ஹலசின ஹன்னு கடுபு/கொட்டே/ஹிட்டு
(பலாப்பழ கடுபு இட்லி)
உப்பு, காரம் போட்ட வகையும் இனிப்பு வகையும்
எபி 'திங்க' ரசிகப் பெருமக்களே! பாருங்க, நான் சொன்னபடிக்கு இந்தச் செய்முறைக் குறிப்பு இங்கே கொடுத்துவிட்டேன்! இதைப் பார்த்துவிட்டு இலை அடை போலன்னு சொல்லக் கூடாது. அதன் சுவை வேறு இதன் சுவை வேறு. அதுவும் ஒரு வேளை நான் செய்தாலும் செய்யலாம். செய்யும் போது படங்கள் எடுத்துக் குறிப்புகளுடன் அனுப்புகிறேன். கண்டிப்பாகப் பலாப்பழக் காலம் முடியும் முன் வந்துவிடும். ஜூன் வரை கிடைக்கும்.
சரி இப்ப நேரே செய்முறைக்குப் போய்விடலாம்.
இட்லி ரவை - 1 1/2 கப்/கிண்ணம். ஒரு முறை அலசிவிட்டு, இட்லி ரவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 3, 4 மணி நேரம் ஊற வைச்சுக்கோங்க. இங்கு முதல் படத்தில் ஊறிய ரவை. கப் அளவு என்பது நான் எப்போதும் சொல்லும் அளவு கப். இங்கு நான் சொல்லியிருக்கும் கப் 200கி கப்.
அல்லது இட்லி அரிசியை ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு ரவை போன்ற பக்குவத்திற்குக் கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பலாப்பழம் அரைத்துச் சேர்ப்போம். அதிலேயே கொஞ்சம் நெகிழ்ந்து விடும் என்பதால் அரைக்கும் போது கவனம் தேவை.
பலாப்பழச் சுளைகள் - 3 கிண்ணம் அளவு. ஒரு கிண்ணத்திற்கு 10 சுளைகள் வரும். எனவே 30 சுளைகள் தேவைப்படும். அதாவது எடுக்கப்படும் அரிசி ரவைக்கு இரு மடங்கு. இன்னும் அதிகம் கூட எடுத்துக் கொள்ளலாம். நான் இந்த முறை இவ்வளவுதான் எடுத்துக் கொண்டேன்.
துருவிய தேங்காய்ப் பூ - 3/4 கிண்ணம் - 1 கிண்ணம். நான் 1 கப் அளவு எடுத்துக் கொண்டேன்.
பலாப்பழச் சுளைகளை கொட்டை எடுத்துவிட்டு அரைப்பானில் இட்டு நன்றாக அரைத்துக் கொள்லவும். ரொம்ப மையாக இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை. (இடப்புறப் படம்) அரைத்ததை இட்லி ரவையுடன் கலக்கவும்.
துருவிய தேங்காய்ப் பூவை இட்லி ரவை, பலாப்பழக் கூழ் கலந்த கலவையில் போட்டு நன்றாகக் கலந்துக்கோங்க. இது பேஸ். புளிக்க வைக்கத் தேவையில்லை. பழம் கலந்திருப்பதால் புளிக்கவும் கூடாது.
கலவையை இரு பகுதிகளாகச் சம அளவில் பிரிச்சுக்கோங்க. இல்லை என்றால் உங்களுக்கு இனிப்பு எவ்வளவு வேண்டும், உப்பு, காரம் போட்டு எவ்வளவு வேண்டும் என்று பார்த்துப் பிரித்துக் கொள்ளலாம். நான் சம அளவில் பிரித்துக் கொண்டேன். (படங்கள் மேலே)
பலாப்பழ கடுபு இட்லி - இனிப்பு
ஏலப் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை (இந்த இரண்டில் முதல் படம்)
இவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் இருக்கும் கலவையில் போட்டுக் கலந்துக்கோங்க. (இந்த இரண்டில் இரண்டாவது படம்) வெல்லப்பொடி போடுவதால் கொஞ்சம் நெகிழும். கலவை ரொம்ப நெகிழ்ந்து இருக்க வேண்டாம். ரொம்பக் கெட்டியாகவும் வேண்டாம். படத்தில் உள்ளது போல் இருக்க வேண்டும்.
