அமெரிக்கன் இல்லை ஒரு இந்தியன்.
விமானத்தைக் கண்டுபிடித்தது திரு.தால் படயே,புனே,இந்தியா.
அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.
உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.
1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 1500 அடிகள் உயரத்தில் பறந்தது. சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)
அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை?
ஆதாரம் : vedic world heritage,volume VII
அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.
இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.
வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!!
குறிப்பு : ஆதாரங்கள் இங்கே http://www.gaudiya-repercussions.com/index.php...

========================================================================================

நாம் எல்லோரும்... 

சொல்வது ஒன்று...  செய்வது ஒன்று!

முன்னர் நான் தஞ்சையில் இருந்த (பள்ளிக்) காலங்களில் அதிகாலையில் வீட்டு வாசலில் ஓரு குரல் கேட்கும்.  "நரிநாராயணர் வந்திருக்கார்...   நரிநாராயணர் வந்திருக்கார்..."  வாசலில் சென்று பார்த்தால் பாடம் செய்யப்ட்பட ஒரு நரியை வாசலில் நிறுத்தி வைத்துக் கொண்டு ஒருவர் நின்றிருப்பார்.  காசு வாங்கி கொள்வார்.  அதிகாலையில் நரியைப் பார்த்தால் அதிருஷ்டமாம்!  அப்புறம் அப்புறம் அப்பா அந்தக் குரல் கேட்டாலே எங்களை வாசல் பக்கமே போகவிடாமல் தடுத்து விடுவார்!  கீழே உள்ள தகவலைப் படித்ததும் எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது!

  "பூனை குறுக்க வந்தா கெட்ட சகுனம்பாங்க...   நரி குறுக்க வந்தா நல்ல சகுனம்பாங்க.  ஆனா வீட்டுல பூனை வளர்ப்பாங்களே தவிர, நரி வளர்க்க மாட்டாங்க"  - இயக்குனர் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா,  விக்ரமன் சொன்னதாக..   

=====================================================================================

பேஸ்புக்கிலிருந்து முன்பு நான் பகிர்ந்ததிலிருந்து இன்னொன்று...

தடுக்க முடியாது; தள்ளி போடலாம்!
'அல்சீமர்' என்னும் மறதி நோய் குறித்து கூறும், நியூராலஜிஸ்ட் டாக்டர் மாணிக்கவாசகம்:
"எல்லா மறதியும், அல்சீமர் என்று சொல்ல முடியாது. ஞாபக மறதி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வைட்டமின், 'பி12' குறைபாடு, முக்கிய காரணம்.
எனவே, இந்த வைட்டமின் குறைபாட்டால் ஞாபக மறதி ஏற்படலாம். தொடர்ந்து இந்தக் குறைபாடு இருக்கும்போது, 30, 40 வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடும். வைட்டமின், 'பி12' டெஸ்ட் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
அடுத்தது, தைராய்டு பிரச்னை காரணமாக ஒருவருக்கு ஞாபக மறதி ஏற்படலாம். அதனால், தைராய்டு பரிசோதனையும் நல்லது. அல்சீமர்ஸ் என்பது பரம்பரை நோய். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி யாருக்கேனும் அல்சீமர்ஸ் இருந்தால், அவர்களுக்கு அல்சீமர் வரலாம்.
அல்சீமர் நோய் உள்ளோர், அன்றாட வேலைகளை செய்து முடிக்க சிரமப்படுவர், கடினமாக உணர்வர்.
அதாவது, பழக்கப்பட்ட இடத்திற்கு வாகனம் ஓட்டிச் செல்வதில் சிரமம்; நிதி நிலைகளை சமாளிப்பதில் சிரமம்; விருப்பமான விளையாட்டின் விதிமுறைகளை நினைவுபடுத்திக் கொள்ள இயலாமை போன்றவை.
தேதி மற்றும் பருவ காலங்கள் குறித்த நினைவுகளை இழந்துவிடலாம். சில சமயங்களில் எங்கே இருக்கிறோம் அல்லது எவ்வாறு சென்றோம் என்பதையும் மறந்து போகலாம்.
அதேபோல், உரையாடலின் போது அவர்கள், இடையில் நிறுத்திவிடுவர் மற்றும் மேற்கொண்டு எவ்வாறு தொடர்வது என்று அறியாமல் இருப்பர் அல்லது சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பர். சரியான வார்த்தையைக் கண்டறிய சிரமப்படுவதுடன், பொருட்களை தவறான பெயர் சொல்லி அழைப்பர்.
ஆரம்ப அறிகுறியால் அல்சீமரை கண்டறிந்தாலும், மருந்து, மாத்திரையால் தள்ளிப் போடலாமே தவிர, முழுமையாகக் குணப்படுத்த முடியாது. எனவே, திட்டமிட்டே சில விஷயங்களை பின்பற்றினால், அல்சீமர்ஸ் வராமல் தடுக்க முடியும்.
புதிய மொழிகளை கற்றால், மூளையின் செயல்திறன் மேம்படும். எப்போதும் வலது கையால் செய்வதை, இடது கையால் செய்ய முயற்சிக்கலாம். உதாரணமாக, வலது கையில் எழுதினால், இடது கையால் எழுத முயற்சி செய்யலாம். தினமும் ஒரே பாதையில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்பவராக இருந்தால், மாற்றுப் பாதையில் சென்று வரலாம்.
சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டிகளில் கவனத்தை செலுத்தலாம். அதிகமான புத்தகங்கள் வாசிப்பதால், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். இதனால், ஞாபக மறதி வருவது தடுக்கப்படும்.
மேலும், அதிகமாக பழங்கள் மற்றும் வால்நட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுப்பதால், மூளையின் செயல்திறனை மேம்படுத்தி, ஞாபக மறதியை தள்ளிப் போடலாம்.
தினமலரிலிருந்து...

=========================================================================


மலேசிய விமானம் காணாமல் போனபோது எல்லோரும் அதை வலைவீசித் தேடிக்கொண்டிருந்த காலையில்....



=================================================================================

அப்படியா?!



=============================================================================================


இந்த வாரமும் ஒரு கணையாழிக் கவிதை.


===================================================================================================

பல்பொடியிலும் மொழிப் பற்று! ஒரு டின் 0.50 பைசா!



படிக்க முடிகிறதோ....



கொள்ளையரைப் பிடிக்க நூதன வழி... 1963 ஸ்டைல்..


=================================================================================================

188 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம். அனைவரின் உடல் நலத்துக்கும் உள்ள நலத்துக்கும் இறைவன் துணை இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. நீல வண்ணக் கள்ளா வாடா ந்னு பாடுவாங்களோ
    நியூயார்க்கில்?
    சுவாரஸ்யம் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   இந்த நிறம் மாறும் விஷயத்தைக் கொண்டு தமிழ்வாணன் இரண்டு கதைகள் எழுதினர்.  ஒன்று டோக்கியோ ரோஜா.  இன்னொன்று ஏதோ சங்கர்லால் கதையில் சிறு விஷயமாக வரும்!

      நீக்கு
  3. வாலி முன்னுக்கு வந்த காலமா. 1963?
    நல்ல பதில். தமிழ்வாணன் சொல் பலித்து விட்டது.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்ப் பல்பொடி வாங்கினதே இல்லை.
    யார் வாங்கினார்களோ ....சொன்னால் நன்றாக இருக்கும்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதைத்தான் நினைத்தேன்!

      நீக்கு
    2. நான் வாங்கி உபயோகித்திருக்கிறேன். அந்த நாட்களில் பயோரியா பல்பொடி தான் பிரசித்தம். மாற்றாக தமிழ் பல்பொடி வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தோம்.
      சாம்பல், மாங்கொட்டையை பொடி செய்து.. என்று என்னன்னவோவெல்லாம் அந்தக் காலத்தில் பழக்கத்திலிருந்தது.

      நீக்கு
  5. முஸ்தபா பெயரின் பின்னால் கஸ்தூரிரங்கனா!!!
    அருமையான கவிதை.

    வெளியிலும் புகைந்து
    உள்ளேயும் எரிக்கும்
    கரிக்கட்டை.

    பதிலளிநீக்கு
  6. செண்பகப்பூ எப்பொழுதும் மணம் கமழும்.
    அதைப் பாடம் செய்வது எப்படி???

