ஆ... அது என்ன சத்தம்? உளியின் ஓசை! தூங்க விடாம சத்தப்படுத்தறாங்களே... நிம்மதியா இருக்க விட மாட்டாங்களா? என்னன்னு போய்ப் பார்ப்போம்....
முன்னால் எல்லாம் தெருவில் "அம்மி கொத்தலியா.... அம்மி கொத்தலியா.....ம்மி கொத்தலியா... மி கொத்தலியா..." என்று வருவார்கள். அது வீடுகளில் அம்மி மட்டும் இருந்த காலம். இப்போது கிரைண்டர் வந்து விட்ட காலத்திலும் இப்படி வருகிறார்கள்தான். ஆனால் இங்கு அபூர்வமாகத்தான் கண்ணில் படுவார்கள். எங்கள் கிரைண்டர் கொஞ்ச நாட்களாய் மெதுவாய்ச் செயல்படுவதாயும், சரியாய் அரைக்காதது போலவும் தோன்ற, எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரரிடம் சொல்லி வைத்திருந்து, அப்படி ஒரு ஆள் வந்தவுடன் 'பிடித்து' வரச் சொன்னோம். வந்தார். எடுத்த உடனே நானூறு ரூபாய்க் கேட்டு அதிர்ச்சி உண்டாக்கினார். முந்நூற்றைம்பது, முன்னூறு என்று இறங்கி இருநூற்றைம்பது ரூபாயில் நின்றார். அம்மா.....டி... அதற்குமேல் அவரை இறக்கவும் முடியாததால் சரியென்றோம்.
உள்ளே இருக்கும் உருளைகளைத் தனியே கழற்றி உளி, சுத்தியல் உதவியுடன் மேலிருந்து கீழாக புதிய கோடுகள் போடத்தொடங்கினார். 'இதை நாமே போட்டிருக்கலாமே' என்று தோன்றியது.
ஒருவேளை அவர்கள் கைக்குதான் எந்த அளவு கொத்தவேண்டும் என்று தெரியுமோ என்னவோ என்று மனதைத் தேற்றிக்கொண்டோம்.
ஒரு வழியாய் இரண்டு உருளைகளையும் "கொத்தி" முடித்தார்.
அப்புறம் கீழே இருக்கும் கல்லில் கொத்த ஆரம்பித்தார்.
அது கையோடு தனியே வந்துவிட, "என்னங்க இது?" என்றதற்கு... "ஒன்றுமில்லை" என்றபடியே அதனை சுற்றிச் சுற்றி ஆராய்வது போலப் பார்த்தார்.
பிறகு, "கல்லு அவ்வளவு ஸ்ட்ராங்கா இல்லை... இதைக் கொத்தவேண்டாம்" என்று சொல்லி அதை திரும்ப வைத்து Fix செய்துவிட்டு, சரியாய் நிற்கிறதா, கழற்றிக்கொண்டு வந்து விடுகிறதா என்று தயக்கத்துடன் எங்களை நிமிர்ந்து பார்க்காமல் சோதித்தார். அவரே அதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.
கொத்தி முடிக்கப்பட்ட உருளைகள். பார்க்க உடுக்கு போல இல்லை? அவருக்கு இருநூறு ரூபாய் கொடுத்தோம்.
நன்றாகக் கழுவி எடுத்து உள்ளே வைத்தோம். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. எப்படி அரைக்கிறது என்கிறீர்களா? ஏதோ....
கடைசியில் என்னைத் தூங்க விடலை..... சரி... அடுத்த வாரம் பார்ப்போமா?
வாழ்க...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார். காலை வணக்கம்.
நீக்குஹா.. ஹா.. ஹா.. வந்தவர் எல்.கே.ஜி என்பது உங்களுக்கு தாமதமாகத்தான் விளங்கியதோ...
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... அவர் எல் கே ஜியா தெரியாது கில்லர்ஜி... அவர் செய்த வேலையால் எங்களுக்குப் பெரிய பயனில்லை. அவர் டூ வீலரில் தி வி எஸ் 50) வந்திருந்தார்! எனக்கு எப்பவுமே இன்னொரு சந்தேகமும் உண்டு கில்லர்ஜி.. இது போன்ற வியாபாரிகள் போர்வையில் சிலர் நோட்டம் பார்க்க வருவார்கள் என்று!
நீக்குஅம்மி கொத்திய படலம் அருமை...
