திருவாரூரிலிருந்து காலை கல்யாணமாகாதேவி நோக்கி புறப்பட்டபோது வண்டியிலிருந்தே கமலாலயத்தை ஒரு க்ளிக். முன்னதாக இந்தக் கரை வழியாக நடந்து தேடி ஒரு கடையில் வடை சாப்பிட்டு வந்தேன்! என்னைக் காணோமே என்று தேடி, எனக்காகக் காத்திருந்து புறப்பட்டது வாகனம் - இலேசான அர்ச்சனையுடன்தான்!
கல்யாணமாகாதேவியில் அய்யனார் கோவில் செல்லும் வழியில் என்னை நானே எதிர்பாராமல் எடுத்துக்கொண்ட ஒரு க்ளிக்! பின்னர் பார்த்தபோதுதான் நம்மை நாமே ஒரு ஸ்நாப் எடுத்திருக்கிறோம் என்று தெரிந்தது!
இதுதான் அந்த அய்யனார் கோவில். நான் குறுக்கு வழியில் ( ! ) வந்துவிட, மற்றவர்கள் பத்தடி சுற்றிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள்! வாங்க.. பக்கத்துல போவோம்...
முதலில் குதிரை வீரன் பக்கத்திலிருந்து கோவிலை ஒரு க்ளிக்!
கல்யாணமாகாதேவி அருள்மிகு ஸ்ரீ......
பூட்டியிருந்ததா? கம்பிகளுக்குள் அலைபேசியை நுழைத்து அருள்மிகு அய்யனாரை ஒரு க்ளிக்!
கோவிலிலிருந்து அப்படியே திரும்பி குதிரை வீரனை ஒரு படம்....
குதிரை வீரன் பக்கத்தில் நிற்கும் நம்மாளை தனியாக ஒரு க்ளோஸ் அப் ஷாட்!
அங்கிருந்து திரும்புகிறோம். சென்ற வழியை அப்படியே ஒரு போட்டோ! அந்த குறுக்கு வழி... அதனூடே குதிரையின் பின்புறம்!
பாண்டவ ஆற்றிலிருந்து இந்தப்பக்கம் கட்டிட வேலைகளுக்கும் மற்ற தேவைகளுக்கும் நீர்ப்பாசனம்!
சரிவில் சறுக்கிக் கொண்டு போகாமல் நன்றாய்த்தான் நிற்கிறது... புல்லும் இல்லை, செடியும் இல்லை, காய்ந்த நிலத்தில் எதைச் சாப்பிடுகிறது?!!
கோவில் எழுந்ததில் இவர்களின் கை இருக்கிறது!
அன்றைய தினத்துக்கான கூலியை வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாலாலய யாகசாலை.
வாழ்க...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்.. காலை வணக்கம்.
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஎதிர்பாராத க்ளிக்...
பதிலளிநீக்குதிகில் படம் பார்த்தமாதிரி இருந்தது....
ஹா.... ஹா.... ஹா.. நன்றி துரை ஸார்.
நீக்குஸ்ரீராம் இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கிறீங்களோ? துரை அண்ணன் போல இன்னும் எத்தனை பேர் மயங்கி விழப்போகினமோ ஆண்டவா:)).. திகிலாலதான்:)..
நீக்கு//கல்யாணமாகாதேவியில் அய்யனார் கோவில் செல்லும் வழியில் என்னை நானே எதிர்பாராமல் எடுத்துக்கொண்ட ஒரு க்ளிக்! பின்னர் பார்த்தபோதுதான் நம்மை நாமே ஒரு ஸ்நாப் எடுத்திருக்கிறோம் என்று தெரிந்தது! /// grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr varen appurama
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... காலை வணக்கம்.
நீக்குகல்யாண மகாதேவி....
பதிலளிநீக்குபேரழகும் ஊரழகும் நீரழகும் -
ஆகா... அழகே அழகு....
நன்றி. உங்கள் இந்த வரிகள் கேஜி சகோதரர்களை இன்புறுத்தும்.
நீக்குஸ்ரீராம்..
நீக்குநேற்றொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் - தங்களுக்கு...
தயை கூர்ந்து கவனிக்கவும்..
நன்றி..
