திங்கள், 8 ஆகஸ்ட், 2022

திங்கக்கிழமை  :  தாலி பீத் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சில வருடங்கள் முன்னர் காலையில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு சமயத்தில்  தினம் ஒரு புது வித உணவு தயாரிப்பில் ஈடுபடுவேன். அப்படி ஒரு முறை. மராத்திய உணவு வகைகளில் ஒன்றான  தாலிபீத் என்னும் கலவை ரொட்டியைத் தேர்ந்தெடுத்தேன் காலை உணவுக்காக.

எனக்குத் தெரிஞ்சவரை தாலி பீத் தயாரிக்க கோதுமை மாவு, சோள மாவு அல்லது கம்பு மாவு அல்லது வெள்ளைச் சோள மாவு, அரிசி மாவு (தேவைப்பட்டால்) மற்றும் கட்டாயமாகக் கடலைமாவு போன்றவை தேவை! ஆனால் இதிலே கோதுமை மாவே சேர்க்கவில்லை. . வீட்டில் இருந்த பொருட்களை வைச்சே பண்ணணும்னு முடிவு பண்ணியாச்சு! 

சோளம், கம்பு மாவுக்கெல்லாம் எங்கே போக! :)   கோதுமை மாவெல்லாம் சேர்த்தால் சப்பாத்தி மாதிரிக்குழவியால் இட்டுக் கொள்ளலாம். ஆனால் நான் எடுத்துக் கொண்டதோ வெறும் அரிசி மாவும், கடலைமாவும் மட்டுமே! இனி மேலே பார்ப்போமா?

நான்கு பேர்கள் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள்.   கொடுத்திருக்கும் பொருட்கள். சாமான்கள் அளவில் அவரவர் தேவைக்கு ஏற்பச்  சிறிய மாற்றம் இருக்கலாம்.

அரிசிமாவு இரண்டு கிண்ணம்
கடலை மாவு இரண்டு கிண்ணம்
உளுந்தம் மாவு அரைக்கிண்ணம்
அவல் கால் கிண்ணம் போல் எடுத்து நன்கு ஊற வைக்கவும்.
உப்பு தேவையான அளவு
சேர்க்கவேண்டிய மசாலா சாமான்கள்
தனியாப் பொடி இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
ஜீரகம்,ஓமம் வகைக்கு ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்ப 1 அல்லது 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி ஒரு துண்டு துருவிக்கொள்ளவும் அல்லது பொடியாக நறுக்கவும்.
கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது 3 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது.
பிசையத் தேவையான நீர்
தோசைக்கல்லில் போட்டு எடுக்கத் தேவையான சமையல் எண்ணெய்/நெய்

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான நீர் விட்டுப் பிசையவும். சற்று நேரம் ஊற வைத்துவிட்டுப் பின்னர் ஒரு வாழை இலை அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டில் சாத்துக்குடி அளவு உருண்டையை எடுத்துக் கொண்டு நடுவில் வைத்து எண்ணெய் தொட்டுக் கொண்டு கைகளால் போளி தட்டுவது போல் தட்டவும். ஒரு சிலர் கைகளிலேயே நேரடியாக அடுப்பில் போட்டிருக்கும் தோசைக்கல்லில்  தட்டுகிறார்கள். அடுப்பில் தோசைக்கல்லைக் காய வைத்துவிட்டுத் தட்டியதை அடுப்பில் போட்டு நடுவில் அடைக்கு ஓட்டை போடுவது போல் போட்டுச் சுற்றிலும் மற்றும் நடுவில் எண்ணெய்/நெய் ஊற்றவும். இரு பக்கமும் நன்கு வேக வேண்டும். வெந்ததும் ஊறுகாய்/தக்காளிச் சட்னி/தயிர் ஆகியவற்றுடன் சூடாகச் சாப்பிட வேண்டும்.