தயாராக இருக்கும் இனிப்புக் கலவையைக் கிண்ணத்திலோ, டம்ளர்களிலோ படத்தில் உள்ளது போல் போட்டு அகன்ற பாத்திரத்திலோ அல்லது குக்கரினுள்ளோ கொஞ்சம் தண்ணீர் விட்டு இந்தக் கிண்ணங்களை/டம்ளர்களை இப்படி வைத்து மூடிவிட வேண்டும். இட்லிக்கு வேக வைப்பது போலத்தான் வேக வைக்க வேண்டும். 15-20 நிமிடத்தில் ஆகிவிடும். வெந்துவிட்டதா என்று குச்சி அல்லது சிறிய கரண்டியின் பின் பகுதியால் குத்திப் பார்க்கலாம். ஒட்டாமல் வந்தால் தயார்.
பலாப்பழ கடுபு இட்லி - காரம்
பச்சை மிளகாய் - 3 (உங்கள் காரத்திற்கேற்ப நீங்கள் எடுத்துக்கோங்க),
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
இவற்றை மிக்சியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி வைச்சுக்கோங்க. ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணை விட்டு எண்ணை நன்றாகச் சூடானதும், அதில் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் போட்டு சிவந்து வரும் போது மிக்சியில் ஓட்டியதைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி மற்றொரு பாத்திரத்தில் இருக்கும் கலவையுடன் சேர்த்துக் கலந்துக்கோங்க.
இனிப்பிற்குத் தொட்டுக் கொள்ள நெய். காரத்திற்குத் தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்னி. வேறு சட்னிகளும் தொட்டுக் கொள்ளலாம். Enjoy!!
பலாப்பழ கடுபு இட்லி - இனிப்பு காரம் செய்முறை அருமையாக வந்திருக்கு
பதிலளிநீக்குசீசனுக்கேற்ற உணவு. நல்லா எஃபர்ட் எடுத்து செஞ்சிருக்கீங்க. நல்லா வந்திருக்கு. பாராட்டுகள் கீதா ரங்கன்.
மிக்க நன்றி நெல்லை....ரெண்டு சீசனுக்கு முன்ன செஞ்சது!!ஹிஹிஹிஹிஹி....
நீக்குஇப்ப இந்த வாரமும் செய்யணும்....அப்பப்ப வந்து பதில் கொடுக்கிறேன் இங்கு. ரொம்ப டைட்.
கீதா
//இங்கு. ரொம்ப டைட்.// மே 1 தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு விடுமுறை இல்லையா? இதே உங்கள் சார்பில் வழக்கு போடுகிறேன். அப்பாவையும் சேர்த்துவிடவா? ஹா ஹா ஹா
நீக்குஹாஹாஹாஹா போடுங்க !!! அடுத்த மே1 !!
நீக்குஆனா பாருங்க, இப்ப இந்த டைட் வழக்கமான டைட் இல்லையே. அதனால கேஸ் போட்டாலும் ஜெயிக்க முடியாது!!
கீதா
பலாப்பழத்தில் கார கடுபு இட்லிதான் எப்படி இருக்கும்னு யோசிக்கறேன். கிட்டத்தட்ட வாழைப்பழம் போட்டு கார இட்லி பண்ணுவது போல். நன்றாக இருந்ததா?
பதிலளிநீக்குஹாஹாஹாஅ வாழைப்பழம் போட்டு கார இட்லி!!!
நீக்குநெல்லை இது நல்லாருக்கும் வித்தியாசமாக...
மிக்க நன்றி நெல்லை
கீதா
இப்போ சூடு அதிகம். பலாப்பழம் வெளியில் வைத்தால் (சுளைகள்) இரண்டு மணி நேரத்திலேயே கெட்டுவிடுகிறது.
பதிலளிநீக்குஇனிப்பு பலா கடுபு யார் சாப்பிட்டார்கள்?
இனிப்பு சாப்பிடனே எங்க வீட்டுல ஒருவர் இருக்கிறாரே!!!
நீக்குநன்றி நெல்லை
கீதா
பலா சுளைகள் ரொம்ப விலையா இருக்கே இப்போ... நான் கிலோ 120 ரூ என்று வாங்கினேன். வீட்டில் உடனே ஃப்ரிட்ஜில் வைக்காத்தால் பலவும் கெட்டுப்போய்விட்டது. நீங்க என்ன விலைக்கு வாங்கினீங்க?
