புதன், 17 மே, 2023

பாலாபிஷேகம்!

 

ஜெயக்குமார் சந்திரசேகரன்: 

வட இந்திய முக்கிய உணவு சப்பாத்தி/ரொட்டி என்பதாகும். இது பல பெயர்களில் பல சுவைகளில் செய்கிறார்கள். உதாரணமாக பராந்தா, தந்தூரி ரொட்டி, ருமாலி ரொட்டி, நான், காக்ரா, தேப்லா என்று பல வகைகள். அதே போன்று பூரி வகைகளும். பூரி, லூச்சீ, பட்டூரா, கோல்கப்பா என்று வகைகள். இவைகளை பற்றிய விரிவான விளக்கம் தர யாராவது முன் வருவார்களா? ஒவ்வொன்றின் செய்முறையையும் திங்கட் கிழமை தொடர் பதிவாக வெளியிடலாம். படங்களுக்கு இணையம் உதவி செய்யும்.

# " இந்த மாதிரி , ருமாலி ரொட்டி, கோல்கப்பா என்பது போன்ற சமையல் குறிப்புகள் மிக எளிதாக இணையத்தில் கிடைக்கின்றன.  எனவே அவற்றை மீண்டும் ஒரு முறை நம் பதிவுகளில் போட வேண்டும் என்கிற தேவை இருப்பதாகத் தெரியவில்லை.

& இப்போதைக்கு நாம் வழக்கமாக செய்கின்ற வ இ உணவு வகைகள் என்று பார்த்தால், சப்பாத்தி, பூரி தவிர வேறு ஒன்றும் அவ்வளவாகத் தோன்றுவதில்லை. நான் சில மாதங்களுக்கு (வருடங்களுக்கு?) முன்பு பானி  பூரி pellets amazon ல் வாங்கி, அவற்றை மைக்ரோ வேவ் ஓவனில் பொரித்து, தக்காளி ரசத்தில் அவற்றை ஊறப் போட்டு சாப்பிட்டது உண்டு. சில சமயங்களில் அவற்றை நம் ஊர் உருளைக்கிழங்கு கறியுடன் கூட சாப்பிட்டது உண்டு. 

= = = = = = 

KGG பக்கம் : 

பாலாபிஷேகம் : 

ஐந்தாம் வகுப்பு படித்தபோது மதிய உணவு திட்டம் இருந்தது என்று சொன்னேன் அல்லவா? அப்போது, எல்லோருக்கும் மாலை நேரத்தில், (பவுடர்) பால் வழங்கும் திட்டமும் இருந்தது. 

மதிய உணவு சமைத்து, உண்டு, தட்டுகள் மற்றும் பாத்திரங்கள் கழுவி வைக்கப்பட்டவுடன், உணவு தயாரிக்க உதவச் சென்ற அதே ஐந்தாம் வகுப்பு மாணவ மணிகள், அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட பால் பவுடர் பாக்கெட்கள் சிலவற்றைப் பிரித்து, பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் கலக்கி, பால் தயார் செய்து அதைக் காய்ச்சுவார்கள். 

அது எனக்கு புதிய பள்ளிக்கூடம், புதிய வகுப்பு, புதிய நண்பர்கள் என்பதால், நடப்பவை எல்லாவற்றையும் வினோதமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். என்னுடைய வகுப்புக்குப் பக்கத்தில்தான் மதிய உணவு + பால் காய்ச்சும் சமையல் அறை. தடுப்புகள் எதுவும் கிடையாது. அங்கு நடப்பவை எல்லாவற்றையும் வகுப்பில் அமர்ந்துள்ள இடத்திலிருந்தே பார்க்க முடியும். 

பள்ளிக் கூடத்தில் சேர்ந்த நாள் அன்று, மதிய உணவு இடைவேளையில்  பால் காய்ச்சும் பணி ஆரம்பிக்கும் நேரம். நான் வீட்டிலிருந்து முன்பே சாப்பிட்டு வகுப்புக்குத் திரும்பி வந்துவிட்டேன். அப்போது என்னுடைய வகுப்பு லீடர் என்னிடம் வந்து, ' தருவது தந்தால் போதும் என்று வாங்கிக் கொள்வாயா ? ' என்று கேட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'சரி' என்று தலையாட்டினேன். 

சமையல் அறையிலிருந்து ஒரு பாக்கெட் எடுத்து வந்து, என்னிடம் 'கையைக் காட்டு ' என்றான். ஒரு கையை தீர்த்தம் வாங்க கையை நீட்டுவதுபோல நீட்டினேன். " இரண்டு கைகளையும் சேர்த்துக் காட்டு " என்றான். அப்படியே செய்தேன். 

இரண்டு கைகளிலும், பாக்கெட்டிலிருந்த பால்  பவுடரைக் கொட்டி, " யாரும் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் தின்றுவிடு " என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். என் வாழ்க்கையில் பால் பவுடர் என்ற ஒன்றை சுவைத்தது அதுதான் முதல்! அதன் சுவை எனக்குப் பிடித்திருந்தது! நான் பிறந்த காலத்தில், இந்தியாவில் கடும் பஞ்சம் நிலவிய காலம். நான் வளர்ந்தது எல்லாம் பவுடர் பால் சாப்பிட்டுத்தான் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ இன்றுவரை எனக்கு பால் பவுடர் மிகவும் பிடிக்கும். இப்பொழுதும் கூட வீட்டில் பால் பவுடர் ஸ்டாக் வைத்துள்ளேன். சத்துமாவு கஞ்சி, அவசர சுக்கு காபி தயாரிக்க உதவும் என்பதால். தினமும் காலையில் ச மா கஞ்சி தயார் செய்யும்போது கஞ்சிக்கு ஒரு ஸ்பூன் பவுடர், எனக்கு அரை ஸ்பூன் பவுடர்! 

நிற்க. 

எல்லா மாணவர்களுக்கும் மாலையில் விளையாட்டு பீரியட் ஆரம்பம் ஆகும் முன்பு ஒரு டம்ளர் பால் விநியோகிக்கப்படும். சில மாணவர்கள் அவர்கள் கொண்டு வருகின்ற டம்ளர் உபயோகிப்பார்கள். சிலர் வீட்டில் இருந்து கொண்டு வருகின்ற காலி ஹார்லிக்ஸ் பாட்டிலில் பாலை வாங்கி, மூடி வைத்து, வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். தம்பி, தங்கைக்குக் கொடுக்க என்று சொல்வார்கள். எனக்கு பால் பவுடர் பிடித்த அளவுக்கு, சர்க்கரை இல்லாத (அல்லது குறைந்த அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட ) பால் பிடிக்கவில்லை. 