ஒன்று சாப்பிடும்போதே வயிறு நிறைந்து விடுகிறது. ஆகையால் குறைந்த பட்சமாக நான்கு பேராவது சாப்பிட இருந்தால் மட்டுமே இதைச் செய்யலாம் என்பது என் சொந்தக் கருத்து.  இதுவும் ஓகே தான். ஆனாலும் இதில் கோதுமை மாவு சேர்த்துத் தான் மஹாராஷ்டிராவில் செய்வார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியை எட்டு மணி நேரம் ஊறவைத்து உருளைக்கிழங்கு, வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கொண்டு வெங்காயம் போடாமல் மற்றச் சாமான்களைப் போட்டுச் செய்வார்கள். பொதுவாக இது கொஞ்சம் வயிற்றில் கனமாகவே இருக்கும். ஆகவே காலை உணவுக்கென்று வைத்துக் கொண்டாலும் ஜீரணம் ஆகும்படியான வேலைகளை அன்று வைத்துக் கொண்டால் நல்லது! :) இரவுக்கோ, மதிய உணவுக்கோ வேண்டவே வேண்டாம். தாலிபீத் செய்வதற்குக் கோதுமை மாவு, கம்பு அல்லது சோள மாவு சேர்த்துக் கடலைமாவோடு மற்றச் சாமான்களைப் போட்டுப் பிசைந்து ரொட்டி மாவு போல் வைத்துக் கொண்டு குழவியால் உருட்டிச் செய்யலாம். இதில் கொஞ்சம் மெலிதாக வரும். என்றாலும் வெங்காயம் ரொம்பப் பொடியாக இருந்தால் நல்லது. அல்லது ராஜ்கீர் எனப்படும் வட மாநிலங்களில் கிடைக்கும் கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றைப் போட்டும் செய்யலாம்.

பிசைந்த மாவை வாழை இலையில் வைத்துத் தட்டி இருக்கேன்.

அடுப்பில் வேக விடும்போது எடுத்த படம். வெந்ததும் படம் எடுக்க மறந்துட்டேன். :) ஹிஹிஹி, வழக்கம் போல் படம் எடுக்க நினைவில்லை. பின்னர் நினைவு வந்தபோது செல்லிலேயே எடுத்தேன்.  ஆனால் ஆன்ட்ராய்ட் செல் அப்போப் பழகலை என்பதால் படம் ஆட்டமாய் ஆடி இருக்கு. :) இப்போத்  தான் நிபுணி ஆயாச்சே.  நறநறநறநற (யாருங்க அங்கே? நெல்லைத் தமிழரா? ஓட்டமாய் ஓடிடறேன்.) இஃகி,இஃகி,இஃகி!

66 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    இன்று தங்கள் செய்முறையான மாராத்தி உணவு வகை நன்றாக உள்ளது.படங்கள் அழகாக வந்துள்ளன.

    இந்த ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா என்ற பெயர்களை பயன்படுத்திய பின் இதன் பெயர்தான் புதிதாக உள்ளது. ஆனாலும் நன்றாக உள்ளது. எல்லா கலவையான மாவுகளின் பயன்களும் இந்த அடையில், (இல்லை இல்லை இந்த தாலி பீத்தில்.... சும்மா ஏதோ நினைவில் எனக்கு பழைய பெயர் வத்து விட்டது. மன்னிக்கவும். :)))) ) கலந்து நமக்கு நல்ல பயன் தரும்படியாக உள்ளது. நீங்கள் சொல்வது போல் ஒன்று, இரண்டு எடுத்துக் கொண்டால் வயிறு நிறைந்து விடும் என்றே தோன்றுகிறது. இதுபோல் வெளி மாநிலங்களின் சுவையான ரெசிபிகளை அடிக்கடி பகிருங்கள். நானும் தாங்கள் கூறிய முறைப்படி ஒரு நாள் செய்து பார்க்கிறேன். இந்த இட்லி, தோசைதான் எங்கள் வீட்டில் அனைவருக்கும் போர் அடித்து விட்டது. சுவையான நல்லதொரு ரெசிபிக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னடா இது.... யாருமே இது வரை காணவில்லையே? என்று பார்க்கிறேன். நானே அதிசயமாக இப்படி என்றாவது ஒருநாள் வருகிறேன். :)))

      நீக்கு
    2. // இந்த இட்லி, தோசைதான் எங்கள் வீட்டில் அனைவருக்கும் போர் அடித்து விட்டது// - இதையேதான் பலர் சொல்கின்றனர். சொல்லும் த்வனி என்னவோ... சாப்பிடுபவர்களுக்குப் பிடிப்பதில்லை என்று அவர்களைக் குறை சொல்வதுபோலவே வந்துவிடுகிறது. இவங்கள்லாம் என்ன பண்றாங்கன்னா மொத்தமா இட்லி மாவு அரைத்து வைத்து, ஒரு நாள் இட்லி மி.பொடி, இன்னொருநாள் இட்லி சட்னி/சாம்பார், அடுத்த நாள் தோசை, அதற்கு அடுத்த நாள் இட்லி உப்மா, அதற்கு அடுத்த நாள் ஊத்தாப்பம் என்று ஒரே வேஷ்டியை வித விதமா அயர்ன் பண்ணி திரும்பத் திரும்ப உடுத்திக்கொள்ளச் சொல்வதுபோலச் செஞ்சுடறாங்க. அப்புறம் எங்களுக்கு போரடிக்கக் கேட்கவா வேணும்? வாரத்தில் ஒரு நாள் செய்யும் டிபன், அந்த வாரம் திரும்ப வராமல் பாத்துக்கணும், அதிலும் இரு வாரங்களுக்கு ஒரு முறை என்று இருந்தால் போரடிக்காது. இதையெல்லாம் இவங்களுக்கு யார் சொல்லுவது?

      நீக்கு
    3. கமலா, உங்களோட கருத்தை இப்போத் தான் கவனிச்சேன். இதுவும் ஒரு முறை செய்து பாருங்க. நீங்க "பெண்"களூரில் இருப்பதால் அக்கம்பக்கம் கன்னடக்காரங்க கிட்டேக் கேட்டு அக்கி ரொட்டியும் பண்ணிப் பார்க்கலாம். இரண்டுமே கொஞ்சம் ஹெவியான உணவு தான். எங்க வீட்டிலும் இந்த மாவு அரைச்சாக் கொஞ்சம் கூட நாள் வந்தால் எல்லோருடைய முகமும் சுருங்கி விடும். நடுவில் ஒரு நாள்/இரண்டு நாள் மாவை நிறுத்திவிட்டு வேறே ஏதானும் பண்ணிடுவேன்.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா நெல்லை சரி அப்ப நீங்க கிச்சன் டிப்பார்ட்மெண்டை 2 மாசம் எடுத்துக்கோங்க!!! பாவம் பசங்க!!!!

      கீதா

      நீக்கு
    5. இன்படியே அக்கிரொட்டி, தாலிபீத் என்றெல்லாம் பண்ணி, கடைசியில் பாரம்பர்யமான, புழுங்கலரிசி சேவை எப்படிப் பண்ணுவது என்பதே உங்கள் எல்லோருக்கும் மறந்துவிடப் போகிறது.

      நீக்கு
    6. http://geetha-sambasivam.blogspot.com/2012/09/blog-post_6315.html அது எப்படி மறப்போம்? சேவை நாழியை வைச்சுண்டு! பா.வெ. திடீர்னூ என்ன வட இந்திய உணவுகளுக்கு எதிர்ப்பு?

      நீக்கு
    7. அது பா.வெ இல்லை. இந்தப் .... ஹா ஹா

      நீக்கு
    8. ஓஓ, அதானே பார்த்தேன்! ஆச்சரியமா இருந்தது. பா.வெ. அவ்வளவு சீக்கிரமா வர மாட்டாங்களேனு நினைச்சேன். :) எப்போவும் அவங்க தான் அநானியா வருவாங்களா! அதான் அவங்களோனு நினைச்சுட்டேன்.

      நீக்கு

  3. தாலி பீத்.. தாலி என்றதும் ஏதோ மங்களகரமான நாளுக்கு செய்யும் உணவோ என்று நினைத்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகத் தாலி என்றால் மராட்டியில் தட்டு அல்லது முழு உணவு என எந்தப் பொருளில் வேணாலும் வரும். ஓட்டல்களில் பஞ்சாபி தாலி, குஜராத்தி தாலி எனச் சொல்வார்கள். அவங்களோடு முழு உணவை அது குறிக்கும். தாலி பீத் என்னும் இந்த உணவு முழுமையான உணவு உண்ட திருப்தியைக் கொடுப்பதால் இந்தப் பெயரில் வந்திருக்கலாம். :)

      நீக்கு
  4. அடை போலவேதான் இருக்கிறது நன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம அடைதான். அவங்க வேறே கலவையில் வேறே மாதிரிப் பண்னறாங்க! :)

      நீக்கு
  5. புதிதாக இருந்தாலும் நன்றாக உள்ளது...

    பதிலளிநீக்கு
  6. கீதாக்கா தாலிபீத் செய்முறை குறிப்பு நல்லாருக்கு.

