வியாழன், 9 ஆகஸ்ட், 2018

9.8.18 கேள்விகள் & பதில்கள் !




கீதா சாம்பசிவம் : 

?காந்தி பத்தி உங்க கருத்து என்ன? (ஹையா, மாட்டிக்கொண்டாரே, மாட்டிக் கொண்டாரே)

காந்தி குறித்து பல்வேறு கருத்துகள் இருந்தாலும் காந்தி இல்லாதிருந்திருந்தால் இந்தியா இப்படி சுலபமாக தன்னாட்சி  பெற்றிருக்குமா  என்பது சந்தேகம்தான்.


 விமர்சனம் மிகவும் சுலபமானது ஆனால் சாதனை அப்படியல்ல. சாதித்துக் காட்டியவர்களைப் பார்த்து நாம் அவர்களை குற்றம் குறை சொல்லி விமர்சிப்பது ஒரு வருத்தம் அளிக்கக்கூடிய மனோபாவம். அப்படிச்  செய்ய நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை.


காந்தியா எந்த காந்தி பற்றிக் கேட்கறீங்க?



ப: வெள்ளை சட்டை, வெள்ளை பைஜாமா போட்டுக் கொண்டு, அழகாக கண்ணடிக்கிறார்! (ஹையா, மாட்டிக்கலையே! மாட்டிக்கலையே!) 
                                   

?இப்போ முதல் கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு கேள்வி! பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா (பாரம்பரியமாகத் தென்னிந்திய உணவில் முக்கியமாய்த் தமிழகத்தில் செய்வது ) பிடிக்குமா? இல்லாட்டி சனா மசாலா இப்போல்லாம் பிரபலமா இருக்கே அது பிடிக்குமா?


ஒரு உணவு வகையை குறித்து இது பிடிக்குமா பிடிக்கும் என்றால் ஏன் பிடிக்கும் பிடிக்காது என்றால் ஏன் பிடிக்காது என்ற கேள்விக்கு ஒரு திருப்திகரமான பதிலை சொல்வது மிக மிக கடினம்

 சிலவற்றுக்கு காரணம் சொல்வது அவ்வளவு எளிது அல்ல ருசியும் ரசனையும் அப்படித்தான்

 போகட்டும் எனக்கு பூரிக்கு சைட் டிஷ் ஆக வெந்தயக் குழம்பு மட்டுமே பிடிக்கும்.

உருளைக்கிழங்கு

poori potato க்கான பட முடிவு

 பூரிக்கு  உருளைக்கிழங்குதான்  சரியான ஜோடி. 
பெங்களூரு ஹோட்டல்களில், பூரிக்கு, ஒரு கண்ணராவி கூட்டையும்,  சட்னியையும் போட்டு,  தொல்லைப் படுத்துகிறார்கள். 


?இந்த காடரிங் காரங்க பந்தி பரிமாறுகையில் குழம்பு சாதம் சாப்பிடும்போதே அடுத்தடுத்து எடுத்து வராங்களே! அதை எப்படி நிறுத்தறது?


நாங்களும் பல காடரிங் நடத்துபவர்களிடம் சொல்லிப் பார்த்துட்டோம். ஆனால் யாரும் அதைக் கேட்பதாக இல்லை. அவசரம் அவசரமாகச் சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமாய் இதுக்காகவே நான் கல்யாணச் சாப்பாடைத் தவிர்ப்பேன். :)))

பரிமாறுபவர் வேகம் வேகமாக வருவதைவிட வராமல் தாமதிப்பதும் வேண்டாததை எடுத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருப்பது  நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

 நான் என்ன வருகிறதோ அதற்கு இலையில் இடத்தை ஒதுக்கி வாங்கிப் போட்டுக் கொண்டு விடுவது வழக்கம்.  இதன் மூலம் என்னுடைய நேரம் மிச்சப் படுவதாக எண்ணி மகிழ்வதும் உண்டு.

Music conductor மாதிரி ஒருவரைப் போட்டு மைக்கில் அடுத்து வரும் பொருளை அறிவித்துப் போடலாம்

கல்யாண  பந்திகளில்,  எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் போட்டுக்கொண்டு  சாப்பிடுவேன். ஆகவே அடுத்தடுத்து வந்தாலும் தடுத்தாட்கொண்டுவிடுவேன்! 


?பாயசம், அக்கார அடிசில், சர்க்கரைப்பொங்கல், பால் பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசிப் பாயசம், கோதுமைப்பாயசம், பாதாம் கீர், அடைப் பிரதமன், சக்கப் பிரதமன், கடலைமாவுப் பாயசம்,பாதாம், முந்திரி, பிஸ்தா அரைத்துவிட்டுச் செய்யும் பாயசம் இவற்றில் உங்கள் விருப்பம் எது? எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்? இவற்றைச் செய்யும் விதம் குறித்துத் தெரியுமா? 

பாயச வகைகளில்  நான் காந்தி கஞ்சி என்று வழங்கப்படும் ப. பருப்பு வெல்லப் பாயசத்தை விரும்புகிறவன். 

 உங்கள் கேள்வியை வைத்துப் பார்த்தால் நீங்கள் ஒரு இனிப்பு வெறியர் என்று தோன்றுகிறது.

எல்லாவற்றையும் பிடிக்கும்
நான் ஒரு இனிப்புப் பிரியன்
பொதுவாக எப்படி செய்கிறார்கள் என்று பார்த்தும் கேட்டும் இருக்கிறேன்

  à®šà®°à¯à®•à¯à®•à®°à¯ˆà®ªà¯à®ªà¯Šà®™à¯à®•à®²à¯ க்கான பட முடிவு
   
சூடான சர்க்கரைப் பொங்கல் தான் என்னுடைய முதல் சாய்ஸ்.  அதில் நெய் மாரி பொழிந்து,  பொங்கல் மலையின் அடிவாரத்திலிருந்து,  அப்பிரதட்சணமாக, விரல்களால் வெட்டி வெட்டி எடுத்து சாப்பிடுவேன்.

 ?நீங்க பாயசம் எப்போச் சாப்பிடுவீங்க? பாயசத்தில் வாழைப்பழம் போட்டுச் சிலர் சாப்பிடுவாங்க! சர்க்கரைப் பொங்கலில் தேன்மாரி பொழிந்தும் சாப்பிடுவாங்க! உங்க விருப்பம் என்ன?



பாயசம் எப்போதும் மோர் சாதத்துக்குப் பின் கடைசியாக

பாயாசம் எல்லாம் ஒரே கிரேடு தான் எனக்கு.  பாயாசத்தில் வேறு எதுவும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.  இலையில் முதலில் ஊற்றப்பட்ட பாயசத்தை முதலாக சாப்பிட்டு விடுவேன்.  பிறகு ரசம் சாதம் சாப்பிட்ட பின் இலையில்  ஊற்றப்பட்டால் அது.  அது இல்லை என்றால் பந்தி  முடிவில் கப்  பாயாசம்!

?எங்க பெரியம்மா ஒரு முறை வெங்கடாசலபதி சமாராதனையின் போது சர்க்கரைப்பொங்கல் பரிமாறிட்டுப் பெரியப்பா தேன் ஊற்றச் சொன்னதும் தவறுதலா விளக்கெண்ணையை எடுத்து வந்து ஊத்திட்டாங்க! நேரில் பார்த்து அனுபவிச்சிருக்கோம். அந்த வாத்தியார் பாவம்! சர்க்கரைப் பொங்கலை வாயில் ஒரு கவளம் போட்டுட்டு விழித்தார். பெரியப்பாவோ ஏகத்து உபசாரம்! அப்படி இக்கட்டான நிலைமையில் நீங்க மாட்டிட்டு இருக்கீங்களா? என்ன செய்வீங்க? அல்லது செய்தீங்க?  


வாழைப்பழம் வெள்ளை சர்க்கரை உப்பு போடாத பருப்பு வடை போன்ற ஒன்று இவை பரிமாறப்பட்ட போது  சாம்பார் ரசம் என்று கேட்டு அது இரண்டுமே இல்லை என்று அறிந்து பெருத்த சங்கடத்திற்கு உள்ளானேன்.

 சோற்றுடன் இந்த பழம் சர்க்கரை வெல்லம் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட வேண்டுமாம். கேட்கும்போதே எனக்கு பிடிக்கவில்லை.

"சரி , எனக்கு மோர் போதும் " என்ற போது பரிமாறும் பெண்மணி ஒரு குற்ற உணர்ச்சியுடன் " ஐயா, நாங்கள் மோர் சேர்த்துக் கொள்வதில்லை " என்று குறிப்பிட்டார்.

 கடைசியில் உப்பு மிளகு சீரகம் பொடி செய்து தரச் சொல்லி சோற்றோடு கலந்து சாப்பிட்டு விட்டு எழுந்தேன்.  ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது என்பார்கள்.  ஊரைச்  சொல்லலாம் -- நெகமம் என்ற நெசவுத்தொழில் ஊருக்கு பக்கத்தில் ஆலாங்கொம்பு என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சி இது

துவையலை மருதாணி என்றெண்ணிக் கையில் வைத்துக் காய்ந்த பின் கலர் வரவில்லையே என்று விசனப் பட்ட அக்காவைத் தெரியும்.


முதல்நாள் வடை சுட்ட எண்ணெயை,  வீணாக்க விரும்பாமல் தனியே ஒரு பாட்டிலில் எடுத்து வைத்திருந்தார் என்னுடைய மனைவி.  மறுநாள் கிரீன் டீ தயார் செய்த என்னுடைய மருமகள்,  தேனுக்கு பதிலாக அந்த நல்லெண்ணையை ஊற்றி தயார் செய்திருந்தார்.  குறை ஒன்றும் சொல்லாமல் அந்த டீயை சாப்பிட்டு முடித்துவிட்டேன்.  பிறகு அந்த நல்லெண்ணெய் பாட்டிலை எடுத்து அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் தேன் பாட்டிலை வைத்தேன்.  இன்றுவரை நான் சுட்ட எண்ணை டீ குடித்தது எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தான் தெரியும்!


வல்லிசிம்ஹன் 

 ?கேள்வி கேட்டால் விருப்பமா
பதில் சொன்னால் இன்பமா
கேள்விக்குறி இந்தக் கணினி போடாது, மன்னிக்கணும்.


சுவாரசியமான பதிலை வரவழைக்கும் கேள்விகள் பெறவே விருப்பம்.

சில சமயம் கேள்விக்குப் பதில் கேள்வி கேட்க விரும்புவதுண்டு
உ..ம் முதல் கேள்வி

யார் என்னைக் கேள்வி கேட்டாலும் எனக்கு சந்தோஷம்தான். 
 என்னுடைய பதில் அவர்களுக்கு சந்தோசத்தை கொடுத்ததா என்பது கேள்விக்குறிதான்!

நெல்லைத்தமிழன் : 

?நல்ல பதிலுக்குத்தான் நீங்களே அனுஷ்கா படம் போட்டு மகிழ்ந்து கொள்கின்றீர்களே.. அப்புறம் என்ன? 


அனுஷ்கா படமா? சேச்சே!  நான் பாவனா  படம் மட்டும்தான்! 
                
    யோவ்! 
ஏஞ்சல் : 

 1,காக்காய் பிடித்தல் / காக்கா பிடிக்கிறாங்க ...அப்படின்னா என்ன ?

கால் கை காக்கையாகி இப்போது காக்காய்.


 காக்காய் பிடித்தல் என்பது ஒரு கலை!  நான் (படம்)  பிடித்த சில  காக்காய்கள் ஏற்கனவே எங்கள் ப்ளாக் பதிவில் வெளியிட்டுள்ளேன். 

  


2, தமிழில் க் ,ங் இதுக்கு புள்ளி இருக்கிற மாதிரி இங்கிலீஷிலே i ,j இதுக்கு மட்டும் புள்ளியிருக்கே why ??? 


Ui க்கும் w க்கும் எழுதும்போது வித்யாசம் தெரிய.



ஆங்கில எழுத்துகளில் புள்ளி இருக்கும் எழுத்துகளுக்கு புள்ளி வைக்காமல் விட்டாலும் ஒன்றும் குறைந்துவிடாது.  ஆனால் தமிழ் எழுத்துக்களில் உள்ள புள்ளி எழுத்துகளுக்கு புள்ளி வைககாமல விடடால   சில சமயம விபரீதஙகளான அரததஙகள  வநது  சேரும !


3,யாருடைய ஸ்டோரீஸ் ரொம்ப பிடிக்கும் ?

,hans christian andersen அல்லது jk rowling 


pg wodehouse,   ஹென்றி செசில்,  Erle ஸ்டான்லி கார்ட்னர்.

4,சின்ன சின்ன ஆசைகள் 5 கூறவும் ?



 1 ஓடும் நீரில் குளிப்பது

 2 கள்ளம் இல்லாத கிராமத்து குழந்தைகளுடன் பேசுவது

3  அடுத்தவர் படிக்கும் புத்தகத்தை எட்டிப்பார்த்து படிப்பது

4  அறிமுகமில்லாத பூ இலை பழம் இவற்றை கிள்ளி வாயில் போட்டு ருசி பார்ப்பது

5  சப் டைட்டில் இல்லாமல் ஆங்கில படத்தின் வசனங்களை புரிந்து கொள்வது

சின்ன வயதில் இருந்த சின்ன ஆசைகள் சிலவற்றை சொல்கிறேன். 
சின்ன கார் ஒன்றை நானே தயார் செய்ய வேண்டும்.

வீட்டில் எனக்கு என்று ஒரு அறை இருக்க வேண்டும்.  அறை முழுவதும் கல்கண்டாலும்,  சாக்லேட்டுகளாலும் நிரப்பப்பட வேண்டும். 

 பள்ளிக்கூடத்திற்கு காரில் சென்று வர வேண்டும். 

 என்னைப் பார்த்து, கூடப்படிக்கின்ற பையன்கள் எல்லோரும் பயப்பட வேண்டும்.

5,இதுவரையில் உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பாராட்டு ?

" நீங்கள் 'அந்த மாதிரி' பிராமணர் இல்லை என்று தெரியாமல் போயிற்று" என எனக்கு அநீதி இழைத்த ஒருவர் சொன்னது.

யாரிடமும் கற்றுக் கொள்ளாமல் நானே சுயமாக புல்லாங்குழல் வாசித்தது உண்டு.  40 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆனந்த பைரவி  ராகம் வாசிக்கும் பொழுது அபூர்வ பிடி ஒன்றை பிடித்தேன்.  அது என்னுடைய அப்பாவிற்கு ரொம்பப் பிடித்த ராகம்.  அவர் அதைக் கேட்டு, 'சபாஷ்' என்று பாராட்டினார். அதுதான் நான் பெற்ற ,  எதிர்பாராத  மிகச்சிறந்த பாராட்டு.

6,மூளைச்சலவை அப்படீன்னா என்ன ? எது போட்டு சலவைப்பண்ணுவாங்க 


மூளைச்சலவை உண்மையில் சலவையல்ல சாயமிடல்.


7,ஒரு பிரபலத்துடன் ஒரு ஸ்டார்பக்சில் அரைமணி நேர சந்திப்பு 
யாரை தேர்ந்தெடுப்பீர்கள் ? 
அனுஷ்கா பாவனா பெயர்கள் பதிலில் வர தடை செய்யப்பட்டுள்ளது :)


தமன்னா 


8,உங்க பள்ளிக்கால நட்புக்களுடன் இன்னும் தொடர்பில் உள்ளீர்களா ?


ஆண்டுக்கு ஒவ்வொரு புது பள்ளியில் படித்ததால் எனக்கு நிலையான பள்ளி நண்பர்கள் இல்லாமல் போனது ஒரு சோகம்.

 கண்ணிலான் பெற்றிழந்தான்  என்பது போல ரொம்ப நாளைக்கு பின் ஒரு நண்பர் கிடைத்தார் பழைய பள்ளி நண்பர்.  அவர் ஒரு விசித்திரமான ஆசாமி.  திடீர் திடீரென்று விலாசம் தொலைபேசி எண் மாற்றிக் கொண்டு மாயமாகி விடுவார்.  யாருக்கும் சொல்ல மாட்டார்.  எனக்கும் இந்த விபத்து நேர்ந்தது.  நான் தொலைத்து விட்டேன் அல்லது அவர் தொலைந்து போனார்.

எல்லா வகைகளிலும் தேடி, எந்த ப. நட்பும் சமூக வலைகளில் கிடைக்கவில்லை. என்னுடைய பாலிடெக்னிக் கிளாஸ் மேட் ஒருவர் முகநூலில் கிடைத்தார் - ஆனால் அவர் பட்டும் படாமலும் இருந்துகொண்டிருக்கிறார். பாலிடெக்னிக் படித்த காலத்தில் அவர் அவ்வளவு நெருங்கிய நண்பர் இல்லை என்பதும் காரணம். 

9, புத்தகத்தை எடுத்ததும் முதல் பேஜ் அதோட கடைசி பேஜுக்கு தாவி படிப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து ?


புத்தகத்தை முதல் பக்கம் கடைசி பக்கம் மட்டும் வெட்டி பார்ப்பவர்கள் வாசகர் என்ற தகுதிக்கு உரியவர் அல்ல என்று நான் எண்ணுகிறேன்.

இவர்கள் செடி நட்டால் இரண்டு நாளில் வேர் எவ்வளவு வளர்ந்திருக்கு என்றோ இடலிப் பானையை அவ்வப்போது திறந்து வெந்தாச்சா என்று சோதிப்பவர்களாக இருக்கும்

சஸ்பென்ஸ் பொறுக்காதவர்கள்! எனக்குத் தெரிந்து  அந்த வகையினர் பலர் உள்ளனர். நான் லைப்ரரி புத்தகங்களில், கடைசி பக்கம், கடைசி பாகம் இருக்குதா என்று பார்த்து, உறுதிப்படுத்திக்கொண்ட பின்பே அந்தப் புத்தகத்தைப் படிக்க எடுத்து வருவேன். ஒருமுறை தமிழ்வாணன் மருமக்கதை ஒன்றை எடுத்து வந்து ஆவலோடு படித்து, கடைசி பக்கத்தை எந்த கிராக்கோ கிழித்து எடுத்திருந்தது கண்டு வெறுப்பானேன்! அதிலிருந்து, கடைசி பக்கத்தை முதலில் பார்த்து, உறுதி செய்துகொள்வேன்! 


10,லைப்ரரி புக்சில் சிலர் பேனாவால் கோடு போட்டு கிறுக்கி வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? 


 புத்தகத்தை ரசித்துப் படிப்பவர்கள் அடிக்கோடிட்டு வைப்பது அவர்களது  ரசனையைக் காட்டுவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் எந்த  விதமான  பொருத்தமும்  இல்லாமல் கண்ட இடத்தில் கிறுக்கி வைப்பவர்கள்  அல்லது மிகவும் அதிகப்படியாக அவர்களது  எதிர்ப்பையோ ஒப்புதலையோ  அதில் பதிவு செய்பவர்கள் வாசகர்கள் என்ற தகுதிக்குரியவர்  அல்ல என்பது என் கருத்து.

என் நண்பன் ஒருவனின் தந்தை, புத்தகங்களில் பென்சிலால் பல இடங்களில் அடிக்கோடிட்டு வைத்திருப்பார். அவர் வீட்டுக்குச் செல்லும்பொழுது, அந்தப் புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து, கொண்டு போய் படிச்சுட்டுக் கொடுங்க என்று சொல்லுவார். நான் நேரம் கிடைக்காததால், வார இறுதி / விடுமுறை நாளில் அவசரம் அவசரமாக அவர் அடிக்கோடிட்டு வைத்திருக்கும் பகுதிகளை மட்டும் படித்துவிட்டு, புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்! 


11, KiKi Challenge நம்ம ஊர் ரோட்டில் பார்த்தீர்களா ? உங்கள் கருத்து ? 

கி கி ?  ஹி ஹி! அப்டீன்னா இன்னா ? 


12,எங்கள் பிளாக் ஆசிரியர்களில் யாராவது ஒருவரை பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல அழைத்தால் யார் போவீர்கள் ?
கட்டாயம் ஒரு பேரை சொல்லியே ஆகணும் :)  


காசு சோபனாவை அனுப்பிடலாம். 

வாட்ஸ் அப் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 


1. Online reading, online shopping - உங்கள் அனுபவம் எப்படி?


நான் ஆன்லைன் ஷாப்பிங் நிறையவே செய்கிறேன் ரொம்ப சௌகரியமாக இருக்கிறது.  பல வகையிலும் அது ஒரு மிகப் பெரிய வசதி என்றுதான் நான் நினைக்கிறேன். மிகவும் சகாயமான விலை மிகவும் வேகமான டெலிவரி இரண்டும் ஆன்லைன் ஷாப்பிங்கில் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்ஸ்.

அதேபோல் நமக்கு பிடிக்காத பொருளாக இருந்தால் அதை திருப்பி அனுப்புவதும் முழு விலையை திரும்ப பெறுவதும் மிக மிக எளிமையாக இருக்கிறது

 ஆன்லைன் ரீடிங்கைப் பொருத்தவரை எனக்கு என்னமோ கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு புரட்டிப் படிக்கும் போது அதில் இருக்கிற சுகம் ஆன்லைனில் படிப்பதில் இல்லை என்றே தோன்றுகிறது.


Online reading கு முன்னிருந்த இடர்கள் இப்போ இல்லை
Online shopping இல் தரக்குறைவான பொருள்களும் உடைந்த அல்லது பொருத்தமற்ற ( இரண்டு இடது பெடல்களுடன் வந்த மிதிவண்டியில் 23 உடைந்த spoke கம்பிகள்) பாகங்களுடன் வருவது எதிர்காலத்தில் குறையலாம்
(உடைந்த சைக்கிள் கொடுத்தவர்கள் விலையை பாங்கில் செலுத்திவிட நாங்கள் வண்டியை ஒரு மாணவருக்கு கொடுத்ததில் அவருக்கு மகிழ்ச்சி 550 செலவில் ஒரு புது வண்டி)

ஆன் லைன் ரீடிங் - மனம் விரும்பினாலும், கண்கள், கைகள் ஒத்துழைப்பதில்லை. 

ஆன் லைன் ஷாப்பிங் - மிகவும் பிடித்த ஒன்று. ப்ளிப்கார்ட் தொடங்கி அமேசானில் நுழைந்து, மூன்று வருடங்களாக அமேசான் ப்ரைம் மெம்பர். இப்போ நான் உபயோகிக்கும் பெரும்பாலான பொருட்கள் அமேசான் மூலம் வாங்கியவையே. அமேசான் குவாலிடி கண்ட்ரோல் டிபார்ட்மெண்ட் இன்னும் முனைப்பாக செயல்படவேண்டும் என்பது என் விருப்பம். 

2. சிறு வயதில்,"சே! இந்த பெரியவர்களே இப்படித்தான்... சரியான போர்" என்று அலுத்துக் கொண்ட விஷயம், இப்போது இளைஞர்களைப் பார்த்து,"என்ன இப்படி இருக்கிறார்கள்?" என்று கோபம் கொள்ளும் அல்லது ஆச்சர்யப்படும் ஓர் விஷயம் ஏதாவது இருக்கிறதா? 


 நிறைய ...ஒரு முழுப் பதிவு எழுதலாம்

சிறுவயதில், உறவுக்காரப் பெரியவர்கள் ஒவ்வொருவரும் எப்பவுமே கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி ஏதாவது ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். உதாரணம் : " என்னடா இப்போதான் இந்த வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா? " /  " என்னடா லாரி கம்பெனிக்காரா எப்பிடி இருக்கே?" / " எப்ப (கல்யாண) சாப்பாடு போடப்போறே?" ... அவர்கள் இதைத்தான் பேசுவார்கள், இப்படித்தான் பேசுவார்கள் என்று நமக்குத் தெரியும், அதைத்தான் பேசுவார்கள். சரியான போர்!

இன்றைய இளைஞர்கள் பலர், முன்னோர்கள் பற்றியோ, பழைய விஷயங்களையோ தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. யந்திர வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் கோபம் வருவதில்லை. சிறு வருத்தம்தான்! 

=================================

மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம். 
    
பாவனா க்கான பட முடிவு

அது சரி, நீலவண்ணக் கண்ணன் எங்கே? 


118 கருத்துகள்:

  1. நடைக்குப் பிறகு மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நடையை முடித்துக் கொண்டுதான் வந்து உட்காருகிறேன்!

      நீக்கு
    2. ரெண்டுபேரும் தினமும் நடக்கறீங்களா? எவ்வளவு நேரம், தூரம்?

      நீக்கு
  2. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது....

    அதுசரி..
    இன்னும் கீதா/ கீதா ஆகியோரைக் காணோமே.. ஸ்ரீராம்!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

      கீதா அக்கா இன்னும் சற்று நேறத்தில் வருவார். பானு அக்காவும் வரும் நேரம்தான். தில்லையகத்து கீதா இணையம் வர கொஞ்ச நாட்களாகலாம்.

      நீக்கு
    2. ஶ்ரீராம்.. இப்போ ரயிலில் பிரயாணிக்கிறேன். ரயில் அணௌன்ஸ்மன்ட் மாதிரி எழுதியிருக்கின்றீர்கள்

      நீக்கு
    3. சிள நேறங்கலிள் இபப்டி அகி விடுகிரது. எண்ண செய்ய!

      நீக்கு
    4. மொட்டையாய் கமெண்ட் வரும்போது அது எந்த, யாருடைய கமெண்ட்டுக்காக சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்டு பிடிப்பது இந்த மாடல் பின்னூட்டப்பெட்டியில் சற்றே சிரமமாக இருக்கிறது!!!

      நீக்கு
  3. படிச்சுட்டேன். அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
  4. வெகு இனிய காலை வணக்கம். மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //ஒருமுறை தமிழ்வாணன் மருமக்கதை ஒன்றை எடுத்து வந்து ஆவலோடு படித்து, கடைசி பக்கத்தை எந்த கிராக்கோ கிழித்து எடுத்திருந்தது கண்டு வெறுப்பானேன்! அதிலிருந்து, கடைசி பக்கத்தை முதலில் பார்த்து, உறுதி செய்துகொள்வேன்! //

    நல்ல யோசனை. ஒரு முறை பழைய புத்தகக் கடையில் தி.ஜா. புத்தகம் ஒன்றை விலை கொடுத்து வாங்கினேன். படித்துக் கொண்டே வந்து, கடைசியில் தான் முடிவு இல்லை என்பது தெரிந்தது! நீங்கள் சொல்வது போல எந்தக் கிராக்கோ கிழித்திருக்கிறது!

    கேள்விகள், பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  6. பதில் கூறுவதைவிட கேள்வி கேட்பது சற்றே சிரமம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதில் சிரமம் அதிகம்? பதில் கூறுவதிலா, அல்லது கேள்வி கேட்பதிலா? (பாத்தீங்களா டாக்டர் ஐயா - உங்கள் பதிலுக்கு, சிரமம் இல்லாமல் கேள்வி கேட்டுவிட்டேன்!)

      நீக்கு
    2. கேஜிஜி சார், திரு ஜம்புலிங்கம் மருத்துவர் அல்ல! ஆனாலும் டாக்டர்! இதைப் பத்தி உங்க கருத்து என்ன? யார் உண்மையான டாக்டர்? முனைவர் எனத் தமிழில் அழைக்கப்படுபவர்களா? மருத்துவம் படிச்சவங்களா? யாரைச் சொல்றது சரியா இருக்கும்!

      நீக்கு
    3. அப்பாடா! இன்னிக்கு வம்பை நல்லபடியா ஆரம்பிச்சு வைச்சுட்டேன்! :)))))

      நீக்கு
    4. இதுக்குத்தான் தனித் தமிழ்ல பேசணும் எழுதணும். முனைவர் இலக்கிய டாக்டர். மருத்துவர் ஒரிஜினல் டாக்டர்

      நீக்கு
    5. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University. தெரியும், அவர் முனைவர் ஜம்புலிங்கம் என்று. முனைவரை ஆங்கிலத்தில் டாக்டர் என்று விளித்தேன்.

      நீக்கு
    6. கேஜிஜி சார், இப்படி ஏமாத்திடீங்களே! அடுத்த வாரத்துக்கான கேள்வியாக் கேட்டிருந்தேன்! என்ன நீங்க! மனசே உடைஞ்சு போச்சு! இப்போ மண்டையைக் கசக்கிக் கொண்டு கேள்விகளை யோசிக்கணுமே! :)))))

      நீக்கு
    7. முழு பதிலை அடுத்தவாரம் சொன்னால் போகிறது!

      நீக்கு
    8. //பதில் கூறுவதைவிட கேள்வி கேட்பது சற்றே சிரமம் என்று தோன்றுகிறது.//

      இல்லை முனைவர் ஐயா... மய்ய தலைவரே பஞ்சதந்திரம் படத்தில் சொல்லிருக்கார்... "கேக்கறது சுலபம் மாமா...." என்று!

      நீக்கு
  7. அரசு பதில்கள்ல கைவசம் ஸ்டாக் இருக்கும் கவர்ச்சிப் படத்திற்கு ஏற்ப கேள்வியைப் புகுத்துவார்கள். நீங்க சம்பந்தமில்லாதவர்கள் படத்தைப் போடுகிறீர்களே. தமன்னா ஸ்டாக் தீர்ந்துவிட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. இன்னும் நிறைய படங்கள் ஸ்டாக் வைத்துள்ளோம்! யாவும் கூகிள் ஆண்டவர் அருளியவை!

      நீக்கு
    2. இதோ கீரி பாம்பு சண்டை வருது என்று சொல்வதுபோல் சொல்றீங்களே தவிர படம் வரலையே. ஶ்ரீராமா இருந்தால் யாரைப் பற்றிய கேள்வியா இருந்தாலும் (சிவாஜி பற்றிய கேள்ந்தவினாலும்) சநதடி சாக்கில் அனுஷ்கா படத்தை நுழைத்திருப்பார்

      நீக்கு
    3. //ஶ்ரீராமா இருந்தால் யாரைப் பற்றிய கேள்வியா இருந்தாலும் (சிவாஜி பற்றிய கேள்ந்தவினாலும்) சநதடி சாக்கில் அனுஷ்கா படத்தை நுழைத்திருப்பார்//

      நெல்லைத்தமிழனின் இந்தக் கருத்தை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்!

      நீக்கு
  8. கேள்வி பதில் நல்லா இருந்தது. இந்தத் தடவை மற்ற ஆசிரியர்களும் நல்லா பதில் சொல்லியிருக்காங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தத் தடவை மற்ற ஆசிரியர்களும் நல்லா பதில் சொல்லியிருக்காங்க//

      அப்போ இதுவரை அப்படி இல்லை என்று அர்த்தம்!

      நீக்கு
  9. புத்தகம் - நான் முதல் சேப்டர் ஆரம்பித்த உடனேயே கடைசி சேப்டர் படித்தபிறகுதான் அதிலும் சஸ்பென்ஸ் படித்தபிறகு மீதிப் புத்தகத்தைப் படிப்பேன். இல்லைனா என்னால படிக்கமுடியாது.

    ஆமாம் பெரும்பான்மையான மர்மக் கதைகள் படங்களில் முடிவுப் பகுதி மட்டும் சொதப்பலா இருக்கும். இது கொலை.உ.கா வாகவோ வேறு ஏதேனும் ஆகவோ இருந்தாலும். இதில் விதிவிலக்கு வீணையின் அதே கண்கள். நீங்கள் அத்தகைய தமிழ் நாவல்கள் படங்கள் பெயர்களைக் குறிப்பிடமுடியுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீணை பாலசந்தரின் படம். இப்போ ஒரு அதே கண்கள் வந்திருக்கே. சிலமாதங்களுக்கு முன் பார்த்த குரங்கு பொம்மையும் அட்டஹாசம்

      நீக்கு
    2. ஓ ? அப்படியா! பார்க்கிறேன்!

      நீக்கு
    3. நெ.த. முன்னால் வந்த அதே கண்கள் படம் ஏவிஎம் எடுத்தது. ரவிச்சந்திரன், காஞ்சனா ஜோடி! அதன் கதை வீணை பாலச்சந்தரோடதா? அப்படித் தெரியலையே? ஏ.சி.திருலோகசந்தர் இயக்கம்னு நினைக்கிறேன். இப்போ வந்திருக்கும் அதே கண்களும் பார்த்தேன். இதுவும் பரவாயில்லை ரகம்.

      நீக்கு
    4. மர்மக்கதைகள் எழுதுவதில் ஜாவரின் "உடல், பொருள், ஆனந்தி"யை மிஞ்சி எதுவும் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பல்லாண்டுகளுக்கு முன்னர் அறுபதுகளின் கடைசியில் (?) என்னோட பதின்ம வயதில் "திக், திக், திக்" நெஞ்சத்துடன் படித்திருக்கேன். அதன் பின்னர் திரும்ப பலரின் வேண்டுகோளுக்கிணங்க எண்பதுகளில் குமுதத்தில் மீண்டும் வெளியிட்டார்கள். முதலில் படித்த அதே ஆர்வத்துடன் படித்ததோடு சேகரித்தும் வைத்திருந்தேன். தொலைந்தவற்றில் அதுவும் ஒன்று. முதலில் வந்தப்போப் படம் வரைந்தவர் ராமு! இரண்டாம் முறை வந்தப்போ வரைஞ்சது யார்னு நினைவில் இல்லை.

      நீக்கு
    5. கீசா மேடம்... நீங்க இந்தமாதிரி பெரிய தப்புலாம் பண்ண மாட்டீங்களே. இப்போ வந்த அதே கண்கள் படத்தை இன்னும் 15 வருஷம் கழிச்சுப் பார்த்து விமர்சனம் என்ற பெயரில் இடுகை போடுவீங்களே. இப்போ என்னாச்சு?

      நீக்கு
    6. க்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ.த. எத்தனை புதுப்படங்களுக்கு விமரிசனம் எழுதி இருக்கேன். ரஜினி நடிச்ச "ஜிவாஜி" படம் வந்த 3 நாட்களுக்குள் பார்த்துட்டு உடனே விமரிசனம் எழுதினேன். அதே போல் ஏழாவது மனிதனா? ஏழாவது? அது என்ன? சூரியா நடிச்ச படம்! அதையும் வந்த உடனே பார்த்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    7. //அதிலும் சஸ்பென்ஸ் படித்தபிறகு//

      அடக் கஷ்டமே...!! பேசாம கடைசிப்பக்கத்தை மட்டும் படிச்சுட்டு எல்லாப் புத்தகத்தையும் மூடிடலாமே!

      நீக்கு
    8. //ஜாவரின் "உடல், பொருள், ஆனந்தி"யை மிஞ்சி எதுவும் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. /

      உண்மை. என் புத்தகமும் களவு போய்விட்டது!

      நீக்கு
    9. //அதே போல் ஏழாவது மனிதனா? ஏழாவது? அது என்ன? சூரியா நடிச்ச படம்! அ//

      ஏழாவது அறிவு..

      அதில் கார்த்திக் பாடிய "முன் அந்திச் சாரலில்' என்கிற அருமையான பாடல் ஒன்று இருக்கிறது.

      நீக்கு
    10. நேற்று நயன் நடித்த டோரா என்றொரு படம் பார்த்தேன். ரசித்தேன்.

      நீக்கு
    11. கார்த்திக்? அப்படி ஒரு பாடகர்? ஙே!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    12. ஆம்.. கார்த்திக் என்றொரு பாடகர்... என் இளைய மகன் மூலம் எனக்கு அறிமுகம். நல்லாவே பாடுவார்.

      நீக்கு
  10. பூரிக்கு உருளைக்கிழங்கோடு சிறிது காரமாக தேங்காய் சட்னி...!

    பாயசம் - இனிப்பை சாப்பிடும் போது, சிறிது புளிப்பு காரம் தானாக சேரும்போது, இனிப்பின் சுவை அதிகமாகும்...!

    (காலையிலேயே இப்படி பசிக்க வைக்கலாமா...?)

    சின்ன சின்ன ஆசைகளை ரசித்தேன்...

    கிடைத்த பாராட்டிற்கு பாராட்டுக்கள்...!

    நானும் ஒரு புத்தகத்தை தினமும் நடுவில், முதலில், முடிவில் என்று பலமுறை புரட்டுகிறேன்... புதுபுது சிந்தனைகள் தோன்றுகின்றன...!

    பதிலளிநீக்கு
  11. ஸ்டோரீஸ் என்று கேட்டதனால் ஆங்கில எழுத்தாளர்களா? தமிழ் எழுத்தாளர்கள் யாரும் சொல்லிக்கும்படி எழுதவில்லையா? இந்த பதில்கள் நியாயமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவாரம் பதில்கள் பகுதியில் இதற்கு பதில் சொல்கிறோம்! த எ ஏராளம், ஏராளம்!

      நீக்கு
  12. அறை முழுவதும் கல்கண்டாலும் சாக்கிலேட்டாலும் - நானும் சிறிய வயதில் பாற்கடலைப் பற்றி இப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். மணல்களுக்குப் பதில் சாதம், உப்புக்குப் பதில் ஜீனி... வாவ் பள்ளிகொண்ட பெருமாள் பால்காயாசம் எப்போதும் சாப்பிடுவதுபோல் எனக்கும் வாய்க்கவேண்டும் என்று நினைப்பேன்

    பதிலளிநீக்கு
  13. காடரிங் காரங்க, திரும்பத் திரும்ப உபசரித்த மாதிரி இருக்கணும் ஆனால் ஒண்ணும் போடக்கூடாது என்று நினைத்ததுபோல் தேவையில்லாதபோது உபசாரமும் தேவையுள்ளவர் கேட்கும்போது காணாமல் போவதும் நான் எப்போதும் பார்க்கும் காட்சி. அபூர்வமா நல்ல கேடரிங் நல்ல சாப்பாடு சேர்ந்தால் பக்கத்தில் உள்ளவர்கள் பேச்சுக் கொடுத்துக்கொண்டே நம்மை கேட்டு வாங்கிச் சாப்பிட விடமாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இந்தப் பேச்சுக் கொடுப்பவர்கள் நம்மைச் சாப்பிடவே விடமாட்டார்கள்! :( எனக்கும் இம்மாதிரி நல்ல சாப்பாட்டைத் தவற விட்ட அனுபவங்கள் உண்டு. என்ன சாப்பிட்டோம்னே நினைவில் இருக்காது.

      நீக்கு
    2. நல்ல சாப்பாட்டை ரசிச்சுச் சாப்பிடாத்து சமையல் செய்தவர்களை அவமதிப்பது மாதிரி இல்லையோ?

      நீக்கு
  14. பூரிக்கு வெந்தயக் குழம்பு- இதை எந்த ரசனையில் எடுத்துக்கறதுன்னு தெரியலையே. நல்லையில் செய்யும் பூரி மசால்தான் என் சாய்ஸ். ஆனா கொடுமை பாருங்க, 4 மாசமா வாசனை அறியும் திறன் போயிடுச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசால்ல, பட்டாணி, கேரட் என்று சம்பந்தமில்லாத வஸ்துக்களைப் போட்டு அதற்கு வட இந்தியச் சாயல் கொடுப்பவர்களைக் கண்டால் கர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. நான் சிலசமயங்களில், பூரிக்கு மாங்காய் தொக்கு தொட்டுக்கொள்வேன்!

      நீக்கு
    3. என்ன அநியாயம் கேஜிஜி சார். ஒருவர் என்னடான்னா வெந்தயக் குழம்பு. நீங்க மாங்காய் தொக்கு. கலப்பு மணத்துல இவ்வளவு இஷ்டமா?

      நீக்கு
  15. பெங்களூர் ஹோட்டல்களில் பூரிக்கு —- உண்மையாவே எனக்கு தோசைகள் தட்டை இட்லி பிடித்த அளவுக்கு ஒரு சைட் டிஷ்ஷும் சரியில்லை. பெரும்பாலும் சட்னிதான் தர்றாங்க. சாம்பார் அது ஒரு கொடுமை. ஆனாலும் விலை சென்னையைவிட 40% கம்மி என்பதையும் குறிப்பிட மறக்காதீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாம்பார் என்றால், அது சென்னை ஹோட்டல் சாம்பார்தான்! சென்னை சாம்பார் பெஸ்ட். பெங்களூர் சாம்பார் பேஸ்து !

      நீக்கு
    2. பெங்களூர் தட்டே இட்லி, தோசை வகைகள், மெட்ராஸ் சாம்பார், நெல்லை மசால் ஹொட்டல் வைத்தால் பெரும் வெற்றிபெறும்

      நீக்கு
    3. சென்னையில் விலை கொள்ளை! :( இங்கே எந்த ஓட்டலும் சுமார் ரகம் தான்! :(

      நீக்கு
    4. கீசா மேடம்.. நான் ஶ்ரீரங்கத்தில் டெம்பிள் இன்னில் (ஆனைக்கா பக்கம்) தங்கினபோது காலை உணவு நல்லா இருந்தது. பார்த்தசாரதி நெய் தோசைதான் சொல்லிக்கும்படி இல்லை

      நீக்கு
    5. பார்த்தசாரதி ஓட்டல் நெய்தோசையை நீங்க தான் மெச்சிக்கணும். டெம்பிள் இன்னில் ஒரு நிச்சயதார்த்தத்துக்குச் சாப்பிட்டுவிட்டு 3 நாட்கள் அவதி!

      நீக்கு
    6. ஓ... நான் இட்லி மி பொடி (ந எண்ணெய் வாசனை அருமை), தோசையோடு வேற டிரை பண்ணலை

      நீக்கு
  16. சின்ன சின்ன ஆசைகள் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  17. பாயசம், அக்கார அடிசில்.. - கேள்விகேட்ட ரசனையுள்ள பெண்மணியே நீவிர் வாழ்க. இதையெல்லாம் ஒரு சாப்பாட்டின்போது பண்ணினாலும் அனுபவித்துச் சாப்பிடலாம். எதிலும் எண்ணெய் கிடையாது. கீர் என்று மில்க்மெய்ட் போடுபவர்களும் ஜிலேபி என்ற பெயரால் இனிப்பு எண்ணெய் முறுக்கு போடுபவர்களும் இனிமேலாவது திருந்தவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மில்க் மெய்ட் எப்போதாவது தான் வாங்குவேன். பெரும்பாலும் பாலை முன்கூட்டியே வாங்கி சுண்டக்காய்ச்சித் தயார் செய்து வைச்சுப்பேன். அதில் உள்ள ருசி மில்க் மெய்டில் வராது. ஒரே ஒரு வசதி என்னன்னா திடீர்த் திரட்டுப்பாலுக்கு மில்க்மெய்ட் இருந்தால் போதும். ஒரு டப்பா மில்க் மெய்டில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி மைக்ரோவேவில் 2 நிமிஷம் வைத்து எடுத்தால் சுவையான திரட்டுப்பால் ரெடி.

      நீக்கு
    2. உங்க வீட்டுல திரட்டுப்பால், கீர் சாப்பிடமாட்டேன் (காரணம் காசில விட்டுட்டேன்னு சொல்லிடுவேன்) கீசா மேடம்

      நீக்கு
    3. வேணாம் போங்க, நஷ்டம் உங்களுக்குத் தான்! நான் மில்க் மெயிடில் எல்லாம் திரட்டுப்பால் பண்ணவே மாட்டேன். சுத்தமான பசும்பாலில் தான்! ஆகவே நீங்க காசிலே விட்டுட்டேன்னு சொன்னா நல்லதாப் போச்சுனு உங்களுக்கு எதிரே நிறையப் போட்டுண்டு சாப்பிடுவேன். :P:P:P:P:P:P

      நீக்கு
    4. கீசா மேடம் - மைக்கோவேவ் அவன் வாங்கின கத்துக்குட்டிகள்லாம் முதல்ல செய்துபார்ப்பது மில்க்மெய்ட் தயிர் சேர்த்த திரட்டுப்பால். கல்யாணம் ஆன (சமையல் சுமார் தெரிந்த பெண்கள்) கத்துக்குட்டிகள் முதலில் செய்யும் இனிப்பு, கடை ஜாமூன் மிக்ஸ் வைத்துச் செய்யும் குலாப் ஜாமூன். இரண்டையும் பார்த்தால் காத தூரம் ஓடிடலாம். ஹா ஹா ஹா

      நீக்கு
  18. @ KGG: சாம்பார் என்றால், அது சென்னை ஹோட்டல் சாம்பார்தான்! சென்னை சாம்பார் பெஸ்ட். பெங்களூர் சாம்பார் பேஸ்து !//

    ஆ!மதிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  19. //" நீங்கள் 'அந்த மாதிரி' பிராமணர் இல்லை என்று தெரியாமல் போயிற்று" என எனக்கு அநீதி இழைத்த ஒருவர் சொன்னது.//

    ஒருவர்தானா? மற்றவரெல்லாம் நீதியைத்தான் இழைத்தார்களாக்கும் ?

    பதிலளிநீக்கு
  20. என்னுடைய மருமகள், தேனுக்கு பதிலாக அந்த நல்லெண்ணையை ஊற்றி தயார் செய்திருந்தார். //

    பொறுமையின் திருவுருவம்.
    சின்ன சின்ன ஆசைகள் நன்றாக இருக்கிறது.
    பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. //.. கள்ளம் இல்லாத கிராமத்து குழந்தைகளுடன் பேசுவது//

    கள்ளமில்லா நகரத்துக் குழந்தை எதிர்வந்தால் கண்ணை மூடிக்கொண்டுவிடுவீரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் எங்கே இருந்தாலும் என்ன மொழி பேசினாலும் கள்ளமில்லாதவர்களே! கேள்விகளுக்குப் பின்னர் வரேன். இப்போ சமைக்கப் போகணும். :)

      நீக்கு
    2. 1 1/4 மணி நேரத்துல லஞ்ச பண்ணி சாப்டுட்டீங்களா? 10:10-11:35? என்ன ஸ்பீடு (இல்லைனா காலை சட்னில ஜலம் விட்டு மோர் கலந்து மிளகாய் அரைச்சு புளிசேரி போன்ற திப்பிசமா?)

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர், சமைக்க என்ன மணிக்கணக்காவா ஆகும்? எல்லாம் தயார் செய்து வைச்சுடுவேன். பருப்பை ஊற வைச்சு, புளியை ஊற வைச்சு! பின்னர் பத்துமணிக்குச் சாதம் வைச்சால் பதினோரு மணிக்குத் தயார் ஆகும். அதுக்குள்ளே மற்ற அடுப்புகளில், குழம்பு, ரசம், காய் தயாராயிடும். சாதம் நேரடியாக வைப்பதால் நிதானமாகத் தான் அடுப்பை எரிய விடுவேன். இல்லைனா அடிப்பிடிச்சுக்கும். அதனால் ஒரு மணி நேரம் சாதம் மட்டும். சில சமயம் 40 நிமிஷத்தில் தயார் ஆகும்! கொஞ்சம் கிட்டவே இருக்கணும். சமையல் பண்ணப் போனால் அது மட்டும்! நடுவில் யாரானும் வாசலில் கூப்பிட்டாலோ, ஃபோனில் அழைத்தாலோ தான் போவேன். சமையல் முடிஞ்சு நிவேதனம் முடிஞ்சு காக்காய்க்குப் போட்ட பின்னர் இஷ்டம் போல் எதுவேணாச் செய்யலாம். சாப்பிட எப்படியும்12 மணி ஆயிடும்.

      நீக்கு
    4. காலம்பர டிஃபன் பண்ணறது இல்லை. சிறுதானியக் கஞ்சி! கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி, பார்லி, சோளம், மக்காச்சோளம்(இதான் சில சமயம் கிடைக்காது) எல்லாம் வறுத்து மிக்சியில் அரைச்சுக் காலம்பர 5 மணிக்கு வைச்சால் ஐந்தேமுக்காலுக்கு நல்லா வெந்து கொதிச்சு வரும். உப்பு, பெருங்காயம் சேர்த்து ஒரு கொதிவிட்டுட்டு அடுப்பை அணைச்சு வைச்சுட்டு எட்டு மணிக்கு அதில் மோர் விட்டு இரண்டு டம்பளர் இரண்டு பேரும்! தொட்டுக்க உப்பு நாரத்தங்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல், மாவடு ஜலம், மாவடு, மாங்காய் நறுக்கின கார ஊறுகாய், புளி இஞ்சி போன்றவற்றில் ஏதேனும் ஒண்ணு! மோர்மிளகாயும் சமயத்தில் வறுத்துப்பேன். சுண்டைக்காய், ம.த.வத்தல் வாரம் ஒரு முறை இடம் பெறும்.

      நீக்கு
    5. //இல்லைனா காலை சட்னில ஜலம் விட்டு மோர் கலந்து மிளகாய் அரைச்சு புளிசேரி போன்ற திப்பிசமா?)// நோ திப்பிசம் தினம் தினம்! அடிக்க வரமாட்டாரோ! :))))))

      நீக்கு
    6. மறந்துட்டேனே, நெ.த. இன்னிக்கு மெனுவை ஃபேஸ்புக்கிலே சமைச்சதுமே போட்டேன். ஆனால் நீங்க தான் ஃபேஸ்புக்கில் இல்லை போலிருக்கே. ஹிஹிஹி! அதான் தெரியலை!

      நீக்கு
    7. நான் பார்த்தேனே... இதுதானே?

      "புடலங்காய்க் கூட்டு, தேங்காய்த் துவையல், டாங்கர் பச்சடி, கொட்டு ரசம், மோர்! ரெடி, ரெடி, ரெட்ட ரெடி!"

      நீக்கு
    8. அதே, அதே! நேத்திக்குப் பச்சைச் சுண்டைக்காய்க் குழம்பு, மிளகு ரசம், பாகற்காய்க் கறி!

      நீக்கு
    9. ஓஹோ... இப்போ முகநூல்ல மெனு ப்ப்ளிஷ் பண்ணி அவர் லைக் போட்டாத்தான் பண்ணவே ஆரம்பிக்கிறீங்களா? அட.. இது நல்ல ஐடியாவா இருக்கே.

      நீக்கு
    10. யாரு லைக் போடணும்? என்னோட ரங்க்ஸா? இஃகி, இஃகி, அவருக்குக் கணினியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்குப் பொறுமை கிடையாது. முகநூலில் எல்லாம் அவர் இல்லவும் இல்லை. அதையும் வாட்சப்பையும் ஒண்ணாக் குழப்பிப்பார்! :)

      நீக்கு
  22. தமிழ் எழுத்துகளில் புள்ளி - கல்வெட்டுகளில் எழுத்துகளுக்கு புள்ளி வைப்பதில்லை

    பதிலளிநீக்கு
  23. எங்க பாயாசம். பொங்கல்.. விதம் விதமா எழுதி ஜொள்ளுவிட வைச்சது யாரு . ஒரு கப் பாயாசம் தராட்டி இடத்தை காலி பண்ணமாட்டேன். நெய் ஒழுக ஒழுக வெண்பொங்கல் மிளகு இஞ்சி போட்டு சும்மா நறுக் சுறுக்குன்னும் வேணும். ஐயோ திரும்ப பசிக்குதே ஹாஹா பன்னிரெண்டு மணிக்கு கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலாவது செஞ்சு சாப்பிடாட்டா ஆவி வேகாது போலிருக்கே.. விடு ஜூட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏற்கெனவே குதிரைவாலிப் பொங்கல் செய்து சாப்பிட்டுவிட்டேன்!

      நீக்கு
    2. சட்டென குதிரை வாலில் பொங்கல் என்று படித்து பயந்து விட்டேன்!

      நீக்கு
    3. கௌதமன் சார், ஶ்ரீராம் கிடக்கார் விடுங்க! எல்லா சிறுதானியத்திலும் பொங்கல் நல்லா இருக்கும். நீங்க ஜலம் விடுவீங்களா, பால் விடுவீங்களா தெரியலை! கொஞ்சம் அதிகமாவே சேருங்க! நல்லாக் குழையும்! அரிசி உப்புமா மாதிரியும் பண்ணலாம். உப்புமாக் கொழுக்கட்டை, தித்திப்புக் கொழுக்கட்டை(பிடி கொழுக்கட்டையில் வெல்லம் சேர்த்து) எல்லாமும் பண்ணலாம். எஞ்சாய்!!!!!!!!

      நீக்கு
    4. குதிரை வால், கழுதை வால்... எல்லாவற்றிலுமே செய்யலாமா?

      நீக்கு
    5. குதிரை வாலி(யி)ல் மற்றும் நரி வாலில்(fox tail millet)தான் செய்யலாம் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    6. கம்பு, வெள்ளைச் சோளம் தவிர்த்து மற்றவற்றில் செய்யலாம். கம்பு, சோளத்தில் அவற்றோடு பருப்பு வகைகள் சேர்த்து அடை பண்ணலாம். கொஞ்சம் போல் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் போட்டு அரைத்து தோசை வார்க்கலாம்.

      நீக்கு
    7. இந்தமாதிரி இப்போ யார் சொல்றாங்க? நம்ம உணவு புழுங்கரிசிச் சோறு. குதிரை கழுதை வாலிச் சோறுலாம் ஏன் சாப்படறீங்க? நிறையபேர் இதுமாதிரி காலைல கார்ன்ஃப்ளப்ஸ், மதியம் குதிரைவாலி, இரவு சப்பாத்தின்னு ஜல்லியடிக்கிறீங்களே

      நீக்கு
    8. நெல்லைத் தமிழரே, முதல்லே கார்ன்ஃப்ளேக்ஸோடும், ஓட்ஸோடும் சிறுதானியங்களைச் சேர்க்காதீங்க. இது முழுக்க முழுக்க நம் நாட்டு உணவு. நானெல்லாம் சின்ன வயசிலேயே கேழ்வரகுக் கஞ்சி, கூழ், களி, சப்பாத்தி, தோசைனு சாப்பிட்டு வளர்ந்திருக்கேன். அதுவும் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரா இருந்தப்போவும் தமிழ்நாட்டில் அரிசிப் பஞ்சம்னு வந்தப்போவும் நாங்க எங்க வீட்டில் அதிகம் கேழ்வரகு தான் சமைச்சிருக்கோம். என் அம்மா ராகிமால்ட் வீட்டிலேயே தயாரிப்பார். கேழ்வரகை முளைக்கட்டி வறுத்துப் பொடித்து வஸ்த்ராயனம் பண்ணி! என் பெண்ணிற்கு ஐந்து வயசு வரைக்கும் என் அம்மா தயாரிப்பான ராகி மால்ட் தான் கொடுத்திருக்கேன். எங்க பெரிய பேத்திக்கும் முதல் திட உணவாகக் கேழ்வரகுக் கூழ் தான் கொடுத்திருக்கோம்.

      நீக்கு
    9. சோள ரொட்டி வட மாநிலங்களில் மிகவும் பிரபலம். முக்கியமாக மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மக்கி கா ரொட்டி மிகப் பிரபலம். பஞ்சாபில் இதோடு சர்சோன் கா சாக் எனக் கடுகுக் கீரையில் சப்ஜியும் செய்வார்கள். கம்பில் இப்போதும் ரொட்டி, பூரி ஆகியன செய்வது உண்டு. நானுமே பண்ணுவேன். கம்பு மாவில் வெந்தயக்கீரை போட்டுப் பூரிபொரித்து மாலை வேளைக்குச் சாப்பிட வைத்துக் கொள்வது உண்டு. இவை எல்லாம் நம் நாட்டுப் பாரம்பரிய உணவு வகைகள்!

      நீக்கு
  24. உணவு விஷயத்தில் மக்களிடம் விழிப்புணர்வு வந்திருக்கா?

    பேலியோ டயட் என்கிறார்களே, அதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

    எல்லா உடம்புக்கும் எடுத்த எடுப்பிலே மருத்துவரை நாடுவீங்களா? இல்லைனா கை வைத்தியம் முயன்று பார்த்துட்டுப் போவீங்களா?

    நார்மல் சர்க்கரை அளவைப் பழையபடிக்கு மாத்தி ஏதோ ஒரு வெளிநாட்டு மெடிகல் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டிருக்கு. ஆனால் நம்ம நாட்டு மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்கள் உட்படப் பலரும் சர்க்கரை அளவு 200 வரை தாராளமாக இருக்கலாம் என்று முன்பிருந்தே சொல்லி வந்தார்கள். இதில் எது உண்மை என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?
    ஆங்கில மருத்துவம் நம்பகத் தன்மை உள்ளதா? சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இவை நம்பகத் தன்மை உள்ளதா?

    ஹோமியோபதியில் வெறும் சர்க்கரை உருண்டைகள் தான் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் சிலர். உங்கள் கருத்து என்ன? ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா? அதில் நம்பிக்கை உண்டா?

    பதிலளிநீக்கு
  25. சமைப்பதற்கு சுமாராக எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள்? ஒன்றரை மணி நேரத்தில் சமையலானு நெ.த. ஆச்சரியமாக் கேட்கிறார். அது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா?
    பிடித்த பொழுதுபோக்கு?
    எனக்குத் தெரிந்து பலரும் எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் என யாரேனும் ஒருவர் மேல் மிக உயர்ந்த நம்பிக்கை கொண்டு அவங்களைக் கடவுள் போலப்பூஜிக்கின்றனர். எனக்கு என்னமோ அப்படி யாரையும் தோணலை! இது ஏன்? என்னிடம் உள்ள குறையோ? இளையராஜாவின் பிறந்தநாள் என்றால் உடனே அவரை இந்திரன், சந்திரன் எனப் புகழ்ந்து அவர் பாடலைக் கேட்டதால் தான் வாழ்க்கையே ஒளிமயம் ஆனது என்பது போல் சொல்கிறார்கள். நானும் கேட்பேன்! ரசிப்பேன். அம்புடுதேன்! இது ஏன்? அதே போல் சிலருக்கு எஸ்பிபி. பாடும் நிலா என்னும் பெயர் வேறே உண்டு அவருக்கு!

    பதிலளிநீக்கு
  26. அடுத்துக் கொஞ்சம் சீரியஸாகக் கேள்விகள்!

    இப்போக் கேள்விகள்! யாருங்க அங்கே பயந்து ஓடறது? நில்லுங்க, நில்லுங்க! ஷ்டாப்!

    காந்தியைப் பத்தித் தான் கேள்வி! அவர் இல்லைனா சுதந்திரமே கிடைச்சிருக்காது என்பவர்களில் நீங்கள் அனைவரும் உண்டா?

    நவகாளி யாத்திரையின் போது காந்தி நடந்து கொண்ட விதம் சரியா?

    காஷ்மீருக்கு காந்தி போயிருக்கையில் மன்னரைப் பார்த்துப் பேசி இருந்தால் காஷ்மீர் பிரச்னையே வந்திருக்காது! இது என்னோட கருத்து! சரியா? உங்க கருத்து என்ன?

    காந்தியை விடுங்க! ஜின்னாவைப் பிரதமர் ஆக்கி இருந்திருந்தால் பாகிஸ்தான் பிரிந்திருக்காது என்பது சரியா?

    படேலைப் பிரதமராக காந்தியே தேர்ந்தெடுத்திருந்தார். பின்னால் நேருவின் மேல் உள்ள பிரியத்தினால் அவர் கோபத்துக்கு காந்தி அடி பணிந்து படேலைத் தானாக வாபஸ் வாங்க வைச்சார்! இது சரியா? (நான் கேட்பது படேல் பிரதமர் ஆகாதது சரியா, நேரு பிரதமர் ஆனது சரியா என்பது இல்லை!) காந்தி செய்தது சரியா?

    எல்லாவற்றுக்கும் உண்ணாவிரதம் என்னும் பெயரில் காந்தி emotional blackmail செய்தார் என்பது என் கருத்து! உங்க கருத்து என்ன?

    விரும்பினால் பதில் சொல்லலாம்! :)))) ஏனெனில் பலரும் காந்தியைப் போற்றுபவர்களே! ஆகவே நான் கேட்டு இருப்பதும் அதற்கு பதில் சொல்வதும் தர்மசங்கடமாக உணரலாம்.

    மீ ஜூட்! வரேன்!

    பதிலளிநீக்கு
  27. சு டோ கு கதை!

    இப்போது வெளியாகி இருக்கிறது..

    https://engalcreations.blogspot.com/2018/08/blog-post_9.html

    பதிலளிநீக்கு
  28. காந்தி பற்றி ஆரம்பித்த தை ஆர்வமாக படித்தால் ராகுல் காந்தி ராஜீவ் காந்தியை கண்ணுல காட்டினீங்க

    பதிலளிநீக்கு
  29. அப்பாடா! ஒரு வழியாக கிச்சனை விட்டு வெளியே வந்தீர்களே. அனந்த கோடி நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
  30. கீதா அக்கா! கார்த்திக் என்னும் பாடகரை தெரியாதா? ஜீ தமிழ் சேனலில் குழந்தைகள் கலந்து கொள்ளும் ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு அவரும் ஒரு நடுவர்.
    'தோன்றிர் புகழோடு தோன்றுக' என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, முதல் பாடலே சூப்பர் ஸ்டாருக்கு பாபா படத்தில் 'சக்தி கொடு' பாடியவர். அருமையான பாடகர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி, தகவலுக்கு நன்றி. நான் தொலைக்காட்சி பார்ப்பதே அரிது. அதிலும் ஜி தொலைக்காட்சி எல்லாம் பார்த்ததே இல்லை. எப்போவானும் ஜி இந்தி சானலில் முன்னெல்லாம் படங்கள் பார்த்திருக்கேன். இப்போ செட் டாப் பாக்ஸ் வந்தப்புறமாத் தொலைக்காட்சிப் பெட்டியையே தொடறதில்லை. கார்த்திக் என்னும் பெயரில் பாடகர் இருப்பதை இப்போதே அறிந்தேன். பாபா படமும் பார்த்தது இல்லை. எல்லாப் படங்களும் பார்க்க முடிகிறதில்லை தொலைக்காட்சியில் வந்தாலும். நேரம், மனம் எல்லாம் ஒத்துப் போகணும்.

      நீக்கு
  31. கேரளத்தில் பாயசத்தில் பப்படம்பொடித்து சாப்பிடுவது பார்த்திருக்கிறேன் எந்த வண்ணம்யாருக்குச்சொந்தம்நினைவுக்கு வருவதில்லை

    பதிலளிநீக்கு
  32. உண்மையில் எனக்கு அநீதி வேறெங்கும் இழைக்கப்பட வில்லை.. அதிர்ஷ்டசாலி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு கேஜிஒய் என்ன சொல்றார்னு ஒண்ணுமே பிரியலையே! :)))))

      நீக்கு
  33. // ஏகாந்தன் Aekaanthan !9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:42
    //" நீங்கள் 'அந்த மாதிரி' பிராமணர் இல்லை என்று தெரியாமல் போயிற்று" என எனக்கு அநீதி இழைத்த ஒருவர் சொன்னது.//

    ஒருவர்தானா? மற்றவரெல்லாம் நீதியைத்தான் இழைத்தார்களாக்கும் ?

    raman12 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 12:27
    உண்மையில் எனக்கு அநீதி வேறெங்கும் இழைக்கப்பட வில்லை.. அதிர்ஷ்டசாலி !

    கீ சா மேடம்! கே ஜி ஒய் சொல்லியிருக்கும் பதில், ஏகாந்தன் அவர்களுக்கு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!