முன்னரே நான் அனுப்பி இருந்த பதிலை இந்நேரம் படித்திருப்பீர்கள்!
நீக்குபடங்கள் அருமை நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பர் ஜெயக்குமார்.
நீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குபடங்கள் அழகு. ஆஹா உங்கள் நிழலை பார்த்து விட்டோம் - நிழற்படம் பார்ப்பது எப்போது?
நிழற்படம்தானே அது? இல்லையா? ஹா... ஹா... ஹா... காலை வணக்கம் வெங்கட்.
நீக்குஉங்களை நேரிலே பார்த்தால் தான் உண்டு போல! :)
பதிலளிநீக்குகிராமத்துக் கோவில்களின் அழகே தனி தான். எங்கள் ஊர் சமீபத்தில் சென்ற போது என்னால் படங்கள் எடுக்க முடியவில்லை - வேலைகள் அதிகம் இருந்தது.
நன்றி வெங்கட்... நேரிலே பார்த்தால் என்ன வெட்கம் என்கிற பாடல் நினைவுக்கு வருகிறது!
நீக்குதென்னை மரங்களுக்கிடையே ஒற்றையடிப் பாதை - இப்படியான பாதைகள் இங்கே இல்லவே இல்லை!
பதிலளிநீக்குகல்யாண மகாதேவியில் இப்பவும் இருக்கின்றன!
நீக்குஉங்களின் புகைப்பட ரசனை எங்களை ஈர்த்தது.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஐயா.
நீக்குஸ்ரீராம்ஜி புகைப்படத்தில் நீங்கள் கருப்பாக இருக்கின்றீர்களே...?
பதிலளிநீக்குஜி....
நீக்குபுகைப்படம் தானே!...
அதான் கருப்பாக இருக்கிறார்!!..
திராவிட நிறத்தைக் குறை சொல்லலாமா கில்லர்ஜி... :-)
நீக்குஹா ஹா ஹா :)
நீக்குபுகைப்படத்திலும் அப்படித்தான் இருக்கிறேனா? கடவுளே...!! நன்றி கில்லர்ஜி!
நீக்கு//புகைப்படம் தானே!... அதான் கருப்பாக இருக்கிறார்!!../
நீக்குஹா... ஹா... ஹா.. இந்த பதில் நல்லா இருக்கே துரை ஸார்...
//திராவிட நிறத்தைக் குறை சொல்லலாமா கில்லர்ஜி... :-)//
நீக்குதிராவிடும் இதே நிறமா? ஓ...!
:)))
படங்கள் அருமை. உங்கள் நிழல் படமும் நன்றாக வந்திருக்கிறது, மேற்கு நோக்கி எடுத்ததால்
பதிலளிநீக்குநன்றி நெல்லைத்தமிழன். கிழக்கு நோக்கி எடுத்திருந்தால்?
நீக்குஅனைத்து படங்களும் அருமை...
பதிலளிநீக்குநேரில் சந்தித்து, படம் எடுத்து எனது பதிவில் போடுவேனாக்கும்...!
சொல்லிட்டீங்கதானே. இனி ஶ்ரீராம் நேரில் சந்திக்க மாட்டார்.. :-)
நீக்குநேரில் சந்தித்து படம் எடுத்திருக்கிறேன் ஆனால் பதிவிட அனுமதி தரவில்லை
நீக்குஐயோ தனபாலன்... வொய் திஸ் ....
நீக்குநேரில் சந்திக்க தனபாலன்தான் கிடைக்கவில்லை நெல்லை!!! அவர் உள்ளே வரும்போதே செக்கியூரிட்டி கிட்ட சொல்லி கேமிரா, செல்போன் வாங்கி வைக்கச் சொல்லிடுவேன்!!!
நீக்குஆமாம் ஜி எம் பி ஸார்... ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விருப்பம்!
நீக்கு//நேரிலே பார்த்தால் என்ன வெட்கம் என்கிற பாடல் நினைவுக்கு வருகிறது!// ரொம்பத்தான்...! ஹாஹா!
பதிலளிநீக்குபானு அக்கா... நாணாகவா சொன்னேன்? அவர் சொன்னதற்கு பதில் சொன்னேன். அவ்வளவுதான்!
நீக்கு//நேரிலே பார்த்தால் என்ன வெட்கம் என்கிற பாடல் ..//
பதிலளிநீக்குஇப்படி ஒரு பாடலிருப்பது தெரியாது.
ஆனால் PB ஸ்ரீனிவாஸின் ‘நேற்றுவரை நீ யாரோ.. நான் யாரோ..?’ பாடலில் வரும் வரிகள் என்னவோ ஞாபகத்தில் வந்தன:
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும் ?
நீக்குநேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும் ? இல்லை ராம் என்ன குறைந்தாபோவார்
ஏகாந்தன் ஸார்... மன்மத லீலை படத்தில் வரும் "ஹலோ மை டியர் ராங்நம்பர்" பாடலில் வரும் வரி அது. நீங்கள் சொல்லும் பாடல் வேறு!
நீக்கு//நேரிலே பார்த்தால் என்ன
நீக்குநிலவென்ன தேய்ந்தா போகும் ? இல்லை ராம் என்ன குறைந்தாபோவார் /
ஜி எம் பி ஸார்... ஏகாந்தன் ஸார்.. நிலவும் தேயாது. நானும் குறைய மாட்டேன். அதேதான் பார்க்கா விட்டாலும்!!
ஆஆஆஆஆஆஆஆஆஆ மேல் இமை கீழ் இமையை மெதுவா டச்சூஊஊப் பண்ணிச்சுதா.. விடிஞ்சுபோச்ச்ச்:))..
பதிலளிநீக்கு///என்னை நானே எதிர்பாராமல் எடுத்த ஒரு க்ளிக்!///
என்னாதூஊஊஊஊஊ எதிர்பாராமல் செல்ஃபிக்குள்ளேயாஆஆஆஆஆஆ.. ஹையோ ஆண்டவா நான் இப்போ படம் பார்க்கிறதோ வாணாமோ.. சே..சே... இந்த நேரம் பார்த்து நேக்கு சப்போர்ட்டுக்கும் ஆருமில்லாமல் கிடக்கே கூப்பிடவும் பயம்ம்ம்ம்ம்மாக்க் கிடக்கூஊஊஊஊ:).. கச்சான் வறுத்து வச்சுப் போட்டு நைட் நித்திரையாகிட்டனே..
வாங்க அதிரா... மனசைத் தேத்திகிட்டுதானே பார்த்தீர்கள்? உங்களை துன்புறுத்துவேனா?
நீக்குஆவ்வ்வ்வ்வ் நல்லவேளை அந்த நல்லூர்க் கந்தனுக்கு ஆடி வெள்ளிக்குக் கொழுக்கட்டை அவிச்ச்சு வச்சதால என்னை நைட் நித்திரை ஆக்கிட்டார்ர்.. இல்லை எனில் நிழல் பார்த்து அலறியிருப்பேனே மிட் நைட்டில:)) ஹா ஹா ஹா ட்றுத் சொல்வதைபோல ஸ்ரீராமின் டூப் ஐப் பார்த்திட்டோம்ம்:)) கீதா சொன்னதை வச்சு இதைப் பெயிண்ட் பண்ணி எடுத்திடலாம்:).. அஞ்சு குயிலிங் செய்து ஸ்ரீராமின் தோற்றத்தை வெளியே கொண்டு வந்திடுவீங்க இல்ல?:))..
பதிலளிநீக்குஆஆஆஆஆஆஆ கையைக் காணம்:)
நானும் இப்பூடி என்னை நானே படமெடுத்து அலறியிருக்கிறேன்... அதிலும் றூமில், ரேபிள் லாம்ப் ஐ மட்டும் போட்டு விட்டு, மேலே சீலிங்கில் தெரியும் நிழலை விதம் விதமாக எடுத்து டிலீட்டும் பண்ணிடுவேஎன், கை விரலை எடுத்தால் பெரிய பாறை சைஸ்ல வரும்.. நிழலைப் படமெடுப்பதும் ஒரு இன்ரெஸ்ட்தான்...
ட்ருத்தா... எங்கே சொல்லி இருக்கார்?
