செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

சிறுகதை : சக்கரம் - துரை செல்வராஜூ

 சக்கரம்..

துரை செல்வராஜூ 

*** *** ***
" ஐயா.. ஐயா.. "

வாசலில்  குரல் கேட்டது..

பூஜை மாடத்தில் தூபம் இட்டுக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் ஒரு விநாடி நிதானித்தார்கள்..

" காமாட்சி நீ இரு.. நான் பார்த்துட்டு வர்றேன்... "

கம கம.. என்று கமழ்ந்த புகையின் ஊடாக வாசலுக்கு நடந்தார் குருசாமி..

" யாரம்மா!.. "

கேள்விக்கு விடையாக தலை வாசலில் அந்தப் பெண்..

புரிந்து விட்டது... நாலைந்து நாட்களாக இட்லி மாவு வாங்கிக் கொண்டிருந்த பெண்.. ஆறரை மணியைப் போல நாளும் வருவாள்.. ஒரு பாக்கெட் மாவை எடுத்துக் கொண்டு  ததும்பும் புன்னகையுடன் இருபது ரூபாயைக் கொடுத்து விட்டு செல்வாள்..

இரண்டு நாட்களாக இட்லி மாவு போடவில்லை.. என்னென்று விவரம் கேட்பதற்கு வந்து விட்டாள்.. இப்படியும் ஒரு பாசம்..

சட்டென விரைந்து - " உள்ளே வாம்மா!.. "  - என்றார்..

" இருக்கட்டுங்க ஐயா.. இன்னிக்கும் மாவு இல்லையா?.. "

அதற்குள் தூபத்துடன் கூடத்துக்கு வந்த காமாட்சியம்மாள் - 

" வாம்மா!... விளக்கு வச்ச நேரம்.. உள்ள வந்து உட்காரும்மா!.. " - என்றார்கள்..

இதற்கு மேல் மறுத்துப் பேசாம வழியில்லாமல் கூடத்துக்குள் வந்த அந்தப் பெண் அங்கிருந்த நாற்காலியில் பட்டும் படாமலும் அமர்ந்தாள்... 

தூப ஆராதனையை முடித்த காமாட்சியம்மாள் கையில் தட்டுடன் வந்தார்கள்.. விபூதி குங்குமமும் சிறிய வாழையிலையில் சில மோதகங்களும் இருந்தன..

" நல்லா உக்கார்றது.. நம்ம வீடு தானே!.. "

பல வருடங்கள் பழகிக் கனிந்ததாக வார்த்தைகள்..


" உங்களுக்கு எதற்கம்மா சிரமம்!.. "  என்றாலும் தயக்கமின்றி விபூதி குங்குமம் பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு புன்னகைத்தாள்...

பெரியவர் குருசாமி அழகான குவளையில் தண்ணீர் கொணர்ந்து வைத்தார்..

" என்னங்க ஐயா... மாவு பாக்கெட் தீர்ந்து போயிடுச்சா?.. "

" இல்லேம்மா... போடலை!.. "

" ஏன்?.. " 

குருசாமியும் காமாட்சியம்மாளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.. காமாட்சியம்மாள் மெதுவாகப் பேசினார்கள்..

" நாங்க இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாசம் தான் ஆகுது.. இந்த மெயின் ரோடு முழுக்க காய்கறியும் இட்லி மாவுக் கடையுமா இருக்குறதைப் பார்த்துட்டு நாமும் கைத் தொழிலா செய்வோமே.. ந்னுட்டு எங்க வீட்டுக்கு செய்ற மாதிரி செஞ்சோம்... யாருக்கும் போட்டி.. ன்னு கிடையாது.. மாவு நல்லா இருந்ததால நாலு பேர் வந்தாங்க.. அப்புறம் பத்து பேர் வந்தாங்க.. ரெண்டு நாள் முந்தி வரைக்கும் எழுவது பாக்கெட் வித்தது.. எங்களுக்கும் ஒரு ஆதரவு..  நாலு மக்க மனுசரைப் பார்க்கிற மாதிரியும் இருந்தது.. நேத்து காலைல... " 

நிறுத்திய காமாட்சியம்மாள், " இரும்மா... காஃபி எடுத்துக்கிட்டு வர்றேன்.. " -  என்றார்கள்..