    ஜானகிராமன் கதைகளில் செண்பக்ப் பூவை முகர்ந்தால்
    மூக்கில் ரத்தம் வரும் என்பார்.
    எங்கள் வீட்டில் பங்களூரில் எப்போதும் நிறைத்து வைப்பேன்.

    பதிலளிநீக்கு
  7. இன்னும் கீசா மேடத்தைக் காணோமே.... எழுதுவதற்குப் பதில் நேரடியாகவே ப்ரார்த்தித்துக்கொண்டிருக்கிறாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தேன், வந்தேன், வந்தேனே!

      நீக்கு
    2. இப்போல்லாம் ஏன் odd timeக்கு வர ஆரம்பித்துவிட்டீர்கள் கீசா மேடம்? நைஜீரியா நேரத்துக்கு எழுந்துகொள்வது தூங்குவது என்று மாற்றிக்கொண்டுவிட்டீர்களா?

      நீக்கு
    3. நம்ம காலை எட்டரை எனில் நைஜீரியாவில் விடிகாலை நாலு மணி. ஆகவே அந்த நேரத்துக்கு எல்லாம் மாத்திக்கலை. க்ளீனிங் வேலை நடந்து கொண்டிருந்ததால் குளிக்கப் போகத் தாமதம். சற்று நேரம் கணினியில் உட்கார்ந்தேன்.

      நீக்கு
  8. மலேசிய விமானத்தைத் தேடிய கவிதை அருமை:)

    பதிலளிநீக்கு
  9. எல்லா மறதியும், அல்சீமர் என்று சொல்ல முடியாது. ஞாபக மறதி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வைட்டமின், 'பி12' குறைபாடு, முக்கிய காரணம்.///// This can be reason for my forgetting :)அருமையான கட்டுரை ஸ்ரீராம்.
    செலக்டிவ் மறதிக்கு என்ன செய்யலாம் என்று
    யோசிக்கிறேன்.
    கூகிள் செய்யப் போகும்போது
    தேட வந்த பொருள் மறக்கிறதே. இதுக்கு என்ன செய்யலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இல்லை, இல்லை பிளஸ் சமயங்களில் எனக்கே இந்தப் பிரச்னை இருக்கிறது அம்மா.  எதையோ எடுக்க அலமாரி பக்கம் வந்ததும் எதை எடுக்கவே வந்தேன் என்று மறந்துபோய் மறுபடி முதலில் நின்ற இடத்தில் சென்று நின்று யோசிக்க ஆரம்பிப்பேன்!  அது மட்டுமல்லாமல், தினசரி உபயோகத்திலிருக்கும் பலப்பல பொருட்களின் பெயர்ஸ் சட்டென வாயில் வராது தவிக்கும் - கண்ணெதிரே பொருளே இருந்தும் கூட.

      நீக்கு
  10. நர நாராயணர் , நரி நாராயணர் ஆகிட்டாங்களோ.நரி இடம் போனாலும், வலம் போனாலும்
    மேலே பிடுங்காமல் இருந்தால் சரி.;))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...    

      நரி முகத்தில் விழித்தால் அதிருஷ்டம் என்று சொல்லி நரியை நாராயணனாக்கி விட்டார்கள் தஞ்சையில்!

      நீக்கு
  11. கொரோனா பற்றிய செய்திகள் மனசை பதற வைக்கின்றன. நல்ல வேளை நீங்கள் தடுப்பூசி எடுதுக் கொண்டீர்கள் சில நாட்களுக்கு முன் இங்கு வந்த செய்திகளில் இந்தியாதான் அதிக அளவில் தடுப்பூசி ஏற்றுமதி செய்கின்றது பல் நாடுகளுக்கு. இப்போது இந்தியாவில் கொரோனா பரவி வருவதால் உள்ளுரில் தடுப்பூசி எடுத்து கொள்ள மட்டேன் என்றவர்களும் எடுத்துக் கொள்ள் ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் உலக் நாடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அதனால் இந்திய அரசு தன் மக்களை காப்பாற்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை குறைக்குமா அல்லது இந்த டிமாண்டை பயன்படுத்தி அதிக அளவு ஏற்றுமதி செய்து வருமானத்தை பெருக்க வழிவகைகளை செய்யுமா என்று பார்த்தால் 2வதைத்தான் தேர்ந்தெடுக்க வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்று எழுதி இருந்ததை படித்தேன்...அதனால் இந்தியாவில் வசதியான உயர்தர மக்கள் உயர்தர நடுத்துர வர்க்கத்தினர் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பு ஏழை மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. கொரோனா பரவுவது தடுக்கப்பட்டால் பிரச்சனை இல்லை. அப்படி இல்லையென்றால் பெரும் அழிவு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியா பல நாடுகளுக்கு இலவசமாகவே தடுப்பூசியை வழங்கி இருக்கிறது.  உள்ளூரில் தேவை அதிகரிக்கும்போது கட்டாயம் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டும்.  உற்பத்தியைப் பெருக்கலாம்.  

      நான் இலவசமாகத்தான் போட்டுக்கொண்டேன்.  நான் போட்டுக்கொண்ட ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனைகள் இலவசமாக வாக்சின் வாங்கிச் சென்றதைப் பார்த்தேன்.,  அவைகளை அவர்கள் 250 ரூபாய்க்குப் போடுகிறார்கள்.

      நீக்கு
  12. அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.////////////////////அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன./////மறைக்கப் பட்ட எத்தனையோ விஷயங்களில்
    நம்மூர் கண்டுபிடிப்பும் இருப்பது வருத்தம்.
    தால்படயே எங்கே சென்றாரோ.

    போஜராஜா விஷயம் ஆச்சர்யத்தின் உச்சிக்குக் கொண்டு போகிறது.
    மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுமாதிரி விஷயங்களை எனக்கும் தேடிப் படிக்கப் பிடிக்கும்.  ஆச்சர்யமான விஷயங்கள்.

      நீக்கு
    2. விமானத்தைக் கண்டு பிடித்தது இந்தியர் தான் என்பதும், அதை ஆங்கிலேய அரசாங்கம் மறைத்துவிட்டது என்பது பற்றியும் மின் தமிழில் விவாதங்கள் நடந்தன.

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. எதுக்குப்பா, இந்தப் படத்தை போட்டீர்கள். மஹா பயங்கரமா
    இருக்கே!!!!!

    இந்த ஊரிலும் தொற்று திடீரென அதிகரித்திருக்கிறது.

    முன்பே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம்.
    இப்போது காத்திருந்து போட்டுக் கொண்டோம். டிமாண்ட் ஜாஸ்தியாகி விட்டது.

    ஃபைசர் போட்டுக் கொண்டோம்.
    அவர்களே ஒரு தேதி கொடுத்து வரச் சொல்லி விட்டார்கள்.

    சென்னையிலிருந்து ஏகப்பட்ட வேண்டாத செய்திகள்
    வந்தாகிறது.
    யாரும் பயப்படுவது போலத் தெரியவில்லை. இது வரை
    ஐந்து திருமணங்களை லைவ் ரிலே
    பார்த்தாச்சு.
    யாரும் முகக் கவசம் போடவில்லை;.
    இறைவன் தான் எல்லோரையும் காக்க வேண்டும்.

    மிக அருமையாக வாக்சினேஷன், கோவிட் இரண்டையும்
    வலியுறுத்தி சொல்லி இருக்கிறீர்கள்.
    எல்லோரும் உணர்ந்து போட்டுக் கொள்ளட்டும்.
    நன்றியும் வாழ்த்துகளும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு பயங்கரமான விஷயமாத்தான் இப்போ அது இருக்கும்மா..    அதுதான் அந்தப் படம்.

      :))

      என் அனுபவத்தையும், நான் கேள்விபப்ட்டதையும் சேர்த்து எழுதி விட்டேன்.

      நீக்கு
  15. அங்கிருந்த ஊழியர் என் சிபாரிசின் வலிமையால் என்னையே கவனிக்க//

    'வலிமை’ அப்டேட் கிடைத்துவிட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா....   ஹா...    மோடியைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்!

      நீக்கு
    2. வானதி சீனிவாசனையும் ஆரம்பத்தில் ட்விட்டரில் அறுத்தார்கள் ! அவர் ‘நான் ஜெயித்தவுடன் அப்டேட் கிடைக்கும் தம்பி!’ என பதிலும் சொல்லியிருந்தார்..

