திங்கள், 15 ஆகஸ்ட், 2022

'திங்க'க்கிழமை  :  கத்திரிக்காய் சாதம் இரு முறைகளில்! - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 ஊருக்குப் போறச்சே வாங்கி வைச்ச கத்திரிக்காயை நேத்திக்குக் கறி பண்ணினாலும் நாலு மிச்சம் இருந்தது. அதில் இன்னிக்குக் கத்திரிக்காய் சாதம் பண்ணினேன். ஆரம்பிக்கையில் படம் எடுக்கும் எண்ணமோ போடும் எண்ணமோ இல்லை. கத்திரிக்காய் வதங்கும்போது தான் படம் எடுத்துப் போடும் எண்ணம் வர சரினு கறி நிலைமையில் கத்திரிக்காய் இருக்கும்போதே படம் எடுத்தேன்.

பின்னர் அதில் சாதம், மசாலா பொடி எல்லாம் போட்டுக் கலக்கும்போது எடுத்த படம். பச்சைக் கொத்துமல்லி தூவி விட்டு வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடியுடன் சாப்பிட்டாச்சு!

கத்திரிக்காய் சாதம் செய்யத் தேவைப் பட்ட பொருட்கள்:

மி.வத்தல் 4, தனியா அல்லது கொத்துமல்லி விதை, இரண்டு டேபிள் ஸ்பூன், இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன்,  பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, சோம்பு ஒரு டீஸ்பூன், சின்னத் துண்டு லவங்கப்பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய்,  மசாலாக்களில் போடும் பூ ஒரு டீஸ்பூன் அளவுக்கு அல்லது நான்கு ஐந்து பூக்கள், தேங்காய்த் துருவல்  ஒரு டேபிள் ஸ்பூன்
ஆனால் நான் இந்தப் பொடியை இதில் சொல்லி இருக்கும் முறையில் எல்லாம் செய்து வைச்சுக்கலை. ஏற்கெனவே மிவத்தல், கொ.ம.விதையோடு கபருப்பு, உபருப்பு, மிளகு, வெந்தயம் போட்டு வறுத்து அரைத்த பொடி இருந்தது. இது எப்போவுமே என்னிடம் தயார் நிலையில் இருக்கும். ஆகவே நான் இன்று சோம்பு, மசாலாப் பூக்கள், கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை ஆகியவற்றை மட்டும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு பொடி செய்து கொண்டேன். அதைத் தனியாகவே வைத்தேன். தேங்காய்த் துருவலையும் வாணலியில் சூட்டில் போட்டுப் பிரட்டினேன்.

கத்திரிக்காய், வெங்காயம் நறுக்கிக் கொண்டு கடாயில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதில் கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளித்துக் கொண்டு பெருங்காயம் , கருகப்பிலை சேர்த்தேன். பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கினேன். அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தேன். வெங்காயம் சீக்கிரம் வதங்கும். பின்னர் கத்திரிக்காய்களைப் போட்டு மஞ்சள் பொடி, கால் டீஸ்பூன் மி.பொடி, கால் டீஸ்பூன் தனியாப் பொடி போட்டு மூடி வைத்து வதக்கினேன். கத்திரிக்காய் நன்கு வதங்கியதும் தேவையான உப்பைப் போட்டுக் கூடவே சாதத்தையும் சேர்த்தேன்.

ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த மிளகாய், தனியா சேர்த்த மசாலாப்பொடியோடு தேங்காய்த் துருவல், புதிதாக அரைத்த கரம் மசாலாப்பொடி ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி விட்டு சாதத்தில் போட்டுக் கலந்தேன். தேவையான உப்பும் சேர்க்கணும் இப்போத் தான்! வேணும்னா ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக்கலாம். புளிப்பு வேண்டுமெனில் அம்சூர் பவுடர் அரை டீஸ்பூன் இறக்கும்போது போடலாம். அல்லது எலுமிச்சம்பழம் பிழியலாம். பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கித் தூவினால் கத்திரிக்காய் சாதம் தயார்! என்னிடம் அம்சூர் பவுடர் இல்லை. எலுமிச்சம்பழம் இருந்தது. ஆனாலும் சேர்க்கவில்லை. அப்படியே  சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது.


