? நாட்டுத் தலைவர்களைக் கொலை செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால் (வெளிநாடு உட்பட) அதை பயங்கரவாதிகள் நிறைவேற்றிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது எதற்கு அவங்க சேஃப்டிக்காக மிக விலையுயர்ந்த குண்டு துளைக்காத கார், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று மக்களுடைய காசைச் செலவழித்து மெனெக்கிடறாங்க?
# பாதுகாப்பு கார் இதையெல்லாம் விட அதிக விலை பயங்கரவாதிகளுக்கு ஆகலாமோ என்னவோ !!
& நல்ல கேள்வி. பாதுகாப்பு கொடுப்பது அரசாங்கத்தின் கடமை. பாதுகாப்புகளைத் தாண்டி கொல்ல நினைப்பது பயங்கரவாதிகளின் மடமை. இப்படி ஆகிவிட்டது உலக நாடுகளின் நிலைமை.
கே சக்ரபாணி, சென்னை 28 :
? நான் ஆனந்த கண்ணீர் வடிக்கும் இயல்படையவன். சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் மனமுருக பாடினாலோ சினிமாவிலோ டிவி சீரியல்களில் உருக்கமான காட்சிகள் வந்தாலோ திருமணங்களில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டியதும் என்னையறியாமல் என் கண்களில் ஆனந்தகண்ணீர் வந்துவிடும். இதுபோன்று அனுபவம் தங்களுக்கு உண்டா?
# இயல்பு என்று சொல்ல முடியாது ஆனால் சில சந்தர்ப்பங்களில் நெஞ்சம் விம்மி, கண்ணீர் ததும்பும் சந்தர்ப்பங்கள் மிக சாதாரணமான நிகழ்ச்சிகளால் கூட சில சமயம் எனக்கு ஏற்பட்டது உண்டு. அட, ஏன் இப்படி என்று நானே என்னைக் கேட்டுக் கொள்வேன். விடை கிடைப்பது இல்லை. வேறு எண்ணங்களால் இடையூறு இல்லாத சந்தர்ப்பம் அமையும் போது இவ்வாறான உணர்ச்சி வசப்படல் நிகழும் என்று தோன்றுகிறது. ஆச்சரியகரமாக அது நமக்கு ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது.
& கண்ணீர் வந்தது உண்டு - வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் மற்றும் சில சினிமாக்களை மனம் ஒன்றிப் பார்த்தபோது. ஆனால் அதில் எதுவும் ஆனந்தக் கண்ணீர் கிடையாது. அனுதாபக் கண்ணீர் அல்லது வருத்தக் கண்ணீர் மட்டுமே.
? நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய்மிட்டாய் கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கிறீர்களா?
# நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை மதுரையில் இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே போய் , பெரிய எதிர்பார்ப்புடன் ஆசையாக இரண்டு இனிப்பு வகைகளை வாங்கி சாப்பிட்டுப் பார்த்ததில் ஒரு பெருத்த ஏமாற்றம் மட்டுமே ஏற்பட்டது. வேறு இடங்களில் கிடைக்கிற அல்வாவுக்கும் இந்த ஒரிஜினல் நெய் அல்வாவுக்கும் இடையே எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை.
& நா ஒ நெ மி க வில் நான் சாப்பிட்டது இல்லை. அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
? 50 , 60 வருடங்களுக்கு முன்பு சக்கரை வியாதி என்றால் அது பணக்கார வியாதி என்று சொல்வார்கள். ஆனால் இப்போது அநேகமாக எல்லாருக்கும் இருக்கிறதே எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்களா?
# அந்தக் காலத்தில் எல்லாருக்கும் உடல் உழைப்பு, சத்தான, சரி அளவான உணவு என்பது வாடிக்கையாக இருந்தது. இந்த சுறுசுறுப்பும் உழைப்பும் இல்லாமல் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, வெறும் பொழுது போக்கி , சாப்பிடுவது ஒன்றை மட்டுமே மையப்படுத்தி இருப்பது பணக்காரர்களின் தன்மையாக இருந்தது. "அவருக்கென்ன ! ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட சொத்து இருக்கிறது" என்று பணக்காரர்களைக் குறித்து சொல்வது வழக்கம். உழைக்காத வர்க்கம் ஆகிய பணக்காரர்களுக்கான நோய் என்று சர்க்கரை வியாதி அறியப்பட்டது. இப்போது எல்லாரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள் என்பதும் கூட ஒரு வகையில் உண்மைதான். எல்லோருமே 200 ரூபாய் கொடுத்து சினிமா பார்க்கிறார்கள், 100, 150 ரூபாய் கொடுத்து மசால் தோசை சாப்பிடுகிறார்கள். திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளில் காணப்படும் , மிதமிஞ்சிய ஆடம்பரம் எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள், அல்லது பணக்காரர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்ற ஆசைப்படுகிறார்கள் என்பதை உறுதி செய்கிறது.
= = = = = = =
KGG பக்கம் :
kgs நினைவுகள்.
என்னுடைய தாத்தா சுப்ரமணியன் பற்றி என் அம்மா கூறியது ஒன்று நினைவுக்கு வருகிறது.
என் தாத்தா 1942 ஆம் ஆண்டு, ஆடி அமாவாசை கழித்து வந்த ஞாயிற்றுக் கிழமையில் காலமானார் என்னும் தகவல்தான் அது. இணையம் மூலம் விவரங்களைக் கண்டெடுத்தேன். அதன்படி, தாத்தா காலமானது 16.8.1942 என்று தெரிந்துகொண்டேன்.
அண்ணன் K G சுப்ரமணியன் காலமானது 14.8.2024 - இது ஆடி அமாவாசைக்குப் (5.8.24) பத்து நாட்கள் கழித்து !
தாத்தா சுப்ரமணியத்திற்கும் (16.8.42) அவர் பேரன் சுப்ரமணியத்திற்கும் (14.8.24) இறப்பில் இந்த ஒற்றுமை!
= == = = =
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் வீட்டில் அப்பா அம்மா தவிர இரண்டாவது அக்கா, மூன்றாவது அண்ணனாகிய kgs, ஐந்தாவது அண்ணன் விசு(வேஸ்வரன்) ஆகியோரைப் பற்றிய நினைவுகள் மட்டுமே உள்ளன. எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் முதல் இரண்டு அண்ணன்கள் வேலை கிடைத்து, வேலை பார்க்கச் சென்றுவிட்டனர். முதல் அண்ணனுக்கு திருமணம் ஆகியிருந்தது. பெரிய அக்காவுக்கும் திருமணமாகி சென்றுவிட்டார். ( நான்காவது அண்ணன் சந்தானம் - சிறு வயதில் எதையோ கண்டு பயந்துபோனதால், பேச முடியாதவராக ஆகி, மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து இருபதாவது வயதில் காலமானார்.)
ஆக - kgs அண்ணன் மட்டுமே எனக்கும் என் ஐந்தாவது அண்ணனுக்கும் caretaker. அப்பா அடிக்கடி ஆடிட் செய்ய வெளியூரகள் செல்லவேண்டியிருந்ததால் kgs அண்ணனிடம்தான் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது !
என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டுமா - kgs.
வகுப்பிற்காக நோட்டு & புத்தகங்கள் வாங்க வேண்டுமா - kgs. அநேகமாக எல்லா நோட்டுகளும், பேப்பர் + பிரவுன் ஷீட் வாங்கி வந்து, அவரே நோட்டுகள் தைத்துக் கொடுத்து விடுவார். நோட்டுகள் ஸ்கூலில்தான் வாங்க வேண்டும் - இல்லையேல் பெஞ்சு மேலே ஏற்றிவிடுவார்கள் என்று சொன்னால் - ' ஆரம்பத்தில் சில நாட்கள் பெஞ்சு மேலே நிற்கச் சொல்லுவார்கள். அப்புறம் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்' என்பார்.
நாங்கள் வீட்டுப்பாடம் எல்லாம் ஒழுங்காக எழுதுகிறோமா - மேற்பார்வை kgs !
எங்களுக்கு தீபாவளிக்கு துணிகள் வாங்கி, தைக்கக் கொடுக்கவேண்டுமா ? kgs.
தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்கிக் கொடுத்து, விசு அண்ணனுக்கு, எனக்கு, என்னுடைய தங்கைக்கு என்று பங்கு பிரிக்கவேண்டுமா ? அதற்கும் kgs. (என்னுடைய தம்பி என்னைவிட ஏழு வயது சிறியவன் என்பதால், kgs தாக்கம் அவனுக்கு அதிகம் இல்லை என்று நினைக்கிறேன்!)
மொத்தத்தில் விசுவுக்கும், எனக்கும் kgs தயவில்தான் எல்லாம்!
பள்ளிக்கூட நாட்களில் நான் மிகவும் சோம்பேறி (இப்பவும்தான்!). வீட்டுப் பாடம் எதுவும் உருப்படியாக எழுதமாட்டேன்! திங்கட்கிழமைக் காலையில்தான் வீட்டுப் பாடங்கள் etc etc ஞாபகம் வரும்! கண்ணீர் வழிய, உதடுகள் துடிக்க, ஒவ்வொன்றாக சொல்வேன். அண்ணன், அக்கா என்னைத் திட்டிக்கொண்டே, கிள்ளிக்கொண்டே என்னுடைய வீட்டுப் பாடங்களை செய்துகொடுப்பார்கள்!
கணக்குப் பாடத்தில் ரொம்ப வீக் ! இரண்டாம் வகுப்புப் படித்தபோது, டைஃபாய்ட் வந்து பல வாரங்கள் (1958 ஆம் வருடம்) பள்ளிக்குப் போகாமல் இருந்ததால் - பள்ளிக்கூட பாடங்கள் பலவற்றில் பின் தங்கினேன்.
முதல் வகுப்புப் படித்தபோது எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்தது. அ , ஆ, இ , ஈ வரை எழுதிவிடுவேன்.
அடுத்த எழுத்து உ வா அல்லது எ யா - என்பது எவ்வளவு தடவைகள் சொல்லிக் கொடுத்தாலும் நினைவில் நிற்காது! ஐ க்கு அடுத்த எழுத்தாக - ஆ - ஈ - ஊ - ஏ போன்று நீண்ட உச்சரிப்புடன் ஒரு எழுத்து உண்டா என்று சந்தேகம் வரும்.
அண்ணன் kgs பலமுறைகள் தலையில் குட்டி சொல்லிக் கொடுத்தபின் ஒருவழியாக அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் kayjee என்று பாடும் வகையில் முன்னேறினேன். kayjee (KG) என்பது எங்கள் எல்லோருக்கும் இனிஷியலாக இருந்தபோதும், பள்ளிக்கூட நாட்கள் தொடங்கி, பாலிடெக்னிக் படிப்பு, வேலை பார்த்த இடங்கள், நண்பர்கள் - எல்லோருக்கும் KG (kayjee) என்றால் அது k g சுப்ரமணியன் மட்டும்தான்!
(தொடரும்)
= = = = = = = = = = =
ரீட்டா & மீட்டா 06
1) ஆனந்த் ரீத்திகா திருமணம்; ஆனந்தின் முன்னாள் காதலி ரீட்டாவிடமிருந்து மிரட்டல் கடிதம்.
2) ஆனந்த் எழுதிய காதல் கடிதங்களை திரும்ப அவனிடமே சேர்ப்பிக்க பத்து லட்ச ரூபாய் அனுப்பச் சொல்கிறாள் ரீட்டா.
3) ஆனந்த் பத்து லட்ச ரூபாயை, ரீட்டாவுக்கு அனுப்புகிறான். ஆனந்த் எழுதிய கடிதங்களை அனுப்பி வைக்கிறாள் ரீட்டா. இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கடிதம், ரீட்டாவிடமிருந்து !
4) மேலும் இருபது லட்ச ரூபாய் கேட்கிறாள் ரீட்டா. மீட்டாவின் ஆலோசனைப்படி, 'வேறு வழியில்லை - ரீட்டாவைக் கொல்வதுதான் ஒரே வழி' என்று முடிவு எடுக்கிறான் ஆனந்த்.
5) தடயம் இல்லாமல் நடந்த கொலைகள் பற்றி - மீட்டா சொல்லும்போது CV235 பற்றி குறிப்பிடுகிறது.
மீட்டாவுடன் நிகழ்த்திய உரையாடல்களிலிருந்தும், இணையத்தின் உதவியுடனும், CV235 பற்றி ஆனந்த் கண்டுபிடித்த சில விவரங்கள்:
CV235 是一个装有眼镜蛇毒液和催化剂的子。它的工作原理如下:...
CV = Cobra Venom.
CV235 சீனாவின் விவசாய ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த ஒரு கலவை. பயிர்களை நாசம் செய்யும் உயிரினங்களை அழிக்கப் பயன்படுகின்ற மருந்துக் கலவை. சிறிய பீங்கான் கூஜா போன்ற அமைப்பில் விற்பனை செய்கிறார்கள். விலை இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட நான்கு இலட்ச ரூபாய்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கமும் நன்றியும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் நன்றாக உள்ளது.
அதிக அளவு துயரங்களில் கண்களில் வரும் கண்ணீரை விட, அதிக அளவு ஆனந்தத்தில் சட்டென கண்களில் கண்ணீர் வருபது உண்மைதான். தவிர பெண்களுக்கு கண்ணீர் பை கண்களுக்கு மிக அருகில் இருப்பதாகக் கூறுவதும் உண்மைதான். .
உண்மையில் பெண்கள் முக்கால்வாசி இந்த மாதிரி உணர்ச்சிகளை (துயரம், மகிழ்ச்சி, கோபங்கள்) கண்களின் கண்ணீர் வழியாக கொட்டி விடுவதால், இதயம் சம்பந்தபட்ட பாதிப்புக்களுக்கு அவர்கள் அதிகமாக பாதிக்கப்படவும் வாய்ப்பும் இல்லை.
/வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் மற்றும் சில சினிமாக்களை மனம் ஒன்றிப் பார்த்தபோது. ஆனால் அதில் எதுவும் ஆனந்தக் கண்ணீர் கிடையாது. அனுதாபக் கண்ணீர் அல்லது வருத்தக் கண்ணீர் மட்டுமே. /
எப்படியோ கண்கள் இப்படி அடிக்கடி சுத்தமானால் சரிதான்.:))
உங்கள் வாழ்வில் உங்கள் மூன்றாவது அண்ணனின் அன்பான பங்களிப்பு பற்றி படித்ததும் மனது நெகிழ்ச்சியுற்றது. உங்கள் அண்ணன்தான் எவ்வளவு அன்பாக செயல்பட்டிருக்கிறார். அந்த அன்புள்ளத்திற்கு வணக்கங்கள் பல.
கதை நன்றாக உள்ளது. குடுவை படம் கவர்கிறது. ஆனால், அதிக அழகு ஆபத்து என்பது போல குடுவையின் அழகும் உள்ளேயிருக்கும் அதன் விஷம் உயிரையும் கவர்ந்து விடும் என்பதும் ஒத்துப் போகிறது. கதையை தொடர்கிறேன். அடுத்து என்ன என அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குமுன்னெல்லாம் நான் தொட்டதுக்கெல்லாம் அழுதுடுவேன். கல்யாணம் ஆன புதுசில் அடுத்தடுத்து ஏற்பட்ட சில அதிர்ச்சிகலந்த சம்பவங்களில் கண்ணீரே மறந்து போனது. கல்யாணம் ஆகிப் பத்து வருடங்களில் சுத்தமாய் அழுவதை நிறுத்தினேன். அதிலும் பைல்ஸ் ஆபரேஷன் முடிஞ்சப்புறமா வந்த வலியில் வலியையும் மறந்து விட்டேன். அம்மா போனப்போ கூட அவ்வளவு அழுகை வரலை. மனதில் ஏதோ பாரம் ஏறிட்டாப்போல் இருந்தது. ஓர் வெற்றிடம் உருவானது. இன்று வரை அது அப்படியே!
நீக்குகண்ணீரைக் கொட்டி தங்களுக்கு இதயம் டேமேஜ் ஆகாமல் பார்த்துக்கொண்டு கணவருக்கு இதய பலவீனம் அடையச் செய்துவிடுகிறார்களோ? பொதுவாச் சொல்றேன்
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குஅழுது எல்லாம் மாமாவைக் கவனிக்கச் செய்வது கஷ்டம் நெல்லை. என் மாமியார், மாமனாருக்கும் அழுதால் பிடிக்காது. "நீலிக்குக் கண்ணீர் நெத்தியிலே" என்பது போல் எதுக்கெடுத்தாலும் அழுதுடறே என்பார் என் மாமியார். எல்லார் எதிரிலும் நானும் அழுது என் பலவீனத்தைக் காட்டிக் கொள்ள் மாட்டேன்.
நீக்குயாரும் எதுவும் சொல்லாமலேயே கண்ணீர் கொட்டுகிறது கண்களிலே இரண்டு நாட்களாய். உறுத்தல், வலி, எரிச்ச்சல். நேற்றேல்லாம் கண்ணே திறக்க முடியலை. கண்ணீரைத் துடைத்துத் துடைத்து ஒரு கைத்துண்டே நனைஞ்சு போச்சு.
நீக்குஉங்கள் வீட்டில் நீங்கள் எத்தனை பேர்? ஐந்தாவது அண்ணன் என்றெல்லாம் குறிப்பிடுகிறீர்கள்.
பதிலளிநீக்குcv 235 என்பது உண்மையா கற்பனையா?
cv235 covid19 என்று மக்களைக் கொல்லும காரணிகளில் சீனா முதலிடம்?
Jayakumar
எவ்வளவு பேர் என்று சென்ற வாரம் எழுதியிருக்கிறேன்.
நீக்குCV235 கற்பனைதான்.
நீக்குகேள்வியும், பதில்களும் சுவாரஸ்யமாக இருந்தது ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடித்தேன் ரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகேள்வி பதில்கள் - ஸ்வாரஸ்யம்.
பதிலளிநீக்குகேஜிஎஸ் நினைவுகள் மற்றும் கதை பகுதியும் நன்று.
நன்றி.
நீக்குபத்துக்குழந்தைகள் இருந்தால் கூட அம்மா/அப்பாவிற்கு ஒரு சில குழந்தைகளே அல்லது குழந்தையே மிகப் பிடித்தமானவராக அமைவது ஏன்?
பதிலளிநீக்குஇது கசப்பான உண்மை. பல காரணங்கள் இருக்கும், பெண் மாமியார் ஜாடை, இவன் அப்பா மாதிரி, இவள் நம்ம அப்பா மாதிரி என பல காரணிகள்
நீக்குஎந்தக் குழந்தையோடு அதிகம் போராடுகிறார்களோ, அது வியாதியாக இருக்கலாம், மற்ற குழந்தைகள் நன்றாக படிக்கும் பொழுது, நன்றாக படிக்காததால் குடும்பத்தில் மற்றவர்களின் ஏச்சுக்கும்,பேச்சுக்கும் ஆளாகும் குழந்தை மீது அம்மாவுக்கு வெளியே காட்டிக் கொள்ள முடியாத பாசம் இருக்கும்.
நீக்குபதில் அளிப்போம்.
நீக்குஎங்கள் பதில்: அடுத்த புதன் கிழமை!
நீக்குஎனக்குத் தெரிஞ்சு நெல்லை சொல்லுவது ஓரளவுக்குப் பொருந்தி வருது. உடல் நலக்குறைவெல்லாம் காரணம் சொல்ல முடியாது. நன்றாக இருக்கும் பெண்கள், பிள்ளைகளிலேயே குறிப்பிட்ட பெண், பிள்ளை எனில் தனியாகக் கவனிப்பு இருக்கும். இதை ரொம்பவே பொதுவெளியில் விளக்கக் கஷ்டமாக இருக்கு. இன்னும் சொல்லப் போனால் அந்தக் குறிப்பிட்ட பிள்ளை அல்லது பெண்ணுக்கே எல்லாவிதமான அதிகாரங்கள், சலுகைகள் கொடுக்கும் பெற்றோர்கள் உண்டு. மூத்த பிள்ளை இருந்தாலும் அவ்வளவாய்க் கவனிப்பு இருக்காது. மூத்தவனாகத் தன் கடமையைச் செய்யணும், தம்பி, தங்கைகளை விட்டுக்கொடுக்காமல் கவனிக்கணும். மனைவி, குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என்பார்கள்.
நீக்குவழக்கம் போல் சுவாரசியமான தகவல்கள்.
பதிலளிநீக்குநன்றி. தகவல்கள்!!!
நீக்குதகவல்கள்!!!???????????????
நீக்குபுதன் பதிவில் தகவல்களா! என்ற ஆச்சரியம்!
நீக்குகேள்வி பதில்கள் நன்று
பதிலளிநீக்குகேஜி எஸ் அண்ணாவுடனான உங்கள் நினைவுகள் அனுபவங்கள் சுவாரசியம்
புதுசு புதுசா டெக்னிக் மீட்டா கொடுக்குது ரீட்டா கதையில்!!!
கீதா
:))) நன்றி!
நீக்குகேள்வி பதில்கள் சுவாரசியம்.
பதிலளிநீக்குகேஜி எஸ் அண்ணாவின் பொறுப்பில் சிறுவர்களாகிய உங்கள் அனுபவங்கள் . அந்தக்காலம் நிறையக்குழந்தைகள் இருந்தாலும் பொறுப்பான அண்ணன்கள் இப்பொழுது காலமாற்றம் .
ஆகா! விதம் வந்துவிட்டது ஜாடியில்....ம் ....ஜீம்பும்....பா......தொடர்வோம்.
:)))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்விகளும் , பதில்களும் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் அண்ணாவின் நினைவுகள், அவரின் குணநலன்களை படிக்கும் போது நல்ல பொறுப்பான மனிதர் என்று தெரிகிறது.
குடும்பத்தில் இப்படி பொறுப்பான ஒரு பையன் பொறுப்புகளை எடுத்து கொண்டால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
எனக்கு என் பள்ளி நாடக்ள் நினைவுக்கு வந்தது, எனக்கு வீட்டுபாட கணக்குகளை காலை நேரம் என் அக்கா தான் போட்டு கொடுப்பார்.
நானும் காலை நேர அவசரத்தில் தான் அக்காவை கெஞ்சி கொஞ்சி
கணக்குகளை செய்து வாங்குவேன்.
கதை நன்றாக போகிறது.
//விஷ வாயு வெளியே வந்த பிறகு, வெற்று ஜாடியால் ஆபத்து எதுவும் இல்லை. //
ஜாடியால் ஆபத்து இல்லை, ஆனால் விஷவாயு பயம் அளிக்கிறது.
கருத்துரைக்கு நன்றி. விஷவாயு எனக்கும் பயமாக இருக்கிறது!
நீக்கு//பள்ளிக்கூட நாட்களில் நான் மிகவும் சோம்பேறி (இப்பவும்தான்!). வீட்டுப் பாடம் எதுவும் உருப்படியாக எழுதமாட்டேன்! // அட! உங்களுக்கும் எனக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?
பதிலளிநீக்கு:))))
நீக்குஎன்னைப் பொறுத்தவரை பள்ளிப்பாடங்களுக்கு எப்போவும் முன்னுரிமை. சமைத்துக் கொண்டும், அரைத்துக் கொண்டும் புத்தகம் படிப்பேன். அப்பா கண்ணில் பட்டால் புத்தகங்கள் நோட்டுகளுக்கு அகால மரணம் தான். அதிலும் கவனமாக இருக்கணும். அரிசி ட்ரம்மிற்குப் பின்னால் வைச்சுப்பேன்.வீட்டுப்பாடங்களைப் பள்ளியிலிருந்து வந்ததுமே முடிச்சுடுவேன். படிக்க வேண்டியவற்றையும் படிச்சுப்பேன். இல்லைனா காலை நாலரைக்கு எழுந்து சிம்னி விளக்கு வெளிச்சத்தில் முடிப்பேன். எட்டாவது முடிக்கும் வரை மின்சார விளக்குக் கிடையாது. அதன் பின்னரும் குடித்தனம் இருந்த வீட்டில் வீட்டுக்காரங்க சாயங்காலம் ஆறு மணிக்கு மெயின் ஸ்விட்ச் போட்டால் இரவு ஒன்பதுக்கு அணைப்பாங்க. திரும்பக் காலை ஐந்து மணிக்குப் போடுவாங்க், ஆறு வரைக்கும் இருக்கும். கொஞ்சம் வெளிச்சம் வந்துட்டால் மொட்டை மாடிக்கு வந்துடுவேன்.
நீக்குமின்சார உபயோகத்தில் மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த சூழ்நிலைகளில் வசித்த அனுபவம் எனக்கும் உண்டு!
நீக்குசில சமயம், தேர்ந்த எழுத்தாளர்களின் கதையை விட காமிக்ஸ் அதிக சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி செவ்வாயை ஓரம் கட்டுகிறது ரீட்டா&மீட்டா 06
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு