சனி, 27 மே, 2023

இலவச நூலகம் மற்றும் நான் வாசிச்ச புத்தகம் 

 






 ================================================================================================================

நான் வாசித்த புத்தகம் - கீதா

சார்மினார் முதல் குதுப்மினார் வரை - இராய செல்லப்பா (chellappay@gmail.com)

 

சார்மினார் முதல் குதுப்மினார் வரை - இப்புத்தகத்தின் ஆசிரியரான செல்லப்பா சார் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும் என்பதாலும் அவரது வலைப்பக்கம் சென்றாலும் தெரிந்து கொள்ளலாம் என்பதாலும் நான் அவரைக் குறித்து இங்கு குறிப்பிடவில்லை.

செல்லப்பா சார், தன் பணி நிமித்தம் பல ஊர்களில் இருந்ததால் அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து சார்மினார் முதல் குதுப்மினார் வரை என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

வழக்கமாக எபியில் வரும் தலைப்பு நான் படிச்ச புத்தகம்/கதை என்பதற்குப் பதில், ஏன் ‘வாசித்த’ என்று நான் சொல்லியிருக்கிறேன் என்பதற்கான என் தனிப்பட்ட புரிதல் - வாசித்த என்று சொல்வது பிடித்திருக்கிறது என்பதோடு ‘படிச்ச’ எனும் போது பள்ளி கல்லூரிப் படிப்பு மதிப்பெண்கள் என்ற கட்டத்திற்குள் வந்திவிடுவதான உணர்வு. 

வாசிப்பு என்பது அதையும் தாண்டியது. சட்டதிட்டம், நேரம் காலம் போன்ற எல்லைகளற்ற நம் விருப்பம் என்று பரந்து விரிந்த ஒன்று என்பது என் தனிப்பட்ட புரிதல்.

சரி இப்போது நாமும் சார்மினார் முதல் குதுப்மினார் வரை பார்ப்போம்!

மொத்தம் 19 தலைப்புகள். பகுதி ஒன்று – நான்கு தூண்கள் நகரம் (சார்மினார்-ஹைதராபாத்) இதில் ஹைதராபாத் அனுபவங்கள் 13 தலைப்புகளில் என்று இருந்தாலும் ஒரு தலைப்பு மட்டும் மூன்று பகுதிகளாக வருகிறது.

பகுதி இரண்டு – ஒற்றைத் தூண் நகரம் (குதுப்மினார்-புதுடெல்லி). இதில் தில்லி அனுபவங்கள் 6 தலைப்புகளில்.

எழுத்தாளர்கள், இலக்கியவட்ட அமைப்புகள் என்று செல்லப்பா சாரின் நட்புவட்டம் பெரிது. அவருடைய வாசிப்பும் விரிந்தது. அதனால் அவரது பேச்சில் பல தகவல்கள், நிறைய விஷயங்கள் இருக்கும் என்பதோடு அவரது கூர்ந்து நோக்கும் நுண்ணறிவையும் அறிய முடியும்.

அவரே தன் பதிவு ஒன்றில் சொல்லியிருக்கிறார். “மரங்களையும் மலர்களையும் படிப்பதைவிட மனிதர்களைப் படிப்பதில்தான் எனக்கு எப்போதுமே விருப்பம்”

அதனால்தானோ என்னவோ, அவரது வங்கிப் பணியின் காரணமாகப் பல மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட போது அங்கு அவர் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் என்று சுவைபடச் சொல்லியிருக்கிறார். அவரது எழுத்தில் நிறைய விஷயங்களோடு ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வும் தனியாகத் தெரியாமல் ஆங்காங்கே எழுத்தினூடேயே கலந்து விரவி இருக்கும்.

ஒரு சாதாரண நிகழ்வைக் கூட இப்படிச் சுவைபட, கவர்ச்சியாகச் சொல்ல முடியுமா என்று தோன்றும் அளவு அவரது கற்பனையும் கவர்ச்சியான வரிகளும் கலந்து மிளிரும்.

அலுவலக நடைமுறைகள், அலுவலக சம்பிரதாயங்கள், மேலிடங்களின் மெத்தனப் போக்கு, தன்வங்கிப் பணி அனுபவங்கள், நடக்கும் தில்லுமுல்லுகள், அதிர்ச்சிகள், சாப்பாட்டு அனுபவங்கள், வீடு தேடிய படலம், கூடப் பணிபுரிந்த சகாக்கள் மனிதர்கள் என்று பல்சுவை அனுபவங்களை மிகவும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். 

சில கதைகளை வாசிக்கும் போது, எழுதியவரின் அனுபவமாக இருக்குமோ என்று தோன்றும். சில கட்டுரைகள், கதைகள்  போலத் தெரியும். அது போலவே இத்தொகுப்பில் ஒரு சில, கதைகள் போன்ற உணர்வைத் தருகின்றன! “தற்செயலாக என்னோடு அறிமுகமாகி எனக்குக் கதானுபவத்தை வழங்கியவர்களும் உண்டு” என்றுதான் தன் முன்னுரையிலும் சொல்கிறார். அப்படி எனக்கும் அந்த உணர்வைத் தந்தவை நான்கு.

