சனி, 4 ஆகஸ்ட், 2018

கண்டுகொள்ளாத அரசாங்கமும் கிராம மக்களும்


1) அரசாங்கம் கண்டுகொள்ளாமலிருந்தால்?  தன் கையே தனக்குதவி! 





2)  2008ல், பள்ளியின் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்ற கற்பகம் அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்தும், பள்ளி கட்டடம் கட்ட நிதி திரட்டினார். அனைவருக்கும் கல்வி திட்டம் வாயிலாக, எட்டு லட்சம் ரூபாய் நிதி பெற்று, கூடுதலாக, 4 சென்ட் இடம் வாங்கி, பள்ளியை விரிவுபடுத்தினார்.தொடர்ந்து, நான்கு வகுப்பறைகள், சமையல் அறை கட்டப்பட்டன. பள்ளியின் தரத்தை உயர்த்துவதை லட்சியமாக கொண்ட கற்பகம், அடுத்த கட்டமாக, பள்ளியை வண்ணமயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். சொந்த பணம், 50 ஆயிரம் ரூபாயுடன், பொதுமக்களிடம் திரட்டியது என, மொத்தம், 1.75 லட்சம் ரூபாயில், பணியை துவக்கினார்.....





31 கருத்துகள்:

  1. தன்னம்பிக்கையூட்டும் செய்திகள் பதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல உபயோகமான செய்திகள். அரசாங்கங்கள் ஊழலில் பிஸியாக இருக்கும்போது நமக்கு நாமே திட்டம்தான் உபயோகம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான தலைமை ஆசிரியர்,
    தன் பள்ளிக்கூடத்தை எப்படி நேசித்திருப்பார்...!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    தன் கையே தனக்குதவி மாதிரி, தன் உழைப்பால் பயனடைந்து வரும் விவசாயிகள் உண்மையிலேயே போற்றப்பட வேண்டியவர்கள்.

    பள்ளியை நேசித்து தன் முயற்சியால் மேம்படுத்தி சிறப்புடன் செயலாற்றி வரும் தலைமை ஆசிரியர் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்.

    நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள்.

    சகோதரி கீதா ரங்கனை காணவில்லையே.. வெளியூர் பயணமோ? சகோதரி அதிராவையும் மனது தேடுகிறது. அவரையும் காணவில்லை..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. மேலே காட்டியிருக்கும் வண்ண வகுப்பறையைப் பார்க்கையில், நமக்கு மீண்டும் ஏழெட்டு வயசுதான் என ஆகாதா.. அந்த வகுப்பறையில் போய் உட்கார்ந்து படிக்கமுடியாதா என ஏங்குகிறது மனம்..

    பதிலளிநீக்கு
  6. கிராம மக்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்
    வகுப்பறை மனம் கவர்கிறது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. ஆசிரியர் பணி பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    செய்திகள் இரண்டும் அருமையான செய்திகள்.
    கிராம மக்கள் சேவையை பாராட்ட வேண்டும்.
    தலைமை ஆசிரியர் போற்றுதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் உரியவர்.

    பதிலளிநீக்கு
  9. சொந்த செலவில் தனது கிராமத்தை பராமரிப்பது இப்போது பரவலாக எல்லா ஊரிலும் பரவி விட்டது.

    பதிலளிநீக்கு
  10. இரண்டு செய்திகளுமே சிறப்பு - இரண்டாவது செய்தி முதலிடத்தில்....!

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. எங்கே தி/கீதா, இணையம் இல்லையா? பல நாட்களாய்க் காணோம்!

    பதிலளிநீக்கு
  13. முதல் செய்தியில் நடப்பது இப்போது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அதாவது எழுபதுகள் வரை குடி மராமத்து என்னும் பெயரில் அந்த அந்தக் கிராம மக்கள் தங்கள் தங்கள் பகுதி, தங்கள் வயல் பக்கம் வரும் வாய்க்கால்கள், கால்வாய்கள், குளங்களைத் தூர் வாருவார்கள். இதற்கென ஊரில் கணக்குப் பிள்ளை மூலம் வரி வசூலிக்கப்படும். வீட்டுக்கு ஒருவர் வர வேண்டும் என்னும் எழுதாத சட்டம் உண்டு.

    பதிலளிநீக்கு
  14. மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப்பணத்தை என்ன செய்கிறது அரசாங்கம்? பாசன கால்வாயை தூர்வாரிக் கொள்ளும் மக்கள் இலவசங்களை மறுதலிக்கட்டும்.

    வாரம் ஒரு ஆசிரியர் வணங்க வைக்கிறார்.

    ஆசிரியர் பற்றிய எல்லா செய்திகளையும் சேகரித்து வைத்து ஆசிரியர் தினத்தன்று ஒரு சிறப்பு பதிவாக வெளியிட்டு விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் குறிப்பிட்ட நகராட்சி, பேரூராட்சி, கிராமப்பஞ்சாயத்து ஆகியவை தான் பொறுப்பு எடுத்துக் கொண்டு செய்யவேண்டும். அப்படித் தான் முன்னால் இருந்து வந்தன. இதைத் தான் தன்னாட்சி என்றும் கூறுவார்கள். ஆனால் இப்போது அரசு எல்லாவற்றையும் பொறுப்பு எடுத்துக் கொண்டு இருப்பதை என்னனு சொல்லுவது? கிராமச் சாலைகள் கிராமப் பஞ்சாயத்துகள் பராமரிப்பிலும், கிராமங்களை இணைக்கும் சாலைகள் மாநிலங்களின் பொறுப்பிலும் இருப்பது வழக்கம். கிராமக் கணக்குப் பிள்ளைக்கு இவை எல்லாம் கரதலப்பாடமாய்த் தெரிந்திருக்கும். இப்போ ஆற்றைச் சுத்தம் செய்யக் கூட அரசு வர வேண்டி இருக்கு! அப்புறம் என்ன சுயாட்சி?

      நீக்கு
  15. வெள்ளம் வந்தாலும் வெள்ளத்தைத் தடுக்க வீட்டுக்கு ஒருத்தர் போய் மணல் மூட்டைகளை அடுக்குவதும் மற்ற விதங்களில் வெள்ளத்தைத் தடுப்பதும் உண்டு. இது தான் திருவிளையாடல் புராணத்திலேயே வந்திருக்கே! நாம் தான் எல்லாவற்றையும் அரசே தன் செலவில் செய்து கொடுக்கட்டும். நாங்க டாஸ்மாக்கிற்குப் போயிட்டு இலவச அரிசி வாங்கிச் சமைச்சுச் சாப்பிட்டு இலவசத் தொலைக்காட்சியில் படம் பார்த்துட்டு இலவச ஃபானில் காத்து வாங்கிட்டு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திட்டு இருக்கோம்னு நிம்மதியா இருக்கோம். :( வேட்டி, சேலையும் இலவசம். அதை வித்தால் கொஞ்சம் காசு கிடைக்குமே! எதுக்கு விடணும்! :(

    பதிலளிநீக்கு
  16. ஆசிரியர் கற்பகத்துக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. எங்கே கீதா,கீதா, துரை செல்வராஜ் சார் ஆகியோர்களை காணவில்லை? ஆ..!கீதா அக்கா வந்து விட்டார்களா..?
    Good afternoon akka!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளைக்குத் தான் ரொம்ப பிசி! :)))) மத்தியானத்துக்கு மேல் வந்தால் வருவேன்.

      நீக்கு
    2. வணக்கம், வணக்கம், நானும் வணக்கம் வைச்சுக்கறேன். @பானுமதி!

      நீக்கு
  18. ஆம் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் தூர் வாரும் பணி நடைபெறுகிறது

    பதிலளிநீக்கு
  19. த்ன் கையே தனக்குதவி பாராட்ட்டபட வேண்டிய விவசாயிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சொல்லி இருக்கும் கருத்துகள் உண்மையே.
      எப்பொழுதுமே அரசை எதிர்பார்த்து ஏமந்து போகாமல் இருக்க
      இப்படி ஏதாவது நடந்தால் தான் உண்டு.
      கால்வாயில் தண்ணீர் வந்து செழிப்பாக இருக்காட்டும். எல்லோருமே இந்த உழைப்பைக் காட்டினால் கடலுக்குத் தன்னீர் வீணாகப் போவதைத் தடுக்க முடியும்.
      கற்பகம் டீச்சருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் உண்மையிலேயே
      மிக அழகான வகுப்பறை.
      நல்லாசிரியை என்றால் இவர்தான்.

      நல்ல செய்திகளைக் கொடுத்த ஸ்ரீராமுக்கு மிக நன்றி.

      நீக்கு
  20. முதல் பாசிட்டிவ் செய்தி முன்னமே அறிந்தது. கற்பகம்மாளுக்கு வாழ்த்துகள்.

    கீதாம்மா சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  21. இப்போ தான் இணையம் கிடைத்தது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  22. நற்பணியாளர்களை நாடு ஒருபோதும் மறந்ததில்லை.
    நாளைய தலைமுறையும் இதனைத் தொடரவேண்டும்.
    நம்புவோம் நாளை விடியுமென்று!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!