வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தொலைந்து போனவர்

 அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது சற்று தூரத்திலிருந்து பார்த்தபோதே தெரிந்தது.

"சரி..  சீக்கிரம் நடந்துட்டு வா" என்று மழை 'சற்றே விலகி இரும் பிள்ளாயாய்' இருக்க, நடைப்பயிற்சிக்கு தேங்கி இருந்த மழைத்தண்ணீரில் சில இடங்களில் கால் வைத்தும், இடம் இருக்கும் இடங்களில்  ஜாக்கிரதையாகவும் நடந்த போதும் எதிரே நின்றிருந்த அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.  நீர் நிலைகளை நான் தாண்டுவதைத்தான் வேடிக்கை பார்க்கிறார் என்று நினைத்தால் அருகில் நெருங்கியதும் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

கால் வைக்க இருக்கும் தடைகளை பொறுத்து நான் அவர் அருகேதான் அடுத்த அடி வைக்க வேண்டியிருந்தது,.  தள்ளி நிற்க மாட்டாரோ மனுஷன்?  அவ்வளவு கிட்டத்தில் என்னைப் பார்த்து கேட்டார். 

"அனுக்ரஹா பிளாட்ஸ் எங்கே இருக்கு?"

கலர் வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்தார்.  கைகளை பின்பக்கமாகக் கட்டிக் கொண்டு நின்றிருந்தார்.  கண்களில் மிக லேசான கவலை. இன்னமும் லேஸாக தூறிக் கொண்டிருந்தது.

"தெரியலையே...  ஏன், என்ன விஷயம்?"  எனக்கு என் பக்கத்து பிளாட் பெயரே சட்டென நினைவுக்கு வராது!

"அங்க போகணும்"

இதை எதற்கு என்னிடம் சொல்கிறார்?  போகவேண்டியதுதானே?  

"நீங்க யாரு?  ஏன் என்னிடம் கேட்கறீங்க?"  அங்க யாரு இருக்கா?"

"எம்மவன் இருக்கான் அங்கதான்...  நான் வீட்டுக்கு போவணும்"  ஏதோ நான்தான் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறா மாதிரி...

"தடம் மாறி வந்துட்டேன்"

இதற்குள் தாண்டிச்சென்ற இருவரும், தள்ளி நின்ற இருவரும் அருகில் கூடிவிட்டனர்.

"என்னையும் கேட்டாரு.. தெரியலேன்னு சொன்னேன்" என்றார் ஒரு தள்ளி நின்றவர்..

என்ன ஒரு பெருமையான பொறுப்பில்லாத ஸ்டேட்மென்ட்?  

ஒரு தாண்டிச் சென்றவர் மறுபடி அவர் எங்கே செல்லவேண்டும் என்று முதலிலிருந்து விவரம் கேட்டுக்கொண்டு உதட்டைப் பிதுக்கினார்.

சற்று நேரம் அவருடன் உரையாடியதில், ஏதோ ஒரு சிற்றூரிலிருந்து மகன் வீட்டுக்கு சென்னைக்கு வந்திருக்கிறார் அவர்.  மகன் ஏதோ வேலையாக வெளியூர் சென்றிருக்க, காலையில் காபி குடித்தால்தான் கக்கா வரும் கொள்கை வைத்திருந்த அவர் வீட்டில் எல்லோரும் தாமதமாக எழுவதால், காலை காபி சாப்பிட ஊர் நினைப்பில் டீக்கடை தேடி வந்திருந்திருக்கிறார்.  அவர் நினைத்தது போல அருகில் கடையேதும் இல்லையென்பதோடு, இருந்த கடைகளும் திறக்க ஏழு எட்டு மணியாகும் என்றதும், விசாரித்துக்கொண்டு சற்று தூரத்தில் இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி இருந்த தெருவில் திறந்திருக்கும் கடை நாடி வந்து காபித்தண்ணி குடித்து விட்டு திரும்பினால், எந்த திசையில் வந்தோம் என்று தெரியவில்லை, எங்கு செல்ல வேண்டும் என்று நினைவில்லை...  வந்த வழி மறந்து போச்சு...

'கழுத..  எல்லா எடமும் ஒரே போல இருக்குது'  

குத்து மதிப்பாக குண்ட்ஸாக ஒரு திசையில் நடந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்.  இதற்கு மேலும் நடந்து  தூரமாக தொலைய வேண்டாம் என்று இங்கேயே நின்று விட்டார்.

அடையாளம் சொல்லச் சொல்லி கேட்டால் திருப்பதியில் மொட்டை போட்டவரைத் தேடும் அனுபவம்தான்.  தெருப்பெயர், நம்பர் எதுவும் தெரியவில்லை.  'பேஷ்..  பேஷ்...  ரொம்ப நன்னாயிருக்கு போங்கோ....'

இங்கேயா, முனுசாமி, கோவிந்தசாமி, நாராயணா, ப்ளூமூன், எல்லோ சன் என்று எல்லா பெயரிலும் பிளாட்கள் இருக்கின்றன...

நடுவில் நின்று எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்தேன்.  அவரை சரியாக கரை சேர்ப்பது எங்கள் கடமை என்பது போல எங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.  ஒவ்வொரு தெருவாகத் தேடினால் எப்படியும் இரண்டு மூன்று மணிநேரத்தில் கண்டு பிடித்து விடலாம்!  சுற்றி வந்த பாதை சுருக்கமாகத்தானே இருந்திருக்க வேண்டும்?

போதாக்குறைக்கு யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று யாரையும் எழுப்பாமல் கதவைப் பூட்டி சாவியைக் கையில் வைத்திருக்கிறாராம்.


"மருமவ வேலைக்குப் போவணும்...   வெள்ளென கெளம்பிடும்.... நான் போய்த்தான் கதவத் தொறக்கணும்..  ஏன் பூட்டி இருக்குன்னு பயந்துடுவாவோ..."

"ஃபோன் பண்ணி அவங்களையே கேளுங்களேன்..."  பால் விநியோகம் செய்து திரும்பிய கவாஸ்கர் யோசனை சொன்னார். 

"செல் கொண்டு வரலையே..."

"அதுசரி...   அப்புறம் எப்படி...  சரி நம்பர் சொல்லுங்க..  நாங்க எங்க செல்லுலேருந்து கூப்பிட்டு பார்க்கறோம்...  வெவரத்தைச் சொல்லி பயப்பட வேண்டாம்னு சொல்லி இடம் கேட்போம்..  அடையாளம் சொல்லுவாங்க இல்லே..."

"ஃபோன் நம்பர்லாம் அப்படி சொல்லத் தெரியாதே..."

"எளுதி வச்சிருக்கீயளா?"  

2"வச்சிருந்துதான் என்ன செய்ய?  களுத...  வீட்டுல இல்ல இருக்கு...  எடுத்துட்டு வரல இல்லா?  தொலைஞ்சு போவேன்னு சோசியமா தெரியும்?"

"வீட்டுலேருந்து கிளம்பி எத்தனை தெரு திரும்புனீங்க?" என்று கேட்டேன்.

யோசித்து ஏதேதோ சொன்னார்.  அந்த நேரத்துக்கு அந்த ஏரியாவில் திறந்திருக்கும் ஒரே டீக்கடை எது என்று எனக்குத் தெரியும்.

பால்காரரை அழைத்தேன்.

"நீங்கதானே இந்த ஏரியா பால் சப்ளை"  நீங்க பார்த்திருப்பீங்களே.."

"நான் இந்தப் பக்கம் பார்த்துக்கறேன்..  நம்ம பசங்கள்ல ஒருத்தன்தான் அந்தப் பக்கம் எல்லாம்.."

"டீக்கடைக்கு அந்தப் பக்கம் உங்க பசங்கள்ல பால் போடறது யாரு" என்று கேட்டேன்.  

"அவன் இன்னும் பால் போட்டு முடிச்சு வரலை" என்றார் கவாஸ்கர்.

"நல்லதாய் போச்சு...அவன்கிட்ட செல் இருக்கா?"

"இருக்கு"

அவனுக்கு ஃபோன்பண்ணி அனுக்ரஹா பேர் சொல்லி, எங்க இருக்கு தெரியுமான்னு  கேளுங்க"

ஃபோன் செய்தார்.  கேட்டார்.  விவரம் உடனே தெரிந்தது போலும்.  ஃபோனை வைத்துவிட்டு வழிதவறி வ்நதவருக்கு வழி சொல்லத் தொடங்கினார்.

"ஏங்க..  மறுபடி அவர் காணாம போவறதுக்கா?  டூ வீலர் வச்சிருக்கீங்க இல்லே...  பக்கம்தானே..  கொண்டு விட்டு வந்துடுங்க..  இல்ல வண்டிய கொடுங்க..  நான் விட்டுட்டு வர்றேன்"  - நான் வண்டி எடுத்து 30 வருடங்கள் ஆகின்றன!

