ரேவதி நரசிம்ஹன் :
இங்கே கேள்விகள் கேட்டிருக்கும், முந்திய பதிவுகளிலும் கருத்துரை பதிந்திருக்கும், ஆர்வம் மிக்க, புத்திசாலி ரசிகர்கள்தான் முக்கிய காரணம்.
நாங்க மட்டும் எழுதாம உங்கள் படைப்புகளுக்கும் நாங்க தரும் முக்கியத்துவம் மற்றொரு காரணம்.
எங்கள் ப்ளாக் ஸ்டேடிஸ்டிக்ஸ் பார்த்தால், திங்கள் பதிவுகள், செவ்வாய் கதைகள், ஸ்ரீராம் பதிவுகள் மூன்றுமே முன்னணியில் உள்ளன.
?எனக்குச் சென்னையே பிடிக்காது! ஏன்? கண்டு பிடிங்க பார்க்கலாம்! :)
?பானுமதி இத்தனை மிஸ் பண்ணுவதாய் எழுதி இருக்காங்க! நீங்க? சென்னையில் எதை மிஸ் செய்கிறீர்கள்?
சென்னையில் இருக்கும்போது பெங்களூரை மிஸ் செய்கிறேன். பெங்களூரில் இருக்கும்பொழுது சகோதரர்களுடன் சந்தோஷமாக சீட்டாடுவதையும், சங்கீதக் கச்சேரிகளையும் மிஸ் செய்கிறேன்.
சொந்தங்கள் எல்லாம் சென்னையில் இருந்தும் எனக்கு அப்படி ஏதும் தோணலை! ஏன்?
கண் திருஷ்டியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. தெரிந்தவர்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் அதற்கு கண் திருஷ்டிதான் காரணம் என்று சொன்னால், அதை மறுத்துப் பேசியதும் இல்லை. அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களுக்கு!
?கடவுளை உணர்ந்திருக்கீங்களா?
சுத்தத்தில் குறைவு, சத்தத்தில் அதிகம்!
சமையலறையில் நான் பெரும்பாலும் சோதனைச் சமையல்கள் செய்வேன். போனவாரம் ஒருநாள், MTR Rava dosa powder, Aachchi Bajji bonda powder, MTR vada mix powder, MTR Rava idli mix, Rice flour, (கோபால் பல்பொடி தவிர, கைக்குக் கிடைத்த மாவு எல்லாம் சேர்த்து) Organic desiccated coconut, salt, பெருங்காயம், எல்லாம் சேர்த்து, தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, மாவு செய்து அதில் அடை செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் என்னென்ன மாவுகள் எவ்வளவு சேர்த்தேன் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளவில்லை. அதனால இதைத் திங்கக்கிழமைப் பதிவில் எழுதமுடியவில்லை. அடுத்தத் தடவை சோதனை செய்யும்போது, குறிப்புகள் எழுதிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.
வாரப் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் பத்து வருஷத்துக்கு முந்தியே நின்றுவிட்டது.
பொன்னியின் செல்வன் ஒன்றைத்தான் முழுவதும் இரசித்துப் படித்திருக்கிறேன். கல்கியின் சங்கீத விமரிசனங்கள் புத்தகம் நாகை நூலகத்தில் எடுத்துப் படித்திருக்கிறேன். மற்றவைகளைப் படிக்கவேண்டும் என்று, பி டி எஃப் கோப்புகள் வைத்துள்ளேன்.
?எங்கள் ப்ளாக் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன.
தி.கிழமை, செ கிழமை கதை, பு கிழமை கருத்துகள், வி கிழமை கதை
ஸ்ரீராம் பதிவுகள்.
தி.கிழமை, செ கிழமை கதை, பு கிழமை கருத்துகள், வி கிழமை கதை
ஸ்ரீராம் பதிவுகள்.
எங்கள் blog வளர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எங்களுக்கு எல்லாமே பொன் குஞ்சு தான்.
நாங்க மட்டும் எழுதாம உங்கள் படைப்புகளுக்கும் நாங்க தரும் முக்கியத்துவம் மற்றொரு காரணம்.