      நீக்கு
    3. ட்விட்டரில் கண்டு டென்ஷனான இங்கிலாந்தின் மோய்ன் அலி, அஷ்வினிடம் கேட்டது: ‘வலிமை’னா என்ன!

      நீக்கு
    4. இரண்டுமே என் கண்ணில் படவில்லை!!!

      நீக்கு
    5. ஹஆஹாஆ :) இப்போதான் இதைபார்க்கிறேன் ..நெக்ஸ்ட் எங்கள் பிளாக் நோக்கி வருது :) கூட்டம் ரசிகர் கூட்டம் வலிமை அப்டேட் கேட்டு :))

      நீக்கு
    6. படம் ஐந்தாண்டு திட்டமாக இருக்கும் போல...    அப்டேட்டிலேயே காலம் ஓடுகிறது!

      நீக்கு
  16. ..வீட்டுல பூனை வளர்ப்பாங்களே தவிர, நரி வளர்க்க மாட்டாங்க" //

    விக்ரமனுக்குத் தெரியாதது: விதிவழிப்படிதான் வளர்க்கவேண்டியிருக்கிறது !

    பதிலளிநீக்கு
  17. ..முன்னரே அங்கு பணிபுரியும் நண்பனிடம் சொல்லி //

    எங்கு! ஆஸ்பத்திரிதான் சார்னு சொல்லாதீங்க! எந்த ஆஸ்பத்திரி அல்லது மருத்துவ மனை-ப்ரைவேட்டா, அரசாங்கமா? சார்ஜ் எவ்வளவு வாங்கிக்கொண்டார்கள் என்றும் சொல்லியிருக்கலாமே!

    மற்றபடி விபரம் அள்ளித் தரும் கட்டுரைதான்.

    பதிலளிநீக்கு
  18. காணாமற்போன மலேஷிய விமானம்பற்றி நீங்கள் எழுதியிருந்த வேளையில், நானும் எழுதியிருக்கிறேன் என் பக்கத்தில் - ஆனால் ஆங்கிலத்தில் ! தரட்டுமா கீழே:

    ENDURING MISERY
    12/03/2014, posted in English posts, Poetry

    Alright, Good night !
    So he said
    Left many things unsaid
    From then on
    Nothing went right
    Neither that night
    Nor the days that
    Painfully followed
    Had any ray of light
    Shrouded in the darkest mystery
    One more to quench the thirst of history?

    **

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // Neither that night
      Nor the days that
      Painfully followed
      Had any ray of light// so sad.

      நீக்கு
    2. அருமை ஏகாந்தன் சார்.    சம்பந்தமில்லை என்றாலும் ஒன்று நினைவுக்கு வருகிறது..  தொண்ணூறுகளில் என்று நினைக்கிறேன்.  ஒரு புகழ்பெற்ற விமான விபத்து.  யாருமே பிழைக்க மாட்டார்கள்.  அதை வைத்து சுஜாதா ஒரு கதை புனைந்திருப்பார்.  புரிந்தவர்கள் கலங்குவார்கள்.

      நீக்கு
    3. சுஜாதா விமானம் ஹைஜாக் ஆகிற கருத்தை வைத்து ஒரு அருமையான கதை எழுதியிருந்தார். சாவியின் தினமணி கதிர் -எழுபதுகளில் என்று நினைவு. அவர் எதையும் விட்டதில்லை. பின்னியிருக்கிறார். சாகித்ய அகாடமி எதனாலோ அவரை பின்னிவிட்டது. மடையர்கள் .. மொழிக்கு ஒன்று தருகிறோம் என்று குப்பைப் படைப்பிற்கெல்லாம் கிடைத்திருக்கிறது அகாடமி விருது ஒவ்வொரு வருடமும். சுஜாதாவின் எழுத்து ஏனோ அவர்களைக் ‘கவர’வில்லை. அதில் ‘தர’த்தை இந்த திராவைகளால் காணமுடியவில்லை!

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    கொரோனா தடுப்பூசிகள் பற்றி விபரமான கட்டுரை. முதலில் கொரோனாவை விட அந்த கொரோனா முகம் மிகவும் பயமுறுத்துகிறது. இங்கும் (வீட்டில்) தடுப்பூசிக்கு வலியுறுத்தப்படுகிறது. போடவும் பயம். போட்டுக் கொள்ளாமல் இருக்கவும் பயம். இந்த தெனாலி பயத்தை இந்த கொரோனா கொண்டு வந்து விட்டதே என நினைக்கும் போது மிக கலக்கமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காணொளி பார்த்தீர்களா கமலா அக்கா...    நான் ஊசி போட்டுக்கொண்டதை வீடியோ எடுத்திருக்கிறார்கள்!

      நீக்கு
    2. ஹா.ஹா.ஹா. அது நீங்கள்தானா? எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என யோசித்தேன்.
      அது சரி.. அவர் (நீங்கள்) கடைசியில் ஊசி போட்டுக் கொண்டாரா இல்லையா?

      நீக்கு
    3. கடைசியில் முகத்தில் குளோரோபார்ம் வைத்து மயங்க வைத்து ஊசி போட்டு விட்டதாகக் கேள்வி!

      நீக்கு
    4. ஓ.. அப்படியா? அது உண்மையிலேயே நடந்ததா? நான் கூட ஏதோ விளையாட்டுக்காக அப்படி நடிக்கிறார்கள் என நினைத்தேன்.

      நீக்கு
  20. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பெருகி வரும் தொற்றுக் குறையவும் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கும்/போட்டுக் கொள்ளப் போகிறவர்களுக்கும் பிரச்னைகள் இல்லாத மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்த நாட்கள் தொடரப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  21. கொரோனா படம் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! நீங்க தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட அனுபவங்களும் கோவிஷீல்ட், கோவாக்சின் பற்றிய சந்தேக நிவர்த்தியும் அருமை. நல்ல விபரங்களைக் கொண்டது. திரு கௌதமன் கொரோனா பற்றிய வதந்திகளைத் தாம் நம்பவில்லை என்றார் நேற்று. இன்று நீங்கள் விரிவாகச் சொல்லி இருப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டு மக்களின் மனோநிலை புரியும். படிக்காதவர்கள்னு இல்லை படித்தவர்கள் கூட அதிலும் என் மடிக்கணினியின் மருத்துவர் கூட "இந்தக் கொரோனாவெல்லாம் வெறும் புரட்டு மேடம்! அவங்க (அதாவது மத்திய அரசு) செய்யும் ஊழலையும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து மக்களைத் திசை திருப்பவும் இப்படி ஒரு புரட்டைக் கிளப்பறாங்க." என்பது தான்! இவரைப் போல் பலரும் சொல்கின்றனர். இன்றைய தினமலர்ப் பத்திரிகையில் மக்களின் அஜாக்கிரதை குறித்தும், தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ என்னும் எதிர்க்கட்சிகளின் பயம் குறித்தும் எழுதப்பட்டிருக்கும் தலையங்கத்தில் எதிர்க்கட்சிகள் கொரோனாவை அலட்சியம் செய்வது குறித்தும், இது தேர்தலை ஒத்தி வைப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செய்யும் புரட்டு எனவும் சொல்வதைக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள் எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டார்கள். அரைகுறை தொண்டர்கள் மற்றும் அறியாத எதிர்ப்பாளர்கள் மட்டும் இன்னும் ஏதோ சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். எங்கள் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் வட்டத்தில் நிகழ்ந்த அகால மரணங்கள் கரோனாவின் கோர முகத்தை எங்களுக்குக் காட்டியுள்ளது.

      நீக்கு
    2. ஆம்....   நிறையபேர் அப்படிதான் கருத்து வைத்திருக்கிறார்கள்.  வாட்சாப் புண்ணியம்.  மேலும் எதற்கெடுத்தாலும் குறை சொல்லும், குற்றம் கண்டுபிடிக்கும் மனோபாவம்!

      நீக்கு
  22. என்னவோ ஒரு தொற்று வந்து ஒரு வருஷமாகப் பாடாய்ப் படுத்தினது எனில் இன்னும் சிலர் சொல்லுவது இன்னும் ஏழு வருடங்களுக்கு இந்தத் தொற்று இருக்கும் என்பதே! அதோடு புதிய கொடிய வீரியமான வைரஸ் ஒன்றும் இந்தியாவில் 18 மாநிலங்களில் தோன்றி இருப்பதாய் மத்திய சுகாதாரத் துறை செய்தி! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். செய்தி பார்த்தேன்.