" அம்மா!.. " 

" ஒன்னும் சொல்லக் கூடாது.. இது வீட்டுப் பால்... திருவையாத்துல இருந்து வருது.. "  - என்றபடி உள்ளே சென்ற காமாட்சியம்மாள் சிறிது நேரத்தில் காஃபியுடன் வந்தார்..

அந்தப் பெண்ணின் கையில் ஒரு குவளையும் கணவர் கையில் ஒரு குவளையும் கொடுத்தார்..  தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்தபடி,

" இத்தனை நாழி ஆச்சு.. பேரு என்னா... ன்னு கேக்கலை!.. " - என்றார்..

" திவ்யா.. " - மீண்டும் புன்னகை..

" நேத்து காலைல ஆறேழு பேரு ஆணும் பெண்ணுமா வந்தாங்க..
ஆ.. ஊ.. ன்னு சத்தம் போட்டுட்டு போயிருக்காங்க.. " 

" எதுக்காகவாம்?.. " - திவ்யா..

" அவங்க எல்லாம் இந்த மெயின் ரோட்ல ரொம்ப வருசமா தொழில் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.. நாங்க நல்ல மாதிரியா மாவு போடறதால அவுங்களுக்கு சரியாப் போகலையாம்.. அதனால.. "

" அதனால.. உங்கள மாவு போடக் கூடாது.. ன்னு சொல்லிட்டாங்க..  இல்லையா!.. "  - திவ்யாவிடம் புன்னகை..

" நம்மால எல்லாம் அந்த ஜனங்களோட  மல்லு கட்ட முடியாதும்மா..  சரி.. பார்த்துக்கலாம்... ன்னு விட்டுட்டோம்.. அது கிடக்கட்டும்.. திவ்யாவைப் பத்தி ஒன்னும் சொல்லலையே!.. " 

" அவங்க பெங்களூர்ல வேலை பார்க்கிறாங்க... கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு.. அம்மா தாம்பரத்துல அண்ணன் கூட  இருக்காங்க.. மற்றபடி நாத்தனார் மட்டும் தான்..  எம்சிஏ படிக்கிறாங்க.. ஹாஸ்டல்.. ல சேர்க்கிறதுக்கு இஷ்டம் இல்லை.. எங்க கூட தான் இருக்காங்க.. பெங்களூர்..ல இருந்து அவங்க வெள்ளி சனி வந்து இருந்துட்டு மறுநாள் கிளம்பிடுவாங்க.... இப்போதைக்கு எங்களுக்கு நாங்க தான்.. ரெண்டு வருஷமா ஓடிக்கிட்டு இருக்கு.. இது இருக்கட்டும்.. ஐயா இதுக்கு முன்னால நீங்க என்ன செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?... "

திவ்யா சட்டென செல்போனை எடுத்து  டயல் செய்தாள்..

" பாரதி... இதோ  வந்துடறேன்.. நூடுல்ஸா.. அதெல்லாம் வேண்டாம்!... சரி.. சரி!.. " - என்றபடி எழுந்த திவ்யா, 

" சொல்லுங்கம்மா!.. அதனால மாவு போடலை!.. " - புன்னகைத்தாள்..

" சரி.. நான் கிளம்பறேன்.. பாரதி தனியா இருக்கிறாள்!.. " - என்றவள்,

" அடடே.. உங்க கதையைக் கேக்காம போறனே..  தூக்கம் வராதே!.. " 
மறுபடியும் அமர்ந்தாள்.. உடன் பிறந்த புன்னகை முகத்தில் ஒளிர்ந்தது..

" என்னங்க.. நீங்க சொல்லுங்க!.. " 

-  என்றபடி, உள்ளே சென்ற காமாட்சியம்மாள் சில நிமிடங்கள் கழித்து கையில் எவர்சில்வர் வாளியுடன் வந்தார்கள்..