வீட்டில் வந்து அம்மாவிடம் அன்று வகுப்பில் நடந்தது எல்லாவற்றையும் சொன்னேன். அம்மா உடனே, " அப்படியா ! நாளை முதல் நீயும் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் எடுத்துப் போ. பாலை வாங்கி வந்து என்னிடம் கொடு. நான் அதில் தயிர் செய்கிறேன்" என்று சொன்னார். 

அவ்வாறே ஹார்லிக்ஸ் பாட்டில் எடுத்துச் சென்று பாட்டில் கழுத்து வரைக்கும் பால் வாங்கி, அதை சரியாக மூடி எடுத்து வந்து அம்மாவிடம் கொடுப்பேன். அம்மா அதில் தயிர் தயாரித்துவிடுவார், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்கும் மறுநாள் தயிர் சாதம். 

சில காலம் எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்தது. 

ஒரு நாள் மதியம் வீட்டிலிருந்து சாப்பிட்டு புறப்படும்போது காலி பாட்டில் தேடினால் - வழக்கமாக எடுத்துச் செல்லும் ஹார்லிக்ஸ் பாட்டிலில் பாதி அளவு தயிர் மீதி இருந்தது. ஆகையால் அம்மா ஒரு சானடஜன் பாட்டில் எடுத்து தயார் செய்து அதனுடைய மூடி கிடைக்காததால் வேறு ஏதோ மூடியுடன் கொடுத்தார். 

அதில் பால் வாங்கி, சரியாக மூட வராததால், புத்தகப் பையை நேராக வைத்து, அதில் பால் பாட்டிலை நேராக நிற்க வைத்து, மரத்தடியில் வைத்துவிட்டு வந்தேன். விளையாட்டு நேர விளையாட்டுகள் எல்லாம் முடிந்தது. 'வீட்டுக்கு பெல் ' அடித்தவுடன் எல்லோரும் ஓடிச் சென்று அவரவர்களின் புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடுவார்கள். நான் எப்போதும் அப்படி அவசரமாக ஓடுவது கிடையாது. கடைசி ஆளாக என்னுடைய பையை எடுத்துக் கொண்டு நிதானமாக வீடு நோக்கி நடப்பேன். அன்று பார்த்தால் ஏதோ ஒரு அவசரக்குடுக்கை மாணவன், அவசரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்னுடைய புத்தகப் பையை சாய்த்துவிட்டு சென்றுவிட்டான். 

பால் பாட்டில் கவிழ்ந்து, என்னுடைய ஸ்லேட், புத்தகங்கள் எல்லாவற்றிற்கும் பாலாபிஷேகம் நடந்திருந்தது. புத்தகங்களை வெயிலில் உலர்த்தி ஓரளவுக்கு நல்ல நிலைக்குக் கொண்டுவர சில நாட்கள் ஆனது. அன்றோடு பாலுக்காக பாட்டில் கொண்டு செல்லும் வழக்கத்தையும் நிறுத்திவிட்டேன். 

= = = 

அ ப பற்றி எ பி ஆசிரியர்கள் குறிப்பு : 


அப்பாதுரை பக்கம் : 

எச்சரிக்கை 01: 

கொஞ்சம் அரசல் புரசல் விரசலா (மா) ஒரு பதிவு.

எச்சரிக்கை 02: 

முதிர்ந்த வாசகருக்கு மட்டும்

பழம்பெரும் மனிதர்

இரண்டு விஷயங்கள் இந்தப் பதிவுக்கான வித்து. முழு விவரம் கடைசியில். அவசரம்னா எகிறிப் பார்த்துட்டு இங்கே வந்துருங்க. அ இல்லேனா தொ படிங்க.

1. அ.நி.பொ.ச | போன வருடம் வேகஸ் போன போது அங்கே இந்தச் சங்கத் தலைமையகம் செயல்படுவதைக் கவனித்தேன். 'ஊதா நிறப் பூனை வளர்ப்பவர் சங்கம்'ன்ற அளவுக்கு அததற்கும் ஆளாளுக்கும் ஒரு சங்கம் கழகம்னு இருக்குதே இப்போ... இவங்களை விடுவானேன்?

2. அன்னாசிப் பழம். இந்தப் பழத்துக்கு இப்படி ஒரு பயனா?

பல்துணைக் கலாசாரம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஒண்ணும் பெரிய விஷயமில்லே.  "உன் பசங்களும் என் பசங்களும் நம்ம பசங்களோட வெளியே போய் விளையாடறாங்க"னு சொல்ற மேலைக் கலாசாரம் பத்தி நம்ம துரை செல்வராஜு ஐயா ஒரு பின்னூட்டத்துல எழுதியிருந்தாரு, நினைவிருக்கலாம். இது கொஞ்சம் மேலே மேலைனு வைங்களேன். "உன் புருஷனும் என் பெண்டாட்டியும் வெளியே போய் விளையாடறாங்க"னு சொன்னா அது பல்துணைக் கலாசாரம். அம்புட்டுதேன்.

அறுபதுகளில் லன்டன் எண்பதுகளில் ஆம்ஸ்டர்டேம் போன்ற இடங்களில் நிழலாகத் தொடங்கி அமெரிக்காவில் பரவிய இந்த கலாசாரம் இடையில் பல வருடங்கள் காணாமல் போயிருந்தது. (எயிட்ஸ் பரவல் ஒரு காரணம்). சென்ற பத்து ஆண்டுகளில் மெள்ளத் துளிர்த்த இந்த கலாசாரம், கோவிட் அடங்கத் தொடங்கிய பிறகு ஒரு இயக்கம் போல வளர்ந்திருக்கிறது. 

கள்ள உறவு என்றெல்லாம் எதற்கு அனாவசியமாக அலட்ட வேண்டும்? பல்துணை கலாசாரம் என்று பொதுவில் வைத்தால் போயிற்று!  பல்துணை கலாசாரம் பேணுவோர் பாதுகாப்புக்காக சட்டம் கொண்டு வரப் போறாங்களாம் க்லாஸ்டர்ஷைர் மாகாணத்தில்! இங்கிலாந்து இந்தக் கலாசாரத்தில் இப்போ உலக நம்பர் ஒன். எதுலயாவது நம்பர் ஒன்னா இருக்க வேண்டாமா? 

பழகும் விருப்பத்துடனோ அல்லது அறியும் ஆர்வத்துடனோ fabswingers இணைய தளத்தில் உறுப்பினராகலாம்.  சுலபமாக உறுப்பினராக முடியாது எனினும், ஏற்றுக்கொள்ளப்படால் எல்லாம் பரம ரகசியமாகக் கையாளப்படும்.  பல்துணைக் கலாசாரத்தை சரியான புரிதல் இல்லாமல் moral judgment செய்யும் வழக்கம் இருப்பதால் இந்தப் பாதுகாப்பு அவசியம் என்று இணைய தளத்திலேயே எழுதியிருக்கிறார்கள். அதாவது முதிர்ச்சி பத்தலனு சொல்றாங்க. (யாரது? பத்தலே பத்தலேனு பாடக் கூடாது கேட்டோ?)

ஜூலை மாதம் பல்துணை உறுப்பினர் மாநாடாம். இணையத்தில் டிகெட் விற்கிறார்கள். இங்கிலாந்தில் எங்கேயோ நடத்துகிறார்கள் ஆனால் எங்கே என்று swingathon டிகெட் வாங்கியவர்களுக்கு மட்டுமே அறிவிப்பார்கள். எல்லாம் ரகசியம். மேரத்தான் தெரியும். இதென்ன தான்? (எல்லாம் அவன் செயல் தான். என்று விடவேண்டியது தான்.)

மற்ற உலக நாடுகளுக்கு இங்கிலாந்து வழங்கியிருக்கும் மாபெரும் கொடை 

இந்தியாவிலும் வந்துவிட்டது.  தில்லி மும்பை பெங்களூரு ஹைதராபாத் சென்னை என்று பல நகரங்களில் இதற்கான வாட்சப் குழுமங்கள் உள்ளனவாம். இணையத்தில் தேடினால் சடுதியில் விவரம் கிடைக்கிறது. யுட்யூபில் ஒரு மும்பை ஜோடி "வாருங்கள் பல்துணை பழகுவோம்" என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பாரதக் கலாசாரக் காவலர்கள் எங்கே போனார்கள்?

What's fueling the rise in swinging?   - British GQ பத்திரிகைக் கட்டுரை

விவரம் சொல்ல மறந்தேனே?

1. அ நி பொ ச: அமெரிக்க நிர்வாண பொழுதுபோக்கு சங்கம். இதற்கு மேல் விவரம் தேவையா, இல்லை கேக்குறேன்?

2. அன்னாசிப்பழம்.  பல்துணை கலாசாரம் பழகுவோர் தலைகீழ் அன்னாசிப்பழ படம் ஒன்றைத் தங்கள் வீட்டுக் கதவிலோ சுவற்றிலோ மாட்டி வைப்பார்களாம். (பழம்பெரும் மனிதர்னு தலைப்பு வச்சா என்னவோ தொன்மையான மகாத்மா பற்றிய பதிவுனு நீங்க நினைச்சீங்கனா நான் என்ன செய்வேன்?)

வால்: 

மணமானதன் அடையாளமாக மோதிரம் போடுவோம். தங்கம் வைரம் வெள்ளி என்று நிறைய மோதிரங்கள் அறிவோம். பார்த்திருக்கிறோம்.  ஆனால் கறுப்பு நிற ப்லேடினம் மோதிரம் யாராவது அணிந்திருந்தால் ஹலோ.. எச்சரிக்கை, கவனம், உஷார். அது பல்துணை ஆர்வமுடையவர் என்பதன் அடையாளமாம்.  நீங்க பாட்டுக்கு "என்ன மோதிரம் நல்லாருக்கே? ப்லாடினமா? விலை அதிகமோ? அப்படி இப்படினு விசாரிக்க போய் மோதிரம் அணிந்தவர் வேறே தினுசில் எடுத்துட்டு.. வம்பாயிரும்.

நிற்க, ஒரு தமிழ் சினிமா ஸ்டார் கறுப்பு மோதிரம் அணிந்திருக்கிறார். கவனிங்க.

கொசுறு:

பல்துணை கலாசாரம் எல்லாத் துறையினருக்கும் பொது என்றாலும், ஐடி மற்றும் மருத்துவ துறையினர் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனராம்.

திட்டாதிங்க, வர்ட்டா?

= = = = = =

124 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

      நீக்கு
  2. அப்பாத்துரை எழுத்தைப் படித்தேன்.

    89ல் மேட்டூரில் ஒரு பெரிய கம்பெனியில் வேலைபார்த்தேன். அங்கு அக்கவுன்டன்ட ஆகப் பணிபுரிந்த 28-30 வயது திருநெவேலியைச் சேர்ந்தவர் ஊட்டி தேயிலை எஸ்டேட்டுக்கு வேலைக்கு அப்ளை பண்ணி இன்டர்வியூவிற்குச் சென்றார். சம்பளம் இந்தக் கம்பெனியில் வாங்கினதைவிட இரண்டு மடங்கு. இன்டர்வியூவில் குடும்ப போட்டோவைக் (அதாவது மனைவியுடன் இருக்கும் போட்டோ) காண்பிக்கச் சொன்னார்களாம். கடைசியில், இங்கு வா இறுதியில் அவரவர் கீ செயினை மேசையில் வைத்து, கீ செயினை எடுத்துக்கொள்பவரோடு கீ செயின் சொந்தக்கார்ர் மனைவியும் அன்றைய இரவுக்குச் செல்வது இங்கிருக்கும் வழக்கம், அது ஓகே என்றால் வேலையில் சேர்ந்துகொள்ளலாம் என்றார்களாம். திரும்ப வந்து என்னிடம் அதிர்ச்சி விலகாமல் சிரித்துக்கொண்டே சொன்னார்.

    நம்மூரும் அப்போவே முன்னேறியிருக்கிறது போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். இந்தியாவில் எதுவுமே புதுசில்லே.
      வெள்ளைக்காரன் legacy சாவிக்கொத்து கலாசாரம். ஒரு இந்தி நடிகை இந்த சாவிக்கொத்து சர்ச்சையில் சிக்கிய நினைவு.

