இந்நாளில் 50 பைசா புழக்கத்தில் இருக்கிறதா, தெரியவில்லை.
கூடிய விரைவில் ஒரு ரூபாய் நாணயம் கூட வழக்கொழிந்து போகலாம். ரூபாய் அளவில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் எல்லாம் கூட உபயோகத்தில் இல்லை. ஐந்து ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. கண்ணிலேயே படுவதில்லை. புதிய வகை ஒரு ரூபாய் நோட்டை நான்கு வருடங்களுக்கு முன் என் மாமா என்னிடம் கொடுத்த நினைவு இருக்கிறது.இந்த ரசீதை வாட்ஸாப்பில் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் "ஐந்து முதல் ஒன்பது வரை.. ஆனால் ஏழு இல்லை" என்றான்.
இந்த ஹோட்டல் ரசீது வழங்கப்பட்ட நாளில் பத்து பைசா அஞ்சு பைசா, ஏன் மூன்று பைசா இரண்டு பைசா கூட வழக்கத்தில் இருந்தது. ஹோட்டல் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் காஸ்ட்லி ஹோட்டல் போல தெரிகிறது! ஸ்டார் ஹோட்டலோ என்னவோ... இன்றைக்கு 53 வருடங்கள் ஆகி விட்டன! அப்போது நான் பிறந்திருக்கக் கூட மாட்டேன்.
இப்போது கூட இந்தப் பெயரில் சோழிங்கநல்லூரில் ஒரு ஹோட்டல் இருக்கிறது.
கவனியுங்கள்.. ஒரு மசாலா தோசை 50 பைசா... ஒரு காஃபி 50 பைசா... காஃபி விலை அதிகம் என்பதிலிருந்துதான் இது ஸ்டார் ஹோட்டலாயிருந்திருக்கக் கூடும் என்று அவதானித்தேன்! இப்போதெல்லாம் காஃபி A2B யில் 37 ரூபாய்க்கு கிடைக்கிறது... அது என்ன 37 ரூபாய் கணக்கோ... 35 அல்லது 40 என்றில்லாமல்! சத்தமாக சொல்லக் கூடாது... நேயர்களின் எதிர்பார்ப்பு என்று மாற்றினாலும் மாற்றி விடுவார்கள். என்ன சொல்ல வருகிறேன் என்றால் காஃபி 37 ரூபாய் என்றால் மசால் தோசை 120, 130 ரூபாய். அப்போது இரண்டும் ஒரே விலை! ஏன், எப்படி? எதற்கு?! இப்போது மஸால் தோசை என்றுதானே சொல்கிறோம்? ஏன் அப்போது மசாலா தோசை என்று விளம்பி இருக்கிறார்கள்?! 'விளம்பி' க்கு இரண்டு பொருள் உண்டு தெரியுமோ?
அந்தக் காலத்தில் மாச சம்பளமே 150 ரூபாய்தான் இருந்திருக்கும்! இப்போது வாங்கும் தோசை விலை அப்போதைய மாசச்சம்பளம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே போனால் சிலபல வருடங்கள் கழித்து தோசை நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என்று விற்குமோ என்னவோ... என்றால், ஒரு நடுத்தர குடும்பம் வாங்கும் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்!
இதில் பாருங்கள், அந்த ரசீதில் முகவரி இல்லை. Paid என்று சீல் போடப்பட்டு 2.16 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டு ஒரு ரூபாய் ஒரு பத்து பைசா, ஒரு ஐந்து பைசா அல்லது மூன்று இரண்டு பைசாவோ, இரண்டு மூன்று பைசாவோ கொடுக்கப் பட்டிருக்கலாம். இரண்டு பேர் சாப்பிட்டிருக்கிறார்கள். ஆளுக்கொரு மசாலா தோசை, காஃபி. இடது புறம் பாருங்கள்... No Tips Please என்று அச்சிட்டிருக்கிறார்கள். டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அதேபோல இவர்கள் அதை வேண்டாம் என்று சொல்லும் நேர்மை இருந்திருக்கிறது.
இரண்டு ரூபாய்க்கு 10+6 பைசா வரி...பரவாயில்லையா?! சாப்பிட்டவர்கள் பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்து, பஸ் பிடித்து, ஏழு பைசா அல்லது எட்டு பைஸா டிக்கெட் வாங்கி வீடு சென்று சேர்ந்திருப்பார்கள்!!
கணினி ரசீது இல்லாமல் கையால் எழுதப்பட்ட ரசீது. இப்போது அதுவே ரொம்ப அபூர்வம்! சர்வர் என்பவர் காதில் பென்சிலுடன் சுற்றி வருவார். செல்லம் ஜோக்ஸ் படங்களில் பார்த்திருப்பேர்கள்! செல்லம் குமுத ஓவியர்.
குமுதம் என்றதும் நினைவுக்கு வருகிறது.
ஜீவி ஸார் தன் வலைத்தளத்தை (பூவனம்) மீண்டும் திறந்து குமுதம் என்று ஒரு தொடர் ஆரம்பித்திருக்கிறார், தெரியுமோ? எனக்கும் நெல்லைக்கு, JKC சாருக்கு. கோமதி அக்காவுக்கு தெரியும்!
=============================================================================================
கல்கத்தா டு லண்டன் பஸ் பதிவில் சேர்க்க எடுத்து வைத்த படம். எங்கோ உள்ளே பாதுகாத்து வைத்ததில் சேர்க்க விட்டுப்போய் விட்டது. இப்போது கண்ணில் பட்டது. விடுவானேன்...? இணையத்தில் பார்த்த இந்தப் படத்தை வைத்துதான் மேல்விவரங்கள் தேடிப் படித்தேன்.
இவருக்கு எந்த அடையாளமும், பெயரும் கொடுக்கவில்லை. இவர் யார்? தெரிந்தால் சொல்லுங்கள். உள்ளே ஏதாவது டெக்ஸ்டில் இவர் சம்பந்தமாக ஏதாவது சேமித்திருக்கிறேனா என்று பார்க்கிறேன்! S L பைரப்பாதானே இவர்? எனில், கொஞ்சம் வைத்திருக்கிறேன்!