நீக்கு//அஞ்சு குயிலிங் செய்து ஸ்ரீராமின் தோற்றத்தை வெளியே கொண்டு வந்திடுவீங்க இல்ல?:))../
ஓ... அதுவேற முடியுமா?
கீதா தன்னைப் பார்க்கவில்லை, தன் டூப்பைத்தான் பார்த்தா என அடிக்கடி சொல்லி எஸ்கேப் ஆகுவாரே அதைச் சொன்னேன்:)
நீக்குசூப்பரா இருக்குது படம்... ஓஷம், ஃபண்டாஸ்ரிக்..வொண்டஃபுல்.. அமேசிங்.. எக்ஷலெண்ட்.. மாவெலஸ் ஹையோ இதுக்கு மேலயும் புகழ்ந்தால்தான் என் கோபம் தணியுமாக்கும்:) ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...
நீக்குசரியா ஏழு நன்றி இருக்கான்னு கவுண்ட் பண்ணிப் பார்த்துக்குங்க அதிரா...
// முன்னதாக இந்தக் கரை வழியாக நடந்து தேடி ஒரு கடையில் வடை சாப்பிட்டு வந்தேன்! என்னைக் காணோமே என்று தேடி, எனக்காகக் காத்திருந்து புறப்பட்டது வாகனம் //
பதிலளிநீக்குஜத்தியமா வடை வாங்கத்தான் போனீங்களோ? நேக்கு டவுட்டா வருது:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)
சாமி சத்தியமா வடை வாங்கத்தான் போனேன்! அந்த அய்யனார் மேல சத்தியம்!
நீக்குஓ ஐயனார் கோயில் அழகு.. அதன் சுற்றாடல்தான் அதை இன்னும் அழகுபடுத்துது.. இப்படித்தான் எங்களிடங்களில் வைரவர் கோயில்கள்.. ஆனா முன்பு இப்படி இருந்தவை இப்போ பெரிய கோயிலாக்கப்பட்டுவிட்டது பல.
பதிலளிநீக்குகிராம, காவல் தெய்வங்கள் கோவில் எல்லாம் இப்படித்தானே இருக்கும் அதிரா? சென்றமுறை சென்றபோது காலில் குத்தியது பாருங்கள் முட்கள்... அம்மா....டி!
நீக்குபடங்கள் எல்லாம் அருமை. ஶ்ரீராமின் நிழல்படம் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்) நன்றாக இருந்தாலும் இதில் குண்டாகத் தெரியறாரே! நேரில் பார்த்தால் அவ்வளவு குண்டா? ம்ம்ம்ம்? அதென்ன நீங்க மட்டும் தனியாப் போய் வடை சாப்பிட்டிருக்கீங்க? எல்லோருக்கும் வாங்கிட்டு வந்திருந்தால் அர்ச்சனையிலிருந்து தப்பிச்சிருக்கலாமோ?
பதிலளிநீக்குநிழலில பயங்கர தோற்றம் காட்டும் கீசாக்கா...haa haa haa
நீக்குநிழல் கொஞ்சம் அப்படி இப்படித்தானே இருக்கும் கீதா அக்கா... நான் ஒல்லியாய்த் தெரிவதாய் நினைத்தேன்?
நீக்குநிழல் மட்டும்தான் பயங்கரமாய்த் தோற்றம் காட்டுமா அதிரா?
நீக்கு// நான் ஒல்லியாய்த் தெரிவதாய் நினைத்தேன்?//
நீக்குஹா ஹா ஹா கொஞ்சம் வண்டியும் காட்டுதே:).
//நிழல் மட்டும்தான் பயங்கரமாய்த் தோற்றம் காட்டுமா அதிரா?//
நிஜம் பார்த்துப் பயப்பிடாத பலர் ..நிழல் பார்த்துப் பயப்பிட்டிருக்கினம் ஹா ஹா ஹா:)
//நிஜம் பார்த்துப் பயப்பிடாத பலர் ..நிழல் பார்த்துப் பயப்பிட்டிருக்கினம் //
நீக்குஇங்கே உல்டா ஆகிவிடும்... ஜாக்கிரதை!