“யாரையோ தத்து எடுக்கிறார்களாம்” என்று நளினியைப் பார்த்துக் குறும்பாகச் சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினேன்.” என்று “ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர்” என்ற அனுபவத் தொகுப்பில் இருக்கும் இறுதி வரி, ஒரு கதைக்கான அழகான முடிவு அல்லது ஆரம்பமாக எனக்குப் பட்டது. அந்த இறுதி வரி முதல் வரியாக இருந்தால், “விஷயம் என்னவாக இருக்கும்?” என்று ஏற்படுத்தும் ஒரு குறுகுறுப்பு. இதை வாசிக்கும் போது ஒரு கதையை வாசிப்பது போன்ற உணர்வை பல வரிகள் தந்தன. இது அவர் நிஜமாகவே அப்படிச் சொன்னாரோ அல்லது கற்பனையோ! ஆனால் விவரிப்பில் ரசனையான வரிகள். 

“ராக்கி என்னும் விசித்திரப் பெண்மணி” – இதை வாசித்ததும் எங்கள் ப்ளாக் வலைத்தளத்தில் முன்பு “சீதை ராமனை மன்னித்தாள்” என்று முடிவைக் கொடுத்து கதை எழுதச் சொன்னது நினைவுக்கு வந்தது. செல்லப்பா சார் காசியாபாதில் இருந்த போது நடந்த சம்பவம். அந்த சம்பவத்தை விவரிக்கும் போது தொடக்கத்தில் இப்படிக் கேட்டிருப்பார். “இதைப் படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள் அவள் (ராக்கி) செய்தது நியாயமா என்று”. நியாயமா இல்லையா என்பதை நீங்கள் வாசித்து முடிவு செய்து கொள்ளலாம். என் பதில் கீழே.

ராக்கியின் உழைப்பில் வரும் காசில் குடித்துச் சீரழிக்கும் அவள் கணவனுக்குப் பிற பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிய நேரும் போது நம்பாமலும் அதே சமயம் சந்தேகத்துடனும் இருக்கும் ராக்கி, தன் சொந்தத் தங்கையுடனேயே தன் கணவன் படுத்திருந்ததை நேரில் கண்டதும், பாமரப் பெண்ணாகிய அவளுக்கு வந்த கோபத்தில் கணவனின் காலை வெட்டிவிடுகிறாள். ஆனால் பாருங்கள் உடனே தன் கணவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று வைத்தியம் பார்த்து சரியாகி வீட்டுக்கு வந்ததும், அவனுக்குச் செயற்கைக்கால் பொருத்தித் தர முடியுமா என்று செல்லப்பா சார் குடியிருந்த குடியிருப்புவாசிகளைக் கேட்டு (ராக்கிக்கும் குடியிருப்பு வாசிகளுக்குமான பந்தம் பற்றி புத்தகத்தை வாசித்தால் தெரியும்) அவனுக்குச் செயற்கைக்காலும் பொருத்தப்படுகிறது.

இதை எல்லாம் சொல்லிவிட்டு முடிக்கும் போது, “அவன் காலில் விழுந்து கும்பிட்டுக் கண்ணீர் விட்டாள் ராக்கி. பிறகு தன்னுடைய கருமணித் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அவளுடைய பிழைக்கு அதுதான் பிராயச்சித்தமோ?” என்று சொல்லியிருப்பார். 

இதில் முதல் இரு வரிகள் வரை ஓகே. “சீதை ராமனை மன்னித்தாள்”. ஆனால் கடைசி வரியான “அவளுடைய பிழைக்கு அதுதான் பிராயச்சித்தமோ” என்று முடித்திருக்கும் அந்த வரியை என்னால் ஏற்க முடியவில்லை. ராக்கி என்ன தவறு செய்தாள்? ஏன் பிராயச்சித்தம்? பார்க்கப் போனால் அவள் கணவன் அல்லவா தவறு செய்தான். அவனல்லவா பிராயச்சித்தம் செய்ய வேண்டும். பக்கா கதைக்கான அனுபவம்.

“நாயுடு சொன்ன மர்மக் கதை”இதுவும் நல்ல கதையம்சம் கொண்ட அனுபவம் தான். ஒரு மருத்துவர், அறிவாளி நம் நாட்டின் மருத்துவத் துறைக்கும் அரசிற்கும் மிகவும் நன்மை பயக்கும் ஒன்றை ஆராய்ச்சியில் கண்டுபிடிக்க, அந்த ஆராய்ச்சியோ பெரியதொரு ஊழலை வெளிக் கொண்டுவந்து விட அதை மேலதிகாரிகள் அமுக்கி வெளிக் கொணராமல் செய்வது அந்த மருத்துவரை பாதித்து மரணம் அடைவதை வாசிக்கும் போது, இனி யாரும் அந்தக்காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டு 'எப்படியான காலம் அந்தக்காலம் பொற்காலம்' என்று சொல்வதில் அர்த்தமில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது. எல்லா காலத்திலும் அப்போதைய சூழல், வாழ்ந்த மக்களுக்கேற்ப ஊழல்கள் இருந்திருக்கின்றனதான்.

தொகுப்பில் சில தலைப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். "வெள்ளிக்கிழமை மிளகாய் பஜ்ஜி", “டைமன்ட் சமோசாவும், வைஜயந்திமாலாவும்” "சேலம் ஜெயகட்சுமியும் செகந்திராபாத் பட்டுப்புடவையும், “சப்தர்ஜங்க் மோகினி கதை” என்று. 

"சேலம் ஜெயகட்சுமியும் செகந்திராபாத் பட்டுப்புடவையும்" என்பதில் ஒரு ரூட் நம்பர் பஸ்ஸில் ஏறியிருக்கும் போது அது கிளம்பும் சமயம் அல்லது அதற்கு முன்பு, அது அந்த ரூட் நம்பர் அல்ல என்று வேறு ரூட் நம்பர் போர்டை ஒட்டுவதைப் பற்றிச் சொல்லியிருப்பார். இந்த நிகழ்வு இப்போதும் நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது, நாடு இன்னும் வளரவில்லையோ என்றே தோன்றுகிறது.

“சப்தார்ஜங் மோகினி கதையில் வரும் உரையாடல்கள், வரிகள், செல்லப்பா சாரைத் தெரியாதவர்களோ அல்லது நமக்குத் தெரியாத வேறு எழுத்தாளராகவோ இருந்தால், எழுதியவருக்கும் அப்பெண்ணிற்கும் சினேகம் இருந்திருக்குமோ என்று நம் கற்பனையைத் தட்டி விடும் அளவிற்கான அர்த்தம் தரும் வரிகள்! அந்த வரிகளுக்குப் பின் அவரே அடைப்புக் குறிக்குள் “காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல” என்றும் குறிப்பிட்டிருப்பார். Statutory warning!!!!?😂 வாசகர்களின் கற்பனைக் குதிரையைத் தட்டி பல ஊகங்களுக்கு வழி வகுக்கும் அளவு எழுத்தை சுவாரசியமாக்க எழுத்தாளரின் கற்பனை உத்தியே இந்த மாதிரியான உரையாடல்கள். அது செல்லப்பா சாருக்குக் கைவந்த கலை.

அனுபவ விவரணத்தில் வரும் இப்படியான வரிகள் கதையைப் போன்ற எண்ணத்தைத் தருகின்றன. கதைக்கான நல்ல அம்சங்கள் கொண்ட அனுபவங்களைக் கதைகளாகவே எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது. தலைப்பும் சப்தார்ஜங் மோகினி கதை என்றுதானே இருக்கிறது!

இந்த “சப்தர்ஜங் மோகினி கதை” யில் ஒரு சின்ன சம்சயம் எழுகிறது. தனக்கு மிகவும் பரிச்சயமான மாதவன் எனும் இளைஞனை செல்லப்பா சார், தான் சந்திக்கும் பெண்ணிற்குப் பொருத்தமாக இருப்பான் என்று தோன்றிட அதற்கான முயற்சியில் மறைமுகமாக இறங்குகிறார். பையன் வயது 22 என்றும், வேறொரு வங்கியில் அதிகாரியாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். 22 வயது ஆண் பிள்ளைக்குக் கல்யாணமா என்ற எண்ணம் ஒரு புறம். 

அவர் சந்தித்த பெண் யுபிஎஸ் தேர்வு எழுதி மத்திய அரசுத் துறையில் குமாஸ்தாவாக இருக்கிறாள், வயது ஆரம்ப 20களில் இருக்கும், கூடவே ரஷ்ய மொழி கற்கிறாள் என்றும் சொல்லியிருக்கிறார். சரி மாதவனை விட ஒரு வயது குறைச்சல் என்று வைத்துக் கொள்ளலாம். இடையில் சில குழப்பங்கள் (தகவல் பரிமாற்ற குழப்பங்கள்) நடந்து கடைசியில் அப்பெண் கவரில் வைத்துக் கொடுத்திருந்த ஜாதகம் அவளது அக்காவின் ஜாதகம் என்று தெரிய வரும் போது, ‘அப்படி என்றால் அப்பெண் மாதவனை விட வயதில் பெரியவளாக இருப்பாளே’ என்ற எண்ணம் எழுகிறது. ஒரு வேளை மாதவனின் வயது தட்டச்சுப் பிழையாக இருக்கலாமோ?

இந்த அனுபவ விவரிப்பின் முடிவில் “இப்படித் திடீர்த் திருப்பங்களுடன் கூடிய சப்தார்ஜங் மோகினி கதை நீங்கள் எதிர்பாராதபடி, ஆனால் சுபமான முடிவை எட்டிவிட்டது. திருப்தி தானே!” என்று, வாசகர்கள் நம் கற்பனை ஊகங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறார்! கொஞ்சம் ஏமாற்றம் தான்! இதுவே கதையாக மாறினால் உள்ளே புகுந்து விளையாட நிறைய இடங்கள் இருக்கின்றன.

சில கட்டுரைகளில் ஏதேனும் சம்சயங்கள் எழுந்தாலும் கூட அவற்றைப் பின்னுக்குத் தள்ளும் அளவு கவர்ச்சியான வரிகளில் சுவாரசியமாகச் சொல்லிச் செல்வது அவரது திறமை. 

ராஜா கைய வைச்சா அது ராங்கா போனதில்லே என்ற பாடல் போன்று செல்லப்பா சார் கை வைக்கும் பல முயற்சிகளும் நல்ல விதமாகவே முடியும் என்பது அவரது அனுபவங்களில் தெரிகின்றது. அதை “ராக்கி” பற்றிய அனுபவ விவரணத்திலும் சொல்லியிருப்பார். "எனக்கு எப்போதுமே ஒரு ராசி உண்டு. நான் எதைத் தொடுகிறேனோ அது பிரபலமாகிவிடும்". கூடவே அவர் வணங்கும் பாண்டிச்சேரி அன்னை பற்றிய "அன்னையின் பணம் ஆயிரம்" என்ற விவரிப்பிலும் தெரியவரும். 

கடைசிக் கட்டுரையான “சின்னதொரு வெள்ளி தம்ளர்” என்பதில், லால்பகதூர் சாஸ்திரியை சந்தித்தாரா இல்லையா என்ற தன் அனுபவத்தைச் சொல்ல, லால் பகதூர் சாஸ்திரி அவர்களைப் பற்றியும் தாஷ்கன்ட் ஒப்பந்தம் பற்றி எல்லாம் சொல்லி வெள்ளித் தம்ளர் கதைக்கு வந்து தன் அனுபவத்தை இணைத்து விவரித்திருக்கும் விதம் அனுபவங்களைச் சுவாரசியமாக எழுத நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.

இப்படி, தான் சந்தித்த நபர்கள் பற்றியும் அவர்களுடனான அனுபவங்களையும் தன் அனுபவங்களையும் இடையிடையே பல தகவல்களையும் சொல்லி சுவாரசியமான தொகுப்பாகக் கொடுத்திருக்கிறார், செல்லப்பா சார்.

இப்புத்தக விவரங்கள் மற்றும் அவர் எழுதிய புத்தகங்களின் விவரங்கள் இங்கு படங்களாய்



39 கருத்துகள்:

  1. இராய செல்லப்பா சாரின், சார்மினார் முதல் குதுப்மினார் வரை - அனுபவங்களை அவர் தளத்தில் வாசித்து ரசித்திருக்கிறேன். மிக நன்றாக, படிப்பவர்களுக்கு அலுப்பில்லாமல் எழுதக்கூடியவர் அவர். அந்த அனுபவங்களே படிக்கும்போது எனக்கு அதிசயமாக இருந்தது.

    அது புத்தக வடிவில் வந்திருக்கிறதா? வாங்கிப் படிப்பவர்களுக்கு, நல்ல புத்தகம், நல்ல எழுத்து என்ற உணர்வைத் தரக்கூடியது. இதைப் பகிர்ந்துகொண்ட கீதா ரங்கனுக்குப் பாராட்டுகள்.

    எழுதிய இராய செல்லப்பா சாருக்கும் பாராட்டுகள். (நியூ ஜெர்சியிலிருந்து இராய செல்லப்பா, சென்னையிலிருந்து... என்றெல்லாம் ஒவ்வொரு பதிவின் முடிவில் தன் கேம்ப் எங்கே எனத் தெரிவிக்கும் அவர், ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை எனவும் தெரிவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நானும் அவர் தளத்தில் இவற்றை எல்லாம் வாசித்திருக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமா, நெல்லை புத்தக வடிவில் வந்திருக்கிறது. எனக்கு வந்தது. /

      ஆமாம், ........//வாங்கிப் படிப்பவர்களுக்கு, நல்ல புத்தகம், நல்ல எழுத்து என்ற உணர்வைத் தரக்கூடியது.//

      //படிப்பவர்களுக்கு அலுப்பில்லாமல் எழுதக்கூடியவர் //

      பாத்தீங்களா நெல்லை, நான் எழுதும் போது, சுவாரசியம் என்ற சொல்லை கூடுதல் பயன்படுத்தியிருக்கிறேன் ஆனால் அதுக்குப் பதிலா ஒரு இடத்திலேனும் இந்த வரியை எழுதியிருக்கலாம். எனக்குச் எழுத வருவதில்லை இப்போதெல்லாம். ரொம்ப நாட்கள் எடுக்கிறது.

