திங்கள், 1 மே, 2017

"திங்க"க்கிழமை :: ஜிலேபி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



     இதை எங்கள் பிளாக்கிற்காகத்தான் நான் செய்து பார்த்தேன்.  
என் ஹஸ்பண்ட், இங்கு கிடைக்கும் ஜிலேபி ரொம்பப் பிடிக்கும் என்பாள். (ஜிலேபி வேறு. உளுந்து போட்டுச் செய்யும் ஜாங்கிரி வேறு. ஜாங்கிரி சென்னைக்கே, அதாவது தமிழ்’நாட்டிற்கே உரித்தானது என்று நினைக்கிறேன். அதனால் ஜாங்கிரியை, மெட்ராஸ் ஜிலேபி என்பார்கள். வட நாட்டில் இம்ரிதி). இங்கு கடைகளில் கிடைக்கும் ஜிலேபிகளில், ingredientsன் தரத்தில் எனக்கு எப்போதுமே சந்தேகம்தான். சில மாதங்களுக்கு முன்னால், ரத்னா கஃபேயில் (அல்லிக்கேணி)  நெய்யில் பொரித்தெடுத்த ஜிலேபி சாப்பிட்டுப்பார்த்தேன். அத்தனை நெய் சாப்பிட்டால், அங்கேயே ஹார்ட் அட்டாக்தான்.

     ஜாங்கிரி சுத்தறதுக்கு ஒரு திறமையும் பழக்கமும் வேணும். ஜிலேபில அப்படியெல்லாம் இல்லை. இங்க உள்ள, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடைகளில், ஜாங்கிரிக்கு, கூடை (உளுந்தில் செய்வதை) 6 மாதத்துக்குத் தேவையானதை ஒரே சமயத்தில் செய்து சாக்குப் பையில் கட்டி பரணில் வைத்துவிடுவார்கள். தேவைப்பட்டபோதெல்லாம், ஜீரா செய்து, அந்தக் கூடை மீண்டும் ஒருமுறை பொரித்து, ஜீராவில் போட்டுவிடுவார்கள். (இந்த தொழில் ரகசியத்தைத் தெரிந்துகொண்டதிலிருந்து அந்தக் கடைகளில் ஜாங்கிரி வாங்குவதில்லை). ஜிலேபி, அந்தக் கடைகளில் அனேகமாக தினமும் செய்வார்கள். சில நாட்கள்ல, கொஞ்சம் புளிப்பா எனக்குப் பிடித்தமானதாக இருக்கும். இன்னைக்கு ரொம்ப நல்லாருக்கு என்று சொன்னபோது, அந்தக் கடையில் இருந்த பழக்கமானவன், ‘ஜிலேபி புளிப்புச் சுவையோட இருந்தா நல்லதில்லை. சில சமயம் மாவு செய்துவிட்டு, சில நாட்கள் ஆயிடும். அதனால் புளிப்பு வந்துடும்’ என்றான். கடைகள்ல பண்ற எதைத்தான் நம்பிச் சாப்பிடுவது என்று தெரியவில்லை. அன்றைக்குத்தான், நானே ஒரு நாள் செய்துபார்க்கணும்னு தோன்றியது.

     ஜிலேபியை அப்படியே சாப்பிடலாம். இல்லைனா, புளிக்காத தயிரைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இல்லைனா, வெனிலா ஐஸ்கிரீமோடு சாப்பிடலாம். இதெல்லாம் அந்தக் கடை முதலாளி சொன்னதுதான். நான் டேஸ்ட் பார்த்ததில்லை.

     இது உடனே பண்ணக்கூடிய இனிப்பல்ல. மாவு தயார் செய்து அது பல மணி நேரங்கள் ஊறணும். செய்முறை பார்க்கலாமா?

தேவையானவை:

மாவுக்கு – மைதா 1 ½  கப், அரிசி மாவு 1 மேசைக்கரண்டி அல்லது கொஞ்சம் அதிகம், தயிர் ¾ கப், பேக்கிங் பௌடர் 1 ஸ்பூன், கேசரிப்பவுடர் 1 ஸ்பூன். தேவையான அளவு தண்ணீர்.
ஜீனிப் பாகுக்கு – ஜீனி 3 கப், தண்ணீர் 1 ½ கப்.  கடைசியில் பாத்திரத்தில் சேர்க்க, எலுமிச்சம்பழ ஜூஸ் 1 மேசைக்கரண்டி, வாசனைக்கு வெனிலா, ரோஸ் அல்லது ஏதாகிலும் எசன்ஸ் சில துளிகள்.
ஜிலேபி பொரிக்க – தேவையான எண்ணெய்.

செய்முறை


     ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பௌடர், அரிசி மாவு போன்றவைகளைச் சேர்த்து நல்லா கலக்கிக்கோங்க. அதோட தயிரும், கேசரி பவுடரும், தேவையான அளவு தண்ணீர் (ரொம்பக் குறைவாக) சேர்த்து, கொஞ்சம்கூட கட்டி தட்டாம ஸ்மூத்தா இட்லி மாவு பதத்துக்கு கலந்துக்கோங்க. 



     இதுதான் கொஞ்சம் வேலை. இதை அப்படியே மூடி போட்டு ஒரு 10-12 மணி நேரம் வைத்துவிடுங்க. மாவு நல்ல பதத்துக்கு வரதுக்காக இப்படிச் செய்யறோம். (அதுவும் நல்லதுக்குத்தான். உடனே செய்யும்படியாக இருந்ததுனா, ஹஸ்பண்டோ, மனைவியோ, உடனே ஜிலேபி செஞ்சுட்டு வான்னு கட்டளை போட்டுட்டு, அவங்க கால்மேல கால் போட்டுக்கிட்டு தொலைக்காட்சி பார்த்துட்டிருப்பாங்க)



     ஜிலேபி செய்ய, நல்லா துணி வேணும். இல்லைனா, குழந்தைங்க தண்ணி குடிக்கற மாதிரி படத்துல இருக்கற மாதிரி பாட்டில் வேணும். நான் கிட்ஸ் பிராண்ட் ஜிலேபி மிக்ஸ், அதற்குறிய பாட்டிலோட இருக்கறதை, பாட்டிலுக்காகவே வாங்கினேன். (பிளாஸ்டிக் பாட்டில்)



     மாவு ஊறினப்பறம், ஜிலேபி செய்ய ஆரம்பிக்கலாம்.



