மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 4
முன்கதை ஒன்று --- இரண்டு - மூன்று
காவல் நிலையத்திலிருந்து திரும்பிய ஒரு மணி நேரமாக ஹோட்டலின் விழா அறையில் இருந்தார்கள். மேனேஜர், செபஸ்டியன், எஸ்ஐ ரதி தவிர நண்பர்கள் குழுவில் ஷோபாவும் சைலஜாவும் சேர்ந்து கொண்டார்கள். "அப்பா அம்மா" "நாங்க இங்கே இருக்கோம்" "காப்பாதுங்க" என்று அவ்வப்போது பலவிதமாகக் கேட்ட குரல்கள் மெள்ளக் குறைந்து ஏறக்குறைய அமைதியாகி இருந்தது.
மோனிகா மீது ஷோபா காட்டிய ஆத்திரமும் கோபமும் மறைந்திருந்தது. ஸ்வேதாவிடமும் நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டாள். ஷோபாவிடம் விசாரணையைத் தொடர்ந்த ரதியின் கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் அளித்தாள். "ஐஸ்கிரீம் வாங்கக் போனப்ப மோனிகா என்னோட இருந்தா. மத்த ரெண்டு பிள்ளைகளும் காணோம் என்கிற கவலை அதிகமாகி மோனியிடம் 'நீ போய் நம்ம டேபிள்ல பாத்துட்டு வா' னு அவளிடம் சொன்னது நிஜம். என்னோட தான் இருந்தா. ஆனால நான் திரும்பிப் பார்த்த வேளையில் என் பக்கத்துல நின்னுட்டிருந்த பெண் காத்துல கரைஞ்சது போல காணாம போனது பெரிய அதிர்ச்சியா இருந்தது. மேலும் அந்த ஐஸ்க்ரீம் ஸ்டால் ஆள் நான் தனியாவே வந்தேன்னதும் எனக்கு திகிலும் குழப்பமும் அதிகமாச்சு"
"கேட்க வேண்டியதற்கு மன்னிக்கணும். பிறகு உங்க பாத்ரூமில மோனிகாவைப் பாத்ததா.."
"சந்தேகமே இல்லை" என்ற ஷோபா, ஸ்வேதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். கண்களில் நீர். "எங்க மோனி அப்படி பண்ணுமா? நிச்சயமா கிடையாது. ஆனா பாத்ரூமில நான் டாய்லெட் போய் எழறப்ப திடீர்னு வந்த மோனி கோபமா என்னை முறைச்சா.. மிரண்டு போன நான் எழுந்திருக்குமுன் ஒரு நொடில அந்தரங்கமா என் கருவுக்குள்ள குரூரமா கைவிட்டுக் கீறி.. இது உனக்கு வேண்டாம்னு சொல்லி பகபகனு சிரிச்சா. நான் வலியில் கத்துறப்ப காணாம போயிட்டா.. என் கரு கலைஞ்சிடுச்சு.. அவ வந்துட்டு போனதுக்கு வெளில ஒரு அடையாளமும் இல்லே.. ஆனா உள்ளே என் கீறல்கள் நிஜம்.. நான் டாய்லெட்ல விழுந்ததா டாக்டர் சொல்றாங்க.. ஆனா நான் விழலே." என்ற ஷோபாவை ஆதரவாகப் பிடித்துக் கொண்டனர் ஷைலஜாவும் ஸ்வேதாவும்.
உதவியாளர் குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கையில் ரதி சட்டென்று சுவரோரமாகப் பார்த்தார். அங்கே மோனிகா தனியாக நின்றபடி யாருடனோ மெதுவாக தலையசைத்துப் பேசிக்கொண்டிருந்தாள். மோனிகா அருகே போகும்படி ரதி ரகு, ஹரி, மதன், செபஸ்டியனிடம் ஜாடை காட்டினார். ஏதோ சொல்ல முயன்ற மதனை செபஸ்டியன் அடக்கி அமைதியென்றார் சைகையில். அனைவரும் மெள்ள நடந்து அருகே வந்ததும் சட்டென்று மோனி ஐம்பது கிமீ வேகத்தில் திரும்ப, திடுக்கிட்டு நின்றனர். "என்னப்பா?" என்றாள்.
