பீட்ரூட்டை பச்சையாகவே தோல் சீவி மிக்சியிலிட்டு
நன்றாக அரைத்து ஒரு கப் சாறு எடுக்கவேண்டும்.
அந்த ஒரு கப் சாறை இலுப்பச்சட்டியில் போட்டு ஒரு கொதி வரும்போது அரை கப் சர்க்கரை அதில் போட்டு, இரண்டும் நன்றாகத் திக்காக ஆகிறவரைக்கும் ஓரளவு நீங்கள் பார்த்திருக்கக் கூடிய ரோஸ்மில்க் சிரப் தோற்றம் வரும் வரை கரைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
அப்படி வந்தவுடன், அடுப்பை அணைத்து விட்டு, அது கொஞ்சம் ஆறியதும் அரை டீஸ்பூன் ரோஸ் எஸன்ஸ் விட்டு,
ஆற வைத்து பாட்டிலில் கொட்டி வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் கொள்ளவும்.
பிறகு எப்போது வேண்டுமோ அப்போது ரோஸ்மில்க் கலக்குவது போல பாலில் இதைக்கலந்து குடிக்க வேண்டியதுதான்.
[ எனக்கும் ஒரு சிறு பாட்டிலில் தந்திருந்தார். அவ்வப்போது கலந்து ரசித்துக் குடித்தோம் - ஸ்ரீராம் ]
இதுவரை தெரியாது ரோஸ் எணன்ஸ் இப்படிச் செய்வார்கள் என்று. செய்துபார்க்கிறேன்.
பதிலளிநீக்குஎன்னிடம் எப்போதும் ரெண்டு பாட்டில் ரோஸ் எசன்ஸ் வைத்திருப்பேன். அவ்வப்போது ரோஸ் மில்க் செய்து ஃப்ரீசரில் வைத்துச் சாப்பிடுவேன். கீதாமேடமிடம் இதனை ஐஸ்கிரீம் ஆக்குவது எப்படின்னு கேட்கணும்
ரோஸ் எசன்ஸ்! பீட்ரூட் ஜூஸ்! கேட்கவே சுவையாக இருக்கிறது! சிறு வயதில் பீட்ரூட் சமைக்க விட மாட்டோம்! துருவிய உடனேயே அதில் சர்க்கரை சேர்த்து அப்படியே சாப்பிட்டு விட்டால் எங்கே சமைப்பது!
பதிலளிநீக்குஇந்தப் பயணத்தில் மகளிடம் அதைச் சொல்ல, “அய்ய, நல்லாவா இருக்கும்! யக்! என்கிறாள்!
எனக்கு ஆகாது...!
பதிலளிநீக்குசுலபமாக இருக்குதே...
பதிலளிநீக்குஆஹா! ஸ்ரீராம் ஹேமாவிடம் சொல்லுங்கள்....க்ரேட் மைன்ட்ஸ் திங்க் அலைக் நு!!!!ஹிஹிஹிஹி.... நான் பி ஏ படிக்கும் காலத்தில் எங்கள் கல்லூரியில் மதுரைகாமராஜ் பல்கலைக் கழகம் (அந்தக் கழகத்தின் கீழ் தான் எங்கள் கல்லூரி அப்போது) ஒரு வார கோர்ஸ் ஒன்று நடத்தியது. எங்கள் கல்லூரி பெண்கள் கல்லூரி ஆதலால், பெண்கள் டிகிரி முடித்ததும் ஏதேனும் சுய தொழில் செய்யலால் என்ற வகையில் கேனிங்க் அண்ட் ஃபுட் ப்ரிசெர்வேஷன் என்று நடத்தினார்கள். ஃப்ரீயாக. விருப்பம் உள்ளவர்கள் க்ளாஸைக் கட் அடித்துவிட்டுப் போகலாம்!!!! நமக்குத்தான் இது நல்ல சான்ஸ் ஆச்சே என்று அந்த ஒரு வாரம் முழுவதும் கல்லூரி ஹாஸ்டலின் சமையலறை அருகில் பெரிய அறையில் தான் இருப்பே. அதில் ஜூஸ், ஸு க்வாஷ், மொரப்பா, கேண்டி, ட்யூட்டி ஃப்ரூட்டி, ஜாம் ஜெல்லி, இப்படிக் கற்றுக் கொடுத்தார்கள். அதில் ரோஸ் எஸன்சும். அவர்கள் சொல்லிக் கொடுத்தது வழக்கமாகக் கடைகளில் விற்கப்படும் வகையில்...