      நீக்கு
    2. இரட்டைத்தொற்று என்று பார்த்தேன்.  என்ன ஆகுமோ..   புதுப்புது வடிவங்கள் எடுக்கிறது.  நாம் எச்சரிக்கையாக இருபிப்பது நல்லது.  ஆனால் யாரும் கேட்பதாக இல்லை.  அதுவும் விதிதான் போல...

      நீக்கு
  23. செண்பகப்பூக்கள் "பெண்"களூரில் நிறையக் கிடைக்கும். தலையில் வைத்துக் கொள்வதை விடப் பார்க்கப் பிடிக்கும். இங்கே தாயார் சந்நிதியில் செண்பகப் பூச்செண்டுகள் நிறையக் கிடைக்கும். கஸ்தூரி ரங்கனின் கவிதை அருமை. தமிழ்வாணனைப் பின்னர் படிக்கிறேன். உங்கள் முகநூல் கவிதைகள் அதிலும் மலேசிய விமானம் பற்றியது நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையில் எங்கள் வீட்டில் செண்பகப்பூச்செடி இருந்தது என்று நினைவு.  சரியாக நினைவில்லை.  இரண்டு வீடு தள்ளி பவளமல்லி இருந்தது...  அது நினைவில் இருக்கிறது.

      நீக்கு
  24. ஜாதிக்காய்ப் பொடி சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் தூக்கம் வரும்னு முந்தாநாள் சாப்பிட்டேன். ஆனாலும் பனிரண்டு மணி வரை தூக்கம் வரலை. நேற்று எதுவும் வேண்டாம்னு படுத்தால் இரண்டு மணி வரை தூக்கம் இல்லை. அதன் பின்னர் கொஞ்சம் தூங்கினால் ஐந்து மணிக்கு ரங்க்ஸ் எழுப்பிட்டார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனால் காஃபி குடித்துவிட்டு மறுபடியும் ஒரு மணி நேரம்படுத்துவிட்டேன். இன்னிக்கு நோ கஞ்சி! ஆகவே காலை இட்லி/சாம்பார் (திடீர் சாம்பார் பருப்பில்லாமல்) சாப்பிட்டுவிட்டுப் பின்னர் கணினியில் உட்கார்ந்திருக்கேன். இப்போ எழுந்து போயிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க ஜாதிக்காய் பொடி போட்டு சாப்பிட்டு ஒருவாய் ஜலம் சாப்பிட்டு விட்டுக் கண்ணை மூடியிருந்தால் தூக்கம் வந்திருக்கும்.

      ஆனா நீங்க, நான் ஒரு ஸ்பூன் சாப்பிட்டது போதுமா, டேபிள் ஸ்பூன்னு எழுதியிருந்தானா டீஸ்பூனா, ஜாதிக்காய் பொடி பாட்டில்லேர்ந்துதானே சாப்பிட்டேன்.. இல்லை இவர் பாட்டிலை மாற்றி ஏலக்காய் பொடி பாட்டில்ல வச்சிருந்திருப்பாரா? பொடியை மோரோடு சாப்பிடணுமா இல்லை வெறும் தண்ணீரா வெந்நீரா? ஜாதிக்காய் பாட்டிலை மூடி வைத்தேனா என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்திருப்பீர்கள். விடிந்திருக்கும். ஹா ஹா

      நீக்கு
    2. நான் படுத்துக்கொண்டு ஏதாவது ஒரு பொருளில் மனதுக்குள் கற்பனை செய்ய ஆரம்பிப்பேன்.  உதாரணமாக என்னிடம் கடன் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய அந்த பில்டரை வசமாக சிக்க வைக்க நான் பிளான் பண்ணுவதாக..  இப்படி ஏதாவது வித்தியாசமான கற்பனைகள்...   கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் வந்துவிடும்.  அல்லது வேளுக்குடி போட்டுவிட்டால் இருபதுவே வரி கேட்பதற்குள் ஆனந்தமாய்த் தூங்கி விடுவேன்!

      நீக்கு
    3. நெல்லை, உங்க கற்பனை அபாரம்! ஜாதிக்காய்ப் பொடியாகவே வாங்கி வந்துட்டார். அதோடு இந்த சாமான்களை வைப்பதில் எல்லாம் அவர் தலையிடவே மாட்டார். ஏலக்காய்ப் பொடி எடுக்கும்போதே வாசனை வரும். இதை எல்லாம் மோரில் சாப்பிடக் கூடாது. பால்/வெந்நீர் ஏதேனும் ஒன்றில் சாப்பிடணும்.

      நீக்கு
    4. ஹிஹிஹி ஸ்ரீராம்! பிரச்னையே இந்த மாதிரி யோசிப்பதில் தான் ஆரம்பிக்கிறது. யோசனைகள் இல்லைனா சீக்கிரம் தூக்கம் வந்துடும். தூக்கம் வந்துடுமானு எதிர்பார்ப்பிலேயே சி9ல நாட்கள் முழிச்சுண்டு இருக்கும்படி ஆகிறது. என்னென்னவோ எண்ணங்கள்/அத்தி வரதர் பற்றிய கற்பனைகள்/குஞ்சுலு பற்றிய நினைவுகள்/மற்றவற்றைப் பற்றிய எண்ணங்கள்/ கடந்த கால நினைவுகள் பல/ கண் அறுவை சிகிச்சையை நல்லபடியாகச் செய்துக்கணுமேனு கவலை! குலதெய்வம் கோயிலுக்குப் போகணும் என்னும் ஆவல். இத்தனையும் முட்டி மோதும்போது தூக்கம் எங்கே வரும். வேளுக்குடி எல்லாம் கேட்டாலோ புத்தகம் படித்தாலோ எழுந்து உட்கார்ந்துடுவேன்.

      நீக்கு
    5. நீங்கள் சொல்வது கவலை...  நான் சொல்வது கதை போல நம்மை உருவகப்படுத்திக்கொண்டு கற்பனை.  முன்னர் வீடு கட்டுவது போல பிளான் செய்து தூங்குவேன்!  

      நீக்கு
    6. அத்திவரதர் குறித்துக் கூடக் கவலையா எனக்கு? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    7. //கடந்த கால நினைவுகள் பல/ கண் அறுவை சிகிச்சையை நல்லபடியாகச் செய்துக்கணுமேனு கவலை! கடந்த கால நினைவுகள் பல/ கண் அறுவை சிகிச்சையை நல்லபடியாகச் செய்துக்கணுமேனு கவலை! //

      நீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் "வைமானிகா சாஸ்திரம்" குறித்தும் அதில் சொல்லப்பட்டிருக்கும் விமானத் தயாரிப்புக் குறித்தும் என் இளைய நண்பர் விசுவின் அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். சம்ஸ்கிருதத்தில் பண்டிதர் அவர். அர்ஜூனனுக்கும், அஸ்வத்தாமாவுக்கும் மட்டுமே தெரிந்த பிரம்மாஸ்திர மந்திரத்தையும் பகிர்ந்திருந்தார். காயத்ரி மந்திரத்தைத் திருப்பிப் போட்டு ஜபிக்கவேண்டும் எனவும் கோடி முறை ஜபிக்க வேண்டுமெனவும் காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியும் அமர்ந்து ஜபிக்கவேண்டும் எனவும் சொல்லி இருந்தார். வேத கணிதத்தில் தேர்ச்சி பெற்ற அவர் இம்மாதிரிப் பல ஸ்லோகங்கள்/மந்திரங்கள் சொல்லி இருக்கார். நான் முன்னால் "மழலைகள்" குழுவில் இருந்தப்போ அதில் அவரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். சிலவற்றைக் குறித்து ட்ராஃப்ட் மோடில் வைத்திருக்கேன். தேடிப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரம்மாஸ்திரம் பற்றி மேலும் விளக்கம் கொடுங்க

      நீக்கு
    2. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் செலவழித்தால், கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஜெபித்தபிறகு, கோடி ஆயிருக்கும். ஆனால் அதில் பத்து சதவிகிதம்தான் மனதைச் செலுத்திச் சொல்லியிருந்தால், இன்னும் 90 வருடங்களுக்கு எங்க போறது கீசா மேடம்? வீட்டு வேலைகள் செய்யாமல் ப்ரம்மாஸ்திரத்தை மட்டும் ஜெபித்துக்கொண்டிருந்தால், மனைவியின் கண்களிலிருந்து பறக்கும் தீப்பொறி பிரம்மாஸ்திரத்தைவிட சக்தி உடையதாக இருக்குமே... அதற்கு என்ன தீர்வு?

