2) நாவல் பழத்தின் புதிய, ஆக்கபூர்வமான உபயோகம். ஐ ஐ டி (ரூர்கீ) விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
3) உயிரிழந்த சி ஆர் பி எஃப் வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளார் கெளதம் காம்பிர்.
4) அரசு ஊழியர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் அல்ல. இதோ ஒரு மாணிக்கம். [நன்றி எல்கே)
5) நல்ல விஷயம்தான். ஊனமுற்றோருக்காக ஸ்டியரிங் சைக்கிள் கண்டுபிடித்திருக்கிறார்களாம் நத்தம் மாணவர்கள். ஆனால் இது எந்த அளவுக்கு உபயோகத்துக்கு வரும் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது முந்தைய செய்தி அனுபவங்கள்! மாணவர்களின் முயற்சியைப் பாராட்டுவோம்.
6) தன்னம்பிக்கை. மனோபலம். வாழ்க வீல் சேர் அழகி பட்டம் வென்ற விராலி மோடி.
7) கோவிலாக நினைத்து வாழ்ந்த தனது வீட்டை அகரம் ஃபௌண்டேஷனுக்கு தானமாகக் கொடுத்திருக்கிறார் நடிகர் சிவக்குமார்.
8) செய்ங்கப்பா... செய்ங்கப்பா.... இப்பவாவது செய்யுங்க.. ஆனால் முழுதும் சரியாக முடியும் வரை, நம்பிக்கை இருக்காது, நிம்மதியும் இருக்காது!
"சென்னை புறநகரில் உள்ள, அடையாறு ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள், பழைய பொலிவுக்கு மீண்டும் திரும்புகின்றன. 19 கோடி ரூபாய் செலவில், அதன் முழு அளவிற்கு துார்வாரி, அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன"
அனைத்துமே மகிழ்ச்சி தரும் செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்....
பதிலளிநீக்குநடிகர் திரு. சிவகுமார் வெகு காலமாகவே தானம் செய்து வருபவர் என்பது உலகம் அறிந்த விடயம்.
பதிலளிநீக்குஅதேநேரம் அகரம் பவுண்டேஷன் நடத்துபவர்கள் அவரது குடும்பத்தினர்தான் இந்த வீட்டை சிவானந்தா குருகுலத்திற்கு கொடுத்திருந்தால் உண்மையிலேயே தியாகம்தான் இருப்பினும் இவர்கள் குடும்பம் பல ஏழைகளுக்கு உதவுகிறது வாழ்க அந்த குடும்பம்.
ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபம் ஏழைகளுக்கு தானம் செய்யப்பட்டது என்று பறை சாற்றினார்கள்.
எந்த ஏழைக்கு அங்கு திருமணம் நடந்தது ?
வி.வி.ஐ.பி. களுக்கு மட்டுமே அனுமதி
இதில் கௌதம் காம்பீரின் செயல் பாராட்டுக்குறியது
மற்றவர்களையும் பாராட்டுவோம்.
உங்கள் கருத்தில் உடன்பாடு கில்லர்ஜி. அதேபோல அகரம் பௌண்டேஷன் நல்ல காரியம் செய்கிறார்கள்தான். ஆனால் அதிலும் ஒரு தடங்கல் உள்ளது. ஏற்கெனவே வேறு இடங்களில் படித்து ஓரிரு வருடங்களைக் கடந்து விட்ட மாணவர்களுக்கு உதவி கேட்டால் அவர்கள் (அகரம்) சொல்லும் இடத்தில்தான் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்களாம். சில சமயங்களில் முதலிலிருந்து..
பதிலளிநீக்குஇது எனக்கு புதிய செய்தி ஸ்ரீராம் ஜி நன்றி
நீக்குகெளதம் கம்பீர், சிவகுமார் போன்ற புகழ் பெற்றவர்கள் இத்தனை அருமையாக சமூக சேவை செய்யும்போது அது மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகி விடுகிறது!
பதிலளிநீக்குநத்தம் மாணவர்களின் சாதனை மிக அருமை!
அனைத்தும் நல்லா இருந்தது. நாவல்பழம்... சாப்பிட்டு எவ்வளவு காலமாயிற்று.
பதிலளிநீக்குசிவகுமார் தானம் (வேறு ஒரு தலைவர் வீட்டுப் பிரச்சனையால், அதாவது யாருக்கு வீட்டை எழுதிவைப்பது என்பதில், ஆஸ்பத்திரிக்கு தானம் தர நினைத்ததுபோல்) குறிப்பிடும்படி இல்லை. அடையாறு தூர்வாறுவது, கரையைச் சரிசெய்வது, கடலில் மணல் அள்ளி திமுக அரசியல்வாதி சேது அணைத்திட்டத்தில் சம்பாதித்தது போன்றதுதான்.
நல்ல நாடு நல்ல மண்ணு கண்ணனூர் மக்கள் மற்றும் அந்த அதிகாரிகள் வாழ்க ..எத்தனை சட்டம் இயற்றினாலும் மக்கள் அதை உணர்ந்து கடைபிடித்தால்மட்டுமே திட்டங்கள் வெற்றிபெறும் என்பதற்கு இவ்வூர் மக்கள் சாட்சி
பதிலளிநீக்கு..சிவகுமார் விஷயம் அரசல் புரசலா கொஞ்சம் சந்தேகம் அவ்வப்போது வரும் ஆனால் சந்தேகப்படக்கூடாது இல்லியா நல்லதே நடக்கட்டும்னு கடந்து செல்வேன் .
நாகப்பழத்துக்கு இப்படி ஒரு பயனும் இருக்கா ..பூண்டி ரிஸர்வாயர் பூங்காவில் நிறைய இருக்கும் இந்த மரங்கள் இப்போ இருக்கானு தெரில
இந்த பழ கான்சன்ட்ரேட் போட்டு பால் சர்பத் குடிச்சிருக்கேன் :)
காம்பிரின் நல்ல மனம் வாழ்க
ஆஹா நரேந்திரகுமார் சூப்பர் அதிகாரி ..எந்த ஒரு காரியத்தையும் ஈடுபாடுடன் செய்யும்போது வெற்றி கிட்டும் ..
ஊனமுற்றவர்களுக்கு அவர்கள் சக்கர நாற்காலி செல்ல அகலமான கதவு எண்ட்றேன்ஸ் தேவை மற்றும் தனி கழிவறை எல்லாம் கருத்தில் கொள்ளணும் அரசு ..இரண்டு செய்திகளில் விராலி மோடி போன்றோரிடமும் சிலமனிஷம் செய்த அந்த கேவலமான ஜென்மம் மனுஷ மிருக பிறப்பேயில்லை :( அதெல்லாம் aliens ..ஒன்று செய்ய இயலாதோரிடம் தங்கள் வீரத்தை காட்டும் ஜந்துக்களை
என்ன கேட்டகிரியில் சேர்ப்பதுன்னு தெரில :(
அடையார் அழகாக எல்லாம் நல்லபடி நடக்கட்டும்
பழம் தின்னி கொட்டைப் போடத்தான் தெரியும் பலருக்கும் ,வியப்பளிக்கிறது நாவல் பழத்தில் இருந்து சோலார் செல் தயாரிக்கும் ஐ ஐ டி (ரூர்கீ) விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு :)
பதிலளிநீக்குஅரசு ஊழியர் நரேந்திர குமார் வாழ்க!
பதிலளிநீக்குகண்ணூர் மக்கள் வாழ்க!
எடுத்துகாட்டிற்கு
பதிலளிநீக்குஎடுத்துகாட்டிய வழிகாட்டிகள் போல
பலர் ஊருக்குள்ளே இருப்பர்
இலை மறை காய் போல
ஒளிந்துள்ள வழிகாட்டிகளை
அறிமுகம் செய்வதால் - பலர்
அவர்களைப் போல முன்னுக்கு வரலாம்!
நல்ல செய்திகளுக்கு நன்றி. சில பார்வைகள்:
பதிலளிநீக்கு1. ஒரு சின்ன கரெக்ஷன்: கௌதம் காம்பீரல்ல (பெரும்பாலான தமிழ்ப்பத்திரிக்கைகள்/ஊடகங்களும் காம்பீர் என்றே எழுதி/சொல்லி வருகின்றன). சரியான உச்சரிப்பு: கௌதம் கம்பீர் (Gautam Gambhir). கம்பீர் என்பது பஞ்சாபி சர்நேம். அதாவது அய்யர், முதலியார், செட்டியார் போல ஒரு ஜாதிப்பெயர்.
2. ’ உயிருக்கு உயிராய் மதித்த தன் வீட்டைத் தானமாகக் கொடுத்திருக்கிறார் சிவகுமார்!’-பத்திரிக்கைகள் பெருமிதத்தில் மிதப்பதை நானும் கண்டேன். தானம் யாருக்கு? உங்களுக்கா அல்லது எனக்கா? அல்லது தேசத்தின் பேரில் எழுதிவைத்துவிட்டாரா? (அப்படியெல்லாம் செய்த அப்பாவிகள் வாழ்ந்த காலமும் ஒன்றிருந்தது. இப்போது மலையேறிவிட்டது). தன் பிள்ளைகள் நடத்தும் ‘அறக்கட்டளை’க்குத் தான் இந்த ‘தானம்’செய்திருக்கிறார் மேதகு சிவகுமார். இந்த அறக்கட்டளைமூலம் சில நல்ல காரியங்கள் நடந்திருக்கலாம்தான். மறுக்கவில்லை.