     ஜீனியும் தண்ணீரும் கடாயில விட்டு, ஒரு கம்பிப்பாகு வரும்வரை, ஜீனிப்பாகை சூடுபடுத்தவும். கரண்டில எடுத்தாலே, மீதிப்பாகு விழுகின்றதைப் பார்த்து இதைக் கண்டுபிடிக்கலாம். அப்புறம் பாகை ஒரு அகலப் பாத்திரத்தில் மாற்றிவிட்டு, அதில் எலுமிச்சம்பழ ஜூஸ் மற்றும் எசென்ஸைச் சேர்க்கவும். எங்கிட்ட எசென்ஸ் இல்லைங்கறதை கடைசிலதான் கண்டுபிடிச்சேன். ஆனா எங்கிட்ட ஏகப்பட்ட ஜூஸ் கான்சன்ட்ரேட் இருக்கு (நன்னாரி, ரோஸ் போன்றவை).  அதுனால நன்னாரி எசென்ஸை ஒரு ஸ்பூன் விட்டேன்.



     கடாய்ல பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு காய வைங்க. அதுக்குள்ள, பாட்டில்ல, மாவை அடைக்கவும். நான் ஸ்பூனால மாவை எடுத்து பாட்டில்ல அடைத்தேன். (ஆமா.. எண்ணெய் பதமா காய்ந்துவிட்டதுன்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க? நான் சின்ன அப்பளாம் பீசை லைட்டா எண்ணெய்ல வச்சுப் பார்ப்பேன். கொஞ்சம் பொரியற நிலைமைல இருந்தா எண்ணெய் ரெடி). அனலை சிறியதாக்கி, பாட்டில்ல உள்ள மாவை வட்டமா ஜிலேபி மாதிரி பிழியவேண்டியதுதான். ரெண்டு மூணு பிழிந்தால் போதும். அப்புறம் திருப்பிப்போட்டு, வெந்தவுடன், எடுத்து ஜீரால போட்டுடவேண்டியதுதான்.  ஒரு நிமிடம் கழித்து ஜிலேபியை, ஜீராவிலிருந்து எடுத்து பாத்திரத்தில் போட்டுடவேண்டியதுதான்.





பின்குறிப்பு:


     ஜிலேபி நல்லா பொரிச்சா, முறுமுறுப்பா இருக்கும். எனக்கு கொஞ்சம் மென்மையா இருந்தாத்தான் பிடிக்கும்.

     ஒருவேளை தவறுதலா மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துவிட்டால், அரிசி மாவை வைத்துச் சரிசெய்துகொள்ளலாம்.

     நான் சன்ஃப்ளவர் எண்ணெய் உபயோகித்தேன். நெய் உபயோகித்தால் வாசனையா இருக்கும்.

     இவ்வளவு கஷ்டப்படுவது வெட்டி வேலைனு நினைச்சீங்கன்னா, எல்லா குஜராத்தி, வட இந்தியக் கடைகளில் கிடைக்கும் ஜிலேபியை வாங்கிச் சாப்பிட்டுக்கோங்க.

நீங்களும் செய்துபாருங்கள்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.



[ அப்பா...  நான் இந்த ஆட்டத்துக்கு வரலை!  ரொம்பப் பொறுமை வேணும்!   யாராவது செய்து ரெடியாக இருந்தால் சாப்பிட ரெடி! - ஸ்ரீராம்  ]

58 கருத்துகள்:

  1. ஜிலேபி எங்களுக்கு பிடித்த ஸ்வீட் அதிலும் என் மனைவிக்கு மிக அதிகம் பிடிக்கும். நீயூயார்க்கில் உள்ள கணேஷ் கோவிலுக்கு போனால் அங்கு ஜிலேபி வாங்காமல் வரமாட்டோம்

    பதிலளிநீக்கு

  2. ஸாரி எங்களுக்கு பிடித்தது ஜாங்கிரி அதுதானே மிகவும் சாப்ட்டாக இருக்க்கும் அதைத்தான் நாங்கள் கோயிலில் உள்ல கடையில் வாங்குவோம்

    பதிலளிநீக்கு
  3. அப்பாடா உங்களுக்கு ரொம்பவே பொறுமை.... வடக்கே கடைகளில் சுலபமாகக் கிடைத்து விடுகிறது. இமர்தி... இம்ரிதி அல்ல.

    பதிலளிநீக்கு
  4. இப்படி பதார்த்தம் செய்வது என்பது மிகவும் கடினம் அதையும் செய்துவிட்டு அதை எப்படி செய்வது என்பதற்காக படமும் எடுத்து போடுவது எளிதல்ல அதை செய்த உங்களுக்கு பாரட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. மஹா பொறுமை சார் நெல்லைத்தமிழன்.
    ஜிலேபி சாப்பிடுபவர்கள் வேற ரகம். நாங்க எல்லாம் ஜாங்கிரிப் பிரியர்கள்.
    விசேஷங்களுக்கு ஜாங்கிரிக்கு முதலிடம். லட்டு கூட அப்புறம் தான்.
    சாப்பிட்டு மகிழ்ந்திருக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. ஜிலேபியோ, ஜாங்கிரியோ எதானாலும் சாப்பிடுவேன். செய்யவும் செய்வேன். மைதா பயன்பாட்டை இப்போது குறைத்தாச்சு. கிட்டத்தட்ட வாங்கறதில்லை. ரவாதோசைக்குக் கூட மைதா சேர்க்காமல் கோதுமை மாவு அல்லது வறுத்த உளுத்தமாவு தான். ஜாங்கிரி முன்னெல்லாம் தீபாவளிக்கு நிறையச் செய்து சாப்பிட்டாச்சு! இப்போப் பண்ணறதில்லை. :( ஆனால் பிடித்த தித்திப்புத் தான். எங்க வீட்டில் நெய்யிலே தான் பொரிப்போம். அதனாலும் இப்போ நிறுத்தியாச்சு.

    பதிலளிநீக்கு
  7. நான் சாப்பிட மட்டுமே தயார்

    பதிலளிநீக்கு
  8. இது பாரம்பர்ய பலகாரம் இல்லையா?..
    அதனால் தான் மரிக்கன் மாவு (மைதா) சேர்த்து இதன் பெருமையை மாற்றிப் போட்டார்கள்!..

    சுடச்சுட உளுந்தமாவு ஜிலேபிகள் எல்லாம் தஞ்சாவூர் நீடாமங்கலம் திருவாரூர் கடைத்தெருக்களில் கிடைத்த காலம் ஒன்றும் இருந்தது..

    இப்போது நிலவரம் எப்படி என்று தெரியவில்லை..

    கடந்த இரண்டு வருடங்களாக மைதா மாவு சேர்க்கப்பட்ட பண்டங்களுக்கு எதிரியாகி விட்டேன்(!)..

    பதிலளிநீக்கு
  9. //இதை எங்கள் பிளாக்கிற்காகத்தான் நான் செய்து பார்த்தேன். //

    பொறுமையாக செய்து படங்களுடன் எங்கள் பிளாக்கிற்காக செய்து பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இது ஜிலேபியா?! இல்ல இதான் ஜிலேபியா?! எனக்கு ஜிலேபிம்மா ரொம்ப பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  11. கொடுத்து வச்ச ஹஸ்பண்ட்

    பதிலளிநீக்கு
  12. என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் .எங்கப்பா சௌகார்பேட்டை பாரிமுனை ஜங்க்ஷன்லே ஒரு கடைலருந்து வாங்கிட்டு வருவார் ஒரு துண்டுக்கே இனிப்பு அவ்ளோ இருக்கும் ..இங்கே குஜராத்தியர் கடைகளில் அதே சௌகார்பேட் மாதிரி வாசலில் பெரிய கடாயில் பொரிச்சி விப்பாங்க .கண்ணால் பார்ப்பதோடு சரி :)

    ஆனாலும் உங்களுக்கு பொறுமை அதிகம் எனக்கு இதெல்லாம் செய்ய பொறுமை வராது :)
    ரத்னா கபேயில் பஜ்ஜியும் வாழை இலையில் கேசரியும் எப்பவோ சாப்பிட்டேன் நினைவுக்கு வந்தது ..
    நம்ம ஊரில் தினமும் வியாபாரம் நடக்கும் மிஞ்சி போனா அடுத்த நாள் மாவை சமைச்சி முடிப்பாங்க ..இங்கே வெளிநாட்டு கடைல நான் பார்த்த வரையில் ஒரே எண்ணெய் ஜிலேபிக்கும் சமோஸாக்கும் பயன் படுத்தறாங்க .என் கணவருக்கு காட்டி மிரட்டி விட்டதில் அவரும் அதெல்லாம் தொடறதில்ல .

    நாலாம் வாக்கு யாருக்கோ பிடித்த நம்பர் வாக்கு இன்று நான் சுட்டு போட்டாச்சு :)


    பதிலளிநீக்கு
  13. இதே கலவைதான் தயிர் மைனஸ் ரோஸ் எசன்ஸ் சேர்த்து அச்சு முறுக்கு அதான் அச்சப்பம் செய்வேன் :)

    பதிலளிநீக்கு
  14. #இதை எங்கள் பிளாக்கிற்காகத்தான் நான் செய்து பார்த்தேன்#
    இப்படி சொல்லிட்டு வாசகர்களுக்கு தராமல் நீங்களே சாப்பிட்டால் எப்படி :)

    பதிலளிநீக்கு
  15. ஸ்வாமீ, வணக்கம்.

    என்னதான் இருந்தாலும் Finished Product ஆகத்தாங்கள் காட்டியிருப்பதில் எந்தவொரு கவர்ச்சியும் எனக்குத் தெரியவில்லை.

    காசியில் கங்கைக்கரை அருகே இருக்கும் சந்து பொந்துகளிலெல்லாம், தாங்கள் காட்டியுள்ளது போலவே மஞ்சள் கலரில் பெரிசு பெரிசாகச் செய்து, அதுவும் விடியற்காலம் முதலே வியாபாரத்தை ஆரம்பித்து பல்தேய்க்கும் பக்ஷணங்கள் போல ரோட்டில் விற்றுக்கொண்டு இருப்பார்கள். அங்குள்ள பலரும் அதனை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். இதை நான் ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் பார்த்துள்ளேன். பார்க்க கிட்டத்தட்ட அதுபோலவே உள்ளது உங்களின் இந்த ஜிலேபியும்.

    முன்பெல்லாம் (ஒரு 30 வருடங்களுக்கு முன்பு) என் அக்கா மற்றும் அண்ணன் மகள்கள் கல்யாணங்களுக்கு SS என்று ஒரு மஹாமுரடான ஐயர் எங்கள் வீட்டுக்கே வந்து ஜாங்கிரி சுற்றித் தருவார். குட்டி குட்டியான சைஸில், கெட்டியாக படு ஸ்ட்ராங்க் ஆகவும், ஜீராப்பாகு மினுமினுப்புடன் .... அதே சமயம் ஜீராபாகு கீழே சொட்டாமலும், மொறுமொறுப்பாக சூடாக சுவையாக, நல்ல சிகப்புக்கலரில் ஏராளமாகச் செய்து, மிகப்பெரிய எவர்சில்வர் தூக்குக்களில் அடுக்கிக்கொடுத்து விட்டுப்போவார்.

    அதுபோல டேஸ்ட் எதிலுமே வராது ஸ்வாமீ. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. நான் வந்துட்டேன்ன்.. வந்த வேகத்தில் வோட்டும் போட்டிட்டேன்ன்.. சகோ ஸ்ரீராம் இனி முடிஞ்சால் நான் சொன்ன முறையைப் பின்பற்றினால்தான் காலையிலேயே வோட் போட எனக்கு ஈசி, இல்லையெனில் ஈவினிங்தான் கொம்பியூட்டர் வந்து போட முடியும் பெரும்பாலும்.

    ///இதை எங்கள் பிளாக்கிற்காகத்தான் நான் செய்து பார்த்தேன்.///

    புரிஞ்சுபோச்சூஊஊஊஊ.. அப்போ நாங்கள் எல்லாம் லாப் எலிகள்????:).. அஞ்சூஊஊஊ முதல் ஜிலேபி உங்களுக்கு.. எனக்கு எப்பவும் அடுத்தவருக்கு கொடுத்துவிட்டுச் சாப்பிட்டே பழக்கம்:).

    பதிலளிநீக்கு
  17. /// கடைகள்ல பண்ற எதைத்தான் நம்பிச் சாப்பிடுவது என்று தெரியவில்லை. அன்றைக்குத்தான், நானே ஒரு நாள் செய்துபார்க்கணும்னு தோன்றியது.///
    உண்மைதான் இக்காலத்தில் எந்தக் கடைச் சாப்பாட்டையும் நம்ப முடியவில்லை.

