எழுதியவர் யார்? தெரியாது! இசையமைத்தவர் யார்? தெரியாது. ஒருவேளை புகழேந்தியாய் இருக்கலாம். பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.
முன்பு 'தணிகை வாழும் முருகா' பாடலை பகிர்ந்திருந்தேன். அதுபோலவே ஒரு பாடல் இந்த 'நல்ல தமிழ் சொல்லாலே' பாடல்.
முருகனை தமிழ்க்கடவுள் என்று போற்றுகிறோம். அவனை நல்ல தமிழ் சொல்லால் வள்ளல் என பாடுகிறார் பாலு.
நல்ல தமிழ் சொல்லாலே
வள்ளலே உனைப்பாட
வல்லமை எல்லாம் தருவாய் வடிவேலா
சொல்லமுதாய் இனிக்கும் முருகா
உன் பெயரை
சொல்பவர்கள் வாழ்வில்
சுகம் கிடைக்கும் கிடைக்கும் என்றும்
அழகனைத்தும் ஒன்றாய் அமைந்த பேரழகா
அன்பர் மனக்கோவிலிலே
வாழும் சிவகுமரா
குழலிசைக்கும் கண்ணன் உளம்மகிழும் மருகா
குழலிசைக்கும் கண்ணன் உளம்மகிழும் முருகா
கோலமாமயில் ஏறும் ஆறுமுகா முருகா
உன்பெருமைதன்னை அறிந்தவன் அல்லேன்
ஓதி உணர்ந்து உள்ளம் தெளிந்தவனும் அல்லேன்
என் நிலையறிந்தவனே ஏரகப்பதிவாழ்வே
இது தருணம் அருள வேல்முருகா முருகா
=====================================================================================================================
1975 ல் வெளியான 'இதயக்கனி' திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. 1978 ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் இதுதானாம்.
எம் ஜி ஆர், ராதா சலூஜா நடித்த இந்தப் படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். ஜெகந்நாதன் இயக்கிய இந்தப் படம் வெளியானது 75 ஆகஸ்ட் மாதத்தில். இயக்குநர் ஜெகந்நாதனுக்கு பெரிய பிரேக் கொடுத்த படமாம். விகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் பாராட்டின என்று சொல்கிறது விக்கி. புலமைப்பித்தன், நா காமராசன், வாலி மற்றும் ராண்டார்கை பாடல்கள் எழுதி இருக்கிறார்கள். ராண்டார்கை எழுதிய புத்தகம் இலவச PDF டவுன்லோடுக்கு கிடைக்குமா என்று தேடி ஏமாந்திருக்கிறேன்!
இந்தப் படத்தில் அந்தாதி வடிவில் உருவான பாடல் 'தொட்ட இடமெல்லாம்' என்கிற பாடல் எனக்கு பிடிக்கும். சுசீலாவின் மிக இனிமையான குரலில் மிளிரும் பாடல் அது. சரணவரிகள் அந்தாதியாய் மலரும்.
உஷா உதுப் மற்றும் எஸ் பி பி பாடிய பாடல்களும் இருக்கின்றன இத்திரைப்படத்தில். ஆனால் இன்று நான் பகிரப்போவது எனக்கு மிக மிக பிடித்த டி எம் எஸ் பாடல் ஒன்று.
வாலியின் அழகான அற்புத வரிகளில் பாடல் தளை தட்டாமல் களைகட்டுகிறது. சுவை சொட்டுகிறது. எம் எஸ் வியின் இனிமையான இசை. டி எம் எஸ்ஸின் மயக்கும் குரல். நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் ஒன்று இந்தப் பாடல்..
'மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்' என்று பாடி முடித்த உடன் சரணத்துக்கு போகும் பாடல் என்று நினைப்போம். விருப்பமுள்ள ஒரு திருப்பம் போல ஒரு குழலிசை சுழன்று நம்மை மீண்டும் பல்லவியில் கொண்டுவந்து லேண்ட் செய்கிறது! ரசிக்கலாம்.
இதில் என் ஃபேவரைட் வரிகள் ஒரு சிறு தாளத்தைத் தொடர்ந்து வரும் 'நிலவென்ன நெருப்பென்ன' வரிகள். அடிக்கடி நான் பாடும் (!) வரிகளும் அதுதான்!
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது.
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடி ஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே உனக்குள்ளே
முள்ளோ மாமலரோ என
மயக்கம் பிறக்குதடி எனக்குள்ளே
என்னென்று ஏதென்று
இனங்காணா வடிவத்தை
பெண்ணென்று பார்த்த மனம்
பித்தாகி போனதம்மா.
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
பாவை இனங்களும் அது போலே
நாம் பருகி பார்க்கையில் மது போலே
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
பக்திப் பாடலும் அருமை.
பதிலளிநீக்குஒன்றும் அறியாத பெண்ணோ...பாடல் வரிகளை வாசிக்கும்போதே பாடல் மனதில் ஓடுகிறது.
நல்ல பகிர்வு
நன்றி நெல்லை.
நீக்குஆடி
பதிலளிநீக்குவெள்ளியின் நல் வாழ்த்துகளுடன் அன்பின் வணக்கம்..
வாழ்க நலம்
வாழ்க தமிழ்..
வாழ்க.. வாங்க துரை செல்வராஜு ஸார்.. வணக்கம்.
நீக்குமுதல் பாடல் கேட்டு ஞாபகம் இல்லையே...
பதிலளிநீக்குஇரண்டாவது அறிந்த பாடல் நல்ல பாடல்கள். உஷா உதூப் பாடிய பாடல் எது ?
முதல் பாடல் பிரபலமான பாடல்தான். உஷா உதுப் பாடிய பாடல் ஹலோ மிஸ்ட் ரே என்று வரும்.
நீக்குhttps://www.youtube.com/watch?v=nO_DpPcNl44
நீக்குநல்ல தமிழ்ச் சொல்லாலே.. - தனியொரு ரகம்.. அழகு..
பதிலளிநீக்குஅப்போது
இந்தப் பாடல் மனப்பாடம்..
ஆமாம்.
நீக்குஇதயக்கனி..
பதிலளிநீக்குஅன்றைய விசிலடிச்சான்களுக்கு மிகவும் பிடித்த தலைப்பு..
வண்டு துளைத்து விட்டது .. என்ற சொல்லாடலுக்குப் பின் வந்தது இந்தப் படம்..
புரட்சித் தலைவர் புரட்சி செய்திருப்பார் இந்தப் படத்தில்.. ராதா சலூஜாவை அரைகுறை ஆடையில் தாராளமாகக் காட்டி போட்டோக்கள் வேறு எடுப்பார்..
ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருக்கும் (!)..
கண்ணதாசனுடன் மனக்கசப்பு இருந்த நேரம்...
இந்தப் படத்தில்தான் ஆரம்பத்தில் அண்ணா பேசுவதாக அந்த வசனம் வரும் என்று நினைவு. நான் இதுவரை படத்தை முழுதாக பார்த்ததில்லை!
நீக்குகவர்ச்சி தூக்குதலாக இருந்த காரணத்தால் தாய்மார்கள் இதயக்கனி படத்தைப் பார்க்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. புரட்சித் தலைவர் "அதற்காக வருந்துகிறேன். இனி இப்படி ஒரு தவறு நேராது" என்று பிரஸ் ஸ்டேட்மெண்ட் விட்டார் என ஞாபகம்.
நீக்கு//நிலவென்ன
பதிலளிநீக்குநெருப்பென்ன
உலவும் பேரழகே உனக்குள்ளே..//
மிகவும் பிடித்த பாடல்..
அழகுக்கு மறுபெயர் பெண்ணா..
அல்லி மலருக்கு
மறுபெயர் கண்ணா!..
இப்படியும் ஒரு பாடல்.. இதுவும் வாத்யார் படத்தில் தான்!..
ஆமாம். எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அது.
நீக்குஅருமையான பாடல்கள்... இரண்டாவது பாடலை கேட்டபின் ஞாபகம் வந்தது :-
பதிலளிநீக்கு// பால் போலக் கள்ளும் உண்டு - நிறத்தாலே ரெண்டும் ஒன்று...
நான் என்ன கள்ளா? பாலா? - நீ சொல்லு நந்தலாலா //
வரிகளை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇரண்டுமே தெரியாத பாடல்கள். இதயக்கனி படம் வந்தது தெரியும். ஆனால் பாடல்கள் கேட்ட நினைவு இல்லை. ராதா சலூஜா அப்போது ஹிந்தியில் மிகவும் பிரபலமாக இருந்த நேரம் என நினைக்கிறேன்.ஹிந்தியில் ஒரு மாதிரியான படங்களில் நடிச்ச நினைவும் கூட!
பதிலளிநீக்குஇரண்டுமே தெரியாத பாடல்களா?
நீக்குராதா சலுஜா ஹிந்தியில் பத்தோடு பதினொன்றாக நடித்துக் கொண்டிருந்தவர்..
முதல் பாட்டு கேட்டதில்லை ஸ்ரீராம், நல்லாருக்கு எஸ்பிபிவாய்ஸ் ரொம்ப வித்தியாசமாக இருக்கு
பதிலளிநீக்குகீதா
ரொம்ப சின்ன வயசுல பாடினதோ?
நீக்குகீதா
ஆமாம் கீதா.. ஆரம்ப காலங்களில் பாடிய பாடல் அது.
நீக்குகீதா ரங்கன்(க்கா) - நலம்தானே... என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு? இரண்டாம் பாடல் பாதாள பைரவி ராகத்தின் சாயலில், ஹரிகாம்போதி சேர்ந்து அனேகமா சரணம் ஆரபின்னு நினைக்கிறேன் என்றெல்லாம் எழுதுவீங்களே..இன்னைக்கு ஏன் ஒன்றும் எழுதலை? வேலை அதிகமோ?
நீக்குஹாஹாஹாஹாஹா ஹையோ நெல்லை சிரிச்சு சிரிச்சு வயிறு சுளுக்கு!!!!!!!!!!!!!!!
நீக்குஅதை ஏன் கேக்கறீங்க நெல்லை....என் சோகக் கதை....இப்பல்லாம் ராகம்....கம் முனு கிடக்கிறது. மனமும் ராகமாலிகை மாதிரி ஒவ்வொன்னுக்கும் தாவிக்கிட்டே இருக்கு. பாடறவங்களாவது ஒரு லைன்ல ஒரு ராகம் அடுத்த லைன்ல ஒரு ராகம் நு நானோ ஒவ்வொரு வார்த்தைக்கும் மாத்தி மாத்தி மனசு தாவிக் கொண்டே இருக்கிறது!!!!!
உசுப்பேத்திட்டீங்க பாருங்க அடுத்த வெள்ளி அன்னிக்கு சலங்கை கட்டிக்கொண்டு வரேன்!!!!! ஹாஹாஹா
கீதா
ஒன்றும் அறியாத பெண்ணோ....பாட்டு கேட்டதும் டக்கென்று மனதில் வந்துவிட்டது. அழகான பாடல் ரொம்ப ரசித்த பாடல். இப்பவும் கேட்டு ரசித்தேன். டி எம் எஸ் இதில் அசாத்தியம்.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஇரண்டு பாடல்களும் முன்பு வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.
பதிலளிநீக்குகாலை நேரம் பக்தி பாடல் நிகழ்ச்சியில் அடிக்கடி கேட்ட பாடல் முதல் பாடல்.
இரண்டும் இனிமையான பாடல்.
பகிர்வுக்கு நன்றி.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்கு.. 1978 ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் இதுதானாம்.//
பதிலளிநீக்குஅப்படீன்னா அது எப்பேர்ப்பட்ட திரைப்பட விழா எனப் புரிந்துகொள்ளலாம்.
1978. கம்யூனிசம் சோவியத் யூனியன், சீனா, கிழக்கு ஐரோப்பா என ஓவராக ஆட்டம்போட்ட காலம்.. அமெரிக்கா மட்டுமல்லாது, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற மேற்கத்திய நாடுகளின் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சோவியத் யூனியனில் விரும்பப்பட்டதில்லை.. For obvious reasons, அவர்களும் நுழைய முயன்றதில்லை!
இந்தியப் படங்களுக்கோ ஒரே வரவேற்பு..
ஹா.. ஹா.. ஹா.. எலலவற்றிலும் அரசியல்! அதுசரி, பாடல்கள் எப்படி?
நீக்குமுதல் பாடல் எஸ்பிபி-யா! இப்போதுதான் கேட்கிறேன். நன்றாக இருக்கிறது. முருகன் இம்ப்ரெஸ் ஆகியிருப்பாரோ..
நீக்குஇரண்டாவது : இதயக்கனி என்றொரு படம் ஓடியது நினைவிருக்கிறது. பாடல்..ம்ஹூம். எம்ஜார்-ராதா சலூஜா ஜோடி? ராதா ஸல்லீசா என்று பெயர்வைத்திருக்கலாம்...!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பதிவு அருமை. முதல் பாடல் கேட்டதில்லை. நீங்கள் சொல்வது போல் "தணிகை வாழும் முருகாவை" நினைவூட்டியது. பாடல் அருமையாக இருந்தது.
இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். டி. எம். எஸ் குரலில் அந்தப்பாடலை இப்போதும் கேட்டு ரசித்தேன். ராதா சலூவும் அதில் அழகாக இருப்பார். "அத்தை வெந்துடுவாங்க" என்ற டயலாக் இதில்தானே.. :) இந்த படம் வந்த புதிதில் படம் பார்த்தவர்கள் செய்த காமெடி இது... பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ராதா சலுஜா.
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லை என்றே நினைவு. இதயக்கனி படம் எனக்குப் பிடித்தபடம். எம் ஜி ஆர் பிடிக்கும் எனவே படமும் பிடித்தது. நீங்கள் சொல்லியிருப்பது போல் எல்லாப்பாடல்களுமே மிகவும் நன்றாக இருக்கும். இந்தப் பாடல் கேட்டும் அலுக்காத பாடல். இப்படத்தின் பாடல்களை சமீபத்தில் யுட்யூபிலும் கேட்டேன்.
பதிலளிநீக்குஇன்பமே உந்தன் பேர் என்னவோ பாடலும் மிகவும் பிடிக்கும். அதுவும் அருமையான பாடல். இதழே இதழே பாடல் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியதும் மிக அருமையான பாடல்.
இப்போதும் நீங்கள் பகிர்ந்த பாடலைக் கேட்டேன் ரசித்தேன்.
துளசிதரன்
இரண்டு பாடல்களும் நல்ல பாடல்கள்.
பதிலளிநீக்கு