எதுக்கும் மீ, கீதாவுக்கு ஐஸூ ஐஸா வைக்கப்போறேன்ன்:)) அப்போதாவது ஏதாவது கசியுதோ எனப் பார்ப்போம் ஹா ஹா ஹா:))
நீக்குகல்யாணமஹாதேவி போகும் ஆவலைத் தூண்டி விட்டது உங்க படம். எங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேஹத்துக்கும் நாங்க போயிட்டுப் படங்கள் எடுத்துப் போட்டிருந்தேன். 2011 ஜூன் மாசம்!
பதிலளிநீக்குஉங்கள் ஊரிலிருந்து பக்கம்தான் கீதா அக்கா... தாராளமாகப் போகலாம்.
நீக்குஐயனார் நன்றாக இருக்கார். குதிரை வீரனுக்கு அருகே பைரவர் இருக்காரே? அதனால் குதிரை மேல் கறுப்போ?
பதிலளிநீக்குஇந்த விவரங்கள் எல்லாம் கேஜி பிரதர்ஸ்தான் சொல்லணும் கீதாக்கா... அவங்க கம்முனு இருக்காங்க பாருங்க!
நீக்கு:)))
//பூட்டியிருந்ததா? கம்பிகளுக்குள் அலைபேசியை நுழைத்து அருள்மிகு அய்யனாரை ஒரு க்ளிக்!
பதிலளிநீக்கு//
ஓ வெளியே அழகா இருக்கு ஆனா உள்ளே பாழடைந்ததைப்போல வைத்திருக்கிறார்களே.. ஒரு அலங்காரம் கூட இல்ல்லாமல்..
ஹா ஹா ஹா குதிரை வீரருக்கு காவலுக்கு வைரவரோ? அவரின் கண்ணுக்கு ஐ ஷடோக்கூட குடுத்திருக்கே ஹா ஹா ஹா..
இல்லை அதிரா... கும்பாபிஷேகத்தை ஒட்டி சுத்தம் செய்து கொண்டே இருந்தார்கள்.
நீக்கு//அவரின் கண்ணுக்கு ஐ ஷடோக்கூட குடுத்திருக்கே//
ஆம்... அழகி அல்லது அழகர்!
அனைத்துப் படங்களும் கிராமிய மணத்தோடு ரசிக்கும்படி இருக்கின்றன.
பதிலளிநீக்குஊசிக்குறிப்பு.
அடுத்தமுறை தவறுதலாக கமெராவை மற்றபக்கம்:) திருப்பிப் பிடிச்சுப் படமெடுக்கவும்:)
நன்றி அதிரா.. ஊசிக்குறிப்பைப் படிக்க முடியவில்லை!!!!
நீக்குநீங்களும் படம் பார்த்து இப்பூடியா பண்ணினீங்க ச்ரீராம்ம்?:)
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=qJ0hNEw6EPo
இந்தப் படம் ஏற்கெனெவே பார்த்து ரசித்திருக்கிறேன் அதிரா...
நீக்குஶ்ரீராம் உங்களுக்குத் தெரியுமா இன்று international photography day. தற்செயலாக இன்று புகைப்பட பதிவு. இன்றைக்கு பார்த்து உங்கள் நிழல் படத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். என்னத்தை சொல்வது?
பதிலளிநீக்குஇன்று உலக புகைப்பட தினம் என்று நன்றாகவே தெரியும் பானு அக்கா. சென்ற வருடங்களில் இந்நாளில் ஏகப்பட்ட புகைப்படங்கள் முகநூலில் பகிர்ந்திருந்தேன்...
நீக்குஸ்ரீராம், உங்கள் நிழல் படம் காட்டி இப்படி அதிராவை பயமுறுத்தி விட்டீர்களே!
பதிலளிநீக்குஅய்யனார் கோவில் படம் நன்றாக இருக்கிறது.
மணி, மற்றும் பாத்திரங்கள் எல்லாம், நித்திய பூஜை இல்லை என்கிறதே !ஸ்வாமியும் எண்ணெய் தண்ணீர் பட்டு நாளாகி விட்டதை சொல்கிறது
வாங்க கோமதி அக்கா... அதிராவை விட துரை செல்வராஜூ ஸார் ரொம்பவே பயந்திருக்கிறார்!
நீக்குகோவில் பூஜைகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது..
