புதன், 21 ஆகஸ்ட், 2024

எண்ணெய்க் குளியலால் என்ன பயன்?

 

நெல்லைத்தமிழன்: 

 1. ஆன்லைன் வர்த்தகத்தால் பல வியாபாரத் தலங்களும், சிறிய சிறிய கடைகளும் பாதிக்கப்படுகின்றனவா இல்லை போட்டி நிறைந்த உலகத்தில் அவர்களும் லாபத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறதா?   

# ஆன்லைன் வர்த்தகம் வேறுபட்ட அளவில் பல்வேறு வர்த்தகர்களை பாதிக்கும்தான். அதையும் எதிர்கொண்டு தொடர்ந்து நிற்பது ஆன்லைன் பக்கம் போகாத மக்களும் பெரும் எண்ணிக்கையில் இருப்பதன் காரணமாகத்தான். 

& வெகுஜனங்கள் வாங்கும் பல விஷயங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் வாங்க இயலாது. அதே போன்று ஆன்லைன் சமாச்சாரங்கள் தெரியாதவர்களும், புரியாதவர்களும் கூட ஆன்லைன் பக்கம் போவது இல்லை. 

2.  எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் வழக்கம் நல்லதா? இன்னமும் அது தொடர்கிறதா?  

# எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நன்மை இருக்கிறதோ இல்லையோ, கெடுதல் நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். மேலும், ஆயுர்வேத முறையில் சில மூலிகை எண்ணெய்களைத் தேய்த்து பல வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இன்று வரை அது வெற்றிகரமாகத் தொடர்வதால், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் நன்மை இல்லாமல் இருக்காது என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.

& என்னைக் கேட்டால் எண்ணெய்க் குளியல் நல்லது என்றுதான் சொல்வேன். என் அம்மா அப்படித்தான் சொல்லி என்னை வளர்த்தார்கள். வாராவாரம் சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறேன். 

Meta AI சொல்லும் தகவல் :

An oil bath, also known as an oil soak or oil immersion, offers several advantages:

1. Relaxation and stress relief: Warm oil helps calm the mind and body.

2. Skin health: Nourishes and moisturizes the skin, improving softness and glow.

3. Muscle relief: Eases muscle tension, pain, and inflammation.

4. Detoxification: Helps remove toxins through sweating.

5. Improved sleep: Promotes deep relaxation, leading to better sleep.

6. Joint pain relief: Reduces joint pain and stiffness.

7. Immune system boost: Stimulates lymphatic circulation.

8. Menstrual relief: Eases menstrual cramps, bloating, and mood swings.

9. Skin conditions: Helps manage conditions like eczema, acne, and psoriasis.

10. Overall well-being: Enhances physical and mental well-being.

3.  கடந்த 2-3 தசாப்தங்களாக இந்தியர்கள் இனிப்பை அதிகமாக எடுத்துக்கொள்கிறார்களா? எல்லாம் எப்போதும் கிடைப்பது இதற்குக் காரணமாக இருக்குமா?   

# வட மாநிலங்களில் இனிப்பு காலம் காலமாக அதிகம் உண்ணப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இப்போது இந்தியாவில் மாநிலங்களில் இடையே மக்கள் குடியேறுவது பல்கி பெருகிப் போய்விட்டதால் எல்லா உணவுப் பழக்கங்களும் எல்லாப் பிரதேசங்களிலும் பரவி வருகிறது.  1948 காலகட்டத்தில் கோதுமை மாவுப் பலகாரங்கள் பூரி சப்பாத்தி உள்பட எப்படி செய்வது என்று ரேஷன் கடைகளில் ஒரு சிறு புத்தகத்தை இலவசமாக வழங்கியது நினைவிருக்கிறது.  நான் அதைப் படித்திருக்கிறேன்.

4.  இப்போது நாம் கொண்டிருக்கும் பழக்கம் போல, முந்தைய அதற்கு முந்தைய தலைமுறையில் தினமும் வித விதமாக சமையல் நடைபெற்றதா?  எப்போது ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் சமைக்கும் பழக்கம் வந்திருக்கும்?  (இதற்கெல்லாம் சரியான பதில் சொல்லக்கூடிய மிக மூத்த பதிவர்-ஹாஹாஹா.. இப்படி எழுதினால் 1890ஐச் சேர்ந்தவர் என்று சொல்வதைப் போலத் தோன்றுகிறது,  கீதா சாம்பசிவம் மேடம் பதில் எழுதுவாரா?)