********************************************************************************************************************
==========================================================================================
நியூஸ் ரூம்
பானுமதி வெங்கடேஸ்வரன்
- உக்ரைன் போர் நிவாரணத்திற்கு 50 டாலர் நன்கொடை கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்க வாழ் ரஷ்ய பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய கோர்ட் தீர்ப்பளித்தது. அமெரிக்க வாழ் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் கேஸினியா கரேலினா,33, அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலே நடன கலைஞராகவும், ‛ஸ்பா' மசாஜ் சென்டர் ஊழியராக உள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை அமைப்பு உக்ரைன் நிவாரணத்திற்கு நன்கொடை வசூலித்து தருகிறது. இந்த அமைப்பிற்கு கேஸினியா கரேலினா 50 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கினார். இதையறிந்த ரஷ்ய அரசு அவர் மீது சட்டத்திற்கு புறம்பாக நிதி வழங்கியதாக வழக்குப்பதிவு செய்தது. சமீபத்தில் தனது குடும்பத்தினரை பார்க்க ரஷ்யா வந்த கேஸினியா கரேலியா கைது செய்யப்பட்டார். உள்ளூர் கோர்ட்டில் நடந்த விசாரணையில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
- மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பாக்கனேர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 5 வயது சிறுவன், தன் அப்பாவுக்கு எதிராக புகாரளிக்க வந்ததாக கூறியுள்ளான். இதனை கேட்ட போலீசார் ஆச்சரியத்துடன், என்ன மாதிரியான புகார் என விசாரித்தனர். அதில், சாலை அருகே செல்லக்கூடாது, ஆற்றுக்கு அருகே செல்லக்கூடாது என தினமும் தன் தந்தை திட்டுவதாகவும், அதற்காக அடிப்பதாகவும், அவரை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றும் கோபமாக கூறுகிறான்.
- கோபா பெரு கால்பந்து போட்டியில் atletico awajun அணியும், Canttorcillo FC அணியும் மோதின. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் atletico awajun அணி வீரர் செபாஸ்டியன் முனோஸ் என்பவர் திடீரென எல்லைக் கோட்டை தாண்டி வெளியில் சென்றார். அடுத்த சில நொடிகளில் அனைவர் முன்னிலையில் அவர் சிறுநீர் கழிக்க ஆரம்பித்துள்ளார். எதிர்பாராத அவரின் இந்த செயலை கண்ட எதிரணி வீரர்கள் ஆட்ட நடுவரிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக செயல்பட்ட அவர், செபாஸ்டியன் முனோசை எச்சரித்தார். அடுத்த சில நொடிகளில், சட்டை பையில் இருந்த சிவப்பு அட்டையை எடுத்துக் காட்டி உடனடியாக ஆட்டக்களத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.
- நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில் மெட்ரோ ரயில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. இந் நிலையில் விரைவில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்காக மொத்தம் 62 ரயில்கள் தயாரிக்கும் பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் மும்முரமாக நடந்து வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, 3 பெட்டிகளுடன் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் அடுத்த மாதம் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
- கன்னட திரையுலகம் தற்போதிருக்கும் மந்த நிலையிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக பிரும்மாண்டமான பூஜையையும், ஹோமத்தையும் கன்னட திரையுலகத்தினர் செய்துள்ளனர். இந்த செயல் ஆதரவு, விமர்சனம் இரண்டையுமே பெற்றிருக்கிறது. - தேர்வு விடைத்தாளில் சரியான விடை எழுதாமல், ஸ்ரீராமஜெயம் என்று எழுதுவதைப் போல இல்லை?
- பெங்களூரில் மனைவி தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிய கணவன். இரண்டு வருடங்களுக்கு முன்பு மணம் செய்து கொண்ட பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், 12 வயதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு. திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண் தன்னை மிகவும் கட்டுப்படுத்தியதாகவும், வெளியே போய் ஒரு டீ குடிக்க கூட தனக்கு உரிமை இல்லை எனவும் கூறியிருக்கிறார். சிசிடிவி காமிரா ஃபுட்டேஜ்கள் பலனளிக்காத நிலையில் டில்லியில் தன்னுடைய செல்ஃபோனுக்கு புது சிம் கார்ட் மாற்றி பேசியதை வைத்து அவர் இருக்கும் இடத்தை ட்ரேஸ் செய்த போலீஸிடம் "வாட் நெக்ஸ்ட்? என்னை ஜெயிலில் வேண்டுமானாலும் போடுங்கள், வீட்டிற்கு மட்டும் திரும்பி வர மாட்டேன்" என்றாராம்- என்னம்மா? இப்படி பண்றீங்களேம்மா?
- சென்னை: யானைகள் தண்டவாளத்தை கடப்பதை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து, விபத்தை தடுக்க நடவடிக்கை. தென்னக ரயில்வே தகவல்.
- 40% மருத்துவ மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்- தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆய்வு முடிவு.
- பழைய நாணயங்களை வாங்குவதாக இணையத்தில் வந்த விளம்பரத்தை நம்பி ₹45000 இழந்திருக்கிறார் புதுச்சேரி இளைஞர்.
- இன்று நடிகர் விஜய் தொடங்கி உள்ள புதிய கட்சியின் கொடி அறிமுகமாகிறது.
- சத்தீஸ்கர் மாநிலம் முங்கெலி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், எஸ்.பி., பறக்க விட்ட புறா, பறக்காமல் படுத்துக்கொண்டது. விழாவுக்கு வந்தவர்கள், சிரித்து விட்டதால் அவமானம் அடைந்த எஸ்.பி., புறாவுக்கு பொறுப்பு வகித்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
உங்களிடையே மட்டும் அல்ல எங்களிலும் உண்டு
கைவிடப்பட்ட காட்சிகள்.
இளமையில் உங்களை போலவே
நாங்களும் பொலிவாய் இருந்தோம்.
எங்கள் இளமையைக் கொண்டாடியோர்
அப்போது நாங்கள் காயம் படாமல் பார்த்துக் கொண்டார்கள்.
வீடு முழுவதும் வெளிச்சமாய் இருந்தது.
குழந்தைகள் சத்தம் விடாது ஒலித்தது.
விசேஷ நாட்கள் விதம் விதமாய் நிறங்கள் காட்டின.
இரவுகளில் பாதுகாப்பான உறக்கம் நாடி
எங்கள் மடியில்தான் தூங்கினார்கள்.
தினந்தோறும் சுத்தம் செய்தார்கள்
வருடத்துக்கொருமுறை
வண்ணம் தீட்டினார்கள்.
கதவுகளை
கவனமாக தாழிட்டார்கள்.
ஊருக்கு சென்றாலும் பள்ளி அலுவலகம் சென்றாலும்
எங்களைக் காண
ஆவலுடன், தாகத்துடன், பாசத்துடன் ஓடி வந்தார்கள்.
ஓய்வு கொண்டார்கள்.
எங்களை பிரிந்து வெளியே
இருந்த நாட்களில் ஏக்கம் கொண்டாடினார்கள்.
எங்கள் தேவை அவர்களுக்கு இருந்தவரை
நாங்களும் செல்வாக்காய்த்தான் இருந்தோம்.
எந்தப் புள்ளியில் எங்கள் தேவை அவர்களுக்கு குறைந்ததோ
கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டோம்.
தங்கிய ஆட்கள் குறைந்தார்கள்.
வேறிடம் தேடிச் சென்றார்கள்.
புதிய பளபளப்பில் மயங்கினர்.
இங்கு வருவதைக் குறைத்துக் கொண்டனர்.
இங்கேயே இருந்தவர்கள் மறைந்தார்கள்.
இப்போது இருக்கும்
இந்த நிலையை நாங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் அடைந்தோம்.
எங்கள் மடியில் பிறைந்தவர்களே
எங்களைக் காண வருவதில்லை
இப்போதெல்லாம்
வெளியிலிருந்தே விலைபேசுகிறார்கள்
வெளியாருக்கு எங்களை விற்றுவிட
இன்னும் கொஞ்ச நாள் கழித்து
இப்போது நாங்கள் இப்படி இருக்கும் நிலை கூட
உங்களால் காணமுடியாது போகலாம்.
நாங்கள் மண்ணோடு மண்ணாகலாம்.
புதிய உருவம் இங்கு உருவாகலாம்.
நினைவில் கொள்ளுங்கள்.
இது உங்கள் ஆரம்பம்.
நீங்களும் அடைவீர்கள்
இதுபோன்ற ஒரு இறுதி நாட்களை.
சாபமல்ல, நிதர்சனம்.
வாழ்க்கை தத்துவம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எழுத்தாளர் லதா அவர்கள் சென்ற ஆண்டு திருமணநாள் அன்று எழுதிய பதிவு...
37 வருடங்கள் இன்றுடன் திருமணம் நடந்து. இருவரும் பிரிந்து 21 வருடங்கள் !
வாழ்வு குறித்தான வருத்தங்கள் ஏதுமில்லை. வாழ்வென்பதே அனுபவங்களின் கலவை தான் எனும்போது நான் நானாக இருக்கும் இந்நிலை அடைவதற்கு இந்தத் திருமணம் ஒரு முக்கிய காரணிதானே? ஆகவே இந்நாளையும் கொண்டாடும் மனநிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறேன் பல வருடங்களாக. இதற்கு முக்கிய காரணம் என் மகன் ....இந்நாளை நினைவு வைத்திருந்து அலுவலகத்திலிருந்து வரும் போதே எனக்குப்பிடித்த இனிப்பு, ஒரு விஸ்கி பாட்டில் என வாங்கிவந்து வாம்மா கொண்டாடலாம் என்பான். இந்த கல்யாணம் இல்லனா நானும் ஆரண்யாவும் உனக்கு கிடைச்சிருக்க மாட்டோமில்ல? அப்போ கொண்டாடனும் தானே என்பான். அவரும் இந்நிலையை அடைந்திருந்தால் அவருடன் சேர்ந்தே கொண்டாடி இருப்பேன். (ஒரு முறை அதை செய்தும் இருக்கிறேன்).
இருப்பினும் சில உண்மைகளை ஏற்றுத்தான் ஆகவேண்டும். திருமணத்தன்று மனதில் ஏற்பட்டது மகிழ்வல்ல. எதோ ஒரு பயம் கலந்த உணர்வுதான் இருந்தது எதோ தவறு செய்கிறேனோ என்று. இருப்பினும் வாக்கு கொடுத்துவிட்டேன். தவறக்கூடாதல்லவா? (அப்படித்தானே பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்)
இனி சேர்ந்து இருக்க இயலாது என்று முடிவு செய்து வெளிநடப்பு செய்தபோது மனதில் ஏற்பட்ட நிம்மதி வேறொரு நிலை. அப்பாடா என்றிருந்ததே உண்மை! இன்று வரை அந்த நிம்மதி தொடர்கிறது.
அதைக் கொண்டாட எனக்கு காலை வேளையில் சாப்பிடப் பிடித்த பொங்கல் வடையை ஒரு கை பார்த்து தொடங்கிவிட்டேன் இந்நாளை!
Happy wedding anniversary to me!
-லதா
- நன்றி திரு R. கந்தசாமி, பேஸ்புக்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அண்ணா தமிழ்ச்சங்கம் பேச்சு...
" காளமேகத்தைப் போலக் கவி பாடினான் என்று எழுதாதீர்கள். காளமேகத்தைப் போல ஆகவேண்டுமானால் ஒரு காளி வேண்டும். அந்த கோவிலுக்கு அவன் போகவேண்டும். பிரசன்னமானதும் வாயைத் திறக்கச் சொல்லவேண்டும். திறந்த வாயிலே ஈட்டியால் எழுதவேண்டும் இவ்வளவு சிரமத்தை. அவனுக்குக் கொடுக்காதீர்கள். ஏன் நாமக்கல் கவிஞரைப்போல அற்புதமாகப் பாடினான் என்று எழுதுங்கள்.
ஆண்மையிலே பீமனைப் போல் எழுதவேண்டாம். அவினாசிலிங்கத்தைப்போல் ஆண்மை வேண்டும் என்று எழுதுங்கள். வியாசரைப் போல் எழுதினான் என்று எழுதாதீர்கள் – தோழர் டி.எஸ்.சொக்கலிங்கத்தைப்போல் எழுதினான் என்று எழுதுங்கள். சம்பந்தப்பட்டவன் உடனே புரிந்து கொள்ள இதுதான் சரியானவழி .
உங்கள் ஏட்டை அழுக்குத் துடைக்கும் துடைப்பம் ஆக்குங்கள் நாற்றம் எடுக்கும் குப்பைத் தொட்டியாக்கிவிடாதீர்கள்.