குருசாமி ஐயா பேசிக் கொண்டிருந்தார்..

" அங்கே காளியம்மன் கோயில் வீதியில பதினைஞ்சு வருசமா..
வாழப்பழக்கடை.. கூடவே அர்ச்சனை தட்டுகளும் வச்சிருந்தோம்..  பூ மாலை கீழவாசல் மார்க்கெட்ல இருந்து வந்துடும்.. இவ்வளவு நாள் கழிச்சு திடீர்.. ன்னு ரோடு பெரிசா போடப் போறோம்.. ன்னு  ஹைவேஸ்.. ல இருந்து கடப்பாரையோட வந்துட்டாங்க...  டீக்கடை, பழக்கடை.. ன்னு இருபது கடைங்க.. எதுக்கும் பட்டா கிடையாது.. எல்லாம் பஞ்சாயத்து போர்டு எடம்... நம்ம கிட்ட ரெகார்டு ஒன்னும் கிடையாது.. வருசா வருசம் வரி.. ன்னு கொடுத்த பணத்தை எல்லாம் வாய்.. ல போட்டுக் கிட்டுப் போய்ட்டானுங்க.. தர்றேன்.. தர்றேன்.. ன்னு சொல்லி ஏமாத்திட்டானுங்க.. இனிமே ஒன்னும் கேக்க முடியாது.. ஒன்னும் செய்ய முடியாது.. ன்னு  இங்கே குடி வந்துட்டோம்.. மூனு லட்சம் கொடுத்து மூனு வருச ஒத்திக்கு இந்த வீட்டை எழுதியிருக்கு.. "

" கூட யாரும்?.. "

" ஒரு பொண்ணு ஒரு பையன்.. பெண்ணுக்கு கல்யாணம் ஆகி சிதம்பரத்துல இருக்கா.. பையன்  கம்பியூட்டர் படிச்சிட்டு துபாய்க்குப் போயி நாலு மாசம் ஆகுது.. பணம் எல்லாம் அனுப்புறான்.. சிக்கனமா செலவு  செஞ்சுட்டு அவன் பேர்ல போட்டு வெச்சிருக்கோம்... இது எங்க கைச் செலவுக்கு.. ன்னு பார்த்தோம்!.. "

" சரிங்க ஐயா.. நான் கிளம்பறேன்.. நீங்க என்ன செய்றீங்க.. ன்னா!... "  

திவ்யாவின் புருவங்கள் யோசனையில் நெரிந்தன..

" என்னம்மா செய்யனும்?.. "

" நாளைக்குக் காலை.. ல அரிசி உளுந்து ஊறப் போட்டு சாயங்காலம் மாவு அரைச்சி வைக்கிறீங்க!... "

" எந்த தைரியத்துல மாவு அரைச்சி வைக்கிறது?.. அவனுங்க தான் வந்து மிரட்டிட்டுப் போயிருக்கானுங்களே!.. "

" சட்டமும் தர்மமும் நம்ம பக்கம்..  ங்கற தைரியத்துல செய்ங்க.. "

" எனக்கு ஒன்னும் புரியலையே தாயீ!.. "

" அவனுங்களுக்குப் புரியற மாதிரி பேச நேரம் வந்துடுச்சு.. ன்னு சொல்றேன்... "

" அப்படின்னா.. நீ.. நீங்க?... "

" நான் கலெக்டர் ஆபீஸ்..ல ... " - என்ற திவ்யா - தனது வேலை  விவரத்தைச் சொன்னதும் பெரியவர்கள் இருவரும் மிரண்டு போனார்கள்..

தட்டுத் தடுமாறிய குருசாமி பேசினார்..

" காசு கொடுத்தமா.. மாவு வாங்குனமா.. ன்னு இல்லாம இப்படியொரு கரிசனமா!.. இருந்தாலும் இந்த மாதிரி
அதிகாரத்தை வச்சி அடக்குறது தப்பு இல்லையா?.. நாம வாழறதுக்காக பிறத்தியாரை... "

" தப்பே இல்லீங்க... ஐயா!.. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.. ன்னு சொல்லுவாங்க... அன்னம் தெய்வத்துக்கு சமம்.. நேத்து கூட வேற ஒரு ஏரியாவுல பிரச்னை - பிரியாணியில பூச்சி கிடந்தது.. ன்னு.. இவனுங்களை சும்மா விடக்கூடாது..  நான் கொடுத்த பணத்தை விட நீங்க கொடுத்த மாவுக்கு மதிப்பு அதிகம்.. அதுக்கும் மேல நீங்க காட்டுன அன்பு.. அதுக்கு நான் ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டாமா?.. உங்கள மாதிரி நல்லவங்களுக்கு ஒத்தாசையா இருக்க வேண்டாமா?.. "

பெரியவர்கள் இருவரும் திகைத்து இருந்தனர்..

" நம்ம விரல் தான்.. ஆனாலும் நகத்தை வெட்டி வைக்கிறோம் இல்லையா!.. தர்மச் சக்கரம்.. ன்னு சொல்லுவாங்க.. ஆனா,  ஒவ்வொரு வண்டிக்கும் ஒவ்வொரு மாதிரியான சக்கரம் இருக்குதா இல்லையா!.. அந்த சக்கரம் தான் நாளைக்கு சுற்றப் போகுது!.. "

" கேக்குறதுக்கு நல்லாத் தான் இருக்கு!.. "

 " ஐயா.. நீங்க யோசிக்கவே வேண்டாம்..  எப்படிப் பேசினா அவங்களுக்கு புரியுமோ அப்படி பேசப் போறோம்.. அவ்வளவு தான்!.. நீங்க சிவனே.. ன்னு இருங்க.. அவங்க இனிமேல் உங்க வழிக்கே வர மாட்டாங்க... ஆனா.. எனக்கு நாளைல இருந்து மாவு வேணும்.. சொல்லிட்டேன்!... "
திவ்யாவின் முகத்தில் புன்னகை..

" நாளைக்கு என்ன நாளைக்கு.. இன்னைக்கே மாவு இருக்கு .. இந்தாம்மா!.. "

தன் கையில் இருந்த வாளியை திவ்யாவிடம் கொடுத்த காமாட்சியம்மாளின்  முகத்திலும் புன்னகை..

***

71 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை சிறுகுறு வியாபாரிகளின் வாழ்க்கை தடுமாற்றத்தை சொன்ன விதம் அருமை.

    திவ்யாவின் அதிகாரத்தால் இவர்களுக்கு நல்ல காரியம் நடக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.. நிச்சயம் நல்லது நடக்கும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    எல்லோருக்கும் கருட பஞ்சமி வாழ்த்துக்கள்.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. நல்லவர்களுக்காக, இறைவன் ஆபத்பாந்தவனாக, தன் உண்மை வடிவில் அல்லாது போனாலும், பிறர் வடிவில் வந்து உதவி செய்வான். இனி அந்த தம்பதியினர் முன்பு போல் நேர்மையான முறையில் மாவு வியாபாரம் செய்து தங்கள் வாழ்நாளை சிரமமின்றி கழிக்க பொருளீட்டலாம். சமயமறிந்து அவர்களுக்கு நல்ல உதவி செய்த திவ்யாவுக்கு பாராட்டுக்கள். நேர்மைக்கு என்றுமே பலன் நல்லதாகத்தான் அமையும் என்பதை சகோதரர் தன் சிறுகதை மூலம் அறிவுறுத்தி விட்டார். நல்லதொரு கதையை தந்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    கதைக்குப் பொருத்தமான ஓவியத்தை வரைந்து சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேர்மைக்கு என்றும் இறைவன் துணை வருவான்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. இனிய காலைப் பொழுது..

    அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  6. இன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    சித்திரத்தால் அழகு செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கதையை அனுப்பி வைத்து 4/5 மாதங்கள் ஆகின்றன..

    கதையில் திவ்யா சொல்கின்றாள் -

    //..ஐயா.. நீங்க யோசிக்கவே வேண்டாம்..  எப்படிப் பேசினா அவங்களுக்கு புரியுமோ அப்படி பேசப் போறோம்.. அவ்வளவு தான்!.. நீங்க சிவனே.. ன்னு இருங்க.. //

    இன்றைய தினமலரில் வந்திருக்கும் செய்தி:

    துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி கொடுக்க வேண்டும் என கொச்சியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக கவர்னர் ரவி பேசியுள்ளார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சரிதான். அவரவர்களுக்கு அவரவர்கள் மொழியில் சொன்னால்தான் புரியும்!

      நீக்கு
    2. //துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி//- அதுபோல பயங்கரவாதம் செய்பவர்களுக்கு யோகி கோன்று உடனடித் தீர்ப்பு புல்டோசர், சுத்தியல் மூலம் இரண்டு காலையும் பாத்ரூமில் வழுக்கிவிழச் செய்தல் என்று ட்ரீட்மென்ட் கொடுத்தால் நல்லாத்தான் இருக்கும். பள்ளியின் சொத்தைக் கொள்ளையடிக்கத் துணிந்தவர்களுக்கும், பஸ்ஸை எரித்த பயங்கரவாதிகளுக்கும் அதே ட்ரீட்மென்ட் கிடைத்திருந்தால்...

      நீக்கு
    3. சொல்லுக்கு சொல்.. கல்லுக்கு கல்..

      அது தான் இன்றைய நியாயம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் பிரச்னைகள் நீங்கி அமைதியான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  9. தற்கால நடப்பைச் சொல்லி இருக்கார் சகோதரர் துரை. என்றாலும் அதிகாரியான திவ்யா நல்லவற்றுக்குத் துணை போவது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. இம்மாதிரிப் பொறுப்பும் நற்குணமும் வாய்ந்த அதிகாரிகள் வேலைக்கு வந்து மக்களையும் நல்வழிப்படுத்தட்டும். நல்ல கரு. நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவர்கள் செயல்படுவதைத் தடுக்கும் அரசியலும் உண்டு..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  10. கதைப்படி காமாட்சி அம்மாள் முதியவர். திவ்யா இளையவர். ஆனால் படத்தில் காமாட்சி அம்மாள் இளையவராகவும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் திவ்யா முதியவராகவும் தெரிவது என் கண்களின் கோளாறாக இருக்குமோ? படங்களை நன்றாக வரைந்திருக்கும் திரு கௌதமன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா, எனக்கும் அப்படித் தோன்றியது.

      கீதா

      நீக்கு
    2. காமாட்சி தலைக்கு சாயம் பூசியுள்ளார்; திவ்யா இளையவராக இருப்பதால் மேக் அப் இன்றி காட்சியளிக்கிறார். மேலும் தோற்றத்தை வைத்து வயதை எடைபோடக் கூடாது!

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா கௌ அண்ணா!!!!!!!

      //திவ்யா இளையவராக இருப்பதால் மேக் அப் இன்றி காட்சியளிக்கிறார்.//

      ஹாஹாஹாஹா அப்ப வயசானவங்க இளமையா காட்டிக்க மேக்கப் போடறாங்கன்னு படத்துல காட்டிய கௌ அண்ணா!!! சூப்பர் போங்க!!

      ஹையோ நம்ம அருமை அண்ணன்/தம்பி நெல்லைய காணுமே...

      கீதா

      நீக்கு
    4. நான் காலையிலேயே கவனித்தேன்... அக்கா அதற்குள் முந்திக் கொண்டார்கள்..

      நீக்கு
  11. துரை அண்ணா கதை அருமை. நல்ல கரு.

    திவ்யா போன்ற நேர்மையானவர்கள் இருந்தால் நாடு நன்றாகிவிடுமே!!! திவ்யாவினால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவேண்டும்.

    யதார்த்தமான கதை. அழகான நடை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லுங்கம்மா!.. அதனால மாவு போடலை!//

      எதனால மாவு போடலை என்று வந்திருக்க வேண்டும் இல்லையா?

      கீதா

      நீக்கு
    2. நல்ல அலுவலர்களுக்குத் தான் முட்டுக் கல்லாக அரசியல் இருக்கின்றதே...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
    3. கதையில் வந்துள்ளது சரி என்று தோன்றுகிறது. அதற்குப் பிறகு வேறு subject பக்கம் உரையாடல் திரும்புகிறது.

      நீக்கு
    4. // சொல்லுங்கம்மா!.. அதனால மாவு போடலை!//

      பேச்சின் தொடக்கத்தில் விவரத்தை சொல்லி விடுகின்றார்கள்..

      தொடரும் பேச்சில் அதை மேற்கோள் காட்டிப் பேசுகின்றாள்..

      நீக்கு
    5. //சொல்லுங்கம்மா!.. அதனால மாவு போடலை!//

      வீட்டுக்குள் வந்ததுமே பிரச்னைகளைச் சொல்லியாயிற்று..

      திவ்யா பேச்சு தொடர்வதற்காக அப்படிக் கேட்கின்றாள்..

      நீக்கு
    6. // கதையில் வந்துள்ளது சரி தான்..
      அதற்குப் பிறகு வேறு பக்கம் உரையாடல் திரும்புகிறது.. //

      நீக்கு
  12. கௌ அண்ணா படம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு விஷ்யாம்....திவ்யா கொஞ்சம் வயதானவள் போலும், காமாட்சி அம்மாள் இளையவர் போலவும் தெரிகிறாரே...

    ஓ இதுவும் யதார்த்தமோ!! இப்பல்லாம் முதியவர்கள் ரொம்பவே இளையவராகவும் சின்ன வயசிலேயே பலரும் வயதானவர்கள் போல் இருப்பதாலும் கௌ அண்ணா அப்படி வரைஞ்சிட்டீங்களோ!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  13. திவ்யாவைப் போன்று நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டு தானே உதவும் மனம் கொண்டவர் அமைந்துவிட்டால் ஏதிலிகளுக்கு ஆறுதல்தான். நல்ல கதை. முடிவும் மகிழ்ச்சியை உண்டாக்கியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  14. நேர்மையாக உழைப்பவர்களையும் வாழவிடாமல் போட்டி போடும் உலகம்.
    தொடர்ந்து தொய்வில்லாமல் அழகாக கதையை நகர்த்தி செல்கிறார் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும்
      வாழ்த்துரைக்கும்
      நன்றி..

      நீக்கு
  15. இக்கதையை வாசித்ததும், அதுவும் திவ்யா கலெக்டர் ஆஃபீஸில் பணி என்ற வரியை வாசித்ததும், நேற்று நட்பு வருத்தத்துடன் சொல்லிய சம்பவம் நினைவுக்கு வந்தது. வாயில்லா ஜீவனைப் படுத்துகிறார்கள் என்று. அனானிமஸாக புகார் கொடுக்கலாம் என்று நினைத்தால் யார் படுத்துகிறார்களோ அவர் கலெக்டர் ஆஃபீஸில் பணிபுரிவர் என்பதால் வம்பு வம்பு வேண்டாம் என்று விட்டுவிட்டதாகவும் சொன்னார்.

    அதைக் கேட்டதிலிருந்து மனம் எனக்கு ரொம்ப வேதனை

    திவ்யா போல் இருந்துவிட்டால் இந்த வாயில்லா ஜீவனுக்கும் ஒரு விடிவுகாலம் பிறக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் இருக்கின்றது.. குற்றம் குறைகளைச் சொல்லுவதற்கும் பயமாக இருக்கின்றது..

      கத்தியும் கையுமாக அலைகின்றார்கள்..

      எதற்கும் கவனம் தேவை..

      நீக்கு
    2. உண்மையை அதிகம் பேசுவதும் ஆபத்து.. இன்றைய. காலகட்டத்தில் எதுவும் சரியில்லை.. வேலியே பயிரை மேய்கின்றது..