      நீக்கு
    3. நான் அதெல்லாம் படித்ததில்லை.  நெல்லை சொல்லி இருப்பதுபோல ஜெபித்தால் அவ்வளவு வருடங்கள் பிடிக்குமெனில் பிரம்மாஸ்திரம் ஏவுவதற்குள் எதிராளி நடந்து வந்து குச்சியால் அடித்து நம்மைக் காலி செய்து விடுவான்!  வேறு ஏதோ விஷயம் இருக்க வேண்டும்!

      நீக்கு
    4. சஹஸ்ர காயத்ரி பண்ணி இருப்பீங்கனு நினைக்கிறேன் நெல்லை. அப்படிப் பண்ணும்போது இதுவும் எளிதே! அதோடு நம்மால் எல்லாம் இயலாத ஒன்று. இதற்கென அர்ஜூனன் போலவோ/அஸ்வத்தாமா போலவோ நாம் தவமும் இயற்றி இருக்கணும். மேலும் உள்ளேயும், வெளியேயும் ஏகாக்கிர சிந்தை வேண்டும்.

      நீக்கு
    5. "அழகி" மென்பொருள் விசுவால் தயாரிக்கப்பட்டது. அவருடைய மோசமான உடல்நிலையிலும் கூட அவர் இதைச் செய்து சாதித்தார். விசுவின் அப்பா தான் இந்த விஷயங்களை எல்லாம் அழகாய்த் தொகுத்துக் கொடுப்பார். அப்போவே அவருக்கு 70 வயதுக்கு மேல் ஆயிற்று. இப்போத் தொடர்பில் இல்லை.

      நீக்கு
    6. இன்று காலைதான் 'அழகி'யை திறந்தபோது அவர் பெயரைப் பார்த்தேன்.  முன்னர் பலமுறை திறந்திருந்தாலும் இன்றுதான் யதேச்சையாகக் கண்ணில் பட்டது. இப்போது உங்கள் கமென்ட்டில் விவரம்...

      நீக்கு
    7. ஆமாம், அவரால் எதையும் சாப்பிட முடியாது. அப்படி ஒரு நோய். அவர் மனைவி அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு அவருக்கு எது கொடுத்தால் சரியாய் இருக்குமோ அதைக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதோடு வேலையும் பார்த்துக் கொண்டிருந்தார். அம்பத்தூரில் தான் இருந்தாங்க முதலில். பின்னால் வீடு மாறினதாய்ச் சொல்வார்கள். ஒரு காலத்தில் அடிக்கடி தொலைபேசி விசாரிப்பேன். விசுவும் பேசுவார். இப்போதெல்லாம் தொடர்பே இல்லை. மழலைகள் குழுமத்து நண்பர்கள் பலர் இப்போது இல்லை. இருக்கும் சிலர் தொடர்பில் இல்லை.

      நீக்கு
  27. கொரோனா செய்திகள் , படம் மனதை கலங்க வைக்கிறது.

    குடும்பத்தில் பெரியவர்கள் எல்லாம் ஊசி போட்டு கொண்டது நல்லது.

    //ஃபைசர் போட்டுக் கொண்டோம்.
    அவர்களே ஒரு தேதி கொடுத்து வரச் சொல்லி விட்டார்கள்.//
    வல்லி அக்கா சொன்னது போல் நானும் ஃபைசர்தான் போட்டார்கள். அடுத்து 9 ம் தேதி வரும் படி சொல்லி விட்டார்கள்.( 28 நாள் கழித்து)

    கைவலி உடல்வலி இருந்தது மாத்திரை எடுத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி. எல்லோரும் விரைவில் நலமடைய பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. ஊசி போட்டுக்கொண்ட அன்று, மற்றும் மறுநாள் தவிர பிரச்னைகள் இல்லை.  நீங்களும் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  28. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    எங்கெங்கும் வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  29. பதிவின் செய்திகள் மிகவும் கலவரப் படுத்துகின்றன...

    மக்கள் அவரவர் தலை விதியை அவரவரே தீர்னித்துக் கொள்ளட்டும்...

    பதிலளிநீக்கு
  30. வாய்க்குள் அதிகமான பற்கள் இருப்பது மாதிரியான அதி பயங்கரமான படம் ஏதும் கைவசம் இல்லையா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கற பற்களை எல்லாம் பல்கொட்டிப் பேய் வந்து எடுத்துக் கொண்டு போய்விட்டதாம்!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      முன்பெல்லாம் புதனன்று வரும் பதிவுகளில் (புதன்கிழமைதான் என நினைக்கிறன்) வந்து கொண்டிருந்த பேய் இந்த வாரம் வியாழனன்று வந்துள்ளதே..! பல்லிருக்கும் பேயை பார்க்கவே பயமாக உள்ளது. (கனவில் வருமென நினைக்கிறேன்.) இதில் பல்கொட்டிப் பேய் வேறா? இருப்பினும் வழக்கமான ஆர்வத்தில் இன்று வெளியாகியிருக்கும் கவிதைகளை ரசித்ததில் பல்(ல)பேய்களை சற்று மறந்தேன்.:))

      நீக்கு
    3. பல்கொட்டிப்பேய் அப்பாதுரை செல்லம்!   நினைவில்லையா?

      நீக்கு
  31. அனுஷ்கா படம் கிடைக்காததால், போட்டிருக்கும் படம் அவ்வளவாக நன்றாக இல்லையே ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை உங்கள் பின்னூட்டத்திற்கு கோபம் வந்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

      நீக்கு
    2. ஹா...  ஹா...  ஹா...   அனுஷ் படம் போட்டிருக்கலாம்.   நாளாச்சு இல்லை?!!

      நீக்கு
  32. தடுப்பூசி அனுபவம் பதிவின் பயங்கர படத்தைப் போலவே...

    கணையாழி கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
  33. கோவிட் ஊசி - 1. ஊசி போட்டுக்கொண்டவுடன், அரை மணி நேரமாவது அங்கே உட்கார்ந்துவிட்டு பிறகு வரவும். 2. இரண்டாவது மூன்றாவது நாட்கள் கைவலி இருக்கும். 3. இரண்டாவது, மூன்றாவது நாட்கள் ரொம்ப வேலை செய்து அலட்டிக்கொள்ள வேண்டாம். சோர்வாக இருந்தால் ரெஸ்ட் எடுக்கவும். நான்காவது நாளிலிருந்து பிரச்சனை இருக்காது. 4. அரசு சொல்வதற்கு இணங்க, 6 வாரங்களுக்கு மேல், அதே ஹாஸ்பிடலில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளவும். நான் முதல் டோஸ் எடுத்து 15வது நாள் ஆகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அரைமணி நேரம் அங்கு தங்கி அலர்ஜி ஏதாவது ஆகிறதா என்று பார்க்கவேண்டும்.  எங்கள் சென்டரில் பெரும்பாலும் யாரும் ஒன்றும் பார்க்கவில்லை.  நாங்கள் மட்டும் உட்கார்ந்து வெந்நீரும், டீயும் குடித்துக் கொண்டிருந்தோம்!

      அங்கிருந்தவரை இதுவரை யாருக்காவது ஏதாவது அலர்ஜி ஆகி ஏதாவது நடந்திருக்கிறதா என்று கேட்டேன்.  இல்லை என்றார்கள்.

      நீக்கு
  34. இன்றைக்கு ஸ்ரீராம் மூட் சரியில்லை போலிருக்கு. படங்கள், பற்கள் பற்றி விஷயம், என்று ரசனை எங்கேயோ போய்விட்டது. இன்னும் மம்மி படம் ஒன்றுதான் வெளியிடலை. என்னாச்சு.... கோவிட் பற்றி நிறைய கனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிட் பற்றி கனவா?  நனவிலேயே பயமுறுத்துகிறதே!!!

      நீக்கு
  35. முகநூல் செய்திகள் படித்தேன். விமானத்தை தேடிய உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
    அப்படியா செய்தி , கணையாழி கவிதையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  36. இந்த மாதிரி கோவிட் வராதா ன்று வியாக்கியானம் பேசி மாஸ்க் அணியாதவர்களைப் பற்றி நமக்கு என்ன கவலை... வீட்டை விட்டு வெளியே வந்து பொது மக்களுக்குத் தொந்தரவாக இல்லாத வரை நல்லதுதான்.

    எஸ் பி பி, நிறைய புகைத்து, அதறால் குரல் பாதிக்கப்படவில்லை என்றார். பாவம் கொரோனா ஏற்கனவே வீக்காயிருந்த அவர் லங்ஸை பதம் பார்த்துவிட்டது. சிகரெட் பழக்கம் இல்லாமலிருந்தால் அந்த நல்ல ஆத்மா இன்னும் இருபது வருடங்களுக்கு மற்றவர்களுக்கு தன் குரலினால் சந்தோஷத்தைப் கொடுத்துக்கொண்டிருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம்எஸ் பி பி க்கு கோவிட் நெகட்டிவ் ஆகிவிட்டது என்றார்கள்.  ஆனால் அதனால் வந்த பாதிப்பால்தான் அவர் மரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

      நீக்கு
  37. கொரோனா தடுப்பூசி குறித்த தங்கள் விளக்கங்கள் நன்று. நம் மக்களுக்கு இன்னும் சரியான புரிதல் இல்லை என்பது வருத்தமான விஷயம் தான். எனக்குத் தெரிந்த சிலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பதற்கு, அவர்கள் புரளிகளை நம்புவதே காரணமாக இருக்கிறது. சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  நான் போட்டுக்கொண்டேன் என்று தெரிந்தபிறகு எங்கள் அலுவலகத்தில் மூன்று பேர் போட்டுக்கொண்டார்கள்.  இன்னும் இரண்டு  பேர் வரும் வார இறுதிக்காகக் காத்திருக்கிறார்கள்!

      நீக்கு
  38. செய்திகளை ஒரு கட்டுரை போல கோர்வையாகச் சொல்லும் திறமை உங்களிடம் இருக்கிறது. பதிவர்களுக்கு மிகவும் தேவையான ஓர் ஆற்றல் இது. நிறைய எண்ணங்கள் (சிலருக்கு சிந்தனைகள்) நம்மில் படிந்து இருக்கலாம். அவற்றை வெளிப்படுத்த பேச்சுத் திறமை வேண்டுமல்லவா? அது போலத் தான் நினைப்பதைக் கோர்வையாக எழுத்துக்களால் வெளிப்படுத்தும் திறமையும். இது காலத்தின் கட்டாயம் என்றே நினைக்கிறேன். வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்.  நீங்கள் தனியாரின் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது பி பி மற்றும் முன் சோதனைகள் செய்தார்களா?

      நீக்கு
    2. தனியார் மருத்துவமனையில் என்று இருக்க வேண்டும். நான் போட்டுக் கொண்டதும் கோவிஷீல்ட் தான். இணையத்தில் பதிவு செய்து, செளகரியப்பட்ட மருத்துவமனை, செளகர்யமான நாள் என்று எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொண்டு தான். தடுப்பூசி போட்டுக் கொண்டதும் டிராஃபிக் ஜாமில் மாட்டிக் கொள்ளாமல கூடிய விரைவில் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது இருந்தது. அதனால் வீட்டுக்கு வெகு அருகாமையில் இருக்கும் அவசரத் தேவைகளுக்கான உதவிகள் நிறைந்த மிகப் பெரிய மருத்துவமனையைத் தேர்வு செய்தேன். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு
      ஓய்வெடுத்துப் போக வசதி இருந்தது. அந்த நேரத்தில் பிபி செக் அப், ஆக்ஸிமீட்டர் செக் அப் -- இந்த இரண்டு சோதனைகள் மட்டும் செய்தார்கள்.

      நீக்கு
    3. மார்ச் 6-ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அடுத்த இரண்டு நாட்களில் ஒரு மாதிரியான தலைவலி மட்டும் இருந்தது. பாரசெட்மால் மாத்திரைகள்
      நான்கை தலைவலி, காய்ச்சல் இருந்தால் மட்டும் உபயோகியுங்கள் என்று
      தடுப்பூசி போட்டுக் கொண்ட அன்றே மருத்துவமனையில் கொடுத்திருந்தார்கள். அவற்றை இரு வேளைகளுக்கு மட்டும் உபயோகித்தேன்.

      ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு மாதிரி. அதனால் எல்லோருக்கும் பொதுவான ஒன்று என்று ஏதுமில்லை என்றே நினைக்கிறேன். முக்கியமாக இந்தத் தொற்று நுரையீரலைத் தாக்கும் வியாதி என்பது மாதிரியே அறிகிறேன்.
      தடுப்பூசி போட்டுக் கொண்ட குறைந்தபட்சம் 15 நாட்கள் கழித்தே ஊசி போட்டுக் கொண்டதின் பலன் ஏதாவது வெளிப்படத் தெரியலாம். பெரும்பாலும் கட்டியாக கோழை எப்பொழுதாவது வெளிப்படுகிற மாதிரி. அந்த மாதிரி வெளிப்படுவதற்காக உள்ளூர இந்த தடுப்பூசி மருந்து வேலை செய்கிறதோ என்ற எண்ணமும் எனக்குண்டு.

      மற்றபடி லேசான உடல் அசதி இருக்கிறது. இந்த மாதிரி லேப்டாப் முன் உட்கார்ந்து பதிவுகள் வாசிக்கிற பதிலளிக்கிற நேரங்கள் அந்த அசதியை மறக்கிறோம் என்பதே உண்மை. ஆனால் அப்படியான நேரங்களில் மிதமான ஒரு தூக்கம் அந்தத் தூக்த்திற்குப் பின் இரு மடங்கு சக்தியும் உற்சாகமும் கிடைப்பதாக என் உணர்வு. உணர்வு தானே தவிர இது என் மனப்பிரமையாகவும் இருக்கலாம். பதிவுகள் எழுதும் பொழுதும் பதிவுகளை வாசிக்கும் பொழுதும் இது நாள் வரை எனக்கு சோர்வே ஏற்பட்டதில்லை. இப்பொழுதெல்லாம் கொஞ்சம் தூங்கி எழலாமோ என்று தோன்றுகிறது. வயது மூப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

      அடுத்த ஊசிக்குக் காத்திருக்கிறேன். அது சில நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது.

      நீக்கு
    4. தனியார் மருத்துவமனையில் என்றுதான் இருக்க வேண்டும்.  சிலர் தனியார் மருத்துவ மனையில் முன் சோதனைகள் செய்வதில்லை என்று சொன்னார்களே என்றுதான் உங்களைக் கேட்டேன்.  அங்கும் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

      ஊசி போடத்தான் பின்விளைவு இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்று சொல்வார்கள்.

      நன்றி ஜீவி ஸார்..   உங்கள் அனுபவங்களை சொன்னதற்கு.

      நீக்கு
    5. தடுப்பூசி போடுவதற்கு முன், முன் உடற் சோதமைகள் இங்கும் ஏதும் செய்யவில்லை. தடுப்பூசிபோட்ட பின்னால் தான்.

      நீக்கு
  39. நல்ல தகவல்கள் நிறைந்த பதிவு.
    பாங்க் கொள்ளையை தடுப்பதை குறித்த ஆலோசனையை யாராவது பின்பற்றியிருக்கிறார்களா?
    முஸ்தஃபா என்னும் கஸ்தூரி ரங்கனின் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  40. ஆஆஆஆஆஆஆ இதென்ன இது ஸ்ரீராம், கந்திருஸ்டிக்காகவோ முதல் படம், எனக்குக் கனவா வந்து துலைக்கப் போகுதே ஹா ஹா ஹா...

    கொரொனா பற்றி பல பேச்சுக்கள் அடிபட்டாலும், வக்சீன் போடுவதால் நிறையவே கட்டுப்பாட்டுக்குள் வந்திட்டுது எனத்தான் தெரிகிறது.. என்ன இருந்தாலும் இனி அடுத்த 2022 யூன் வரை கவனமாகவே இருக்க வேண்டுமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கொரொனா முழுமையாக கட்டுப்பாட்டுக்கு வரப்போகிறது. ஆனால் அடுத்த கொரோனா-2, கொரோனா-3 அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

      நீங்க 2222 யூன் என்று எழுத நினைத்தீர்களோ?