"யார் கிட்ட பேசிட்டிருந்தே?" என்றான் ஹரி.
"மோனா மனி ரெண்டு பேரும் தான்" என்றாள். "அங்கே ஷோபா ஆன்டி ஜுரமா தூங்கறதால மெதுவா பேசினோம்"
பயத்தில் விழித்த ஸ்வேதாவை அமைதிப்படுத்திய ஹரி "என்ன சொன்னாங்க மோனாவும் மனியும்?" என்றான்.
"என்னை வர சொல்றாங்கபா. நான் போறேன்"
ஹரியைத் தொட்டுத் தடுத்த செபஸ்டியன் "மோனி, எம்பேரு செபஸ்டியன். அவங்களை கூப்பிட்டு பேசறியாமா? அப்பா அம்மா எல்லாம் இங்கே இருக்காங்க.. ஒண்ணு ரெண்டு செய்தி சொல்லணும்னு சொல்றியா?" என்றார். அவரைக் கவனிக்காதது போல "அட ஷோபா ஆன்டி இங்கல்ல இருக்காங்க.." என்று ஓடி அவளைக் கட்டிக் கொண்டாள் மோனி. ஷோபா அவளை ஆதரவாக அணைத்தாள். மிக மெதுவாக தலை திருப்பி செபஸ்டியனை பார்த்த மோனி, "ஹலோ பழனி அங்கில். என்ன செய்தி சொல்லணும்?" என்றாள். "பழனி இல்லமா. செபஸ்டியன். ஹி இஸ் அ ப்ரென்ட்" என்றான் ஹரி. "மோனா மனிய கூப்பிட்டு பேசுறியா? எங்க கூட பேசணும்னு சொல்றியா?"
"சரிப்பா" என்ற மோனி "அவங்க வரட்டும் சொல்றேன்" என்றாள்.
செபஸ்டியன் மதனிடம் ரகசியமாக "பத்து நிமிஷத்துல வந்துடறேன். என்ன ஆனாலும் பாப்பாவை இங்கேயே வச்சிருங்க. இப்ப வந்துடுவேன்" என்றான். அவன் அறையிலிருந்து சென்றதை பிற நண்பர்களும் காவலர்களும் கவனிக்கவில்லை. மோனியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஷோபா மட்டும் நின்றபடி செபஸ்டியன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மதன் எழுந்து "கொஞ்சம் களைப்பாறிட்டு வருவோம்" என்றான். பெண்ணைக் கவனமாகப் பிடித்துக் கொள்ளும்படி ஹரியிடம் ஜாடை காட்டிவிட்டு "ஆபீசர், எக்ஸ்கியூஸ் அஸ்" என்றான்.
"நாங்களும் ஸ்டேஷன் போய் விவரம் பதிவு செஞ்சு வரணும். கவலைப்படாதீங்க, மத்த ரெண்டு பேரைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் ஓய மாட்டோம்" என்று ரதி ஷோபாவை தோளில் மெல்லத் தொட்டார். உடன் வந்தோருடன் விடைபெற்றார். மேனேஜர் விழா அறையை இவர்களுக்காக ஒதுக்கி அங்கேயே சொகுசு நாற்காலிகளும் சோபாக்களும் சில படுக்கை வசதிகள் செய்திருந்தார். "எல்லாரும் ஒண்ணா இங்கயே இருங்க. வேறே ஏதாவது வேணும்னா சொல்லுங்க. இந்த அறை வாசல்ல ரெண்டு செக்யூரிடி இருக்காங்க" என்று யாவரும் விடைபெற்றார்.
இரண்டு மணி நேரம் பொறுத்து அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டு மதன் விழித்தான். எதிரே சோபாவில் மோனியை இறுக அணைத்தபடி ஸ்வேதாவும் ஹரியும் உறங்க, சற்றுத் தள்ளி ஷோபா படுக்கையில் கிடக்க ரகு தரையில் கிடந்தான். கதவு மறுபடியும் தட்டும் சத்தம் கேட்க, எழுந்தான். மெள்ள ஹரியையும் ரகுவையும் தொட்டு எழுப்பி கதவருகே வரும்படி சொன்னான். கதவைத் திறந்தான். வெளியே செபஸ்டியன் நின்று கொண்டிருந்தார். அவரருகே ஒரு வயதான பெண்மணி. வெள்ளையில் மருத்துவ அங்கி அணிந்திருந்தார். "என்ன?" என்றான் மதன்.
"விவகாரம் முத்திட்டு வருது" என்றார் செபஸ்டியன். இதற்குள் ஹரியும் ரகுவும் வெளியே வந்தனர். சட்டென்று ஷைலஜாவும் வந்தாள். "என்னை விட்டு எங்க தண்ணியடிக்க ஓடுறீங்க?" என்றவள் "ஓ.. நீங்களா?" என்றாள் செபஸ்டியனிடம். "என்ன விஷயம்?"
செபஸ்டியன் தயங்கி "இவங்க என் அத்தை. பெயர் ஜெயமேரி. இவங்க உதவி நமக்குத் தேவைப்படும்னு கூட்டி வந்தேன். நான் சொல்றதை கவனமா கேளுங்க. நாம இப்ப பார்த்த ஷோபா, அசல் ஷோபா இல்லை. தப்பா நினைக்காதீங்க ரகு. மோனியும் அசல் மோனி இல்லை. அதனால தான் ரெண்டு பேரும் சுமுகமா இருக்காங்க. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மோனி என்னைப் பழனினு சொல்லிச்சு இல்லையா? அதுல எந்த பிழையும் இல்லை. நானும் ஜெயமேரியும் கடைசியா ரெண்டு வருஷம் முன்னால ஒரு சாத்தான் ஓட்டினோம். அதுல பிழைச்ச சிறுவன் பெயர் பழனிவேலன்" என்றான். பெருமூச்சு விட்டான். "இது மோனிக்கு எப்படித் தெரியும்? நான் எந்த அனுமானமும் வேண்டாம்னு அத்தை கிட்டே விஷயம் சொல்லப் போனேன். அவங்க விவரம் எல்லாம் கேட்டு உடனே கிளம்பிட்டாங்க. சாத்தான் பேய் சமாளிப்பதில் மிகுந்த அனுபவம் உள்ளவங்க. ஷி இஸ் அன் எக்ஸ்பர்ட்"
"என்னய்யா இது? ஒரு பக்கம் போலீஸ் விசாரணை நடக்குது. இதுல பேய் சாத்தான்னுட்டு.. எசகு பிசகா எதுனா நடந்துச்சுனா? குழந்தைங்க பிரச்சினை இது.. ரதிகிட்டே ஒரு வார்த்தை கேட்க வேணாமா? வீ ஆர் மேகிங் மேடர்ஸ் வொர்ஸ்" என்றான் ரகு.
அதுவரை அமைதியாக இருந்த ஜெயமேரி ஆங்கிலத்தில் "யு மே பி ரைட்" என்றார். "ரதி வந்தாங்கனா ஒரு வார்த்தை என்ன பல வார்த்தை கேட்கலாம்" என்றார் மிக அமைதியாக. அந்தக் கணத்தில் மேனேஜர் ஓடி வந்தார். அவசரமாக "எஸ்ஐ ரதி வந்துட்டிருந்த ஜீப் விபத்துக்குள்ளாகி ரதியும் ஏட்டுங்களும் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிருக்காங்க" என்றார்.
"எதிர்பார்த்தேன்" என்றார் ஜெயமேரி சாதாரணமாக. "கவலை வேண்டாம். அவங்களுக்கு சரியாகிடும். இந்த விஷயத்துல தலையிட வேணாம்னு அவங்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கு முனி, தட்ஸ் ஆல். இதுல ஸ்டேக் ஹோல்டர்ஸ் நீங்க மூணு பெற்றோர்கள் தான். போலீசுக்கு இது ஒரு கேஸ். கோப்பு. வேலை. மத்தபடி பாத்தியதை உள்ள நீங்க மூணு பெற்றோர்களும் தான் முடிவெடுக்கணும், நடவடிக்கை எடுக்கணும். ஆர் யு ரெடி?" என்றார் ஜெயமேரி.
பிரமை பிடித்துச் சிலையாகிப் போயிருந்தவர்கள் சுதாரித்தனர். "ஐம் சாரி. என்ன சொல்றதுணு தெரியலே. உங்களை தவறா நினைக்கலே.." என்ற ரகுவைத் தட்டிக் கொடுத்தார் செபஸ்டியன். "பரவாயில்லை" என்றார் ஜெயமேரி. "இனி உங்க பிள்ளைகளை மீட்கறது தான் நம்ம வேலை. ஒத்துமையா செயல்படணும். நான் தான் குழுவின் தலைவி. நான் சொல்றதை அப்படியே கேட்கணும். சரியா?" என்றார். ஆமோதித்தனர்.
ஜெயமேரி தொடர்ந்தார். "உள்ளே இருக்குறது எந்த ஷோபானு நமக்கு குழப்பமாகவே இருக்கும். ஆனா அந்த ஷோபாவுக்கு இந்த ஜெயமேரியையும் செபஸ்டியனையும் தெரியும். அதான் பழனினு சொல்லி உசுப்பு ஏத்திவிட்டிருக்கு. நாங்க சாதாரணமா நடந்துக்குவோம். அதே போல மோனியை எந்த காரணம் கொண்டும் நாம இனி தொலைக்கக் கூடாது. ஒரு சின்ன கயிறு தருவேன். அதை நீங்க மோனி கைல கட்டணும்" என்று மூன்று சிறிய கயிறுகளை தன் சட்டைப் பையிலிருந்து எடுத்து ஹரியிடம் கொடுத்தார். "ஒண்ணை மோனி கைல கட்டுங்க. மத்த ரெண்டையும் நீங்களும் ஸ்வேதாவும் கட்டுங்க. நாலாவதா ஒரு கயிறை இவர் கட்டட்டும் என்று ரகுவிடம் கொடுத்தார். அஞ்சாவதா நான் கட்டிக்குறேன். ஒரு வேளை மோனி தொலைஞ்சு போனா சிறு கயிறு என்றாலும் இதை வைத்து தான் நாம மோனியை வச்சு எல்லாரையும் மீட்கப் போறோம்" என்றார்.
"தைரியமா இருங்க. குட்டிச்சாத்தான் கிட்டே பயம் எதுவும் தேவையில்லை. இந்தப் பகுதில குட்டிச்சாத்தானை கோவில் கட்டி கும்பிடுறவாங்க இருக்காங்க. இந்து மதத்துல குட்டிச்சாத்தானை சிவ வடிவமா பாக்குறவாங்க இருக்காங்க. ஆனா முனி வேறே கதை. முனியை முறியடிக்கணும். குட்டிச்சாத்தானை மீட்டு எடுக்கணும். இது சரியான நேரம். இன்னும் பனிரெண்டு நிமிஷத்துல அபிராகண காலம் தொடங்குது. வேதத்துல கூட இந்த வேளை பத்தி சொல்லியிருக்கு. பிதிருக்களின் காலம்னு கூட சொல்வாங்க. மதியம் ஒண்ணு பனிரெண்டுக்கு தொடங்கி மூணு முப்பத்தாறு வரை அப்ராஹண காலம். இந்த ரெண்டரை மணிக்குள்ளாற நாம எல்லாரையும் மீட்டு வரணும்" என்ற ஜெயமேரி சுற்றி இருந்தவர்களைப் பார்த்தார். "உள்ளே போகலாமா?" என்றார்.
[தொடரும்] சாத்தியம்: 77.98%
கதை சூடு பிடிக்குது. அதுக்கு வரும் முன் இப்ப எனக்குக் கிலி! மீட்டாவையும் சாத்தான் தொத்திக்கிடிச்சோன்னு!!!!!! பாருங்க எல்லா பசங்களையும் ரொம்ப சின்ன பசங்களா கொடுத்திருக்கு!!!!
பதிலளிநீக்குகீதா
// இப்ப எனக்குக் கிலி! மீட்டாவையும் சாத்தான் தொத்திக்கிடிச்சோன்னு!!!!!! பாருங்க எல்லா பசங்களையும் ரொம்ப சின்ன பசங்களா கொடுத்திருக்கு!!!! //
நீக்குஅட... இதைச் சொல்றீங்க... அதை முயற்சி பண்ணின நானே இன்னும் சின்னப் பையனாயிட்டேன்....
:-))
நீக்குஹாஹாஹா பாருங்க சைக்கிள் காப்ல! ஸ்ரீராம்!
நீக்குஆனாலும் ஜெ கே அண்ணாவைத்தான் கேக்கணும்!
கீதா
யாரையும் காணும்? பயந்துகிட்டு இருக்காங்களா!!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குவேதம் அப்ராஹண காலம்னு என்னென்னவோ சொல்றீங்க. அதெல்லாம் புரியலை. பித்ருக்கள் காலம் என்றால் நல்ல பித்ருக்கள் கெட்ட பித்ருக்கள்னு உண்டோ?
கீதா
உண்டு. நாம் அழைக்கும்போது வந்து பதில் சொல்லும் அவைகளில் நம்மை தவறாக வழி நடத்துக் கெட்ட ஆவிகள் உண்டு.
நீக்குசந்தேகமானால் ஹி...டிமாண்ட்டி காலனி ஹி.... முதல் பாகம் ஹி... பார்க்கவும்!
அபாராகண காலம் பித்ரு காலம் இதெல்லாம் நாள் நாழிகை குளிகை எல்லாம் தெரிஞ்சவங்க பதில் சொன்னா விவரமா இருக்கும். என் போல நுனிப்புல் ஆய்வு பண்ணிட்டு கதை எழுதுறவாங்க இதுக்கெல்லாம் பதில் சொன்னா அவ்வளவு தான்.
நீக்குபிதிருக்கள் உயிரோட இருக்குறப்ப என்ன கிழிச்சாங்கனு யோசிச்சமினா இதுக்கு விடை கிடைக்கும்னு தோணுது. எத்தனை அப்பா அம்மா தாத்தா பாட்டிகள் தங்கள் சந்ததிகளை உயிருடன் இருக்கையில் உண்மையாக நேசித்து வழி நடத்தினார்கள்? என் பரம்பரையிலே பார்த்தால் கூட ஒண்ணும் சொல்லிக்காறாபல இல்லே. பித்ரு இதிலெல்லாம் நம்பிக்கை வைப்பவர்களுக்கு , பித்ருவான பிறகு திடீரென்று அவர்கள் நடத்தை மாறுமா என்ற கேள்வி தோன்றுமா தெரியவில்லை.
நீக்குஅதே பார்வையில், நாமும் நம் மூத்த உறவுகளை அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது அன்பார்ந்த அன்போடா நடத்துகிறோம்? ஆனால் அவர்கள் பிதிருக்கள் ஆனதும் இல்லாத பக்தி பரவசதுல வருடத்திலோ மாதத்திலோ ஒரே ஒரு நாளைக்கு ஆடாத ஆட்டம் ஆடுறோம். பித்ரு கோவம் பொல்லாத சந்ததி சாபம் அப்படி இப்படினு நடுங்கி பித்ரு கொண்டாட்டம் பண்றோம். டேய்.. இன்னாங்கடா.
நீக்குஜீவதோர் வாக்ய கரணாது; ப்ராத்யாப்தம் பூரி போஜணாது ; கயாயாம் பிண்ட தாணாது ; த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய...
நீக்குஒரு புத்திரனின் தலையாய கடமை என்ன என்றால் அப்பா அம்மா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி கேட்டு அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் காலமானபின் அவர்கள் மறைந்த திதியில் திதிகொடுத்து அவர்கள் பசியைப் போக்கவேண்டும். அவர்கள் பசியைப் போக்கத் தேவை எள்ளும் தண்ணீரும்தான். வேறு என்ன வேண்டும்?
//பிதிருக்கள் உயிரோட இருக்குறப்ப என்ன கிழிச்சாங்கனு யோசிச்சமினா இதுக்கு விடை கிடைக்கும்னு தோணுது. எத்தனை அப்பா அம்மா தாத்தா பாட்டிகள் தங்கள் சந்ததிகளை உயிருடன் இருக்கையில் உண்மையாக நேசித்து வழி நடத்தினார்கள்? என் பரம்பரையிலே பார்த்தால் கூட ஒண்ணும் சொல்லிக்காறாபல இல்லே.//
நீக்குஅப்பாதுரை ஜி ஹையோ உங்களுக்கு ஷொட்டு கை கொடுத்துப்பாராட்டத் தோன்றுகிறது. என் சிந்தனை அப்படியே சொல்லிருக்கீங்க. இது தப்புன்னு இங்கு பலரும் சொல்லலாம். But I never mind. ஏனென்றால் ஒவ்வொருவரது அனுபவங்கள் பொருத்து அப்படி....நான் எப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டவைதான் நிறைய.
இப்பதான் கில்லர்ஜி தளத்துல பெற்றோர் வளர்ப்பு எவ்வளவு முக்கியம்னு சொல்லிருந்தேன் அது போல இங்கும் எபியில் 2, 3 நாள் முன்னர் னு நினைக்கிறேன் மனைவி அமைவதெல்லாம் கணவன் அமைவதெல்லாம்ன்னு சொல்றதை விட என்னைப் பொருத்த வரையில் பெற்றோர் அமைவது எல்லாம் என்பது மிக மிக முக்கியம்னு ஏன்னா அவங்கிட்டருந்துதானே அடுத்த தலைமுறை ஒவ்வொரு தலைமுறையும்!
கீதா
அப்பாதுரை ஜி உங்களின் இரண்டாவது கருத்தையும் ஆமோதிக்கிறேன் அப்படியே. ஆனால் அன்போடு நடத்த அப்படியான பாடம் கிடைப்பதில்லை. இருந்தாலும் நாம் அவங்களைப் போல இருக்கக் கூடாதுன்னு கத்துக்கிட்டு அவங்க வயசான காலத்துல பார்த்துக் கொண்டு அன்போடுதான் திட்டிக்கிட்டு இல்ல....நம்மால் ஆனதைச் செய்கிறோம்தான்.
நீக்குஆனால் கண்டிப்பாகப் பயத்தில் இல்லை (எனக்கு) அதாவது ஹையோ பாவ புண்ணியம் நமக்குப் புண்ணியம் கிடைக்கும், நம்ம புள்ளைங்க நல்லாருப்பாங்க என்று நினைத்து எதிர்பார்ப்பில் செய்வதில்லை. இப்ப என்ன அவங்களுக்குத் தேவையோ அதை நல்ல மனதோடு செய்தல் அம்புட்டுத்தான். அந்தப் பயங்களில் சிக்கிக் கொள்ள விழைந்ததில்லை. Live this moment கூடியவரை நல்ல மனதுடன்!
கீதா
ஸ்ரீராம் அதே! அவங்க உயிரோடு இருக்கும் போது அவங்களை நல்லா பாத்துக்கணும்!
நீக்குகீதா
பல்கொத்தி.. ச்சே... பு. முனி கெக்கலியிட்டுச் சிரித்தபின் சொல்லியது...
பதிலளிநீக்கு"JKC ஸாரோட போன வார ஆரூடம் பலிக்கவில்லையே... ஏன்னு தெரியுமா?"
"ஏன்?"
"புழக்கடைக்கு வா... சொல்றேன்..."
"எங்க வீட்டுல புழக்கடையே இல்லையே..."
இதற்கு பதில் சொல்லாமல் ஒரு உறுமி உறுமிவிட்டு கிச்சன் ஜன்னல் வழியே ஜெட் போல புகையாய் சென்று மறைந்துவிட்டது!
ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன், ஸ்ரீரான். ஆனால் பாருங்க ஜெ கே அண்ணா வீட்டில் புழக்கடை உண்டு... எனக்குத் தெரிந்தவரையில். தனி வீடு.
நீக்குவாரேன் துடைப்பத்தோடு அதுவும் தென்னை வாரிக்கட்டையோடு வாரேன்னு!
துடைப்பம் கண்டா பயமில்லையோ அப்படித்தானே சொல்வாங்க இல்லையா?
கீதா
:-)
பதிலளிநீக்குமரிஷ்காவின் பூதத்தைக் கூப்பிட்டேன்...
பதிலளிநீக்கு"இன்னும் ஒரு மர்மம் கூட விலகவில்லையே... அடுத்த வாரம் 5/5 ஆச்சே.... அதற்குள் எப்படி மர்ம முடிச்சுகளை அவிழ்த்து கதையை முடிக்க முடியும்? இன்னும் இரண்டு வாரம் வேண்டுமோ... என்ன ஆகும்? எப்படி முடியும்?"
மரிஷ்கா குழம்பியது...
"நீ வழக்கமா அனுஷ்காவைத்தானே கேட்பே... என்னை ஏன் கேட்கறே?"
"அனுஷ் என்னோட ஆளு... நீ அப்பாதுரையோட ஆளு.. அவர்தானே உன்னைப் படைச்சார்? உனக்குத் தெரிந்திருக்குமே...."
"நானே பாதியில நிக்கேன்.. ரகுவுக்குத் தெரிஞ்சிருக்கலாம்... கேளேன்.. கேட்டுப்பாரேன்..."
"அட அறிவில்லா மரிஷ்... ரகுவும் இங்கே உள்ளே மாட்டிக்கிட்டிருக்காப்லயே..."
"முப்பாலும் அறிவேன் மூடனே... தப்பா துரைப்பேன் கேள்.... எப்போதும் எந்தக் கேள்விக்கும் பதிலும் சொல்வேன்.. ஆயின் அப்பாதுரையின் மனம் மட்டும் இப்போதும் அறியேன்"
,மரிஷ் 'ஷ்.....' என்ற சத்தத்துடன் இருந்த இடத்திலேயே மாயமாய் மறைந்தது.
இங்கேதான் ஒளிந்திருக்கும். இருங்கள்... தேடிப் பார்க்கிறேன்.
நானும் நினைச்சேன் ஸ்ரீராம்....இப்பதான் கொஞ்சம் சூடு பிடிச்சிருக்கு அடுத்த வாரம் முடிக்கணும்னா தடக்குபுடக்குனு இந்தப் பல்கொட்டிப் பேய் மாதிரி இதையும் சீக்கிரம் தொரத்திவிட்டுருவாரோ அப்பாதுரை ஜி ந்னு நினைச்சு
நீக்குஇங்கு கமென்ட் போட வந்தா மேலே எல்லாம் கமென்ட் இந்த கமென்ட் பார்த்ததும் நீங்களும் அதையே இப்படி சொல்லி...ஹாஹாஹா
கீதா
உங்க கமென்ட் பார்த்து சிரித்துவிட்டேன்! பாவம் ஸ்ரீராம், அனுஷ்! அதை கொண்டாராதீங்க பயந்துறப் போவுது!
நீக்குமுனிகிட்ட காமிச்சிராதீங்க அது லபக்குனு பிடிச்சிக்கிடப் போவுது. இத்தனை நாள் புடிச்சதுங்க எல்லாம் வேஸ்ட்! (அதாங்க சினிமாவுல!!!) இது சூப்பரா இருக்கேன்னு லபக்கிடாம!
பு முனி வந்து அப்பாதுரை கைலதானே இருக்கு அவர் ஆட்டி வைக்கறபடி அது ஆடும்! அடங்குனா அடங்கிடப் போவுது!
அந்த குருப்புக்கு இந்த ரகசியம் தெரியலை பாருங்க!
கீதா
அட்டகாசம் போங்க. கதை எழுதுறதா சொன்னேன், மர்மம் விளக்கறதா சொன்னேனா? அதெல்லாம் நெல்லை பாத்துக்குவாரு. ஒண்ணு பாதில நிக்கும் இல்லே சப்புனு முடியும்னு சொல்லிட்டாரே. ஆமா, பேய் கதை அந்தரத்துல நீக்க வேணாமா? அப்புறம் என்ன பேய் கதை?
பதிலளிநீக்குஅட.. புழக்கடை முனியே.....
நீக்குஅப்படி நீக்கினா அப்புறம் பார்ட் 1, 2 ந்னு இந்த ஓமன், எக்சார்ஸிஸ்ட் போல போகணுமே!!!!! அந்த எண்ணமோ!!!
நீக்குகீதா
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஉவரி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி கோயிலில் இருந்து..
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துகள்
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்....
பதிலளிநீக்குநம்ம அருள்வாக்கு பலிக்கலையே என்று அடங்கி இருந்தால் ஸ்ரீராமும் கீதா ரங்கனும் எண்ணையில் வெடிக்கிற உப்பு சீடை மாதிரி ஜிங்கு ஜக்கரா என்று சுற்றி வந்து கும்மி அடிக்கிறார்கள். போதாதற்கு புழக்கடை முனி வேற. சரி அப்பா(துரை) சரணம் என்று கதையில் புகுந்தால் ஒரே கான்ட்ரிபியூஷன் (confusion). சரி கதை முடியட்டும் பாக்கலாம் என்று முனிக்கு ஈடாக குட்டிச்சாத்தான் கருங்குட்டி சாத்தானை கூப்பிட்டிருக்கேன்.
பதிலளிநீக்குபிள்ளைகள் கூப்பிடுவது போல் அப்பா(துரை யே) காப்பாத்து.
Jayakumar
ஹிஹிஹி
நீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குகதை விறு விறுப்பாக போகிறது.
பதிலளிநீக்கு//உள்ளே இருக்குறது எந்த ஷோபானு நமக்கு குழப்பமாகவே இருக்கும். //
அதுதானே! எந்த ஷோபா?
ஜெயமேரி குழு ஒற்றுமையாக
எல்லோரையும் மீட்டால் சரிதான்.
அபிராகண காலமா, அப்ராஹண காலமா?
பதிலளிநீக்குஇரண்டையும் கொடுத்து வேணுங்க்கற ஒண்ணை எடுத்துங்கன்னு
சாய்ஸ் போலக் கொடுத்திருப்பதால் சந்தேகம்.
சரியாப் பிடிச்சீங்க. தமிழ்ல அபாராகண காலம்னு சொல்லணுமோ?
நீக்குமுந்தைய பகுதிகளையும் வாசித்துவிட்டேன். நல்ல விறு விறுப்பாக இருக்கிறது இப்பகுதி. அடுத்த பகுதியில் முடிந்துவிடுமா? அதற்குள் செபாஸ்டியனும், ஜெயமேரியும் மீட்டுவிடுவார்களா? இப்போது மோனிகாவைப் போகாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டுமே.
பதிலளிநீக்குதொடர்கிறேன்
துளசிதரன்