ஹா ஹா ஹா கோமதி அக்கா, இன்று இரவு கனவில வந்து பயமுறுத்தி மீ அலறி கட்டிலால விழுந்து கால் கை ஃபிரக்ஷர் எனில் .. ஸ்ரீராம் எனக்கு இன்சூரன்ஸ் பே பண்ணோனும்:) இதுக்கு கோமதி அக்கா ஜாட்சிக்கு வருவீங்கதானே?:))..
நீக்குநேற்று அஞ்சு பாஆஆஆஆஆஆ.....புப் படம் அனுப்பி வேற மிரட்டி விட்டிருந்தா:)) கர்ர்ர்ர்:))
நிழல் படம் போட்டதற்கே இப்படி பயப்படறீங்களே... நிஜத்தைப் போட்டிருந்தால்? இதற்குதான் நான் நிஜப்படம் போடுவதில்லை.. உங்கள் மேல் ஒரு கருணைதான்..
நீக்குபடங்கள் நல்லாருக்கு ஸ்ரீராம்...
பதிலளிநீக்குஎல்லோரும் நான் காணலைன்னு தேடுவது ஆஹா நம்மையும் அன்புடன் தேட நட்பூக்கள் இருக்கங்கன்னு ஒரு பக்கம் மகிழ்ச்சி...மற்றோரு பக்கம் எல்லாருடனும் கும்மி அடிக்க முடியலைன்னு வரூத்தம்........எல்லா வலைத்தளங்களுக்கும் வர முடியலை...மிக மிக முக்கியமான சில பணிகள் செய்ய வேண்டியதாக இருப்பதால் மனம் அதிலேயே இருப்பதால் வாசிப்பதில் கருத்திடுவதில் சற்று சிரமம்...சோ ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் பண்ணிக்கோங்க..மற்றப்படி நான் நலம்......விரைவில் வந்து விடுகிறேன்....எனக்கும் வர முடியலையேனு...தான் மனது எப்போ பிளாக் பக்கம் வருவேன்னு இருக்கு...இதுவும் மொபைல் வழி தான் கொடுக்கிறேன்... துளசி நலம் அவர் ஏரியா பாதிப்பு இல்லை. மழையும் குறைந்திருக்கிறது. அவர் மொபைல் நெட் கொஞ்சம் சிரமம்..என்றால் மொபைல் டிஸ்பிளேயும் போய்விட்டதாம்...வேறு மொபைல் வாங்கினால் பார்ப்பார்.என்று நினைக்கிறேன்.மெயில் பார்க்க முடியவில்லையாம்..அவர் பலருக்கும் அனுப்பிய கமெண்ட் களையும் நான் பிளாக் வர முடியாத தால் பதிய முடியலை....என் கணினியும் வேலை செய்யலை...விரைவில் வருவேன்...வருவோம்...
மிக்க மிக்க நன்றி நட்பூக்கள் அனைவருக்கும்..உங்கள் அன்பிற்கும் விசாரிப்புக்கும்.நன்றிகள் பல...வார்த்தைகள் இல்லை....இதை அடிக்கும் போது கொஞ்சம் எமோஷனல்...ஆகிட்டேன்...
மீண்டும் நன்றியுடன்
கீதா
அடடே வாங்கி கீதா... ரொம்ப நாளாய் ஆளைக் காணோம்.. தேடிக்கொண்டே இருந்தோம். சீக்கிரம் பிரச்னைகளை சரிசெய்து கொண்டு வாருங்கள். அதுதான் முக்கியம்.
நீக்குஆவ்வ் கீதா தானோ இது? இல்ல டூப்போ?:) எதுக்கும் நில்லுங்கோ என் சன்கிழாசஸ் ஐக் கழட்டி வச்சிட்டுப் பார்க்கிறேன்:)).. நான் இன்னும் தேட ஆரம்பிக்கவில்லை கீதா.. ஏதோ பெரிய நெட் புரொப்ளம் ஆக இருக்கும் என நினைச்சுக் கொண்டிருந்தேன்... வெல்கம் பக்.
நீக்குமீயும் இனி இரு கிழமைக்கு காணாமல் போகலாம்:) என நினைக்கிறேன்ன்:)).
//அடடே வாங்கி கீதா..//
பாருங்கோ ஸ்ரீராமுக்கு டங்கு ஸ்லிப்பாகுது:) ஹா ஹா ஹா.
அவரைப் பார்த்து ஆச்சர்யத்தில் டங் ஸ்லிப்பாயிட்டுது! ஓ... நீங்க சன் க்ளாஸ் போட்டிருக்கீங்கன்னு சொல்லிக் காட்டறீங்களா!!
நீக்குhttps://media.giphy.com/media/mbEgX6CUS01cQ/giphy.gif
நீக்குஹா... ஹா... ஹா... ஸூப்பர்!
நீக்கு//சில பணிகள் செய்ய வேண்டியதாக இருப்பதால் மனம் அதிலேயே இருப்பதால் //
நீக்குகீதாவை பார்த்ததில் சந்தோசம் .நேற்றுதான் மெயில் அனுப்பினேன் .நல்லது பணிகளை முடிச்சிட்டு வாங்க .
நானும் இன்று கொஞ்சம் நேரம் கிடைச்சதால் வந்தேன் .
டேக் கேர் கீதா அன்ட் துளசி அண்ணா .
வாங்க ஏஞ்சல்... எல்லோரும் பிஸியாயிட்டீங்க.... நேரம் கிடைக்கும்போது வாங்க... ஆனா கண்டிப்பா வாங்க!!!!
நீக்கு:)))
நீங்கள் மட்டும் வடையை தனியாக சாப்பிட்டீர்களா?
பதிலளிநீக்குமற்றவர்களுக்கும் வடை வாங்கி தந்தீர்கள்தானே!
இல்லை கோமதி அக்கா... தங்கியிருந்த இடத்திலிருந்து கடை சற்று தூரம் அதிகம்! நான் விரும்புவதை வேறு யாரும் விரும்புவார்களா என்று வேறு தெரியாது...
நீக்குஎனவே.......
ஹிஹிஹி...
நான் மட்டும்தான்!
பணிகளை முடித்து வாருங்கள் கீதா.
பதிலளிநீக்குநீங்கள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
நல்ல சமாளிப்பு ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇல்லை, நிஜம்! நிஜம் கோமதி அக்கா நிஜம்!
நீக்குகொஞ்சம் முன்னே தெரிந்தது கீதாவின் தலையா!
பதிலளிநீக்கு@ஸ்ரீராம்: நிழலின் படங்கள் இந்த மாதிரிக் கொஞ்சம் எடுத்துவையுங்கள்.திகில் கதைகளுக்குப் போட சௌகரியமா இருக்கும்.
ஹா... ஹா... ஹா.. ஸார்... இது ஒன்றுதான் இப்போதைக்கு இருக்கிறது. அப்புறம் இன்னும் கொஞ்சம் எடுத்து வைக்கிறேன்!
நீக்குபடங்கள் எல்லாம் மிகவும் அழகு! திருவாரூரிலிருந்து எந்த ஊருக்குச் செல்லும் வழியில் இருக்கிறது கல்யாண மஹாதேவி?
பதிலளிநீக்குமனோ சாமிநாதன் மேடம்.. இந்தக் கேள்வியை கே ஜி கௌதமனுக்கு Forward செய்கிறேன்!!!!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதாங்கள் எடுத்த படங்கள் மிக அழகாய் இருக்கின்றன. ஐயனார் கோவில், குதிரை வாகனம், இயற்கை காட்சிகள், குறிப்பாக நிழலுருவம்..சூப்பர். எப்படி இந்த மாதிரி ஒர் அருமையான யோசனை உங்களுக்கு தோன்றியது? புத்தருக்கு போதித்தது போதி. தங்களுக்கு தனியாக போய் சாப்பிடும் போது போதித்தது யாரோ?
இல்லை.. ஒருவேளை தங்களுடைய புகைப்படக் கருவியே தங்களுடனிருந்து கொண்டே தங்களை பழி வாங்கி விட்டதோ?
ஹா ஹா ஹா ஹா. மொத்தத்தில் அது எங்களையும் சேர்த்தல்லவா ஏமாற்றி விட்டது..
