புதன், 14 ஆகஸ்ட், 2024

நான் செத்துப் பொழச்சவன்டா !


 ஜீவி: 

பள்ளி இறுதித் தேர்வில் மாணவன் ஒருவன் அதிக பாடங்களில் 100-க்கு 100 மார்க்குகள் வாங்கி பாஸ் செய்து அந்தப் பள்ளிக்கே பெரும் மதிப்பு கொடுக்கிற மாதிரி தேர்ச்சி பெற்றிருந்தான்.

அவனைக் குறிப்பிட்டு அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், "அவன் ஒரு தத்தி. மண்டூகம். படிப்பு என்றால் என்னவென்றே தெரியாத அறிவிலி." என்று வசை பாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆசிரியரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

# அப்படி நடந்தது உண்மை என்றால் அவருக்கு அண்மையில் மூளைக் கோளாறு வந்திருக்கும் என்று நினைப்பேன்.

ஆனால் பரீட்சையில் பல தில்லுமுல்லுகள் செய்து 100% வாங்கிய பையனை அது பற்றி அறிந்த ஆசிரியர் பையனைத் திருடன், நேர்மையில்லாத மோசக்காரன் என்று சொன்னால் ஒரு பணக்காரப் பையனையே கண்டித்த ஆசிரியரை தைரியசாலி என்று தான் சொல்லவேண்டும்.

ஆகவே 100% மார்க் வாங்கின பையனை அவன் ஆசிரியர் என்ன சொல்லித் திட்டுகிறார் என்று கவனமாகக் கேட்க வேண்டும்.

ஆக மொத்தம் மார்க் போட்ட மகானுபாவர்களைத்தான் கண்டிக்க வேண்டும்..

& அந்த மாணவன் அதிக பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று பாஸ் செய்திருந்தால் ஆஹா என்று சொல்லி, அவனையே அந்தப் பள்ளியின் ஆசிரியராக நியமித்து, .. .. என்றெல்லாம் சொல்ல ஆசைதான். ஆனால் அந்தப் பையன் பெற்றது 99/543 - அதாவது நூற்றுக்கு 18.2 மார்க்குகள்! ஆசிரியர் சொல்வது சரிதான்! 

உலக அரசியலைப் பற்றி கற்க லண்டனில் ஏதோ பயிலகம் இருப்பதாகவும் பல்வேறு நாட்டு அரசியல்வாதிகள் அங்கு பதிவு செய்து கொண்டு அரசியல் கல்வி கற்பதாகவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.. நம் தேசத்து அரசியல்வாதிகள் யாராவது சென்ற காலத்தில் இந்தப் பயிலகத்தில் உலக அரசியல் கல்வி கற்றிருக்கிறார்களா?

இது பற்றி மேலதிக தகவல்கள் ஏதானும் உங்களுக்குத் தெரியுமா?

--  கொஞ்சம் விளக்கமாக இது பற்றித் தெரிந்து கொள்ள ஆசை.

# தெரியவில்லை.  தேடிப்பார்க்கலாமே!

& திரு கு அண்ணாமலை இந்த மாத இறுதியில் செல்லவிருக்கும் பத்து வார(?) படிப்பு பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். 

Oxford University offers various politics study courses, including:

Undergraduate Courses. 

- Politics: Studying politics as an undergraduate at Oxford provides students with a comprehensive understanding of political systems, theories, and international relations ¹.

- History and Politics: This joint honors course offers students the freedom to explore a wide range of topics in both history and politics ².

- Philosophy, Politics, and Economics (PPE): A renowned course that combines the study of philosophy, politics, and economics to develop critical thinking and analytical skills ³.

Graduate Courses. 

- DPhil in Politics: A three- to four-year full-time or six- to eight-year part-time doctoral program for advanced research in politics ⁴.

- MSc in Politics Research: Designed for students who wish to pursue doctoral studies in politics or political theory at Oxford or elsewhere ⁵.

- MPhil in Politics (Comparative Government): A comprehensive program focusing on comparative government, political theory, and research methods ⁶.

Short Courses. 

- Politics: An Introduction (Online): An online short course offering an introduction to politics, suitable for those new to the subject or seeking a refresher ⁷.

These courses are offered through the Department of Politics and International Relations (DPIR), one of the largest and most prestigious politics departments globally ⁸.

என்னைக் கேட்டால், இதெல்லாம் இந்திய / தமிழக அரசியலுக்கு உபயோகமில்லாத விஷயங்கள். தமிழகத்தில் ஓட்டுக்கு அதிக பணம் யார் தருகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்! அந்த ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி பேராசிரியர்களே தமிழகத்திற்கு வந்து கழகங்களிடம் பாடம் கற்கவேண்டும் ! 

நெல்லைத்தமிழன்:

1. சிலரை பார்த்தாலே நமக்குப் பிடிக்காமல் போவதன் காரணம் என்ன? சிலரைப் பார்த்ததும் ரொம்பப் பிடித்துவிடுகிறதே  என்ன காரணமாயிருக்கும்?  (இந்தக் கேள்விக்கும் 'அ' என்றாலே ஜொள் விடும் பார்ட்டிகளுக்கும் சம்பந்தமில்லை. )

# யாராவது ஒருவரது உருவம் , குரல், நிறம் ஆகிய எதுவும் நம்மை பாதித்த ஒருவரது நினைவைக் கொண்டு வருவதாக இருந்தால் நமக்கு அவரைப் பிடிக்காமல் போகிறது என மனநிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சப்பை மூக்கு என்றாலே அலர்ஜி என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

& அ வை விட்டுவிடுவோம் - த வுக்கு சிலரைப் பார்த்தாலே பிடிக்காது; ஆனால் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும் என்று ஆண் த கூறுகிறாரே அது ஏன், எப்படி?  நெ த வுக்குத் தெரியுமா? 

2.  கொஞ்சம் வயதானால் தன்னைப் பாராட்டினாத்தான் பிடிக்கும், விமர்சித்தால் கோபம் வரும் என்றெல்லாம் மனநிலை மாறிவிடுவதன் காரணம் என்ன?

# வயதாகும்போது நம் இயலாமைகள் குறித்த அதிருப்தி நமக்கே உண்டாகிறது. இதற்கு மாற்றாக பாராட்டை எதிர்பார்த்து ஏங்குகிறோம். விமரிசித்தால் குத்திக் காட்டுவதாக எண்ணி சினம் கொள்கிறோம் .  இது போக இளைய தலைமுறையினரிடம் அவசர புத்தி அலட்சிய பாவம் பொறுமை இன்மை அதிகமாகி இருப்பதுவும் ஒரு காரணம்.

3  ஒரு திரையிசைப் பாடலின் வெற்றிக்கு யார் காரணம்? இசையமைப்பா, பாடல் வரிகளா, பாடுபவரா இல்லை வாயசைத்து நடிப்பவர்களா? சதவிகிதக் கணக்கு போட்டுச் சொன்னாலும் ஓகே.  

# இசை 40  பாடகர் 30 வரிகள் 20-30 காட்சி /நடிப்பு 10 என்பது என் கணிப்பு.‌ தோற்றால் இசை 60 பாக்கி எல்லாம் 40.

4. இதே அளவீடுகள், பாடல் தோல்வியுற்றாலும் வருமா இல்லை அதற்கு சதவிகிதக் கணக்கு வேறா?

& படம் என்று எடுத்துக்கொண்டால், வணிகரீதியாக சரியாகப் போகவில்லை அல்லது  படம் ஓடவில்லை, என்றால், தோல்வி என்று சொல்லலாம். ஆனால் பாடல்களுக்கு - இந்தப் பாடல் தோல்வி - அந்தப் பாடல் வெற்றி என்று தனியாக சொல்ல இயலாது. ஹிட் பாடல், சாதாரண பாடல் அவ்வளவுதான். அந்தக் காலத்தில் பெரிய ஹிட் என்று சொல்லப்பட்ட எலந்தப்பழம் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்காத பாடல்! 

5. எழுத்தாளர் சாரு, தன்னை ஞானியாக, பிறருக்கு ஞானத்தை வழங்குகிறேன் என்கிறார். ஜெயமோகனும் இப்படிச் சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை.  பாட்டி கதை (அல்லது நாவல், தொடர்) எழுத்தாளர்களெல்லாம் என்ன மாதிரியான ஞானத்தை வாசகர்களுக்கு வழங்குகிறார்கள்?

# ஞானம் என்பது கொடுப்பவரைவிடப் பெறுபவரின் பக்குவத்தைச் சார்ந்தது.‌

6. சமூகப் புரட்சி செய்பவன் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகத் தன் பங்களிப்பைச் செய்கிறானா இல்லை எழுத்தாளர்களா? ஒரு சமூகத்தில் சிற்பிகள், கட்டிடம் எழுப்புபவர், ஓவியர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர், ஆசிரியர், எழுத்தாளர்கள், வியாபாரிகள் என்று பலவிதத் தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள். இவற்றில் யார் நிஜமாகவே உயர்ந்தவர்?

