?தினமும் நடக்கறீங்களா? எவ்வளவு நேரம், தூரம்?
நடை 100 செடிகளுக்கு ஒரு 1.5 லிட் பூவாளியில் எடுத்து சென்று ஊற்றுவது. தண்ணீர் தொட்டிக்கும் செடிகளுக்கும் நடுவே 65 முறை.
தினமும் நடப்பது இரண்டு கிலோ மீட்டருக்கு அதிகமாக.
?அரசு பதில்கள்ல கைவசம் ஸ்டாக் இருக்கும் கவர்ச்சிப் படத்திற்கு ஏற்ப கேள்வியைப் புகுத்துவார்கள். நீங்க சம்பந்தமில்லாதவர்கள் படத்தைப் போடுகிறீர்களே. தமன்னா ஸ்டாக் தீர்ந்துவிட்டதா?
சேச்சே அப்படி எல்லாம் இல்லை. தமன்னாவின் decent படங்களைத் தேடி எடுப்பதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கு!
"டேய்! உன்னைக் ..... "
?ஸ்டோரீஸ் என்று கேட்டதனால் ஆங்கில எழுத்தாளர்களா? தமிழ் எழுத்தாளர்கள் யாரும் சொல்லிக்கும்படி எழுதவில்லையா? இந்த பதில்கள் நியாயமா?
தமிழ் எழுத்தாளர்களில் நான் தி.ஜானகிராமன் சுஜாதா ரங்கராஜன் ரசிகன். வண்ணநிலவன் நாஞ்சில் நாடன் கி ராஜநாராயணன் எழுதுவதும் பிடிக்கும்.
எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் ஏராளம். பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெறுபவர்கள்: இரண்டு ரங்கராஜன்கள். தமிழ்வாணன், ஜாவர் சீ ரா, தேவன்.
எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் ஏராளம். பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெறுபவர்கள்: இரண்டு ரங்கராஜன்கள். தமிழ்வாணன், ஜாவர் சீ ரா, தேவன்.
?நல்ல சாப்பாட்டை ரசிச்சுச் சாப்பிடாதது சமையல் செய்தவர்களை அவமதிப்பது மாதிரி இல்லையோ?
?ஒருவர் என்னடான்னா வெந்தயக் குழம்பு. நீங்க மாங்காய் தொக்கு. கலப்பு மணத்துல இவ்வளவு இஷ்டமா?
கீதா சாம்பசிவம் :
?கேஜிஜி சார், திரு ஜம்புலிங்கம் மருத்துவர் அல்ல! ஆனாலும் டாக்டர்! இதைப் பத்தி உங்க கருத்து என்ன? யார் உண்மையான டாக்டர்? முனைவர் எனத் தமிழில் அழைக்கப்படுபவர்களா? மருத்துவம் படிச்சவங்களா? யாரைச் சொல்றது சரியா இருக்கும்!
இலக்கியங்கலிருந்தோ இதிஹாசங்களிலிருந்தோ வெட்டி ஒட்டினாலும் டாக்டர்
மனித, மிருகங்களின் உடலை வெட்டி ஒட்டினாலும் டாக்டர்
முனைவரும் மருத்துவரும் ஒன்றாவரோ புகல்.
?முன்னால் வந்த அதே கண்கள் படம் ஏவிஎம் எடுத்தது. ரவிச்சந்திரன், காஞ்சனா ஜோடி! அதன் கதை வீணை பாலச்சந்தரோடதா?
இல்லை. ஏ சி திருலோகச்சந்தர் கதை என்றுதான் போட்டிருக்கிறார்கள். ஆனால் ஏ வி எம்மின் அதே கண்கள் என்று சொல்லி, சொல்லி, பழகிடுச்சு. எனக்கு அந்தப் படமும் பாடல்களும் பிடித்திருந்தது.
?உணவு விஷயத்தில் மக்களிடம் விழிப்புணர்வு வந்திருக்கா?
உணவு விஷயத்தில் பெரும்பான்மை மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்றே தோன்றுகிறது
?பேலியோ டயட் என்கிறார்களே, அதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
பேலியோ டயட்டில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதை ஓரிரு மாதம் கடைப்பிடித்து என் எடையில் 5 கிலோ வரை குறைத்து இருக்கிறேன்.
பேலியோ டயட் எல்லோருக்கும் ஒரே மாதிரி பலன் தருவதில்லை
?எல்லா உடம்புக்கும் எடுத்த எடுப்பிலே மருத்துவரை நாடுவீங்களா? இல்லைனா கை வைத்தியம் முயன்று பார்த்துட்டுப் போவீங்களா?
மருத்துவரை நாடுவது வேறு வழி இல்லை என்ற நிலை வரும்போது மட்டுமே.
கை வைத்தியம் simple remedies என்று முயன்று தோற்றுப் போனாலோ அல்லது எடுத்த எடுப்பில் நோயின் உக்கிரம் தெரியவந்தாலோ மருத்துவரை உடனே நாடல் நலம்.
எல்லா உடம்புக்கும் இல்லை, என் உடம்புக்கு மட்டும்தான்! முன் காலத்தில், ஜலதோஷம் பிடித்தால், இரவு படுக்கப்போகும் முன், கொஞ்சம் வாட்டர் பரீஸ் குடித்து, தலைக்கு புழுங்கல் அரிசிப்பை வைத்துக்கொண்டு, மூக்கு தொண்டைப் பகுதிகளில் விக்ஸ் தடவிக்கொண்டு, நியூஸ் பேப்பர்களைப் பரப்பி, அதில் படுத்து உறங்குவேன். சரியாகவில்லை என்றால், மறுநாள், டாக்டரிடம் போவேன்.