எப்படியோ தங்கள் புகைப்படமும், சில நேரங்களில், சில மனிதர்கள் பதிலில் வெளி வந்த என் ஜென்ம வருடத்தை போல் அரசல் புரசலாக குத்து மதிப்பாக வெளியாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா சிஸ்...
நீக்கு//ப்படியோ தங்கள் புகைப்படமும், சில நேரங்களில், சில மனிதர்கள் பதிலில் வெளி வந்த என் ஜென்ம வருடத்தை போல் அரசல் புரசலாக குத்து மதிப்பாக வெளியாகி விட்டது. / /
ஹா... ஹா.. ஹா.. ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பீங்க போலவே!!
//குறிப்பாக நிழலுருவம்..சூப்பர்//
இந்த புகைப்படம் போலவே மூன்று வருடங்களுக்கு முன்னரும் எடுத்துள்ளேன். "ரசிகர்கள்" விரும்பினால் அதையும் வெளியிடுகிறேன்!!!
/ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பீங்க போலவே!! /
நீக்குஹா. ஹா. ஹா இதிலே ஃபீல் பண்ண என்ன இருக்கு? எப்படியோ சொல்லாமல் தெரிந்தால் சரிதான். ஆனால் எனக்கு சகோதர. சகோதரிதான்..
மூன்று வருடங்களுக்கு முன்பும் இதே போல் தானா? ஆனால் ரசிகர்களின் விருப்பம் ஒன்றாவது "நிழல்" நிஜமாகுமா என்பதே... ஹா ஹா. ஹா. ஹா
''நிழல் நிஜமாகுமா?"
நீக்குஹா... ஹா... ஹா... ஆகும். ஆகலாம். ஆகவேண்டுமா?!!
படங்கள் எல்லாம் அழகு ..ஆடு மேய கொஞ்சம் போல புல் இருக்கே !! சரிவில் அதான் மேய்கிறது .காய்ஞ்சதையும் சாப்பிடும் ஆடுகள்
பதிலளிநீக்கு//படங்கள் எல்லாம் அழகு .//
நீக்குநன்றி.
அருமையான படங்கள். சுவாரஸ்யமான தொகுப்பு. உங்க ஆள் நெற்றி மேல் ஏதோ பூச்சி கூடு கட்டியிருப்பது போலிருக்கிறதே.
பதிலளிநீக்குஉலகப் புகைப்படதின வாழ்த்துகள்:)!
ஹா.... ஹா... ஹா... கூடு காட்டவில்லை. பூ வைத்திருக்கிறார்கள்! நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஉங்களுக்கும் உலக புகைப்பட தின வாழ்த்துகள்.
:)
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கூடு கட்டவில்லை! :))))) இதெல்லாம் என் கண்ணிலே தான் படும். :)
நீக்குஆமாம் அக்கா.. அப்புறமும் நான் கவனிக்கவில்லை. நீங்கள் சொன்ன பிறகுதான் பார்க்கிறேன். மன்னிக்கவும். கூடு காட்டவில்லை.... ச்சே... கூடு காட்டவில்லை...
நீக்குஅடச்சே... கூடு கட்டவில்லை! கூடு கட்டவில்லை கூடு கட்டவில்லை கூடு கட்டவில்லை கூடு கட்டவில்லை கூடு கட்டவில்லை கூடு கட்டவில்லை கூடு கட்டவில்லை கூடு கட்டவில்லை கூடு கட்டவில்லை.........
படங்கள் அருமை பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அருமை. வண்ணம் ,செழிப்பு ,இயல்பாக எடுக்கப் பட்ட தெளிவு எல்லாம்
பதிலளிநீக்குநன்றக இருக்கின்றன.
நீங்க சாப்பிட்ட வடை செரித்திருக்கும் என்று நினைக்கிறேன். இத்தனை நட்புகள் வாயில் புகுந்து
.புறப்பட்டு விட்டதே
வாங்க வல்லிம்மா...
நீக்கு//இத்தனை நட்புகள் வாயில் புகுந்து
.புறப்பட்டு விட்டதே //
ஹா... ஹா... ஹா... வடை சாப்பிட நான் அவ்வளவு தூரம் சென்றிருப்பேனா என்பது நண்பர்கள் சந்தேகம்!