ஆனால் இந்தமாதிரி அறக்கட்டளைகளுக்கு இன்னொரு மறைவான நோக்கம் உண்டு. அது அறத்தோடு சம்பந்தப்படாதது. இன்கம்-டேக்ஸோடு நேரடித் தொடர்பானது! வருஷாவருஷம் நடிகர்கள்/பிரமுகர்களின் வருமானம் எகிற, எகிற வரிமதிப்பும் ஏறும். அதனை மட்டுப்படுத்த, IT துறைக்குப் போக்குக்காண்பிக்க இத்தகைய ‘அறக்கட்டளை’களை ஆர்ம்பித்து அவற்றிற்கு ‘நன்கொடை’ வழங்கிவிடுவார்கள் - வருமான வரிவிலக்கு பெறுவதற்கு. அதாவது தங்களால்/தங்கள் குடும்பத்தினர் /சார்ந்தவர்களால் நடத்தப்படும் அரசு சார்பற்ற சமூக சேவை நிறுவனமென பதிவு செய்யப்பட்டுள்ள இத்தகைய ‘கட்டளைக்கு’ டொனேஷன் கொடுத்து, வருமானவரித்துறைக்குக் கணக்குக் காண்பித்து வரிவிலக்குப் பெறுவது. இது எப்படி இருக்கு? இதுதான் இந்த ‘அறக்கட்டளைகளின்’ மறைந்திருக்கும் உண்மை நோக்கம். புரியாத பொதுஜனங்கள் ’ஆஹா, எத்தனை நல்ல மனம், எப்பேர்ப்பட்ட தர்மவான்’ என்றெல்லாம் ஓவராக உருகிக் கண்ணைத்துடைத்துக்கொள்வார்கள் !
நாவல் பழமும், குழந்தைகள் தயாரிப்பான சைகிளும் தவிர்த்து மற்றவை அறிந்தவையே! சிவகுமார் தானத்தால் உருகும் அளவுக்கு ஒன்றும் இல்லை. அகரம் ஃபவுன்டேஷன் செய்திகளும் அடிக்கடி கேள்விப் படுவது தான்! ஆகவே இதில் பாராட்ட எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்
பதிலளிநீக்குதம+1
வோட் பண்ண வந்த இடத்தில் புதுசு புதுசா தகவல்கள் அறிந்தேன்.
பதிலளிநீக்குகாம்பீரைப் பாராட்டுவோம்.
பதிலளிநீக்குமற்ற செய்திகளும் நன்று.
அனைத்து பதிவுகளும் நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்குகண்ணூர் மக்கள் வாழ்க வளமுடன்!!இப்படி எல்லா இடங்களிலும் மக்கள் ஒத்துழைத்தால் நலம் பெறலாம்.
பதிலளிநீக்குகாம்பீர் பாராட்டுக்குரியவர்...
ம்ம்ம்ம்ம் சிவக்குமார் வீடு தானம் அளித்தல்...ஸ்ரீராம் எனக்கென்னவோ இந்த ட்ரஸ்ட், குழுமங்கள், அசோசியேஷன், சங்கம் என்று சொல்லி சேவை செய்வதை விட, ஏனென்றால் அதில் பல மனிதர்களின் தலையீடுகள் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணங்களும் ஒவ்வொருவிதமாக ஏகமனதாக இல்லாமல்...என்று போவதைவிட, தனிமனிதர்கள் சத்தமில்லாமல், காஞ்சிப் பெரியவர் சொல்லியது போல் வலது கை செய்வது இடதுகைக்குக் கூடத் தெரியாமல் செய்பவர்களும் செயல்களும் இன்னும் சிறப்பானதோ என்று தோன்றும். இது எனது தனிப்பட்டக் கருத்து...
கீதா
நடிகர் சிவகுமார் தமது வீட்டை தானமாகவெல்லாம் கொடுக்கவில்லை. அகரம் ஃபவுண்டேஷனுக்கு அலுவலகம் தேடி சென்னையின் முக்கிய இடங்களில் அலைந்தபோது மாதவாடகையே கிட்டத்தட்ட 50,000 ரூபாய் ஆகிறது என்பதற்காக தமது வீட்டை அகரன் ஃபவுண்டேஷனின் செயற்பாடுகளுக்கு உபயோகித்துக்கொள்ள அலுவலகமாகத்தான் தந்திருக்கிறார். அந்த ஐம்பதாயிரம் ரூபாயை மாணவர்களுக்கான செலவுகளுக்கு வைத்துக்கொள்ளலாமே என்பதுதான் சிவகுமாரின் எண்ணம். அதற்குள் தானம் என்றவுடன் 'பல்லைப் பிடித்துப் பார்க்க'ஆசைப்பட்டவர்கள் மூக்குடைப் பட்டுக்கொள்ளலாம். அந்த வீட்டைப் பொறுத்தவரை சூர்யாவும் கார்த்தியும் சிவகுமார் வரைந்த ஓவியங்களை ஒரு கண்காட்சியாக மக்களுக்கு வைப்பதற்கு அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இருக்கின்றனர். இதற்கு சிவகுமாரும் தமது ஒப்புதலைத் தந்திருக்கிறார்.
பதிலளிநீக்கு