வெள்ளி, 19 மே, 2017

வெள்ளி வீடியோ 170519 : நகலும் அசலும்



     முதலில் இந்த நகல் பாடல்.  கனி முத்து பாப்பா என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.  இசை வேதா இல்லை!  TV ராஜு வாம்!  நல்லவேளை தமிழில் ஆண் குரல் பாடவில்லை!  

 
 
     ஹிந்தியில் ஆண்குரல்தான் விசேஷம்.  அங்கும் பெண்குரல் உண்டு என்றாலும் நான் கிஷோர் ரசிகன்.  எனவே அவர் குரலிலேயே ஒலிக்க வைக்கிறேன்!!  இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் ஹிந்தியிலிருந்து இறக்குமதி!  ஒன்று இந்தப் பாடல்.  இந்தப் பாடல் ஒரிஜினல் 'ஷர்மிலி' ஹிந்தித் திரைப்படத்திலிருந்து..  
 
 




     இரண்டாவது பாடல் எஸ் பி பி குரலில் "காலங்களே... காலங்களே...  காதலிசை பாடுங்களே.. "   காட்சியும் ஹிந்தியிலிருந்து உருவி இருக்கிறார்கள்! ஆனால் எனக்கு எஸ் பி பி யும் பிடிக்கும்.  எனவே தமிழில் இந்தப் பாடலும் பிடிக்கும் என்றாலும் அவரின் அந்த "ஓடலேரி ஒடலேறி" கள் (!!) ஹிந்தி கிஷோர் தரத்துக்கு வரவில்லை!



     இதன் ஒரிஜினல் அந்தாஸ் திரைப்படத்தில் கிஷோர் குமாரின் பிரபல பாடல்.   இசை சங்கர்ஜெய்கிஷன்.  அழகு ராஜேஷ் கன்னா - இளமை ஹேமமாலினி! என்ன உற்சாகம் பாருங்கள்..




     மூன்றாவது பாடல் "சித்தி சொல்லுச் சொல்லு..  இதுவும் அதே அந்தாஸ் படத்திலிருந்து உருவியதுதான்... காட்சியும்!



     இந்தப் பாடலின் ஒரிஜினல் இதோ...



     இந்தப் படத்தில் இன்னொன்று.  ஜெய்சங்கர் அடிக்கடி "நோ டியர்ஸ்..  ஐ ஹேட் டியர்ஸ்..." என்பார்.  இந்த வசனம் கூட ஹிந்தியிலிருந்து உருவியது!  ஆனால் அது 'அமர்ப்ரேம்' படத்தில் ராஜேஷ்கன்னா சொல்வது!



     நெல்லை..  ஹிந்திப் பாடல்கள் கேட்டதில்லை என்று சொல்லியிருந்தீர்கள் என்று நினைவு.  கிஷோரின் குரலைக் கேளுங்கள்.  என் அபிமான ஆர் டி பர்மனின் தந்தை எஸ் டி பர்மன் இசையில்..  மற்றும் ஷங்கர் ஜெய்கிஷன் இசையில்!   கிஷோர் குரலின் குழைவையும் கேளுங்கள்!

45 கருத்துகள்:

  1. அப்படி அலேக்...!

    (ஹிந்தி பாடல்கள் அதிகம் கேட்பதில்லை...)

    பதிலளிநீக்கு
  2. நானும் ஹிந்திப் பாடல்கள் கேட்டதில்லை. தமிழில் கூட தமிழ்நாட்டில் இருந்த வரை கேட்ட பாடல்கள் இன்னும் நினைவிலிருக்கிறது. பல பாடல்களின் வரிகள் கூட நினைவில் உள்ளது. இதையும் கேட்கிறேன்..

    கீதா: நானும் ஹிந்திப் பாடல்கள் கேட்டதில்லை. தமிழ்ப்பாடல்கள் கூட அப்போது சிலோன் ரேடியோவில் கேட்டதுதான் அதுவும் வரிகள் எல்லாம் மறந்துவிட்டது. இப்போதைய பாடல்கள் ஒரு சில மட்டுமே விரல் விட்டு எண்ணும் அளவுதான் தெரிகிறது. பாடல்களை ஒலிக்கவிட்டாச்சு....கேட்டுக் கொண்டிருக்கிறேன்...மீண்டும் வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் ஹிந்திப்பாடல்களைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டதை வாசிக்கும் போது நினைவுக்கு வரவில்லை. கேட்டதும் நினைவுக்கு வந்தது. அனைத்தையும் ரசித்தேன்...சூப்பர் பாடல்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஒரிஜனல் நன்றாக இருக்கிறது. இப்படித் தழுவும் போது தழுவல்கள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. இதிலும் அப்படியே.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ராதையின் நெஞ்சமே, ஹிந்தி குரல் நன்றாக இருக்கு. 'ப்யார்' என்றால் காதல் என்று அர்த்தம் தெரிந்ததென்றாலும், அர்த்தம் புரிந்துதானே பாடலை ரசிக்க முடியும்? எனக்கு தமிழ் வெர்ஷன் எல்லாம் பிடித்திருந்தன. 'கண்ணே பாப்பா கனிமுத்துப் பாப்பா" நான் பரமக்குடியில் 3ஆவதோ 2ஆவதோ படித்துக்கொண்டிருக்கும்போது பார்த்த படம் என்று ஞாபகம். அதேபோல் அப்போது கருந்தேள் கண்ணாயிரம், 'ராஜ ராஜ சோழன்' போன்ற படங்களும் பார்த்தேன். 'ராஜ ராஜ சோழன்' சிவாஜியின் கையை மட்டும் க்ளோஸப்பில் பார்த்து வியந்திருக்கிறேன். அந்த வயதில் திரைக்குப் பின்னாலிருந்துதான் நடிக்கிறார்கள் என்று நம்பியிருக்கிறேன்.

    "என்ன உற்சாகம் பாருங்கள்"- யாருக்கு? அனேகமாக ஸ்ரீராமுக்கு என்று நினைக்கிறேன். (ஹேமமாலினியைக் கண்டதும் உற்சாகம்)

    'சித்தி சொல்லு சொல்லு' - எங்கள் கனவுக்கன்னி (ஒரு காலத்தைய) ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்ததை ஸ்ரீராம் குறிப்பிடாததைக் கண்டித்து ஒரு ரசிகனுமா பொங்கி எழ மாட்டான்? பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் நீங்கள் பொங்கி விட்டீர்களே பிறகு மற்றவர்கள் துணை எதற்கு நண்பரே...

      நீக்கு
    2. தனக்கு என்ன வயது என்று சொல்லி விட்டார் ஜி...

      நீக்கு
  6. எல்லா பாடல்களையும் ரசித்து கேட்டேன் ஸ்ரீராம் ஜி
    கண்டுபபிடித்து காண வைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. //என்ன உற்சாகம் பாருங்கள்"- யாருக்கு? அனேகமாக ஸ்ரீராமுக்கு என்று நினைக்கிறேன். (ஹேமமாலினியைக் கண்டதும் உற்சாகம்)//
    ஹஆஹாஆஆ :))

    பதிலளிநீக்கு
  8. நிறைய பாடல்களை இப்படி சுட்டு போட்டது நல்லாவே இருக்கும் ..
    சில கவிழ்த்துப்போடும் ..

    காலங்களே பாட்டு வர்ற இடம் மவுண்ட் ரோடா !!!!

    பதிலளிநீக்கு
  9. அவ்வப்போது சில பாடல்களை யூ ட்யூபில் பார்ப்பதுண்டு நினைவுக்கு வந்து வரிகள் வராமல் சிரமப் படும்போது பார்ப்பேன் இப்போது அதுவும் குறைந்து விட்டது பதிவுகளில் காணொளிகளை பார்ப்பவர் குறைவு. அதுவும் ஹிந்தி பாடல்கள் எதுவும் புரியாது இப்போதெல்லாம் தமிழிலிருந்து ஹிந்திக்கு இறக்குமதியாமே

    பதிலளிநீக்கு
  10. ஹிந்தி டூயட்டுகளின் ஆண்குரல்களில் முகமது ரஃபி எனக்குப்பிடித்தமானவர். தத்துவப் பாடல்களுக்கு மன்னா டே (Manna Dey). கிஷோரின் சிலபாடல்களில் குஷி தெறிப்பதை ரசித்திருக்கிறேன். சிலவற்றை அவர்மட்டும்தான் பாடமுடியும்.எப்படி தமிழில் சிலபாடல்களை எல்.ஆர்.ஈஸ்வரி மட்டும்தான் பாடியிருக்கமுடியுமோ அப்படி!

    படங்களே நகலெடுக்கப்படும்போது பாடல்கள் எந்த மூலை. ’சித்தி சொல்லு சொல்லு’ , ’ஹைனா..போலோ..போலோ’ இரண்டும் எனக்கு பிடிக்கவில்லை.
    ’ஜிந்தகி ஏக் ஸஃபர் ஹை சுஹானா...’ (வாழ்வென்பது ஒரு ஆனந்தப்பயணம்...) நல்ல பாட்டு. ராஜேஷ் கன்னா, ஹேமமாலினியின் பீக் பீரியடில் வந்த ஹிட். ராஜேஷ் கன்னா, ஷர்மிளா டாகூர் நடித்த ஆராதனாவைப்போல- ’ரூப் தேரா மஸ்தானா..!’ சூப்பர்ஹிட் டூயட் நினைவிருக்கிறதா ஸ்ரீராம் (மற்றும் யாருக்காவது)? இதில் மஸ்தானா என்கிற ஹிந்தி வார்த்தையை தமிழ்ப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல! இருந்தும் படுத்துகிறேன்: மோஹிக்க வைக்கிறது உன் வடிவம் ! - எனலாமா? (ரூப் -வடிவம் ; தேரா - உன் (அதாவது உன் வடிவம்..)
    ரொம்பவும் போரடித்துவிட்டேன் போலிருக்கிறது..

    பதிலளிநீக்கு
  11. இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன்.
    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  12. கிஷோர் யொடெல் செய்யவே பிறந்தவர். அதெல்லாம்யாரு் காப்பி அடிக்க முடியாது. அந்தாஸ் படத்தில் வரும் அத்தனை பாடல்கள் எல்லாமே அருமை. Humm tho gaye baazaar mein lethi பாடல் குழந்தைகளுக்கு அப்போது மிகப் பிடிக்கும். கில்தே ஹைன் பாடலின் ரொமான்ஸ் outstanding.. நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. இதோ காணொளிகளைக் காணச் செல்கிறேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  14. தமிழில் tms சுசிலா போல ,கிஷோர் ஆஷா பாடிய பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது அந்த காலத்தில் !ஆராதனா பாடல்களை மறக்க முடியாதே :)

    பதிலளிநீக்கு
  15. ஆவ்வ்வ்வ் 7ம் வோட் போட்டு டமில் மனிட்டில ஏத்திட்டேன்ன்ன்ன்ன்:).. லிங் இணைச்சிருந்தால் காலையிலேயே ஏத்தி விட்டிருப்பனே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 346275849:).. இந்த கர்ர் ஆருக்கு என என்னிடம் யாரும் கேட்கக்கூடா சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  16. ////
    'சித்தி சொல்லு சொல்லு' - எங்கள் கனவுக்கன்னி (ஒரு காலத்தைய) ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்ததை ஸ்ரீராம் குறிப்பிடாததைக் கண்டித்து ஒரு ரசிகனுமா பொங்கி எழ மாட்டான்? பார்க்கலாம்.///

    ஏன் இப்போ அவ கனவுக்கண்ணி:) இல்லையோ நெல்லைத்தமிழன்?:).. என்னம்மா இப்பூடிப் பண்றீங்களேம்மா?:) ஹா ஹா ஹா... இங்கின தமனாவுக்குத்தான் பொயிங்க:) ஆட்கள் இருக்கினம்:)

    பதிலளிநீக்கு
  17. ///Angelin said...
    //என்ன உற்சாகம் பாருங்கள்"- யாருக்கு? அனேகமாக ஸ்ரீராமுக்கு என்று நினைக்கிறேன். (ஹேமமாலினியைக் கண்டதும் உற்சாகம்)//
    ஹஆஹாஆஆ :)) ///

    ஹா ஹா ஹா என்னாது ஹேம மாலினியா.. இருங்க முதல்ல யார் அது எனப் படம் தேடிப் பார்த்திட்டு வாறேன்ன்ன்.. ஹையோ ஸ்ரீராம் எதுபற்றியும் வாய் திறக்காட்டிலும், நெ.தமிழன் கரீட்டாக் கண்டு பிடிச்சிடுறாரே...:)..

    haa haa haa this is my gift to.............. :).

    http://www.topnews.in/files/Hema-Malini_3.jpg

    பதிலளிநீக்கு
  18. முத்துராமன் மாமாவின் பாடல் நல்ல பாடல்.. அவருக்காகவே கேட்கலாம்..

    சித்தி சொல்லு சொல்லு... குட்டி ஸ்ரீதேவி சூப்பர்... இதுவரை கேட்டதில்லை அப்பாடல்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான இசைப் பாடல்கள்

    பதிலளிநீக்கு
  20. சினிமா எல்லாம் ரொம்ப தூரம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. @athiraav இதுதான் ஹேமா மாலினி :)

    https://s-media-cache-ak0.pinimg.com/236x/3c/d4/27/3cd427f0d3b7b6b5de1c4de0943a3b3f.jpg

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ அப்போ நான் குடுத்த லிங்கில் இருப்பவ ஆரூஊஊ அதுவும் ஹேமமாலினி எனக் காட்டிச்சுதே அஞ்சூ கர்ர்ர்ர்ர்ர்:).

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நீங்கட ஹேமமாலியைப் பார்த்தால் நெல்லைத் தமிழன் சொன்னதுபோல உற்சாகம் பிறக்கும்தான்:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).

      நீக்கு
  22. That's her mom miyaav. Daughter looks very pretty isn't it..

    பதிலளிநீக்கு
  23. நன்றி துளஸிஜி. அந்நாளைய தமிழர்கள் ஹிந்திப் பாடல்கள் கேட்காதோர் மிகக் குறைவுதான்!

    கீதா.. பினாகா கீத்மாலா கூடாக கேட்டதில்லையா! ஒரிஜினல் நன்றாக இருக்கிறது என்கிற உங்கள் வரிகளை ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க நெல்லை.. // ராதையின் நெஞ்சமே ஹிந்திக்குரல் நல்லாயிருக்கு// கிஷோர் என்று சொன்னால்தான் என்ன! அவர் பாடல்களைத் தெடிக் கெட்டப் பாருங்கள். ரசிப்பீர்கள். என்ன உற்சாகம் என்று நான் சொன்னது ராஜேஷ்-ஹேமாவை! அவ்வளவு உற்சாகம் படத்தில் காட்டினாள் அடுத்து ஒரு துயரக் காட்சி வரும் என்பது திரை இலக்கணம்! பாட்டின் இறுதியில் விபத்தில் ராஜேஷ் "போய்விடுவார்".

    ஆனால் அந்தப் பாடல் நிச்சயம் எனக்கும் உற்சாகத்தைத் தரும்தான்!

    ஸ்ரீதேவி கனவுக்கன்னியா? எனக்கில்லை! பக்கத்து வீட்டுத் தோழி போலத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி கில்லர்ஜி. நிசம்ம்ம்ம்ம்ம்ம்மா எல்லாப் பாட்டையும் முளுசாக் கேட்டியளா...!!!

    பதிலளிநீக்கு
  26. அடடே... கில்லர்ஜியும் தனபாலனும் மீள் வருகை! !இரண்டாவது கமெண்ட்! நன்றி, நன்றி!

    பதிலளிநீக்கு
  27. நன்றி ஏஞ்சலின். 99-2000 பாடல் காட்சிகளில் அண்ணாசாலையைக் காணும்போதே ஆச்சர்யமாக இருக்கும்.. அதன்பின்தான் திடீரென்று நிறைய மாறுதல்கள்!

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஜி எம் பி ஸார். தமிழிலிருந்து ஹிந்திக்கு, ஹிந்தியிலிருந்து தமிழுக்கு எப்போதுமே உண்டு. தமிழர்களின் ஹிந்தி மோகத்தைத் தடுத்தவர்களில் முக்கியமானவர் இளையராஜா.

    பதிலளிநீக்கு
  29. வாங்க ஏகாந்தன் ஸார்... எனக்கு மொஹம்மத் பியை விட கிஷோர் பிடிக்கும். அவரின் குரலை - குரலின் இனிமையை - முழுமையாக வெளிக்கொண்டு வந்தவர்களில் முதன்மை SDB. பின்னர் முழுமையாக உபயோகப்படுத்திக் கொண்டவர் RDB.

    ஜிந்தகி ஏக் சபர் பாடலின் வரிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அமர்ப்ரேம் படத்தின் "குச் தோ லோக் கஹேங்கே.." அமானுஷ் படத்தின் "தில் ஐஸா " பாடல் உட்பட நிறையச் சொல்லலாம். "ஓ ஷாம் குச் அஜீப் தி..."

    ரூப்தேரா ,மஸ்தானா - மறக்க முடியுமா! //ரொம்பவும் போரடித்துவிட்டேன் போலிருக்கிறது.// இல்லை... சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  30. நன்றி வல்லிம்மா... நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள் என்று தெரியும்.

    பதிலளிநீக்கு
  31. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  32. நன்றி பகவான்ஜி. ஆராதனா, யாதோன் கி பாராத், பாபி, ஷோலே....

    பதிலளிநீக்கு
  33. வாங்க அதிரா..

    முதன்முறையாக உங்கள் பாணியில் பாஸிட்டிவ் செய்திகள் பதிவில் கமெண்ட் லிங்க் இணைத்துள்ளேன்!

    பாடல்களை ரசித்ததற்கு நன்றி. எனக்கு ஹிந்தியில் மூன்று நாயகிகளைப் பிடிக்கும். மும்தாஜ், ஹேமா, மாதுரி!

    பதிலளிநீக்கு
  34. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.

    பதிலளிநீக்கு
  35. அதிரா, ஏஞ்சலின்.. உங்களுக்கெல்லாம் கமெண்ட் பெட்டியில் அதிரா பிளாக் போல படம் தெரிகிறதா? எனக்கு லிங்க் எழுத்துகள் மட்டும்தான் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  36. இது போல் பல!

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  37. அசலும் நகலும் கண்டுபிடித்து பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  38. "சித்தி சொல்லு சொல்லு" தமிழ் (சகிக்காது) ஹிந்தி இரண்டும் கேட்டிருக்கேன். மற்றபடி எல்லாக் காணொளியையும் பார்க்கலை. இந்தியா வந்து தான் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!