# பல காலத்துக்கு முன் மக்கள் என்ன சமைத்தார்கள் எப்படி சமைத்தார்கள் என்று அறிவதற்கு நம்மிடம் வலுவான ஆதாரங்கள் இல்லை. குளிர்சாதனப்பெட்டி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் ஒரு நாளைக்கு பலமுறை சமைப்பது இயல்பாகவும் அவசியமானதாகவும் இருந்திருக்கும்தானே! (அந்தக் காலத்தில் எல்லாம் வகை வகையாக சமைத்தார்களா ஆம் எனில் என்னவெல்லாம் சமைத்தார்கள் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு ரொம்ப சிரமப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.)

5. Branded products ல என்ன இருக்கு இப்படி கொள்ளை விலை விக்கறதுக்கு?

# Branded products என்றால் ஒரு குறிப்பிட்ட தரம் உறுதி செய்யப்பட்டது என்பது உண்மைதான். அதற்காக செய்யப்படும் செலவும் எடுத்துக் கொள்ளப்படும் சமயம் அதிக விலை என்றாலும் கூட சில பொருள்களுக்கு மிக அதிக விலை வைத்திருக்கிறார்கள் என்பது. இதற்குக் காரணம் அந்த பிராண்ட் மீது மக்கள் வைத்துள்ள அசாத்தியமான நம்பிக்கைதான்! செருப்பு வேண்டும் என்றால் Bata கடைக்குப் போ என்று மக்கள் நினைத்தது மறந்து போய்விட்டதா ?

6.  ஒரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவது சாப்பாட்டு ருசிக்கா இல்லை  கொடுக்கும் காசுக்கு ஏற்ற தரம் என்பதாலா இல்லை, சும்மா பொழுதுபோக்கப் போய் காசைச் செலவழித்துவிட்டு வருவோம் என்பதற்கா?  60 ரூபாய் முழுச் சாப்பாடு, 120 ரூபாய் லஞ்ச், 250 ரூபாய் என்றெல்லாம் போட்டிருக்கும்போது எதற்கு முக்கியத்துவம்?

# இந்தக் கேள்விக்கு முன்பே விடை அளித்து விட்டதாக நினைவு. வெளியே சாப்பிடப் போகிறோம் என்றால், ருசி, சுற்றுச் சூழ்நிலை, மற்றும் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படும் முறையில் சுத்தம் என்ற எல்லாமே முக்கியம்தான். அதுபோக ஏதோ ஒரு விஷயத்தைக் கொண்டாட நினைக்கிறோம் என்றாலும் கூட ஒரு புகழ் பெற்ற உணவகத்திற்கு போக வேண்டும் என்கிற உந்துதல் உண்டாவது இயற்கை. எனவே எல்லாமே முக்கியம்தான் என்றாலும் எதற்கு முதலிடம் என்பதுதான் பிரச்சனை.

& நான் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது பசிக்கு மட்டுமே. சில வற்புறுத்தல்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்படும் கல்யாண விருந்துகள் விதிவிலக்கு.  

7.  உடலுக்கு விட்டமின் மினரல் சக்தி போன்ற காரணத்துக்குத்தான் சாப்பிடுகிறோம்னா ஏன் விடமின் மினரல் கேப்ஸ்யூல்கள் மாத்திரம் எடுத்துக்கலாமே. ஏன் இட்லி சாம்பார் சோறு குழம்பு குளம்?

# நீங்கள் சொல்லியது எல்லாம் போக கார்போஹைட்ரேட் கொழுப்பு போன்ற சில சத்துக்களும் அதிகப்படியாக தேவைப்படுவது காரணமாகத்தான் அரிசியும் பருப்பும் எண்ணெயும் நெய்யும் பாலும் தயிரும் மாவும் என்று பலப்பல உணவுப் பொருள்கள் தேடி வாங்கி சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.

& எல்லோருமே சுனிதா வில்லியம்ஸ் ஆக முடியாது. 

8. ஒருவர் இறக்கும்போது இந்த உலகத்தில் அவர் விட்டுச் செல்வது எதை?

# அவரைப் பற்றிய நல்ல நினைவுகளை - சில காலத்துக்கு மட்டும். அல்லாத நினைவுகளை விட்டுச் செல்வோரும் உண்டு. அதுவும் சில நாளைக்குத்தான்.

கே. சக்ரபாணி  சென்னை  28.

1.  சில  ஹோட்டல்களில் வெஜிடேரியன் என்றும்  சில ஹோட்டல்களில்  ப்யூர்வெஜிடேரியன்  என்றும்  போர்டு போட்டிருக்கிறார்களே என்ன வித்தியாசம் ?

# ஒரு வேளை சமைப்பவரும் வெஜ். ஆக இருந்தால் ப்யூர் வெ.

2. ஆடி மாதத்தில்  நிறைய  கடைகளில் தள்ளுபடி  விலையில் விற்பனை  செய்கிறார்களே. என்ன  சிறப்பு ?

# அந்த நாட்களில் கல்யாணம் கார்த்திகை ஆடியில் இராதென்பதால் தள்ளுபடி விலையில் தள்ளிவிட முயல்வார்கள்.‌ விலை சற்று சல்லிசாக இருக்கும் என்பதும் உண்மைதான்.

3.  வீட்டிலோ  அல்லது வெளியிலோ.  கயற்றில் வாளி  கட்டி தண்ணீர்  இழுத்து   குளித்த அனுபவம்  உண்டா ? 

# வாளியில் தண்ணீர் இறைத்து மட்டுமே சுமார் 18 ஆண்டுகள் குளித்திருக்கிறேன்.

& உண்டு. 1963 முதல்  1971 வரை அதன் பின் 1975 முதல் 1989 வரை) 

= = = = = = = = = =

KGG பக்கம். 

அண்ணன் kgs பற்றி - 

முதலில் அவருடைய பெயர்க்காரணம். 

சுப்ரமணியன் என்பது kgs அவர்களின் தாத்தா பெயர். 

திருவாரூர் அருகே உள்ளது கல்யாணமகாதேவி என்னும் கிராமம். 


இந்த கிராமம்தான் எங்கள் முன்னோர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்த இடம். 

என்னுடைய அப்பா கூறிய விவரங்களை வைத்து, எங்கள் மூதாதையர்கள் பற்றி சுருக்கமாக எழுதுகிறேன் 

அனேகமாக பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில், கல்யாணமகாதேவி கிராமத்தில் வாழ்ந்த பண்ணையார் திரு சுப்ரமணியன் என்பவர். இவர் kgs அவர்களின் தாத்தாவின் தாத்தா. தெலுங்கு மொழி பேசும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கௌதம கோத்திரம். 

சுப்ரமணியன் & சேஷம்மா. இந்தத் தம்பதியினருக்கு நான்கு மகன்கள். 

சுப்பராயலு, ராமச்சந்திரன், நாராயணப்பா, சேஷாசலம். 

நான்காவது மகனாகிய சேஷாசலம் அவர்களின் மனைவி பாலம்மா. 

இந்தத் தம்பதியினரின் முதல் குழந்தை பங்காரு என்னும் பெண். 

இரண்டாவது குழந்தை சுப்ரமணியன் என்னும் சுப்பையா. பிறந்த ஆண்டு, 1874. 

இந்த சுப்ரமணியனின் மனைவி சரஸ்வதி. 

இந்தத் தம்பதியினருக்கு 10 குழந்தைகள். முதல் இருவரும் பெண்கள். அடுத்த ஏழு பேரும் பையன்கள். கடைசி குழந்தையும் பெண். 

கடைசியில் பிறந்த இரண்டு பையன்கள் & கடைசி பெண் மூவருமே சிறிய வயதில் இறந்துவிட்டார்கள். 

சுப்ரமணியன் & சரஸ்வதி தம்பதியினரின் நான்காவது குழந்தையாக, இரண்டாவது மகனாகப் பிறந்தவர், பக்தவத்சலம் என்கிற கோபாலன். 


S கோபாலன் அவர்களின் மனைவி கனக வெங்கலக்ஷ்மி என்னும் ராஜலக்ஷ்மி. (என்னுடைய அப்பா & அம்மா) 



என்னுடைய அப்பா & அம்மாவுக்கு பிறந்த குழந்தைகள் மொத்தம் 13. 