# சமூகப் புரட்சி மக்கள் பங்கு இல்லாமல் அமையாது. பிரக்ஞை இல்லாத மக்களை வீறுகொண்டு எழச்செய்வது எழுத்தாளர் கவிஞர் அல்லது தலைவர் இவர்களது ஆவேசம்.‌ ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் புரட்சிக்கான தூண்டுதல் வெவ்வேறாக இருந்தது வரலாறு சொல்லும் உண்மை.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

சாதாரணமாக கடற்கரையை ஒட்டிய ஊர்களின் பெயர்தான் பட்டிணம்/பட்ணம் என்று முடியும் உ-ம் நாகப்பட்டிணம், மதராச பட்டிணம், காயல் பட்டிணம், விசாகபட்டிணம். ஆனால் மைசூருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீரங்கபட்டிணம் எப்படி பட்டிணமாயிற்று?

# தமிழ் இலக்கணத்தை வைத்து கன்னடப் பிரதேசத்தில் வழங்கும் சொல்லைப் பரிசீலிக்கக் கூடாது. பால்யா , ஊரு, பட்ண,  நகர எல்லாம் கன்னடத்தில் கிராமம், சிற்றூர், ஊர், பேரூர், மாநகரம் இவற்றைக் குறிக்கும் .

& நாகப்பட்டினத்தில் படித்த காலத்தில், அந்த ஊர் தமிழ் அறிஞர் சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஊர் பெயரை, நாகப்பட்டினம் அல்லது நாகப்பட்டணம் என்று எழுதுவதுதான் சரி என்று கூறினார். பட்டி என்று எழுதினால் 'னம்' என்று முடியும். பட்ட என்று எழுதினால் 'ணம்' என்று முடியும். 

பட்டணம் : பெருநகரம் 

பட்டினம் : கடற்கரையை ஒட்டியுள்ள சிறு ஊர்.  

(இந்த வாரம் நிறையக் கேள்விகள் பதில்கள் என்று வந்துவிட்டதால், நெல்லைத்தமிழனின் தொடுத்த மேலும் சில கேள்விகள், கே சக்ரபாணியின் சில கேள்விகள் அவற்றுக்கான பதில்கள், அடுத்த புதன் கிழமையில் வெளியாகும்) 

= = = = = = = = =

KGG பக்கம் : 

அண்ணனின் ஆபீஸ் நண்பர் ஒருவர், அண்ணனின் அலுவலகத்தில் அவர் கீழ் பணிபுரிந்தவர் என்று ஞாபகம். பெயர் மிஸ்டர் எக்ஸ் என்று வைத்துக்கொள்வோம். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து ஐடியா மணி போல நிறைய ஆலோசனைகள் வழங்குவார். வீட்டுப் பராமரிப்பு சிறிய repair வேலைகள் இவற்றில் அவர் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். 

ஒரு ஞாயிற்றுக் கிழமை - விடுமுறை நாளில் அடுத்த வாரம் இன்ஸ்பெக்ஷன் / ஆடிட் ஏதோ ஒன்று வரவிருந்ததால், சனிக்கிழமையன்று, அண்ணன் தன்னுடைய கீழ் பணிபுரியும் இவரையும் இன்னொருவரையும் அலுவலகத்திற்கு ஞாயிறு காலை நேரம் அலுவலகம் வந்து கொஞ்சம் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். 

ஞாயிறு அன்று திட்டமிட்டப்படி அண்ணன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். 

நான் வழக்கம்போல ஊர் சுற்ற மூர் மார்க்கெட் பக்கம் சென்றுவிட்டேன். 

வீட்டில் அண்ணியும், தங்கையும் மட்டுமே இருந்தனர். 

காலை பதினொரு மணிக்கு அலுவலகத்திற்குச் சென்ற   அண்ணன், தான் கேட்டுக்கொண்டபடி இருவரும் வருவார்கள் என்று காத்திருந்து பார்த்தால் இருவருமே வரவில்லை. அலுவலகத்திற்கு அருகில் உள்ளவர் வீட்டுக்கு பியூனை அவர் 'ஏன் வரவில்லை' என்று தெரிந்து வர அனுப்பியிருக்கிறார். அந்த நண்பர், 'தன்னுடைய தம்பி இறந்துவிட்டதால் தன்னால் வர இயலவில்லை' என்று கூறியுள்ளார். 

பிறகு அண்ணன், மிஸ்டர் எக்ஸ்  வீட்டுக்கு பியூனை அனுப்பியுள்ளார். அனுப்பும்போது, " அலுவலகத்திற்கு வரச் சொல்லிக் கேட்டுக்கொள்ளப்பட்ட  இரண்டு பேர்களில் ஒருவர் தன்னுடைய தம்பி இறந்துவிட்டதால் வரவில்லை - அதனால் நீங்கள் கட்டாயம் உடனே வரவேண்டும்" என்று சொல்லச் சொல்லி அனுப்பியிருக்கிறார். 

பியூன் சொன்னதைக் கேட்ட மிஸ்டர் எக்ஸ் உடனே கிளம்பி நேரே எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். 

வந்தவர் தலையில் ஒரு துண்டு போட்டுக்கொண்டு வந்திருந்தார். 

வீட்டில் இருந்த அண்ணியிடம், " விஷயம் கேள்விப்பட்டேன் - ரொம்ப வருத்தமா போயிடுச்சு" என்றார். 

அண்ணிக்கும் தங்கைக்கும் ஒரே குழப்பம். " என்ன கேள்விப்பட்டீங்க ? என்ன வருத்தம் " என்று கேட்டிருக்கிறார்கள் 

" உங்களுக்கு விஷயமே தெரியாதா ? இன்னும் ஆஸ்பத்திரியிலிருந்து வரவில்லையா ? ஆமாம் - ஆக்சிடென்ட் கேஸ் என்றால் வீட்டுக்கு வர லேட் ஆகும் " என்று எக்ஸ் சொல்ல - இவர்களுக்கு மேலும் குழப்பம். 

எக்ஸ் தன்னுடைய விரலில் போட்டுக்கொண்டிருக்கும் மோதிரத்தைக் கழற்றி, " செலவுக்கு வேண்டுமானால் இந்த மோதிரத்தை வைத்துக்கொள்ளுங்கள் " என்று கூற, மேலும் குழப்பநிலை நீடித்தது. 

மிஸ்டர் எக்ஸ் தொடர்ந்து, " ச் சே! வேலை பார்க்க வந்த தம்பியை விதி இப்படி செய்துவிட்டதே" என்று புலம்பியிருக்கிறார். 

இப்படி கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவர் குழப்ப, இவர்கள் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் நான் மூர் மார்க்கெட் விஜயம் முடித்து, வீட்டுக்குள், வீதியில் கேட்ட சினிமா பாட்டை - 'நான் செத்துப் பொழச்சவன்டா!' என்று பாடியபடி உள்ளே பிரவேசித்தேன். 

என்னைப் பார்த்ததும் மிஸ்டர் எக்ஸ் அதிர்ந்துபோய் எழுந்து நின்றார். அவர் முகம் பேயறைந்தது   போல மாறியது. 

சொல்லாமல் கொள்ளாமல் வெளியே ஓடிப்போய்விட்டார். 

நேரே அண்ணனின் ஆபீஸுக்குப் போய், அவரிடம் தான் செய்தவைகளைக் கூறிவிட்டார். 

உடனே அலுவலகத்திலிருந்து நேரே வீட்டுக்கு வந்த அண்ணன், " என்ன? எல்லோரும் குழம்பிப் போயிருக்கிறீர்களா? என்று கேட்டபடி வந்தார். நடந்த குழப்பங்கள் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார். பியூன் என்ன சொன்னாரோ - அதை மிஸ்டர் எக்ஸ் தவறாகப் புரிந்துகொண்டு நேரே இங்கே வந்து சொதப்பிவிட்டார் என்று அவர் விளக்கியதும்தான் என்ன நடந்தது என்று எங்கள் எல்லோருக்கும் விளங்கியது! 

= = == = =

ரீட்டா & மீட்டா 04 

1) ஆனந்த் ரீத்திகா திருமணம்; ஆனந்தின் முன்னாள் காதலி ரீட்டாவிடமிருந்து மிரட்டல் கடிதம். 

2) ஆனந்த் எழுதிய காதல் கடிதங்களை திரும்ப அவனிடமே சேர்ப்பிக்க பத்து லட்ச ரூபாய் அனுப்பச் சொல்கிறாள் ரீட்டா. 

3) ஆனந்த் பத்து லட்ச ரூபாயை, ரீட்டாவுக்கு அனுப்புகிறான். ஆனந்த் எழுதிய கடிதங்களை அனுப்பி வைக்கிறாள் ரீட்டா. இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கடிதம், ரீட்டாவிடமிருந்து !

இனி 

ரீட்டாவின் கடிதம். 

டியர் ஆன் !

கேட்டதும் இப்படி சுளையாக பத்து லட்சம் அனுப்பிவிட்டாய்! ஆச்சரியமா இருக்கு. நான் அந்தக் கடிதங்களை அனுப்புவதற்கு முன்பு எல்லாவற்றையும் ஒரு high ரெசல்யூசன் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டேன். 

அவற்றிலிருந்து பிரிண்ட் போட்டால் அப்படியே ஒரிஜினல் கடிதம் போலவே உள்ளது. 

எனக்கு மேலும் இருபது லட்ச ரூபாய் தேவை. உடனடியாக வேண்டாம். ஒரு மாதத்திற்குள் அனுப்பி வை. 

BMW ரீட்டா. 

ஆனந்த் இதைப் படித்ததும் பல்லை நற நற என்று கடித்துக் கொந்தளித்தான். அந்தக் கோபத்தில் ரீட்டாவின் கடிதம், கடித உறை எல்லாவற்றையும் பேப்பர் shredder மெஷினுக்கு இரையாக்கினான். 

அப்பொழுது அவனுக்கு ஒரு யோசனை வந்தது. 

இந்த ரீட்டா போன்ற ஆட்களை எப்படி டீல் செய்வது என்று Meta AI (மீட்டா)விடம் கேட்டால் என்ன? 

கேட்டான். 

மீட்டா கூறியது :

பிளாக் மெயில் செய்பவர்களை டீல் செய்ய மூன்று வழிகள்தான் உள்ளன. 

1) அவர்களை கோர்ட் / கேஸ் என்று சந்தித்து சட்டபூர்வமாக எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவது. அதற்கு நிறைய நேரம், பணம் எல்லாம் செலவாகும். கோர்ட் / கேஸ் இவற்றால் பெயர் கெட்டுவிடும் என்றால் இது சரிப்பட்டு வராது. 

ஆனந்த் இது சரிப்பட்டு வராது என்று தெரிந்துகொண்டான். கோர்ட் / கேஸ் என்று வந்தால் - ரீத்திகா தன்னை விவாகரத்து செய்துவிடுவாள் என்ற உண்மையும் அவனுக்குத் தெரியும். 

2) பிளாக் மெயில் செய்பவர் கேட்கும் தொகையை (கேட்பவர் அல்லது  கொடுப்பவர்  ஆயுள் காலம் முழுவதும்) கொடுத்துக்கொண்டே இருப்பது. 

ஹூம் - ரீட்டா கேட்பது நூற்றுக் கணக்கில் அல்லது ஆயிரக் கணக்கில் என்றால் கூட போய்த் தொலையட்டும் என்று கொடுக்கலாம். ஆனால் இந்தப் பிசாசு லட்சக் கணக்கில் அல்லவா கேட்கிறது! எனவே இதுவும் சரிப்படாது. 

3) பிளாக் மெயில் செய்பவரை மௌனமாக்குவது. (சைலன்ஸ் தி பிளாக் மெய்லர் ) 

அவ்வளவுதானா ? 

அவ்வளவுதான். 

அப்படி என்றால். .. ? 

பிளாக் மெயில் செய்பவரைக் கொன்றுவிடு. 

ஆனந்துக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்று தோன்றியது. 

(தொடரும்) 

40 கருத்துகள்:

  1. காவேரி வெள்ளம் போல் புதன் கேள்விகள். கேள்விகள் அர்த்தமுள்ள கேள்விகள்.

    //& அ வை விட்டுவிடுவோம் - த வுக்கு சிலரைப் பார்த்தாலே பிடிக்காது; ஆனால் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும் என்று ஆண் த கூறுகிறாரே அது ஏன், எப்படி? நெ த வுக்குத் தெரியுமா? //
    ஸ்ரீராம் என்ன பதில் கூறுகிறார் என்று பார்ப்போம்.
    // வயதாகும்போது நம் இயலாமைகள் குறித்த அதிருப்தி நமக்கே உண்டாகிறது. இதற்கு மாற்றாக பாராட்டை எதிர்பார்த்து ஏங்குகிறோம்.//
    என்னுடைய கவனிப்பில் இளைய தலைமுறையினர்தான் விமரிசனங்களை ஏற்று கொள்வதில்லை. மிக்க வயதானவர்களும் 70க்கு மேல் விமரிசனங்களை பொருட்படுத்துவதில்லை.
    //ஞானம் என்பது கொடுப்பவரைவிடப் பெறுபவரின் பக்குவத்தைச் சார்ந்தது.‌//
    உண்மை. கொடுப்பவர்கள் ஞானி ஆக இருந்தால் தானே? எழுதுபவர்கள் ஞானிகள் என்று பொதுவாகச் சொல்லமுடியாது. ஞானி என்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தார். ஆனால் அவர் ஞானம் என்ற ஒன்றை தந்ததில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. // ஸ்ரீராம் என்ன பதில் கூறுகிறார் என்று பார்ப்போம். //

      இதில் நான் என்ன சொல்லப் போகிறேன்?!  சொல்வதற்கு ஒன்றுமில்லை!  சிலருக்கு சிலரைப் பிடிக்கும்.   அதே சிலரை சிலருக்கு பிடிப்பதில்லை.  சிலருக்கு சிலரை பிடிப்பதும் இல்லை, பிடிக்காமல் போவதும் இல்லை.  நடுவாந்திரம்!  அவரவர் மனதில் இருக்கும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை அந்த சிலர் fulfil செய்கிறார்கள் என்று கொள்ளலாமா?

      வயதானால் ஒரு பக்குவம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.  எல்லோரிடமும் அது அமைந்து விடுவதும் இல்லை!  ஞானத்தைப் பொறுத்தவரை நான் சிலமுறை அதை அடைந்திருக்கிறேன்.  தஞ்சையில் வசித்தபோது ஞானம் என்றொரு தியேட்டர் இருந்தது,.  தேவரின் தெய்வம் உள்ளிட்ட படங்களை அங்குதான் பார்த்தேன்!

      நீக்கு
    3. ஒருமுறை அடைந்தது ஞானம் தியேட்டர். அதுபற்றி எங்களுக்குப் பெரிய அக்கறை இல்லை. ஞானம் என்ற பெண்ணைப் பற்றி என்ன சொல்வார் என எதிர்பார்க்கிறோம்.

      நீக்கு
    4. ஆச்சரியகரமாக என் வாழ்வில் நான் ஞானம் என்ற பெயர்கொண்ட பெண்ணை சந்தித்ததே இல்லை.

      ஆனால் 'அலைகள் ஓய்வதில்லை' பாடல் வரி நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    5. பாம்பே Bombay ஞானம், ஞானாம்பாள் கேட்டரிங்.. கேள்விப்படலையா?

      நீக்கு
    6. அதானே. ஆனால் ஸ்ரீராம் சந்தித்ததில்லை என்றுதானே சொன்னார். பார்த்ததில்லை, கேள்விப்பட்டதில்லை என்று சொல்லவில்லையே !

      நீக்கு
  2. 1) வாக்காளர் பணம் பெற்றால் பணம் கொடுத்த கட்சிக்கே ஓட்டுப் போடுவார்கள் என்கிற நிலமையெல்லாம் இன்றில்லை. அதே மாதிரி பெரிய கட்சிகள், வசதியுள்ள கட்சிகள் எல்லோருமே பணம் கொடுக்கிற சூழ்நிலை நிலவுகிற காலத்தில் வாக்காளர்கள் தாங்கள் விரும்புகிற கட்சிக்கே வாக்களிக்கிறார்கள்.
    அதனால் பணம் கொடுத்தார்கள், வெற்றி பெற்றார்கள் என்று எந்த கட்சியின் வெற்றியையாவது சகித்துக் கொள்ள முடியாமல் சொன்னால் பூனை -- பூலோகம் இருண்ட சம்பந்தப்பட்ட கதை தான்.

    2) பணம் பெற்று வாக்களிக்கிறார்கள் என்று சகட்டு மேனிக்கு மக்களை கொச்சை படுத்துகிற கட்சியின் மேல் இயல்பாகவே மக்களுக்கு வெறுப்பேற்படுகிறது என்பது மனநிலை சார்ந்த ஒரு உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார் அவருடைய இளமைக் காலம் பற்றி பகிர்ந்திருக்கிறார். திருமங்கலம் ஈரோடு கிழக்கு போன்ற இடைத்தேர்தல்கள் எல்லாம் அவர் கேள்விப்பட்டிருக்க மாட்டார். முரசொலியில் அவற்றின் ரிசல்ட் தவிர வேறு விஷயங்கள் வந்திருக்காதல்லவா?

      நீக்கு
    2. // பணம் பெற்று வாக்களிக்கிறார்கள் என்று சகட்டு மேனிக்கு மக்களை கொச்சை படுத்துகிற கட்சியின் மேல் இயல்பாகவே மக்களுக்கு வெறுப்பேற்படுகிறது என்பது மனநிலை சார்ந்த ஒரு உண்மை. //

      :))

      ஜீவி ஸார் கருத்து என்னையும் மிக ஆச்சர்யப்படுத்துகிறது.  மிக மிக!

      நீக்கு
    3. அரசியல் தெளிவோடு வாக்களிப்பவர்கள் அதிகம். அவர்கள் ஆதரவோடு தான் எந்தக் கட்சிக்கும் முழுமையான வெற்றி கொடி நாட்டப்படுகிறது. 40/40 என்பது சகல மட்டத்திலும் இருக்கும் அதிருப்தியைக் காட்டும் அளவுமானி.

      ஒட்டுமொத்தமாக எல்லோரையும் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள் பட்டியலில் சேர்ப்பது வெற்றி பெறாத கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களை வேண்டுமானால் தற்காலிகமாக ஆசுவாசப்படுத்தலாம். ஆனால் நிதர்சன உண்மை என்பது தான் தோல்விக்கான காரணம். அதற்கு பல்வேறு காரணிங்கள் இருக்கலாம். அவற்றை தோல்வியுற்ற கட்சிகளின் மேலமட்டத் தலைவர்கள் அறிவார்கள். அடுத்து வரும் தேர்தல்களில் அப்படியான காரணங்களைக் களைய நிச்சயம் முற்படுவார்கள். ஏனென்றால் முழு வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் எல்லோருடைய அபிலாஷையும்
      எல்லாத் துறைகளிலும் பாடம் பெறுவது என்பது முக்கிய அம்சம். அதன் அடிப்படையிலேயே பதில் சொல்ல எதிர்காலமும் காத்திருக்கிறது.

      நீக்கு
    4. அரசியல், சினிமா, தனி விருப்பங்கள், கதாசிரியர்கள் நாவல்கள் எல்லாமே ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்கள். அதை விவாதிப்பது நேரத்தை வீணாக்குவதற்குச் சமம். அதனால் நான் அம்பேல்

      நீக்கு
    5. அரசியல், சினிமா, தனி விருப்பங்கள், கதாசிரியர்கள் நாவல்கள் எல்லாமே ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்கள். அதை விவாதிப்பது நேரத்தை வீணாக்குவதற்குச் சமம். அதனால் நான் அம்பேல்

      நீக்கு
    6. நெல்லை, தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் திடீரென்று வானிலிருந்து குதித்து விடுவதில்லை. ஒன்றை பார்ப்பதால், படிப்பதால், உணர்வதால், அனுபவிப்பதால் என்று விருப்பங்கள் மூளையில் நிலை கொள்வதற்கு பல்வேறு விதமான தூண்டுதல்கள் காரணமாக இருக்கின்றன. நான் சொல்லியிருப்பதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த ஒருவருக்கானும் இவர் சொல்வது கூட புதுக்கருத்தாய் இருக்கிறதே என்று தோன்றியிருக்கலாம்.

      இன்னொன்று. விருப்பங்கள் எதுவுமே ஆயுசு பூராவும் நிலைத்து இருப்பதில்லை. அதற்குக் காரணம் ஒரு விஷயம் நமக்குத் தெரிய வராததினாலோ அல்லது அதை அனுப்பவித்திராததோ எதுவோ ஒன்று காரணமாக இருக்கலாம்.

      காசை வாரி இறைத்தால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற கருத்தை தோல்வியுற்ற கட்சிகளிடம் விதைப்பதற்கு கட்சியிடமிருந்து பெற்ற காசை வினியோகிக்கும் இடைத்தரகர்கள் காரணமாக இருக்கலாம். இன்னும் அதிகத் தொகை அடுத்த தேர்தலில் பெற்று விடுவதற்கு ஏதுவாக.
      அல்லது கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் சோர்ந்து விடாமலிருக்க மேலிடமே போலியான ஒரு காரணத்தை உருவாக்கியிருக்கலாம்.

      எப்படியிருப்பினும் காசை வாரி இறைத்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தை விதைப்பது very dangerous one. ஏனென்றால் எவ்வளவு குவிந்தாலும் திருப்தி அடைதாத ஒரே விஷயம் இந்த பணம் - காசு சமாச்சாரம் ஒன்று தான்.

      நீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // திருவருள் முன் நின்று //

      A V M ராஜன் வந்து TMS குரலில் பாடுவார்.. பரவாயில்லையா?!!

      நீக்கு
  4. ரீட்டா மீட்டா
    தோட்டா தான் சரி.

    கத்திக் குத்து கந்தன்.. ன்னு ஒருத்தர் இருக்கார்..

    அவரைத் தெரியுமா?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும்,.  ரிவால்வர் ரீட்டாவையும் தெரியும்!

      நீக்கு
    2. மேற்கொண்டு கதை பயங்கரமாக போகும் போலிருக்கே!

      நீக்கு
  5. A V M ராஜன் வந்து TMS குரலில் பாடுவார்.. பரவாயில்லையா?!!

    &&&&&
    ₹₹₹%%

    கந்தன் கைவேல்
    காப்பென வருக..

    பதிலளிநீக்கு
  6. &&&&&
    ₹₹₹%%

    !!! ???..

    தனியாகப் பேசிக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு
  7. கேள்விகள் மற்றும் பதில்கள் சிந்தனையைத் தூண்டுபவை.

    செத்துப் பிழைச்சவண்டா - ஹாஹா... நல்ல குழப்பம்.

    ப்ளாக் மெயில் - அடுத்து என்ன நடக்கப்போகிறது - தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. சரிதான் கௌ அண்ணா விடாது ரீட்டா. க்ரைம் த்ரில்லர்!

    ஓ ரீட்டா மீட்டான்னு கதை யின் தலைப்பு இப்பதான் புரியி!!! ஆனந்த் மீட்டாகிட்ட கேட்டு.....அடப் பாவி மீட்டா இப்படி எல்லாம் அட்வைஸ் செய்யுதா!

    கௌ அண்ணாவின் வேண்டுகோளின் படி No guessing of the story! மனசுக்குள்ள வந்தாலும் சொல்ல மாட்டேன்!!!!!!!

    கௌ அண்ணா, ஆனா இப்படி மூளையைக் கசக்குவதும் (என்னைச் சொல்லிக்கிட்டேன் ஹாஹாஹாஹா) ஒரு சூப்பர் brain activity! மூளையை இளமையா வைச்சுக்க உதவும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நான் செத்துப் பிழைச்சவண்டா - ஹாஹாஹா நல்லா குழப்பிய அனுபவம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சிந்திக்கவைத்தன கேள்விபதில்கள்.

    செத்துப்பிழைத்த தம்பி படிக்கும்போது சிரிப்பாக இருந்தாலும் நிஜத்தில் தர்மசங்கடம்தான்.

    மீட்டாவின் சொற்படி மர்மம் ........

    பதிலளிநீக்கு
  11. சிந்திக்கவைத்தன கேள்விபதில்கள்.

    செத்துப்பிழைத்த தம்பி படிக்கும்போது சிரிப்பாக இருந்தாலும் நிஜத்தில் தர்மசங்கடம்தான்.

    மீட்டாவின் சொற்படி மர்மம் ........

    பதிலளிநீக்கு
  12. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
    '//நான் செத்துப் பொழச்சவன்டா!' என்று பாடியபடி உள்ளே பிரவேசித்தேன். //
    உங்கள் அனுபவ பகிர்வு சிரிப்பை வரவழைத்து விட்டது. ஆனால் அன்று உங்கள் வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்து இருப்பார்கள்.

    //எக்ஸ் தன்னுடைய விரலில் போட்டுக்கொண்டிருக்கும் மோதிரத்தைக் கழற்றி, " செலவுக்கு வேண்டுமானால் இந்த மோதிரத்தை வைத்துக்கொள்ளுங்கள் " என்று கூற, மேலும் குழப்பநிலை நீடித்தது. //

    எகஸ் அவர்கள் அவசரத்திற்கு உதவும் நல்ல மனம் உடையவராக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எகஸ் அவர்கள் அவசரத்திற்கு உதவும் நல்ல மனம் உடையவராக இருக்கிறார்.// உண்மை.

      நீக்கு
  13. //பிளாக் மெயில் செய்பவரைக் கொன்றுவிடு.

    ஆனந்துக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்று தோன்றியது.//
    மிரட்டுபவர் யார் என்றே தெரியவில்லை இதில் எப்படி கொல்வது?

    பதிலளிநீக்கு
  14. //நாகப்பட்டினம் அல்லது நாகப்பட்டணம் என்று எழுதுவதுதான் சரி என்று கூறினார். பட்டி என்று எழுதினால் 'னம்' என்று முடியும். பட்ட என்று எழுதினால் 'ணம்' என்று முடியும்// Point noted, thanks.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!