பதிலளிநீக்குஆனாலும்,
பூனையாரின் தூக்கத்தைக் கெடுத்ததற்கு
பிராயச்சித்தம் செய்ய வேண்டியிருக்கும்..
என்ன பிராயச்சித்தம்?...
வேறு என்ன... கூடுதலாக ரெண்டு குவளை பால் தான்!...
துரை ஸார்.. பூனை இப்பவே நாங்கள் குடிப்பதை விட அதிகமான பாலைக் கபளீகரம் செய்கிறது. வந்த புதிதில் "இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா?" என்றுதான் இருந்தது. ஆனாலும் செல்லம்தான். இதோ இப்பவும் கதவு திறந்ததும் உள்ளே வந்து என் மடியில் ஏறி அமர்ந்து விட்டது!
நீக்குஆகா..
நீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குஉங்களுக்காக ஒரு செய்தி...
அது மின்னஞ்சலில்..
தவிர,
பூனைகளைச் சாதாரணமாக
நினைக்கா விட்டால்
அதனால் நன்மை ஒன்று விளையும்..
வேறொரு பிரச்சினை என்னவென்றால் வெளியில் வேட்டையாடும் ஜந்துக்களை வீட்டுக்குள் தூக்கி வந்து விடும்....
நண்பர் ஒருவர் வளர்த்த பூனை நல்ல பாம்புக் குட்டியை வேட்டையாடி குற்றுயிராக வீட்டுக்குள் தூக்கி வந்து விட்டது...
மருமகளுக்குப் பிடித்தமான பூனை
மாமியாருக்கு பிடிக்காது...
பெரிய பிரச்னை ஆகிவிட்டது...
முன்னரே சொல்லி இருக்கிறீர்கள் துரை சார்.. இதுவரை இது வேறு இந்தப் பொருளையும் வீட்டுக்குள் கொண்டு வந்து போட்டதில்லை!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஸோ, மாரல் ஆஃப் த ஸ்டோரி கிரைண்டர் சரியாக அரைக்கவில்லை என்றால் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரில் மாற்றி விடவும்.
நீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்கு//ஸோ, மாரல் ஆஃப் த ஸ்டோரி கிரைண்டர் சரியாக அரைக்கவில்லை என்றால் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரில் மாற்றி விடவும். //
நீக்குவாங்கி பத்து வருடம்தான் ஆகிறது அக்கா.. அதற்குள்ளாகவா?!!!!!
வாங்கி பத்து வருடம்தான் ஆகிறது அக்கா.. அதற்குள்ளாகவா?!!!!
நீக்குஇப்போதெல்லாம் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் பத்து வருடங்களுக்கு உழைக்கும் படியாகத்தான் தயாரிக்கப்படுகின்றன. எங்கள் வீட்டில் க்ரைண்டர், வாஷிங் மெஷின் இரண்டுமே வாங்கி ஏழாவது வருடம் ரிப்பேர் ஆகின. அப்போது கம்பெனிகாரர்கள் சொன்ன விஷயம் இது. ஆனால் சர்வீஸ் செய்யப்பட்டு ஏழு வருடங்களுக்கு மேலாகிறது. வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது.
பானுக்கா... எல்லாமே "வாச்சிக்கறதுதான் அமைஞ்சிக்கறதுதான்...!" அந்நாளில் நான் வாங்கிய நேஷனல் பானசானிக் டேப்ரெக்கார்டர் சீக்கிரம் வீணாய்ப்போயிருக்கிறது... பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய டெல்லி செட் பல வருடங்கள் நன்றாய் இருந்திருக்கிறது!
நீக்குபடிச்சு ஓரளவு விபரம் தெரிஞ்ச நீங்களே இப்படி கிரைண்டர் கல்லை அம்மி கொத்துவதைப் போல் கொத்தி வாங்கியதை நினைத்தால் அதிர்ச்சியும், வருத்தமும் வருகிறது. அந்தக் கற்கள் கொத்துவதற்கென டிசைன் செய்யப்பட்டவை அல்ல. அதிலும் அடிபாகத்தில், அதான் கையோடு வந்ததே அதில் கொத்தினால் அடியில் உள்ள பாகம் தேய்மானம் (ரப்பர் புஷ் இருக்குமிடம்) வந்துவிடும். இந்த அம்மி கொத்தறவங்களுக்கு இப்போ வாழ்வாதாரம் இல்லை. க்ஷீணித்துப் போய்விட்டார்கள். வேறு வேலை கற்றுக் கொள்வது நலம். :( நீங்க அம்மி கொத்தறவரைக் கூப்பிட்டதுக்குப் பதிலா குறிப்பிட்ட கிரைண்டர் கம்பெனியின் உதவியை நாடி இருந்தால் சரி செய்து கொடுத்திருப்பார்கள். கல்லெல்லாம் தேய்ந்து போகாது. ப்ளேட் மாத்த வேண்டி இருந்திருக்கும். இல்லை எனில் பெல்ட், மோட்டார் ஏதேனும் பழுது ஆகி இருந்திருக்கலாம். இனி ஒரு முறை இத்தகைய தவறைச் செய்யாதீர்கள். எந்தக் கம்பெனியின் கிரைண்டரோ அந்தக் கம்பெனியின் service centre செல்லுங்கள். ஆயிரம் ரூ வரை ஆகலாம், ஆனால் ஒரு முறை செய்தால் குறைந்தது 5,6 ஆண்டுகளுக்கு உழைக்கும். இதை கவனத்தில் கொள்ளுங்கள். சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம் என்ற வகை நீங்கள் இப்போ செய்தது. :(
பதிலளிநீக்குஎன்னோட எல்ஜி டேபிள் டாப் வெட் கிரைண்டர் வாங்கி 20 வருடங்கள் ஆகின்றன. ஒரு முறை பாட்டம் பிரச்னை வந்து மாம்பலத்தில் உள்ள எல்ஜி செர்வீஸ் சென்டரில் அதைச் சரி செய்து கொடுத்தார்கள். அதன் பின்னர் இப்போ இங்கே வந்ததும் பெல்ட் லூஸ் ஆகி இங்கேயே ஒருத்தரிடம் கொடுத்துப் புது பெல்ட் போட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆகவே நீங்களும் மாற்றவேண்டிய அவசியம் இல்லை. அதுவும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்னா கட்டாயம் கொடுக்காதீங்க. அது இன்னொரு ஏமாற்று வேலை. எம்.ஆர்.பியை விட அதிகம் கொடுக்க வேண்டி வரும். எந்தப் பொருளையும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுக்காதீங்க!
பதிலளிநீக்குஆ... என்ன தவறு செய்தேன்! பாஸின் நண்பிகள் இப்படி கொத்தி விட்டபின் அது நன்றாய் வேலை செய்வதாய்ச் சொன்னதன் விளைவு அது. மேலும் பாத்து வருடங்கள் ஆகிவிட்டதால் கம்பெனியை நாடும் எண்ணம் ஏற்படவில்லை!
நீக்கு//மேலும் பாத்து வருடங்கள் ஆகிவிட்டதால்//
நீக்குச்சே.... பத்து வருடங்கள்...
வாரன்டி எத்தனை வருடங்கள்? சில ஐந்து வருடங்கள். இப்போது சில 10 வருடங்கள். வாரன்டி இல்லை என்றாலும் கம்பெனிக்கு எடுத்துச் செல்லலாம். என்ன ஒண்ணுனா நம்மளைத் தூக்கிட்டு வரச் சொல்லுவாங்க! அதான்.. அதோடு வாரன்டி இல்லைனா செர்விஸ் சார்ஜ் இருக்கும். அதோடு கூட உதிரி பாகங்கள் மாற்றினால் அதன் விலை! எந்த கிரைண்டர் கல்லையும் கொத்தவே கூடாது! அது பழைய மாதிரி கிரைண்டர் ஆனாலும் சரி, இப்போது வரும் லேட்டஸ்ட் மாடல் கிரைண்டர் ஆனாலும் சரி! அம்பத்தூரில் இருந்தப்போ அக்கம்பக்கம் எல்லாம் கூப்பிட்டுக் கொத்துவாங்க. என்னையும் சொல்லுவாங்க. என் மாமியாரும் கேலி செய்வார். ஆனால் நான் பிடிவாதமாக ஒத்துக்கவே மாட்டேன். கிரைண்டர் அரைக்காமல் போனதுமே இதைச் சொல்லிக் கேலி செய்தார்கள். இனிமேல் எதுவும் செய்ய முடியாது. தூக்கித் தான் போடணும் என்றனர். ஆனால் நாங்க மாம்பலம் தூக்கிட்டுப் போய் சரி செய்து எடுத்து வந்தோம்.
நீக்குஎல்லாமே "வாச்சிக்கறதுதான் அமைஞ்சிக்கறதுதான்...!"
நீக்குகிரைண்டர் கல் கொத்தமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்
பதிலளிநீக்குசில பேர் 'கொத்தி' இருப்பதைப் பார்த்ததால் நானும் சம்மதித்தேன் கரந்தை ஜெயக்குமார் ஸார்!
நீக்குகீதா அம்மா சொல்வது தான் சரி... பெல்ட் தான் பிரச்சனை...
பதிலளிநீக்குஆமாம் டிடி...
நீக்குநம் விஞ்ஞான ஆசிரியர் என்ன சொல்கிறார்?
பதிலளிநீக்குஇதுவரை ஒன்றும் சொல்லவில்லை!
நீக்குபொதுவா மனைவி இப்படிச் சொல்லி அது வேலைக்காகலைனா நமக்குத் தலைவலி கிடையாது. சிலசமயம் நாமே புத்திசாலித்தனமா செய்யறதா நினைத்து இப்படிச் செய்தோமானால், பணத்துக்குப் பணமும் போய் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். இயந்திர அம்மி கொத்துவதற்கு உகந்ததல்ல.
பதிலளிநீக்குஅது மட்டுமல்ல நெல்லை... அவர்கள் சிபாரிசு செய்து நாம் அதைச் செய்யாமலிருந்தாலும் கஷ்டம்தான்!
நீக்குஇதுல ஒரு நன்மை, ஞாயிறு இடுகைக்கு சப்ஜெக்ட் கிடைத்தது.
பதிலளிநீக்குஅதை முதலிலேயே தெரிந்துகொண்டேன். நல்லவேளை போட்டோக்கள் எடுத்துக் கொண்டேன்!
நீக்குகோவையில் ஆட்டாங்கல்லு கொத்தலையோ!! அம்மிக்கல்லு கொத்தலையோ!! என்று சப்தம் எழுப்பி வருவார்கள்.. நினைவூட்டியதற்கு நன்றி..
பதிலளிநீக்குவாங்க திருமதி வெங்கட்... நினைவூட்டி இருக்கிறேன் என்றால் உங்கள் வீட்டு அம்மியை கொத்தவேண்டுமா?!!
நீக்குஎதையும் பெண்கள் பேச்சைக் கேட்டுச் செய்தால் இப்படி ஆகலாம்
பதிலளிநீக்குஅப்படி எல்லாம் சொல்ல முடியாது ஜி எம் பி ஸார். வேறு நல்ல அனுபவங்கள் நிறைய உண்டு.
நீக்குக்ரைண்டர் - அடடா.... இப்படி கொத்து கொத்துன்னு கொத்திட்டீங்களே என அழலாம்! இவை கொத்துவதற்கு சரி வராது.
பதிலளிநீக்குபடங்கள் அழகு. செல்லம் ரொம்பவே.
செல்லங்கள் படங்களோடு அம்மி கொத்தும் படங்களும் அழகா இருக்கா வெங்கட்?!
நீக்குகீழ் பகுதி ஒட்டி வைத்து இருப்பார்கள் , அதை கொத்தினால் தனியாக வந்து விடும்.
பதிலளிநீக்கு//"கல்லு அவ்வளவு ஸ்ட்ராங்கா இல்லை... இதைக் கொத்தவேண்டாம்" என்று சொல்லி அதை திரும்ப வைத்து Fix செய்துவிட்டு, சரியாய் நிற்கிறதா, கழற்றிக்கொண்டு வந்து விடுகிறதா என்று தயக்கத்துடன் எங்களை நிமிர்ந்து பார்க்காமல் சோதித்தார். அவரே அதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.//
நல்ல வேடிக்கை.
எப்படியோ! மாவு அரைக்க முடிக்கிறதே, அதுவே பெரிய விஷயம்.
//கடைசியில் என்னைத் தூங்க விடலை...//
அதுதானே செல்லக்குட்டியை தூங்கவிடாமல் செய்து விட்டீர்கள்.
//உளி, சுத்தியல் உதவியுடன் மேலிருந்து கீழாக புதிய கோடுகள் போடத்தொடங்கினார். //
கல்லின் கோடு கலைவண்ணம் அருமை.
கீழ் பகுதி ஒட்டி வைத்து இருப்பார்கள் , அதை கொத்தினால் தனியாக வந்து விடும்.
பதிலளிநீக்கு//"கல்லு அவ்வளவு ஸ்ட்ராங்கா இல்லை... இதைக் கொத்தவேண்டாம்" என்று சொல்லி அதை திரும்ப வைத்து Fix செய்துவிட்டு, சரியாய் நிற்கிறதா, கழற்றிக்கொண்டு வந்து விடுகிறதா என்று தயக்கத்துடன் எங்களை நிமிர்ந்து பார்க்காமல் சோதித்தார். அவரே அதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.//
நல்ல வேடிக்கை.
எப்படியோ! மாவு அரைக்க முடிக்கிறதே, அதுவே பெரிய விஷயம்.
//கடைசியில் என்னைத் தூங்க விடலை...//
அதுதானே செல்லக்குட்டியை தூங்கவிடாமல் செய்து விட்டீர்கள்.
//உளி, சுத்தியல் உதவியுடன் மேலிருந்து கீழாக புதிய கோடுகள் போடத்தொடங்கினார். //
கல்லின் கோடு கலைவண்ணம் அருமை.
நன்றி கோமதி அக்கா. மாவு கொஞ்சம் பெட்டராக அரைபடுவதாக பாஸ் சொன்னார். பிரமைதான்! கல்லின் கோட்டை நானும் ரசித்தேன். செல்லம் ரொம்பவே செல்லம் கொஞ்சுகிறது! எத்தனை நாளோ!
நீக்குகிரைண்டர் உருளைகளைக் கொத்துவதற்கு உகந்ததில்லை (பொளிதல்) என்று தெரிந்துகொண்டோம். நன்றி
பதிலளிநீக்குநன்றி திரு முத்துசாமி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகொத்துதல் அருமை. டிசைன் பார்க்க மிக அழகாக இருக்கிறது. கிரைண்டர் வந்த புதிதில் சங்கிலியுடன் வந்த கிரைண்டர்கள் குளவி மட்டும் கொத்தி பார்த்திருக்கிறேன். ஏனெனில் நாங்கள் குடியிருந்த வீட்டின்(சென்னை) ஓனர், சில பெரிய கிரைண்டர்கள் வாங்கிப் போட்டு ஆட்கள் வைத்து மாவு அரைத்து கொடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் "எங்கள் ஊரில் தி. லி யில் குளவியை கொத்த மாட்டார்களே.,! ஆட்டுகல்லை மட்டுந்தானே கொத்துவார்கள்" என்றேன்.அதற்கு அந்த அம்மா இங்கெல்லாம் இப்படித்தான்.. இரண்டாவதாக குளவியைதான் கொத்த முடியும்.. கிரைண்டரில், எப்படி முடியும்? என்று கேட்டார்கள். டேபிள் கிரைண்டர் என்றால் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது போல் பெல்ட் மட்டும் மாற்ற வேண்டும் போல் இருக்கிறது சங்கிலி கிரைண்டரில் நானும் ஒரு தடவை பெல்ட் மாற்றியிருக்கிறேன். கைகள் உதவியுடன் பழைய அரைக்கும் ஆட்டுரலில் குளவியை சேய் எனக்கூறி அதை துன்புறுத்த மாட்டார்கள். சில சமயங்களில் இப்படி நாம் எதிர்பாராதது நடந்து விடுகிறது. ஆனால், செல்லத்தின் அன்றைய தூக்கம் கெட்டு விட்டது. கமெண்டுகள் ரசிக்க வைத்தன.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்..
வாங்க கமலா சிஸ்டர்...
நீக்குகொத்துதல் டிஸைனை ரசித்ததற்கு நன்றி. ஆம், சங்கிலியில் மாட்டி இருக்கும் கிரைண்டர் வைத்திருந்தோம். அது இதஜவிட நன்றாய் இருந்தது. அதைவிட ஆட்டுக்கல் பெஸ்ட் என்றும் சொல்லலாம்!!!
செல்லம் - ரொம்ப செல்லம் கொடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன்.