    சமீபத்தில் எங்கட அண்ணன் ஒரு கதை சொன்னார் கேட்கவே நடுங்கிச்சுது. தெரிந்தவர் ஒருவர் கொழும்புக்குப் போயிருக்கிறார், அங்கே அவரின் நண்பர் ஹொட்டேல் நடத்துபவராம், அங்கு போய் ஒரு இரவு தங்கி இருக்கிறார், அப்போ ஹொட்டேலில் வேலை பார்ப்பவர், இந்த வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு தன் தலையணையைக் கொடுத்துவிட்டு, தனக்கு தலைக்கு வைக்க, ஒரு கட்டு சப்பாத்தியை எடுத்து டவலால் சுற்றிப்போட்டு வச்சுப் படுத்தாராம்ம்ம்... ஹையோ இனி எப்படி சப்பாத்தி வாங்கிச் சாப்பிடுவது சொல்லுங்கோ....

    பதிலளிநீக்கு
  18. // நான் கிட்ஸ் பிராண்ட் ஜிலேபி மிக்ஸ், அதற்குறிய பாட்டிலோட இருக்கறதை, பாட்டிலுக்காகவே வாங்கினேன்.//

    அப்போ நீங்க ஜிலேபி மிக்ஸ் லதான் செய்தீங்களோ? மாவை புளிக்க வைத்துப் பதம் எடுத்துச் செய்வதென்பது கஸ்டமான ஒன்றாச்சே.. ஆனாலும் மிகப் பொறுமையா அழகா செய்திருக்கிறீங்க.

    நான் இந்த ஜிலேபி, ஜாங்கிரி எதுவும் சாப்பிட்டதில்லை என்றே நினைக்கிறேன், ஏனெனில் இப்படி பெயர்கள் இலங்கையில் இல்லை. பெயர் தெரியாமல் எங்காவது சாப்பிட்டிருக்கலாம் ஆனாலும் எனக்கு இனிப்பு பிடிக்காது அதனால ட்ரை பண்ண மாட்டேன் பெரிதா.

    இப்பூடி ஒன்றுதான் இலங்கையில் பேமஸ்.. “தேன்குழல்” என அழைப்போம்... நீங்கள் காட்டியுள்ளதுபோலவேதான், கடும் ஒரேஞ் அல்லது சிவப்பு கலரிங் போட்டிருப்பார்கள்.. முறுக்கின் உள்ளே இடைவெளி இருக்கும் குழல்போல.. அந்தக் குழலுக்குள்ளே தேன் நிறைந்திருக்கும்... அது நீங்க சொன்னதுபோல சீனிப்பாகாக இருக்குமோ என இப்போ நினைக்கிறேன்... வெளிநாட்டிலும் இலங்கைக் கடைகளில் கிடைக்கும்.

    பாகு நல்லா செய்து எடுத்திட்டீங்க.. நல்ல பளபளாவா இருக்கு(அப்பாஆ கரெக்ட் ள போட்டிட்டேன்ன்:)). ஆனா உங்களுக்கு ஒரு விசயம் சொல்லட்டோ?.. காதைக் கொண்டுவாங்கொ ரகசியமாச் சொல்றேன்ன்... உங்களுக்கு முறுக்கு சரியா வட்டமா பிளிய வரல்ல:) ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:). வடிவமா முக்கியம் சுவைதானே முக்கியம்.

    பதிலளிநீக்கு
  19. ///[ அப்பா... நான் இந்த ஆட்டத்துக்கு வரலை! ரொம்பப் பொறுமை வேணும்! யாராவது செய்து ரெடியாக இருந்தால் சாப்பிட ரெடி! - ஸ்ரீராம் ]///

    ஏதோ மற்றதெல்லாம் தானேதான் செய்து சாப்பிடுபவர்மாதிரி:)..

    ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
  20. //பிளிய வரல்ல:)/// ஹா haaaaaaaaaaaa >(- -)<

    பதிலளிநீக்கு
  21. ///Angelin said...
    //பிளிய வரல்ல:)/// ஹா haaaaaaaaaaaa >(- -)<///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) எவ்ளோ அயகா பின்னூட்டம் போட்டாலும்:) இந்த ளி சொதப்பிடுதே என்னை:) சே சே தமிழில் இருக்கும் ழி/ளி யை தடை பண்ணச்சொல்லி போராட்டம் நடத்தப்போறேன்ன்ன்ன்:)

    பதிலளிநீக்கு
  22. //ரவாதோசைக்குக் கூட மைதா சேர்க்காமல் கோதுமை மாவு ///
    என்னைக் குழப்புறீங்களே கீதாக்கா.. இது இரண்டும் ஒன்றுதானே.. மைதா கோதுமை... இரண்டும் wheat flour தானே?.

    பதிலளிநீக்கு
  23. //மைதா கோதுமை... இரண்டும் wheat flour தானே?.// மைதா மாவு என்பது மேலும் மேலும் கோதுமையைச் சுத்திகரித்து அதில் சில ரசாயனங்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. முழு கோதுமை உணவு அல்ல. உண்மையில் இந்த ரசாயனங்களைச் சேர்க்காமலேயே தயாரிக்கப்படும் மைதா மாவு இத்தனை வெண்மையாக இருக்காது. இப்போது வரும் மைதா உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

    பதிலளிநீக்கு
  24. நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம். இதைச் சாக்கிட்டுத்தான் புதிது புதிதா (எனக்கு முதல் தடவை) இனிப்பு வகைகள் செய்துபார்க்கணும்னு தோணுது. நான் 4 சாப்பிட்டுவிட்டு மீதியை அலுவலக நண்பர்களிடம் கொடுத்துவிடுவேன். இல்லாட்டா, அதுக்கும் சேத்து எவ்வளவுதான் நடக்கறது. எனக்கெல்லாம் வெறும் தண்ணீர் குடித்தாலே உடம்புல வெயிட் ஏறிடறது.

    பதிலளிநீக்கு
  25. நன்றி மதுரைத் தமிழன். எனக்கு ஜாங்கிரி ரொம்பப் பிடிக்கும். இந்த ஜிலேபியையும் மென்மையாத்தான் செய்திருந்தேன். (உண்மையில் எனக்கு ஸ்வீட்ஸ் ரொம்பப் பிடிக்கும். வேற வழியில்லாமல், ரொம்ப உடல் எடை கூடுவதால், தவிர்க்கவேண்டியிருக்கிறது). இந்த ஊர்ல, ஒரு கடைல ஜாங்கிரி ரொம்ப நல்லாச் செய்யறாங்க. அதை அப்போ அப்போ வாங்குவேன்.

    எனக்குத் தோணும்போதெல்லாம், உடனே கடலைப்பருப்பு, அரிசி பாயசம் பண்ணுவேன். அடுத்த தடவை சேமியா ஜவ்வரிசி பாயசம் செய்வேன்.

    ஆர்வம், சௌகரியம் இரண்டும்தான் இனிப்புவகைகளைச் செய்துபார்க்கத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  26. நன்றி வெங்கட். வங்காளத்துல காலைல, சாயாவும் ஜிலேபியும் சாப்பிடுவார்களாமே. இங்க உள்ள உத்திரப்பிரதேச வாலாக்கள் நடத்தும் ஸ்வீட்ஸ் கடைகளில் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்கமா ஜிலேபி செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  27. வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன் அம்மா. எனக்கு சில சமயம் தோன்றும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இந்த இந்த ஐட்டம், இவ்வளவுதான் சாப்பிடலாம் என்று பிறக்கும்போதே எழுதிவைத்திருப்பதுமாதிரி (இதேபோல், பணத்தை அனுபவிப்பதும், சம்பாதிப்பது அல்ல, சம்பாதித்ததைக்கொண்டு அனுபவிப்பது). உங்கள் சமீபத்தைய இடுகையில் இருந்த பாதாம் (அவல் போட்டது) அல்வா படம் என் மனதில் சுழன்றுகொண்டே இருக்கிறது. பார்க்கவே ரொம்ப டெம்ப்டிங் ஆக இருந்தது. ஊருக்குப் போகும் சமயம் நிச்சயம் அதைச் செய்வேன் (என் பையனுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்).

    பதிலளிநீக்கு
  28. நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

    நன்றி கில்லர்ஜி.. நீங்க மிட்டாய்வாலா கடைக்குப் போனாலே, போலீஸ் வருகுது டோய், என்று இலவசமாகவே ஸ்வீட்ஸ் கொடுத்துவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி துரை செல்வராஜு. ஜிலேபி நமக்கு பாரம்பரியமானது கிடையாது. நாம் ஜிலேபி என்று சொல்வது ஜாங்கிரியை (உளுந்து போட்டுச் செய்வது). தஞ்சை போன்ற பகுதிகளில் நிறைய எக்ஸ்பர்ட் சமையல்காரர்கள் நீங்கள் சொல்லியபடி அட்டஹாசமாக ஜாங்கிரி செய்வார்கள். ஜாங்கிரியின் தரம், மென்மையாகவும், நல்ல வாசனையாகவும், சாப்பிட்டால் ஜீரா/உளுந்து சுவை நாக்கில் வரவேண்டும். சிலர், நெய்யில் பொரித்து அல்லது எண்ணெயில் நிறைய பொரித்து எண்ணெய் வாசனை வரவைத்துவிடுவார்கள். (அதெல்லாம் ஜாங்கிரியில் வராது)

    என்னவோ.. எல்லாரும் மைதா மாவு சேர்க்கக்கூடாது என்று தடா போடுகிறார்கள் (டயபடிக்ஸுக்கு காரணம் என்று). மைதா மாவுல என் ஹஸ்பண்ட் சில ஸ்வீட்ஸ் அருமையாகச் செய்வார். எனக்கு மாதம் ஒரு முறை (இந்த ஊர்ல சரியா செய்யறதில்லை. துபாய்ல, நம்ம வீடு வசந்தபவன்ல பரோட்டா, சொன்னா எண்ணெய் இல்லாமல் அட்டஹாசமா செய்துதருவார்கள்) பரோட்டா சாப்பிடப் பிடிக்கும். (நீங்க சரவண பவனை நினைத்துவிடாதீர்கள். அவர்கள் ஜாங்கிரி சைசில் பரோட்டா செய்வார்கள். எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது)

    பதிலளிநீக்கு
  30. வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம்.

    பதிலளிநீக்கு
  31. நன்றி ராஜி. ஜிலேபி, ஜாங்கிரி... இனிப்புகள் பிடிக்காதவர்கள் சிலரே. (அவங்களுக்கும் பிடிக்கும். எங்க உடம்பு வெயிட் ஏறிடப்போகிறதே என்ற பயத்தில் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வார்கள்)

    பதிலளிநீக்கு
  32. @ஆதிரா: மைதா மாவு என்பது மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப் படுவது. சேமியா, ஜவ்வரிசி எல்லாம் இதன் வேறு வடிவங்கள்.ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது இந்த மாவு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அமெரிக்கன் மாவு என்று அழைக்கப்பட்டு, மரிக்கன் மாவு என்று மருவியது.

    பதிலளிநீக்கு
  33. வாங்க ஜி.எம்.பி. சார். நான்தான் கொடுத்துவைத்தவன். என் ஹஸ்பண்ட் நல்லா சமையல் பண்ணுவா. இப்போ நான் இங்க இருக்கறதுனால, நிறைய செய்துபார்க்கும் வாய்ப்பு இருக்கு. சாதாரணமா வீடுகள்ல ஜாங்கிரி செய்யமாட்டார்கள் (அதற்கு திறமை வேண்டும். பொதுவா கீதா சாம்பசிவம் போன்ற சமையல்ல ரொம்ப இன்டெரெஸ்ட் எடுத்துச் செய்பவர்கள்தான் முயற்சிப்பார்கள்). என் மனைவி அதுவும், அதிரசமும் செய்வாள். நான் எப்போதுமே, எதற்குக் கஷ்டப்படவேண்டும், காசு கொடுத்தா எந்தக் கடைல நல்லா செய்வார்களோ அங்க வாங்கினாப் போச்சு என்பேன்.)

    பதிலளிநீக்கு
  34. வருகைக்கு நன்றி ஏஞ்சலின். எனக்கு சின்ன வயதில் (பதின்ம வயது) நெல்லையில் விற்கும் அச்சப்பம் ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில்தான் சென்னையில் பாத்திரக்கடையில் அச்சப்பம் செய்யும் அச்சையும் பார்த்தேன். இப்போ எண்ணெய் நிறைய இருக்கும் என்று நினைப்பதால் சாப்பிடத் தோணுவதில்லை.

    பதிலளிநீக்கு
  35. வாங்க பகவான்ஜி. வருகை தந்த பலர், இனிப்பு சாப்படறதில்லைனு சொல்லிட்டாங்க. தட்டுல இருக்கறதெல்லாம் உங்களுக்குத்தான்.

    பதிலளிநீக்கு
  36. வாங்க கோபு சார். படம் எடுத்த பின்பு, கலர் (கேசரிப் பௌடர் நிறம்) வரவில்லையே என்று தோன்றியது. எனக்கு அடிக்கற கலரில் இருந்தாலும் பிடிக்காது என்பதால், குறைவாகத்தான் சேர்த்தேன். ஒருவேளை, 'கவர்ச்சி' என்று நீங்கள் குறிப்பிட்டது, ஜிலேபி தட்டை ஒரு காரிகையை ஏந்தவைத்து படம் எடுத்திருக்கணும் என்றா? அடுதத தடவை கிராபிக்ஸ்ல செஞ்சுடலாம்.

    நீங்க காசில ஜிலேபி சாப்பிட்டீங்களா இல்லையா? நான் அலஹாபாத்தில், (2008) லஸ்ஸி சாப்பிட்டேன். அந்த ருசி எங்கயுமே இருந்ததில்லை. நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? (அலஹாபாத்தில் ஒரே ஒரு பிரச்சனை, கோடிக்கணக்கான ஈக்கள்).

    வீட்டுக்கு ஒருவரை (எக்ஸ்பர்ட்) வரவைத்து அவரை நமக்குப் பிடித்த பட்சணங்களைச் செய்துதரச் சொன்னால் ரொம்ப நல்லாத்தான் இருக்கும். திருச்சில எங்க ஜாங்கிரி நல்லா இருக்கும்? ரமா கஃபேல பாயசம் தவிர வேறு இனிப்பு கிடையாதா?

    எப்போ நந்தினி குந்தா பால்கோவா சாப்பிட்டாலும் உங்களை நினைக்கவைத்துவிட்டீர்கள். உங்களுக்கு உணவில் தனி ரசனை.

    பதிலளிநீக்கு
  37. நெல்லை தமிழன் சார், உங்களுக்கு சமையலில் இத்தனை ஆர்வமா? பாராட்டுக்கள்! எனக்கு ஜாங்கிரி, ஜிலேபி இரண்டுமே பிடிக்கும். அதுவும் சற்றே புளிப்பாக, குழலோடிய முறு முறு ஜிலேபி மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்து பார்க்க தைரியம் வந்ததில்லை. சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் நெசப்பாக்கம் ஸ்ரீராம் ஸ்வீட்ஸ் & சேவ்ரிஸ் கடியில் வாங்கி சாப்பிட்டுக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  38. நன்றி அதிரா. நீங்கள் ஏஞ்சலின் பதிவுகளை சரியாகப் படிப்பதில்லை. அதுக்கே உங்களுக்கு அவங்க இம்போசிஷன் தரணும். அவங்கதான் படிச்சுப் படிச்சுச் சொல்லியிருக்காங்களே.. இனிப்பு பிடிக்காது, சாப்பிடறதில்லைன்னு (ஒருவேளை, பிடித்திருந்தால் கணவர் அடிக்கடி பல இனிப்புகளைச் செய்யச் சொல்லி படுத்துவாரோ என்றுகூட இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்த்திருக்கலாம். உங்களுக்குத்தான் தெரியும்)

    இங்க ஒரு நண்பர் எனக்கு காய்கறிக்கடைகளின் தொழில் ரகசியத்தைச் சொன்னார். முதல் தரம் (ஃப்ரெஷ்), இரண்டாம் தரம் (கொஞ்சம் வாடினது) இரண்டும் வாடிக்கையாளர்களுக்கு. மற்றபடி பழைய, ரொம்ப வாடி வதங்கிய, மோசமான நிலையில் இருக்கிற, கடைசியா விற்காமலிருக்கிற காய்கள் எல்லாம், ஹோட்டல்காரங்க குறைந்த விலையில் வாங்கிக்கொள்வார்களாம். அதனால், காய்கறிக்கடையிலிருந்து ஒன்றும் வீணாகத் தூக்கி எறிய மாட்டார்களாம்). சூடான சாம்பாரில் இருப்பது ஃப்ரெஷ் காயா அல்லது வாடி வதங்கிய மோசமான காயா என்று எப்படித் தெரியும்? இனிப்பு கடைகளில் செய்யும் தொழில் ரகசியம் ('நான் பார்த்துவிட்டேன்) கொடுமையானது. அதெல்லாம் சொன்னால் வெளில சாப்பிடவே தோணாது. சப்பாத்தி தலையணை-இனி எங்கு சப்பாத்தி வாங்கினாலும் மறக்கமுடியாது.

    நீங்கள் சொல்லியிருக்கும் இனிப்பு தேன்குழல், நெல்லை, கோவில்பட்டி, விருதுனகர் போன்ற இடங்களில் ரொம்ப ஃபேமஸ். அதை ஜீனியிலும், கருப்பட்டியிலும் செய்வார்கள். சமீபத்தில் அலுவலக நண்பர் வந்தபோது வாங்கிவரச் சொல்லியிருந்தேன். அவ்வளவு நன்றாக இல்லை.

    ஜாங்கிரி பிழிவது ஒரு கலை. இங்கிருக்கும் வட நாட்டு இனிப்பு கடையில் ஒருவர் எனக்குக் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லி என்னைப் பிழிந்துபார்க்கச் சொன்னார். நான் கற்றுக்கொள்ளவில்லை. அடுத்த தடவை இன்னும் நன்றாகச் செய்வேன் (பிழியணும், படம் எடுக்கணும். கொஞ்சம் கஷ்டம்தான்)

    பதிலளிநீக்கு
  39. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். முதல் பின்னூட்டத்தை மிஸ் பண்ணிவிட்டேன். எங்க, நாங்க கேட்டுருவோம் என்பதற்காக, 'இப்போப் பண்ணறதில்லை'னு சொல்றீங்களா? ஆத்தாடி.. நெய்யில பொரிப்பீங்களா? சில மாதங்களுக்கு முன்பு, ரத்னா கஃபேயில் (அல்லிக்கேணி) நெய்யில் பொரித்த ஜிலேபி வாங்கினேன்... அவ்வளவு நெய் சாப்பிட்டா உடனே ஹார்ட் அட்டாக்தான். பாதிக்குமேல் வீணாக்கிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  40. அதிரா... பேக்கரில பண்ணற பிஸ்கட், பிரெட் எல்லாமே மைதா மாவு (ஆல் பர்பஸ் மாவு என்பார்கள்). பிரெட்லயே இப்போ White (Maida), Wheat என்று இரண்டு இருக்கிறதே..

    பதிலளிநீக்கு
  41. நன்றி பானுமதி மேடம். எனக்கு சமையலில் ரொம்ப ஆர்வம். ஆள் கிடைத்தால், இங்கேயே எனக்கு கற்றுக்கொடுக்கச் சொல்லுவேன். உங்களுக்கு (பெண்களுக்கு) எப்போதும் செய்வதால் ஒருவேளை அத்தனை ஆர்வம் இல்லாமல் (அல்லது குறைந்து) இருக்கலாம். ஆர்வம் இருப்பவர்களுக்கும், இன்டெரெஸ்டோட சாப்பிடறவர்கள் இருந்தால், அவர்கள் திறமை இன்னும் மேம்படும். அதிர்ஷ்டவசமாக என் ஹஸ்பண்டுக்கு சமையல் திறமை உண்டு. சிலபேர், ஏதோ சமைச்சோம், ஏதோ சாப்பிடணும்னு நினைத்து சமையல் செய்வார்கள். நல்ல சாப்பாடு போடுபவர்களைத்தான் மனது காலம் காலமாக நினைவுகூறும். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  42. நன்றி மகிழ்ச்சி தங்கள் பதிவு க்கு

    பதிலளிநீக்கு
  43. இரண்டுமே ரொம்ப பிடிக்கும். ஜிலேபி எங்கள் ஊரில் கடைகளில் கிடைக்கும்...வீட்டில் செய்வது இல்லை....உங்கள் ஆர்வம் வியப்பாக உள்ளது.

    கீதா:..எனக்கும் இரண்டுமே புடிக்கும்....வீட்டில் இரண்டும் செய்வதுண்டு....ஷேப் எல்லாம் கண்டுக்கக் கூடாது....சர்க்கரை குறைவாகப் போடுவேன்...இரண்டும் பிடிக்கும் என்றாலும்...ஜிலேபி ரொம்ப பிடிக்கும்....அந்த கிரிஸ்பி...ஆனா என்ன செய்தாலும் விண்டோ ஷாப்பிங் தான்...ஹிஹிஹி..என்றாலும் ஒன்றாவது சாப்பிட்டுவிடுவேன்...யு ரியலி ராக் நெல்லைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  44. நன்றி கீதாக்காஅ...

    //Bhanumathy Venkateswaran said...
    @ஆதிரா: மைதா மாவு என்பது மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப் படுவது.// மிக்க நன்றி ஆனா... ஹையோ நீங்க குழப்புறீங்க.. இந்த டவுட் எனக்கும் இருந்தமையாலேயே கேட்டேன்.

    இலங்கையில் கோதுமை மா என மட்டுமேதான் இருந்தது, மைதா மா என நான் இருந்தபோது கேள்விப்பட்டதில்லை. ஆனா இங்குதான் பிளேன் பிளவர், ஓல் பேப்பஸ் பிளவர் என 2 வகை கிடைக்குது.

    நெல்லைத்தமிழன்... அது ஏஞ்சலினுக்கு ஒரு விருப்பம் என்னண்டால்..:) தனக்குப் பிடிக்காது எனச் சொல்லுவாவாம் ஆனா நாங்க தான் ஃபோஸ் பண்ணிக் கொடுக்கோணும்:) அப்போதான் சாப்பிடுவா:) சரி சரி இது நமக்குள் இருக்கட்டும்.. இல்லையெனில் நான் ஸ்ரெயிட்டா தேம்ஸ்லதான்:).[தள்ளிப்போடுவா].

    பதிலளிநீக்கு
  45. ////எத்தனாவது ராங்க்?////வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சகோ ஸ்ரீராம் கவனிச்சீங்களோ? தமிழ்மணத்தில் இப்போ 2ம் இடம் காட்டுது எங்கள் புளொக். இவ்ளோ நாளும் 3ம் இடமெல்லோ.... :)

    பதிலளிநீக்கு
  46. நெல்லைத்தமிழன அவர்களே, உங்கள் ஜிலேபியைச் சாப்பிடுவதற்காகவாவது உங்கள் ஊருக்கு வரவேண்டும்...
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  47. கோதுமையைச் சுத்தம் செய்து செய்து செய்து செய்து செய்து நடுவில் உள்ள சத்துப் பாகத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து அதனுடன் ரசாயனக் கலவை சேர்த்துச் செய்வது தான் மைதா மாவு என்றும் நடுவில் உள்ளது போக இரு பக்கங்களில் உள்ளதை ரவையாக்குவார்கள் என்றும் சொல்லிக் கேள்வி! சிலர் அதை உறுதியும் செய்திருக்கிறார்கள். சமீப காலத்தில் மரவள்ளிக்கிழங்கு மாவை மைதாவுடன் சேர்ப்பதாகக் கூறுகின்றனர். எப்படியானாலும் வெள்ளை ரவையும், வெள்ளை மைதாவும் உடலுக்குக் கெடுதி என்கிறார்கள். எங்க பையர் இதெல்லாம் வாங்கவே மாட்டார். எங்களையும் வாங்கினால் திட்டுவார்.

    பதிலளிநீக்கு
  48. நன்றி தில்லையகத்து துளசி. நீங்க கொஞ்சம் பிஸியா இருக்கீங்களா. இப்போ வெகேஷன் இருக்கணுமே. 'உங்க ஊர் கடை' என்பது பாலக்காடுதானே... என்னவோ எனக்கு பாலக்காடு ரொம்பப் பிடித்துவிட்டது.

    நன்றி கீதா ரங்கன். எனக்கென்னவோ எல்லோரும் ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு ரொம்ப பயமுறுத்துவதாகத்தான் தெரிகிறது. அப்போ அப்போ ஒண்ணு சாப்பிட்டால் ஒன்றும் ஆகிவிடாது. நான் முன்பெல்லாம் ஒரு சமயத்தில் நிறைய ஸ்வீட் சாப்பிடுவேன் (அளவெல்லாம் சொன்னா பயந்துருவீங்க). இப்போ அப்படியெல்லாம் சாப்பிடுவதில்லை. அதற்காக சாப்பிடாமல் இருப்பதுமில்லை. 'கிரிஸ்பி' என்று சொல்லும்போது-இங்கு ஒருதடவை இரவு 9:30-10 மணிக்கு (அதிசயமாத்தான். எனக்கு 7 மணிக்கு சாப்பாட்டுக்கடை முடிந்துவிடவேண்டும். 9 மணிக்கு படுத்துவிடுவேன்) ஹோட்டலில் சாப்பிடப்போனேன் (அவங்க நல்லா ஜாங்கிரி செய்வாங்க). அந்த முதலாளிக்கு எனக்கு இனிப்பு பிடிக்கும் அதுவும் ஜாங்கிரி பிடிக்கும் என்று தெரியும். அவர், இப்போதான் ஜாங்கிரி சுடச் சுட போடறாங்க. வேணுமா என்று கேட்டார். அப்போ 1/2 கிலோ வாங்கினேன். அப்போதான் பண்ணினதால கிரிஸ்பியா ரொம்ப நல்லா இருந்தது. அதற்கப்புறம் இரவு நேரம் ஹோட்டலுக்குப் போகும் சமயம் வாய்க்கலை. கிரிஸ்பி ஜாங்கிரி நல்லாத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  49. மீள் வருகைக்கு நன்றி அதிரா.. நீங்க, ஏஞ்சலினைப் பற்றி சும்மாத்தான் எழுதியிருக்கீங்க. சிலருக்கு ஃபோர்ஸ் பண்ணி இரண்டு தடவைக்கு மூன்று தடவையாகச் சொன்னால்தான் சாப்பிடுவாங்க. எனக்கும் அந்தத் தயக்கம் உண்டு. சட்டுனு சாப்பிட்டுறமாட்டேன். இதுக்கெல்லாம் தயக்கம்தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  50. நன்றி இராய செல்லப்பா சார். (எனக்கு ரொம்ப நாளா மனசுல ஓடிக்கிட்டிருக்கு. 'இராய' எதைக் குறிக்கிறது? தவறாக நினைக்காவிட்டால் சொல்லுங்கள்). எங்கள் ஊருக்கு வாங்க. அதுவும் ஜூலை, ஆகஸ்டுல வந்தீங்கன்னா, ஆரிய நிறத்தில் வருபவர்கள் திராவிட நிறத்தில் சென்றுவிடலாம். வெயில் வறுத்தெடுத்துவிடும் (45 டிகிரி சர்வ சாதாரணம், Humidityயும் ரொம்ப ஜாஸ்தி). 'நெல்லைத் தமிழனும் இராய செல்லப்பாவும் இணைந்து வழங்கும் புதுவகை ஜிலேபி' என்று இடுகை போட்டுடலாம்.

    பதிலளிநீக்கு
  51. கீதா மேடம்... வெள்ளையா இருப்பது எல்லாமே உடம்புக்குக் கெடுதி என்று படித்திருக்கிறேன் (உப்பு, அரிசி, பால், சர்க்கரை, மைதா போன்ற மாவு வகைகள்). அவைகளை விலக்கிவிட்டால், நீண்ட ஆயுள் இருக்கலாம் என்றும் படித்திருக்கிறேன். அதுக்காக சாப்பிடாமல் இருந்துவிடமுடியுமா? இல்லை, ஒண்ணும் சாப்பிடாமல் 120 வயது வரை வாழ்ந்து என்னதான் பயன்?

    பதிலளிநீக்கு
  52. ஏஞ்சலின்... மனசுல இனிப்பு ஆசை இருப்பதுதான் உங்களை மீண்டும் இங்கே இழுத்துவந்திருக்கு. எனக்கு எப்போவுமே இனிப்பு கடைகளையும், புதிய காய்கறி கடைகளையும் விண்டோ ஷாப் பண்ண ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  53. இனிப்பும் போட ஆரம்பித்து விட்டீர்கள். உங்கள் ஹஸ்பெண்டிற்கு வேலை மிச்சமாகுமா, அதிகமாகுமா தெரியாது. இருந்தாலும் நெல்லைத் தமிழனின் சமையல் அக்கரை,இனிப்பிலும் தேர்ச்சி பெற்று விடுவார் என்று எல்லோரும் நினைக்கும்படி இருக்கிறது. சின்ன வயதில் நான் செய்த, பேப்பரில் வந்த ஒரு செய்முறைக்குறிப்பு ஞாபகம் வந்தது.அமிருதக் குழல். உளுத்தம் பருப்பையும்,அரிசியையும் சிறிது நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்து, தேன் குழல் அச்சில் நேராகக்,
    காய்ந்தஎண்ணெயில் பொரித்தெடுத்து, அதைச் சர்க்கரைப் பாகில் போட்டெடுப்பது.அப்போதுமிக்ஸியெல்லாம் கிடையாது. எப்படியும் அரைப்பதில் சிறிது தண்ணீர் சேர்த்தது. பிழிந்து,பாகில் ஊறவைத்து சுடச்சுட சாப்பிட்டோம். எண்ணெய் குடித்து விட்டது. அப்புறம் அதைச் செய்யவே இல்லை.
    பெயரும் ஓரளவு செய்முறையும் ஞாபகம் வந்தாலும், ஏனோ செய்வதில்லை.ஸரியா வந்ததா?அதெல்லாம் யோசிக்கும் வயதில்லை அப்போது. உங்கள் முயற்சியைப் பாராட்டதான் வேண்டும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  54. யாருக்கேனும் பதில் சொல்ல மறந்துவிட்டதா என்று பார்க்க வந்தேன்.

    காமாட்சி மேடம்... உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. அமிருதக் குழல்-என் மனதில் பதிந்துகொண்டேன் (ஜாங்கிரி செய்முறைதானே. கையால் சுத்துவதற்குப் பதிலாக தேன்குழல் அச்சு. இதேபோல், பால் கொழுக்கட்டைக்கும், வெல்லத்தில் அரிசிமா உருண்டையை, அதாவது மணிக்கொழுக்கட்டை மாதிரி, வேகவைப்பது, அதையும், உருண்டையாக உருட்டாமல், முள்ளு முறுக்கு போன்ற பெரிய அச்சில் நேரடியாக வெல்லப்பாகில் பிழிந்து வேகவைப்பது படித்தேன். எல்லாவற்றையும் செய்துபார்த்துவிடுவேன்.

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!