நான் சில பத்திரிக்கைகளைப் பார்க்கிறேன். பத்துப் பக்கம் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சோதிடத்தை நம்பாதீர்கள். அது சுத்தப்புரட்டு. மக்களை அஞ்ஞானக் காரிருளில் ஆழ்த்தி வைக்கும் அறியாமை. அதில் ஆழ்ந்து விடாதீர்கள் என்று வாசார கோசரமாய் எழுதிவிட்டு பதினோராவது பக்கத்திலே, திருத்தணி ஜோசியர் உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள். அற்புதமாகக் கணித்து அனுப்புவார் என்றிருக்கும். இது வயிற்றுப் பிழைப்புக்காக என்றால், அவர்கள் வாழ்வதிலும் சாவதுமேல்.
வ.ரா.சொன்னார். காதல் இல்லாவிட்டால் கதையே இல்லை என்று. அவரது கருத்து காதல் அதிகம் வரக் கூடாது என்பது. அதுவல்ல உண்மை; பழைய புராணிகர்களிலிருந்து இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் வரை காதலைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசம்.
அன்றிருந்தவர் ஆரத்தழுவாயோ என்று ஆரம்பித்தார். தழுவல் காதலிலே பிறக்கிறது. ஆரத் தழுவாயோ என்று ஆரம்பித்தால் உலகை மாயையாக்கும் வைதீகக் கூட்டங்கள் அடிக்க வந்துவிடுமே என்ற பயந்தார். அரங்கனே என்று முடித்தார்.
இன்று பகுத்தறிவு ஆக்கம் பெற்றுவிட்டது. எழுத்தாளர்கள் பகிரங்கமாகக் காதலைப்பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அதில் பழமை வாடை வீசுகிறது.
கமலா விதவை; பிராமணப் பெண். நாராயணன் அழகன்; முதலியார் பையன் – இருவரும் காதலித்தார்கள் கல்யாணம் செய்துகொண்டார்கள். சாதிக் கட்டுப்பாடுகள் உறுமின; தகர்த்தெறிந்தார்கள், என்று முடியுங்கள் கதையை பெயருக்குப் பின்னால் வரும் சாதி வால்களை அறுத்தெரியுங்கள் ! "
- 14 -12 - 1946 ல் , சென்னையில் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க இரண்டாம் மாநாட்டில் அறிஞர் அண்ணா .
சந்திரன் வீராசாமி, பேஸ்புக்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இணையத்திலிருந்து நான் ரசித்ததை நீங்களும் ரசிக்க.....
நட்பதிகாரம்....
இதுவரை பெயராக மட்டுமே என்னால் அறியப்பட்டவர்....
பொக்கிஷம் :
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும், நன்றியும்.
நீக்குஇப்பதான் இங்கு உள்ளே நுழைய முடிந்தது.
பதிலளிநீக்கு//இந்நாளில் 50 பைசா புழக்கத்தில் இருக்கிறதா, தெரியவில்லை. //
கொஞ்சமேனும் இருக்கு ஸ்ரீராம். நான் கொடுத்து வரேனே!!!! எனக்கு online payment வசதி இல்லை. எனவே சில்லறை நிறைய வைச்சுக்குவேன்! அதுவும் பயண நேரத்தில்.
கீதா
வாங்க கீதா...
நீக்குஓ... 50 பைசா நிறைய பேர் வாங்க மாட்டார்கள்! 25 பைசா புழக்கத்தில் இருக்கிறதோ....
ரூபாய் நோட்டு வடிவத்தில் 5 ரூபாய், 1 ரூபாய் நோட்டு வடிவம் எதுவும் கண்ணில் படலை ஸ்ரீராம். Gone are those!
பதிலளிநீக்கு//இன்றைக்கு 53 வருடங்கள் ஆகி விட்டன! அப்போது நான் பிறந்திருக்கக் கூட மாட்டேன்.//
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!!!! இதெல்லாம் இங்க சத்தமா சொல்லக் கூடாது ஸ்ரீராம்!!!!!!!!ஹாஹாஹாஹாஹா
கீதா
உங்களுக்கு என்னிடம் இருக்கும் ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் ஆகியவற்றின் புகைபபடம் வேண்டுமா கீதா?
நீக்கு//இதெல்லாம் இங்க சத்தமா சொல்லக் கூடாது ஸ்ரீராம்!!//
அதுக்காக சொல்லாம இருக்க முடியுமா கீதா? அல்லே?
அப்போது இரண்டும் ஒரே வில்லை! //
பதிலளிநீக்குவிலை?
//சிலபல வருடங்கள் கழித்து தோசை நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என்று விற்குமோ என்னவோ... என்றால், ஒரு நடுத்தர குடும்பம் வாங்கும் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்!//
இப்படி நானும் யோசித்ததுண்டு.
ஆனா அந்த அளவு போகுமோ? Price control இருக்காமல் போய்விடுமா என்ன? ஏறி இறங்குமாக இருக்கலாம் ஆனால் இந்த அளவு போகுமான்னு ஏன்னா சம்பளம் கொடுக்கணுமே! அப்ப இன்னும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்குமே. ஒரு நல்ல fiction க்கு வழி வகுத்தது நான் யோசிச்சப்ப....ஆனா பாருங்க.....
கீதா
வில்லையை விலையாக்கி விட்டேன். நன்றி!
நீக்கு//ஆனா அந்த அளவு போகுமோ? Price control இருக்காமல் போய்விடுமா என்ன? //
இதை 1970 ல் யோசித்திருப்பார்களா?
// ஒரு நல்ல fiction க்கு வழி வகுத்தது நான் யோசிச்சப்ப....ஆனா பாருங்க..... //
ம்ம்ம்... என்ன நிறுத்திட்டீங்க.... சொல்லுங்க...
ஹோட்டல் ஒரு உண்டு உறைவிட ஹோட்டல் என்று தோன்றுகிறது. அந்த காலத்தில் பில் இல்லாமல் TA கிடையாது என்று ஒரு நியதி இருந்தது. வாடகை, மற்றும் சாப்பிட்ட உணவுக்கு பில் காட்டவேண்டும். அப்படிப்பட்ட பில் இது. PAID ரப்பர் ஸ்டாம்ப் அந்தக்காலத்தைய விதிமுறையை சுட்டுகிறது. (எங்கள் ஆஃபிஸில் cash received ஸ்டாம்ப் வேண்டும் பாஸ் ஆக). தேதி மட்டும் தனியாக சிவப்பு வண்ணத்தில் தனியாக பின்னர் எழுதப்பட்டுள்ளதால் இந்த பில் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குபோட்டோ படம் பைரப்பா தான். கூகிள் லென்ஸ் அப்படி சொல்கிறது.
நியூஸ்ரூம் செய்திகள் அசத்தல். விசித்திரமான செய்திகளை தேடிப் பிடித்து கொண்டு வந்திருக்கிறார். நன்கொடைக்கு கைது, 5 வயது சிறுவன் போலீஸ் கம்பளைண்ட், மனைவிக்கு பயந்து ஓடிப் போன கணவன், மேட்ச் நடுவில் உச்சா, டிரைவர் இல்லாத ரயில் பறக்காமல் படுத்துக்கொண்ட புறா என்று எல்லாம் விசித்திரமானவை. பாராட்டுக்கள்.
கவிதைக்கரு மெச்சத்தக்கது என்றாலும் கவிதை அவ்வளவாக ரசிக்கவில்லை. ஆரம்பம், முடிவு என்று இல்லாதவர் பரம்பொருளே.
அண்ணா பற்றிய கட்டுரையில் உள்ள அண்ணா பேச்சு அண்ணாவுடையது போல் தோன்றவில்லை. அண்ணா காளமேகத்தையும், காளிதாஸையும் ஓன்றாக நினைத்து குழம்பியிருக்க மாட்டார். காளிதாஸ் தான் காளியின் அருள் பெற்ற வடமொழி புலவர். காளமேகம் தமிழ் சிலேடை புலவர்.
இன்று தான் "பாஸுக்கு" சரியான உதாரணம் காட்டியுள்ளீர்கள். பெரிய எழுத்தாளரே பாஸுக்கு முன் வாய் குளறுகிறார் என்றால் நீங்கள் எம்மாத்திரம்.. இந்த பகுதியை பாஸ் படித்தாரா?
ராண்டார்கை ஹிந்து பேப்பரிலும் எழுதியதாக நினைவு. அவர் எழுதிய சிறுகதை ஏதாவது கிடைக்குமா (இலவசமாக) என்று தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஜாவரும் அது போலத்தான்.
ஆறாவது தடவை ஓடிப்போகும் பொக்கிஷ ஜோக் ஜோக்காகவே இருக்கட்டும்.
ஓவியர்களின் புகைப்படங்கள் பொக்கிஷம். நாம் ஓவியர்களை அடையாளம் காண்பது அவரவருடைய ஓவியங்களால் தான்.
Jayakumar
// ஹோட்டல் ஒரு உண்டு / உறைவிட ஹோட்டல் என்று தோன்றுகிறது //
நீக்குஆம். இதை எழுத நினைத்து மறந்து போனேன்!
இப்போதும் Paid முத்திரை கணினி சீதுகளிலும் குத்துகிறார்கள்.
கவிதையை இன்னமும் செம்மையாக வடிவமைத்திருக்கலாம். சுருக்கியும் இருக்கலாம். அதற்குதான் அதை வெளியிடாமல் வைத்திருந்தேன். ஆனால் வெங்கட் தளத்தில் இதுபோல ஒன்று பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்!
அண்ணா பற்றி எல்லாம் எனக்கென்ன தெரியும். நான் உதயநிதி காலத்தவன்!
பாஸுக்கு முன்... ஹா.. ஹா.. ஹா,.. பாஸிடம் 'வா இங்கே.. இதை வந்து படி' என்று சொல்லும் தைரியம் எனக்கு கிடையாது. அவர் ரம்ப பிஸி.. (அலைபேசியில்)
ராண்டார்கை நானும் ரொம்பவே தேடி இருக்கிறேன். அவர் முதல் தாவல், படம் இது.
ஆம். ஓவியர்களின் புகைபபடங்கள் பொக்கிஷம்தான்.
நன்றி JKC ஸார்.
'இவர் யார்?' என்று போட்டோ போட்டு கேட்ட கேள்விக்கான புகைப்படத்தில் இருப்பவர் முன்னாள் கர்னாடகா முதல்வர்
பதிலளிநீக்குஎடியூரப்பா மாதிரி தோற்றம் கொடுக்கிறார்.
கர்நாடகாதான். ஆனால் எடி இல்லை! பதிவு வெளியாகும் சமயம் எனக்கே அவர் யாரென்று நினைவு வந்து விட்டதால் அதையும் சேர்த்தேன்!
நீக்குசாமா, மாயா, சந்தனு -- எல்லோருடைய புகைப்படத்தையும் இப்பொழுது தான் பார்க்கிறோமோ என்றிருந்தது.
பதிலளிநீக்குஅது சரி, சந்தனு என்றதும் மனசின் இன்னொரு மூலையிலிருந்து
பாக்கியராஜின் நினைவு வருவானேன்?
இதுதான் மகன் தந்தைக்காற்றிய உதவி போல!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. தங்கள் கதம்ப பதிவில் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.
50 பைசாக்கள் இன்னமும் புழக்கத்தில் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. எல்லாமே ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறி விட்டோம். இரண்டாவதாக இந்த 50 பைசாக்கள் இப்போதைக்கு தகுந்த மாதிரி மாறி விட்டனவா என்பதும் அறியேன். என்னிடம் பழைய மாதிரிகள் உள்ளது. அது செல்லுபடியாகுமா என்பதும் தெரியவில்லை. இது 50,2510,5,போன்ற நாணயங்கள் என்னிடமே நினைவாக இருக்கட்டுமென விட்டு விட்டேன். அந்த உணவகத்தின் பில் அட்டவணையை பார்த்துக் கொண்டேன். அதை பொக்கிஷமாக சேர்த்து வைத்திருக்கும் உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள்.
காலத்திற்கு தகுந்த மாதிரி உணவின் விலையும், சம்பளத்தின் உயர்வும் மாறி வருகிறது. நீங்கள் சொல்வது போல ஒரு காலத்தில் தோசையின் விலை ஆயிரக்கணக்கில் போகலாம். அப்போது நாம் ஒருவேளை இருந்தால் ஆச்சரியத்துடன் இந்த விலைகளை ஒப்பிடுவோம். ஆனால், அந்த சந்ததியினர் நம்மை அதே ஆச்சரியத்துடன் பார்ப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.:)) பிறகு மற்றவைகளை படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்த உணவக பில் என்னுடையது அல்ல. இணையத்தில் கிடைத்தது!
நீக்குநானும் பழைய ஐந்து பைசா, இரண்டு பைசா போன்றவை வைத்திருந்தேன். இப்போது காணோம்! ஐந்து ரூபாய் நோட்டு இருக்கிறது. ஒரு ரூபாய் நோட்டு இருக்கிறது. ஒரு இரண்டு ரூபாய் நோட்டு வைத்திருந்தேன். எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்க்க வேண்டும்!
நன்றி கமலா அக்கா.
என்னதான் சுதந்திரம் என்று முழங்கினாலும் நம் மக்களுக்கு மன்னர்
பதிலளிநீக்குஆட்சியின் நினைவுச்சுவடுகள் மறக்காது போலிருக்கு.
பின்னே என்ன? சுதந்திரக்கொடிக்கு முதன் முதல் வடிவம் கொடுத்த
பிகாய்ஜி ருஸ்தும் காமா-வையும் 'இந்திய ராஜகுமாரி 'என்று அழைத்து மகிழ்ந்திருக்கிறாரகளே!
தமிழகத்து ராஜராஜ சோழன் அழைப்பும் இதே மாதிரியான மன்னர் வம்ச பிரேமையில் தான் முகிழ்த்தது போலும்!
மக்களுக்கு தாழ்வு மனப்பான்மை போகாது போலும். ஆட்சியாளர்களும் அதைத்தானே விரும்புவார்கள்!
நீக்குஅந்த பில் அலுவலகத்துக்குக் கணக்கு காட்ட வேண்டிய பில் மாதிரி தோன்றுகிறது. அப்பல்லாம் அலுவலக விஷயமா வெளிய போய் வந்தா எல்லாத்துக்கும் பில் வைச்சுக்கணும் கணக்கு காட்ட.
பதிலளிநீக்குஇப்ப எப்படின்னு தெரியலை.
ஆனால் மகனுக்கு அங்கு இப்பவும் உண்டு. ஆனா எல்லாம் ஆன்லைன் சமாச்சாரங்கள்
கீதா
இப்பவும் சில அலுவலகங்களில் அந்த வழக்கம் உண்டு, நான் முன்னர் அலுவலக வேலையாக பஸ்ஸில் சென்று வந்த பஸ் டிக்கெட்டை எல்லாம் இணைத்திருக்கிறேன். நண்பர்கள் கூட டிக்கெட் உபயம் செய்திருக்கிறார்கள்.
நீக்குபாலுடன் தண்ணீர் கலப்பது பழக்கமாகியிருப்பது போல எதனுடன் எதைக் கலப்பது வழக்கமாகியிருக்கிறது என்று யோசித்து சொல்லுங்கள் பார்ப்போம்.. தமாஷாக இருக்கும்.
பதிலளிநீக்குஒரு ரீல்ஸ் பார்த்தேன். தண்ணீரை கலக்கி இருக்கிறீர்களே என்று கேட்டால் பால் 25 ரூபாய், தண்ணீர் 29 ரூபாய். எனவே அதுதான் காஸ்ட்லீ என்று சொல்வார் ஒருவர். கூடுதலாக இனி தண்ணீரில்தான் பாலை கலக்க வேண்டும் என்று சொல்வார்.
நீக்குஜோக்!
காக்க காக்க கனகவேல் காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குஅந்த கேஷ் பில்லில் என்னைக் கவர்ந்தது ஹோட்டலின் பெயர்.
பதிலளிநீக்குபழங்காலத்து பில் என்றாலும் ஹோட்டலின் பெயருக்கேற்ப கூடவே
வந்து கோர்த்துக் கொண்ட S.T.. S.C. சமாச்சாரங்களும்
அது எந்தக் காலத்தில்தான் இல்லை?
நீக்குகோடை இடி பேசுமாக்கும்? இடிக்கேத்த வார்த்தையைப் போட்டு முடிக்க --- இது கூட போகனுக்குத் தெரியலையே!
பதிலளிநீக்குஹிஹிஹி... எல்லோருக்கும் எல்லா நேரமும் எல்லாமும் தெரிந்து விடுகிறதா என்ன!
நீக்குஅக்கால விலை விவரம் வியப்புதான்
பதிலளிநீக்குஆமாம் நண்பரே..
நீக்குஇன்றைய கதம்பம் ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குஎன் அப்பாவின் கணக்கெழுதும் நோட்டை 2008ல் பார்த்தேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, 7 பைசாக்கு வெண்டைக்காய் வாங்கியருக்கிறார். அந்தச் சமயத்தில் அமைரிக்காவிலிருந்து வந்த மாமா, எங்கள் ஊரின் மார்கெட்டில் மூன்று ரூபாய்க்கு பெரிய பலாப்பழம் வாங்எஇக்கொண்டு வந்தார். விலை ஏற்றக்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்ந்துவிடுகின்றன.
இன்னமும் பெங்களூரில் பத்து ரூபாய் காபி. கொஞ்சம் பிராண்டட் கடைகளில் 18 ரூபாய். மசால் தோசையும் அறுபது ரூபாய்க்குள். சென்னையைப் போல கொள்ளையடிக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை
வாங்க நெல்லை... நன்றி.
நீக்குஎன் அப்பாவின் வரவு செலவுக்கு கணக்கு அநியாயமாய் வெயிட்டுக்கு போட்டு விட்டார்கள். என் தீரா சோகம். அவர் டைரிகளையும் வெயிட்டுக்கு போட்டு விட்டார்கள்.
அந்தக்கால ஸ்டாம்ப் என்றதும் 79களில் என் வீட்டில் கண்ட 1910, 1890களைச் சேர்ந்த போஸ்ட் கார்டுகளும் ஸ்டாம்புகளும் நினைவுக்கு வருகின்றன. அது தவிர பழைய நாணயங்கள், பெரிய பெட்டி பத்துக்குப் பத்து ஐந்து இருக்கும், ஓலைச் சுவடி நூல்களும் நினைவுக்கு வருகின்றன
பதிலளிநீக்குஸ்டாம்ப் கலெக்ஷன் பெரிய ஹாபி நிறைய பேர்களுக்கு. நானும் தொடங்கினேன். தொடரவில்லை!
நீக்குஜீவி ஸார் தன் வலைத்தளத்தை (பூவனம்) மீண்டும் திறந்து குமுதம் என்று ஒரு தொடர் ஆரம்பித்திருக்கிறார், தெரியுமோ? //
பதிலளிநீக்குநோட்டட். ஆனா இனிதான் வாசிக்க வேண்டும், ஸ்ரீராம். நேர நெருக்கடி
கீதா
மெதுவாய் வாருங்கள்.. ஆனால் வாருங்கள்... அங்கும் வாருங்கள்...
நீக்குநன்றி, ஸ்ரீராம்.
நீக்குதோசையும் காப்பியும் ஒரே விலை - :) இன்றைக்கு நிறைய வித்தியாசம்! பில் தேதி - என் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் தேதியிட்ட பில்...
பதிலளிநீக்குகுமுதம் குறித்த தொடர் - நானும் படித்து விட்டேன் - இரண்டு பகுதிகளையும்.
மற்ற விஷயங்களும் ரசித்தேன்.
வாங்க வெங்கட்... நீங்களும் அப்போதான் பொறந்தீங்களா? வெரிகுட். வாழ்த்துகள்.
நீக்குமற்ற விஷயங்களையும் ரசித்ததற்கு நன்றி வெங்கட்.
வீடு கவிதை போட்டிருந்தேனே பார்க்கவில்லையா?
வீடு கவிதை - பார்த்தேன். நன்றாக இருந்தது. காஃபி வித் கிட்டு பதிவில் போட்டிருந்த பின்னூட்டத்தில் சொன்ன கவிதை இது தான் போல என்றும் நினைத்தேன்.
நீக்குஅதேதான்.. அதனால்தான் பார்த்தீர்களா என்று கேட்டேன். நன்றி வெங்கட்.
நீக்குகல்கத்தா டு லண்டன் - படங்கள் சேர்த்துவிட்டீங்களே இன்று!!
பதிலளிநீக்குஅடுத்த படம் யாரென்று தெரியலையே
கீதா
சொல்லி இருக்கேனே... S L பைரப்பா...
நீக்குபதிவு சுவாரஸ்யமாக இருந்தது ஜி. எனது அப்பா - அம்மா (1956) திருமண பத்திரிக்கையின் பின்புறத்தில் திருமண செலவு கணக்கு எழுதி இருக்கிறது.
பதிலளிநீக்குபத்திரிகையின் பின்புறத்திலா? அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு காப்பியில்... சரியா?
நீக்குஅந்த ரஷ்ய பெண் அமெரிக்கா குடியுரிமை பெறவில்லையோ? ரஷ்ய குடியுரிமையில்தான் இருக்கிறாரோ....இல்லைனா தண்டனை கொடுக்க முடியுமா? அது சரி இதுக்கும் கூட தண்டனையா? ஆச்சரியமாக இருக்கு!
பதிலளிநீக்குதேர்வு விடைத்தாளில் சரியான விடை எழுதாமல், ஸ்ரீராமஜெயம் என்று எழுதுவதைப் போல இல்லை?//
ஹாஹாஹா அதேதான்.
மனைவி தொல்லை தாங்காமல் ஓடிய கணவன் - ரீடைரக்டட் டு சொல்வதெல்லாம் உண்மை!!!
யானை - செய்தி சூப்பர். நல்ல விஷயம்
40% மருத்துவ மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்-//
யெஸ். அதே போன்று கால்நடை மருத்துவத்திலும் அமெரிக்காவில் அதிகமாகவே ஆவதாகச் சொல்லப்படும் compassion fatigue
கீதா
:))
நீக்குதத்துவம் சொல்லும் வீட்டை ரசித்தேன் ஸ்ரீராம். வெங்கட்ஜி தளத்திலும் நீங்க சொல்லியிருந்தீங்க
பதிலளிநீக்குநானும் வீடு பற்றிய ஒருபதிவு கதையாக எங்கள் தளத்தில் எழுதிய நினைவு.
கீதா
நன்றி கீதா. கந்தசாமி சார் கூட இன்று ஒரு பழைய வீடு பதிவு போட்டிருக்கிறார். அது அடுத்த வாரம் பகிர்கிறேன்.
நீக்குஎழுத்தாளர் லதா?
பதிலளிநீக்குஅறிந்ததாக நினைவு இல்லை.
//ஆகவே இந்நாளையும் கொண்டாடும் மனநிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறேன் பல வருடங்களாக. இதற்கு முக்கிய காரணம் என் மகன் ....இந்நாளை நினைவு வைத்திருந்து அலுவலகத்திலிருந்து வரும் போதே எனக்குப்பிடித்த இனிப்பு, ஒரு விஸ்கி பாட்டில் என வாங்கிவந்து வாம்மா கொண்டாடலாம் என்பான். //
???????????????????? என்னவோ போங்க! (இப்படிச் சொல்லக் கூடாதோ??!!!)
(ஸ்ரீராம் கந்தசாமி சார் இல்லையா கந்தசாய் ன்னு இருக்கே)
கீதா
க
இதற்கான பதிலை கீழே உள்ள கமெண்ட்டுக்கு தந்து விட்டேன்.. ஹிஹிஹி...
நீக்குகாளமேகத்தைப் போலக் கவி பாடினான் என்ற எழுதாதீர்கள்//
பதிலளிநீக்குஎன்று? இப்பகுதியில் என்றுன்னு வர இடத்தில் என்றன்னு வந்திருக்கு இன்னும் ஓரிரு இடங்களில்.
கோடை இடி - சுவாரசியம்!
கீதா
பிழை திருத்தி விட்டேன். எழுத்தாளர் லதா பற்றி நானும் அறியேன். கந்தசாமி சாரையே கேட்டிருந்தேன். அவரும் பதில் சொல்லவில்லை.
நீக்குந்ண்பதிகாரம் எங்கேயோ வாசித்த நினைவு.
பதிலளிநீக்குராண்டார்கை பெயரின் விளக்கம் வாசித்திருக்கிறேன். இப்பதான் படத்திலும் பார்க்கிறேன், ஸ்ரீராம்
பொக்கிஷம் பகுதி நல்லாருக்கு
இன்று கொஞ்சம் கூடுதலாகிவிட்டது வாசிக்க!!! எனக்கு நேரப் பற்றாக்குறையால் தோணின விஷயம் அம்புட்டுத்தான்
கீதா
நன்றி கீதா... உங்கள் வேலைகளுக்கு நடுவில் இங்கு வாசிக்க நேரம் எடுத்துக் கொண்டமைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇந்நாளில் 50 பைசா புழக்கத்தில் இருக்கிறதா, தெரியவில்லை//
பதிலளிநீக்குவார சந்தையில் 50 பைசா வாங்கி கொள்கிறார்கள். புழக்கத்தில் இருக்கிறது. ஐந்து ரூபாய் நோட்டு இல்லை, நாணயம் இருக்கிறது.
10 ரூபாயும் அவ்வளவாக கிடைக்கமாட்டேன் என்கிறது.
//இன்றைக்கு 53 வருடங்கள் ஆகி விட்டன! அப்போது நான் பிறந்திருக்கக் கூட மாட்டேன். //
ஆஹா! இதை சொன்னது நீங்களா? அல்லது பில்லை கொடுத்த நண்பரா?
20ரூபாய் நாணயம் உண்டு. பத்து ரூபாய் நாணயத்தை பல இடங்களில் வாங்கிக்கொள்வதில்லை. இப்போல்லாம் நூறு ரூபாய் நாணயம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறது.
நீக்குஎன்னிடம் 77ம் ஆண்டைச் சேர்ந்த பத்து ரூபாய் நாணயம் உண்டு. அப்போ ஒரு கிராம் தங்கம் விலை?
என்னிடமும் 10 நாணயம் உண்டு. பல வருடங்களுக்கு முன் என் சின்ன மாமனார் கொடுத்த காசு. பத்திரமாக வைத்து இருக்கிறேன். பழைய காசு நல்ல கனமாக இருக்கும்.
நீக்கு10 ரூபாய் நாணயத்தை சிலர் வாங்கி கொள்கிறார்கள்.
இரண்டு ரூபாய் புது நோட்டு, ஒரு ரூபாய் புது நோட்டு எல்லாம் பத்திரமாக வைத்து இருக்கிறேன். என் மாமனார் கொடுத்தவை.
பழைய காசுகள் சேமிப்பு இருக்கிறது.
ஆம் அப்போதைய, பழைய 2 பைசா 3 பைசா, சதுர வடிவில் 1 பைசா அவை எல்லாம் கொஞ்சம் நாள் எங்கெல்லாமோ உபயோகித்த நினைவு, சில பழைய நினைவுகள் மீண்டன.
பதிலளிநீக்குதுளசிதரன்
கல்கத்தா டு லண்டன் பஸ் பதிவில் சேர்க்க எடுத்து வைத்த படம்.//
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது பஸ் .
நியூஸ்ரூம் செய்திகளில் சிறுவன் அப்பாவை கைது செய்ய சொன்ன காரணம் சிந்திக்க வைக்கிறது. நல்லது சொல்வதையும் திட்டாமல், அடிக்காமல் சொல்ல வேண்டும் போல ! ஆசிரியர்கள் அடிக்க கூடாது, பெற்றோர்கள் அடிக்க கூடாது.
நட்பதிகாரம்....
பதிலளிநீக்குகரடி கதையை நினைவு படுத்தியது.
வாழ்க்கை தத்துவம் சொன்ன வீடு கவிதை அருமை.
முகநூலில் போட்ட நான் போட்ட ஒரு பழைய வீடு படத்திற்கு கீதாமதிவாணன் கவிதை எழுதினார்கள் .(கீதமஞ்சரி)
வீடு கதை சொல்வதாக எழுதி இருந்தார்கள்.
பதிவு போட்டு இருந்தேன் முன்பு.
பொக்கிஷபகிர்வுகள் நன்றாக இருக்கிறது.
இந்திய ராஜகுமாரி என்று அழைக்கப்பட்ட வீரபெண்மணியின் வீர உரையும் படித்தேன். அவர்களுக்கு வணக்கம்.
பழைய நாணயங்கள் 5, 1,2 பழைய ரூபாய் நோட்டுகள் 5,2,10 இவையெல்லாம் யாரேனும் வைத்திருந்து
பதிலளிநீக்குகொடுத்தால் 10000, 20000 கொடுப்பதாக போன் நம்பர்கள் கொடுத்து முக நூல்களில் விளம்பாம் போல அறிவிப்புகள் காணப்படுகிறதே! இதெல்லாம் உண்மையா? உங்களுக்கு இது பற்றி ஏதேனும் தெரியுமா?
-- வருகிற புதனுக்கான கேள்வி.
பழைய நாணயங்கள் பற்றி இங்கு பிரஸ்தாபித்து படித்த பொழுது நினைவுக்கு வந்தது.
பதிலளிப்போம் என்ற அந்தக் குரலைக் காணோமே!
நீக்குவீடு பற்றிய கவிதை வரிகள் மிகவும் யதார்த்த ரீதியில் எழுதியிருக்கிறீர்கள். இப்போது பல வீடுகளும் அப்படி மாறி வருகின்றன. என்றாலும் கேரளத்தில் வெகு குறைவு எனலாம். குறிப்பாக வட கேரளத்தில்.
பதிலளிநீக்குதுளசிதரன்
பத்துப் பைசா கொடுத்து டீ குடித்து விட்டு மீதம் நாலு பைசாவை வாங்குவதே அலாதி...
பதிலளிநீக்குஅதுவும் இரண்டு பைசாவாக இரண்டு காசுகள்...
வீட்டுக்கு வெளியே தேநீர் குடிக்க ஆரம்பித்ததே 72 க்குப் பிறகு தான்..
வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவு
பதிலளிநீக்குஐம்பது பைசா புழக்கத்திலிருந்து நின்று இங்கு பல வருடங்களாகின்றன. ஒன்று, இரண்டு ரூபாய் நாணயங்கள் இன்னமும் உள்ளன. 5 ரூபாய் நோட்டுகள் அவ்வப்போது கிடைக்கின்றன.
பதிலளிநீக்குசிறுவயதில் சேர்ந்த பழைய 1,2,3,5, 10 பைசா நாணயங்கள், 1,2,5 ரூபாய் புதுக் கருக்கு அழியாத நோட்டுகள் என் வசம் உள்ளன :).
2 பைசாக்கு சிறியது, 5 பைசாக்கு பெரியதென வாங்கிய கடலை மிட்டாய்கள் போன்றவற்றையும் நினைவு படுத்துகின்றன ஓட்டல் ரசீது.
தொகுப்பு சுவாரஸ்யம்.