முதலில் பிறந்த பெண்ணும் மூன்றாவதாகப் பிறந்த இரட்டையரும் சிறுவயதில் இறந்துவிட்டனர். 

எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் அண்ணன் சுப்ரமணியன். (நான் பதினோராவது குழந்தை!) 

தாத்தா சுப்ரமணியன் இறந்த அடுத்த  வருடம் பிறந்தவர் என்பதால், என்னுடைய அப்பா அவருடைய அப்பா நினைவாக இவருக்கு சுப்ரமணியன் என்று பெயர் வைத்தார். 

(தொடரும்) 

= = = = = = = 

ரீட்டா & மீட்டா 05 

1) ஆனந்த் ரீத்திகா திருமணம்; ஆனந்தின் முன்னாள் காதலி ரீட்டாவிடமிருந்து மிரட்டல் கடிதம். 

2) ஆனந்த் எழுதிய காதல் கடிதங்களை திரும்ப அவனிடமே சேர்ப்பிக்க பத்து லட்ச ரூபாய் அனுப்பச் சொல்கிறாள் ரீட்டா. 

3) ஆனந்த் பத்து லட்ச ரூபாயை, ரீட்டாவுக்கு அனுப்புகிறான். ஆனந்த் எழுதிய கடிதங்களை அனுப்பி வைக்கிறாள் ரீட்டா. இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கடிதம், ரீட்டாவிடமிருந்து !

4) மேலும் இருபது லட்ச ரூபாய் கேட்கிறாள் ரீட்டா. வேறு வழியில்லை; ரீட்டாவைக் கொல்வதுதான் ஒரே வழி என்று முடிவு எடுக்கிறான் ஆனந்த். 

ரீட்டாவைக் கொல்வது என்று முடிவெடுத்தபின், எப்படி என்று யோசித்தான் ஆனந்த். சாட்சியமே இல்லாமல் கொல்வது எப்படி? 

இதையும் மீட்டாவிடம் கேட்டால் என்ன? 

கேட்டான் ஆனந்த். 

ஆனந்த் : " மீட்டா - நான் ஒரு கதாசிரியன். ஒரு கதை எழுதிக்கொண்டுள்ளேன்."

மீட்டா : நல்லது. என்ன வகை கதை? 

ஆ : மர்மக் கதை. கதாநாயகனை, பணம் கேட்டு மிரட்டுபவரை தடயம் இல்லாமல் கொன்றுவிடுகிறான் கதாநாயகன். 

மீ : தடயம் இல்லாமலா ! எப்படி? 

ஆ : அதற்குத்தான் உன் உதவி தேவை. சமீப காலத்தில் அப்படி தடயம் இல்லாமல் நடந்த கொலை அல்லது மர்ம மரணம் ஏதாவது உள்ளதா? 

மீ : உள்ளது. 

ஆ : விவரங்கள் கொடு 

மீ : சீனாவில் நடந்த மர்ம மரணம் ஒன்று. சீனாவின் தயாரிப்பான CV235 என்னும் கொடிய விஷத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட கொலை. 

ஆ : CV235 பற்றி மேலும் விவரங்கள் கிடைக்குமா? 

(தொடரும்) 

= = = = = = = = = = =


59 கருத்துகள்:

  1. தாத்தாவின் முந்தைய தலைமுறைகளின் விவரம் வைத்திருக்கிறீர்களே... ஆச்சர்யம்தான்.

    இதுபற்றிப் படிக்கும்போது, காஞ்சீபுரத்திலிருந்து நெல்லை கோபாலசமுத்திரத்தில் குடியேற வைக்கப்பட்ட என் முன்னோர்கள் நினைவு வருகிறது. அதுபற்றி ஒருநாள் எழுதுகிறேன், அவருடைய புகைப்படம் (தாத்தாவின் தாத்தா?) மாத்திரம் இருக்கும் காரணத்தோடு

    பதிலளிநீக்கு
  2. ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே தெலுங்கு பேசும் பிராமணர்கள் (பெரும்பாலும் அவர்கள் சிவனை வழிபட்டவர்கள்) தமிழகத்தில் இருந்தனர். இராமானுசரின் பெற்றோரும் தெலுங்கு மொழி பேசும் பிராமணர்தான். அப்போது வைணவர்கள், ஸ்மார்த்தர்கள்/வடமா என்ற பிரிவுகள் இருந்தன. பிற்காலத்தில்தான் ஐயங்கார் என்றால் வைணவர்கள் என்ற அடையாளம் ஏற்பட்டது (அதுவுமே, ஐயர் என்பதற்கு உயர்ந்தவர்கள் என்ற அர்த்தம் இருக்க, தெலுங்கு நாட்டில் ஐயர் காரு என்ற சொல்பதம் பிறகு திரிந்து ஐயங்கார் என்ற ஜாதி அடையாளமாக மாறிற்று என்பர்

    பதிலளிநீக்கு
  3. வாளி கட்டித் தண்ணீர் இழுத்துக் குளித்த காலங்களை மறக்க முடியுமா? எங்கள் மாமா நண்டு சிண்டுகளான எங்களுக்கு கிணற்றிலிருந்து நீர் இறைத்து எங்களைக் குளிக்க வைப்பார். அந்தக் காரங்களில் இருந்த வேற்றுமையற்ற சந்தோஷங்கள் மறைந்துவிட்டன காலப்போக்கில்.

    பதிலளிநீக்கு
  4. கே. ஜி. ஜி அவர்களே உங்கள்
    பூர்வீகம் குறித்து இவ்வளவு
    துல்யமாக ஞாபகம் வைத்துள்ளீர்களே
    அருமை.
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு மாத்திரமே இத்தகைய ஞாபகசக்தி அமைந்துவிடுகிறது. நேற்று நான் வீடு என்ற தலைப்பில் எபிக்காக மூன்று மணி நேரம் செலவழித்து ஒன்றரை பதிவுகள் எழுதும்போதுதான், சந்தேகம் வந்து எபியில் check பண்ணினால் ஏற்கனவே டிசம்பர் 2023ல் எழுதியிருப்பதைப் பார்த்தேன் . இப்படி இருக்கிறது என் ஞாபகசக்தி

      நீக்கு
    2. அப்பா எனக்கு சொன்ன தகவல்களை 1990 சமயத்தில் ஒரு பெரிய பேப்பரில் எழுதி வைத்தேன். பிறகு 2000 ஆண்டு கம்ப்யூட்டரில் எக்செல் ஃபைல் ஆக சேமித்து வைத்தேன். அந்த family tree file பார்த்து விவரங்கள் பெறுவேன்.

      நீக்கு
  5. உப்பு பற்றிப் பேசும் போதே உப்பு சத்தியாக்கிரகம் நினைவுக்கு வந்து விடும்..

    தனிப் பதிவு அன்றைக்கே தீர்மானம்.. தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரகம் தஞ்சாவூர் வழியாக நடைபெற்றதில் பெருமை.. தங்களது கருத்து எனக்கு உத்வேகம் அளித்தது..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பிளாக்கில் இட வேண்டிய கருத்து இங்கே பதிவாகி விட்டது.. மன்னிக்கவும்..

      எனது பிளாக்கும் எங்கள் பிளாக்கும் வேறு வேறு அல்ல..

      பொதுவாக
      வாரத்தில்
      ஒரே ஒரு நாளைத் தவிர..

      நீக்கு
  6. கேள்விகளும் பதில்களும் சிறப்பு.

    கேஜிஎஸ் குறித்த தகவல்கள் - உங்கள் நினைவு அசத்துகிறது.

    ரீட்டா - தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. கௌதம் ஜி அவர்களது வம்ச ஆவளி (family tree) க்கு நமஸ்காரம்..

    பதிலளிநீக்கு
  8. முந்தைய தலைமுறைகளில் நூறு ரூபாய்த் தாளை முழுசாக எத்தனை பேர் பார்த்திருப்பர்..

    எழுபதுகளில் தேநீர் பத்து பைசா..

    பதினைந்து ரூபாய்க்குக் கூட் டஸ்ட் டீ சுவையுடன் கிடைப்பதில்லை..

    முறை அறிந்து தேநீர் விற்பவர் எத்தனை பேர்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போவெல்லாம் தேநீர் விற்பனைக்கு இளம்பெண்கள் (நான் சொல்லுவது ஐம்பதுகளின் கடைசி, அறுபதுகளின் ஆரம்பம்) வந்து தேநீர் தயாரித்துக் கொடுத்துப் பொட்டலங்களை இலவசமாகக் கொடுத்து விளம்பரம் செய்தார்கள். குருவி படம் போட்ட தேநீரும் ரோஜாப்பூ போட்ட தேநீர்ப்பொட்டலமும் பிரபலம்.