எல்லா உடம்புக்கும் இல்லை, என் உடம்புக்கு மட்டும்தான்! முன் காலத்தில், ஜலதோஷம் பிடித்தால், இரவு படுக்கப்போகும் முன், கொஞ்சம் வாட்டர் பரீஸ் குடித்து, தலைக்கு புழுங்கல் அரிசிப்பை வைத்துக்கொண்டு, மூக்கு தொண்டைப் பகுதிகளில் விக்ஸ் தடவிக்கொண்டு, நியூஸ் பேப்பர்களைப் பரப்பி, அதில் படுத்து உறங்குவேன். சரியாகவில்லை என்றால், மறுநாள், டாக்டரிடம் போவேன்.
?நார்மல் சர்க்கரை அளவைப் பழையபடிக்கு மாத்தி ஏதோ ஒரு வெளிநாட்டு மெடிகல் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டிருக்கு. ஆனால் நம்ம நாட்டு மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்கள் உட்படப் பலரும் சர்க்கரை அளவு 200 வரை தாராளமாக இருக்கலாம் என்று முன்பிருந்தே சொல்லி வந்தார்கள். இதில் எது உண்மை என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?
சர்க்கரை அளவு நாம் தினசரி வேலைகளைத் திறமையுடன் நிர்வகிக்க இயன்ற அளவு குறைவாக வைத்திருக்க முயலுங்கள். மாத்திரையோ இன்சுலின் ஊசியோ தேவை எனில் தவறாது உபயோகிப்பதுடன் இன்னும் இரண்டு கரண்டி பாயாசம் சாப்பிட்டுப் பின் மருந்தின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம் என்றெண்ணாதீர்கள்
அதிக அளவு சர்க்கரையைக் கட்டுப் படுத்தும் வரை அறுவை சிகிச்சைகள் தள்ளிப் போகின்றன காயங்கள் ஆறுவதில்லை. வயோதிகத்தால் வரும் மற்ற சங்கடங்கள் சீக்கிரம் அதிதீவிரத்துடன் வரும் என்பதைக் கவனத்தில் கொள்வீர்.
நான் நிறைய சர்க்கரை சாப்பிடுபவன். சர்க்கரை அளவு கட்டுக்குள்தான் இருந்து வருகிறது.
?ஆங்கில மருத்துவம் நம்பகத் தன்மை உள்ளதா? சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இவை நம்பகத் தன்மை உள்ளதா?
ஆங்கில மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் வெவ்வேறு தளங்களில் பயனுள்ளதாக இருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. சித்த மருத்துவம் பற்றி அனுபவம் இல்லை.
Ditto, ditto.
?ஹோமியோபதியில் வெறும் சர்க்கரை உருண்டைகள் தான் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் சிலர். உங்கள் கருத்து என்ன? ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா? அதில் நம்பிக்கை உண்டா?
?ஹோமியோபதியில் வெறும் சர்க்கரை உருண்டைகள் தான் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் சிலர். உங்கள் கருத்து என்ன? ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா? அதில் நம்பிக்கை உண்டா?
மருத்துவத்தில் placebo effect என்று ஒன்று உண்டு . அதாவது நாம் ஒரு நல்ல மருந்து சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் நோயாளிக்கு ஏற்படும் போது அவரையும் அறியாமல் அவர் உடல் நோய் குணமாகிறது.
ஹோமியோபதி மருத்துவம் இந்த வகையானது என்று எனக்கு தோன்றும்.
காரணம்,மருந்துப் பொருளை மிகவும் நீர்த்துப் போகச் செய்து அதை மருந்தாக கொடுப்பதுதான் ஹோமியோபதியின் அடிப்படை. இதில் நம்பிக்கை வருவது கடினம்.
ஹோமியோபதி ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறை.
சர்க்கரை உருண்டைகள் தான் அவை பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் வேறு வேறு மருந்துசாறுகளில் நனைக்கப் பட்டவை. குடும்பத்தினர் சிலர் ஹோமியோபதி தவிர வேறு மருந்து உபயோகிப்பதில்லை.
?சமைப்பதற்கு சுமாராக எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள்? ஒன்றரை மணி நேரத்தில் சமையலானு நெ.த. ஆச்சரியமாக் கேட்கிறார். அது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா?
சமையல் நேரத்தை எப்படிக் கணக்கிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அடுப்பு எரிகின்ற நேரம் காய்கறி திருத்தும் நேரம் பாத்திரம் எடுத்து வைத்தல் எல்லாவற்றையும் சேர்த்தால் நிறைய நேரம் பிடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
நானும் பெரும்பாலும் ஒன்றரை மணி நேரத்தில், சமைத்து முடித்துவிடுவேன்.
?பிடித்த பொழுதுபோக்கு?
பிடித்த பொழுதுபோக்கு படிப்பது ஷேர் டிரேடிங் செய்வது
சங்கீதம் கேட்டல் புத்தகம் படித்தல் இரண்டுமே.
இன்றைய நிலையில், Blog, Facebook, Whatsapp.