பதிலளிநீக்குநெல்லை அதை ஏன் கேக்கறீங்க. ரெண்டு வருஷம் முன்ன வாங்கியப்ப 10 ரூ/20 ரூ க்கு 10 சுளை கிடைத்தன. இப்ப கால்கிலோ 50 ரூ
நீக்குநீங்க சொல்ற விலை நல்லாருக்கே! பரவாயில்லையே
கீதா
காக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவனை
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
உப்பு, காரம் போட்ட வகையும் இனிப்பு வகையும்..
பதிலளிநீக்குஆகா...
இப்படியெல்லாம் இருக்கின்றதா...
செய்யுங்கள் செய்யுங்கள்...
நாங்களும் தெரிந்து கொள்கிறோம்...
நலம் வாழ்க...
ஹாஹாஹா...ஆமாம் அண்ணா நல்லாருக்கும்.
நீக்கு.மிக்க நன்றி துரை அண்ணா.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆனால இவையெல்லாம் நம்ம உடல் நிலைக்கு ஒத்து வராது என்பதே வருத்தம்..
பதிலளிநீக்குநானே, என்ற்கு நார்த் இன்டியன் சைட் டிஷ் பெரும்பாலும் ஒத்துக்கொள்ளாது, சில இடங்களில் மாத்திரம் ஒத்துக்கொள்ளும், பனீரும் ஒன்றிரண்டுக்கு மேல் சாப்பிடமுடியாது, அலர்ஜி வரும் என்று வருத்தத்தில் இருக்கேன். சீஸ் பொருட்களும் அப்படியே.
நீக்குசமீப காலமாய் இட்லி மி பொடி, காரம் காரணமாக நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குது. சமைத்து நாலு மணி நேரம் ஆன எதையும் சாப்பிடுவதில்லை. அதான் எல்லாம் சாப்பிட்டாயிற்றே என்று தோன்றுகிறது.
நீக்குதுரை அண்ணா இதில் காரம் என்றால் காரம் அதிகம் கிடையாது. இனிப்பு நாம் தவிர்க்கலாம். மற்றபடி உப்பு காரம் வகை உடலுக்கு ஒன்றும் செய்வதில்லை கொஞ்சமாக அளவோடு சாப்பிடலாம். நானும் இனியவள்தானே!!
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
பலாப்பழ இட்லி என்று சொல்வதை விட பலாப்பழ கேக் என்று சொல்லலாம். இப்படி செய்வது வீட்டில் பலாமரம் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் சவுகரியமாக இருக்கும். மற்றபடி பலாப்பழ ருசியை அனுபவிக்க அப்படியே சாப்பிட்டு கொஞ்சம் நேரம் வாசனையையும் ருசியையும் அனுபவிப்பதே சுகம் என்பது என் கருத்து.
பதிலளிநீக்குதிருவனந்தபுரத்தில் இருப்பவர்கள் கூழன் சக்கையை இப்படி இட்லி ஆக்குவது உண்டு. கூழன் சக்கை நேரடியாக உண்ணுவது கஷ்டம். வரிக்கயானால் முழு பழமும் நேரடி விழுங்கலில் காலியாகி விடும்.
ஞாயிறு அன்று தான் ஒரு துண்டு வரிக்க சக்கை காலி செயதேன். சுகர் கும் என்று ஏறி விட்டது.
Jayakumar
கூழன் சக்கையில் செய்வதுண்டு ஜெ கே அண்ணா. பலாப்பழ ருசியை அடிச்சுக்க முடியாது என்பது உண்மைதான். ரொம்பப் பிடிக்கும். உங்கள் வரியை அப்படியே டிட்டோ செய்கிறேன்
நீக்குஆனால் வித விதமாகச் சுவைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல டிஃபன். இங்கு கூழன் கிடைப்பது அரிது. வரிக்கன் தான். ஆனால் வரிக்கன் ரொம்ப நல்லா வந்தது. வாசனையும் செம இட்லியில்.
அண்ணா ஒரு துண்ண்டு வரிக்கையா? 10 சுளைகள் இருந்திருக்குமா? பின்ன கண்டிப்பா ஏறியிருக்கும்.
எனக்கும் சக்கையைக் கண்டால் விட மனது வராது. ஆனால் கொஞ்சம் சாப்பிட்டாலும் உடனே பார்க்கில் கூடுதல் சைக்கிளிங்க் செய்துவிடுகிறேன்.
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
புதுமையான ரெஸிப்பி படங்களும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம் புதுமையானதுதான். மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் செய்முறையாக தாங்கள் அறிமுகப்படுத்திய பலாப்பழ கடுபு இட்லி (காரம், இனிப்பு) மிகவும் நன்றாக வந்திருக்கிறது. படங்களும் விபரமும் அருமையாக உள்ளது. படங்களின் தொகுப்பு பார்க்கவே அழகாக உள்ளது.
வெறும் அரிசி குருணையும், தேங்காய் பூவுமே இதற்கு போதுமென்பதை இப்போது தான் அறிகிறேன். இதுபோல் இதுவரை செய்ததில்லை ஒருமுறை இவ்வாறு செய்து பார்க்கிறேன்.
நானும் முன்பு கோதுமை மாவில் கரைத்து தோசை வார்க்கும் பொது, இனிப்பு தோசையும் காரமுமாக இரண்டும் செய்வேன். ஒன்றுக்கொன்று இணைத்து சாப்பிடும் போது சுவை நன்றாக இருக்கும். பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிப்பு, கார கோதுமை தோசை... யம்மி.. எனக்கு மிகவும் பிடிக்கும். சரி சரி.. இன்றைக்கு மாலை டிபனுக்கு ஐடியா வந்தாச்சு. இரண்டு தோசைகளுக்கும் மாவு கரைத்துவிட்டு மனைவியை வார்க்கச் சொல்லவேண்டியதுதான்.
நீக்குஹா ஹா ஹா. சாப்பிட ஆசைப்பட்டு கரைத்து வைப்பது நீங்கள். அடுப்படியில் நின்று அதை பொறுமையாக வார்க்கும் தண்டனை உங்கள் மனைவிக்கா ? :))
நீக்குஅதுசரி..! .. நீங்கள் இளஞ் ஜோடிகள்...புரிதலின் ஆரம்ப கட்டம் விட்டுக் கொடுப்பதாக இருக்கும். உங்கள் மனைவி அதை தண்டனையாக நினைத்தால்தானே.பிரச்சனை.. . :))))) நன்றி.
கமலா ஹரிஹரன் மேடம்.... எனக்கு தோசை சூடா சாப்பிடணும். (மனைவிக்கும்). ஆனா பாருங்க.. தோசை வார்த்துக்கிட்டே சாப்பிட முடியாது. 4 வார்த்தால், முதல் மூன்று ஆறிவிடும். எல்லாவற்றையும் அவளையே பண்ணச் சொல்லாமல், நான் மாவு கரைத்துவைக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.
நீக்குஎன் வசம் கிச்சன் வரும்போது, நான் சரியாகச் சாப்பிடுவதில்லை. சமையல் பண்ணிய பிறகு சாப்பிடும் ஆசை போயிடும். கொஞ்சம் ஆறிவிட்டாலும் நான் சாப்பிட மாட்டேன். பெண்கள் பாடு எவ்வளவு கஷ்டம் என்பதை நான் நன்குணர்ந்தவன்.
வணக்கம் சகோதரரே
நீக்குநான் விளையாட்டுகாகத்தான் கலாய்த்தேன். அது உங்களுக்கு தவறாக பட்டிருந்தால் மன்னிக்கவும்.உங்களைப்பற்றி தெரியாதா? நீங்கள் பதிவின் கருத்துரைகளில், உங்கள் வீட்டுக்கு சமையல் போன்றவற்றில் எவ்வளவு உதவியாய் இருக்ககிறீர்கள் என்பதை படித்து புரிந்து கொண்டிருக்கிறேன். நான் சும்மா விளையாட்டுக்கென்று சகோதரர் கில்லர்ஜி பதிவில் தாங்கள் கருத்த்துரையாக எழுதியிருந்தை சேர்த்துச் சொன்னேன். தவறாக நினைக்க வேண்டாம். 🙏.நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//நீங்கள் இளஞ் ஜோடிகள்.// இதை விளையாட்டு என்று சொல்லிவிட்டீர்களே.... நாங்கள் இளஞ் ஜோடிகள்தான். உங்க அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஹா ஹா ஹா
நீக்குஹா ஹா ஹா. ரொம்ப சந்தோஷம். அப்படியே இருங்கள். மாற்றவும் வேண்டாம். மாறவும் வேண்டாம்.
நீக்குகமலாக்கா இது நன்றாக இருக்கும் ஆனா நீங்கள் கொஞ்சமா ஒரு இட்லி சாப்பிட்டுக்கோங்க உப்பு கார வகையே...அதுக்கு மேல வேண்டாம் கேட்டேளா?! நம்ம குழுவில் நீங்களும் உண்டே!!!
நீக்குஅக்கா இதை பலாப்பழ தோசையாகவும் செய்யலாம் செமையா இருக்கும். அரிசி கோதுமை கலந்த மாவில் அரிசி கூடுதலாகவும் கோதுமை கொஞ்சமாகவும் தண்ணீர் விடும் முன் பலாப்பழத்தை அரைத்த கூழைக் கலந்து பின்னர் வெல்லம் சேர்த்து அதன் பின் தண்ணீர் விட்டுக் கலந்து இதை இழுப்பதை விட ரவா தோசை போலச் செய்தால் சுவை நல்லாருக்கும். ஏலக்காய் கொஞ்சம் சேர்ந்த்துக் கொள்ளலாம்.
கோதுமை தோசையில் நம் வீட்டிலும் உப்பு, இனிப்பு செய்வதுண்டு. ஆனால் நான் வாயை மூடிக்கொண்டு சாப்பிடுவேன்!!!
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
கமலாக்கா, நெல்லைக்குக் கல்யாணவயசாகிடுச்சா?!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குஅப்புறம் ஏன் என்னை கீதா ரங்கன்(க்கா) ன்னு சொல்லணும்னு கேக்கறேன்!!
கீதா
இப்படி எல்லாம் செய்ய முடியுமா ? - வியப்பாக உள்ளது...!
பதிலளிநீக்குடிடி செய்ய முடியும். எளிதுதான்
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
மிக அருமையான பலாப்பழ கடுபு இட்லி, அம்மா பச்சரிசியில் செய்வார்கள் அதனால் நானும் ரவை கலந்து செய்தது இல்லை.
பதிலளிநீக்குகர்நாடகாவில் வெள்ளை ரவை பயன்பாடு அதிகம், அதனால் அவர்கள் ரவை கலந்து செய்கிறார்கள் இல்லையா கீதா?
நாங்கள் இட்லி தட்டில் வைத்து விடுவோம்.
இலை அடை நீர்க்க கரைத்து இலையில் எழுதுவது .
பலாப்பாழ சீஸனில் செய்துப்பார்க்க தகுந்த குறிப்பு கொடுத்து விட்டீர்கள்.
படங்கள் செய்முறை எல்லாம் மிக அருமை.
பச்சை மிளகாய் பழுத்து காய்ந்த பொடி, கருவேப்பிலை காய்ந்த இலை பொடி பார்க்க அழகு.
இங்க இட்லி ரவைனு அரிசி ரவை (குருணை இல்லை. ரவை சைஸ்) கிடைக்கிறது. பாம்பே ரவை என்பது உப்மா ரவை. இது தவிர பன்ஸி ரவை என்று உண்டு. இந்த இட்லி ரவை, உளுந்து ஊறவச்சு அரைச்ச மாவு கலந்து இட்லி வார்ப்பாங்க (ஊறவைத்து). அந்த இட்லி கொஞ்சம் உதிர் உதிரா நல்லா இருக்கும். எனக்குப் பிடிக்கும். ஒரு தடவை, அவசரத்துல எங்க வீட்ல ரவை இட்லியை, இந்த இட்லி ரவையை (அட பெயர் பொருத்தம்) உபயோகித்துச் செய்து எனக்குச் சுத்தமா பிடிக்கலை.
நீக்குகோமதிக்கா, ஆமாம் கர்நாடகாவில் ரவையின் பயன்பாடு அதிகம்தான். இவர்கள் ரவையிலும் செய்கிறார்கள்
நீக்குநான் பயன்படுத்தியிருப்பது புழுங்கலரிசி இட்லி ரவைதான். ஆமாம் பச்சரிசியிலும் செய்யலாம். நான் கூடியவரை அதைத் தவிர்க்கிறேன்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வித்தியாசமான சமையல் குறிப்பு..... நேரடியாக பலாச்சுளை சாப்பிடுவது பிடித்தமானது என்றாலும் இப்படியும் சுவைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குபலாச்சுளை ஆகவே சாப்பிட பிடிக்கும் என்றாலும் இப்படி வித்தியாசமாகவும் சுவைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. காரத்தை விட வெல்லம் சேர்த்து செய்வது பிடிக்கும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு