சனி, 6 மே, 2023

'சூடானில் இந்திய ......' மற்றும் 'நான் படிச்ச கதை'

 

நியூஸ் ரூம் 




ஓ..   ஏப்ரல் மே வந்துடுச்சா?!

தோனியைப் பார்க்கறேன்னு முட்டி மோதி சாவறாங்க...  லேடீஸ்லாம் மிதிப்படறாங்க..  நசுங்கறாங்க..  சேலம் விளையாட்டு மைதானத்தில் உங்க கட்சி பேனராம்..   அதையெல்லாம் கவனிங்க..  அப்புறம் மல்யுத்த வீரர்களை கவனிக்கலாம்!


நம்மூரில் அரசியல் பண்ணியாச்சு..   இப்போ அடுத்த மாநிலத்தில்!
தேனீக்கள் எவ்வளவு உயரம் பறக்கும்?!

=====================================================================================================================


இனி பாஸிட்டிவ் செய்திகள்....

மக்கள் நலனில் அடுத்த கட்டம்.



நேர்மை வாழ்க...


இந்திய அரசாங்கம் மறுபடி சாதித்திருக்கும் நிகழ்வு.  உலக அரங்கில் இந்தியாவைப் பார்த்து புருவம் உயர்த்த வைக்கும் நிகழ்வு.

வெளிநாட்டு பாஸிட்டிவ் ஒன்று..

 ===================================================================================================================================================

நான் படிச்ச கதை (JKC)

ஏட்டில் இல்லாத மஹாபாரதக்  கதைகள்.

(தொகுப்பு - JK)

3&4

“மகாபாரதக் கதைகளை ஏட்டில் படித்தவர்கள் பலர் ஆகும். அக்கதையை ஏட்டில் படிக்காதவர்களிடையே பல வேறு பட்ட கதைகள் வழக்கில் உள்ளன. அவை ஏட்டில் இடம் பெறாத நாட்டுப்புறக் கதைகள். அவை செவி வழிக் கதைகளாக இருந்தாலும் நன்மை பயப்பனவே தவிர தீமை விளைவிப்பன அல்ல.

 

“பெரும்சோறு” கோவேந்தன்

 

பாரதப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும் பலரும் உயிர் திறக்கின்றனர். மற்றும் பலர் போர்க்களத்தில் உணவில்லாமல் உலர்கின்றனர். இக்கொடுமையைக் கண்டான் தமிழ் மன்னன் ஒருவன். அவன் பெயர் உதியன் சேரலாதன். போரில் துயர் உருவாவதைக் கண்டு  அவர்களுக்கு உதவி செய்யுமாறு அவன் அருள் உள்ளம் உந்தியது.

தாகம் என்றவற்குத் தண்ணீரும், பசித்தவருக்கு உணவும் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தான். இன்னார் இனியார் என்றில்லாமல் இரு தரப்பினருக்கும் உதவி செய்தான்.

அவ்வாறு செய்த உதவியால் “பெரும்சோற்று உதியன் சேரலாதன்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்,

முதற் சங்கத்து புலவராகிய முரஞ்சியூர் முடிநாக ராயர் என்பார் அவனைப் பாராட்டிப் பாடினார்.

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,

நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை

ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,

பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!

என்பதே அப்பாடல்.

இங்கே கண்ட செய்தி தமிழ் நாட்டில் மட்டும் வழங்கி வந்துள்ளது. 

இதே செய்தியை சிலம்பும் பெரும்பாணாற்றுப் படையும் கலித்தொகையும் குறிப்பிடுகின்றன. 

இந்தக் கருத்தை ===> தமிழ்த்துளி <=== தளத்தில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

 

https://vaiyan.blogspot.com/2014/09/002.html

  

ஐவர் = பஞ்ச பாண்டவர்

ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர்

இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இந்தச் சேர அரசன் உதியன் பெருஞ்சோறு வழங்கினான்.

இதனால் இவன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தவன்.

இது ஒரு கோணம்.

 

ஐவர் = பஞ்சவர் = பாண்டியர்

நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு)

பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருவரும் போர்க்களத்தில் மாண்டபோது இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான்.

இது மற்றொரு கோணம்.  

வீமன் எழுதிய சமையல் நூல்.

கோவேந்தன் 

பத்துப் பாட்டு என்கிற சங்கப் பாடல் தொகுதியில் ஒன்று சிறு பாணாற்றுப் படை சமையல். அதனுள் வீமசேனன் சமையல் சாத்திரம் ஒன்று படைத்தான் என்று செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.

 

     கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்

பூ விரி கச்சை புகழோன் தன்முன்

பனி வரை மார்பன் பயந்த நுண்பொருள்

     பனுவலின் வழாஅ பல்வேறு அடிசிலை..

 

- வரிகள் 238-241

 

கா எரி ஊட்டிய கணை கவர் தூணிபூ விரி கச்சை புகழோன் - காண்டவ வனத்தை நெருப்புண்ணும்படி எய்த கணையை உள்ளடக்கின ஆவநாழிகையினையும் (அம்பறாத் துணியையும்) பூத்தொழில் பரந்த கச்சையினையும் (அதாவது இடைக்கச்சினையும்) உடைய புகழ் மிக்கவனின் (அருச்சுனன்) 

(புகழோன்) தன்முன் பனிவரை மார்பன் பயந்த- (அருச்சுனனின்) தமையனாகிய இமய மலையையொத்த மார்பை உடையவனான வீமசேனன் கண்ட நுண் பொருள் பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில்- கூரிய பொருளையுடைய மடைநூலில் காணப்படும் நெறியிலிருந்து தப்பாத பல வேறுபாட்டையுடைய அடிசிலை.. 

வீமன் செய்த சமையல் நூல் இருந்ததாக வடநாட்டுக் காப்பியங்கள் குறிப்பிடவில்லை. தமிழ் நாட்டில் மட்டும் இச்செய்தி வழக்கு வந்துள்ளது. 

இவ்விரண்டு கதைகளுமே எனக்கு நம்பும்படியாக இல்லை. ஆனால் அந்தக் காலத்தில் பீமவிலாஸும நளவிலாஸும் தான் அன்றைய “சரவணபவன்கள்” .

 





48 கருத்துகள்:

  1. ஆஹா! திரு ஜேகே அவர்கள் மிக அருமையான விஷயங்களைத் தொகுத்தளித்திருக்கார். இந்தப் பெருஞ்சோற்றுச் சேரலாதன் பற்றி தமிழ்த்தாத்தா அவர்களும் எதிலோ குறிப்பிட்டு உள்ளார். இம்மாதிரி விஷயங்கள் படிக்கவே பெரும் சுவை.

    பதிலளிநீக்கு
  2. அட? நான் தான் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா? போணி ஆகணுமே பிள்லையாரே! காப்பாத்து! அந்தக் காலம் என்ன இந்தக் காலத்திலும் திருப்பதியில் பீம விலாஸில் சாப்பாடு, டிஃபன் எல்லாம் நன்றாகவே உள்ளது. ரயில் நிலையம் அருகே இருப்பதைச் சொல்றேன். வேறே சில கிளைகளும் உள்ளே இருக்கின்றன. ரயில் நிலையம் அருகே உள்ள இந்த பீமவிலாஸில் தங்கவும் அறைகள் வசதியாகக் கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது வருமோ, எவ்வளவு வருமோ அதுதான் வரும், அவ்வளவுதான் வரும்!!!

      நீக்கு
  3. பீம பாகம் எப்படினு தெரியலை. ஆனால் நளபாகம் என்பது அடுப்பில் வைத்துச் சமைக்காத உணவு வகைகள். ஆனால் பலரும் பொதுவான அடுப்பில் வைத்துச் சமைக்கும் சமையல் தான் நளபாகம் எனச் சொல்லப்படுவதாக நினைக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதுமே அந்தக் காலத்தில் சொல்லப்பட்டவற்றுக்கு அதன் உண்மையான அர்த்தத்தை விடுத்து இப்போது வசதிக்கு தக்கபடி அர்த்தம் வைத்துக் கொள்(ல்)கின்றனர்!

      நீக்கு
  4. நியூஸ் ரூம் தினம் வருமா? செய்திப்பகிர்வுக்கு நன்றி. நல்ல செய்திகளும் தினசரியில் பார்த்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிதான் இப்போதைக்கு எண்ணம்! பார்ப்போம். வாசகர்களின் பங்களிப்பும் தரலாம்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்புவோம் நாராயணனை... வாங்க கமலா அக்கா.. வணக்கம்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    நீயூஸ் ரூம். பகுதி தினமுமா ? நல்லதொரு சேவை. இந்த புது முயற்சி பாராட்டத்தக்கது. வியாழன் கதம்பத்தில் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களால் புதுப்பகுதியாக வந்து கொண்டிருக்கிறது. இனி தினமும் என்பது நல்லதொரு தகவல். தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வோம். இன்றைய தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டேன்.

    ஏப்ரல் மே வந்ததும் குழந்தைகள் அடுத்த நிலை கல்விக்கு அடியெடுத்து வைக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு கூடவே வருத்தமாக இதுவுந்தான்.(பள்ளி கட்டணங்கள்) குரு தட்சணை.

    தேனீக்கள் கூடு கட்டும் வரை அந்த விமானம் பயன்பாடு இல்லாமல் இருந்ததா? அனைத்து பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியூஸ் ரூம் பகுதிக்கு நீங்களும் கூட அனுப்பலாம்.  ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் கட்டணம் பற்றிய வசனங்கள் ஒலிக்கும்.  தீபாவளி பொங்கல்ஸ் சமயங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பற்றி வசனம் விடுவார்கள்!

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகளும் அருமை.

    புற்று நோய்க்கு தகுந்த பாதுகாப்பாக வந்த சிகிச்சையை கண்டுபிடித்தமைக்கு வாழ்த்துகள்.

    பேருந்தில் பயணம் செய்தவர் தவற விட்ட நகை பணம் போன்றவற்றை அவரிடம் பத்திரமாக ஒப்படைத்த அப்பேருந்தின் ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டுக்கள். நல்லவர்கள் செயல்களினால் , இன்றும் நாட்டில் மழை பெய்கிறது.

    வெளிநாட்டு பாஸிட்டிவ் செய்தியும் அருமை. இக்கட்டான நிலைமையில் பேருந்தில் பயணித்த அந்த பையன் எடுத்த புத்திசாலித்தனமான செயலை பாராட்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயன்பெறுவோம். வாழ்த்துவோம். பாராட்டுவோம். நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  9. பேருந்தில் கண்டெடுத்த நகை பணம் இவற்றை உடைமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த பேருந்தின் ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டுகள்.

    இவர்களைப் போன்றவர்களது செயல்களினால் தான் இன்றும் நாட்டில் மழை பெய்து கொண்டிருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  10. இங்கே வந்து சேர்ற வரைக்கும் ஜெய் பாரத், வந்தே மாதரம்,
    மன் கி பாத்,
    மோதி ஜிக்கு ஜே!.. எல்லாம்...

    இந்த மண்ணை மிதிச்சதும் பூர்வ ஜென்ம வாசனை வந்துடும்..

    அதுக்கப்புறம் தில்லாலங்கடி தில்லானா -
    மங்கி பாத் தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம தஞ்சாவூர் பாரம்பரிய வாங்கிபாத் சாப்பிட்டிருக்கிறீர்களா?

      நீக்கு
    2. இந்த நேரத்தில் வங்கிபாத் நினைவு வந்து விட்டதா?..

      நீக்கு
  11. இன்றைய "நான் படிச்ச கதை" இதுவரை அத்தலைப்பில் வந்த பதிவுகளிலேயே மிகவும் மொக்கையான (worst ) பதிவு என்பது என்னுடைய கருத்து. அதாவது இது கதையாக இருக்கமுடியுமே தவிர நிகழ்ந்ததாக கொள்ள முடியாது.

    முதலில் வந்து பாராட்டிய கீதாக்காவுக்கு நன்றி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய மஹாபாரதப் பகுதி கதையே அல்ல. ஓர் நிகழ்வை எடுத்துச் சொல்லி இருக்கிறது. மஹாபாரதம் உண்மையா என்பவர்களுக்கும் குருக்ஷேத்திரப் போர் நிகழ்ந்ததா என வினவுகிறவர்களுக்கும் ஒரு வகையில் பதில் சொல்லும் பதிவு என்னலாம். ராமாயணத்திலும் பாண்டியர்கள் பங்கெடுத்துக் கொண்டது குறித்து வரும். அப்போச் சோழர்கள் இல்லை. அல்லது இருந்தாலும் அடங்கி இருந்தார்கள்.