      நீக்கு
    2. கட்டுப்பாட்டுக்குள் எங்கே வந்ததது அதிரா?  இங்கு ஆட்டமாய் ஆடிக் கொண்டிருக்கிறது.

      நீக்கு
    3. // நீங்க 2222 யூன் என்று எழுத நினைத்தீர்களோ? //


      :))))))

      நீக்கு
    4. மீ தேம்ஸ்க்கே ஓடிடுறேன்ன்ன்ன்:) நேக்கெதுக்கு ஊர் வம்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊ சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்:)

      நீக்கு
    5. இங்கே இன்றைய செய்தித்தாளில் ஏதோ நூறு நாட்களில் கோரோனோ போகும் என்று ஜோசியம் சொல்லி இருக்கிறார்கள்!!!

      நீக்கு
  41. "இயற்கை வைத்தியர்" டைட்டிலைப் பார்த்ததும் எனக்கு, வாரத்துக்கு ஒரு 'அடைமொழி' வைத்துக்கொள்ளும் அதிராதான் நினைவுக்கு வருகிறார்.

    நூறு வருடங்கள் வாழ்வது எப்படி என்று எழுதத் தெரிந்த தமிழ்வாணனுக்கு, தான் எப்படி நூறு வருடங்கள் வாழுவது என்று புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எழுதுவதெல்லாம் மற்றவர்களுக்குதானே!

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவர் இப்போ எதுக்கு அதிராவைச் சொல்கிறார்:)... வாரத்துக்கு ஒண்டில்லை ரெண்டாக்கும்:)... ம்ஹூம் வரலாறு முக்கியம் நேக்கு:)

      நீக்கு
  42. தடுப்பூசிக்கான வயது நிர்ணயங்கள்மருந்து கையிருப்பை பொறுத்ததுஎன்றே தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் சகோதரரே

    மலேசியா விமானம் குறித்த தங்கள் கவிதை நன்றாக உள்ளது. நாம் தேடிக் கொண்டிருக்கையில் அது விமான நிலையத்திலேயே வந்து அமர்ந்து விட்டதோ?நல்ல கற்பனை.. கணையாழி கவிதையும் நன்றாக உள்ளது. இரண்டையும் ரசித்தேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா..   ஒருவேளை அங்கு ஒளித்து வைத்திருக்கிறார்களோ என்று பார்த்தேன்!

      நீக்கு
  44. ////பிபி மெஷின் எனக்கு 155/100 என்றது. பக்கத்து வீட்டில் வாங்கிப் பார்த்தபோது 142/110 என்றது. கீழ் வீட்டில் வாங்கிப் பார்த்தபோது 132/90 என்றது..////
    மேல் வீட்டையும் எதிர் வீட்டையும் விட்டிட்டீங்களே ஶ்ரீராம்:)...

    அது சரி அங்கு free ஆ இல்ல காசோ வக்சீன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..   எதிர்வீடு இல்லை.  மேல்வீட்டில் மெஷின் இல்லை!   இங்கு காசுக்கும் உண்டு என்றாலும் நான் இலவசமாகத்தான் போட்டுக்கொண்டேன்.

      நீக்கு
  45. நான் இரண்டு டோஸும் போட்டாச்சு pfizer வேக்சின் .ஹெல்த் கேர் இல் இருப்பதால் கட்டாயம் முதலில் நாங்க போட்டேயாகணும் .இங்கே ஹெல்த் கேர் நர்ஸுகள்  ஹைலி  vulnerable மக்கள்  அப்புறம் 90 ,80 ,70 ,60 50 என்று வரிசைக்ரயமா வந்து இப்போ 45 -55 இல் இருப்போர் போட்டுக்கறாங்க .இங்கும் பல குழப்பவாதிகள் .எனக்கு தெரிந்த முதுநிலை நர்ஸ் மற்றும்  கத்தோலிக்கர் சிலர் போடவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க இவர்கள் மருத்துவத்துறை சார்ந்தோர் .சிலருக்கு சொல்லியும் புரியவைக்க முடியாது .ஹாஸ்பிடலில் முதல் பேட்ச் ஆசியர் நான் அந்த மருத்துவர் கேட்டப்போ தைரியமா சொன்னேன் என்ன ஆனாலும் பரவால்லன்னு :) ஒரு உறவினருக்கும் சொல்லலை :)  .
    ஊசி போடாதது அவரவர் விருப்பம் அதற்காக பிறரை போட வேணாம்னு தங்கள் கருத்தை வலியுறுத்தக்கூடாது .உண்மையில் எனக்கு ஊசி போட்ட இடம் மட்டும் லேசா வலிச்சது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு டோஸையும் போட்டு முடித்து கடமையை முடிக்கும் நாளுக்காக நானும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.  முதலில் நானும் தயங்கினேன்.  பிறகு போட்டுக்கொள்வது என்று முடிவெடுத்து விட்டேன்.  என்னைப் பொறுத்த வரை அலைச்சல் பிரச்னைதான்!

      நீக்கு
  46. தல ரசிகர்களே இங்கே ஒருவர் வலிமையா இருக்காராம் :) சீக்கிரம் இங்கேயும் வந்து வலிமை அப்டேட் கேளுங்கள் :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தல, தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்று அலப்பறை காட்டுவார்.  அப்போது கேட்கலாம்!

      நீக்கு
  47. எனக்கு உண்மையா போன வருஷம் மார்ச் 29 -ஏப்ரல் 30 வரை நினைவு அழிஞ்சா நல்லா இருக்கும் .என் பொல்லா நேரம் ஒவ்வொன்றும் அப்படியே அழியாமா அந்த காட்சிகள் கண்முன் வருது :( 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு கொரோனா வந்த நேரமா?   அது என்னவோ துன்ப நினைவுகள் மட்டும் லேசில் அழிவதில்லை!

      நீக்கு
  48. அந்த சீனாக்காரருக்கு இவ்ளோ பயமா :) ஹாஹாஆ பாவம் .நல்லவேளை நான்லாம் 10 வயதில் டாக்ட்டரை அடிச்சு உதைச்சதோட சரி அப்புறம் அடங்கிட்டேன் .இந்த வேக்சினுக்கும் ஊசிகூட பார்க்கலை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாட்களுக்கு முன்னரே வந்த காணொளி இது.  அடிக்கடி போட்டுப்பார்த்து ரொம்ப ரசிப்பேன்.  இந்த டிச்ட்டுக்குப் பொருத்தமாக இருந்ததால் சேர்த்து விட்டேன்.  நிறைய பேர் காணொளி பார்க்கவில்லை போல!

      இன்னொரு சிறுவன் காணொளி இருக்கிறது.  அம்மாவிடம் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் சிறுவன்.  பாவமாய் இருக்கும்.  அதுவும் அழிக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  49. எனக்கும் நரிக்குட்டி ஒன்று வளர்க்க ஆசையாத்தான் இருக்கு :) வேறே வீடு மாறினா சான்ஸ் உண்டு :)

    பதிலளிநீக்கு
  50. கவிதை நல்லா இருக்கு :)நீங்க விமானத்தை தேடினதும் இஸ்ரோ கஸ்தூரி ரெங்கன் அய்யாவின் சுருட்டு நரக  கவிதையும் 

    பதிலளிநீக்கு
  51. நான் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன்

    பதிலளிநீக்கு
  52. அந்தக் கவிதையில் ஒரு twist இருந்திருந்தால் அழகாக இருந்திருக்கும்.

    'சுருட்டைப் புகைத்து
    சொர்க்கம் காண்கையில்
    நானே எரிந்து
    நரகம் போனேன்..' என்பதன் முடிவில்

    நானே எரிந்து
    நரகம் போனது
    தெரிந்திருக்கவில்லை

    -- என்றிருந்தால் கவிதைக்கு ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும்.

    சொர்க்கம் காணும் பொழுது அந்த சொர்க்கத்திற்கு எதிரான நரகம் தெரியாது போனது தான் கவிதை கொடுக்கும் செய்தியாக இருந்திருக்க வேண்டும். ஒன்றைக் காணும் பொழுது அதற்கு எதிரான ஒன்றுக்குப் போக முடியாது என்ற பொருட் குற்றம் இந்தக் கவிதையில் இருக்கிறது.

    கலாப்ரியா?.. பொம்பளை டிக்கெட்டில் படம் பார்க்கும் வழக்கம் கொண்டிருந்ததைப் பற்றி அவரே ரசித்து எழுதியிருப்பதை இன்னொரு தடவை கலாப்ரியா பற்றி நீங்கள் குறிப்பிடும் பொழுது விவரமாகச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கோடு போட்டிருக்கிறார்.  ஒவ்வொருவராக ரோடு போடவேண்டியதுதான்!  இந்தக் கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது ஜீவி ஸார்.

      நீக்கு
  53. ஜெயக்குமார் சந்திரசேகர் ஸாரைக் காணோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      ஆமாம்.... இன்றைய பதிவுக்கு சகோதரர் கில்லர்ஜி அவர்களையும் காணோமே..ஸ்வாரஸ்யமான அத்தனை கருத்துரைகளையும் படித்து விட்டேன். நன்றி.

      நீக்கு
    2. ஆமாம்...   கில்லர் ஜியையும் காணோமே...

      நீக்கு
  54. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தில் மேலும் பல விஷயங்கள் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. விமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்தியர் என்பதை எங்கோ படித்த நினைவு. இன்று பெயருடன் விபரமாக அறிந்து கொண்டேன்.

    ஞாபக மறதியை போக்க செய்ய வேண்டிய விதிமுறைகள் அருமை.

    தமிழ் பல் பொடி பற்றி படிக்கவே இயலவில்லை. அதில் என்னவெல்லாம் மூலிகைகள் கலந்துள்ளன என்பதை படிக்கலாம் என நினைத்தேன். (ஒரு வேளை அந்த பல்கொட்டிப் பேய் நன்றாக படித்திருக்குமென நினைக்கிறேன்.:)))

    பாங்க் கொள்ளையை தவிர்க்க கொடுத்திருக்கும் ஐடியா நன்றாக இருக்கிறது. அனைத்தும் நீல நிறமாக மாறி விட்டால் அப்புறம் அந்த கறை படிந்த பண நோட்டுகள் செல்லுமா? போன வாரம் ஒரு பழைய (தெலுங்கு) பாங்க் கொள்ளை சம்பந்தபட்ட படம் பார்த்தது நினைவுக்கு வந்தது. அத்தனை பகிர்வினுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..   ஒவ்வொன்றாக ரசித்துப் படித்து கருத்து கூறுவது பிடித்திருக்கிறது.  எனக்கு இந்த மறதிப் பிரச்னைகள் நிறைய இருக்கின்றன.  இது முன்னர் பகிர்ந்து.  இன்னொன்று டெமென்ஷியா பற்றி..   அதைப் பின்னர் பகிர்கிறேன்.

      மொபைலில் படிப்பதால் பல்பொடி பற்றி சரியாகப் படிக்க முடியவில்லையோ...

      நீலநிறம்...  பங்குக்கும் கொள்ளைக்கும் நீலநிறம் என்று பாடியிருப்பர்களோ!

      நீக்கு
  55. கல்லுகமும் கையுமாய் தமிழ்வாணனின் படம் போட்ட அட்டைப்படங்கள் அந்நாட்களில் கல்கண்டை நிறைக்கும். குமுதம் எஸ்.ஏ.பி. தான் யார் என்று தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தால் என்றால் அதற்கு நேர் எதிர் தமிழ்வாணன். சளைக்காமல் தன் புகைப்படங்களை மட்டும் அட்டையில் போட்டு பத்திரிகை நடத்திய ஆசாமி அவர்.
    யாரைப் பற்றி என்ன எழுதினாலும் அதற்கு எதிர்ப்பே இல்லாமல் ஜெயக்கொடி நாட்டியவர் அவர். யாருக்கும் விலை போனதில்லை என்பதினால் அந்த தீரம் அவரிடம் இருந்தது. அவர் உபயோகித்த சில வார்த்தைகள் சிரஞ்சீவித்வம் பெற்றிருக்கின்றன. எம்.ஜி.ஆரை. மக்கள் திலகம் என்று அவர் அழைத்தது அதில் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் ஜி ஆர் தொப்பி போல அவர் தொப்பியும் பேமஸ்.  முகமே தேவை இல்லை.  தொப்பி மட்டும் போட்டால் போதும்!  எதிர்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது.  எதிர்ப்புக்கு கடிதங்களை அவர் பிரசுரிப்பதில்லை என்று சொல்லலாம்.  மனநல கட்டுரைகள், உடல்நல  கட்டுரைகள் என்று இஷ்டத்துக்கு நிறைய எழுதி இருக்கிறார்!

      நீக்கு
    2. இல்லை, ஸ்ரீராம். வெளிப்பட எதிர்ப்பு தெரிந்ததில்லை என்பது தான் உண்மை.
      கல்கண்டில் அவர் எழுதுவதற்கே இடம் போதவில்லை. கேள்வி-பதில் பெரும் பகுதியை அடைத்துக் கொள்ளும். மற்ற பத்திரிகைகள் மாதிரி வாசகர் கடிதங்களையெல்லாம் பிரசுரித்ததாக நினைவில்லை. பொதுவாக கதைகள் எல்லாம் வெளியிடும் வழக்கம் இருந்ததில்லை. அதிசயமாக என் முதல் கதை கல்கண்டில் தான் பிரசுரமானது. விமானத்தில் எழுந்த விம்மல்கள்' என்பது கதையின் பெயர். ரவீந்தர் என்பவர் துப்பறியும் தொடர் ஒன்று எழுதியது நினைவிலிருக்கிறது. மற்றபடி முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை அவர் தான் எல்லாம். அவருக்காகவே குமுதத்திற்கு சரிசமமாக கல்கண்டும் விற்பனையாயிற்று.

      நீக்கு
    3. ரவீந்தரும் ராண்டார்கையும் ஒருவரா? தமிழ்வாணன் எழுதும் காணக்கிடைக்காத பணம் என்ற கதை அடுத்த இதழிலிருந்து ஆரம்பம் என்று விளம்பரம் பார்த்தேன். பேஸ்புக்கிலும் பகிர்ந்தேன். மர்மக்கதை அல்ல அது.

      நீக்கு
    4. ரவீந்தர் வேறு - ராண்டார்கை வேறு. Raandargui = Rangadurai.

      நீக்கு
    5. அப்புறம் ஸ்ரீராம், புலித்தேவன் என்ற முதல் சுதந்திரப் போராட்ட வீரனை தமிழுலக்கிற்கு முதன் முதல் அறிமுகப்படுத்தியவர் அவர் தான். (பூலித்தேவன் அல்ல; தமிழ்வாணன் உச்சரித்தது புலித்தேவன் என்றே) அதே மாதிரி கட்டபொம்மனை, கெட்டிபொம்மு என்பார் அவர்.

      நீக்கு
    6. ஒஹோ... எங்கள் வீட்டு கலெஷனில் புலித்தேவன் இல்லை!


      நன்றி KGG.

      நீக்கு
  56. //இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன... //

    சமஸ்கிருதத்தில் தானே?.. கேட்கவே வேண்டாம்.. அத்தனை அலர்ஜி!

    பதிலளிநீக்கு
  57. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பலருக்கு பதட்டத்திலும் BP அதிகரிப்பது நடக்கிறது. போட்டுக் கொண்டது நல்லதாயிற்று. Take care. மாஸ்க் அணிந்து கொள்வதில் மக்கள் காட்டும் அலட்சியம் கவலைக்குரியதாயினும் தாங்கள் அதைச் சொல்லிய விதம் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது:). அல்சீமர் பற்றியத் தகவல்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிபியைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஊசி போடு விட்டார்கள்!   நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  58. தடுப்பூசி போட்டுக் கொள்ள அடம்பிடிக்கும் குழந்தை போல் காணொளி முன்பே பார்த்து இருக்கிறேன் இருந்தாலும் மீண்டும் பார்த்து சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அக்கா.  நான் எனது வைத்திருக்கும் இரண்டு மூன்று விடீயோக்களில் இதுவும் ஒன்று!

      நீக்கு
  59. இயற்கை வைத்தியர் தமிழ்வாணன் தமிழ்பல் பொடி, கேள்வி பதில் செய்தி, மற்றும்
    கொள்ளையரைப் பிடிக்க நூதன வழி... 1963 ஸ்டைல்.. எல்லாம் நன்றாக இருக்கிறது படிக்க.
    பதிவு பெரிது என்பாதால் இன்று படித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!