    நானும் சில சமயம் இருக்கும் பொருளை வைத்துச் செய்துவிடுவதுண்டு. கொஞ்சநாள் முன்புதான், கம்பு மாவு கோதுமை மாவு கடலைமாவு எல்லாம் போட்டுச் செய்தேன். ஆனால் அன்று தொட்டுக் கொள்ள ஆவக்காயும், தயிறும் என்று ஒப்பேற்றிவிட்டேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிறும் - தயிரும்

      ஆமாம் சூடாகச் சாப்பிட வேண்டும்.

      கீதா

      நீக்கு
    2. சும்மா வீட்டுல மிச்சம் இருக்கிற மாவுகளையெல்லாம் சேர்த்து ஒரு ரொட்டி பண்ணி, மிஞ்சின மாவு வாசனை வந்துடக்கூடாது என்பதற்காக வெங்காயம் சேர்த்து, அதுக்கு ஒரு பெயரைக் கொடுத்து, இருக்கும் ஆவக்காய் ஊறுகாய் தயிர் என்று இந்தப் பெண்கள் ஒப்பேற்றிவிடுவார்களோ என்று பயந்துதான் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று முன்பேயே சொல்லிவிட்டேன். ஹா ஹா

      நீக்கு
    3. இப்படியெல்லாம் கூட இருக்குதா!..

      நீக்கு
    4. ஹாஹாஹா நெல்லை... இன்னும் உங்களைக் காணலையேன்னு பார்த்தேன். திரும்பவும் திருப்பதி லட்டு சாப்பிட போய்ட்டீங்களோன்னு!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    5. கிட்டத்தட்ட நெல்லை சொல்லுவது போலத் தான் மராட்டிப் பெண்கள் தினம் தினம் கோதுமை மாவு ரொட்டி பண்ணிச் சாப்பிட்டு அலுத்துப் போவதால் இம்மாதிரி மாறுதலாகப் பண்ணுவார்கள். சாப்பிட்டால் அதுவும் சூடாகச் சாப்பிட்டால் நன்றாகவே இருக்கும்.

      நீக்கு
    6. //திரும்பவும் திருப்பதி லட்டு// இரண்டு மூன்று வருடங்கள் கழித்து திருப்பதி சென்றதால் நிறையவே லட்டு வாங்கினேன். அங்குமே நிறைய சாப்பிட்டேன். இந்தத் தடவை பெரிய லட்டு 200 ரூ வீதம் இரண்டு வாங்கினேன். உங்களை நினைத்துக்கொண்டு திருச்சானூர் தாயார் கோவிலில் லட்டு வாங்கினேன்...எப்படி உங்களுக்கு அனுப்புவது என்று தெரியாமல்போய்விட்டது.

      நீக்கு
    7. நெல்லை, என்னோட விலாசம் தான் உங்க கிட்டே இருக்கே? பேசாமல்/அல்லது பேசிக்கொண்டு எங்களுக்குக் கூரியரில் அனுப்பக் கூடாதோ? பெயர் எல்லாம் ஒண்ணு தானே! :)))))

      நீக்கு
  7. தாலிபீத் செய்முறை நன்றாகத்தான் இருக்கு.

    இதுக்கு இன்னொரு பெயர் அக்கி ரொட்டி என்று சொன்னால் சண்டைக்கு வருவாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் அக்கி ரொட்டிக்கு அரிசி மாவு மட்டும் தானே சேர்ப்பாங்க?

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா அக்கி ரொட்டிக்கு அரிசி மாவு மட்டும்தான்....நெல்லை சும்மா உங்களை வம்புக்கிழுக்கிறார்.

      குட்டிக் குஞ்சுலு வந்திருக்கிறாளோ! அதான் காணலையா உங்களை

      கீதா

      நீக்கு
    3. குஞ்சுலு நாளைக்கு வரப் போகிறது. இன்னிக்கு அதற்கான முன்னேற்பாடுகள் சில. அதோடு என்னமோ தெரியலை காலையிலிருந்து வயிறும் கொஞ்சம் பிரச்னை. ஒரு வாந்தி எடுத்து வயிற்றில் உள்ளதை வெளியேற்றினப்புறமாச் சரியா இருக்கு. இப்போச் சமைச்சுண்டு இருக்கேன். நடுவில் இன்னிக்குப் பதிவே பார்க்கலையேனு வந்தேன்.

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுக்குக்கொடுத்த பதில் காணோம். மெயில் பாக்ஸில் உடனே போய்ப் பார்க்கிறேன்.

      நீக்கு
    5. Geetha Sambasivam "திங்கக்கிழமை : தாலி பீத் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      குஞ்சுலு நாளைக்கு வரப் போகிறது. இன்னிக்கு அதற்கான முன்னேற்பாடுகள் சில. அதோடு என்னமோ தெரியலை காலையிலிருந்து வயிறும் கொஞ்சம் பிரச்னை. ஒரு வாந்தி எடுத்து வயிற்றில் உள்ளதை வெளியேற்றினப்புறமாச் சரியா இருக்கு. இப்போச் சமைச்சுண்டு இருக்கேன். நடுவில் இன்னிக்குப் பதிவே பார்க்கலையேனு வந்தேன்.

      நீக்கு
    6. மெயில் பாக்சில் இருந்து போட்டேன். திரும்பியும் போயிடுச்சே! :(

      நீக்கு

    7. Geetha Sambasivam
      11:03 AM (4 minutes ago)
      to me

      Geetha Sambasivam "திங்கக்கிழமை : தாலி பீத் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      Geetha Sambasivam "திங்கக்கிழமை : தாலி பீத் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      குஞ்சுலு நாளைக்கு வரப் போகிறது. இன்னிக்கு அதற்கான முன்னேற்பாடுகள் சில. அதோடு என்னமோ தெரியலை காலையிலிருந்து வயிறும் கொஞ்சம் பிரச்னை. ஒரு வாந்தி எடுத்து வயிற்றில் உள்ளதை வெளியேற்றினப்புறமாச் சரியா இருக்கு. இப்போச் சமைச்சுண்டு இருக்கேன். நடுவில் இன்னிக்குப் பதிவே பார்க்கலையேனு வந்தேன்.
      மூன்றாம் முறையாவோ என்னமோ போடறேன். இனியும் காணாமல் போனால் திரும்பத் தேடப் போவதில்லை. :(

      நீக்கு
  8. இதெல்லாம் எனக்கு செரிக்காது... என்று நானே சொல்லிவிடுவேன் (அரிசி அடை, தேங்காயடை....).

    உள்ளூர் பச்சரிசிமா உப்புமா, நிறைய மோர் மிளகாய் வறுத்துப்போட்ட மோர்க்கூழ் போன்றவையே செரிப்பதில்லை. இதுல தாலிபீத் என்று மாவில் செய்வது செரிக்கவா போகுது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னெல்லாம் இந்த மோர்க்கூழை என் அம்மா சின்ன இரும்புச் சட்டியில் (இலுப்பச்சட்டி தோசை வார்க்கும் சட்டி) கிளறிச் சுடச் சுடக் கொடுப்பாங்க. அப்படியே கையில் வாங்கி (கை சிவந்துடும்) வாயில் போட்டுப்போம். அது மோர் காரணமா கிளறிய மனிதர் காரணமா, மனசு காரணமா அல்லது அரிசி மாவு காரணமா தெரியாது. அந்த ருசி இப்போ இல்லை. இப்போவும் திடீர்னு நினைச்சுண்டு வெண்ணெய் எடுத்தால் கடைந்த மோரில் மோர்க்கூழ், பச்சரிசிமா உப்புமா எனப் பண்ணுவது உண்டு. எனக்குக் கொஞ்சம் நெஞ்சைக்கரிக்கத் தான் செய்யும்.

      நீக்கு
    2. நெல்லை தாலிபீத் செரிக்கும். நீங்க சொல்லிருக்கறது எல்லாமே எனக்கும் செரிக்க கொஞ்சம் கஷ்டப்படும்...ஆனால் ந்டை, வேலைன்னு செய்யறப்ப வரதில்லை. நான் சாப்பிடும் அளவும் கம்மியாக்கிடுவேன்

      இன்னொன்னு நீங்க சொல்லிருக்கறது எல்லாம் கொஞ்சம் கூடுதல் எண்ணை சேர்க்கப்படும் பதார்த்தங்கள்!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. //அது மோர் காரணமா கிளறிய மனிதர் காரணமா, மனசு காரணமா அல்லது அரிசி மாவு காரணமா தெரியாது. // - முன்னெல்லாம் வேறு ருசி நம் நாக்குக்குத் தெரியாது. ஹோட்டலுக்குச் செல்வதெல்லாம் வழக்கத்திலேயே இல்லாத காலம். அதனால சின்ன வயசுல சாப்பிட்ட ருசி நாக்கிலேயே இருந்தது. கீசா மேடத்துக்குப் புரியும்படிச் சொல்றதுன்னா.... தூர்தர்ஷன் மாத்திரம் டிவியில் வந்தபோது, செவ்வாய் நாடகம், வெள்ளி ஒலியும் ஒளியும், ஞாயிறு திரைப்படம் (எவ்வளவு பாடாவதிப் படமாக இருந்தாலும்) என்று காத்திருந்து வாயைப்பிளந்துகொண்டு பார்த்ததைப் போன்ற காலம் அது. இப்போ, வெத்தலை பாக்கு வச்சுக்கூப்பிட்டு தூர்தர்ஷன் போட்டாலும், பின்னங்கால் பிடரியில் படும்படி ஓட்டமெடுத்துவிடுவோமே.

      நீக்கு
    4. வீட்டிலே தொலைக்காட்சி வந்து விட்டாலும் ஞாயிறுப் படங்கள் எல்லாத்தையும் பார்க்க மாட்டேன். :))))) எனக்குப் புத்தகங்களுக்குப் பின்னரே இதெல்லாம். ஆகவே ஏதானும் புத்தகம் படிச்சுண்டு உட்கார்ந்திருப்பேன் அநேகமா! ஆனால் இந்த விருது வாங்கிய படங்கள்னு மத்தியானங்களில் போடுவாங்க பாருங்க பன்மொழித் திரைப்படங்கள். அதெல்லாம் பிடிக்கும். பார்ப்பேன். நான் மட்டும் தனியாக! :)))) எல்லோரும் தூங்குவாங்க அப்போ!

      நீக்கு
  9. இங்க சிலபேர், படங்கள் தெளிவா இல்லை, ப்ளர்டா இருக்குன்னு குறை சொல்ல வந்துடுவாங்க. சில சமயம் படம் ப்ளர்டா அமைந்துவிட்டால், நாம தலையை ஆட்டி ஆட்டிப் பார்த்தால் படம் தெளிவா இருப்பது போலத் தோன்றிவிடும். இது என்னாலான டிப்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, நான் தான் சொல்லிட்டேனே படம் சரியா வரலைனு! அதான் மத்தப்படங்களைப் போடலை!

      நீக்கு
    2. Geetha Sambasivam "திங்கக்கிழமை : தாலி பீத் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      ஹாஹாஹா, நான் தான் சொல்லிட்டேனே படம் சரியா வரலைனு! அதான் மத்தப்படங்களைப் போடலை!

      நீக்கு
    3. பதிலை மெயில் பாக்சில் இருந்தாப் பாருங்க!

      நீக்கு
  10. //ஒரு சமயத்தில் தினம் ஒரு புது வித உணவு தயாரிப்பில் ஈடுபடுவேன்.// - இந்தப் பெருமைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் எதையோ பண்ண ஆரம்பித்து எங்கோ முடிந்துவிடுவதற்கு புதிதாக நாமகரணம் செய்து 'புதுவித உணவு' என்று சிலர் சொல்வதுபோல எனக்குத் தோன்றுகிறதே.. இது என் தவறா இல்லை செய்பவர்கள் தவறா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமா உங்க தப்பு. எதையோ பண்ண ஆரம்பிக்கலை. தாலி பீத் தான் பண்ண ஆரம்பிச்சேன். அதிலே தான் முடிஞ்சது. புதுவித உணவு என்பது நமக்குத் தான். மராட்டி.குஜராத்திக்காரங்களுக்கு இல்லை.

      நீக்கு
    2. இதுக்கும் மெயில் பாக்சைத் தான் பார்க்கணும்.

      நீக்கு
    3. உங்க தவறுதான்னு சொன்ன பதிலை மெயில் பாக்சில் போய்த் தேடுங்க! ஶ்ரீராம் ஏன் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை? நேற்று, முந்தாநாள், இன்று 3 நாட்களும் காணவே இல்லையே?

      நீக்கு
    4. திங்கட்கிழமைகளில் செவ்வாயில் எல்லாம் பெரும்பாலும் நான் எட்டிப் பார்ப்பதில்லையே கீதா அக்கா...   புதுசா கேட்கறீங்களே...  ஆனால் எல்லோர் பதிவுகளுக்கும் சென்று படித்து கமெண்ட்டி கொண்டுதான் இருக்கிறேன்!

      நீக்கு
    5. அப்படியா? நான் இதை அவ்வளவாக் கவனித்தது இல்லை. சமையல் பதிவுகளில் முன்னெல்லாம் நீங்களும் கருத்துச் சொல்லிக் கொண்டிருந்த நினைவு.

      நீக்கு
  11. இதுக்கு புளி மிளகாய் ரொம்பவே நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். காலைல ஊறுகாய், தயிர்னுலாம் தொட்டுக்கொண்டு சாப்பிடப் பிடிப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளி மிளகாய் அன்னிக்கே அரைச்சு அன்னிக்கே வார்க்கும் கல் தோசைக்கும், ஃபுல்கா ரொட்டிக்கும் மோர் சாதத்துக்கும் அருமையான துணை.

      நீக்கு
  12. இனிய காலைப் பொழுதில் அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  13. அரிசி அடைதான் அடுத்தொரு அவதாரம் எடுத்திருக்கின்றது..

    ஆனாலும் கையில் கிடைத்தால் சரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா. அப்படியும் வைச்சுக்கலாமே! தப்பில்லை!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கும் மெயில் பாக்சில் பார்க்கணும். :( இன்னிக்குப் போட்ட கருத்துகளில் பாதி கூட இங்கே தெரியலை! :(

      நீக்கு
    3. பெங்களூர்ல இரண்டு வாரங்களாக வானம் மேகமூட்டம், அவ்வப்போது சரியான மழை, தூரல், குளிர் என்று ஜெகஜ்ஜோதியாக இருக்கிறது. இன்றைக்கு குனுக்கு பண்ணச் சொல்லலாமா என்று யோசிக்கிறேன். சூடாக எது சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும் போலிருக்கு. தமிழகத்துல குளிர், மழை லாம் இருக்கா?

      நீக்கு
    4. இங்கே காற்றுப் பிச்சு வாங்குகிறது. காலை ஒன்பது மணி வரை சூரியனார் வருவாரா மாட்டாரா என்பது சஸ்பென்ஸாக இருக்கும். பின்னர் வந்தால் கூட சோம்பல் முறித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்! :)))) இப்போக்கூட இளம் வெயிலில் காற்று வேகம் தாங்கலை. :) மழை போன வாரமெல்லாம் பெய்தது. இப்போ இல்லை. ரெட் அலர்ட் கூட மொபைலில் வந்தது. வெள்ளம் குறித்த வார்னிங் மெசேஜில் வந்து கொண்டே இருந்தது. இப்போத் தான் சிவப்பு விளக்கு அணைஞ்சிருக்கு மொபைலில்.

      நீக்கு
    5. நாங்க ஒரு வாரமா ஏசி போட்டுக்கறது இல்லை. மின் விசிறி தான். நடு இரவில் கொஞ்சம் வேர்க்கும். மற்றபடி ஓகே!

      நீக்கு
  14. தாலி பீத் நன்றாக இருக்கிறது . ஹெவியான உணவுதான்.

    பதிலளிநீக்கு
  15. தாலி பீத் நன்றாக இருக்கும் போல!
    மசாலா பொருட்கள் சேர்க்காமல் செய்தால் அடை போல இருக்கும் என்று நினைக்கிறேன்.
    கடலை மாவு , அவல், உளுத்தமாவு, அரிசிமாவு கலவை என்பதால் அடை ருசியில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசாலா பொருட்கள் சேர்க்காமல் அடைக்குப் போடுகிறமாதிரி பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், பெருங்காயம் உப்புச் சேர்த்து அரைத்து மாவில் கலந்து கொண்டு மு.கீரை. வெ.கீரை அல்லது சி.வெ. அல்லது வாழைப்பூப் போன்றவற்றோடும் பண்ணலாம்.

      நீக்கு
    2. அடையை அரைத்துத் தட்டுவோம். இது பிசைந்துத் தட்டுவது.அந்தந்த மாவட்டத்து ஸ்பெஷல். விரும்புவர்களுக்கு எல்லாமே ஸ்பெஷல்தான்.ருசிக்கலாம் ஸ்பெஷலை. அன்புடன்

      நீக்கு
    3. நன்றி அம்மா. நமஸ்காரங்கள். உங்கள் சிறுதானியக் குழி அப்பப் பதிவில் கொடுத்த கருத்துகள் காணாமல் போய்விட்டன. பின்னர் மெயில் பாக்சுக்கு வருதானு பார்க்கணும். :(

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!