"வேணாம் ஸார்...  நானே விட்டுட்டு வந்துர்றேன்.."  சின்னச் சிரிப்புடன் அவரே கிளம்பினார்.

வேஷ்டி அணிந்திருந்த அந்த வழி தவறியவர் கவாஸ்கரின் TVS 50 ன் இருபுறமும் கால் போட்டு அமர்ந்து கொள்ள, வண்டி கிளம்பியது.  யாரையும் திரும்பிப் பார்க்காமல் ஒரு நன்றி கூட சொல்லாமல் கிளம்பினார் அவர்.

தொடர்ந்தது என் நடைப் பயிற்சி.

================================================================================================


நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


- வயநாடு சூரல்மலையில் வினோத் என்பவர் வளர்த்து வந்த கின்கினி என்கிற வளர்ப்பு கிளியுடன் சகோதரி வீட்டுக்கு சென்றபோது கூண்டுக்குள் இறக்க்கைகள் பிய்ந்து போகும் அளவு அது பதற்றமடைந்ததை பார்த்து அண்டை வீடுகளுக்கும் தகவல் சொல்லி பல குடும்பங்கள் தப்பித் பிழைத்திருக்கின்றன.  அவர்கள் வீடுகள் எல்லாம் அடியோடு அடித்துச் செல்லப்பட்டு விட்டனவாம்.

மேல்முத்தானுார் அரசு உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளரும், சமூக அறிவியல் ஆசிரியருமான ரேவதி, மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்து, தங்கள் பகுதியில் கள ஆய்வில் ஈடுபடும்படி உற்சாகப்படுத்தி உள்ளார். காவிரிப்பட்டனம் என்ற ஊரைச் சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவி சவுந்தர்யா, நிலத்தில் விவசாயப் பணி மேற்கொண்டபோது, புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு கைக்கோடரிகளை கண்டெடுத்தார் மாணவி சவுந்தர்யா கண்டெடுத்த கற்கோடரி, செல்ட் வகையைச் சேர்ந்தது. இதன் காலம், பொதுயுகத்திற்கு முன் 6,000 முதல் 2,000 ஆண்டுக்கு இடைப்பட்டதாக இருக்கும்.

சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா என்பவர் தான் படித்த ஐ.ஐ.டி.,க்கு ரூ. 228 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.  கடந்த 1970ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் ஜெட் புரபல்சனில் முதுகலைப் பட்டம் (ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்) பெற்றவர். அத்துடன் 1980ம் ஆண்டில் ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார்.  அமெரிக்காவில் ஹாஃப்மேன் குழும நிறுவனங்களில் குழுமத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியனார்.   இந்நிலையில் தான் பயின்ற சென்னை ஐ.ஐ.டி.,க்கு ரூ. 228 கோடி நன்கொடை வழங்கினார். அகில இந்திய கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை இது என கூறப்படுகிறது.மேலும் 54 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை ஐ.ஐ.டிக்கு கிடைத்த மிகபெரிய நன்கொடை இது என கூறப்படுகிறது.

இந்தியாவில் நகர்புற பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் விறகு அடுப்பில் சமைக்கும்பொழுது வரும் புகை நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாக இருந்தது. இப்பொழுது சுற்றுப்புற மாசு, காற்றோட்டமில்லாத வீடுகள், இவற்றோடு நகர்ப்புற பெண்களிடம் அதிகரித்து வரும் சிகரெட், மற்றும் இ-சிகார் புகைக்கும் பழக்கமும் முக்கிய காரணங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

- பீகாரில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பையன் மூன்றாம் வகுப்பு மாணவனை துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளித்ததோடு ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்று விசாரிக்க தொடங்கியிருக்கின்றனர்.

- பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தில் மரத்தில் ஏறும் சிறுத்தை ஒன்றை புகைப்படமெடுத்த கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம். பி. பாடலின் மகன் துருவ், அந்த சிறுத்தையின் இரு விழிகளும் ஒன்று பச்சை நிறத்திலும், மற்றொன்று பழுப்பு நிறத்திலும் இருப்பதை கவனித்திருக்கிறார். இப்படிபட்ட அமைப்பு மிகவும் அபூர்வமானது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- ஹைதராபாத்: குடித்து விட்டு கார் ஓட்டிய ஸ்ரீநாத் என்னும் கல்லூரி மாணவன் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியதில் பைக்கின் பின் சீட்டில் அமர்ந்திருந்த ஏழு வயது சிறுவன் ஸ்தலத்தி
லேயே மாண்டான். அவன் தந்தை தலையில் பலத்த காயமடைந்தார். சுற்றிலும் இருந்தவர்கள் கார் ஓட்டிய மாணவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

- பெங்களூர்: கோவிட் பாதிப்பிற்கு பிறகு ரத்த தானம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதால் டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் இந்த சமயத்தில் பிளேட்
லெட் தேவையை ஈடு செய்ய முடியாமல் ரத்த வங்கிகள் திண்டாட்டம்.

- பெங்களூர்: தொழில்நுட்ப கோளாறுகளால் விமான நிறுவனத்தின் வெப்சைட் திறக்காததால் அதன் கால்சென்டரை தொடர்பு கொண்டு விமான டிக்கெட் புக் பண்ண நினைத்தவர் தவறான நபரிடம் சிக்கி ரூ 3 லட்சம் இழந்திருக்கிறார். டிக்கெட் புக் பண்ணிக் தருவதாக கூறியவரிடம் இவர் கிரெடிட் கார்ட் பின் நம்பர், CVV நம்பர் ஆகியவற்றை தெரிவித்ததால் இவர் கணக்கில் இருந்த பணம் களவாடப்பட்டிருக்கிறது.

- பெங்களூரு: தினமும் காலையி
ல் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பஸ் டிரைவர்களில் 26 பேர்கள் மது அருந்திவிட்டு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

- ஹைதராபாத்: 20 வருடங்களுக்கு வங்கியில் 50 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி, இறந்து விட்டதாக கூறப்பட்டவர் தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தில் (போலி) சாமியாராக வாழ்வது தெரிய வந்திருக்கிறது. இத்தனை வருட தலைமறைவு வாழ்க்கையில் அவர் போட்ட பல வேடங்களில் சாமியார் வேடமும் ஒன்று.- Truth is stranger than fiction.

- பெங்களூர்: இரவு 11 மணிக்கு மேல் உணவகங்கள், பார், பப் இவைகளில் மது வழங்கப்படக்கூடாது என்னும் சட்டம் திருத்தப்பட்டு நள்ளிரவு ஒரு மணி வரை மது வழங்கலாம் என்னும் சட்டம் அமலுக்கு வருகிறது- என்ன செய்வது? அறிவித்திருக்கும் இலவசங்களை வழங்க பணம் வேண்டாமா?

பிற்சேர்க்கை :


=================================================================================================

வானொலியில் அல்லது தொலைக்காட்சியில் கடைசி நிமிட மாறுதல் என்று ஏதாவது செய்வார்கள்.  குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிலாக என்று பெரிய நிகழ்ச்சிக்கு பதிலாக 'டொய்ங்... டொய்ங்' என்று நிலைய வித்வானை வாசிக்க விட்டு விடுவார்கள்.  

இங்கு தலைகீழாய் ஒரு மாறுதல்.  இலுப்பைப் பூவாய் நான் அவ்வப்போது என் எழுத்தை கவிதை என்று ஏமாற்றி பகிர்ந்து வருவது வழக்கம்.  இன்றும் அப்படி ஒன்றை இங்கு ஒட்டியிருந்தேன்.  

செவ்வாய்க்கிழமை சிறுதொடர்கதை பதிவுக்கு அப்பாதுரை பெயரைப் பார்த்ததும் வந்த மோகன்ஜி அண்ணா, ஜீவி ஸாரின் வேண்டுதலை ஏற்று, தானும் இங்கு அவ்வப்போது எழுதுவதாய்ச் சொன்னதோடு நிற்காமல் முதல் தவணையாய் ஒன்றை உடனடியாக அனுப்பியும் விட்டார்.  அதுதான் இந்த வாரம்.

நன்றி மோகன்ஜி அண்ணா...  தொடர்ந்து ஆதரவு தொடர வேண்டுகிறேன்.  எபிக்கென்று ப்ரத்யேகமாய் அனுப்ப வேண்டுகிறேன்.


செல்வமே! கோதாய்!!

அத்துழாய் கொண்ட பேறோ! விட்டுணு
சித்தனும் பெற்ற வரமோ? இத்தரை
செய்த பாக்யம் அம்மே! வந்தனை நீ
கொய்திடா திவ்ய பூவாய்.

நிலமகளே கோதையென  பூத்தொடுக்க வந்தாயோ?
தலைமகளாம் தமிழுக்கு என வளர்ந்தாய் - சொலவே
விடுபட்ட வேதமாம் பாவை பாடவோ 
புறப்பட்ட தமிழ்ப் பாவாய்.

பட்டர் பிரான் பயிற்றுவித்த பாடமெலாம்
இட்ட முடன் பயின்றாய் - தொட்டவுடன்
பாயும் இராம கணையாய் சூட்டிகையின்
சேயும் நீயானாய் வல்லி.

திருமகள் போலும் கருணை- பொறுமை
நிலமகள் ஈந்த சீர்தான் ; குலமகள்
நப்பின்னை யன்ன அன்பும் ஓருருவாய்
இப்புவிக்கே வந்த தாயே!




செங்கீரை சப்பாணி அம்புலி அம்மானை
சிங்கார ஊசலென சீராட்டோ;  மங்காத
பிள்ளைத் தமிழ் சொன்னாரோ? நின்தமிழ்
அள்ளக் குறையா அமுது. 

பூமாலை கட்டத் தொட்ட கைமணம்- நீ
தோள்மாலை சூட மேனிமணம்- பாமாலை
சொன்ன காலை தமிழ்மணம் யாவுமே
அண்ணல் இட்டம் அறி.

கிளியென்ன தோழமையோ? ஓயாது பேச
துளியேனும் வாய் சளைக்காதோ - நெளி
பாம்பணை அறிதுயில் ரங்கனைச் சேர்கையில்
வேம்பனை இடையூறோ கிளி?

தமிழ்ப் பேசும் மகவெலாம் ஆண்டாளே!
கமழ் மாலைசேரும் உன்தோளே- அமிழ்த
மொழி பாட்டெலாம் உன்பாட்டே! கோதாய்
அழிவிலா பக்தி நல்கு.

சித்திரம்: அன்பு நண்பன் தேவா
ஆக்கம்: மோகன் ஜி

===============================================================================================

சிவாஜியும், பத்மினியும்  - இணையத்தில் ரசித்துப் படித்தது...


நடிகர்திலகத்தோட முதல் காமெடி படம் எது தெரியுமா ? கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
அந்த முதல் காமெடி படத்துல சிவாஜிக்கு ஜோடியா நடிச்சது பத்மினி
சிவாஜியோட முதல் பட விநியோகம் எது தெரியுமா ?அமரதீபம்…  இந்த படத்துலேயும் நடிச்சவர் பத்மினி
சிவாஜியோட முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…  இதுலயும் நடிச்சிருப்பார் பத்மினி.
சிவாஜி செஞ்ச முதல் இரட்டை வேட படம் உத்தமபுத்திரன்…  இதுலயும் பத்மினிதான்
தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம் எதுன்னு தெரியுமா ?வீரபாண்டிய கட்டபொம்மன்.இதுலயும் பத்மினி நடிச்சிருப்பாங்க.
ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது வாங்குன படம் வீரபாண்டிய கட்டபொம்மன்…அப்ப சிவாஜியோட அயல்நாட்டுக்கு கூட போனவரும் பத்மினி.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிச்ச முதல் படம் எது தெரியுமா ? வியட்நாம் வீடு...
இதுலயும் ஜோடியா நடிச்சிருப்பாங்க பத்மினி .
இப்படி சிவாஜியோட பல முதல் முதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல  பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு.
ஒவ்வோரு நடிகருக்கும் ஒரு நடிகை பொருத்தமான ஜோடியா அமைஞ்சிருக்கும்.இந்த காலத்துலே இதை கெமிஸ்ட்ரி அப்படிங்கறாங்க. சிவாஜி எப்படி சினிமாலே டாப்போ அதே மாதிரி முதல் டாப் கெமிஸ்ட்ரி ஜோடின்னா சிவாஜி பத்மினிதான்.
சம்பூர்ண ராமாயணம் பட ஷுட்டிங்குக்காக ஓஹேனக்கல் போயிருந்தாங்க.ஷூட்டிங் முடிஞ்சதும் எல்லாரும் ரெஸ்ட் எடுக்க போயிடுவாங்க.  சிவாஜியோ துப்பாக்கியும் கையுமா வேட்டைக்கு கிளம்பிருவார். நடு ராத்திரி வரைக்கும் வேட்டையாடிட்டுத்தான் வருவார்.ஒரு நாள் முயல் கிடைச்சிருக்கு.அதை அப்பவே பத்மினிக்கு கொண்டு வந்து கொடுத்தார் சிவாஜி.
ஆரம்பகாலத்துல சிவாஜியை கணேஷ்னுதான் பத்மினி கூப்பிடுவார்.சிவாஜி பத்மினியை எப்பவும் பப்பின்னுதான் கூப்பிடுவார்.  உற்சாகமா இருந்தார்னா பேப் அப்பிடின்னு கூப்பிடுவார்.
1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தாங்க.ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில வர்ற ‘ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ங்கற பாட்டு இடையிலே சிவாஜியோட கண்ணை பறிச்சுட்டாங்கறத பாத்த பின்னாலே ஜோடியா நடிச்ச பத்மினி அதை பாத்து ஒரு ஆக்ரோசமா சத்தம் போடணும்.அது வரைக்கும் சாதாரணமா நடிச்சுட்டு இருந்தவங்க இந்த ஷாட் வந்தப்போ 'வீல்'னு அலறுவாங்க.ஸ்டுடியோவே அசந்து போச்சு.இது பத்தி சிவாஜி ரொம்ப இயல்பா இருக்கு பப்பி ,நல்லா இருந்துச்சு அப்படின்னு பாராட்டியிருக்கார்.சிவாஜி சொன்னதை பத்மினி, அவருகிட்ட இருந்து லேசிலே பாராட்டு வாங்க முடியாது.  அவரே பாராட்டிட்டார்னா அதுக்கு மேலே பெரிய பாராட்டு எதும் இருக்க முடியாதுன்னு சொல்லி இருக்காங்க.மத்தவங்க
பத்மினியோட இந்த நடிப்பை பாராட்டுனப்போ, இதுக்கெல்லாம் காரணம் சிவாஜிதான்.அவர்கிட்ட இருந்துதான் எப்படி நடிக்கணுமின்னு நான் கத்துகிட்டேன்னு சொல்லியிருக்காங்க.
பத்மினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கறப்போ சிவாஜி , ‘நான் நாடகத்தில் நடிச்சு பழகுனவன். முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டறதுக்கு கத்து பேர் வாங்குனவள். உனக்குச் சொல்லிக் கொடுக்கறதுல எனக்கு என்ன சிரமம்?’னு சொல்லி இருக்கார்.
சிவாஜி காலையிலே ஏழு மணிக்கெல்லாம் வந்து மேக்கப் எல்லாம் போட்டு தயாரா இருப்பாரு.நாங்க லேடீஸ் இல்லையா எவ்வளவு வேகமா மேக்கப் போட்டு ரெடியானாலும் 10 மணிஆயிடும்.நான் மேக்கப் போட்டு வர்றப்போ அவரு தயாரா உக்காந்து இருப்பார்.அதை பாத்து எனக்கு வெட்கம் வந்துடும்.
ஒரு டஜன் படங்கள்ல சிவாஜி நடிச்சுட்டு இருப்பார் .ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி கதைகள்.நானும் அப்ப பல அவரோட பல படங்கள்ல நடிச்சிட்டிருப்பேன்.ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் எப்படி குழப்பமில்லாமே அதே சமயம் ரொம்ப சிறப்பாகவும் எப்படி மாறி மாறி கரெக்ட்டா பண்றார்னு ரொம்ப ஆச்சர்யமாஇருக்கும்.  அவரு ஒரு பிறவி நடிகர்.
சிவாஜியோட முக்கியமான பல படங்கள்ல பத்மினி நடிச்சிருந்தாலும் சிவாஜியோட கனவுப்படமான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல பத்மினி நடிச்சிருந்தும் சிவாஜிக்கு ஜோடியா நடிக்கலே.
எல்லாப் படத்துலேயும் சிவாஜிக்கு அடங்கி நடிக்கிற மாதிரி நடிச்ச பத்மினி லட்சுமி வந்தாச்சு படத்துலே தன்னோட அதிகாரத்தை காட்டற மாதிரி கேரக்டர்லே நடிச்சிருப்பார்.
பிரபலமான ஜோடியா நடிச்சிகிட்டுருந்த காலகட்டத்துலேயே சிவாஜிக்கு சித்தியா,அண்ணியா மங்கையர்திலகம், எதிர்பாபாரதது படங்கள்ல நடிச்சிருந்தார் பத்மினி.இது எந்த காலகட்டத்துலேயும் எந்த நடிகையும் செய்யாத விஷயம்.
தீபம் படத்துலேயும் ,ராமன் எத்தனை ராமனடி படத்துலேயும் ஒரே ஒரு சீன் மட்டும் நடிச்சிருந்தார் பத்மினி.
ஜோடியா நடிச்ச நடிகைள்ல சிவாஜிய அடிக்கற மாதிரி காட்சியிலே நடிச்ச ஒரே ஒரு நடிகையும் பத்மினிதான்.எதிர்பாராதது படத்துலே சிவாஜியை அறையோ அறைன்னு நிஜமாவே அறைஞ்சு நடிச்சிருப்பார் பத்மினி.
38 வயசு ஆன பின்னாலே பத்மினி சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாங்க.
A.P.நாகராஜன் தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக கூப்பிட்டப்போ அவர் பத்மினிகிட்ட சொன்ன விஷயம் : மோகனாம்பாள்னா பத்மினி,சிக்கல் சண்முகசுந்தரம்னா சிவாஜி,நீங்க இல்லாமே இந்த படத்தை எடுக்க மாட்டேன்னு சொன்னதை பாத்து அந்த படத்துலே நடிச்சாங்க பத்மினி.
1979 ஆம் வருஷம் மியூசிக்அகாடமியிலே பத்மினி ராமாயணத்தை ரெண்டுநாள் மேடை நாட்டிய நாடகமா நடத்துனாரு.நாடகம் நடக்கையிலே திடீர்னு மேடைக்கு கமலாஅம்மாவோட சிவாஜி வந்தார்.வந்தவரு ஒரு ஆள் உயரத்துக்கு ஒரு மாலையை தானே மேடைக்கு தூக்கிட்டு வந்து பத்மினிக்கு போட்டாரு.இது பத்மினிக்கே ஆச்சர்யமாத்தான் இருந்துச்சு.ஏன்னா சிவாஜி நாடகம் பாக்க வர்றதைப்பத்தி பத்மினிகிட்டே சொல்லாமே ப்ளசண்ட் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சிவாஜி அப்படி செஞ்சார்.
ஒலிம்பிக் விளையாட்டுக்களை பாக்கறதுக்காக 1996 வாக்குலே சிவாஜி அமெரிக்கா போனாரு.சிவாஜி அமெரிக்கா வர்றார்னு பத்மினி ஏர்போட்டுக்கு வந்து சிவாஜியை பாத்தார்.அப்ப பத்மினி ஹார்ட் ஆபரேசன் எல்லாம் பண்ணி தோற்றத்துலே கொஞ்சம் மாறி இருந்தாங்க.சிவாஜிக்கு அடையாளம் தெரியலே.பத்மினின்னு தெரிஞ்ச பின்னாலே கண் கலங்கிட்டாரு.
அமெரிக்காலே இருந்து பத்மினி எப்ப தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அன்னை இலத்துக்கு வராம இருக்க மட்டாங்க.சிவாஜியோட பிறந்தநாள் கல்யயாண நாள்னு எந்த விசேஷமா இருந்தாலும் போன்லயாவது கூப்பிட்டு வாழ்த்து சொல்லிடுவார் பத்மினி.ஆனா சிவாஜிக்கு பத்மினியோட பிறந்த நாள் கூட தெரியாது.
மிக பிரபலங்களோட டாப்டென் மூவி லிஸ்ட்டை பாத்தா ஒல்வொருத்தரோட லிஸ்டும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.  ஆனா பெரும்பான்மையா எல்லோரோட லிஸ்ட்டிலேயும் தில்லானா மோகனாம்பாள் இருக்கும்.
பத்மினியோட டான்சுக்கான டாப்பான படமா தில்லானா மோகனாம்பாளை சொன்னாலும் அதை விட பத்மினியை ரொம்ப ஆட வெச்சது திருவருட்செல்வர் படத்துலே வர்ற மன்னவன் வந்தானடி பாட்டுத்தான்.
தில்லானா மோகனாம்பாளில் ஒட்டுமொத்தமாக கொட்டுன கடும் உழைப்பை மிஞ்சுகிற மாதிரி, ஒரே ஒரு நாட்டியத்துக்காக பத்மினி ஆடுனது திருவருட்செல்வரில் இடம் பெற்ற ‘மன்னவன் வந்தானடி…’ பாடல் காட்சிக்குத்தான்.திரையில ஏறக்குறைய ஏழு நிமிடங்கள் வரும்.

‘மன்னவன் வந்தானடி…’ பாடல பத்தி பத்மினி சொன்னது:

‘இந்தப் பாட்டுல நீங்க ஒன்பது உருவங்களுக்கு முன்னால் நடனம் ஆடணும்னு ஏ.பி.என். சொன்னப்போ உற்சாகமாக இருந்துச்சு. ஷூட்டிங்கின்போது அதன் சிக்கல் புரிஞ்சது.வண்ணச்சித்திரமான திருவருட்செல்வரில், ஒவ்வொரு பதுமை முன்பும் நான் வெவ்வேறு ஆடைகளில் ஆட வேண்டும். கேட்பானேன்?
சரியான சோதனை. பத்து நாள்கள் இடைவிடாமல் உடை மாற்றி மாற்றி ஆடியதில், நான் அல்லாடிப் போனேன். சிக்கலான மேக் அப் வேறு. பாட்டில் சில அடிகள் படமானதும், நான் புதிய காஸ்ட்யூமில் வருவேன். அடுத்த வரிகளுக்குத் தொடர்ந்து ஆடுவேன். அதுபோல் ஒன்பது தடவைகள் நடந்தது.
இனிமையான கர்நாடக இசை நாதமும், அதற்கேற்ப எனது ஆடலும் பிரம்மாண்ட தர்பாரில் நடிகர் திலகம் வந்து நிற்கும் கம்பீரமான தோற்றமும், என்றும் என் மனத்தை விட்டு அகலாது. அதற்காக நான் பட்ட பாடு அம்மாடி! அந்த மாதிரி வேறு எந்தப் பாட்டுக்காவது நான் கஷ்டப்பட்டிருப்பேனா... சந்தேகம்தான்’.னு பத்மினி இந்த பாட்டுக்கு ஆடுனதைப் பத்தி சொல்லி இருக்காங்க.
சிவாஜி பத்மினியோட முதல் படம் பணம். கடைசி படம் லட்சுமி வந்தாச்சு.

- செந்தில்வேல் சிவராஜ் -

===================================================================================.


என் பெயர் கமலா புத்தகமாக வந்தபோது அதில் இடம்பெற்றுள்ள பதிப்புரை...  முதலில் கதிரில் இந்தத் தொடர் 'கமலா சொன்ன கதைகள்' என்று வந்ததாக நினைவு.  பின்னர் பெயர் மாற்றி விட்டார்கள் என்றும் நினைவு.  ஆஷாட பூதித்தனம் என்று சொல்லும் பதிப்பகத்தாரின் கடைசி வரிகள்தான் அப்படி இருப்பதாக எனக்கு தோன்றியது. இந்தக் கதை நன்றாக வியாபாரம் ஆகும் என்று கணக்கு பண்ணி பிரசுரித்து விட்டு அப்புறம் என்ன டயலாக்?!!

என் பெயர் கமலா என்ற இவ்வரலாறு  தினமணி கதிரில் தொடர்ச்சியாக புஷ்பா தங்கதுரை அவர்களால் எழுதப்பட்டது.

மனித சமுதாயத்தின் கேவலமான தசைப்பசிக்காக பலியாகிய ஒரு இளம் அலைப்  பெண்ணின் சோக வரலாறு இந்நூல்.  நாவலோ கதையோ அல்ல, இது உண்மைச் சம்பவம்,

 எந்த பழி பாவத்திற்கும் அஞ்சாத விபச்சார விடுதி நடத்துபவர்கள், புதிதாக பெண்களை கடத்திக் கொண்டு வந்து, அவர்களை கொடுமையாக அடித்து நொறுக்கி விபச்சாரத்துக்கு  உட்படுத்துவதாக கமலா சொல்வது, இந்த நாகரீக உலகத்திலும் நடக்கிறதா என்று ஐயப்பாட்டை தான் நமக்கு எழுப்பும். 

இறுதியில் கமலா ஆண் வர்க்கத்தையே சாடுகிறாள்; சபிக்கிறாள்.  கோழைகள் என்று வசைமாரி பொழிகிறாள். 

இவ் வரலாற்றின் இடையிலே ஆண் வர்க்கத்தின் காம வேட்கை காரணமாக தங்கள் உயிரையே விட்ட பல லைப் பெண்களை சந்திக்கிறோம்.  இவ் வரலாற்று புதினத்தை பற்றி தினமணி கதிரில் வாசகர்கள் இடையே பெரிய சர்ச்சையே கிளம்பிவிட்டது,  வெகு பலர் கமலாவின் துயரக் கதை படித்து உள்ளம் கசிந்தார்கள்.  மிகச் சிலரே இது காம இச்சையை தூண்டும் நூல், ஒளிவு மறைவு இன்றி கமலா இப்படியெல்லாம் கூறலாமா என்று ஆஷாட பூதித்தனமாய் ஒப்பாரி வைத்தனர்.  எனினும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் அனுதாப உணர்ச்சியை கமலா பெற்று இருக்கிறாள்.  

எனவே வாசகர்கள் இடையே பெரிய பரபரப்பை உண்டாக்கிய கமலாவின் வரலாற்றை 'என் பெயர் கமலா' என்ற நூலாக உங்கள் கரங்களில் தவழ்கிறது, 

விபச்சார விடுதியில் இருந்து தப்பி சென்னை வந்த கமலா, மேலும் தன் வரலாற்றை கூறுகிறாள்.  அது 'இப்போது கமலா' என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக எங்கள் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் வரவேற்கும் என்று நம்புகிறோம். நவ இந்தியாவை உருவாக்கும் நாம் இம்மாதிரியான கேவலங்கள் இனியும் நடைபெறவிடாமல் தடுப்போமாக...  

===================================================================================================



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வீரப்பன் வரலாறு புத்தகத்திலிருந்து....

வீரப்பனிடமிருந்த மக்களுக்கு உதவும் குணம் காடுகள் விலங்குகள் பற்றிய தெளிவான அறிவு எந்த ஒரு செயலிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது கிராமப்புற மக்களிடமிருந்த அதே நேர்மை​, தன்னை பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் முழுமையான வழிபாடு கள்ளம் கபடம் இல்லாத வெள்ளந்தியான பேச்சு என வீரப்பனின் குணங்கள் டெபுட்டி எஸ்பி மாதேவசாமியை வெகுவாக கவர்ந்தன.  - வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகத்திலிருந்து சில வரிகள்...

வீரப்பனை அவர் இவர் என்று குறிப்பிடுவதும் ஏகப்பட்ட கொலைகளை செய்துவிட்டு யானைகளை அநியாயமாக கொன்று விட்டு நாங்கள் என்ன பாவம் டா செஞ்சோம் தலைமறைவாக ​திரிய வேண்டியிருக்கிறது என்று அவர் சொன்னார் என்று எல்லாம் போடுறது எல்லாம் ரொம்ப ஓவர்.

===============================

12 வருஷங்களுக்கு முன் எழுதிய கவிதையாய் எடுத்துக் போட்டு இரண்டு நாட்களுக்கு முன் ஒன்று...





================================================================================

பொக்கிஷம்  :- 

வள்ளல் கிருஷ்ணசாமி ஐயரையும் அறியேன்; அனுஷம் என்கிற பெயரில் யார் எழுதினார்கள் என்பதையும் அறியேன்!


செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் பத்திரிகையில் ஆர்டிகிள் எல்லாம் எழுதி இருக்கிறார் என்பது எனக்கு செய்தி.

யார் இந்த பொற்கோ?  பொன்னை ஹேமம் என்றும் தங்கம் என்றும் சொல்லலாம்.  கோ என்பது அரசன், ராஜா, கடவுள், சாமி என்று சொல்லலாம்!  இதிலிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர் பெயர் ஏதாவது கிடைக்கிறதா?


1962 டிசம்பர் 9 ம் தேதியிட்டு கல்கியில் உள்ளே என்னென்ன இருந்தது?  பாருங்களேன்...


கென்னடியை சுட்ட ஆஸ்வால்ட்டை விசாரிக்கச் சென்ற போலீஸ்காரர் டி. பிட்டோவை சுட்டுக் கொன்றான் ஆஸ்வால்ட்.  குற்றமுள்ள நெஞ்சு.  அப்புறம் அந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு சேர்ந்த நிதி....

102 கருத்துகள்:

  1. ஐ ஐ டி-க்கு 228 கோடி நன்கொடை வழங்கிய மஹாபானுவானுக்கு
    இந்த வரி - அந்த வரியெல்லாம் (அதாங்க இந்த ஜிஎஸ்டி -- ஸிஎஸ்டின்லாம் சொல்றாங்களே) அதெல்லாம்
    உண்டான்னு தெரியலே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே இடத்துக்கு மொத்தமாக நன்கொடை வழங்குவதற்கு பதில் பிரித்துக் கொடுத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

      நீக்கு
  2. அட! ஆடிப்பூரம் ஸ்பெஷலா! பொன்வீதி போலவான விசால மனசு மோகன் ஜிக்கு. நினைத்தவுடன் கங்கைப் புனலாய் கவிதை பொங்குகிறதே! தமிழன்னை அருள் பெற்றவர். நன்றிஜி!

    பதிலளிநீக்கு
  3. நல்லவேளை அனுக்கிரஹா அப்பார்ட்மெண்ட்ஸ் என்ற பெயரையாவது பெரியவர் நினைவில் வைத்திருந்தாரே!..
    இங்கே வெளி நாட்டில் காலை - மாலை தனியே வாக்கிங் போகும் பொழுதெல்லாம் தெரு திருப்பங்களையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொம்டு வந்த வழியே பத்திரமாய் திரும்பி விடுவேன். பெரும்பாலும் துடைத்து விட்டாற்போன்ற நீண்ட தெருக்கள்.. கவலையில்லை. பழக்கமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  அது அவர்கள் வீட்டில் பேசிப்பேசி நினைவில் இருந்திருக்கும்.  நீங்கள் வெளிநாட்டில் கூகுள் மேப் போட்டுக்கொண்டு திரும்பி விடலாமே....

      நீக்கு
    2. ரோமிங் facility இல்லாததால் அது சாத்தியப்படாது, ஸ்ரீராம். ரோமிங் ஏர்டெல்லில் ஒரு நாளைக்கு ரூ.400/-றோ என்னவோ.
      கையில் மொபைல் இருக்கும். எதற்கு தெரியுமோ?. ஹி..ஹி.. எத்தனை ஸ்டெப்ஸ்
      நடக்கிறோம் என்ற கணக்கிற்கு. :))

      நீக்கு
    3. மகனின் அலைபேசி எடுத்துச் செல்லலாமே...   இந்த நடைக்கணக்கு..  எதிரில் நடையில் வரும் சில நபர்கள் செல்லும் கையுமாக அதைப் பார்த்த படியே நடப்பவர்கள் இருக்கிறார்கள்.  சிலர் அதில் ரீலிஸ் பார்த்தபடியே நடக்கிறார்கள்.  ஒருவர் நடந்து வருவார்.  செல் கையில் இருக்காது, நம் கண்ணில் படாது.  ஆனால் காதுக்குப் போகும் வொயர் தெரியும்.  கையை மெல்ல ஆட்டி, சிரித்து கோபமாக என்று பேசியபடியே வருவார்...  அவர் எதிரில் இருக்கும் உலகத்தைப் பற்றியே கவலைப்படாத ஜீவன். ஒருமுறை அவர் என்னைத் தாண்டும்போது ஐயோ .. என்றதும் சட்டென லேசாக பதறி திரும்பிப்; பார்த்தால் அப்போதும் நீலப்பல்லில்தான் பேசிக்கொண்டிருந்தார்.

      நீக்கு
  4. பெரியவரின் காணாமல் போகுதல் போன்ற சம்பவம் சில வருடங்களுக்கு முன் என் பக்கத்து வீட்டிலும் நடந்தது. பெங்களூரில் இருந்து வேலை மாறுதலாக வந்த பேங்க் ஆபீசர் தந்தை காணாமல் போனார். உங்கள் கட்டுரையில் இருப்பவருக்காவது அவருடைய பிளாட் பேராவது தெரியும். அவர் தனி வீட்டில் குடியிருப்பவர் என்பதால் வீட்டு எண், தெருப்பெயர் முதலியவை தெரியாது. தெரிந்ததெல்லாம் அவர் மகன் பெயர், வேலை செய்யும் பேங்க் (பேங்கின் கிளை போலும் தெரியாது, மொழியும் பழக்கம் இல்லை) அவர் மீண்டு வந்த கதை ஒரு பெரிய கதை.

    பெரியவர் தொலைந்தது பெங்களூர் ஆனதால் சிலராவது விசாரித்திருக்கிறார்கள். இதுவே அமெரிக்கா என்றால்?
    அங்கு ரோடில் நடப்பவர்கள் கிடையாது. நடப்பது எல்லாம் பூங்காக்களிலும், மாலிலும் தான்.

    தற்போது தோன்றும் இந்த கூகிள் மேப் வசதியை அனுக்ரஹா அபார்ட்மெண்டைத் தேட அப்போதே உபயோகித்திருக்கலாம்.

    ஒருமுறை நாங்கள் நடைப்பயிற்சிக்கு செல்லும்போது அபார்ட்மெண்ட்டின் பொது கதவின் சாவியை எடுத்துச் செல்ல மறந்து விட்டோம். போன் இல்லை. ஆக வெளியில் நிற்கும்படி ஆகிவிட்டது. அங்கு குடியிருக்கும் வேறு ஒருவர் தயவால் வீட்டிற்கு திரும்பினோம்.

    இந்த வாரம் குஷி கூடுதல் என்று தோன்றுகிறது. நிறைய கவிதைகள். புது கவிதை, மரபு கவிதை என்று. கவிதைகள் சிறப்பாக உள்ளன. ஆண்டாள் வெண்பா அவர் முன்பே எழுதி வைத்திருந்தது போல் தோன்றுகிறது.

    என் பெயர் கமலா ஒரு பிரபலமான தொடர்.
    இச்செய்தி அந்தக்காலத்தில் பிரபல மலையாள கவிஞர் கமலா தாஸ் சுய சரிதை எழுதியதை நினைவூட்டியது.

    கிருஷ்ணசாமி ஐயர் பற்றிய கட்டுரை கல்கி எழுதியது போல் தோன்றுகிறது.

    பொக்கிஷங்கள் நிறைவாக இருந்தாலும் கடி கிடைக்காமல் என்னவோ போல் இருக்கிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தற்போது தோன்றும் இந்த கூகிள் மேப் வசதியை அனுக்ரஹா அபார்ட்மெண்டைத் தேட அப்போதே உபயோகித்திருக்கலாம். //

      முதலாவது அப்போது தோன்றவில்லை.  இரண்டாவது யார் அவர் கூடவே மேப் பார்த்துக் கொண்டு கொண்டு விடுவது?  அவரவருக்கு அவரவர் வேலை!!!

      ஆகா...  எல்லோருக்கும் ஒரு தொலைந்த அனுபவம், கதை தெரிந்திருக்கிறது, இருந்திருக்கிறது!!

      நாங்களும் ஒருமுறை வாசலில் நின்றிருக்கிறோம்.  அது வேறு காரணம்!  முடிந்தால் ஒரு வாரம் இழுக்கிறேன்!!

      உண்மை.  அப்போது கமலாதாஸ் சுயசரிதையும் பிரபலம்.  அதை தமிழில் யாரும் எழுதவில்லை போல...

      ஆ...   நீங்கள் சொன்ன உடன் அனுஷம் என்பது கல்கியின் புனைப்பெயராய் இருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.


      கடி இல்லாமல்...  நான் கூட ஒரு ஜோக்காவது இணைக்கலாம் என்று நினைத்தேன்.  அது ஒரு குறையாக Feel ஆகுமோ என்றும் தோன்றியதுதான்!

      இத்தனை கவிதை இருக்கும்போது என் அக்கவிதை வேண்டாம் என்றுதான் விட்டு விட்டேன்!!

      நன்றி JKC Sir..

      நீக்கு
  5. சிவாஜி - பத்மினி ஜோடியை நினைத்தவுடனேயே வித்தியாசமான 'எதிர்பாராதது' படம் மனசில் நிழலாய் ஓடியது. காதல் இழப்பை விதவிதமாக அணுகிய ஸ்ரீதரின் கதைகளில் இது ஒன்று. காதலியை தன் தந்தையே விதி வசத்தால் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட காட்சியைப் பார்க்க வேண்டிய கொடுமை நாயகனுக்கு. தந்தையாக நாகையா உருக்கமாக நடித்திருப்பார். 'சிற்பி செதுக்காத பொற்சிலையே' என்ற பாடல் இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'சிற்பி செதுக்காத பொற்சிலை'' நான் கேட்ட நினைவு இல்லை.  ஒருமுறை கேட்கவேண்டும்.  எனக்கு சேதுக்காத பொற்சிலை என்றால் உடனே நினைவுக்கு வருவது.....   வேண்டாம்..  அடிக்க வருவீர்கள்!

      சிவாஜி பத்மினி என்றால் நிறைய்ய பேருக்கு தில்லானா, தெரிவப்பிரிவை, வியட்நாம் நினைவுக்கு வருமே...

      நீக்கு
  6. பெரியவரின் பதட்டத்தில் வீடு போய்ச் சேரணுமே என நினைத்திருப்பார். போய்ச் சேர்ந்ததும் அட்டா நன்றி சொல்ல மறந்துபோனோமே எனத் தோன்றியிருக்கும்.

    தாய்வான் தாய்பே வில் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து இரவு 8 மணிக்கு பக்கத்திலிருந்த சூப்பர்மார்க்கெட் சென்றதும், வெளியே வரும்போது இருட்டில் வேறு பக்கமாக வந்ததால் ஹோட்டல் திசை தெரியாமல் விழித்ததும் நினைவுக்கு வருது. இதுபோலவே லண்டனிலும் நடந்த சம்பவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  கேட்ட அனுபவம் கூட இல்லை, உங்களுக்கே அந்த அனுபவம் இருந்திருக்கிறதா?    பேஷ்..  பேஷ்...

      அப்புறம் ஒரு விஷயம்.... மகனும் மருமகளும் தாய்லாந்துதான் தேனிலவு சென்று வந்தார்கள்!

      நீக்கு
    2. தாய்லாந்த் அருமையான தேசம். நிறைய பார்க்கவேண்டியவைகள் அங்கிருக்கின்றன. அங்கு ஏர்போர்ட் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது புத்தபிக்குக்கள் பெரிய கிண்ணங்களில் உஞ்சவ்ருத்தி செய்துகொண்டிருந்ததைக் கண்டேன். படமெடுக்க அவகாசம் இல்லை. வளாகத்திலும் ஜெயின் சாதுக்கள் திறந்திருக்கும், கிச்சன் வேலைகள் முடிந்த வீடுகளில் (flats) உஞ்சவிருத்தி எடுத்து அனைத்தையும் கலந்து உண்பார்களாம்.

      நீக்கு
    3. அங்கே உஞ்சவிருத்தி இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது போலும்.  நாம் இங்கே மறந்து விட்டோம்.  மடங்களில் பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டோம்!

      நீக்கு
  7. சம்பாதிக்குமுன் செலவழி, பசிக்குமுன் சாப்பிடு - இதை இந்தத் தலைமுறையினர் பின்பற்றுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி அதனால்தான் எழுதினேன்.  அதனால்தான் அனுஷ் சிரிக்கிறார்.

      இந்த வார பதிவில் அனுஷம். அனுஷ்...  இரண்டு அனுஷ் ப்ரசண்ட்!

      நீக்கு
  8. அனைவருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. பொன். கோதண்டராமன் தான் பொற்கோ- வானார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு சம்பந்தப் பட்டவர் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
  10. கல்கி இதழ் பொருளடக்கத்தில்
    மமுட்டிதாசன் என்ற வரிக்கு எதிரே ராஜாஜியின் பெயரைப் பார்த்து அசந்து போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   இருங்கள் பார்க்கிறேன்.

      ஆமாம்.  கார்ட்டூன் யார் என்று பெயர் போடாதது ஏனோ...    

      அதில் வந்திருக்கும் பெயரான இந்துமதி, நம் 'தரையில் இறங்கும் விமானங்கள்' இந்துமதிதானா என்றும் தெரியவில்லை.

      நீக்கு
    2. அவராகத் தான் இருக்கும்! ஏனென்றால் அவர் சமகாலத்து
      கி. ராஜேந்திரன் பெயரே இருக்கே?
      ஆனா, அந்தப் பொன்முடி தான்...
      ஹி..ஹி..


      நீக்கு
  11. வியாழக்கிழமை பதிவு என்றாலே அற்புதம் தான் ..

    கண்ணாடி இற்று விட்டது.. புதியதும் சரியாக அமையவில்லை

    பதிவை முழுதாகப் படிக்க இயலவில்லை..

    நேற்றே சொல்லியிருந்தேன்...

    தாங்கள் கவனிக்க வில்லை ஸ்ரீராம்...

    நலம் சேரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   கவனித்தேன்.  நான் பதில் சொல்லவில்லை.  கேஜிஜி  பதில் சொல்லி இருந்தார்.   சீக்கிரம் கண்கள் ஒளிபெறட்டும்.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... புதுக் கண்ணாடி எப்படி சரியாக அமையாமல் போனது?

      நீக்கு
    3. அவர் சொல்வது பார்க்கும்போது காதில் மாட்டும் பகுதி இற்றுப்போய் விட்டது என்று புரிந்து கொள்கிறேன்.

      நீக்கு
    4. நெல்லை அவர்களுக்கு நன்றி..

      விவரம் கீழே சொல்லி இருக்கின்றேன்.

      நீக்கு
  12. வீரப்பனைத்தான் எங்கள் சாதி என ஒரு கட்சி தூக்கிப் பிடித்ததனால் போற வர்றவன்லாம் அவரு இவருன்னு கூப்பிடவேண்டியதாகிவிட்டது. நக்கீரன் கோபால், மற்றும் மாறன் பிரதர்ஸ், வீரப்பனை வைத்து கோடி கோடியாகச் சம்பாதித்ததனால் சார், பாஸ், தலைவர் என்று கூப்பிட்டால் அர்த்தம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நக்கீரன் கோபால் வீரப்பனையே ஏமாற்றி பணம் பார்த்த சூரர்.  அந்தப் புத்தகத்தில் விவரம் இருக்கிறது! பா ம க தானே? வீரப்பன் மகள் கொஞ்ச நாள் முன்பு பா ஜ க வில் இருந்தார். இப்போது எப்படி என்று தெரியவில்லை. வீரப்பன் இறந்த தேதியில் அங்கு பலபேர் வந்து அந்த இடத்தில் பூ வைத்து வழிபடுகிறார்கள் என்று செய்தி படித்திருக்கிறேன்.

      நீக்கு
  13. பரிசோதனையின் போது அவர்கள் கேட்டு நான் சொல்லிய விவரப்படி புதிய கண்ணாடி அமையவில்லை.. கேட்டதற்கு கண்கள் செட் ஆவதற்கு ஒரு வாரம் ஆகலாம் ... நீங்கள் சொல்லிய விவரப்படி தான் புதிய கண்ணாடி என்று சொல்லி விட்டார்கள்.. காத்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எந்த ஒரு கண்ணாடிக்கு கடையிலும் காட்டி பவர் செக் செய்யலாம்.  குறிப்பிடப்பட்ட அளவுகளில் இருக்கிறதா என்று பார்க்கலாமே...  மருத்துவர்தான் வேண்டும் என்பதில்லை.

      நீக்கு
  14. சற்றே பிரச்னை.. நான்கு அங்குல கைத்தல பேசியில் சரளமாகப் படிக்க இயலவில்லை என்றால் -
    அச்சடிக்கப்பட்டவைகளும் அப்படியே..

    அதற்காக பெரிய எழுத்தில் கந்தர் அநுபூதி தேடி வாங்கியிருக்கின்றேன்...

    கைத்தல பேசியில் ஆறு வருடங்களாக கட்டை விரல் தட்டச்சு தான்...

    இது பற்றி பெரியதாக புராணமே இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கண் ப்ரச்னை இருக்கிறது.  காட்டராக்ட் டியூ.  தாமதித்துக் கொண்டிருக்கிறேன்.  படிப்பது சற்று சிரமம் தருகிறது.  அதிகாலை முதல் பத்து மணி சுமார் வரை தாக்குப் பிடிக்கும்.  அப்புறம் சிரமம்.  உங்கள் பிரச்னை சீக்கிரம் தீர பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
  15. வித்தியாசமான அனுஷ்கா படத்திற்கு நன்றி. அவர்தானா?என்று சந்தேகமாக இருந்தது.
    நியூஸ் ரூம் படமும் சிறப்பு. விரிவான பின்னூட்டம் பின்னர் அளிக்கிறேன். வேலைக்காரி வராத அதிக வேலை நாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷேதான்...  சந்தேகமே வேணடாம்.  நன்றி அக்கா.  நியூஸ் ரூமில் ஒரு படச்செய்தி சேர்க்க மறந்து விட்டேனே....  இதோ சேர்க்கிறேன்.

      நீக்கு
  16. எப்படியோ அந்தப் பெரியவருக்கு உதவி வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டீங்க கவாஸ்கர் அந்த வழியில் வந்ததாலும் உங்கள் சமயோசிதமும் கலந்து கொண்டதாலும் அந்தப் பெரியவர் பத்திரமாகச் செல்ல நேர்ந்தது,

    ஏனோ பாவம் என்று சொல்லவரலை. வெளியில் கிளம்பும் போது அதுவும் தெரியாத இடத்தில் சில யோசனைகள் தேவை.

    விடுங்க நன்றி சொல்லாததை....அவருக்குத் தெரிஞ்சது அம்புட்டுத்தான். அப்படி தெரிஞ்சிருந்தா வீட்டிலிருந்து இறங்கறப்பவே யோசனை செய்து அதுக்கு ஏற்ப வந்திருப்பார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரிதான்.  கவாஸ்கர் எங்கிருந்தோ வரவில்லை.  அங்கேயேதான் இருந்தார்!  அவர் டெப்போவுக்கு பக்கத்திலேயேதான் சம்பவம்!

      நீக்கு
  17. வயநாடு சம்பவம் ஒரு பக்கம் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் ....ம்ம்ம்ம்....இல்லை வேறு எதுவும் பொதுவெளியில் சொல்லவில்லை. நான் நினைத்த, நினைக்கும் கருத்துகளை ஒரு வல்லுநரும் சொல்லியிருந்தார்.

    கிளி விஷயம் வாசித்தேன் நானும். அது போல ஜப்பானில் மீன்கள் நிலநடுக்கம் வருவதை எச்சரிக்கை விடுமாம் மீன் தொட்டிகளில் முட்டி முட்டி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொரு காணொளி கூட பரவி வருகிறது.  யானைகள் பரபரப்பாட ஓட்டம் ஓட்டமாக கடந்து செல்கின்றன.  அதாவது இடம் பெயர்கின்றன.

      நீக்கு
    2. ஆமாம் அதுவும் பார்த்தேன், ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  18. வயதானவர் வீட்டுக்கு வழிதெரியாமல்..... கேட்கவே. அய்யோ.....பாவம் . உதவியவர்களுக்கு மனம் ஆறுதல் வந்திருக்கும்.

    அனுஷ்கா ....கண்மூடிய சிரிப்பு.

    நியூஸ்ரூம் நன்று.

    பதிலளிநீக்கு
  19. வயதானவர் வீட்டுக்கு வழிதெரியாமல்..... கேட்கவே. அய்யோ.....பாவம் . உதவியவர்களுக்கு மனம் ஆறுதல் வந்திருக்கும்.

    அனுஷ்கா ....கண்மூடிய சிரிப்பு.

    நியூஸ்ரூம் நன்று.

    பதிலளிநீக்கு
  20. நகர்புற பெண்களுக்கு நுரையீரல் புற்று நோய் secondary smoking னாலும் வரும் தான். மாசு கட்டுப்பாடு மிகவும் தேவை.

    சின்ன பசங்க கைல துப்பாக்கி - குடித்துவிட்டு கார் ஓட்டும் மாணவன் இதெல்லாம் பெற்றோர் வளர்ப்பு....

    பெங்களூர் பள்ளி பஸ் டிரைவர்கள் குடி - கொடுமை!
    சிறுத்தை பற்றிய செய்தி - சுவாரசியமான செய்தி.

    பெங்களூர் உணவகங்கள், பப் - நேரம் நீட்டப்பட்டிருப்பது - ஓ மை!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ஒலிக்ஸ் நியூஸ்- அட! வாழ்த்திடுவோம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. யோசித்து ஏதேதோ சொன்னார். அந்த நேரத்துக்கு அந்த ஏரியாவில் தெரிந்திருக்கும் ஒரே டீக்கடை எது என்று எனக்குத் தெரியும்.//

    திறந்திருக்கும்?

    கீதா

    பதிலளிநீக்கு
  23. மோகன் ஜி அண்ணாவின் எழுத்து அப்பாதுரை ஜியின் எழுத்து எல்லாம் சூப்பர் ரகங்கள்! அக்மார்க் ரகங்கள். ரொம்பப் பிடிக்கும்

    திருஆடிப்பூரத்து ஜெகத்துதித்தாளுக்கான கவிதை வெகு அருமை, மோகன் ஜி அண்ணா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றும் பிரச்சினை இல்லை. வானவில் மனிதன், மூன்றாம் சுழி என்று கூகுளில் தேடி இப்போதும் சென்று படிக்கலாம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் இருவரின் தளங்களுக்கும் சென்றதுண்டு. வாசித்ததுண்டு. கருத்தும் போட்டதுண்டு. இப்பவும் பழைய பதிவுகளை வாசிப்பதுண்டு,

      கீதா

      நீக்கு
    3. மிக்க நன்றி கீதா மேடம்

      நீக்கு
  24. இவங்க எல்லாம் வலையில் எழுதிய காலத்தில் வலையில் நாம் இல்லையே என்று ரொம்பவும் தோன்றும் எனக்கு. இப்போது அவர்களின் பக்கம் வாசித்தாலும் கூட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Again, ஒன்றும் பிரச்சினை இல்லை. வானவில் மனிதன், மூன்றாம் சுழி என்று கூகுளில் தேடி இப்போதும் சென்று படிக்கலாம்.

      நீக்கு
  25. சிவாஜி பத்மினி - தகவல்கள் வெகு சுவாரசியம். ரசித்து வாசித்தேன். கடைசி வரி அட! போட வைத்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஆஷாட பூதித்தனம் என்று சொல்லும் பதிப்பகத்தாரின் கடைசி வரிகள்தான் அப்படி இருப்பதை எனக்கு தோன்றியது. //

    அப்படி இருப்பதாக?

    கீதா

    பதிலளிநீக்கு
  27. மனித சமுதாயத்தின் கேவலமான தசைப்பசிக்காக பலியாகிய ஒரு இளம்ம் அவளை பெண்ணின் // ம் அவளை கட் பண்ணனுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  28. புஷ்பா தங்கதுரை அவர்களின் இந்தக் கதை பற்றி கேள்விப்பட்டதுண்டு ஆனால் வாசித்ததில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  29. அனுஷ் படத்தோடு கூடிய வரிகள்

    மாத்தி யோசி - வரிகளா!!?

    அனுஷின் வரிகளா!!!!ஹிஹிஹிஹி

    அனுஷின் இப்படியான படம் முன்பும் வந்திருந்த நினைவு அதனாலென்ன மீ ண்டும் போட்டாலும் ரசிக்க மாட்டோம்னு சொல்லுவமா என்ன?!!

    செம அழகு இல்லை இந்தப் படத்துல!.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ் அழகா இல்லாம இருப்பாங்களா கீதா...  அறிவுரை வரிகளை மாத்தி யோசிச்சிருக்கேன்!

      நீக்கு
  30. வீரப்பன் - விஷயங்கள் கொஞ்சம் அதீதம் தான். யானைய எல்லாம் கொன்று ...எப்படி மனசு வந்ததோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயவர்களுக்குத்தான் அப்படிக் கொல்ல மனது வரும். அதுபோல உணவுக்காகக் கொல்வதிலும் ஒரு நாகரீகம் இருக்கிறது. அப்பாவி விலங்குகளை தன் இன்பத்துக்காகக் கொல்வதிலும், கொடுமைப்படுத்துவதிலும் மனிதனின் கயமைத்தனம்தான் வெளிப்படுகிறது

      நீக்கு
    2. இன்றைய தனது  பதிவில் துளசி டீச்சர் நண்டை அப்படியே உயிருடன் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரிப்பது பற்றி சொல்லி இருக்கிறார்.  என்ன சொல்ல...

      நீக்கு
  31. 2012 ல் எழுதிய இரு கவிதைகளும் சுப்பர் முதல் கவிதை இப்பவும் பொருந்துமோ!!!

    இப்படி நான் சொல்லிவிட்டு கீழ வந்தா அதுவும் கவிதையாகி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் அப்படியே மீள் போடலாம்னு நினச்சேன்.  அப்புறம்தான் இந்த வருடம் வெள்ளி கூட தள்ளி நிற்பது தெரிந்தது.  வெண்கலம் மட்டும்தான்!

      நீக்கு
  32. பொக்கிஷத்தில் முதல் விஷயம் புதிய தகவல்.

    செம்மங்குடி அவர்கள் இதழ்களில் எழுதினார் என்பது கேட்டதுண்டு என் மாமியிடம் இருந்து. அவங்க திருவனந்தபுரம் ம்யூஸிக் அகாடமியில் கோர்ஸ் பண்ணினப்ப செம்மங்குடி அவர்கள் தான் பிரின்ஸிப்பல்.

    ஆனால் அவர் எழுதியதை வாசித்தது இல்லை. இப்ப ஸ்வாதித்திருநாள் பற்றிய இந்தக் கட்டுரையை வாசித்தேன். அடுத்த பகக்த்தில் தொடர்கிறது என்பது தெரிகிறது.

    பொற்கோ கவிதை சூப்பர். தமிழ் விளையாடுகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம்மங்குடி பத்திரிகையில் எழுதினர் என்பதை நிரூபிக்க இந்த ஒரு பக்கத்தை மட்டும் நான் போட்டோ எடுத்தேன்.  கட்டுரை மூன்று நான்கு பக்கங்களுக்கு நீண்டதாய் நினைவு.  அடுத்தடுத்த பக்கங்களை போட்டோ எடுக்கவில்லை.

      நீக்கு
  33. தொலைந்து போக இருந்தவரை தொலைந்து போகாமல் அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டீர்கள். அனுப்பிய உங்கள் எல்லோருக்கும் நன்றிகள் சொல்ல மறந்து போனதை வீட்டுக்கு போன பின் நினைத்து வருந்தி இருக்கலாம்.

    புது இடத்திற்கு வரும் போது வீட்டு முகவரி, போன் நம்பர் இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற செல்போன் இவைகளுடன் தான் வெளியே வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான்.  ஆனால் அவர் ஏதோ நம்பிக்கையில் பக்கத்திலேயே கடை இருக்கும் என்று இறங்கி விட்டார் போலும்.

      நீக்கு
  34. நியூஸ் ரூம் செய்தி அருமை. கிளிக்கு இயற்கையின் மாறுதல் தெரிந்து இருக்கிறது. கிளி மனிதர்களை காப்பாற்றி இருக்கிறது.

    எறும்புகள் கூட மழை வரும் போது இடம் மாறும்.
    "எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை" என்பார்கள்.

    மற்ற ஜீவராசிகள் இயற்கையை நன்கு அறிந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கிளி மனிதர்களை காப்பாற்றி இருக்கிறது. //

      ஒரு பாட்டி தன் பேத்தியுடன் வெள்ளத்திலிருந்து தப்பி கரை சேர்ந்த இடத்தில் மூன்று யானைகள் நின்று கொண்டிருந்தனவாம். பயந்து போன பாட்டி யானையிடம் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்...

      "எங்களுக்கும் வேறு வழி இல்லை..  எங்களைக் கொன்று விடாதே" என்று வேண்டி இருக்கிறார்.  யானையின் கண்களிலும் கண்ணீர் வழிந்ததாம். 

      காலை உதவிக்கு ஆள் வரும் வரை அருகில் துணைபோல் இருந்து விட்டு பின்னர் அகன்றனவாம் மூன்று யானைகளும்.

      நீக்கு
    2. மிருகங்களும் அன்புக்கு கட்டுப்படும். பாட்டிக்கு துணையாக இருந்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  35. மோகன் ஜி கவிதை அருமை.
    உங்கள் கவிதை "வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்து இருந்தோமே! "பாடலை நினைவுக்கு கொண்டு வந்தது.
    நிறைய கவிதைகள் விளையாட்டு போட்டியில் பரிசு பெறுவதை பற்றி. வெள்ளி கூட தள்ளி நிற்கும் கவிதை அருமை.

    நிறைய செய்திகள் , பொக்கிஷ பகிர்வுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அந்தப் பாடல் நீங்கள் சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது! 

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. ரசித்ததிற்கு நன்றி மேடம். நலம் தானே?

      நீக்கு
  36. முதல் பகுதி கொஞ்சம் மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது. பாவம் ஊர் தெரியாத இடத்தில் வழி தவறி, உங்கள் உதவியுடன் வீட்டிற்குச் சென்றடைந்தது மகிழ்ச்சி,

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  37. சிவாஜி பத்மினி என்றாலே நல்ல ஒரு ஜோடி என்றுதான் சொல்லவேண்டும். சிவாஜி வாணி ஸ்ரீ ஜோடியை விட இந்த ஜோடி சிறப்பான ஜோடி என்று சொல்லலாம். அவர்கள் இருவரது நீண்டகால கலைப்பயணமும், 96 ல் சந்திப்பு வரை சுவாரசியமான தகவல்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அதனால்தான் நான் படித்து ரசித்ததை இங்கும் நீங்கள் எல்லாம் படிக்கப் பகிர்கிறேன்!

      நீக்கு
  38. மோகன் ஜி அவர்களின் கவிதை அருமை. நல்ல தமிழ் அறிவு வெளிப்படுகிறது.

    உங்கள் பழைய ஒலிம்பிக்ஸ் கவிதையும் இன்றைய ஒலிம்பிக்ஸ் கவிதையும், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைப் பொய்யாக்கும் விதத்தில் ஒலிம்பிக்ஸில் நம் வீரர்கள் இருக்கிறார்களே என்ற வருத்தத்தை வெளிப்படுத்துகின்றன.

    மற்ற பகுதிகளும் நன்றாக இருந்தன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  39. தொலைந்து போனவரைப் பொறுப்போடு அனுப்பி வைத்திருக்கிறீர்கள். வழமை போல சிறப்பான எழுத்து நடை. அதற்காக உருவாக்கியப் படமும் சிறப்பு.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!