      நீக்கு
  12. அந்த ஒற்றை ஸ்கெட்ச் ஒரு சில கோடுகளில் உருவான அழகான ஓவியம்! யார் வரைந்தது என்று தெரியவில்லை. மிகவும் ரசித்தேன்!

    புற்றுநோய் பாதிப்புகளை துல்லியமாகக் கண்டறியும் ' ஹெலிகல் டோமோதெரபி' மூலம் ஆரம்பத்திலேயே நல்ல சிகிச்சை கொடுக்க முடியும் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம்!
    பாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியூஸ் ரூம் ஓவியத்தை சொல்கிறீர்களா? இணையத்தில் இருந்து எடுத்தது! நன்றி மனோ அக்கா.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் நன்று. தெரியாத இலக்கிய சம்பவங்கள் சமையலில், பீமனும், நளனும் சிறந்தவர்கள் என கேள்விபட்டுள்ளோம். பொதுவாக அக்கால அரசர்கள் அறுபத்துநான்கு கலைகளில் (அதில் சமையல் கலையும் ஒன்றாயிற்றே.) தேர்ச்சி பெற்றவர்கள் எனவும் படித்துள்ளோம். இங்கு இங்கும் பல விபரங்கள் தெரிந்து கொண்டேன். பல விஷயங்களை இங்கு பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. உணவு ஒன்று பந்திக்கு வருவதற்கு முன் சமைத்தவருக்குத் தனது சமையலின் மீது திருப்தியும் சந்தோஷமும் வர வேண்டும்..

    இன்றைய பந்தி விசாரணை,!..

    பதிலளிநீக்கு
  15. மக்கள் உணராதவரையில் அரசியல்வாதிகளையோ, திரைப்பட கூத்தாடன்களையோ, கிரிக்கெட் விளையாடுபவர்களையோ குற்றம் சொல்வது அவசியம் இல்லாத வேலை.

    நல்ல மனங்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  16. //பல் வேறு அடிசில்// - அடிசில் என்பதற்கு உணவு, சாதம் என்று பொருள். (பொருளிலும் அடிசில் என்றே சொல்லப்பட்டிருக்கிறது). சர்க்கரையைச் சேர்த்துச் செய்யும் சாதம், அக்கார அடிசில் என்று இலக்கியங்களில் வருகிறது. பொங்க வைப்பதால் பொங்கல் என்று பேச்சுவழக்கிலும் சொல்லப்படுகிறது. சர்க்கரைப் பொங்கல்/வெண்பொங்கல் என்று

    நியாயமாகப் பார்த்தால், தமிழர்கள் கத்தரி அடிசில், தேங்காய் அடிசில், எலுமிச்சை அடிசில் என்றே சொல்லணும். ஆனா பாருங்க, இந்த தஞ்சாவூர்க்காரங்க, வாங்கிபாத் என்று சொல்வதில்தான் சந்தோஷமடையறாங்க. பகாளாபாத்-தயிரன்னம்/தயிர்சாதம் என்றெல்லாம் சொன்னால்தான் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிசில் என்றால் ஏதோ தேங்காய் சில்லை சொல்வது போலவும், ஆதி வாங்குவது போலவும் இருக்கிறது!!! :))) ஆமாம் ததியோன்னம் ஓகேயா?

      நீக்கு
  17. மஹாபாரத யுத்தத்தில், சேரலாதன் இரண்டு பக்கங்களில் எதிலும் சேராமல், படைவீரர்களுக்கு உணவு படைக்கும் வேலையை எடுத்துக்கொண்டு, பெருஞ்சோற்றுச் சேரலாதன் என்று பெயர் பெற்றதாகப் படித்திருக்கிறேன். வீமன், ஒரு வருடம் பிறர் அறியாது வாழும் காலத்தில், அரசனின் சமையலறையில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாகப் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. நியூஸ் ரூம் நன்றாக இருக்கிறது. பேப்பர் படிக்கும் படம் யார் வரைந்த படம்?

    செய்திகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.
    புற்று நோயை விரைவில் கண்டறியும் சாதனம் நம்பிக்கை அளிக்கிறது.

    பேருந்தில் பயணம் செய்தவர் தவற விட்ட நகை பணத்தை அவர்களிடம் சேர்த்த ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. ஏட்டில் இல்லாத மஹாபாரதக் கதைகள்.//

    கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!