      நல்லவர்கள் செயல்படுவதைத் தடுக்கும் அரசியலும் உண்டு..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  16. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்!

    எளிய மனிதர்களின் நேர்மையும், அவர்களுக்கு ஏற்படும் தடைகளும், அதற்கு உதவிடும் நல்ல உள்ளம் கொண்ட பெண்மணியும் என அழகான கதை! நல்லதொரு கதைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  17. நல்ல கதை. சொல்லவந்ததை மிக அருமையாக சொல்லி விட்டார்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    சிறு தொழில், பெரிய தொழில் என்று எங்கும் எதிலும் போட்டி போடும் மக்கள் இருக்கிறார்கள்.
    நாம் நேர்மையாக சிறப்பாக செய்தால் நம் வியாபாரம் நன்றாக நடக்கும் என்ற மனபான்மை வர வேண்டும்.

    திவ்யா போன்ற நேர்மையானவர் தீமை செய்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வேன் என்கிறார்.
    காமாட்சி அம்மா மீண்டும் மாவு கடையை நிம்மதியாக நடத்தட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தான்.. யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ.. அப்படி நடந்து கொண்டால் பிரச்னை இல்லை..

      எல்லாவற்றிலும் அரசியல் நுழையாதிருந்தால் நம் நாடு எப்போதோ முன்னேறி இருக்கும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. // திவ்யா போன்ற நேர்மையானவர் தீமை செய்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வேன் என்கிறார்.//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. கலெக்டர் திவ்யா கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார்.
    காமாட்சியம்மாள் இளமையாக இருக்கிறார். இருவருக்கும் கைகளில் வளையல், போட்டு விட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ஓவியம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனத்தில் கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
    2. வளையல் போட்டுவிட்டேன்!

      நீக்கு
    3. நன்றி சார் .
      வளையல் போட்டவுடன் நன்றாக இருக்கிறது.
      திவ்யாவிற்கு புடவை கலரில் வளையல் அணிவித்து அசத்தி விட்டீர்கள்.

      நீக்கு
    4. கோமதிக்கா நல்லாருக்கு உங்க பரிந்துரை...கௌ அண்ணா வளையல் போட்டுவிட்டது இன்னும் மெருகூட்டியிருக்கிறது.

      கீதா

      நீக்கு
  19. துரை செல்வராஜு சார், உங்களின் இன்றைய கதை மிக அருமை. நல்லதுக்குக் காலம் இல்லை என்று சொல்வதுண்டே. ஆனால் அவர்களுக்கும் திவ்யா எனும் கதாபாத்திரத்தால் நல்லது நடக்கும் காலம் தெரிகிறது. நேர்மறையான கதை. வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி துளசிதரன்..

      நீக்கு
    2. நல்லதுக்கு காலமில்லை என்பது உண்மை தான்.. ஆனால் நியாயம் தான் வெற்றி பெறும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

      நீக்கு
  20. கேஜிஜி, சார் படம் மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. தி்வ்யா எப்படி பாடம் புகட்டுகிரார் என்பதையும் இந்த அழகான கதையில் கோடி காட்டி இருக்கலாமோ இன்னும் அருமையாக இருக்கும்.அருமை அருமை அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு அலுவலர்களின் சில நடவடிக்கைகளை வெளியே சொல்லுதல் கூடாது.. எனவே தான் அப்படியே நிறுத்திக் கொண்டேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  22. உண்மை தான்.. ஆனாலும் இந்த விஷயத்தில் அரசு அலுவலரின் நடவடிக்கைகளை வெளிப்படையாக சொல்லக்கூடாது..

    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றியம்மா..

    பதிலளிநீக்கு
  23. பானுமதி வெங்கடேஸ்வரன்3 ஆகஸ்ட், 2022 அன்று 10:51 AM

    நல்லவர்களுக்கு அரசாங்கம் உதவுவதாக எழுதப் பட்டிருக்கும் கதை சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ பானுமதி வெங்கடேஸ்வரன்

      // எழுதப்பட்டிருக்கும் கதை சிறப்பு!..//

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!