இன்றைய தனிப்பாடல் பெங்களூரு ஏ ஆர் ரமணி அம்மாள் பாடிய பாடல். தமிழ் நம்பி எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்.
தென்பழநி தேவனடி கண்ணம்மா முருகன்
தேவர்களின் தலைவனடி கண்ணம்மா
தென்பழநி தேவனடி கண்ணம்மா முருகன்
தேவர்களின் தலைவனடி கண்ணம்மா
பொங்கல்வைத்து பூசையிட்டு புதுமலரால் மாலையிட்டு
பொங்கல்வைத்து பூசையிட்டு புதுமலரால் மாலையிட்டு
வாராயோ என்றழைத்தால் கண்ணம்மா முருகன்
வாராது வந்து நிற்பான் கண்ணம்மா தென்பழநி தேவனடி
காவடிகள் ஆடிவரும் கந்தன் திருப்புகழைப் பாடிவரும்
காவடிகள் ஆடிவரும் கந்தன் திருப்புகழைப் பாடிவரும்
வேலாடும் வண்ண மயிலாடும் வேலன் கால்சிலம்பு தானாடும்
அலையாடும் கவிபாடும் ஆறுமுகன் அன்புமனம் கூத்தாடும்
அலையாடும் கவிபாடும் ஆறுமுகன் அன்புமனம் கூத்தாடும்
அலையாடும் தமிழ்க்கவிபாடும் ஆறுமுகன் அன்புமனம் கூத்தாடும்
நெற்றியிலே நீரிருக்கும் நெஞ்சில் அடியார்கள் நினைவிருக்கும்
நெற்றியிலே நீரிருக்கும் நெஞ்சில் அடியார்கள் நினைவிருக்கும்
நெஞ்சில் அடியார்கள் நினைவிருக்கும் தென்பழநி தேவனடி
==========================================================================
1968 ல் தெலுங்கில் சாவித்ரி நடித்து பெரும் வெற்றிபெற்ற 'சின்னாரி பாப்புலு' படத்தை சாவித்ரியை தமிழில் தனது பேனரில் தயாரித்தார். 1969 ல் தமிழில் படம் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. தமிழில் சாவித்ரியே படத்தை இயக்கி இருக்கிறார்.
ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ நடித்துள்ள படத்துக்கு இசை கோதண்டபாணி. பாடல்கள் கண்ணதாசன். பாடலைப் பாடி இருப்பவர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம், சுசீலா. ஆரம்ப சித்தார் (?) இசை முதல் பாடலை மிக ரசிக்கலாம்.
முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு குடிகொண்டதே இன்பத்தேனுண்டு
முதல்நாள் மயக்கம் வரக்கண்டு மோனத்தில் ஆழ்ந்ததே சுவை கொண்டு
தலைமகன் செய்தது சோதனையோ தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
தலைமகன் செய்தது சோதனையோ தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ
முத்தமிட்ட இதழே பாலாக முன்னிடை மெலிந்து நூலாக
கட்டிவைத்த கூந்தல் அலையாக கன்னங்கள் இரண்டும் விலையாக
தேன் தரும் நிலவே நீ சாட்சி தென்றல் காற்றே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை வளரட்டும் காதல் அரசாட்சி
===========================================================================================================
நியூஸ் ரூம்
இதேபோல இந்தியாவெங்கிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்தால் இதயங்கள் இனிக்கும். கண்கள் பனிக்கும்!
ஆமாம். போனில் பேசியதற்காகவோ, கல்லெறிந்ததற்காகவோ இல்லை என்று சொல்லிக்கொண்டு, ஆக...
வாழ்நாள் பென்ஷனுக்கு இன்னொரு நபர் ரெடி!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். நம்புவோம், நாராயணனை.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பகிர்வில் இரண்டு பாடல்களையும் இதுவரை கேட்டதில்லை. ஓரிரு வரிகளை கேட்டுப்பார்த்தேன். கேட்டதில்லை என மனது நிச்சயபடுத்தியது. இனிதான் முழுதாக கேட்க வேண்டும். கேட்கிறேன். படமும் அறியாத படமாக உள்ளதேயென தேடிச் சென்று குழந்தை உள்ளத்தை கண்டு வந்தேன். நடிகை சாவித்திரி அவர்கள் பல திறமைகள் பெற்றவர். நடிப்பிலும் சரி.. அழகிலும் சரி.. அவர் என்றும் நம் மனதில் தங்கி இருப்பார்.
பெங்களூர் ரமணியம்மாள் பிரபலமான பாடல்கள் சிலவற்றை கேட்டிருக்ககிறேன்.இந்தப் பாடலை கேட்டதில்லை. இப்படி நல்லதொரு பாடல்களை தேடித் தந்து வாரந்தோறும் வெள்ளியை நிறைவாக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தென்பழநி தேவனடி பாடல் நீங்கள் கேட்டதில்லையா? ஆச்சர்யம். குழந்தை உள்ளம் பாடல் எஸ்பிபியின் மிக அருமையான பாடல்களில் ஒன்று. தவறாமல் கேளுங்கள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுதலில் இருக்கும் செய்தி அறையை தேடி இறுதிக்கு இடம் மாறிய அறைக்கு சென்று செய்தி தகவல்கள் அறிந்தேன்.
இலவசங்களை துச்சமாக்கிய அந்த மக்களை பாராட்டுவோம். மற்ற செய்திகளுக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சும்மா ஒரு மாறுதலுக்கு நியூஸ் ரூமை இடம் மாற்றினேன். படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நீக்குமுதல் பாடல் கேட்டு இருக்கிறேன் ஜி
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இப்போதுதான் கேட்கிறேன்.
நன்றி ஜி.
நீக்குரமணியம்மாள் அவர்களின்
பதிலளிநீக்குதென்பழனி தேவனடி - பாடல் 80 களில் வந்திருக்கலாம்..
கால வெள்ளத்தில் சில பாடல்களை இப்படித்தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது..
அருமை..
இரண்டாவது அந்த கால கட்டத்தில் ரசித்த பாடல்..
பதிலளிநீக்குஇனிமை..
முத்துச்சிப்புள்ளே.. -
பதிலளிநீக்குஇதை முதலில் திருத்தவும்..
நானும் கவனித்தேன். ஒருவேளை நாம் கேட்டிராத பாடலோ, இப்படித்தான் தமிழோ என்னவோ என்றிருந்தேன்....
நீக்கு2. நல்லாயிருக்கு...
பதிலளிநீக்கு' முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு " பாடலை எஸ்.பி.பி மிகவும் இனிமையாக பாடியிருப்பார். என்னிடமுள்ள கலெக் ஷனில் இந்தப்பாடல் இருக்கிறது!
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களும் கேட்டதில்லை. ஓகே ஓகே ரகம்
பதிலளிநீக்குஇரண்டுமே கேட்டதில்லை. அதுவும் பெண்களூர் ரமணி அம்மாள். கேட்டதில்லை என்பது எனக்கே ஆச்சரியம்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇப்போதுதான் இரண்டு பாடல்களையும் கேட்(டேன்.)கிறேன்.நன்றாக உள்ளது. இரண்டாவது பாடலில் எஸ். பி. பியின் குரல் இழையும் இடங்களில் அற்புதம். பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரண்டு பாடல்களுமே கேட்டிருக்கிறேன். முதலாவது பக்தி நல்ல பாடல்.
பதிலளிநீக்கு