கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
கோலத்திரியும் சாமூதிரியும்
*****************
மொழிமாற்றம் - ஜெயக்குமார் சந்திரசேகரன்
ஒரு காலத்தில் கோல ஸ்வரூபம் ராஜா, கோழிக்கோடு ராஜா சாமூதிரியைக் காண வந்திருந்தார்.
அக்காலத்தில் இருவரும் சாதாரணமாகப் பரஸ்பரம் நேருக்கு
நேர் மரியாதை காட்டினாலும்
உள்ளுக்குள் இருவருக்கும் இடையில் ஒரு துவேஷம் இருந்தது. குறிப்பாக ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதில்
சலிக்க மாட்டார்கள்.
இரு ராஜாக்களும் அரச முறைப்படி குசலம் விசாரித்து, விருந்து உண்டு, தாம்பூலம் தரித்து ராஜ காரியங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோலஸ்வரூபம் ராஜா “சாமூரி குத்துமோ?” என்று சிலேடையாகக் கேட்டார். (சாமூரி என்பது சாமூதிரியின் திரிபு, மூரி என்பது காளை என்றும் அர்த்தம்; சாமூரி: ஒரு மாதிரி காளை என்ற சிலேடை ஆகும்). இதைக்கேட்ட சாமூதிரிப்பாடு “கோலத்திரி கத்துமோ?” என்று கேட்டார். கோலம் ஸ்வரூபம் ராஜாவினை கோலத்திரி என்றும் கூறுவர். (மலையாளத்தில் கத்துதல் என்பதின் பொருள் எரிதல், பற்றவைத்தல் என்பதாகும். கோலத்திரி: கோலம் + திரி; கோலத்தில் உள்ள திரி எரியுமா?) என்று கேட்டார்.
இதைக்கேட்ட கோலம் ஸ்வரூப ராஜா “கோலத்திரி சிலப்போல் (சில சமயம்) கத்தும் (எரியும்), சூச்சிக்கணும் (ஜாக்கிரதை) என்று திருப்பிக் கொடுத்தார். அதற்கு சாமூதிரி “கோலத்திரி கத்தியால் (எரிந்தால்) சாமூரி குத்தும்.” என்றார். இவ்வாறு பேசிக் கொண்டிருந்து விட்டு அவரவர் அரமண்னைக்கு விடை பிரிந்தனர்.
பின்னர் சிறிது காலம் சென்ற பின் கோலத்திரி ராஜா விசேஷமாகச் செய்த ஒரு பெட்டியை, அதன் சாவியோடு, அவருடைய பரிசாக சாமூதிரிக்கு சேவகர்கள் மூலம் அனுப்பி வைத்தார். அப்பெட்டியில் வெடிமருந்து நிறைக்கப்பட்டு இருந்தது. சாவி கொண்டு பெட்டியை திறக்கும் போது திறப்பவரின் முகத்தில் வெடிக்கும் படியாக அமைப்பு இருந்தது.
சேவகர்கள் அப்பெட்டியை சாவியுடன் சாமூதிரியிடம் சமர்ப்பித்து “கோலத்து ஸ்வரூப ராஜாவின் பரிசு இது” என்று கூறினர்.
இதைக்கேட்ட சாமூதிரி “தற்போது கோலத்திரி ராஜா காரணம் இல்லாமல் நமக்கு பரிசு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லையே. இதில் ஏதோ சதி உள்ளது” என்று நினைத்தார். கோலத்திரி கத்துமோ என்றதற்கு சிலப்போல் கத்தும் சூச்சிக்கணும் (கோலத்திரி எரியுமா என்றதற்கு சில சமயம் எரியும், ஜாக்கிரதை வேண்டும்) என்றல்லவா பதில் சொன்னார். ஆகவே இந்தப் பெட்டிக்குள் எரியும் பொருள் ஏதாவது இருக்கலாம். ஆகவே இப்பெட்டியை தண்ணீரில் முக்கி எடுத்து கொண்டு வரும்படி பணித்தார். பின்னர் சாமூதிரி பெட்டியைத் திறந்தார். நினைத்தபடியே பெட்டியில் வெடி மருந்து இருந்தது. மருந்து தண்ணீரில் நனைந்து விட்டதால் வெடிக்கவில்லை.
கோலத்திரி ராஜாவிடம் இந்த விவரங்களை ஒற்றர்கள் தெரிவித்தனர். தன்னுடைய வித்தை பலிக்கவில்லையே என்று ராஜாவிற்கு விரக்தி உண்டாகியது.
பின்னர் சில நாட்கள் சென்றபின் சாமூதிரிப்பாடும் ஒரு பெட்டியுண்டாக்கி தன்னுடைய தூதர்கள் மூலம் கோலத்திரி ராஜாவிற்குப் பரிசாக அனுப்பினார். கோலத்திரி ராஜாவிற்கும் சந்தேகம். “நாம் செய்த சதிக்கு இது பதில் சதியாக இருக்கலாம்” என்று எண்ணினார். ஆகவே பெட்டியைத் தண்ணீரில் முக்கித் திறந்தார். பெட்டி நிறைய குளவி கூடுகள் இருந்தன. தண்ணீரில் முக்கியதால் குளவிகள் கோபம் கொண்டு சபையில் உள்ளோரைக் கொட்டின என்று சொல்லவும் வேண்டுமா?
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்..
பதிலளிநீக்குவாழ்க குறள் நெறி..
வாழ்க... வாழ்க
நீக்குநல்லதொரு காலைப் பொழுது..
பதிலளிநீக்குஅன்பின் வணக்கங்களுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்..
வாங்க துரை செல்வராஜூ சார்.. வணக்கம்.
நீக்குஎன்னதான் விருந்துண்டு பேசிக்கொண்டிருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம், போட்டி, நையாண்டி, மற்றவரைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் மனதுள் இருந்து அது பழிக்குப் பழி அதுவும் மூடு மந்திரமாக....பொதுவாகவே சமயோஜிதம் மிகவும் அவசியம் அதிலும் ராஜாக்களுக்கு இப்படியானவற்றில் அறிவும், யோசிக்கும் திறனும், சமயோஜிதமும் ரொம்ப முக்கியம் என்பது தெரிகிறது.
பதிலளிநீக்குகீதா
அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்தனைகள்.
நீக்குஎங்கே போனாலும் இந்தப் பழிவாங்கல், ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், மற்றவர் கஷ்டங்களில் சந்தோஷம் அடைதல்! நல்ல மனிதர்களைத் தேடித்தான் பார்க்க வேண்டி இருக்கு. :(
பதிலளிநீக்குகதை நகைக்க வைத்தது.
பதிலளிநீக்குவிடாக்கண்டனும்கொடாக்கண்டனும்..
பதிலளிநீக்குஅந்த வக்ரம் எல்லாம் இன்றைக்கும்...தொடர்கின்ற மாதிரி இருக்கு..
பதிலளிநீக்குநம்முடைய ஜி யும் ஹி யும் விருந்துக்கு சந்தித்ததை நினைத்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குJayakumar
மனிதர்கள் எந்தக் காலத்தில் வாழ்ந்தால் என்ன? பழிவாங்கும் படலங்கள், எல்லாம் நடந்துகொண்டுதானே இருக்கின்றன? நாம் அவ்வப்போது அந்தக்காலம் இந்தக்காலம் என்று சொல்வதில் அர்த்தம் இருப்பதாகவும் தெரியவில்லை.
பதிலளிநீக்குகீதா
ரசித்தேன்
பதிலளிநீக்குகௌ அண்ணா, படம் அஸ்தலாயிட்டுண்டு கேட்டோ!!! கோலத்திரியோட சம்மானம்!!! மலையாளத்தில் கிட்டியல்லோ!!!
பதிலளிநீக்குகீதா
கூகிள் translator உபயம்!!
நீக்குஎன்னவொரு வில்லத்தனம்...!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை பகிர்வு நன்றாக உள்ளது. போட்டி, பொறாமைக்கு உலகில் என்றுமே பஞ்சமே இருக்காது போலிருக்கிறது. இதில் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால், ஒருவரின் வஞ்சகமான சூழ்ச்சிகளுக்கு இரையாகமல் தப்பிக்கலாம். மற்றபடி கடவுள் விட்ட வழி.
கதையை மொழி பெயர்த்து தந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
கதைக்கு தகுந்தாற் போல பரிசு பெட்டியை ஓவியமாக வரைந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குகதை பகிர்வு அருமை.
நீக்குபழிக்கு பழி வாங்கி விட்டார் சாமூதிரி.
சிலேடை பேச்சு விபரீதமாக முடிந்து விட்டதே!
பரிசு பெட்டியை அழகாய் வரைந்து மலையாள வார்த்தையும் இணைத்து விட்டது அருமை.
நீக்குநன்றி.
நீக்குஅடடே, மலையாளத்திலும் இதுபோல் சிலேடைக் கதைகள் உண்டா? ரசித்தேன்!
பதிலளிநீக்குஏட்டிக்குப் போட்டியான வில்லன்கள்.
பதிலளிநீக்குபடம் வரைந்த கவுதமன் சாருக்கு நன்றி. கருத்து கூறியவர் யாவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குJayakumar
நன்றி.
நீக்குமொழியாக்கம் - ஜெகே சந்திரகுமார் ????
பதிலளிநீக்கு:)) சரி செய்துவிட்டேன்.
நீக்குஇக்கதை கேட்டதுமில்லை. இப்போதுதான் வாசிக்கும் போதுதான் தெரிகிறது. விடுகதை போன்று பேசுவதில் இரு அரசர்களுமே பயங்கரமான ஆட்களாக இருந்திருக்கிறார்கள். முடிவும் சோகமாய் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குமொழியாக்கம், மொழி பெயர்ப்பு என்பதற்கு மொழிமாற்றம் என்றும் அர்த்தம் உண்டு என்பதும் தெரிகிறது.
துளசிதரன்