சுகர் சிரப் வித் க்ளியர் ரோஸ் எஸன்ஸ், ஃபுட் கலர் என்று. நான் வீட்டில் வந்து இப்படிச் செய்து பார்த்து மாட்டிக் கொண்டது வேறு விஷயம்..சுவை நன்றாக இருந்தது. நன்றாகவே இருக்கும். பனீர் ரோஸ் வாங்கி அதை வைத்தும் ரோஸ் எசன்ஸ் வீட்டில் செய்ததுண்டு குல்கந்தும் செய்ததுண்டு...குல்கந்து கூட போட்டு ரோஸ் மில்க் செய்யலாம் எஸன்ஸ் மட்டும் சேர்த்து..ஆனால் நான் அதற்கு இனிப்பு கடைகளைப் போல அதிகம் போடுவதில்லை. கொஞ்சம் அளவாகத்தான் போடுவேம்..அதுவும் நன்றாக இருக்கும். ஹேமாவுக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க ஸ்ரீராம்!! வெரைட்டி வெரைட்டியா க்ரியேட்டிவா செய்யறாங்க!!! நல்ல ஆர்வம்!!
பதிலளிநீக்குகீதா
வீட்டில் மாட்டிக் கொண்டது, பீட்ரூட் பாதி எடுத்து ஹேமா சொல்லியிருப்பது போல் செய்து பார்த்ததால்....ஹஹஹ்
பதிலளிநீக்குகீதா
இப்படி ஒன்று இருக்கின்றதா!?..
பதிலளிநீக்குஆனாலும், பீட்ருட் சாறு எப்படி ரோஸ் எஸன்ஸ் ஆகும்?..
சிவப்பு ரோஜா நிறத்தில் இருப்பதாலோ!..
இருக்கும்..இருக்கும்!..
மிகவும் எளிதாக இருக்கே!
பதிலளிநீக்குஹேமாவிற்கு நன்றி.
அருமையான யோசனை
பதிலளிநீக்குஅருமையான யோசனை
பதிலளிநீக்குஆவ்வ்வ் பீற்றூட்டில் எஸன்ஸ் ஆஆஆஆ?:) நல்லா இருக்கும், இதை கலறிங்காக கூடப் பாவிக்கலாமே.. வெங்கட் நாகராஜ் அவர்களின் பக்கத்து வீட்டில் பச்சைக் கேசரி செய்ததுபோல, நாமும் சிவப்புக் கேசரி, மற்றும் சில சுவீட் உணவுகளுக்கும் கலரிங்காகப் பாவிக்கலாம் போல.
பதிலளிநீக்குஇங்கு சிகப்பு கலரிங் வாங்கினால் ஒரு வித எரியும் சுவையாகவும் கைப்பு சுவையாகவும் இருக்கே , ரேஸ்ட்டே இல்லாமல்.
எனக்கு மட்டும் வீட்டில் பீற்றூட் ரொம்பப் பிடிக்கும். ஒருதடவை லிப்ஸ்ரிக்காக பாவிக்கலாம் என ஒரு முறை பேஸ்புக்கில் இருந்து, செய்து பிரிஜ்ஜில் வைத்துப் பார்த்தேன், அது பெரிதாகப் பலன் கொடுக்கவில்லை.
பதிலளிநீக்குஊசிக்குறிப்பு:
இங்கே எங்கள் புளொக்கில், ஏற்கனவே வந்துள்ள சமையல் குறிப்புக்களை எப்படித்தேடிப் படிப்பது?
தேடும் வசதி வச்சிருக்கிறீங்கதான், ஆனா அதனால் என் போன்ற வெளி ஆட்களுக்கு என்ன பலன்? தலைப்பைத் தெரிந்தால் மட்டும்தானே அதில் போட்டுத் தேட முடியும்?...
தொடர்பதிவுகளை மட்டுமாவது லேபல் போட்டு வெளியே விட்டால் தேட இலகு எல்லோ?... அல்லது இங்கு வேறு ஏதும் வசதி உண்டோ? தலைப்புத்தெரியாமலே தேடிக் கண்டுபிடிப்பதற்கு?..
மை வச்சிட்டேன்ன்ன் முதேல்ல் வேலையா...
//[ எனக்கும் ஒரு சிறு பாட்டிலில் தந்திருந்தார். அவ்வப்போது கலந்து ரசித்துக் குடித்தோம் - ஸ்ரீராம் ]//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
ஆரோக்கியமான டிப்ஸ்
பதிலளிநீக்குஇதைவிட எளிதாகக் கூற முடியாது போலுள்ளதே.அருமை.
பதிலளிநீக்குஅருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
எளிய முறை. முயன்று பார்க்கிறேன்.
பதிலளிநீக்குசெய்முறைக்கு நன்றி
பதிலளிநீக்குமுக்கியமான ஓட்டு என் ஓட்டு!
பதிலளிநீக்குசெயற்கை நிறமிகள் சேர்க்காத உடலுக்கு தீங்கு விளைவிக்காத BEET ROOT ரோஸ்நிறமி ..இங்கே றோஸ் கான்சன்ட்ரேட் சேர்க்க வேணாம்னு நிறையபேருக்கு சொல்லிருக்காங்க .WELTS வருமாம் .பீட்ரூட் இப்படி செய்து வைப்பது நல்லது ,,பலூடா ஷர்பத்க்கு போடலாம்
பதிலளிநீக்குநன்றி பகிர்வுக்கு ஹேமா அண்ட் எங்கள் பிளாக் ..
Rose colour mix super. Beetroot pidikkum. seythu paarkkalaam. thank you Hema.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇதுவரை கேள்வி படாத ஒன்று இதை செய்து காட்டி எங்க வீட்டு மாமியிடம் சபாஷ் வாங்கிடலாம் ஹெல்தி ட்ரிங்க்ஸ் என்று சொன்னால் ஒரு வேளை முத்தம் எக்ஸ்ட்ராவா கிடைக்கலாம் ஹும்ம்ம்ம்ம்
அருமை!
பதிலளிநீக்குகுடிக்க ருசி, உடம்பிற்குக் கெடுதல் செய்யாது. அதுவும் பாலில் கலந்து குடிக்க. ஹெல்தியானது.அன்புடன்
பதிலளிநீக்குஹேமாவைப்பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்ய அன்புடன்
பீட்ருட் சாறு எப்படி ரோஸ் எஸன்ஸ் ஆகும்?துரை செல்வராஜூ அய்யா அவர்களின் சந்தேகம்தான் எனக்கும் ,அதுக்காக யாரும் குடுத்தா குடிக்காம இருக்க மாட்டேன் :)
பதிலளிநீக்குஸ்ரீராமுக்கு ஒன்று சொல்லோணும்... என்னவெனில், இனி ஹேமா அவர்கள் படங்கள் எடுக்கும்போது, கமெராவை ஆகவும் கிட்டவாகப் பிடித்து எடுக்க வேண்டாம் எனச் சொல்லிடுங்கோ..
பதிலளிநீக்குஎளிமையான செய்முறை நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதுசெய்து பார்க்க வேண்டும்
பதிலளிநீக்குநாங்க ரோஸ்மில்கிற்கு ரோஸ் எஸ்ஸென்ஸ் ஸ்ட்ராபெரி கலரில் கிடைப்பது வாங்கியதில்லை. அதற்குப் பதிலாக ரூஹ் அஃப்ஸா சிரப் விட்டுக் கலப்போம். உடம்புக்கும் நல்லது. இதிலேயே ஐஸ்க்ரீம் செய்யணும்னா இதோடு கொஞ்சம் கஸ்டர்ட் பவுடர் அல்லது சோளமாவு கலந்து க்ரீம் போட்டு நன்கு அடித்துப் பின் ஃப்ரீஸரில் வைக்கலாம். அல்லது குல்ஃபி ட்ரேயில் வைக்கலாம்.
பதிலளிநீக்குஎங்க வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் குடிக்கும் நீர் கூட வைப்பதில்லை. மற்றும் கோக், பெப்ஸி, பொவன்டோ, மிரிண்டா போன்ற பானங்களும் சாப்பிட்டதில்லை. எலுமிச்சைச்சாறு அல்லது இளநீர், கரும்புச் சாறு அல்லது பழரசம் போன்றவை தான். பழரசங்களும் பெரும்பாலும் வீட்டிலேயே தயாரிப்பது!
பதிலளிநீக்கு