எப்போவுமே அம்மிக் குழவியையோ கல்லுரல்(ஆட்டுக்கல்) குழவியையோ கொத்தவே மாட்டார்கள். அது குழந்தைக்குச் சமானம். அதனால் தான் மிக அதிகமாக மழை பெய்கையில் அந்தக் குழவிக்கு ஒரு ஒற்றைத் துணியைச் சுற்றிக் கொட்டும் மழையில் போடுவார்கள். குழந்தை நனைகிறதே என வருணன் கனிந்து போய் மழை பொழிவதை நிறுத்துவாராம். அதோடு புதிதாகக் குழந்தை பெற்றவர்கள் முதலில் அம்மிக் குழவியைக் குளிப்பாட்டித் துடைத்துப் புதுத்துணி அணிவித்து அதற்குப் பால் புகட்டும் சடங்கு ஒன்று புண்யாகவசனத்தின் போது நடக்கும். அந்தச் சமயம் குழந்தை பெறாதவர்களையும் அழைத்து அம்மிக் குழவிக்கு எல்லாம் செய்யச் சொல்லிப் பின்னர் பிறந்த குழந்தையை அவர்கள் கையில் கொடுத்து தொப்புளில் வெல்லம் வைத்து முறத்தில் போட்டுத் தாயிடம் கொடுக்கச் சொல்வார்கள். தாயும் அவங்க கொடுத்த குழந்தை என்னும் நினைப்புடன் வாங்கிக்கச் சொல்லுவார்கள். இதனால் எல்லாம் குழந்தை நீண்ட ஆயுளைப் பெறும் என்பதும் ஒரு நம்பிக்கை! குழந்தை பெறதவர்கள் அம்மிக்குழவியைக் குழந்தையாய்க் கருதி எல்லாம் செய்தால் கடவுள் மனம் கல்லாக இல்லாமல் இரங்கிக் குழந்தை பாக்கியம் கொடுப்பார் என்பார்கள். இப்போதெல்லாம் பெற்ற தாயே புண்யாகவசனத்தின் போது இதெல்லாம் செய்வதில்லை. அந்த மாதிரிப் பழக்கம் இருப்பதே பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை.
நீக்குஇஃகி இஃகி, கமலா பெயரையும் ஶ்ரீராம் பெயரையும் குறிப்பிட நினைச்சு மறந்துட்டேன். ஶ்ரீராம் அடிக்க வரப் போறார். மீ ஜூட்!
நீக்குஇந்தச் சடங்குகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பார்த்ததில்லை கீதா அக்கா.
நீக்குஅந்தக் கால அம்மிக் கல், ஆட்டுக் கல்லைக் கொத்துவார்கள். க்ரைண்டர் கல்லையும் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன். ‘ஏதோ’ அரைக்கிறதா:)? ஆனால் பார்க்க டிசைன் நன்றாகத்தான் இருக்கிறது:).
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி. கிரைண்டர் கல்லை ரொம்பப் பேர் இப்படிக்கு கொத்தி, அது நல்லாவும் வேலை செய்கிறது.
நீக்குபூனை நீங்கள் வளர்க்கும் செல்லப் பூனையா?
பதிலளிநீக்குதிடீரென எங்கள் வீட்டுக்குள் புகுந்து ஒன்றரை மாதங்களாய் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் கவனத்தைக் கவர்ந்து தட்டின்முன் அது அமர்ந்து காத்திருக்கும். பால் ஊற்றவேண்டும் என்று அர்த்தம்! பெரும்பாலும் என் மடியில்தான் அமர்ந்திருக்கும். கீபோர்டில் எல்லாம் ஏறிநின்று பூச்சியைப் பிடிக்கிறேன் என்று நான் டைப் அடிப்பதன் நடுவே அட்டகாசம் செய்யும்!
நீக்குஎங்க ஊர் பக்கம் அடிக்கடி வர்றாங்க. இங்க இதுக்கு பேரு பொலுவா போடுறது.
பதிலளிநீக்குவாங்க ராஜி... ஓ... உங்க ஊர்ப்பக்கம் அப்படிச் சொல்லுவாங்களா!
நீக்குக்ரைண்டர்+ செல்லம் பதிவு. பாஸ் எப்போ நல்லா அரைக்கிறதுன்னு சொன்னாங்களோ அப்பவே மேட்டர் ஓவர். நோ வொர்ரீஸ் ஸ்ரீராம்.
பதிலளிநீக்கு//பாஸ் எப்போ நல்லா அரைக்கிறதுன்னு சொன்னாங்களோ அப்பவே மேட்டர் ஓவர். நோ வொர்ரீஸ் ஸ்ரீராம்.//
நீக்குஆமாம் வல்லிம்மா... அவ்வளவுதான்! நம்ம நிம்மதி நமக்கு முக்கியம்!!
அம்மி கொத்திய வரலாறு நன்று
பதிலளிநீக்குஎமக்கும் பாடம் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு