வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

மடல் வாழையைப் போல் இவள் மேனி.... நகை சிந்தும் அழகு ராணி

 

இன்றைய தனிப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில்...  அடிக்கடி ரேடியோவில் ஒலிக்கும் பாடல்களில் ஒன்று.

அழகெல்லாம் ஓருருவாய் அமைந்தவனே
ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே - குகனே
​அழகெல்லாம் ஓருருவாய் அமைந்தவனே
ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே - குகனே - அழகெல்லாம்

மழைமுகில் மேனி வண்ணன் மகிழ்ந்திடும் மருகா
மரகத மயிலேறும் வடிவேல் முருகா
​மழைமுகில் மேனி வண்ணன் மகிழ்ந்திடும் மருகா
மரகத மயிலேறும் வடிவேல் முருகா - அழகெல்லாம்

கருணைக்கோர் விளக்கம்போல் காணும் ஒய்யாரா
கானக் குறவள்ளி மகிழும் சிங்காரா
தரும நெறி காக்க தோன்றிய வீரா
தஞ்ச மென்பார்க்கருளும் இறைவன் குமாரா ​ -அழகெல்லாம்

 

===================================================================================================

1969 ம் வருடம் வெளியான ஐந்து லட்சம் என்கிற நகைச்சுவை திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்.  'நான் பாடிய முதல் பாட்டு' என்னும் இந்தப் பாடல் இதை எழுதிய வாலிக்கும் முதல் பாட்டல்ல, பாடிய டி எம் சௌந்தர்ராஜனுக்கும் முதல் பாடல் அல்ல!

எஸ் எம் சுப்பையா நாயுடு இசை.  

ஜீவி ஸாரின் அபிமான ஜெமினி கணேசன், சரோஜா தேவி, மேஜர், சோ, சுருளி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படத்தில் நகைச்சுவை இன்னும் கொஞ்சம் நன்றாய் இருந்திருக்கலாம் என்பது அந்தக் கால ரசிகர்கள் எண்ணமாய் இருந்தது.

சுருளிராஜன் தனது குலதெய்வம்  சுருளிவேலர் பெயரின் காரணமாக தனது ராஜன் என்கிற பெயருடன் சுருளியை சேர்த்துக்கொண்டனர்.  சுருளிவேலர் கோவில் சுருளி நீர்வீழ்ச்சி இருக்கும் மலை மேல் இருக்கிறது. 80 ஆம் ஆண்டின் இறுதியில் காலமான சுருளி அந்த வருடத்தில் மட்டும் 50 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை செய்திருக்கிறார். 

இனி பாடலுக்கு செல்வோம்.  

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் கவிஞன் என்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
நான் கவிஞன் என்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு

கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ
கள்ளில் உண்டாகும் போதை
இவள் சொல்லில் உண்டாவதேனோ

தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ
தொட்டால் உண்டாகும் இன்பம்
கண்கள் பட்டால் உண்டாவதேனோ

இவள் காலடி நிழல் படும் நேரம்
மலர் போலே முள்ளும் மாறும்

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு

எதிரில் நின்றாடும்போது
இளம் மனதை பந்தாடும் மாது
எதிரில் நின்றாடும்போது
இளம் மனதை பந்தாடும் மாது

அருகில் வந்தாட வேண்டும்
அருகில் வந்தாட வேண்டும்
அதில் ஒரு கோடி பாடல் தோன்றும்

வண்ண ஆடைகள் மூடிய தேகம்
அதை கொஞ்சும் இளமை வேகம்

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு

கோயில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ
கோயில் கொள்ளாத சிலையோ
இளம் கிளிகள் கொய்யாத கனியோ

ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ
ஏட்டில் இல்லாத கவியோ
இவள் எழுத்தில் வராத பொருளோ

மடல் வாழையைப் போல் இவள் மேனி
நகை சிந்தும் அழகு ராணி

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் கவிஞன் என்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ்க் கேட்டு

37 கருத்துகள்:

  1. முதல் பாட்டு கேட்காதவர்களும் இருப்பார்களா? சீர்காழி குரலிக்கென்றே அமைந்த பாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். டீக்கடை முதல் ஊர் விட்டு ஊர் செல்லும் தனியார் பேருந்துகள் வரை...!

      நீக்கு
  2. ஜெமினி கணேசன் எனக்குப் பிடித்தவர் தான். காதல் காட்சிகளில்
    காடலியோடு இழைந்து நடிக்கரவர். உடல்வாகும் ரொம்ப ஒத்துழைக்கும்..

    நாயகியை முன் நிறுத்தி பின் அவர் தோள் பிடித்து நளினமாக நடிப்பது தான் பெரும்பாலும் அவர் ஸ்டைல். மற்ற்வர்கள் எப்படி என்று எல்லோருக்குமே தெரியும். இயற்கையான அழகு முகம் வேறு
    கைகொடுக்குமா? கேட்கவே வேண்டாம்.

    வஞ்சிக் கோட்டை வாலிபன், கைராசி, கல்யாண பரிசு போன்ற நிறையப் படங்கள் அவருக்காகவே அமைந்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெமினியின் ஸ்டைலை, மேனரிஸங்களை அப்படியே சொல்லி விட்டீர்கள்!

      //வஞ்சிக் கோட்டை வாலிபன், கைராசி, கல்யாண பரிசு போன்ற நிறையப் படங்கள்...//

      இதில் மிஸ்ஸியம்மாவை விட்டு விட்டீர்களே...  மிக அழகான ஜெமினி, அழகான சாவித்ரி.   கோபத்தில் கொதிக்கும் சாவித்ரி "உங்களுக்கு ஏன் பொறாமை?" என்பார்.  ஜெமினி பல வார்த்தைகளில் சொல்ல வேண்டிய வசனத்தை ஒரே வார்த்தையில் சொல்வார் அழகான பாவத்துடன்  "எனக்கா?"

      இன்னொரு படம்..  'பார்க்'கில் கண்டெடுக்கும் ஒரு சிறுவன் தன் தந்தை ஜெமினிதான் என்று சாதிக்கும் படம்.  அந்தப் பையன் 'மஹாகனம் பொருந்திய ஸ்ரீமான் ..' என்று ஆரம்பித்து ஒரு ராகத்துடன் ஒவ்வொருமுறையும் தந்தை பெயர் சொல்லும் அழகே தனி!

      நீக்கு
    2. இருக்குமோ.... கூகுள் செய்ய வேண்டும்!

      நீக்கு
  3. வாலி இசைக் கேற்ப அலட்டிக் கொள்ளாமல் நழுவி விட்டார்.
    பாடு - கேட்டு போது -- மாது வேண்டும் -- தோன்றும் தேகம் -- வேகம்
    மேனி -- ராணி என்று எளிமை ஊர்வலம்.

    கோயில் கொள்ளாத சிலையோ -- என்னவோ போங்க
    வாயில் கொள்ளாட உடலோ -- என்று எழுதினால் எப்படி இருக்கும்?
    அதே போலத் தாங்க.

    இளம் கிளிகள் கொய்யாத கிளியோ -- நல்ல வேளை ஜெமினி நாயகனாய் அமைந்தார். இல்லேனா, சிரிப்பா போயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டியூனும் மனதில் அமர்கிறது.  வரிகளும் ரசிக்க வைக்கின்றன.  காதலன் புகழும்போது மகிழாத காதலி ஏது?

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் கேட்டு ரசித்தேன்.

    இரண்டாவது பாடலும் முன்பு வானொலியில் கேட்டதுதான். இப்போது நீண்ட இடைவெளியில் இன்று கேட்டு ரசித்தேன். நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நடித்த படங்கள், படங்களின் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். பாடகர்கள் ஏ. எம். ராஜா, பி. பி. ஸ்ரீ நிவாஸ் ஏ. எல் ராகவன் போன்றோர் அவர் குரலுக்கு ஏற்றபடி பாடும் பாடல்கள் அவரின் பாடல்களின் சிறப்புக்கு காரணமாக இருந்திருக்கின்றன. அவை எல்லாம் இன்றும் மறக்க முடியாத பாடல்கள்.

    இந்தப் படத்தில் நடிகர் சுருளிராஜனின் பெயர் காரணத்தை தெரிந்து கொண்டேன். அத்தனை தகவல்களுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. அந்தக் கால பாடல்கள் எல்லாமே அருமையாக இருக்கும்.

      நீக்கு
  6. முதல் பாடல் பல முறை கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் அருமையான பாடல் அதுவும் மோகனம் கேட்கவா வேண்டும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இரண்டாவது பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம். அப்ப இருந்த இலங்கை வானொலிதான் உபயம் அதன் இயக்கம் நிற்கும் வரை.

    இவள் காலடி நிழல் படும் நேரம்
    மலர் போலே முள்ளும் மாறும்//

    இந்த வரிகளில் லைட்டா தர்பாரி கானடாவை தொட்டுவிட்டு போகிறது இசை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //  இந்த வரிகளில் லைட்டா தர்பாரி கானடாவை தொட்டுவிட்டு போகிறது இசை... //

      சூப்பர்.    முதலில் அந்த வரிகளைத்தான் தலைப்புக்காக எடுத்தேன்.

      நீக்கு
  8. இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த பாடல்களே...

    பதிலளிநீக்கு
  9. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  10. நல்லபடியாக இல்லம் திரும்பினோம்..

    எல்லாம் எனையாளும் ஈசன் செயல்..

    பதிலளிநீக்கு
  11. அழகெல்லாம் ஓர் உரு..

    அதுவே முருகெனும்
    திருவுரு..

    பதிலளிநீக்கு
  12. நான் பாடிய முதல் பாட்டு...

    வாலிபத்தில் இதுவும் மனனம்..

    வாழ்க வாலி!..

    பதிலளிநீக்கு
  13. முதல் பாடல் பக்தி மனதை கவரும்பாடல்

    .இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  14. முதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல். மிகவும் பிடித்த பாடல்.
    அடுத்த பாடல் முன்பு வானொலியில் அடிக்கடி கேட்கும் பாடல், இப்போதும் பழைய பாடல் நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சியில் வைக்கிறார்கள்.

    அந்தக்காலத்தில் சென்னையின் முக்கியமான இடங்களை படத்தில் சுற்றிக் காட்டுகிறார்கள்.
    ஜெமினி பட பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. இரண்டும் அருமையான பாடல்கள் ஜி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!