      நீக்கு
  3. ஐந்தாம் வகுப்பு பூலாங்குறிச்சியில் படித்த போது, சோள மாவில் பொரித்த வடை, உப்புமா எல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் போடுவாங்க (வசதி குறைந்தவர்களுக்கு). சாப்பிட்டுப் பார்க்க ஆசை இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோள மாவு வடை செய்முறை தெரிந்தவர்கள் திங்க கிழமை பதிலாக எழுதி அனுப்பவும்.

      நீக்கு
    2. சோளம் அடையில் போடுவதுண்டே அது போல வடை!! அம்புட்டுத்தான். கண்டிப்பா வெங்காயம் போட்டு செய்யணும் அப்பத்தான் சுவை! அதுவும் சி வெ.

      செஞ்சா படம் எடுத்து அனுப்பறேன் கௌ அண்ணா.

      கீதா

      நீக்கு
  4. ஜெ கே அண்ணா நீங்கள் சொல்லியிருக்கும் வகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைதான். நம் வீட்டில் செய்ததுண்டு. இப்போதும் செய்வது உண்டு என்றாலும் பெரும்பாலும் சிறு தானியங்களில் ரொட்டி, நாண் செய்கிறேன். படம் எடுக்க முடிவதில்லை அதனால் எபி க்கும் அனுப்பவில்லை. எடுத்ததே சில குறிப்புகள் இன்னும் சில இருக்கு அதையே இன்னும் நான் எழுதி அனுப்பல. ஏதாவது ஒன்று வீட்டு விஷயங்கள் மாற்றி மாற்றி நேரத்தை எடுத்துக் கொண்டுவிடுவதால் எல்லாம் சேர்ந்து சமாளிக்க முடிவதில்லை இப்போதெல்லாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இங்கு ஒரு சில கொடுத்திருக்கிறேன். முன்பு எபி திங்க பதிவில். ஆனால் என்ன கொடுத்திருக்கிறேன் என்று நினைவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைவமாகவே திங்க போரடிக்குது. ஒரு முட்டைக்கறியாவது சேர்த்தால் நன்றாயிருக்கும். வீகன் முடடை சைவ முட்டைனு விக்கறாங்களே? அதுல செய்யலாமே?

      நீக்கு
    2. //ஒரு முட்டைக்கறியாவது சேர்த்தால் நன்றாயிருக்கும்.// இப்போ உள்ள பசங்களில் சிலர் தான் eggetarian எறு சொல்லும்போதே எனக்கு கதக் என்று இருக்கிறது. Social Drinking என்பதையெல்லாம் ஜீரணிக்கவே முடியலை.

      நீக்கு
    3. plant based சிக்கன் மட்டன் எல்லாம் வந்த பிறகு வெஜ் நான்வெஜ் என்ன வேண்டிக்கிடக்குது என்று சென்னையில் (லேயே) மால்குடி ரெஸ்டாரண்டில் யாரோ நக்கலாக எழுதி வைத்திருக்கிறார்கள்!

      நீக்கு
  6. கௌ அண்ணா எனக்கும் பால் பௌடர் ரொம்பப் பிடிக்கும் சிறு வயதிலிருந்தே. இப்பவும் கூட.
    என் பாட்டி பால் பவுடர், வீட்டில் கிளறிய பால்கோவா பயன்படுத்தி குலாப்ஜாமூன் செய்வாங்க. ரொம்ப நல்லாருக்கும். நானும் அதே முறையில்தான் செய்வதுண்டு. இப்ப இனிப்பு செய்வதே இல்லை. யாராவது கேட்டால் செய்வதுண்டு.

    //சத்துமாவு கஞ்சி, அவசர சுக்கு காபி தயாரிக்க உதவும் என்பதால். தினமும் காலையில் ச மா கஞ்சி தயார் செய்யும்போது கஞ்சிக்கு ஒரு ஸ்பூன் பவுடர், எனக்கு அரை ஸ்பூன் பவுடர்! //

    ஹாஹாஹா. நம் வீட்டிலும் ஸ்டாக் உண்டு ஆபத்பாந்தவனாக...ஆனால் என்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டுதான்..இல்லைனா காலியாகிடுமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! வாழ்க !! வாழ்க.

      நீக்கு
    2. நாகூரில் நாலைந்து மாதங்கள் மதிய உணவு பள்ளியில் படித்த போது பாலும் மாடர்ன் ப்ரெட்டும் தருவார்கள். நினைவிருக்கிறது. ஒரு நாள் கூட நான் அதை வாங்கிச் சாப்பிட்டதில்லை. (வீட்டில் ஜுரம் வந்தால் மாடர்ன் ப்ரெட் பால் என்ற வழக்கம் இருந்ததால் பள்ளியில் அதை பார்த்தாலே குமட்டும்). என் செயலைத் தவறாகப் புரிந்து கொண்ட மாஸ்டர் என்னை பால் ப்ரெட் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார். குருமூர்த்தி என்ற நண்பன் (இப்போ என்ன செய்கிறானோ?) என்னுடைய பால் ப்ரெட் இரண்டையும் ரகசியமாக எடுத்துக் கொண்டு விடுவான். நான் நன்றி சொல்வேன்.

      நீக்கு
  7. அப்பாதுரை ஜி - //"உன் புருஷனும் என் பெண்டாட்டியும் வெளியே போய் விளையாடறாங்க"னு சொன்னா அது பல்துணைக் கலாசாரம். அம்புட்டுதேன்.//

    நம்ம தி ஜ, ஜெயகாந்தன் அதை எழுதியிருக்காங்க!

    இந்தக் கலாச்சாரம் எல்லாம் நம்ம ஊர்லயும் சகஜம்தான் எப்போவோ இருந்தே. இப்பவும் உண்டு. அதனாலதான் கதைகள்லயும் வந்திருக்கு.

    சென்னைல உயர்தட்டு மக்கள் அல்லது ஒரு வகைன்னு வைச்சுக்கங்க பெண்கள் அழைத்தால் வருவதற்கென்றே ஆண் பிள்ளைகள் இருக்காங்க சின்ன பசங்க!!!! இது சில வருடங்களுக்கு முன்ன நான் வாசித்த செய்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :((( காலத்தின் கோலம். கொடுமை.