      நீக்கு
  9. முந்தைய தலைமுறைகளில் பசித்ததும் சாப்பிட்டார்கள்..

    இப்போது அப்படி இல்லை..

    இங்கே பொழுது விடிதலே பிரியாணியுடன் தான்...

    ஊருக்கு ஊர் கருத்தரிப்பு மையங்கள் வந்தது எப்படி?...

    பதிலளிநீக்கு
  10. இந்திய மக்கள் பெரும்பான்மை கிராமங்களில் உள்ளனர். ஒன்லைன் வர்த்தகம் கிராமங்களை சென்றடையவில்லை. ஆன்லைன் வர்த்தகம் முதியவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே. இதை எழுதும் நேரம் ஆன்லைனில் மளிகை, காய்கள்ஆர்டர் செய்த பின்னர்.

    Kgg அன்னை 103 வயது வரை வாழ்ந்தார்களா? ரெக்கார்ட் தான்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  11. பசிக்கு சாப்பிட்டாலும் ருசியின் வந்தது தான் பாரம்பரிய உணவு..

    இன்றும் நாவில் இனிப்பவை பழந்தமிழர் உணவுகளே..

    முறுக்காக இருந்ததால் முறுக்கு..

    அதி ரசமாக (சுவையாக) இருந்ததால் அதிரசம்!..

    பதிலளிநீக்கு
  12. சித்திரச் செல்வர் கௌதம் ஜி அவர்கள் இனி ம.க.ம. என்றும் அறியப்படுவார்..

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய புதன் பதிவு அருமையாக உள்ளது. கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    வாரந்தோறும் எண்ணெய் குளியல் உடல்நலத்திற்கு சிறந்தது. எங்கள் அம்மாவும் இதையே பின்பற்றச்சொல்லி அறிவுறுத்தி வளர்த்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கும் இதையே நான் அறிவுறுத்தி வளர்த்து வந்தேன். ஆனால், இப்போது இருபதாண்டாக அதை முறைப்படி செயல் படுத்த இயலாமல் பல தடைகள் தடை செய்து விட்டது. அதனால், அதை மீண்டும் தொடர இயலவில்லை. மற்றபடி எண்ணெய்க் குளியல் உடலுக்கு ஒரு சிறப்பான மருத்துவம்.

    சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் எட்டாவது கேள்வியும், அதற்கான பதிலும் மிக அருமை.

    உங்கள் பக்கத்தில் நீங்கள் உங்கள் மூதாதையர்களை நினைவுபடுத்தி வைத்திருப்பது பாராட்டுக்குரியது. உங்கள் நினைவாற்றலுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.

    இதுவரை படிக்க விட்டுப் போன கதையை கோர்வையாக படித்து ரசித்தேன். அடுத்தப் பகுதிக்கும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. கேஜிஜி அவர்களின் குடும்பக்கதை அபாரம். எங்க பெண்ணும் எங்க குடும்பத்தின் ஃபாமிலி ட்ரீ போட்டு வைச்சிருக்கா/ கேஜிஜியின் மறைந்த சகோதரர் கேஜிஎஸ்ஸும் அந்தக் காலத்து கேஜிஎஸ்ஸைப் போலவே இருக்கார். திரு விஸ்வேஸ்வரன் அவர்களைப் பற்றி ரொம்பச் சொல்லவே இல்லை. கேஜி.ஜவர்லால் அவர்களும் அபாரத்திறமை வாய்ந்தவர்.

      நீக்கு
    3. பாராட்டுக்கு நன்றி. கே ஜி எஸ் எங்கள் ப்ளாக் ஆசிரியர் என்பதால் அவரைப் பற்றிய விவரங்கள் எங்கள் வலைப்பதிவில் வெளியிடுகிறோம். மற்றவர்கள் எ பி வாசகர்களுக்கு அதிகம் பரிச்சயம் ஆகாதவர்கள்

      நீக்கு
  14. @நெல்லை! அந்தக்காலத்திலும் விதம் விதமாகச் சமைத்துச் சாப்பிட்டிருக்காங்க. என்னிடம் ஒரு புத்தகம் உள்ளது. அதில் படித்துப் பார்த்தால் தெரிய வருகின்றன, இப்போ பிரியாணி எனப் பிரபலமாக ஆகி இருக்கும் உணவு வகை அப்போதே பிரபலம். பெயர் தான் வேறே!. இதைப் பற்றி எழுத ஆரம்பித்துப் பின்னர் நின்று விட்டது. அந்தப் புத்தகம் இருப்பது வேறொரு மடிக்கணினியில். இது புதுசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... விசேஷங்களில் அல்லது பண்டிகை நாட்களில் வித விதமாகச் சமைத்திருக்கலாம். ஆனால் சாதாரண நாளில், காலையில் சாதம், குழம்பு, கரேமது/கூட்டு, கீரை என்பது மாத்திரம்தானே உணவாக இருந்திருக்கும்? மதியம், காலை சாதத்தில் மோர் விட்டு தொட்டுக்க ஊறுகாய். இரவும் அதேதான், ஆனால் சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பலகாரம் என்பதுதான் நான் கேள்விப்பட்டது, பார்த்தது. என் அப்பா ஜெனெரேஷன்ல, காலை 7 1/2 -8 மணிக்கு முழு சாப்பாடு (சாதம் குழம்பு ரசம்), இரவு டிபன் அல்லது தோசை+மோர் சாதம் என்பது போல. எப்பவாவது பூரி, சப்பாத்தி போன்றவை (நான் எழுதுவது தமிழர் வீட்டுச் சாப்பாடு. நீங்க வடநாட்டில் வாழ்ந்ததால தமிழர் சாப்பாடு உங்க வீட்டுல இருந்திருக்காது. தினமும் சப்பாத்தி, தேப்லா என்றெல்லாம் பொளந்து கட்டியிருப்பீங்க). ஆனா இப்போதைய தலைமுறைல விசேஷ நாட்கள் உணவுன்னு ஒண்ணுமே இல்லை. ஸ்ரீஜெயந்தி பட்சணங்கள்லாம் பண்ணினா, அதை ரொம்பவே ரசித்து இந்தத் தலைமுறை சாப்பிடறதில்லை. பிள்ளையார் கொழுக்கட்டையோ எல்லா தினங்களிலும் கடைகளில் கிடைக்குது

      நீக்கு
    2. நல்ல கருத்துப் பரிமாற்றங்கள். நன்றி.

      நீக்கு
  15. நான் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் உள்ளவள். நேற்றுக் கூடத் தேய்த்துக் குளித்தேன். கண்ணிலிருந்து நீராகக் கொட்டினால் எண்ணெய் தேய்த்துக் குளித்து நாளாகி விட்டது என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு தொலைக்காட்சி பார்க்கும்போது கண் எரிந்தால், அன்று தண்ணீர் குடித்ததன் அளவு மிகக் குறைவு என்று புரிந்துகொள்வேன். திருநள்ளாறு அர்ச்சகர் (எல்லாம் சாம்பசிவம் மாமா சொன்னதுதான்) என்னிடம் வாரம் இரு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னார். அதை முடிந்தவரை தொடர்கிறேன்.

      நீக்கு
    2. தொலைக்காட்சி சீரியல்கள் பார்த்து கண்ணீர் விடுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனை உண்டா?

      நீக்கு
  16. என்னுடைய அப்பா, என் தாத்தாவின் நினைவாக
    என் இந்த அண்ணனுக்கு சுப்ரமணியன் என்று பெயர் வைத்தார்.-- என்று கடைசி வரி இருந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தாத்தா சுப்ரமணியன் இறந்த அடுத்த வருடம் பிறந்தவர் என்பதால், என்னுடைய அப்பா அவருடைய அப்பா நினைவாக இவருக்கு சுப்ரமணியன் என்று பெயர் வைத்தார். /// வார்த்தைகள் அமைப்பில் தவறு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. என்னுடைய அப்பா, அவருடைய அப்பா -- என்பது உங்கள் தாத்தா
      இவருக்கு -- என்பது உங்கள் அண்ணனைக் குறிக்கிறது
      இந்த -- என்பது இரண்டு மூன்று அண்ணன்ங்கள் இவர் தான் ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்வது.
      சரியா?--
      இப்பொழுது பொருத்திப் பாருங்கள். நான் சொல்வது புரியும்.

      நம்மை ஆதாரமாக வைத்து நம் முன்னோர்களை நம்முடன் நெருக்கிக் கொள்ள வேண்டும்.
      அம்மாவாசை தர்ப்பணத்தின் போது கூட நம் தாத்தாவை நாம் விட்டு விடுவதில்லை.
      பஞ்சபாத்திர உத்தரணி, எள், அட்சதை, தர்பைகளோடு நெருக்கி வைத்துக் கொள்கிறோம், இல்லியா?
      அப்படியிருக்க சொந்தத் தாத்தாவை அப்பாவின் அப்பா என்று
      சொல்லலாமா?
      அதற்காகட் தான் மனது பொறுக்கமல் அப்படிச் சொல்ல நேர்ந்தது. ஸாரி..

      அம்மா கேட்கிறாள்: "அப்பா என்ன செஞ்ச்சிண்டிருக்கார்,பாரு"
      பையன்: "அப்பா தானே? ... அவர் அப்பாவோட பேசிண்டிருக்கார்ம்மா.",

      தப்பில்லையா?
      இது பழக்கமானா, நம் பசங்களும், நம்மை மாதிரியே....



      நீக்கு
    3. KGG இதைக் கண்டுக்கவே இல்லை போலிருக்கு. பார்த்திருந்தால் ஏதாவது சொல்லியிருப்பார்.

      நீக்கு
  17. கேள்விகளும், அதற்கு பதில்களிம் அருமை.
    எண்ணெய் தேய்த்து குளிப்பதை விட்டு பல வருடம் ஆச்சு.
    குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல் வேண்டாம் என்று குழந்தை மருத்துவர் சொன்னார் அதனால் குழந்தைகளுக்கு விட்டோம், அப்படியே நாங்களும் விட்டு விட்டோம்.
    என் மாமியார் அவர்கள் நலமோடு(உடல் நலம் குன்றி மருத்துவமனைக்கு போகும் வரை) இருக்கும் வரை வார வாரம் எண்ணெய் குளியல் செய்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  18. KGG அவர்களின் பக்கம் படித்தவுடன் அவர்கள் அம்மா 100 தாண்டி வாழ்ந்ததும், அவர்கள் ஸ்ரீராம் அம்மா போல இருந்தது எல்லாம் நினைவு வந்தது. முன்பு பதிவில் படித்த நினைவு.
    உங்கள் அப்பாவை போலவே உங்கள் அண்ணா இருக்கிறார்.
    நினைவுகள் பகிர்வு அருமை. நீங்கள் குடும்பத்தின் ஃபாமிலி ட்ரீ தயார் செய்து வைத்து இருப்பதாக ஸ்ரீராம் சொல்லி இருக்கிறார் ஒரு பதிவில். இப்போதைய இளைய தலைமுறைக்கு குடும்பத்தினர்களை பற்றி தெரிந்து கொள்ள உதவும்.

    என் கணவர் என் மாமனார் நூற்றாண்டு விழாவில் எங்கள் குடும்பத்தின் ஃபாமிலி ட்ரீ தயார் செய்து என் சித்தப்பாவை வெளியிட வைத்தார்கள். என் மாமனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக போட பட்டது. மாமா அவர்கள் 105 வயது வரை நன்றாக இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  19. //ரீட்டாவைக் கொல்வது என்று முடிவெடுத்தபின், எப்படி என்று யோசித்தான் ஆனந்த். சாட்சியமே இல்லாமல் கொல்வது எப்படி? //

    மேலும் மேலும் தப்புகள் செய்து கொண்டே போகிறான் ஆனந்த்.
    முடிவு என்ன என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் எனக்கும் கவலையாக இருக்கிறது. எங்கே போய் முடியுமோ!

      நீக்கு
  20. Kgg குடும்ப வரலாறு படங்களுடன் அறிந்தோம் நன்றாக உள்ளது.

    கிணற்று வாழி நீர் நாங்கள் சிறுவயதிலும் பின் சண்டைகாலத்திலும் கிராமத்தில் குளித்துள்ளோம். கிணற்றுக்குளியல் நினைத்தாலே சுகம்தரும்.

    ரீட்டா....தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!