இன்னொரு முறையில். இது தினசரிச் செய்தித்தாளில் வந்தது. நினைவில் இருந்தவரை!

கத்தரிக்காய் பலருக்குப் பிடிக்காது. சிலருக்கு உயிர். எனக்கும் அப்படித் தான். கத்தரிக்காயில் என்ன சமைத்தாலும் பிடிக்கும். ஆனால் அது குழைவாக இருக்கணும். சில கத்தரிக்காய்கள் குழையாது! ஒரு மாதிரி துவர்ப்பாக விதைகளோடு காணப்படும். அப்படிப்பட்ட கத்தரிக்காயைச் சாப்பிடுவது ஒரு தண்டனையாக இருக்கும். இப்போ பிடி கத்திரிக்காய் எனப்படும் ஹைப்ரிட் கத்திரிக்காய் (மரபணு மாற்றப்பட்டது) வர ஆரம்பிச்சாச்சு. சென்னையில் கத்திரிக்காய் ரொம்பப் பளபளப்பாக நல்ல ஊதாக்கலரில் இருந்தால் வாங்க யோசனையாக இருக்கும். இங்கே ஶ்ரீரங்கம்/திருச்சியில் நல்லவேளையாக நாட்டுக் கத்திரிக்காய்கள் கிடைக்கின்றன. அதிலும் கொஞ்சம் வெளிர் பச்சையாக இருப்பது உள்ளே விதை இல்லாமல் இருக்கும். மதுரையில் வெள்ளையாகவே கத்திரிக்காய் (கம்மாக் காய் என்பார்கள்) கிடைக்கும். அதிலே கூட்டும் செய்து கூடவே மோர்க்குழம்பும் இருந்தால் சொர்க்கம் பக்கத்தில்!  இங்கே வந்த சில, பல ஆண்டுகள் கத்திரிக்காயை அதிகம் சமைக்க முடியாது. 144 தடை உத்தரவெல்லாம் இருந்தது. எங்கேயானும் போனால்  யாராவது சமைச்சுப் போட்டால் தான்! இல்லைனா அம்மா வீட்டில் சாப்பிட்டுக்கலாம். ஆனால் குழந்தைங்க பிறந்ததும் அவங்களுக்குப் பிடிக்கிறது என்பதால் வாங்க ஆரம்பித்தோம். அப்போவும் ரங்க்ஸுக்கு அரை மனசு தான். வேண்டாவெறுப்பாய்த் தான் சாப்பிடுவார். ஆனால் பாருங்க இப்போக் கத்திரிக்காய் தான் அவரோட உயிராக மாறி விட்டது! :P :P :P எனக்கு போரடிக்குது,  வேண்டாம்னு சொன்னாலும் கேட்கிறதில்லை. நேத்து தினமலர் பெண்கள் மலரில் கத்திரிக்காய் சாதம் கொஞ்சம் வித்தியாசமாக் கொடுத்திருந்தாங்க. உடனே நேத்துச் சாயந்திரமே கத்திரிக்காய் வாங்கி வந்தாச்சு. அந்தச் சாதம் பண்ணுனு உத்தரவு. மீற முடியுமா? :P :P :P :P  ஆகவே இன்னிக்கு அதான் பண்ணினேன். எப்படிப் பண்ணறதுனு கேட்கிறீங்களா?

நான்கு பேருக்கென்றால் ஒரு ஆழாக்கு அரிசி அல்லது ஒரு கிண்ணம் அரிசி, சமைத்துத் தயாராக ஆறவிட்டு நல்லெண்ணெய், அரை டீஸ்பூன் உப்புச் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

ஒண்ணும் பெரிய விஷயமில்லை! ஆட்கள் இருப்பதற்குத் தக்கவாறு கத்திரிக்காய் கால் கிலோவில் இருந்து அரைகிலோ வரை தேவைப்படும். நாங்க ரெண்டு பேர் தானே! நடுத்தரமான அளவுக் கத்திரிக்காய் ஒன்றே ஒன்றே. பெரிய வெங்காயத்திலே சின்னதாக இரண்டு. இரண்டையும் நீளமாக நறுக்கிக் கொண்டேன்.

வறுத்துப் பொடிக்க: லவங்கப்பட்டை, கிராம்பு, ஒரு ஏலக்காய் எல்லாம் வறுத்துப் பொடித்தால் அரை டீஸ்பூன் பொடி போதும். சோம்புப் பொடி அரை டீஸ்பூன்(அவங்க சொல்லலை, நான் சேர்த்தேன்.)

தாளிக்க

சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தலா ஒரு டீஸ்பூன். தேவையானால் வேர்க்கடலை இரண்டு டீஸ்பூன் போட்டுக்கலாம்.

மேலே சொன்ன ஒரு கத்திரிக்காய் அளவுக்கு ஒரு வற்றல் மிளகாய், ஒரு பச்சை மிளகாய்க் கீறிச் சேர்த்தேன். கருகப்பிலை, பெருங்காயம்(தேவையானால்), மஞ்சள் தூள் சேர்த்தேன். தாளிதம் எல்லாம் பக்குவமாக ஆனதும்

வெங்காயத்தைப் போட்டு வதக்கினேன். வெங்காயம் சுருண்டு வருகையில் கத்திரிக்காயைப் போட்டுச் சுருள வதக்கணும். கத்திரிக்காய் அரை வேக்காடு வெந்ததும் தேவையான உப்புச் சேர்க்கணும். உப்புச் சேர்த்து நன்கு கத்திரிக்காய் வெந்ததும், மசாலாப்பொடியையும் சேர்த்துவிட்டுப்  பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். ஆற வைத்த சாதத்தில் கொட்டிக் கிளறி எலுமிச்சம்பழம் அரை மூடி பிழியவும். அல்லது எலுமிச்சைச் சாறு தேவையான அளவுக்குச் சேர்க்கவும். தொட்டுக்க எந்தப் பச்சடி வேண்டுமானாலும் ஓகே!


40 கருத்துகள்:

  1. வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
    கோன் முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
    நான் மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்..
    –கந்த புராணம்..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

    வாழ்க பாரதம்..
    வளர்க தமிழகம்..

    பதிலளிநீக்கு
  3. இன்றைக்கு ஏதாவது இனிப்பு வகை வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணறாரு ஶ்ரீராம்? எழுதி அனுப்பினா வெளியிடுவாரு. கீதா சாம்பசிவம் மேடம், கீதா ரங்கன்(க்கா) வெல்லாம் எங்க இனிப்பு செய்முறை போடறாங்க? பண்ணினால்தானே. கடமைக்கு தேங்காய் பாயசம் அரிசிப் பாயசமெல்லாம் பண்ணினால்?

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா நினைச்சேன் வந்தார் நெல்லை!!! நூறு வயது!!

      நான் ஹலசின கொட்டே/கடுபு இனிப்பும் உப்பும் என்று இரு வகையும் அனுப்பவே இல்லை ஸ்ரீராமுக்கு!!!!! அது போல இனிப்பும் நீங்கல்லாம் செஞ்சுருக்கவே மாட்டீங்க அப்படி ஒன்னும் இருக்கு!!! ஆனால் நான் அதை ஸ்ரீராமுக்கு அனுப்பி அவர் அதை இங்கு போட்டு , நெல்லைஅதைச்செய்து சாப்பிட்டு மீண்டும் வயிறு சரியில்லாம போய்.....என் அருமைத் தம்பி நெல்லைக்கு இப்ப இனிப்பு வேண்டாமே என்று நல்ல மனசோடு அனுப்பலையாக்கும்

      கீதா

      நீக்கு
    3. இதுக்கு நான் போட்ட கமென்ட் என்னாச்சு? ஸ்பாமில் இருக்கோ?

      கீதா

      நீக்கு
    4. இதுக்கு நான் போட்ட கமென்ட் என்னாச்சு? ஸ்பாமில் இருக்கோ?

      கீதா

      நீக்கு
  4. பதிவின் நிறைவில் கூட வாழ்த்துச் செய்தி ஏதும் இல்லை..

    பதிலளிநீக்கு
  5. சுதந்திர தின ஸ்பெஷல் "கத்திரிக்காய் சாதம்!!!!" 

    முதல் முறையில் இருந்து மிளகாய் பொடி, மல்லிப்பொடி வகையராக்களை தவிர்த்து, பச்சை மிளகாய், வற்றல் மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்தால் இரண்டாவது முறை. கொஞ்சம் காரம் குறைவாக இருக்கும். 

    ஆனாலும் ஆந்திர வாங்கி பாத் போன்று வராது. அதுவும் அங்கு மட்டுமே கிடைக்கும் மிளகாய் சைசில் கிடைக்கும் நீல(ள) கத்திரிக்காயில்  செய்வது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. முதலில் செய்தது நன்றாக இருக்கிறது.

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. ரெண்டு வகை செய்முறையும் சூப்பர், கீதாக்கா. நல்ல குறிப்புகள்.

    கத்தரிக்காய் விருப்பமான காய் இங்கும். நம் வீட்டில்தான் எதுவும் பிடிக்காது என்பதே கிடையாதே!! எங்கள் எல்லோருக்குமே! அலர்ஜியும் இல்லை.

    எனவே விதம் விதமாய் கத்தரிக்காய் உருவெடுக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கீதா ரங்கன்(க்கா) சொன்னதை வைத்து லால்காக் பூக்கள் திருவிழாவுக்குச் சென்று, கூட்டத்தில் ஒன்றும் பார்க்காமல், கடைகளைச் சுற்றித் திரிந்து கால்வலியோடு வந்து சேர்ந்தோம்.

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை நான் சொன்னேனா இல்லையா கூட்டம் இருக்கு என்று....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலதானே நாங்க கண்ணாடி ஹவுஸுக்குள் போகவே இல்லை .அதுவும் இல்லாமல் அது இந்த ஊர் புகழ்பெற்றவரின் நினைவாக என்பதாலும் போகலை...கூட்டம் அங்கு ரொம்ப...அதனால்தான் ரொம்ப சுற்றலைன்னு சொன்னேனா இல்லையா.....ஹூம் வம்புக்கு இழுப்பதே வேலையா போச்சு!!! நெல்லை அண்ணனுக்கு!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. நீங்க வேற... உள்ள நடக்கப்போவதில்லை என்று, வீட்டிலிருந்தே நடந்து லால்பாக் சென்றோம் (7500 ஸ்டெப்ஸ்). உள்ள சுத்திக் கால் வலி வந்தது. 15 ஆயிரம் ஸ்டெப்ஸ் ஆனது வெளில வரும்போது. அப்புறம் ஆட்டோ பிடித்து வந்து சேர்ந்தோம். ஒரு பூக்களையும் (பெண்களைத் தவிர) பார்க்கலை.. ஹா ஹா ஒவ்வொரு ஹவுஸ் எதிரவும் ஆயிரம் ஜனங்கள் க்யூவில்.

      நீக்கு
    4. ஓ! பூக்கள் வைத்திருந்த இடத்திலும் க்யூவா?!!!

      நாங்க தப்பிச்சோம் போல அன்று.

      கீதா

      நீக்கு
    5. ஓ! பூக்கள் வைத்திருந்த இடத்திலும் க்யூவா?!!!

      நாங்க தப்பிச்சோம் போல அன்று.

      கீதா

      நீக்கு
    6. என்னாச்சு ப்ளாகருக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா போடுது கருத்து!!! சுதந்திர தின போனஸோ!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    7. /ரெண்டு ரெண்டா போடுது கருத்து!!// - இன்னைக்கு கடை வேறு கிடையாதே.. இந்த பிளாகருக்கு என்னாச்சு?