எங்கள் ப்ளாக் ஸ்டேடிஸ்டிக்ஸ் பார்த்தால், திங்கள் பதிவுகள், செவ்வாய் கதைகள், ஸ்ரீராம் பதிவுகள் மூன்றுமே முன்னணியில் உள்ளன.
கீதா சாம்பசிவம் :
?உங்களுக்குச் சென்னை பிடிக்குமா? பெண்களூர் பிடிக்குமா?ஏன்? எங்கு வாழ்வது ரசிக்கத் தக்கது?
எந்த ஊரில் வாழ்வதானாலும், ரசிக்க எவ்வளவோ இருக்கும். அதேபோல் சிரமங்களும் சங்கடங்களும் எல்லா இடங்களிலும் இருக்கும். நமக்கு ஒரு இடம் பிடிக்கிறது ஒரு இடம் பிடிக்கவில்லை என்றால் சீதோஷ்ணம் குடிதண்ணீர் போன்ற காரணங்கள் இருந்தால் அவை ஏற்கப்பட வேண்டியவை தான். பாஷை தெரியாமல் கஷ்டப்பட வேண்டி வந்தால் எவ்வளவு நல்ல இடமாக இருந்தாலும் நமக்கு ஒத்து வராது.
இப்படிப் பார்த்தால் எனக்கு பெங்களூர் தான் பிடிக்கும்.
சங்கீதக் கச்சேரிகள், பொழுது போக்கு இடங்கள், நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்திற்குப் போக (குறைந்த செலவில்) போக்குவரத்து வசதிகள் எல்லாம் இருப்பது சென்னையில்தான். இந்தக் காரணங்களால், சென்னை பிடிக்கும். சுத்தம், (நெருங்கிய) சொந்தக்காரர்கள் இருக்குமிடம், சீதோஷ்ண நிலை என்று பார்த்தால், பெங்களூர்தான். இந்தக்காரணங்களால் பெங்களூர் மீது வெறுப்பு கிடையாது!
அப்படியா! ஏன்? நாகையிலிருந்து சென்னை வந்து சேர்ந்த 1971 தொடங்கி 2006 வரை முப்பத்தைந்து ஆண்டுகள் சென்னை வாழ்க்கையை மிகவும் ரசித்தவன் நான்.
?பிடிச்ச ஊர் எது? (கல்யாணமஹாதேவி என்னும் பதில் தவிர்க்கவும்)
?பிடிச்ச ஊர் எது? (கல்யாணமஹாதேவி என்னும் பதில் தவிர்க்கவும்)
பிடித்த ஊர் திசையன் விளைக்கு ம் அழகிய பாண்டி புரத்துக்கும் இடைப்பட்ட எல்லா கிராமங்களும்.
எமரால்டு.
?பானுமதி இத்தனை மிஸ் பண்ணுவதாய் எழுதி இருக்காங்க! நீங்க? சென்னையில் எதை மிஸ் செய்கிறீர்கள்?
சென்னையில் இருக்கும்போது பெங்களூரை மிஸ் செய்கிறேன். பெங்களூரில் இருக்கும்பொழுது சகோதரர்களுடன் சந்தோஷமாக சீட்டாடுவதையும், சங்கீதக் கச்சேரிகளையும் மிஸ் செய்கிறேன்.
சொந்தங்கள் எல்லாம் சென்னையில் இருந்தும் எனக்கு அப்படி ஏதும் தோணலை! ஏன்?
எங்கே நிம்மதி கிடைக்கிறதோ, அந்த இடம்தான் சொர்க்கம். சென்னையில் உங்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லையோ?
பானுமதி வெங்கடேஸ்வரன் :
?கண் திருஷ்டி என்பதை நம்புகிறீர்களா? கண் திருஷ்டியால் நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ பாதிக்கப்பட்ட அனுபவம் உண்டா?
கண் திருஷ்டியால் அவதிப்பட்டவர்கள் யாரையும் நான் நேரடியாகப் பார்த்ததில்லை. ஆனால் கண் திருஷ்டிக்காக ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட கிழமையில் கற்பூரம் சுற்றி திருஷ்டி கழிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அதேபோல இருந்து தொலைத்தவர்கள் பலரும் " எந்தப் பாவி கண் திருஷ்டி பட்டதோ " என்று புலம்புவதையும் கேட்டிருக்கிறேன்.
?கடவுள் என்று ஒன்று உண்டு என்று நம்பாதவர்கள் அதை இயற்கை என்பார்கள்.. நாம் இயற்கையை எக்ஸ்ப்லாய்ட் செய்யும் பொழுது அது சீற்றமடைய வாய்ப்பு உண்டுதானே? எனவே, இயற்கை சீற்றம் என்பது கடவுளின் கோபம் என்று கொள்ளலாமா?
கருத்து அல்லது நம்பிக்கை என்று வந்தால் யார் எதை வேண்டுமானாலும் நம்பலாம் யார் என்ன கருத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கடவுள் என்பது இந்த வகையில் வரும். நம்புவதும் கருத்துக்களைக் கொண்டிருப்பதும் அவரவருடைய இஷ்டம். அதில் தலையிட நமக்கு என்ன உரிமை இருக்கிறது ?
சங்கடமான சில கேள்விகளுக்கு கடவுள் செயல் என்று பதில் அளிப்பது சுலபமானது. கடவுள் என்ற சொல்லைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் இயற்கை என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.
வெள்ளம் பூகம்பம் போன்ற நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கான பேர்களைப் பாதிக்கின்றன. அவர்கள் அனைவரும் பாவிகள் கடவுளால் தண்டனை அளிக்கப் பட்டவர்கள் என்று நம்புவது கடினமாக இருக்கிறது.
நெல்லைத்தமிழன் :
?நீங்க ஆச்சர்யமூட்டும் வித்தைகளைப் பார்த்த அனுபவம் உண்டா?
கடற்கரையில் வித்தை காட்டுபவர், மேடையில் பாக்கியநாத், சர்க்கார், ஜேம்ஸ் முதல் ராம ஜோசியம்..என்று ஒற்றைத் தந்தி தம்புராவுடன் வருவார் அவர் வரை எல்லோர் வித்தையையும் பார்த்து மயங்கி இருக்கிறேன் .
விளக்க முடியாத சில வித்தைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை பெரும்பாலும் அமானுஷ்யம் அல்ல மனித சாமர்த்தியம் என்றுதான் பெரும்பாலும் நம்பப்படுகிறது.
நாகையில், தெருவில் வித்தைகாட்டுபவர் ஒருவர், ஒரு கூடையைக் கவிழ்த்து, டமர டமர டம் என்று சற்றுநேரம் தாளம் தட்டி, மேளம் கொட்டி, கூடையை அகற்றினார். அங்கே ஒரு மாஞ்செடி இருந்தது. அவர் அந்த இடத்தைக் காலி செய்து சென்றபோது, அந்தச் செடியையும் கூடையையும் கையோடு எடுத்துச் சென்றுவிட்டார். டி வி யில் பி சி சர்க்கார் மேஜிக்குகளை ரசித்துப் பார்த்திருக்கிறேன்.
?கடவுளை உணர்ந்திருக்கீங்களா?
நம்முடைய அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத எந்த ஒரு நிகழ்வும் கடவுளால் நிகழ்த்தப் பட்டதாகத்தான் பெரும்பாலோர் நம்புகிறார்கள்
பலசமயம் விவரிக்க முடியாத மகிழ்ச்சி விவரிக்க முடியாத மன அமைதி இந்த இரண்டையுமே அனுபவித்திருக்கிறேன்.
ஆனால் அதுதான் கடவுள் அனுபவம் என்று சொல்வதற்கு மனம் வரவில்லை. காரணம் கடவுளை நேரடியாகக் கண்டால் உணர்ந்தால் அது எந்த விதமான விளைவை நம் மனதில் ஏற்படுத்தும் என்று நாம் யாரும் அறிய மாட்டோம்.
உண்டு.
வாட்ஸ் அப் கேள்விகள் :
நெல்லைத்தமிழன் :
1. மேலை நாடுகள் ஆடைப் புரட்சி செய்திருக்கவில்லை என்றால் இந்தியர்களின் உடை இப்போது இவ்வளவு அழகாக இருந்திருக்காதல்லவா?
நீச்சல் உடை பற்றியோ கேட்கிறார்?
அழகு என்பது ஒரு ரிலேட்டிவ் சமாச்சாரம் ஸ்டாப் அது காண்பவர் மனப்பாங்கையும் அவருடைய பாரம்பரியத்தையும் பொறுத்தது.
உதாரணமாக வேளுக்குடி கிருஷ்ணன் காஞ்சி சங்கராச்சாரியார் இவர்கள் ஜீன்ஸ் ஸ்லாக் போட்டுக்கொண்டு வந்தாளல் நாம் அதை ரசிக்க மாட்டோம். மைக்கேல் ஜாக்சன் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு வந்தால் அது ஒரு கோமாளிக் கூத்தாகத் தான் இருக்கும்.
மேலே நாட்டிலேயே கூட ஒரு முந்நூறு வருஷங்களுக்கு முன்னால் அவர்களுடைய ஆடை அலங்காரத்தைப் பார்த்தீர்களேயானால் வேண்டாத அனாவசிய சமாச்சாரம் நிறைய இருப்பதாக தோன்றும்.
இன்றைய நிலவரத்தில் மேலைநாட்டு ஆண்களின் உடை வசதியாகவும் பெண்கள் உடை ஓவர் கவர்ச்சியாக இருப்பதாகவும் நான் நினைக்கிறேன்.
புடவை, வேட்டி, பாவாடை தாவணி எல்லாம் மேலை நாட்டு ஆடைப் புரட்சிகளா என்ன!
" நல்லாக் கேளுங்க அண்ணா!"
2. மற்ற முன்னேறிய நாடுகளைப் பார்க்கில் இந்தியர்கள் சுத்தத்தில் குறைவா?
மற்ற முன்னேறிய...என்றால்
இந்தியா முன்னேறிய நாடு என்று சந்தடி சாக்கில்..
சுத்தத்தில் மட்டுமல்ல சட்டத்தை அனுசரித்து நடப்பதிலும், (சட்ட மீறல்கள்) நாம் மிகப் பின் தங்கித்தான் இருக்கிறோம்.
3. திங்கள் சமையல் பதிவுக்கு கேஜிஜி ஏன் எழுதி அனுப்புவதில்லை?
அவர் செய்யும் சமையல் வாயில் ருசித்தாலும் படத்தில் சுமார்தான் என்பதால் இருக்கும்.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
?கல்கியின் அலை ஓசை மீண்டும் தொடங்கியிருக்கிறார்களே.., தொடரும் உத்தேசம் உண்டா?
கல்கியின் படைப்புகள் அரசுடமை ஆக்கப்பட்ட பின் யார் வேண்டுமானாலும் அவருடைய படைப்புகளை பிரசுரிக்கலாம் என்கிற நிலை நிலவுகிறது. ஏனென்றால் அவை பொதுச்சொத்து ஆகிவிட்டன.
எனவே நாம் கல்கியின் பிரபலமான நாவல்களை யார் யாரோவெல்லாம் பிரசுரிப்பதைப் பார்த்து வருகிறோம்.
கல்கி பத்திரிகை அவ்வப்போது பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் மீண்டும் பிரசுரிப்பதை பார்க்கும் போது " ஐயோ பாவம் ! இவர்களுக்கு பத்திரிகை விற்பனையை அதிகரிக்க வேறு வழி ஏதும் தோன்றவில்லையா " எனும் உணர்வு தான் மேலிடுகிறது 200 ரூபாய் கொடுத்து ஒரு அலை ஓசை, சிவகாமியின் சபதம் அல்லது பொன்னியின் செல்வன் புத்தகம் வாங்கிவிடலாம் . இதற்காக ஆண்டுக்கணக்காக ஒரு பத்திரிகைக்கு சந்தா செலுத்த வேண்டும் என்று விபரம் அறிந்த யாரும் எண்ண மாட்டார்கள்.
?கல்கியின் புதினங்களில் உங்களைக் கவர்ந்தது எது?
?கல்கி தன் நாவல்களை முடிக்கும் பொழுது கொஞ்சம் சொதப்பி விடுகிறாரோ? என்ற என்று தோன்றும். ஆமாவா?
பொன்னியின் செல்வன், அலைஓசை, சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய எல்லா நாவல்களுமே முடிவில் நன்றாகத்தான் இருந்தன என்று நான் நினைக்கிறேன்.
வரலாற்று நவீனம் எழுதும்போது முடிவை ஆசிரியர் தன் இஷ்டத்திற்கு மாற்ற முடியாது. இந்த கஷ்டத்தை கல்கியே தன் முடிவுரையில் சொல்லியிருக்கிறார்.
அவரது வாழ்வு காலத்திலேயே கூட கல்கியின் சிறுகதைகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற எண்ணம் பரவலாக பேசப்பட்டது. அந்த விபரம் அவருக்கும் தெரியும் எனினும் அதை அவர் பெரிதாக எதிர்க்கவில்லை. அதில் உண்மை இருந்தது தான் காரணமாக இருக்குமோ ?
தீவிர ரசிகர்கள் தம் அபிமான ஆசிரியர்கள் எந்தத் தவறும் செய்ததில்லை என்று சண்டை போடுவார்கள். பலர் படிக்காமலேயே கூட கட்சி கட்டி நான் பார்த்திருக்கிறேன்.
===================
கேள்விகள் கேட்டவர்களுக்கு, எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து, தங்கள் கருத்துகளை எழுதப்போகும் ஆர்வம் மிக்க, புத்திசாலி வாசகர்களுக்கு, மேலும் இந்தவாரம் கேள்விக்கணைகள் தொடுக்கப்போகிறவர்களுக்கு எல்லோருக்கும் எங்கள் நன்றி!
அடுத்தவாரம் மீண்டும் சந்திப்போம்.
+++++++++++++++++++++++++++++
கேள்விகள் கேட்டவர்களுக்கு, எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து, தங்கள் கருத்துகளை எழுதப்போகும் ஆர்வம் மிக்க, புத்திசாலி வாசகர்களுக்கு, மேலும் இந்தவாரம் கேள்விக்கணைகள் தொடுக்கப்போகிறவர்களுக்கு எல்லோருக்கும் எங்கள் நன்றி!
அடுத்தவாரம் மீண்டும் சந்திப்போம்.
+++++++++++++++++++++++++++++
வாழ்க.. வளர்க..ம்
பதிலளிநீக்குவாழ்க... வளர்க...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆல் போல் தழைத்து
பதிலளிநீக்குஅருகு போல் வேரூன்றுக...
அன்பின் KGG, கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎபியின் வளர்ச்சிக்குக் காரணம்
பதிலளிநீக்குஎபி தான்!...
யாராவது வாங்கப்பா சீக்கிரம்!...
பதிலளிநீக்குதனியா இருக்க பயமா இருக்கு!....
// யாராவது வாங்கப்பா சீக்கிரம்!...
நீக்குதனியா இருக்க பயமா இருக்கு!....//
ஹா! ஹா! நாங்க வருவோம் ஆனால் உங்கள் கண்ணில் பட வேண்டுமே..:(
இதோ வந்துட்டேன், வழக்கம் போல் நாலரைக்கு எழுந்துட்டாலும் இணையம் வர லேட்டாயிடுச்சு. :)
பதிலளிநீக்குகேள்வி பதில் படிச்சாச்சு, விமரிசனம் பின்னர்!
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனுஷ்காவின் பறக்கும் முத்தத்தை பெற்றுக் கொண்டேன். மிக்க்க்க நன்றி. பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குஅனுஷ்கா இன்றி எ.பி. அணுவும் நகராது.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு//..அனுஷ்கா இன்றி எ.பி. அணுவும் நகராது.//
பதிலளிநீக்குஅ.பி. என்றே அழைக்கலாமோ?
உலக அதிசயமாக. ஒரு நல்ல தமன்னா படத்தை எ.பியில் போட்டால், நன்கு ரசித்துவிட்டு, பார்க்காத மாதிரி எல்லோரும் சாமியார் வேஷம் போடறாங்களே. இது நியாயமா?
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்லா கேளுங்க அண்ணா - இது திட்டமிட்ட சதியாகத் தெரிகிறது நெல்லை... கொஞ்சம் கவனிங்க...
இன்னிக்கு ரெண்டு பேர் படமும் வந்துடுச்சு.... நடக்கட்டும்.
கேள்வி பதில்கள் - ஸ்வாரஸ்யம். கேட்டால் தான் பதில் கிடைக்கும்.... உண்மை. தொடரட்டும் கேள்விகளும் பதில்களும். படிக்க மட்டும் நான் வருவேன்!
விததை என்பதை மட்டும், பதிவில் மாற்றவும்... வியாபார பயணத்தில் உள்ளதால் இந்தளவு கருத்துரையே...
பதிலளிநீக்கு//..உலக அதிசயமாக ஒரு நல்ல தமன்னா..//
பதிலளிநீக்குஅதிகாலை அதிசயம். நல்ல தமன்னா ! நல்லநாள்தான் இது..
////நல்லா கேளுங்க அண்ணா - இது திட்டமிட்ட சதியாகத் தெரிகிறது நெல்லை... கொஞ்சம் கவனிங்க...//
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் எதுவும் இல்லை வெங்கட். சூரியனுக்கு முன்னால் நட்சத்திரங்கள் ஒளி மங்காது இயல்புதானே? அத்தனை அழகான அனுஷ்காவிற்கு முன்னால் தமன்னவெல்லாம் எப்படி எடுபட முடியும்.
//நல்லா கேளுங்க அண்ணா - இது திட்டமிட்ட சதியாகத் தெரிகிறது நெல்லை... கொஞ்சம் கவனிங்க...//
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் எதுவும் இல்லை வெங்கட். சூரியனுக்கு முன்னால் நட்சத்திரங்கள் ஒளி மங்குவது இயல்புதானே? அத்தனை அழகான அனுஷ்காவிற்கு முன்னால் தமன்னாவெல்லாம் எப்படி எடுபட முடியும்.
இந்த வாரமும் கேள்விகள் கொஞ்சம் குறைவுதான். கேள்விக்கணை தொடுக்கும் தேவதையை காணாததுதான் காரணமா?
பதிலளிநீக்குகேள்விகளை பற்றி இன்னொரு கேள்வி. பெண்கள்தான் அதிகம் கேள்வி கேட்கிறார்கள். ஆண்களுக்கு சந்தேகம் வராதா? அல்லது தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லையா?
விளம்பரங்களை பார்த்து பொருளை வாங்கி விட்டு ஏமாந்த அனுபவம் உண்டா?
இது உண்மையாக இருக்கக்கூடாதா? என்று நினைத்த வதந்தி ஏதாவது உண்டா?
பிள்ளையார் சதுர்த்தி வருகிறதே, வழக்கமான தேங்காய் பூரணம், எள்ளுப்பூரணம், உளுத்தம் பூரணம் கொழுக்கட்டைகளைத் தவிர பனீர் கொழுக்கட்டை, ட்ரய் ஃபிரூட்ஸ்(dry fruits) கொழுக்கட்டை போன்றவை சுவைத்திருக்கிறீர்களா?/செய்திருக்கிறீர்களா?
கேள்வி பதில்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபலமாவு கலவை அடை நல்லா இருக்கே!
காணொளி நன்றாக இருக்கிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வாரமும் கேள்வி பதில்கள் எப்போதும் போல் சூப்பர். கேள்விகளுக்கு பொருத்தமான பொறுப்பான
பதில்களை மிகவும் ரசித்தேன்.
முதல் கேள்வியும் அருமை.. அதற்கு பதில்கள் மிக அருமை. அடைமாவு தோசை எ. பியில் திங்களுக்கு அறிமுக படுத்தலாமே..
காணொளியும் நன்றாக உள்ளது தலைப்பும் சூப்பர். என்னைப் போல கேள்வி கேட்க தெரியாதவர்களுக்கு இன்றைய தலைப்பு பொருத்தமாக உள்ளது. அனுஷ்கா உட்பட அனைத்தும் அருமை.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//மேலை நாடுகள் ஆடைப் புரட்சி செய்திருக்கவில்லை என்றால் இந்தியர்களின் உடை இப்போது இவ்வளவு அழகாக இருந்திருக்காதல்லவா?//இது கொஞ்சம் ஓவரா இல்லையோ? ஆங்கிலேயர் ஆள வந்தப்புறமாத் தான் இந்தியர்களுக்குப் படிப்பறிவே வந்தது என்பது போல் இருக்கே! (அடுத்த வாரத்துக்கான கேள்வி)
பதிலளிநீக்குகொஞ்சம் சீரியஸா ஒரு கேள்வி!
கணவன், மனைவிக்குப் பயந்தவர் போல பல ஜோக்குகள் வருகின்றன! ஆனால் உண்மையில் அப்படித் தான் நடக்கிறதா? குறைந்த பட்சம் உங்க வீடுகளில்?
கல்யாணம்னாலே என்னமோ ஓர் கால்கட்டு, விலங்கு என்பது போல் ஆண்கள் சொன்னாலும் அந்தக் கல்யாணம் செய்துக்க அவங்க ஏன் முன் வருகிறார்கள்?
பெண்களைப் பற்றி ஆயிரம் குற்றம், குறை சொல்லிட்டு அந்தப் பெண்கள் பின்னாலேயே சுத்தும் மர்மம் என்ன?
எதிர்பாலினம் மேல் ஈர்ப்பு தான் காரணம்னா குற்றம் ஏன் கண்டு பிடிக்கணும்?
அந்தக் காலத்தில் ஆண்கள் தான் குடும்ப நிர்வாகத்தைக் கவனிச்சாங்க என்கிறார் நெ.த. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வீடுகளில் இருந்திருக்கலாம். ஆனால் பொதுவாக வீட்டு நிர்வாகம் பெண்கள் கையில் தான் இருந்தது! சரியா, தப்பா?
அப்புறமா வரேன்.
நீங்க எல்லோரும் ஆசைக்குக் கணினி கற்க நேர்ந்ததா? அவசியத்துக்கா?
பதிலளிநீக்குகணினி கற்க ஆரம்பிச்சப்போ பல விசித்திர அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அவை சுவாரசியமானவையா? இல்லைனா அசடு வழியும் தன்மையுள்ளதா? (எனக்கு இரண்டும் உண்டு)
கணினியில் எப்போ உட்காருவீங்க? காலை எழுந்து காலைக்கடன்களை முடிச்சுட்டுக் காஃபி சாப்பிட்டதுமா? இல்லைனா எழுந்ததுமேவா?
கணினி இல்லாமல் உங்களால் ஒரு நாள் இருக்க முடியுமா? முகநூல் பார்க்காமலோ, கணினியைப் பார்க்காமலோ இருப்பீர்களா?
கடவுளை நேரில் கண்டால் பயந்து ஓடிடுவோமோ என்னமோ!
பதிலளிநீக்குஅடுத்த புதனை நோக்கி :
பதிலளிநீக்குஏன்.. என்ற கேள்வி..
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..
- ரசித்திருப்பீர்கள். மனைவி ஏதாவது சொல்லுகையில் இந்த வரி ஞாபகம் வந்து வாயைத் திறக்க முயற்சித்ததுண்டா? இல்லை, மனைவி எதிர்ப்பட்டதுமே பாட்டெல்லாம் பக்கத்து ஜன்னல் வழி பாய்ந்து வெளியேறிவிடுகிறதா?
என் கேள்விக்குப் பதில் சொன்னதற்கு மிக நன்றி.
பதிலளிநீக்குஉடல் நலம் பேணுவதில் அக்கறை காட்டுபவர்கள் அதிகமா
அலட்சியம் செய்பவர்கள் அதிகமா.
முகத்தில் காட்டும் கவனம் ,
உடலின் பயிற்சிக்குக் காட்டுகிறார்களா.
மாடித் தோட்டம் போட்ட அனுபவம் உண்டா.
கயிறு மேஜீக் அருமை பாராட்டுகள்
பதிலளிநீக்குகீசா மேடம் //இது கொஞ்சம் ஓவரா இல்லையோ?// - நான் சொன்னதில் தவறில்லை. பழைய படங்களைப் பாருங்கள். இந்தியர்களின் உடை என்ன என்று தெரியும். மேலை நாடுகளின் தாக்கத்திற்குப் பிறகுதான் நாம் நன்றாக உடுத்துகிறோம் என்று சொன்னால் அதில் தவறில்லை. நமக்கு உடை மிக முக்கியமானதாக இருந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகுதான் உடை நாகரிகம் நமக்கு வந்தது.
பதிலளிநீக்குஅந்த மேஜிக் காணொளியில், 'வாள்' எதற்காக பூமியில் ஊன்றப்பட்டது...?
பதிலளிநீக்கு