      //அவர். அந்த அனுபவங்களே படிக்கும்போது எனக்கு அதிசயமாக இருந்தது.//

      எனக்கும் பல வியப்பாக இருந்தது உண்மை. அனுபவங்கள் அப்படி நம்மை வியக்க வைக்கும் அளவிற்கு அதைச் சொல்வதில் அவரது கற்பனையும், அதில் எழும் சொற்களும், எழுத்தாளுமையும் விளையாடியிருக்கின்றன. அதுதானே எழுத்தாளரின் திறமை. இதை பதிவில் சொல்லிவிட்டேன்...ஹப்பா ஒரு சமாதானம்!!!! ஹிஹிஹி

      செல்லப்பா சாரை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அல்ல. அவரது எழுத்து எனக்குப் பிடிக்கும் என்பதால் இதை எடுத்துக் கொண்டேன். பலரும் அவர் தளத்தில் வாசித்திருப்பாங்களா என்று தெரியவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல் வாசிக்காதவங்களுக்கு. ஆனால் சார் அதை வலைத்தளத்திலிருந்து எடுத்திருந்தால் நல்லது.

      நான் பார்க்கவில்லை அங்கு சென்று. சாருக்கும் தெரியாது இப்படி நான் எழுதப் போகிறேன் என்று.

      ////இதைப் பகிர்ந்துகொண்ட கீதா ரங்கனுக்குப் பாராட்டுகள்.//

      மிக்க நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  2. இலவச நூலகம்.. பாராட்டுதலுக்குரியது. யாரும் எந்தத் துறையில் புகழ் பெற வேணுமென்றால் அவரைச் சார்ந்தவர்கள் நிறைய தியாகங்களைச் செய்யவேண்டும், ஊக்கப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விதிவிலக்குகள் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அந்தச் செய்தியை வாசித்துவிட்டேன். ரொம்ப நல்ல விஷயம் பாராட்டிற்கு உரியது. இன்று மிகவும் பொருத்தமான பாசிட்டிவ் செய்தி.

      கீதா

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. செல்லப்பா சாரின் கதை/கட்டுரைகளை முன்பே வாசித்திருந்தாலும் தற்போது நூலாக வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி.

    கீதா ரங்கன் ஆராய்ச்சியும் அவர் ஒவ்வொரு கதையாக விமரிசனம் செய்திருப்பதும் சிறப்பாக உள்ளது. இந்த ஆராய்ச்சி, நூலுக்கு ஒரு அணிந்துரையாக அமைந்து விட்டது. இந்த அணிந்துரையையும் நூற்பதிப்பில் சேர்க்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

    படிச்ச, வாசித்த என்பதின் அர்த்த வித்தியாசங்களை அவர் கூறியிருக்கிறார். இங்கு மலையாளத்தில் இரண்டுக்கும் வித்யாசமான பொருள்/அர்த்தம் உண்டு. உதாரணமாக "கத்து வாயிச்சு ( கடிதம் வாசித்தேன்)" என்பார்கள். அதே போல் "பாடம் படிச்சு (பாடம் படித்தேன்) " என்பார்கள். ஆழ்ந்து வாசித்து மனதில் படிய வைப்பது படித்தம். வாசிப்பு என்பது ஒரு அனுபவம் மட்டும், ஒரு walk through மட்டும். இது என்னுடைய புரிதல்.

    நல்ல விமரிசனம், அணிந்துரை. பல நாட்கள் உழைப்பு தெரிகிறது. படங்கள் முதலில் பதித்திருக்கலாம். பாராட்டுக்கள். தொடரட்டும் ஆராய்ச்சி.

    அடுத்து கௌ சாரின் அனுபவ பாடங்களுக்கு ஒரு அணிந்துரை எழுதலாமே! (கொளுத்தி போட்டுட்டேன்) வெடித்தால் சரி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! ஜெ கு அண்ணா மிக்க நந்னி கேட்டோ! ரொம்பவே பாராட்டிட்டீங்க!

      உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் செல்லப்பா சார் என்னிடம் கேட்டார் புத்தகம் வாசித்து எழுதித் தரீங்களா என்று. ஆனால் எனக்குத் தயக்கம். அவரது எழுத்து எங்கே என் எழுத்து எங்கே. அவரது அழகான எழுத்திற்கு நான் இடையூராக இருந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் எனக்குச் சிறப்பாக ஒரு தேர்ந்தெழுத்தாளர் போல எனக்கு எழுத வராது என்று சொல்லிவிட்டேன். ...உண்மையும் அதுதான். எனக்கு எழுத வருவதில்லை.

      //உதாரணமாக "கத்து வாயிச்சு ( கடிதம் வாசித்தேன்)" என்பார்கள். அதே போல் "பாடம் படிச்சு (பாடம் படித்தேன்) " என்பார்கள். //

      ஆமாம்...

      //ஆழ்ந்து வாசித்து மனதில் படிய வைப்பது படித்தம். வாசிப்பு என்பது ஒரு அனுபவம் மட்டும், ஒரு walk through மட்டும். இது என்னுடைய புரிதல்.//

      உங்கள் புரிதலும் சரியே ஜெ கு அண்ணா!

      அதனால்தானே அந்த படிச்சு ன்றத சொல்லியிருக்கிறேன். ஹாஹாஹா படிப்பு என்றாலே எனக்கு என் பாடப் புத்தகங்கள் விருப்பமில்லாமல், தேர்விற்காகப் படித்த பாடங்கள் நினைவுக்கு வந்து விடும். படிப்பில் நான் ரொம்ப ரொம்ப கீழ்! பாஸானாலே பெரிய விஷயமாக இருந்த காலம். என் ரிப்போர்ட் கார்ட் கம்யூனிஸ்ட் நிறம் நிறைந்து இருக்கும்!

      ஆனால் வேறு புத்தகங்கள் வாசிக்கச் சொன்னால் நேரம் காலம் இல்லாமல் வாசிக்கும் இயல்பு. ஆனால் வீட்டில் அனுமதி கிடையாது. மதிப்பெண் மதிப்பெண், வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமே. ஆனால் பாருங்க வேலைக்கான தேர்வுகளில் படித்ததையா கேட்கிறாங்க!!!?

      அதனாலோ என்னவோ எனக்கு இப்படித் தோன்றி என் புரிதலை எழுதினேன்!

      ஆ!! அண்ணா கொளுத்திப் போட்டு மாட்டிவிட்டீங்களே. என்னைவிட மிக நன்றாக எழுதக் கூடியவங்க இங்க நிறைய இருக்காங்க! ஏன் நீங்கள் உட்பட.

      மிக்க நன்றி ஜெ கு அண்ணா.

      கீதா

      நீக்கு
    2. நல்ல விமரிசனம், அணிந்துரை. பல நாட்கள் உழைப்பு தெரிகிறது. //

      நன்றி அண்ணா. ஆனால் உழைப்பு என்று சொல்வது கொஞ்சம் பெரியது என்பது என் எண்ணம். எனக்கு எழுதுவதற்கு என் மனம் சரியாக ஒத்துழைக்காமல் நிறைய சமயம் எடுக்கிறது என்பதே உண்மை. யதார்த்தம்.

      //படங்கள் முதலில் பதித்திருக்கலாம்.//

      அதை நான் முதலில் கொடுத்திருக்கலாமோ?!!! ம்ம்ம் அதுவும் சரிதான்.... அது புத்தக விவரங்கள் என்பதால் கடைசியில் கொடுத்தேன்.

      கீதா

      நீக்கு
  5. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா!!! பதிவு பற்றி கருத்து இல்லையே. இன்னும் பயணமோ?!

      கீதா

      நீக்கு
  6. இராம.செல்லப்பா ஸார் அவர்களின் எழுத்து தனி ரகம் அது பிறரது எழுத்துகளோடு இணையாது செல்லும் வினோதமான பாதை.

    விமர்சித்த விதம் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கருத்து கில்லர்ஜி! பாருங்க எனக்கு இப்படி பதிவில் எழுதத் தெரியவில்லை....

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
    2. தனித் தனமையானது என்ற சொல்லைக் கூட புத்தகம் பற்றி எழுதிய எனக்கு எழுதத் தெரியலை பாருங்க!

      கீதா

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. பொதுவாக மக்களுக்காக ஒரு நூலகம் அமைத்தவர்க்கும், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி தன் திறமைகளை வெளிப்படுத்துபவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இருவருமே தங்கள் தாயாரின் நல்லாசிகளுடன், அவரை மதித்து வாழ்பவர்கள். அதற்காகவே அவர்களை பாராட்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வில், திறமையான பழம் பதிவர் சகோதரர் இராய.செல்லப்பா அவர்களின் நூலை சிறப்பாக அறிமுகம் செய்து விமர்சித்த சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றியும்.

    நானும் அவரின் பல பதிவுகளை படித்திருக்கிறேன். திறமையான எழுத்துக்களை தன் வசப்படுத்திக் கொண்டவர்..நகைச்சுவையாகவும் எழுதும் ஆற்றல் பெற்றவர். என் வலைத்தளத்திற்கும் வந்து என் சில பதிவுகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்திருக்கிறார். அவருக்கு இங்கும் என் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைய அருமையான வாசிப்பு பகுதிக்கு சகோதரி கீதாரெங்கன் தந்திருக்கும் உழைப்பைப் பார்த்து பிரமிக்கிறேன் அவரின் தொகுப்பாகிய இந்த கட்டுரை எழுத்துக்களுக்கும் என் பாராட்டுக்கள். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய கதை பகிர்வில், திறமையான பழம் பதிவர் சகோதரர் இராய.செல்லப்பா அவர்களின் நூலை சிறப்பாக அறிமுகம் செய்து விமர்சித்த சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றியும்.//

      மிக்க நன்றி கமலாக்கா

      //இன்றைய அருமையான வாசிப்பு பகுதிக்கு சகோதரி கீதாரெங்கன் தந்திருக்கும் உழைப்பைப் பார்த்து பிரமிக்கிறேன்//

      ஆ!! கமலாக்கா!!! ரொம்ப ஹெவியாக உணர்கிறேன்!!!!! ஹாஹாஹாஹா....உழைப்புன்னு சொல்லிருக்கீங்களே அதுக்கு!!

      அக்கா உண்மைய சொல்லணும்னா உழைப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை. எனக்கு எழுத ரொம்ப நேரம் எடுக்கிறது என்பதுதான் உண்மை.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. "பழம் பதிவர்'னா என்ன அர்த்தம்? ரொம்ப பழைய பதிவர்னா? அல்லது அந்தத் துறையில் பழம் தின்று கொட்டைபோட்டர் (அதாவது அவ்வளவு அனுபவம் மிக்கவர்) என்று அர்த்தமா? கமலா ஹரிஹரனை வம்புக்கு இழுக்கலைனா, எங்க நான் அவர் கருத்தைப் படிப்பதில்லையோ என்று நினைத்துக்கொள்வார்.

      நீக்கு
    3. நெல்லை, நீங்கள் ரெண்டும் சொல்லிட்டீங்க அப்புறம் என்ன!! கமலாக்காவும் அதை ஆமோதிப்பாங்க பாருங்க!

      ஆ வயதானவர் என்ற அர்த்தம் வேறு இருக்கா!! செல்லப்பா சார் வயசானவர் இல்லை!!

      கீதா

      நீக்கு
    4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      /பழம் பதிவர்'னா என்ன அர்த்தம்/

      ஹா ஹா ஹா. நமக்கும் (குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் எனக்கு) முந்தைய முன்னோடிகளாய் விளங்கி பல துறைகளில் பல விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டு, தம் திறமையான எழுத்துருக்களின் மூலம் பதிவுகளை வடிவமைப்பவர் என்ற என்னுடைய மனக்கணக்கின்படி கூறியுள்ளேன். (நீங்கள் சொல்வது உண்மைதான். நன்றி. (ஆனால், உங்கள் கருத்துக்கு நான் மூக்கை சுற்றி வளைத்து தொட்டுள்ளேன். :)))

      /கமலா ஹரிஹரனை வம்புக்கு இழுக்கலைனா, எங்க நான் அவர் கருத்தைப் படிப்பதில்லையோ என்று நினைத்துக்கொள்வார்./

      ஹா ஹா ஹா ஆமாம்.. அதுவும் உண்மைதான். சென்ற பதிவுக்கு முன்னர் நான் எழுதிய கதையை அப்புறமாக படித்து கருத்துரை தருகிறேன் என்று கூறிய நீங்கள் இன்னமும் படிக்கவில்லையே என நான் தினமும் நினைப்பது போலவே என் கருத்துரையையும் படிக்கவில்லையே என நினைப்பேன். (அப்பாடா எப்படியோ உங்களை வம்பில் சிக்க (கதையை படிக்க வைப்பது சிக்கல்தான் என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது) வைத்து விட்டேன்:))) நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன். .

      நீக்கு
    5. வணக்கம் சகோதரி

      /அக்கா உண்மைய சொல்லணும்னா உழைப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை. எனக்கு எழுத ரொம்ப நேரம் எடுக்கிறது என்பதுதான் உண்மை./

      அதைத்தான் உழைப்பு எனக் கூறினேன் சகோதரி. நம் வேலைகளுக்கிடையே கிடைக்கும் நேரத்தில் இந்த மாதிரி யோசித்தோ, யோசிக்காமலோ, ஒவ்வொரு எழுத்தையும் நாம் நல்முத்தாக எண்ணி வார்த்தைகளாக அதை சேர்த்துக் கோர்த்து ஒரு பதிவாக ஆக்குவதைதான் உழைப்பு என்றேன். அந்த வகையில் உங்களுக்கு இன்றைய அழகான பதிவுக்கு மீண்டும் என் பாராட்டுக்கள். நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. கமலாக்கா, வீட்டு வேலைகள் வெளி வேலைகள் என்று இருந்தாலும், எழுதும் போடும் கூட நிறைய நேரம் எடுக்கிறது. டக்கென்று எழுதிவிட முடிவதில்லை என்பதைச் சொன்னேன். அது என் குறைபாடு. மனம் செல்லும் வேகத்திற்கு எழுத முடிவதில்லை அல்லது மனம் இடையில் பிரேக் போட்டு நின்று விடும்!!! அவ்வளவுதான் எழுதியவை அப்படியே இருக்கும். ஹாஹாஹா. மீண்டும் தட்டிக் கொட்டி எடுக்க நாளெடுக்கும்...

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  9. இராய.செல்லப்பா ஐயா அவர்களின் புத்தக விமர்சனம் அருமை...

    பதிலளிநீக்கு
  10. நூலகம் குறித்த செய்தி - பாராட்டுக்குரிய செயல். அன்னாருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    இராய. செல்லப்பா அவர்களின் நூல் குறித்த வாசிப்பு அனுபவம் மிகவும் நன்றி. அவரது தளத்தில் இந்த நூலில் இடம்பெற்ற சில பகுதிகளை படித்து இருக்கிறேன். நல்லதொரு எழுத்தாளர். நூல் வாசிப்பு அனுபவம் பகிர்ந்த கீதா ஜி அவர்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவர் வலைப்பக்கத்தில் வந்தவைதான்.

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. அன்னையர் தின சிறப்பு பதிவுகளோ! முன் இரண்டு செய்திகளும்.
    நூலகத்திற்கு தாயின் பெயர் வைத்து தாயை போற்றுகிறார்.
    மாடலிங் செய்பவர் தனக்கு நல்ல உற்ற துணையாக இருக்கும் தாயை போற்றுகிறார். அருமை. தாயின் ஆசியுடன் நன்றாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  13. கீதா புத்தக வாசிப்பு பற்றி சொன்னது அருமை. இராய. செல்லப்பா அவர்களின் நூலை வாசித்து அருமையாக விமர்சனம் செய்து விட்டீர்கள். எனக்கு அவ்வளவாக விமர்சனம் செய்ய வராது என்று சொல்லி மிக அழகாய் விமர்சன்ம் செய்து விட்டீர்கள்.

    //“அவன் காலில் விழுந்து கும்பிட்டுக் கண்ணீர் விட்டாள் ராக்கி. பிறகு தன்னுடைய கருமணித் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அவளுடைய பிழைக்கு அதுதான் பிராயச்சித்தமோ?” என்று சொல்லியிருப்பார். //

    தவறான பாதையில் போகிறவர்களை வீட்டில் சொல்வார்களே "காலை அடித்து உடைக்கனும் " என்று அது போல கோபத்தில் காலை வெட்டி விட்டார் போலும்.
    நம் ஊரில் "வரட்டும் காலை தறிக்கிறேன்" என்பார்கள்.

    கோபத்தில் இப்படி செய்து விட்டோமே ! என்று மன்னிப்பு கேட்டு தாலியை கண்ணில் ஒற்றிக் கொள்கிறார் போலும்.
    தாய் கோபத்தில் குழந்தையை அடித்து விட்டால் பின் கட்டிக் கொண்டு அழுவாள் தாய்மையின் உணர்வு அது.

    கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்று
    நிறைய பழைய சினிமாக்களில் கெட்டு போய் திரும்பி வரும் கணவனை மனைவி அவன் காலில் விழுந்து ஏற்றுக் கொள்வது போலவே முடிவு இருக்கும்.

    அன்றைய பெண்களின் நிலையை கதையில் கொண்டு வந்து இருப்பார் என்று முன்பு எங்கள் ப்ளாக் வலைத்தளத்தில் கதையை படிக்கும் போது நினைத்தேன்.

    எனக்கு எழுத வராது என்று சொல்லி கொண்டே தேர்ந்த எழுத்தாளர் என்று காட்டி விட்டீர்கள், அருமையான விமர்சனத்தால்.

    சாரின் தளத்தில் நிறைய நானும் வாசித்து இருக்கிறேன், அவர் எழுத்து சகோ தேவகோட்டை ஜி சொல்வது போல் தனித்தன்மையானது தான்.
    உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    ஜெயக்குமார் சார் சொல்வது போல இனி நூல் அணிந்துரைக்கு உங்களை கண்டிப்பாய் அழைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா, பாராட்டி எழுதிய கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      கோபத்தில் அப்படிச் செய்துவிட்டோமே என்று மன்னிப்பு கேட்டிருந்தாலும், அவள் அப்படிச் செய்திருக்கவில்லை என்றால் அந்தக் கணவன் திருந்தியிருப்பானா? நீங்கள் சொல்லியிருப்பது போல் அன்றைய பெண்களின் நிலையை எழுதியிருக்கலாம்.

      இல்லை அக்கா, இங்கு கருத்து சொன்ன பலரும் பாராட்டியிருந்தாலும் என் மனதில் இன்னும் அந்த எண்ணம் இருக்கிறது. பல காரணங்கள்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா


      நீக்கு
  14. ஆஹா என்ன இது, கீதா எனக்கு எழுதத்தெரியாது எனச் சொல்லிக் கொண்டே புத்தகப் பரிந்துரையை மின்னி முழக்கியிருக்கிறா, குதுர்ப்பினார் டெல்லியில்தானே இருக்கு அதன் அருகாமையில் பலமுறை போய் வந்தோம் ஆனா இறங்கி உள்ளே அருகில் பார்க்கும் ஆவல் ஏனோ எழவில்லை, பார்த்த இடத்தில் பெயர் கேட்டதும் , களமிறங்காமல் இருக்க முடியவில்லை மீக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா....ஓ அம்பாணி அதிரா!!!! ஆமா நீங்க போய் வந்தீங்களே...காணொளிகள் பார்த்தேன். குதுப்மினார் தில்லியில்தான் இருக்கு!!! ஒரு சில காணொளிகள் நான் பார்க்கவில்லை விட்டுப் போயிருக்கு என்று நினைக்கிறேன். நானும் குதுப்மினார் வரை சென்றிருக்கிறேன் ஆனால் உள்ளே போனதில்லை.

      மிக்க நன்றி அதிரா.

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!