      நீக்கு
  9. இன்றைக்கு சுதந்திர தின நல் வாழ்த்துகள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. வாங்கி பாத் பிடிக்கும், எப்போதாவது செய்தால். மற்றபடி கத்தரி கறி, புளிக்கூட்டு, பாசிப்பருப்புக் கூட்டு, பொடிதூவல் போன்றவையே செய்யச் சொல்லுவேன்.

    சோம்பு வாசனை தவிர, செய்முறைகள் நன்றாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. வரிகளுடைய வயலட் கத்தரி எப்போதும் நன்றாக இருக்கும். சென்றமுறை வாங்கியது (கிலோ 20ரூ) கைத்தது. வயலட் நிறத்தில் நீளக்கத்தரி இப்போதெல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் மகள் லுலுவிலிருந்து சென்ற முறை 80ரூபாய் விலையில் வாங்கிவந்தது, தோல் தடிப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. இங்கு பலவித கத்தரிகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தில் சொதப்பிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  14. கத்தரிக்காய் சாதம் இரு வகைகளுமே வித்தியாசமாக, நன்றாக இருக்கின்றன. ஆனால் தஞ்சாவூரிலும் சரி, துபாயிலும் சரி, இப்போதெல்லாம் கத்தரிக்காய்கள் முன்னைப்போல் அத்தனை சுவையாக, பிஞ்சாக கிடைப்பதில்லை. கிடைக்கும் கத்தரிக்காய்கள் அவ்வளவாக ருசிப்பதில்லை.
    நான் பட்டை, கிராம்பு போன்ற மசாலா வகைகள் சேர்ப்பதில்லை. தனியா, கடலைப்பருப்பு, மிளகாய், நிலக்கடலை, உ.பருப்பு, காயம் வறுத்து பொடி செய்து போட்டு புளி நீர், கத்தரிக்காய் என்று செய்வேன்.

    பதிலளிநீக்கு
  15. பானுமதி வெங்கடேஸ்வரன்15 ஆகஸ்ட், 2022 அன்று 10:46 AM

    அனைவருக்கும் காலை வணக்கம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!🎊🎊🎈🎈

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!🎊🎊

      நீக்கு
    2. யாவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் கத்தரிக்காய் சாதம் செய்முறை குறிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது கொப்பரை கூட தேங்காய்க்கு பதிலாக சேர்க்கலாம் நன்றாக எழுதி உள்ளீர்கள் நன்று அன்புடன்

      நீக்கு
  16. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. கத்திரிக்காய் சாதம் செய்முறைகள் நன்றாக இருக்கிறது.
    நான் சோம்பு மசாலா பொருட்கள் சேர்த்து செய்தது இல்லை.
    நீங்கள் சொன்ன முறையில் செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. சுதந்திர தின வாழ்த்துகள்.

    கத்தரிக்காய் சாதம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    கத்திரிக்காய் சாதம் இரு முறைகளும் நன்றாக உள்ளது. இந்த இரு முறைகளிலும் செய்துள்ளேன். கத்திரி எங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் பிடித்தமானது. நடுவில் அலர்ஜிக்காக வாங்காமல் இருந்தோம். இப்போது மறுபடி துவக்கம். இரண்டு செய்முறைகளும் அருமை. படங்களுடன் தெளிவாக பகிர்ந்த சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    என்னதான் சுதந்திர நாளாக இருந்தாலும், வீட்டு வேலைகள் காலையிலிருந்து நகர விடாது பிடித்து கொண்டமையால் , இப்போதுதான் கொஞ்ச நேரம் முன்பு விடுதலை கிடைத்தது. மறுபடி மாலையின் காஃபி கடை ஆரம்பமாகி விடும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. இந்த வாங்கீபாத் செய்முறை நேற்று செய்து அனுப்பினதா இல்லை பல வாரங்கள் முந்தையதா? நேற்று அல்லது அதற்கு முந்தின நாள் செய்தது என்றால், அதையும் கீதா சாம்பசிவம் மேடம் எ.பிக்கு வராததையும் நான் முடிச்சுப் போடலாமா கூடாதா? யார் இதற்குப் பதில் சொல்வார்கள்? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!