      நீக்கு
    2. ஹிஹி.. அதை அவங்க எழுதினா இலக்கியமாயிடும்.

      நீக்கு
    3. இங்கு எழுதினால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். கேரளாவில், நம்பூதிரிகள் ஆசைப்பட்டுக் கூப்பிட்டால் தட்டாமல் போய்வரும் வழக்கம் இருந்தது. நாயர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் நல்லுறவு இருந்தது. நாயர் கணவன்மார்கள் இதைப் பெரிய விஷயமாக்க் கருதியதில்லையாம். 19ம் நூற்றாண்டில்தான் இது மறைந்தது.

      நீக்கு
    4. என்ன தவறு இருக்கு நெல்லை?!!! உண்மைதானே. நாயர் மனைவிகள் மட்டுமில்லை வேறு வகையினரும் கூட. நம்ம ஜி எம் பி ஸார் கூட ஒரு கதை எழுதியிருக்கிறார் இதை வைத்து.

      19 ஆம் நூற்றாண்டில் இது மறைஞ்சிருக்கலாம் ஆனால் வேறு விதமாக எல்லாமும் நடக்குது அங்கு.

      கீதா

      நீக்கு
    5. ஹிஹி.. அதை அவங்க எழுதினா இலக்கியமாயிடும்.//

      பாயின்ட்!

      நானும் ஒரு கதை எழுதி வைச்சு (இப்படியானதில்லை அது வேற தினுசு) அதை எபிக்கு அனுப்பாம ஸ்ரீராம் கேக்கறப்ப எல்லாம் "பயமாகீது எபில போட' ன்னு சொல்லி டபாய்ச்சிட்டிருக்கேன்!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    6. //என்ன தவறு இருக்கு நெல்லை?!!!// இவங்க தமிழ் எனக்கு அப்போ அப்போ சந்தேகத்தை உண்டாக்கிடும். இந்த வரில அவர் என்ன சொல்ல வர்றார்? அந்தப் பழக்கத்தில் என்ன தவறு (கேரளாவில்) என்று சொல்றாரா இல்லை எழுதியதில் தவறில்லை என்கிறாரா? எங்கள் பிளாக்கில் permanentஆ ஆசிரியர் இலாகாவில் ஒரு தமிழாசிரியரைச் சேர்த்துக்கொண்டால் நலமாக இருக்கும்.

      நீக்கு
    7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    8. நெல்லை, ஹையோ....நீங்க சொன்னதில் என்ன தவறு என்ற பொருள்!! உண்மையைத்தானே சொல்லியிருக்கீங்கன்ற அர்த்தம்.

      சுருக்க சொன்னால் இப்படியான தவறு இருக்கா?

      இனி நான் என் கருத்துகளைச் சுருக்கிக் கொள்கிறேன்.

      அப்படிப் பார்த்தா பலரும் சொல்வதில் கமா இல்லாம வேறு பொருள் படும் நீங்கள் சொல்வது உட்பட சில கருத்துகளில் ஆனால் புரிந்து கொள்வதுண்டு. தமிழ் தவறு என்று சொல்வதில்லை!!!!!!!

      கீதா

      நீக்கு
    9. என்னைத் தெரிந்தவர்கள் கண்டிப்பாக இதைத் தவறாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டாங்க.

      அப்படித்தான் நான் கருத்து சொல்பவர்களையும் டைப்போ, அல்லது சொல்வதில் சில சமயம் வார்த்தைகள் விடுபட்டிருக்கும்...புரிந்து கொள்கிறேன்.

      கீதா

      நீக்கு
    10. நீங்க சொல்றது சரி.
      சொல்ல நினைப்பதும் எழுத்தில் வருவதும் மாறுபடுவது சகஜம்.. அப்படியே இல்லாவிட்டாலும் படிப்பவர்கள் மனதில் தோன்றுவது எழுதியவர் மனதில் தோன்றுவதும் ஒத்துப் போவதன் வாய்ப்பு குறைவு. இதை மொழி, இலக்கணம் என்று சொல்லிவிட முடியாது.

      நீக்கு
    11. ஹல்லோ.... கீதா ரங்கன்(க்கா)வை நல்லாவே தெரியும். சும்மா கலாய்ச்சேன். அவங்களுக்கு நல்ல எண்ணம் குணம் உண்டு

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. கௌதம் ஜி அவர்களது பால் பவுடர் குறிப்புகள் அருமை..

    நானும் பால்பவுடர் பிரியன் தான்..

    பதிலளிநீக்கு
  12. தனது பக்கத்தில் எனது கருத்தையும் பகிர்ந்து கொண்ட ஐயா அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  13. பல பட்டறை - இதுதான் பலதுணைக் கலாச்சாரப் பன்னாடைகளுக்கான பழம்பெயர்..

    பதிலளிநீக்கு
  14. லோலாயி என்பதும் தெரிந்திருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வசூல் ராஜா எம் பி பி எஸ் பார்த்தபின்தான் எனக்குப் பரிச்சயமான வார்த்தை.

      நீக்கு
    2. நான் முன்னாபாய் எம் பி பி எஸ் பார்த்தவன். இதெல்லாம் தெரியாது!

      நீக்கு
  15. என்னவளே அடி
    என்னவளே..

    என்று வாழும் விலங்கு குள்ளநரி..

    பறவைகளில் காக்கை..

    பதிலளிநீக்கு
  16. அது பெண்பால் சொல் என்று நினைத்தேன். ஆம்பிளை பொம்பிளை எல்லாரும் பல்துணை பழகுறாங்க. திருமணத்தின் அழுத்தம் குறைய இது ஒரு வழி என்று சைக்காலஜி ஆசாமிகள் சொல்கிறார்கள். இளைய தலைமுறை அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். முற்போக்கு என்ற போர்வையில் இப்படி நிறைய பரிசோதனைகள் நடக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Friends இருக்கலாம் (இரு பாலாரிலும்). அது வெறும் நட்பு, பிரச்சனைகளைப் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேட்பது என்ற அளவில் இருப்பதே நலம். Friends மற்றும் குழந்தைகள், திருமண மன அழுத்தம் போக்கும் சிறந்த மருந்து.

      நீக்கு
    2. ஹ்ம்ம். ethical non-monogamy என்று ஒரு தனி பிரிவே இருக்கிறது. இதை பரப்ப masterclass கூட இருக்கிறது. நிறைய முன்னேறி (?) வந்திருக்கிறோம்.

      நீக்கு
    3. என்னதான் நட்பு நன்றாக இருந்தாலும், புரிதல் இருந்தாலும் கணவன், மனைவிக்குள்ள அந்தரங்கமான விஷயங்களை நண்பர்களுடன் பகிர்வது அவ்வளவு நல்லதில்லை. குழந்தைகளிடமும் கூட. பின்னர் அப்பா, அம்மாவின் மேல் மரியாதை குறையுமோனு எனக்குத் தோன்றும்.

      நீக்கு
  17. கற்களையும் பொறுக்கித் தின்னும் வழக்க முடைய மணிப் புறாவும் இதில் சேர்த்தி என்பார் எனது ஆசிரியர்..

    இந்தப் பழக்கத்தினாலேயே

    தனது துணையைப் பிரிந்ததும்
    சிறுகற்களைத் வயிற்றில் நிரப்பிக் கொண்டு மேலிருந்து விழுந்து மாண்டு போகுமாம்!..

    பதிலளிநீக்கு
  18. நமது புராணங்களில் இன்றைய பதிவுக்கான உதாரணங்கள் உள்ளன..

    பிறன் மனை விரும்பிப் புகுந்த இந்திரனுக்கு மேனியெல்லாம் அதை நாடினானோ அதுவே அடையாளமாயிற்று..

    வா என்று ஊர்வசி அழைத்தும் விலகிச் சென்றவன் அர்ச்சுனன் (இந்திரனின் மகன்).. அதனால் அவனுக்கும் சாபம் கிடைத்தது - நபும்சகன் ஆகும்படி..

    இதிலிருந்து நீதி-

    எந்தப் பக்கமும் நிம்மதி கிடையாது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி - அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

      நீக்கு
    2. அர்ச்சுன்ன் ஏன் அப்படி விலகிச் சென்றான்? உறவு முறையில் ஊர்வசி அவனுக்கு பாட்டி முறை. அதனால்.

      நீக்கு
    3. சுவாரசியம்.
      சுத்தமா தெரியாத விவரம்.

      நீக்கு
    4. இந்திரன் மகன் பெயரும் அர்ஜுனனா? தெரியாது. ஆனால் குழம்புவது அந்தப் பெயருடையவர்களின் குணம்.

      ஊர்வசிக்கு ஆசையின் வேகத்தில், தான் பாட்டி என்பது மறந்திருக்கும். வயசானால் ஞாபகமறதி அதிகமாகும் என்பது தேவலோகத்திலும்தான் என்பது நிரூபணமாகிறதோ.

      சிந்திக்க சிந்திக்கத்தான் குழப்பம்.. சிந்திக்காதவனுக்கு எந்த நிந்தனையுமில்லை!

      நீக்கு
  19. இன்றைய பதிவில் பல பட்டறைகளைப் பற்றிப் படித்த சிறிது நேரத்துக்கெல்லாம் fb ல் கோயில் ஒன்றின் தலபுராணம்..

    பிறன் மனை புகாமல் திரி காரணங்களால் கண்ணாலும் கருத்தாலும் செய்த பாவங்களைத் தொலைக்கின்ற தலம் அது..

    பலரும் அவசியம் சென்று வணங்க வேண்டிய கோயில் அது..

    எந்த ஊர்!?..

    விரைவில் எனது தளத்தில்!..

    பதிலளிநீக்கு
  20. திட்டாதிங்க, வர்ட்டா? //

    நல்லா இருந்த புதன களேபரப்படுத்தியாச்சுல்ல..
    போய்ட்டு, வேற ஏதாவது ‘கரம்’ மஸாலாவோட அடுத்த வாரம் வாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா இருந்த பதிவும்!..

      ஆகா!..

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. ஆம். எனக்கும் அதுதான் தோன்றியது. ( + கீதா ரங்கன் )

      நீக்கு
    4. :-) எல்லாம் அவன் செயல்.

      நிறைய தயக்கத்துடன் அனுப்பின பதிவு. ஆனா நெல்லை அவர்களும் செல்வராஜூ அவர்களும் எத்தனை தெரிஞ்சு வச்சிருக்காங்க பாருங்க!

      நீக்கு
    5. எல்லம் இருபது வயதில் நூலகத்தில் படித்தவை.. வாரியார் உபந்நியாசங்கள், கி.வா ஜ புத்தகங்கள் எனது ஆசிரியர்கள் கொடுத்த தெளிவு..

      உள்ளார்ந்த உணர்வுடன்
      வாழ்க தமிழ்..

      நீக்கு
  21. தாய்வானில் பூமியிலிருந்து சூடாக வரும் நீர் (எரிமலைப் பகுதி, கந்தகம் அதிகம் கலந்த நீர்), பொது மக்கள் குளிக்க இரண்டு பெரிய அறைகளின் வழியாக வரும். குளிப்பவர்கள் உடை அணிந்திருக்கக்கூடாது (ஜப்பானில் பொதுமக்கள் குளிக்கும் பகுதியில் இந்த ரூல் உண்டு என்பதைப் பார்த்திருக்கிறேன்). அதனால் அத்தகைய இடத்தில் குளிக்க இயலவில்லை. ஸ்பான்ஸர், அடுத்த முறை அந்தப் பகுதியிலேயே ஹோட்டல் புக் பண்ணுகிறேன், அறையில் பெரிய குளிக்கும் தொட்டியில் இந்த நீர் வருவதுபோல வைத்திருப்பார்கள் என்றார். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப ஃபீல் பண்றீங்களே!

      நீக்கு
    2. கந்தக நீரில் குளிப்பது என்பது அபூர்வ வாய்ப்பு இல்லையா கேஜிஜி சார்? அந்த வாய்ப்பு பிறகு கிடைக்கவில்லை என்பது வருத்தம்தான். பிறகு படங்கள் பகிர்கிறேன் (ஒரு ஞாயிறில்.. யாத்திரைகள், கோவில்கள் படங்களுக்கு மாறுதலாக)

      நீக்கு
    3. பத்ரியில் தப்தகுண்டத்தில் குளிச்சீங்க தானே நெல்லை?

      நீக்கு
    4. அது வேறு. இது வேறு. படங்களைப் பிறகு பகிர்கிறேன்.

      By the by, கீதா சாம்பசிவம், வேறு கிரகத்துக்குச் சென்றுள்ளது இங்கு யாருக்காவது தெரியுமா? அவங்களுக்கு (அந்த கிரகத்தில்) 1 நாள் என்பது பூவுலகில் 6-8 நாட்கள்-சந்திரனின் நிலையைப் பொறுத்து. அவங்க தினமும் இணையத்துக்கு வர்றாங்க. ஹிஹிஹி

      நீக்கு
  22. // திருமணத்தின் அழுத்தம் குறைய இது ஒரு வழி என்று சைக்காலஜி ஆசாமிகள் சொல்கிறார்கள்... //

    இதுல என்ன சைக்காலஜி வேண்டிக் கிடக்கு?..

    வாலறுந்த நரிகள் வியாக்கியானம் செய்துங்க..

    அவனுங்க என்ன அக்கா மகளுக்கு சீர் செஞ்சானுங்களா..
    தம்பி மகனை படிக்க வச்சானுங்களா?..

    தான் கெட்ட கொரங்கு வனத்தையும் கெடுக்குமாம்.. ன்ற மாதிரி ஊர் உலகத்தைக் கெடுத்துட்டு பேச்சப் பாருங்க பேச்சை!..

    சைக்காலஜியாம் சைக்காலஜி!..

    இவனுங்களுக்கு திருமணம்... ந்னா என்னான்னு தெரியுமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப கோபம் வருதுங்க உங்களுக்கு!

      நீக்கு
    2. ரொம்பக் கோபம் வருதுங்க!..

      அதானே!..

      நீக்கு
    3. :-)
      "இயல்பு நாகரிகம்" தொடங்கிய நாளிலிருந்தே 'வரம்பு நாகரிகம்' என்ற வெளியமைப்பும் இருந்திருக்கிறது. எகிப்து, கிரேக்க, மற்றும் நீங்கள் சொன்னது போல இந்திய புராணங்ககள்.. இவற்றில் இப்படிப்பட்ட விவரங்கள் நிறைய இருக்கின்றன. கோவில் சிற்பங்களை சுட்டிக்காட்டி இந்தியாவின் இன்றைய social கலாசாரம் மிகக்குறுகியதானதன் காரணம் வெளி ஆக்கிரமிப்புகளின் விளைவு என்று சில சுவாரசியமான உரைகள் (ஆய்வுகள்?) கிடைக்கின்றன.

      நீக்கு
    4. எது நாகரிகம் என்ற கேள்வியும் எழுகிறது.

      நீக்கு
    5. எழுந்துகொண்டுதான் இருக்கும். அதன் குணம் அப்படி!

      நீக்கு
  23. ஆப்பிரிக்க அரேபிய ஆங்கிலேய கலப்புகளில் கல்யாணம் என்பதும் அதுவும் இதுவும் புனிதம் என்பதும் கிடையாது..

    பச்சைக்கிளிகள் பறப்பதைப் பார்த்தால் பருந்துக்குப் பிடிக்காது என்பார் கவியரசர்..

    அரேபிய ஆங்கிலேய நாடுகளில் பருந்து முத்திரை உண்டு..

    இதற்கு மேல் யோசித்துக் கொள்ளுங்கள்..

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில் சுவாரஸ்யம். பால் பவுடர் சிறுவயதில் எங்கள் ஒன்று விட்ட அத்தை அவர்கள் அவர்களுக்கு உறவில் யாரோ தந்ததாக கூறி இந்த அமேரிக்கா பால்பவுடர் ஒரு பெரிய அட்டை டப்பாவில் கொண்டு வந்து தந்தார்கள். அதை பாலாக காய்ச்சி, தயிர், பால் காப்பி என கலந்து குடித்திருக்கிறோம். அதை அப்படியே பொடியாகவும் சாப்பிட்டுள்ளோம். அதன் சுவை இன்னமும் நாவில் உள்ளது. அந்தமாதிரி இப்போதைய பால் பவுடர் சுவையாக கிடைக்குமா?

    மற்றும் கலாசார சீர்கேடுகள் குறித்த விபரங்கள் அதிர்ச்சியை தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. பால் பவுடர் சின்ன வயதில் ஒரு தரம் மேலமாசி வீதி மார்டன் ரெஸ்டாரன்ட் வாசலில் ஏதோ லாரி கவிழ்ந்து தெருவெல்லாம் கொட்டிக் கிடந்ததைப் பார்த்திருக்கேன். பின்னாட்களில் ராஜஸ்தான், குஜராத்தில் இருக்கும்போது ராணுவ ரேஷனில் பால் பவுடரும் உண்டு. தேவைனா வாங்கிப்பேன். அநேகமா மில்க் மெயிட் கிடைக்கும். எனக்கு அதான் ரொம்பப் பிடிக்கும்.

      நீக்கு
  25. அநேகமாக லூச்சீ, கோல் கப்பா, நான் ஆகியவை தவிர்த்து மற்றதெல்லாம் சாப்பிட்டும் இருக்கேன். ஓரளவு செய்தும் பார்த்திருக்கேன். தந்தூர் ரொட்டி எனில் பத்ரிநாத் போகும்போது ருத்ரப்ரயாகையில் ஓர் ஓட்டலில் மதிய உணவில் சாப்பிட்டது தான் சுவையானதாக இருந்தது. அதோடு கடலைப்பருப்பில் செய்த தாலும் தொட்டுக்கக் கொடுத்தாங்க, அவசரம் அவ்சரமாகச் சாப்பிட்டாலும் எங்க பேருந்து நேரமாச்சு, அப்புறமா ஜோஷிமட்டில் வாயில் சார்த்தப்பட்டால் மறுநாள் தான் பத்ரி போக முடியும் என்று சொல்லிவிட்டதால் சாப்பாடைப் பாதியில் விட்டுட்டுப் போனோம். திரும்பிக் கீழே இறங்குகையில் முன்னே சென்ற பேருந்துக்கு விபத்து ஏற்பட்டிருந்ததால் எல்லோரும் கீழே இறங்கி நடந்தே மறுபக்கம் போய் அங்கிருந்த பேருந்துகளில் ஏறிக்கொள்ளும்படி ஆனது. அந்தப் பேருந்துக்காரங்க கீழே இறங்கி நாங்க காலி செய்த பேருந்துகளில் ஏறிக்கொண்டு மேலே சென்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க சொல்றதை நம்பி ருத்ரப் ப்ரயாகைல அந்த ஓட்டலைத் தேடாதீங்க. இவங்களை மாங்கு மாங்குன்னு 4 கிமீ நடக்க வச்சிருப்பாங்க. அந்தப் பசில, கார்ட் போர்டைக் கொடுத்து தந்தூரி ரொட்டி என்றாலும் அருமை அருமைன்னு சொல்லிச் சாப்பிட்டுருப்பாங்க. ஹா ஹா

      நீக்கு
  26. பானிபூரி பெரும்பாலும் வீட்டிலேயே செய்து வைத்துக் கொள்வேன். வெளியே விற்பதை வாங்கினால் சுகாதாரக் கேடு என வாங்குவது இல்லை.

    பதிலளிநீக்கு
  27. அப்பாதுரை சொல்லி இருப்பதற்கு நானும் கண்கள், வாய், காதுகளைப் பொத்திக்கறேன்.

    பதிலளிநீக்கு
  28. யாரோ தேவாரம் பாடுவதைக் கேட்டுக்கொண்டே எழுதறேன். நெல்லை தான் நினைவில் வருகிறார். ஒரு சின்னப் பையர் இப்போத் தேவாரப் பாடல்களில் மிகப் பிரபலம் ஆகிக் கொண்டு வருகிறார். தேச. மங்கையர்க்கரசியும் அருமையாகப் பாடுவார்.

    பதிலளிநீக்கு
  29. 1. உள்ளுணர்வு சொல்லுவது உங்களுக்குப் பலித்திருக்கிதா? அதில் நம்பிக்கை உண்டா?

    2. சிலருடைய உள்ளுணர்வில் எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்தும் தோன்றும் என்பதும் உண்மையா?

    3. எனக்குச் சிலவற்றில் பலித்திருக்கிறது. சிலவற்றில் பலிப்பதில்லை. உதாரணமாக நேற்றிரவு படுத்துக்கும்போது எப்போவும் சொல்லும் ஸ்ரீராமஜயத்தோடு "நாளைக்காலை பிரச்னை இல்லாமல் விடியணுமே!" என்றும் தோன்றியது. அப்போது அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கலை. ஆனால் இன்று காலை எழுந்துக்கும்போதே எந்தக் குழாயிலும் தண்ணீர் வரலை. காலை இயற்கைக்கடன்களைக் கழிக்கக் கூட ஒரு தம்பளர் தண்ணீர் இல்லை. இது தற்செயலா இல்லை எனில் எனக்குத் தோன்றிய உள்ளுணர்வின் விளைவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப பெரிய (ஆழமான) விஷயம்.
      தற்செயல்னு எதுவுமே இல்லைன்றாங்க. சென்ற பல கோடிக்கணக்கான வருடங்களாக சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் தவறாமை, பிறழாமையைக் காரணம் காட்டி "தற்செயல் நிகழ்வுகளில் பாதி தற்செயல் அல்ல" என்று மனித அறிவின் புரிதல் பற்றி ஐன்ஸ்டைன் சொன்னது. (என்று சொல்கிறார்கள்).

      நீக்கு
    2. எதுக்கெடுத்தாலும் வள்ளுவரை மேற்கோள் காட்றது மாதிரி, இந்த ஐன்ஸ்டைனையும் தொரத்திக்கிட்டு அலயறது சரியில்ல..!

      நீக்கு
    3. யாரையாவது ' கோட்' செய்தால்தானே எஃபெக்ட் இருக்கு!

      நீக்கு
    4. நான் சொன்னதா சொன்னா நல்லா இருக்குமா?
      (இருக்குந்தான்.. ஆனா பாருங்க டக்குனு யாருன்னா நெட்டுல தேடிட்டு இது இவுரு சொன்னது அவுரு சொன்னதுனு போட்டு உடைச்சுடறாங்க.. இதையே ஐன்ஸ்டைன் சொன்னாரா இல்லையானா யாருக்கு தெரியும்? இப்பல்லாம் கூகுள் சொன்னா உடனே சலாம்)

      நீக்கு
  30. அதே போல் வெளியே போய்ச் சாப்பாடு வாங்கப் போறேன்னு (இன்னிக்கும் நடந்தது) சொன்னார்னா அன்னிக்கு எனக்கு மனதில் ஏதோ தோன்றும். வேண்டாம் என்பேன். அதற்கேற்றாற்போல் அந்த ஓட்டலே அன்று திறந்திருக்க மாட்டாங்க. அல்லது சாப்பாடு இல்லைனு சொல்வாங்க. இதெல்லாம் நடக்கும் வாய்ப்பு உண்டா? அல்லது தற்செயலாக நடப்பதை நான் இப்படித் தொடர்பு படுத்திக்கிறேனா?

    பதிலளிநீக்கு
  31. ஸ்ரீராம் ஏன் இப்போல்லாம் என்னோட பதிவுகளுக்கு வந்து எட்டிக் கூடப் பார்ப்பதில்லை? என்னோட தமிழ்த்தாத்தா பதிவிலேயும் வரலை. அடுத்த பதிவிலேயும் வரலை. இங்கே எங்கள் ப்ளாகில் கூட அவரை எப்போவோ தான் பார்க்க முடிகிறது. உதாரணமாக வியாழக்கிழமைப் பதிவுகளில் வந்து பதில் சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
  32. தி/கீதாவின் பையர் வந்திருப்பதாகக் கமலா ஹரிஹரன் சொல்லி இருப்பதைப் படித்தேன். எப்போக் கல்யாணம்? எங்கே? இங்கே திருச்சியில் வைச்சுண்டா எனக்குச் சௌகரியம். இஃகி,இஃகி,இஃகி/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் வைத்துக் கொண்டால் எனக்கு சௌகரியம். கிக் கிக் கீ!

      நீக்கு
  33. // பலரும் அவசியம் சென்று வணங்க வேண்டிய கோயில் அது..

    எந்த ஊர்!?..

    விரைவில் எனது தளத்தில்!.. //

    எதிர்வரும் ஞாயிறும் திங்களும்..

    பதிலளிநீக்கு
  34. இதெல்லாம் காம சாஸ்திரத்திற்கு முன் ஜுஜுபி...!

    பதிலளிநீக்கு
  35. கலாச்சார சீர்கேடு காலத்தின் கோலம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!