நானும் அப்படித்தான். யார் மீதும் பக்தியோ, வெறுப்போ கிடையாது. நல்லா இருந்தா, எனக்குப் பிடிச்சிருந்தா, கேட்பேன் / பார்ப்பேன் / படிப்பேன். இந்திரன், சந்திரன், என்பதெல்லாம் extreme. தமிழ்நாட்டு ரசிகர்கள் பலர் extreme நிலைப்பாடுகள் கொண்டவர்கள்தான்!
?காந்தியைப் பத்தித் தான் கேள்வி! அவர் இல்லைனா சுதந்திரமே கிடைச்சிருக்காது என்பவர்களில் நீங்கள் அனைவரும் உண்டா?
யார் ஆனாலும் அவர்களை அளவுக்கு மீறி புகழ்வதோ, நாகரீகமில்லாமல் தாக்குவதோ எனக்கு பிடிக்காத விஷயம்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொண்டவர் காந்தி என்று நான் திடமாக நம்புகிறேன். அரசியல் தலைவர்களில் இதுபோன்ற ஒரு மனப்பாங்கு காண்பது மிக அரிது.
காந்தி இல்லாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்திருக்கும் சற்றே தாமதமாக.
வரவேண்டும் என்று இருந்தால், வந்தே தீரும். காந்தியும் அதற்கு ஒரு காரணம். காந்தி மட்டுமே சுதந்திரத்திற்குக் காரணம் என்பது சரியில்லை.
வரவேண்டும் என்று இருந்தால், வந்தே தீரும். காந்தியும் அதற்கு ஒரு காரணம். காந்தி மட்டுமே சுதந்திரத்திற்குக் காரணம் என்பது சரியில்லை.
?நவகாளி யாத்திரையின் போது காந்தி நடந்து கொண்ட விதம் சரியா?
நவகாளி யாத்திரையின் காந்தி என்ன தவறாக நடந்து கொண்டார் என்று எனக்குத் தெரியாது.
கிட்டத்தட்ட எல்லா மக்களையும் தன்பால் ஈர்த்த ஒரே தலைவர் காந்தி என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே காந்தி இல்லாவிட்டால் சுதந்திரம் வந்திருக்காது என்று சொல்ல இயலாதோ என்னவோ, வரத் தாமதமாகியிருக்கும் என்றே தோன்றுகிறது.
உப்புசத்தியாக்கிரகம், நவகாளி யாத்திரை, இன்னும் பிற போராட்டங்களிலும் அவர் நடந்துதானே போனார்? அப்படி இருக்கையில், நவகாளி யாத்திரையின்போது மட்டும் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி நாம் விமரிசிக்கலாமா!
உப்புசத்தியாக்கிரகம், நவகாளி யாத்திரை, இன்னும் பிற போராட்டங்களிலும் அவர் நடந்துதானே போனார்? அப்படி இருக்கையில், நவகாளி யாத்திரையின்போது மட்டும் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி நாம் விமரிசிக்கலாமா!
?காஷ்மீருக்கு காந்தி போயிருக்கையில் மன்னரைப் பார்த்துப் பேசி இருந்தால் காஷ்மீர் பிரச்னையே வந்திருக்காது! இது என்னோட கருத்து! சரியா? உங்க கருத்து என்ன?
காஷ்மீர் மன்னரின் முழு ஆதரவு இந்திய அரசுக்கு இருந்தது. எல்லாவற்றையும் முறைப்படி செய்ய வேண்டும் என்று நேரு எண்ணியது காஷ்மீர் பிரச்சினைக்கு வழி வகுத்தது. இது நமது துரதிர்ஷ்டம்.
?காந்தியை விடுங்க! ஜின்னாவைப் பிரதமர் ஆக்கி இருந்திருந்தால் பாகிஸ்தான் பிரிந்திருக்காது என்பது சரியா?
ஜின்னா ஒரு பிடிவாதக்காரர் snob என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் பிரதமராகியிருந்தால் சிறப்பாக எதுவும் நடந்திருக்காது.
பாகிஸ்தான் பிரிந்திருக்காது பிரிக்கமுடியாமல் கலந்திருக்கும் விளைவுகள் உங்கள் கற்பனையின் விளிம்பில்.
எது நடந்ததோ அது நன்றாக நடந்தது.
எது நடக்குமோ, அது நன்றாக நடக்கட்டும்.
எது நடந்ததோ அது நன்றாக நடந்தது.
எது நடக்குமோ, அது நன்றாக நடக்கட்டும்.
?படேலைப் பிரதமராக காந்தியே தேர்ந்தெடுத்திருந்தார். பின்னால் நேருவின் மேல் உள்ள பிரியத்தினால் அவர் கோபத்துக்கு காந்தி அடி பணிந்து படேலைத் தானாக வாபஸ் வாங்க வைச்சார்! இது சரியா? (நான் கேட்பது படேல் பிரதமர் ஆகாதது சரியா, நேரு பிரதமர் ஆனது சரியா என்பது இல்லை!) காந்தி செய்தது சரியா?
தன்நெஞ் சறிவது பொய்யற்க என்பதை வாழ்ந்து காட்டியவர் காந்தி. அவர் அறிந்து எதுவும் தீங்கும் செய்ததில்லை என்று நான் திடமாக நம்புகிறேன்.
திறமைக்கு அப்பால் வெகுஜன அபிப்ராயம்தான் நம் ஜனநாயகத்தின் முதுகெலும்பாகப் பார்க்கப் படுகிறது. படேல் மாதிரி தடி கொண்டு ஆள்பவர் இருந்திருந்தால் நிர்வாக சீர்கேடு குறைவாக இருந்திருக்கலாம். காந்தி தன்னைப் போல் பிறரை எண்ணி செய்தது அவர் வரையில் சரி.
?எல்லாவற்றுக்கும் உண்ணாவிரதம் என்னும் பெயரில் காந்தி emotional blackmail செய்தார் என்பது என் கருத்து! உங்க கருத்து என்ன?
உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர் பிரச்னைக்குத் தீர்வு கண்ணில் தட்டுப்பாடும் வரை அதைக் கை விடவில்லை
ஆனால் இப்படி அடையாள உண்ணாவிரதம் இல்லை பிரதம மந்திரி கையால் பழச்சாறு தொண்டர்களின் அன்புத்தொல்லை கொட்டகையில் பவர் கட் இத்யாதி காரணங்களுக்காக அல்ல.
திண்டுக்கல் தனபாலன் :
?நானும் ஒரு புத்தகத்தை தினமும் நடுவில், முதலில், முடிவில் என்று பலமுறை புரட்டுகிறேன்... புதுபுது சிந்தனைகள் தோன்றுகின்றன...!
Reading expands mind என்பார்கள்
ஏகாந்தன்:
//.. கள்ளம் இல்லாத கிராமத்து குழந்தைகளுடன் பேசுவது//
?கள்ளமில்லா நகரத்துக் குழந்தை எதிர்வந்தால் கண்ணை மூடிக்கொண்டுவிடுவீரோ?
கண்ணை அல்ல, வாயை.
வாட்ஸ் அப் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
?விசேஷ நாட்களில் ஒளிபரப்பப்படும் பட்டி மன்றங்களில் உங்கள் விருப்பம் எது?
1.சாலமன் பாப்பையா தலைமையில் சன் டி.வி. பட்டி மன்றம்
2. சுகி சிவம் தலைமையில் விஜய் டி.வி. பட்டிமன்றம்
3. முனைவர் ஞானசம்பந்தம் தலைமையில் ஜெயா டி.வி. பட்டிமன்றம்
4. திண்டுக்கல் லியோனி தலைமையில் கலைஞர் டி.வி.பட்டிமன்றம்
சுகிசிவம் ஞானசம்பந்தம் பட்டிமன்றங்கள் எனக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் நான் பட்டிமன்றம் நிகழ்ச்சிகளை பார்த்து வெகு நாள் ஆகிறது.
ஒன்று.
இரண்டு & மூன்று ஏதோ பார்ப்பேன்.
நாலு? ஐயோ நாலுகால் பாய்ச்சலில் வெளியே ஓடிவிடுவேன். தி லி எப்பவும் ஒரே மாதிரி அறுவைக் குரல், அசட்டுச் சிரிப்பு.
ஒன்று.
இரண்டு & மூன்று ஏதோ பார்ப்பேன்.
நாலு? ஐயோ நாலுகால் பாய்ச்சலில் வெளியே ஓடிவிடுவேன். தி லி எப்பவும் ஒரே மாதிரி அறுவைக் குரல், அசட்டுச் சிரிப்பு.
பட்டிமன்ற பேச்சாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
பல நாட்களுக்கு முன்பு சுதா சேஷய்யன் பட்டிமன்றங்களில் பங்கு கொண்டு பேசியிருக்கிறார்.
அவர் மிகவும் நன்றாக பேசினார் என்று நான் நினைக்கிறேன்.
?எங்கள் ப்ளாக் அதில் எழுதுபவர்களைக் கொண்டு ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்தால் என்ன தலைப்பில் யார் யாரை பேசச் சொல்லுவீர்கள்?
எங்கள் ப்ளாக் வாசகர்களைக் கொண்டு ஒரு பட்டிமன்றம் நடத்தினால் "எனக்குப் பிடிக்காத ஆசிரியர் " " எனக்குப் பிடித்த வாசகர்" இந்த இரண்டு தலைப்புகளைத் தேர்வு செய்யலாம்.
"Blog பதிவுகள் மனச்சாந்தி அளிப்பது எழுதுபவருக்கா பின்னூட்டம் இடுபவருக்கா?"
யார் யார் பேசுவது என்பது முன்வருபவர்களால் தீர்மானிக்கப்படும்.
தனி பதிவாகப் போடலாம் என்று நினைக்கிறேன். எங்கள் ப்ளாக் ல எழுதுபவர்கள் என்றால், ஆசிரியர்கள் தவிர, சமையல் குறிப்பு, கதைகள் எழுதுபவர்களும், கேள்வி கேட்பவர்களும் எல்லோரும் உண்டுதானே? எல்லோரும் மேடைக்கு வரவேண்டும் என்றால் பெரிய மேடை அமைக்கவேண்டும். முதல் முயற்சியாக, மாதந்தோறும் முதல் அல்லது கடைசி ஞாயிற்றுக் கிழமையில், நம்முடைய வாட்ஸ் அப் குழுவில் ஏதேனும் தலைப்பு கொடுத்து, வாதிட அழைக்கலாமா?
=======================================
நெல்லைத் தமிழன் அனுப்பிய வாட்ஸ் அப் கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் கூறுகிறோம்.
=======================================
அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
------- X -------
=======================================
நெல்லைத் தமிழன் அனுப்பிய வாட்ஸ் அப் கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் கூறுகிறோம்.
=======================================
அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
------- X -------
"அப்பாடி எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் இந்தவாரமும் எனக்கு லீவு கொடுத்துட்டாங்க. நிம்மதியாக, சுதந்திரமாக குளிச்சுட்டு ஷூட்டிங்குக்கு போறேன்!"
எல்லோருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!
__________________________________________________
வாழ்க...
பதிலளிநீக்குஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கமும், சுதந்திர தின நல்வாழ்த்துகளும் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஇன்னுமா யாரும் வரலை? பதில்கள் விமரிசனத்துக்குப் பின்னர் வரேன்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கமும், சுதந்திர தின நல்வாழ்த்துகளும் கீதாக்கா.
நீக்குநாந்தான் அப்பவே வந்துட்டேனே!...
நீக்குநான் வரச்சே வழக்கம் போல் யாரும் இல்லை. :) இதிலே ஏதோ இருக்கு! என்னனு கண்டுபிடிக்கணும்.
நீக்குஇப்போ நான் வரச்சே நீங்கள் இல்லை கீசா மேடம். இதுல ஒண்ணும் இல்லை. 11 மணி. சமையல் வேலையை ஆரம்பித்திருப்பீங்க. பின்பு 1:30-2க்கு சாப்டுட்டு, மெதுவா 4-5 மணிக்கு எட்டிப் பார்ப்பீங்க. 7:30க்கு மேல உங்க கிட்ட இருந்து பதிவோ, பின்னூட்டமோ இருக்காது. 8 மணிக்கு கனவு காண ஆரம்பிப்பவராச்சே. இப்படி எல்லாரது ஷெடியூலையும் ஓரளவு கணித்துவிடலாம். ஹாஹா.
நீக்குசாப்பிட்டு முடிச்சாச்சு! மத்தியானம் தான் கணினியில் சேர்ந்தாற்போல் உட்காருவேன். மெதுவா 4-5க்கு எட்டிப் பார்த்தால் அன்னிக்கு நோ மின்சாரம்னு அர்த்தம். 1-30 வரைக்கும் எல்லாம் சாப்பிடாமல் இருக்க மாட்டோம். 12 அல்லது அதிகம் போனால் 12-30. வேலை முடிஞ்சுடும். எட்டு மணிக்கு இல்லை. ஒன்பது மணிக்கு! போய்ப் படுப்பேனே தவிரத் தூக்கம் வர பத்து பத்தரை ஆகும். சில நாட்கள் 12 ம் ஆகும்! ஆனால் அதுக்காக எழுந்து கணினியையோ மொபைலையோ நோண்டிட்டு இருக்க மாட்டேன். அது அதுக்கு உரிய நேரம் வரச்சே தான்! மத்த நேரம் கிடையாது!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
அனுஷ்காவுக்கா சுதந்திரம் கொடுத்தீங்க...?
பதிலளிநீக்குஹ ஹா... சுதந்திர தின வாழ்த்துகள் நண்பரே...
இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குசுதந்திர தின நல்வாழ்த்துகள்.
சுவையான பதில்கள்.
ஆஹா.... தமன்னா படம் மட்டும் போட்டா ஸ்ரீராமுக்கு மனசு கஷ்டமாகும்! அதனால் ஜபர்தஸ்தியா ஒரு படம் - கட்டங்கடைசில சேர்த்தாச்சு!
அனைவருக்கும் காலை வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
பிறகு வந்து நிதானமாக படித்து பதிலிடுகிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கல்யாண வீடுகளுக்குச் சென்றால், நாதஸ்வரக் கலைஞர் வாசிப்பு நன்றாக இருந்தால், அவர் பக்கம் போய், அவரை விசாரித்துப் பாராட்டுவேன். சாப்பாடு சுவையாக இருந்ததென்றால், சமையல் கலைஞரை, பாராட்டிவிட்டுதான் வருவேன். //
பதிலளிநீக்குநானும் அப்படித்தான். பரிமாறும் கலைஞர்களையும் பாராட்டுவேன், பரிமாறுவதும் கலை இல்லையா? சில கல்யாண வீடுகளில் பொறுமையாக பரிமாறுவார்கள், சில கல்யாண வீடுகளில் வேக வேகமாய் வந்தவர்கள் சாப்பிட்டால் என்ன என்கிறமாதிரி அவர்கள் உடல் மொழி இருக்கும்.
கேள்வி பதில்கள் நன்றாக இருக்கிறது.
சுதந்திரம் பெற்றதற்கு காந்தி மட்டுமே காரணவாதி அல்ல! அதற்கு பின்னால் முகவரி அழிந்து போன பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உண்டு.
பதிலளிநீக்குகில்லர்ஜி... எந்த ஒரு செயலுக்கும் ஒருவரே காரணமாக இருக்கமுடியாது. அதை ஆரம்பிப்பதற்கோ, முன்னெடுத்துச் செல்வதற்கோ ஒரு தலைவர், அதுவும் தார்மீக நெறி கொண்ட தலைவர் தேவைப்படுகிறார்.
நீக்குஇப்போ சச்சினுக்கு பாரதரத்னா கிடைத்திருக்கலாம். ஆனால் கூட ரன் எடுத்தவனெல்லாம் சச்சினை அவுட் செய்திருந்தாலோ இல்லை சச்சினுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலைனாலோ அவர் ரன் எடுத்திருக்கமுடியுமா? ஒருவரை கவுரவிப்பது, அந்த டீமில் அல்லது அந்தப் போராட்டத்தில் அவர் முனைப்பாக இருந்தார் என்பதற்குத்தான்.
ராஜராஜ சோழன் இலங்கைமீது படையெடுத்து வென்றான், பெரியகோவிலைக் கட்டினான் என்று சொல்லிப் புகழ்வதெல்லாம் அவன் ஒருவனுக்கா சேரும்?
ராஜராஜ சோழன் மகத்தான மாமனிதன்....
நீக்குதன்னோடு பாடுபட்டவர்களின் பெயர்களை எல்லாம் கல்வெட்டில் பதிந்து வைத்துள்ளான்...
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகேள்வி பதில்களைப் படித்தேன்....
பதிலளிநீக்குதமன்னாவின் decent படங்களைத் - இந்த டீசண்ட் என்ற வார்த்தையே ஒவ்வொருவரைப் பொறுத்தது இல்லையோ? நொ.ச.சா என்பதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது. ஹா ஹா ஹா
இரண்டு ரங்கராஜன்கள் - சுஜாதா (எஸ்.ரங்கராஜன்). இன்னொன்று வாலியா (ரங்கராஜன்). இப்படி குழப்பலாமா?
சப்பாத்திக்கு எனக்கு ஃபேவரைட் கார எலுமி ஊறுகாய். நிச்சயம் மாங்காய் தொக்கும் நல்லா இருக்கும் (வீட்டில் செய்தது. இல்லைனா ஒரேயடியா உப்பா இருக்கும்)
பேலியோ டயட்டில் ஓரிரு மாதங்களில் 5 கிலோ வரை குறைத்தேன் - எதை-- பாக்கெட் மற்றும் மளிகை சாமான்கள் எடையையா? என்ன மாதிரி டயட் எடுத்துக்கொண்டீர்கள் என்று விளக்கமாக எழுதினால் குறைந்தா போய்விடுவீர்கள்? (அதுவும் தவிர, எ.பி. ஆசிரியர்கள் எல்லாருமே ஒரே சைசில்தானே இருக்கிறீர்கள் உங்களுக்கு எதற்கு பேலியோ டயட் எல்லாம்? ஹா ஹா ஹா)
முதல் முயற்சியாக, மாதந்தோறும் முதல் அல்லது கடைசி ஞாயிற்றுக் கிழமையில், நம்முடைய வாட்ஸ் அப் குழுவில் ஏதேனும் தலைப்பு கொடுத்து, வாதிட அழைக்கலாமா?// ஆஹா! கீ.சா.அக்கா, துரை சார், ஏகாந்தன் சார், ஜீ.வி.சார், நெ.த., அதிரா போன்றவர்கள் கலந்து கொண்டு கலக்கும் பட்டிமன்றம் சிறப்பாகவே இருக்கும். நடுவர் யார்?
பதிலளிநீக்கு@ பானுமதி வெங்கடேஸ்வரன்: ..ஆஹா! கீ.சா.அக்கா, துரை சார், ஏகாந்தன் சார், ஜீ.வி.சார், நெ.த., அதிரா போன்றவர்கள் கலந்து கொண்டு கலக்கும்....//
நீக்குபட்டிமன்றப் பெருமக்கள் பட்டியலில் நைஸாக என் பெயரையும் நுழைத்துவிட்டீர்களே?
ஆஹா! பானுமதி, நான் வாட்சப்புக்கு வருவதோ எப்போவானும் தான்! அதில் பட்டிமன்றம் எல்லாம் வைச்சால்! ம்ஹூம், வாய்ப்பே இல்லை. ஆனால் எனக்குப் பிடித்த பட்டிமன்றப் பேச்சாளர்கள் எனில் குன்றக்குடி அடிகளாரால் (இப்போதுள்ளவருக்கு முன் இருந்தவர்) நடத்தப்பட்ட பட்டிமன்றங்கள் தான். அதன் பின்னர் காரைக்குடி கம்பன் கழகப் பட்டிமன்றங்கள் பொதிகையில் ஒளிபரப்புவார்கள். டாக்டர் அறிவொளியின் சிறப்பான பேச்சை மிகவும் ரசிப்பேன். இப்போல்லாம் பட்டிமன்றங்களே கேட்பதில்லை. அதிலும் இதிலே சொல்லி இருக்கும் யாருடைய பட்டிமன்றப் பேச்சுக்களையும் இன்றுவரை கேட்டதில்லை. சுகிசிவத்தின் உரைகள் பல கேட்டிருக்கேன், நேரிலும், யூட்யூபிலும். அவரிடம் கேள்விகள் கேட்டுப் பதிலும் பெற்றிருக்கிறேன்.
நீக்குவிடுமுறை தினம்னா எங்க வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டிக்கும் சேர்த்துத் தான் விடுமுறை. செய்திகள் கேட்கப்பொதிகை அல்லது ஆங்கில சானல்கள் காலையோ, மாலையோ ஒரு தரம் போடுவார் நம்ம ரங்க்ஸ். மற்றபடி அன்னிக்கு வீடு அமைதியா இருக்கும். :))))
நீக்கு// ஆஹா! கீ.சா.அக்கா, துரை சார், ஏகாந்தன் சார், ஜீ.வி.சார், நெ.த., அதிரா போன்றவர்கள் கலந்து கொண்டு கலக்கும் பட்டிமன்றம் சிறப்பாகவே இருக்கும். நடுவர் யார்?// நம் வாட்ஸ் அப் குழுவில் அதிரா இல்லை. இதுவரை.
நீக்குதவத்திரு குன்றக்குடி அடிகளார் நடத்திய பட்டி மன்றங்கள் மிகவும் பிடிக்கும்... மற்றும் அறிவொளி அவர்களது நிகழ்ச்சிகளையும் விரும்பிக் கேட்டதுண்டு...
நீக்குஎனக்கு இலங்கை கம்பபாரதி ஜெயராஜ் அவர்களின் பேச்சு பிடிக்கும். யாரும் கருத்தாழமிக்கதாகவோ அல்லது நகைச்சுவையாகவோ பேசினால் மிகவும் ரசிப்பேன். திண்டுக்கல் லியோனி, எப்போது கட்சி சார்பா பேச ஆரம்பித்துவிட்டாரோ அப்போவே அவர் தீப்பொறி ஆறுமுகம் போன்ற ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார்.
பதிலளிநீக்குசில பெயர்கள் விடுபட்டது என் நினைவு குறைபாடே ஒழிய உறுப்பினர்களின் திறமைக் குறைவில்லை.
பதிலளிநீக்குகீசா மேடம்.. காந்தியைப் புரிந்துகொள்ளவேணும்னா, அதற்கு ஒரு மனநிலை வேண்டும். (எனக்கு பொதுவா இல்லை). ரெண்டு பசங்க இருக்காங்க, ஒருவன் பணக்காரன், இன்னொருவன் ஏழை, கஷ்டப்படுகிறான். தாய் மனது ஏழையிடம்தான் இருக்கும், இவ்வளவு கஷ்டப்படுகிறானே என்று. ஒருவன் சிறுவன், அடாவடி. இன்னொருவன் வலிமை மிக்கவன், கொஞ்சம் வற்புறுத்திச் சொன்னால் கேட்பான். அப்போது, தந்தை, வலிமை மிக்கவனைத்தான் பொறுத்துப்போகச் சொல்வார்கள், மிரட்டி தான் சொன்னதைக் கேட்கச் சொல்வார்கள். இதைத்தான் காந்தி செய்ய முயன்றார், considering bigger picture. அவர் செய்தது அநியாயம் என்று வாதிட முடியும் பொதுவா. ஆனால் தார்மீக நெறியில் அவர் செய்தது சரிதான். எல்லோரும் இறைவனின் குழந்தைகள்தானே, அதில் பேதமுண்டோ என்ற தீவிர வைணவக் கொள்கையில் ஊறியவர் காந்தி என்பது என் அபிப்ராயம் (அது சிலரது உணர்வைக் காயப்படுத்தியபோதும்)
பதிலளிநீக்குஇப்போ பாருங்க, கருணாநிதி, 'முக முத்து', 'ஸ்டாலின்', 'அழகிரி' என்ற சாய்ஸில், என்ன முடிவெடுத்தார் என்று. அங்கு லாஜிகல் தீர்வு என்பதுதான் இருக்குமே தவிர, 'உரிமை' என்பது வராது.
நெ.த. காந்தி இந்த நாட்டுமக்களையும் நினைச்சுப் பார்க்கலை, குடும்பத்தையும் நினைச்சுப் பார்க்கலை! அவர் தன்னை மட்டுமே தான் நல்லவன் என்னும் பெயரைக் காப்பாத்தணும் என்று மட்டுமே நினைச்சார்! :( யாராக இருந்தாலும் உண்மையாக மனசாட்சி என்பது இருந்தால் பேச வேண்டிய நேரத்தில் வாய் விட்டுப் பேசணும். சுபாஷுக்கு எதிராக பட்டாபிசீதாராமையாவைக் கொண்டு வந்த காந்தி அதையும் மீறி சுபாஷ் ஜெயிச்சதும் என்ன சொன்னார்? கடைசியில் சுபாஷ் தான் காந்தியின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து விலகினார். தவறு ஆரம்பித்தது அங்கே தான்! முதல் கோணல் முற்றிலும் கோணல்! :((((
நீக்குபிளாக்குக்கு லீவ் விட்டால்தான் குளியலா?! பேஷ் பேஷ்
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் கல்யாணங்களில் எங்கே வாசிக்க விடுகிறார்கள்? அபூர்வமாக யாராவது வாசித்தால் பாராட்டுவதுண்டு.சமையல் கலைஞர்களை கண்டிப்பாக பாராட்டுவேன்.
பதிலளிநீக்கு//ஜின்னாவைப் பிரதமர் ஆக்கி இருந்திருந்தால்// - ஒரு முடிவு எடுத்து நாடு ரொம்பத் தூரம் வந்த பிறகு இந்த மாதிரி 'அப்படிச் செய்திருக்கலாமோ', 'இந்த முடிவு எடுத்திருக்கலாமோ' என்று யோசிப்பது பொருத்தமற்றது கீசா மேடம். (ஹெலிகாப்டர் ரிப்பேர் அது இது என்று ஏகப்பட்ட தடங்கல்கள் வந்தபோது, இந்த ராஜீவ் அப்படியே போயிருக்ககூடாதா ஏன் மெனக்கெட்டு ஸ்ரீபெரும்பூதூர் வந்தார், நிறையபேர் எதற்கு சீக்கியர்களை பாதுகாப்புக்கு வச்சிருக்கீங்க, அதில் ரிஸ்க் இருக்கு என்று அறிவுறுத்தியபோதும் தவான் சொன்ன பாயிண்டை இந்திரா ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் நாடு வேறுமாதிரி இருந்திருக்குமே என்றெல்லாம் எண்ணமுடியுமா?
பதிலளிநீக்குமவுண்ட் பேட்டனுக்குத் தெரியாதது, ஜின்னாவின் மோசமான உடல்நிலை. அவர் 1 வருடம் கூடத் தாங்கமாட்டார் என்பது தெரிந்திருந்தால் பிரிவினையை ஒத்திப்போட்டிருப்பாராம். (அவரே சொன்னது). ஆனால் நடந்தது எல்லாம் நன்மைக்கே.
//நானும் ஒரு புத்தகத்தை தினமும் // - திண்டுக்கல் தனபாலன் சொன்ன உடனேயே அது திருக்குறளாகத்தான் இருக்கும் என்று புரியவில்லையா? (இதை நினைக்கும்போது எனக்குத் தோன்றுவது... ஒரு மொழியில் உலகப் பொதுமறை என்று சொல்லத் தக்க அளவில் 2000 வருடத்துக்கு முன்பே ஒருவர் செய்யுள்கள் கருத்துக்களோடு எழுத முடியும் என்றால், சங்க காலத்திலேயே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சிந்தனை எழுந்திருக்கிறது என்றால், நம் தமிழ் மொழியை பற்றி எவ்வளவு பெருமிதமாகக் கருதணும்? 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்பது உண்மையல்லவா?
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும் ஐயா...
நீக்குநேற்று ஒரு பதிவு எழத ஆரம்பித்தேன்... இணைத்த படம் ரயில்வே தண்டவாளங்கள்... இங்கே பதிவில் பதிலாக வாசித்த போது வியப்பு...
//"Blog பதிவுகள் மனச்சாந்தி அளிப்பது எழுதுபவருக்கா பின்னூட்டம் இடுபவருக்கா?"// - என் தனிப்பட்ட கருத்து, ஒரு இடுகை, சிந்தனைகளைத் தோன்றச் செய்யணும், பிறருக்குப் பயன் விளைவிக்கணும், அது ரசனையாகட்டும், பொழுதுபோக்காகட்டும் அல்லது புதிய சிந்தனையாகட்டும். அப்போதுதான் உண்மையாக 'பின்னூட்டம்' எழுதுவதில் அர்த்தமும் இருக்கும் (apart from நட்பு, தொடர்பு சம்பந்தப்பட்ட பின்னூட்டங்கள்). ஒருத்தர் எழுதுற இடுகையை, 'ஆஹா அபூர்வம்', 'அருமை', 'நல்லா இருக்கு' என்று எழுதுவதில் என்ன திருப்தி எழுதுபவருக்கு இருந்துவிட முடியும்?
பதிலளிநீக்குஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇன்று 11 மணிக்கு எங்கள்Blog ஆசிரியர்கள் அனைவரும் சன்டிவி பார்க்க சென்று விடுவதால், யாரும் மதியம் 1.30 வரை மறுமொழி எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று தகவல் வந்தது... கவனிக்க வாசகர்களே...!
பதிலளிநீக்குஎன்ன விசேஷம் பதினோரு மணிக்கு?
நீக்குபத்து மணிக்குப் பட்டிமன்றம்.
நீக்குநெ.த. இரண்டு ரங்கராஜன்களில் மற்றவர் ரா.கி.ரங்கராஜன்.
பதிலளிநீக்குதெரியும். இருந்தும் அவரை கலாட்டா செய்தேன். பாருங்க... அவர் வந்து பதில் சொல்லலை.
நீக்கு@ நெ.த.: ..திண்டுக்கல் தனபாலன் சொன்ன உடனேயே அது திருக்குறளாகத்தான் இருக்கும் என்று புரியவில்லையா? //
பதிலளிநீக்குபேசாமல் இவர் பெயரைத் ’திருக்குறள் தனபாலன்’ என்று இந்த நன்னாளில் மாற்றிவிடலாமா!
சர்க்கரை உருண்டை மாத்திரை பற்றி ஒரு ஜோக் நோயாளி மருத்துவரிடம்தன் உபாதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாராம் மருத்துவர் கேட்டுக் கொண்டே தன் உடலில் கையைத் தேய்த்துக் கொண்டிருந்தாராம் நோயாளி சொல்லி முடித்ததும் மருத்ஹுவர் அத்தனை நேரம்தேய்த்து ஒரூருண்டையை கயில் எடுத்தாராம் அந்த குளிகைப் பாலில் கலக்கிக் குடிக்க்சச் சொன்னாராம் நோயாளி கையில் இருந்தது மருத்டுவர் உடலில் தேய்த்து எடுத்த அழுக்கு உருண்டை.....!
பதிலளிநீக்குதாமதத்திற்கு மன்னிக்கவும் செய்திகள் அனைத்தும் பாராட்டுக்குரியவை
பதிலளிநீக்குசெய்திகள்?
நீக்குசனிக்கிழமை பாசிடிவ் செய்திகள் நினைப்பில் போட்டிருக்கார். இந்த வாரம் உங்களுக்கு லீவ் விட்டிருக்கேன் கௌதமன் சார். கேள்விகள் அடுத்த வாரத்துக்கு வைச்சிருக்கேன். :)))) வாரா வாரம் என்னோட பெயரைப் பார்த்துட்டு எல்லோருக்கும் போரடிச்சிருக்கும். :)
நீக்கு// பிடித்த பொழுதுபோக்கு *, ஷேர் டிரேடிங் செய்வது //
பதிலளிநீக்குஹா.. ஹா ஹா.... 'அடுத்தவன் காசு'தான.... ? (இதை எனது, இந்த வார கேள்வியாகக் கொள்ளவும்)