வெள்ளி, 5 மே, 2023

வெள்ளி வீடியோ : பொன் வண்ணக் கலசம் பூவண்ணக் கவசம் கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ

 நியூஸ் ரூம் 





உங்களை ஏமாற்ற, ஏமாற்றி பணம் பறிக்க விதம் விதமான முயற்சிகள் எடுக்கின்றனர்.  உஷார்!


கேட்க நன்றாய் இருந்தாலும், சாதனை போல தோன்றினாலும், என் மனதில் இது மாதிரி சமயங்களில் உடனே தோன்றுவது..  'இத்தனை பேர்களுக்கும் தண்ணீருக்கு எப்படி ஏற்பாடு செய்வார்கள்?'  காலம் அப்படி இருக்கிறது!

இத்தனை பெண்கள் எதற்கு டிக்கெட் வாங்க வருகிறார்கள்?  படித்த பெண்களாய் இருந்தாலும் பரவாயில்லை.  நான் குறையாய் சொல்லவில்லை.  இவர்களுக்கெல்லாம் உண்மையிலேயே விளையாட்டைப் பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்குரியதா?  தலை நரைத்த மாதுக்களும் இதில் அடக்கம்.

ஒரு காவல்துறை அதிகாரியாக நான் என்னுடைய வேலையைத் தான் செய்தேன். இரவு 10 மணிக்கு மேல் பொது வெளியில் இசையை சத்தமாக ஒலிக்க விடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான் முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகினேன். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்பதாலேயே மேடையில் ஏறி ரஹ்மான் மற்றும் பிற இசைக் கலைஞர்களிடம் நிறுத்துமாறு கூறினேன். அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


================================================================================================================================



இன்றைய தனிப்பாடல்  

உள்ளத்திலே கோயில் கட்டி உன்னை அங்கு குடி வைப்பேன் 
எண்ணத்திலே தொட்டில்கட்டி என்னரசே தாலாட்டுவேன் 

கள்ளமில்லாத பிள்ளையப்பா கருணையுள்ள தெய்வமப்பா 
கள்ளமில்லாத பிள்ளையப்பா  கருணையுள்ள   தெய்வமப்பா 
வாழ்வுதரும் கந்தப்பா தந்தருள்வாய் வேலப்பா  - உள்ளத்திலே 

உன்புகழைப் பாடிவந்தேன் உனதருளை நாடிநின்றேன் 
உன்புகழைப் பாடிவந்தேன் உனதருளை நாடிநின்றேன்
ஓம்கார உருவே வா வா உயிர் ஞான குருவே வா  வா 
ஓம்கார உருவே வா வா உயிர் ஞான குருவே வா  வா - உள்ளத்திலே 

தத்திமி தோமென்று ஆடிவரும் வீரவேல்
தத்திமி தோமென்று ஆடிவரும் வீரவேல்\
தஞ்சமென்றொருக்கருள் தருவதும் சக்திவேல் 
தஞ்சமென்றொருக்கருள் தருவதும் சக்திவேல் 
தகதகிட தகதகிட என்றாடும் வெற்றிவேல் 
தகதகிட தகதகிட என்றாடும் வெற்றிவேல் 
தயவுடன் அன்பர்க்கருள் தரும் ஞானவேல் 
தயவுடன் அன்பர்க்கருள் தரும் ஞானவேல் 
தததஜம் தகிடஜம் என்றாடும் வயிரவேல் 
தததஜம் தகிடஜம் என்றாடும் வயிரவேல் 
தத்துவப் புகழ் பாடும்  ஷண்முகன் கைவேல் 
தத்துவப்  புகழ் பாடும்    ஷண்முகன் கைவேல்

வெற்றிவேல் வீரவேல்  


***********************************************************

இன்றைய திரைப் பாடல்

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது 
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது 
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது 
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது 
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது  
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது  

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண 
விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண 
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண 
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண 
இளமையை நினைப்பது சுகமோ முதுமையை ரசிப்பது சுகமோ 
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை துடைப்பது சுகம்தானோ . 

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது . 

நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள் ஆற்றில் நீந்தி வர 
நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள் ஆற்றில் நீந்தி வர 
நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர 
நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி காவியம் பாடி வர 
சூரியன் ஒளியில் மின்ன தோகையின் விழிகள் பின்ன 
பொன் வண்ணக் கலசம் பூவண்ணக் கவசம் கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ

49 கருத்துகள்:

  1. இன்றைக்கு வெள்ளியா சனியா என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. உயர கட்டிடங்கள் - பெங்களூரில் வீடுகளுக்கு காவேரி நீர் கனெக்‌ஷன் உண்டு. அடுக்குமாடிக் குடியிருப்புகளால், அனுக்குமாடிகளுக்கு 30-40 சதம் காவேரி, மற்றது போர் மற்றும் வெளியிலிருந்து வரும் நீர், மூன்றும் கலப்படம் என்றாகிவிட்டது. வரும்எஆலத்தில் பெரிய பிரச்சனையாக இருக்கும்.

    சென்னை... கேட்கவே வேண்டாம். ஜெ மாத்திரம் சில ஏற்பாடுகளைச் செய்திருக்காவிட்டால், தண்ணீர் பிரச்சனை இன்னும் பூதாகரமாகியிருக்கும். ஏரிகளையெல்லாம் நிலமாக்கினால் என்னாகும்?

    பீர்க்கங்கரணை ஏரி கடல் போல இருந்தது (87-95 வரை). ஆக்கிரமிப்புக்குள்ளாகி இப்போ ரொம்பவே குளம் மாதிரி சுருங்கிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக தான் வரும் என்று எல்லோரும் கணிக்கிறார்கள்.  மனிதன் பூமியை உறிஞ்சிக் கொண்டிருக்கிறான்.  மழை நீரை வீணடித்துக் கொண்டிருக்கிறான்.  பயமாகத்தான் இருக்கிறது.  நிச்சயம் என் இந்தப் பிறவியில் அவ்வளவு அவஸ்தைப் படமாட்டேன் என்று சொல்லலாம்.  ஆனால்...

      நீக்கு
    2. ஜெ யின் உத்தரவை பெயரளவில் நிறைவேற்றியவர்களே அதிகம்.

      நீக்கு
  3. ஐபிஎல் போட்டி... இவங்களுக்கு மாதம் ஆயிரம், வரி செலுத்துபவர்களிடமிருந்து கொடுத்தால் நாடு விளங்கிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீன் விற்பவர்கள், காய்கறி விற்பவர்கள் போல இருக்கும் பெண்கள் - மிக வயதான பெண்கள் கூட - இலவசம் வாங்க கியூ கூட்டத்தில் அடிபடுவது போல டிக்கெட் வாங்க ஏன் மெனக்கெட வேண்டும்?  பிளாக்கில் விற்கவா?  மேட்ச் பார்க்கவா?  புதிர்.

      நீக்கு
  4. இரு பாடல்களைப் பற்றியும் கருத்தில்லை. காமா சோமா பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ.. என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்!

      நீக்கு
  5. நாடு வளருகிறது மக்களுக்கு வளர்ச்சி இல்லை.

    முதலாவது பாடல் கேட்டதுதான்.
    இரண்டாவது பாடல் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் எண்ணிக்கை வளர்ச்சி அபாரமாக இருக்கிறது.  ஆனால் அதற்கான அவர்கள் வாசிப்பதற்கான முன்னேற்பாடுகளைதான் எந்த அரசும் செய்வதில்லை.  தான், தன் குடும்பம் ன்று கொள்ளையடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.  தொலை நோக்கு என்ற ஒன்று இல்லவே இல்லை எங்கும்.நன்றி ஜி.  பாடல்களை பற்றி சொன்னதற்கும் நன்றி.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    ஒரு விநாடி எனக்கு நாள் தடுமாற்றம் வந்து போனது. வித்தியாசமான இந்த முயற்சி இனி இரண்டாவது பாடலில் வரும் வார்த்தை போல தொடர்கதைதானா?:))

    பாடல்களைப் பற்றிய விபரங்களையும் எப்போதும் போல் விபரமாக பகிராமல் நிறுத்தி விட்டீர்களே ! ஒருவேளை ஏ. ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தியதால் வந்த வருத்தமா?

    இரண்டும் அடிக்கடி கேட்ட பாடல்கள்தான். இப்போதும் கேட்கிறேன்.

    சிவாஜி பாசமலர் படத்திற்குப் பின் சாவித்திரியுடன் இணைந்து ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று சொன்னதாக எங்கோ படித்தாக நினைவு. ஆனாலும், இதுதான் அவர்களின் "ப்ராப்த்தம்" போலிருக்கிறது. ஆ.. ஒரு மட்டும் படத்தின் பெயர் நினைவுக்கு வந்து விட்டது. சரிதானா?

    இன்று நான் இன்றைய நாளை புதனாகவும் மாற்றி விட்டேன் என நினைக்கிறேன். ஆனால், புதன்தோறும் அறிவுபூர்வமாக நம் சகோதர சகோதரிகள் கேட்கும் கேள்விகளுக்கு முன் இதெல்லாம் ஒரு கேள்விகளே இல்லை. இந்த உவமானம் கூட தவறுதான். மன்னிக்கவும்.

    இன்றைய வித்தியாசமான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டாவது பாடலில் வரும் வார்த்தை போல தொடர்கதைதானா?:))//

      ஆஹா...  சூப்பரா கனெக்ட் பண்ணினீங்க..  கொஞ்ச நாளாகவே (கடந்த டிசம்பர் முதல்!) நினைத்திருந்த முயற்சிதான் இது!  தொடர முயற்சிக்கிறேன்.

      பாடல்களையும் ரசித்து, வித்தியாசத்தையும் பாராட்டியதற்கு நன்றி.  செய்திகள் பற்றி ஒன்றும் அபிப்ராயம் இல்லையா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      செய்திகளைப்பற்றி என்ன சொல்ல.. ! வலிமை உள்ளவர்கள் தர்மத்திற்கு மாறாக தவறிழைத்தாலும் ஜெயிக்கிறார்கள்.

      நாற்பது மாடிகட்டிடங்கள் ஆபத்தானவை இல்லையா? நாற்பதாவது மாடியில் சென்று குடியிருப்பவர்கள உண்மையிலேயே தைரியம் மிக்கவர்கள்தான். இங்கும் அதே போல் பல உயரமான கட்டிடங்களை காண்கிறேன். ஏறிட்டு பார்க்கவே இயலவில்லை.

      கிரிக்கெட் டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்படுத்தி போலீசார்களை வரவழைத்த பெண்கள் அந்த வீரர்களை விட பலசாலிகள்தான். :)) எல்லாவற்றிலும் பணத்தின் மோகம் தெரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. நியூஸ் ரூம் புதிய செய்திதாள் பதிவு ஆராம்பித்து விட்டீர்களா?

    ரமணி அம்மாள் பாடல், அடுத்த பாடல் இரண்டும் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது இன்று கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடங்கி இருக்கிறோம்.... தொடர வேண்டும் என்று தான் ஆவல். பார்ப்போம்...

      பாடல்களை ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. தொடங்கி இருக்கிறோம்.... தொடர வேண்டும் என்று தான் ஆவல். பார்ப்போம்...

      பாடல்களை ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  10. சொந்தம் தொடர்கதை தான்... ஆனால் இப்போது ஆள் ஆளுக்கு பிச்சிட்டு போவதும் தொடர்கதை தான்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அதற்கும் இப்போது உடனே வந்து வாங்கிட்டு போங்க என்று விளம்பரம் வேறு...

      நீக்கு
  11. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  12. நேற்று முன்னிரவில் ஏற்பட்ட மின்தடை சற்று முன் தான் நிவர்த்தி ஆனது..

    பதிலளிநீக்கு
  13. /// தண்ணீர் பிரச்சனை இன்னும் பூதாகரமாகியிருக்கும். ஏரிகளை யெல்லாம் நிலமாக்கினால் என்னாகும்?..///

    அதான் காசு போட்டால் மது வழங்கும் மிஷின் வந்து விட்டதே..

    இனிமேல் ஏது பிரச்னை?..

    பதிலளிநீக்கு
  14. ரமணியம்மாள் அவர்களது பாடல்களைக் கேட்பதே தனியொரு சுகம்..

    பற்பல வருடங்களுக்குப் பின்பு இப்போது தான் கேட்கிறேன்..

    மகிழ்ச்சி.. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. yessssssu. எங்க பொண்ணு குழந்தையிலே ரமணி அம்மாள் பாடலைக் கேட்டாலே போதும் ஆட ஆரம்பிச்சுடுவா. இப்போ நினைச்சாலும் மனதில் சந்தோஷமாக இருக்கு.

      நீக்கு
    2. ஆமாம்.  உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்ளும்.  (நெல்லை காமா சோமா பாடல்கள் என்று குறிப்பிட்டிருந்தார்!)

      நீக்கு
  15. பிராப்தம் படத்தில் இனிமையான பாடல் இது.. அந்தப் படம் பெருந்தோல்வி.. அது நடிகையர் திலகத்தின் சொந்தத் தயாரிப்பு..

    மீண்டு எழ முடிய வில்லை..

    அவ்வளவு தான் பிராப்தம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்குக் காரணம் சாவித்திரிதான். அண்ணன் தங்கையா நடித்த படம் மிகப் பெரும் வெற்றி, பல நாட்கள் ஓடிய படம், பல முறை மக்கள் பார்த்த படம். அடுத்த படத்தில் கணவன் மனைவியா நடித்தா ஜீரணிக்க முடியுமா? பலர் சொல்லியும் பிடிவாதமாக சாவித்திரி தேடிக்கொண்ட எதிர்காலம் அது

      நீக்கு
    2. ​ஆம். கடைசியில் சிவாஜி மேல் பழி! அவரும் முடிந்த வரை எடுத்துச் சொல்லிப் பார்த்திருக்கிறார்.

      நீக்கு
    3. ஹிந்தியில் இந்தப் படம் நன்றாக இருக்கும். சுனில் தத், நூடன் என நினைக்கிறேன். பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஹிந்தி மூலத்தைப் பார்த்துட்டுத் தமிழைப் பார்த்தால் அழுகை தான் வரும். பொருந்தாத நடிக, நடிகையர்.

      நீக்கு
    4. ஆம்.  ஹிந்தியில் மிலன் என்கிற பேயரில் வந்தது.  "சாவான் கா மஹீனா"  பாடல் ரொம்பப் பிரபலம்.

      நீக்கு
  16. கோதாவரியோ துங்க பத்திரையோ அந்த லொகேஷன் வேண்டாம் என்று பலர் சொல்லியும் ந.. திலகம் கேட்கவே
    இல்லையாம்..

    எதிர்பாராத புயல் மழை..

    அவ்வளவு தான் பிராப்தம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம்தான். ஆனால் கவிஞரும், மெல்லிசை மன்னரும் குறை வைக்கவில்லை.

      நீக்கு
  17. எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது..
    - கவியரசர்..

    அதுதான்
    பிராப்தம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளவயதில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாம்.  அம்மா சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  18. நடிகையர் திலகம் செய்த தவறுபோல எபியும் செய்யுதோ? ஹா ஹா. நியூஸ் ரூமில் திரைச் செய்திகள் மாத்திரம் போட்டுவிட்டு, பாடல்கள் பகிர்ந்தால் ரெலெவண்ட் ஆக இருக்கும். செய்திச் சுருக்கம் போட, இது என்ன திரைப்படமா?

    பதிலளிநீக்கு
  19. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன்.
    பாடல்கள் படங்கள் பற்றிய கருத்துக்களையும் அறிந்தோம்.

    அனைவருக்கும் சித்திரா பெளர்ணமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!