விசுவாசிகள்
இந்த ஒரு வாரக்காலத்தில், வீட்டின் அன்றாட பழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. வேளாவேளைக்கு சற்றும், பிற உணவுகளும் யாரும் சரியாக கொடுப்பாரில்லை. அந்த பழைய அன்பும், நேசமும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. மொத்தத்தில், சந்தோசம் காணாமல் போய், துக்கமும், வருத்தமும் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.
நாங்கள் வந்த புதிதில் இப்படியில்லை.. சிறுவயதிலேயே இவர்கள் வீட்டிற்கு நானும் என் சகோதரனும் வந்து விட்டோம். அம்மாவையும், மற்றவர்களையும் பிரிந்த ஏக்கம் மனதில் பதியாமல் எங்கள் முதலாளி எங்களை வளர்த்தார். நாங்களும் அவரை விட்டு இணை பிரியாமல், அவருக்கு உதவியாக அவர் காலால் இட்ட வேலைகளையும் செவ்வனே செய்து அவருடையே மதிப்பை பெற்றிருந்தோம். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் வீட்டில் எத்தனையோ வேலைக்காரர்கள் இருந்தாலும் நாங்கள் இருவரும் அவருடைய வலதுகையாக மெய்க்காப்பாளனாக இருந்து வந்தோம். அவரும் எங்களை மதித்து அன்புடன் அரவணைத்தபடி இருந்து வந்தார்.
நாட்கள், மாதமாகி, வருடத்துடன் இணைந்து வளர்ந்துவிட்டதில், நாங்களும் நன்றாக வளர்ந்து விட்ட நிலையில் அவருக்கு பக்கபலமாக, அன்புமாறாத மனத்துடன் பணிவிடை செய்து கொண்டிருந்தோம். அன்றொருநாள் எங்கள் முதலாளி காரில் மாற்றான் ஒருவனுடன் வந்திறங்கினார். நான் வழக்கம்போல் வாசலில் சென்று எங்கள் முதலாளியை நெருங்கினேன். என்னைப் பார்த்ததும் என் முதலாளியின் முகத்தில் அத்தனை மந்தகாசம். என்னைப் பார்த்து "டேய் பையா! இவர் யார் என்று தெரியுமா? என்றப்படி வந்தவரை "வாடா" என்ன தயக்கம்? என்று தோளில் கை போட்டப்படி உள்ளே அவரை அழைத்து வந்தார். இருவரும் அமர்ந்ததும் நான் என் முதலாளியின் அருகே சென்று நின்று கொண்டேன்.
உடனே அவர் என்னைப் பார்த்து "டேய் ஜானு! (அவர் எனக்கு வைத்த செல்ல பெயர்) இவர் என்னுடைய ஒன்று விட்ட மாமா பையன் சிவா" என்று ஆரம்பித்து அவருடனான உறவின் சுருக்கத்தை தான் சிறுவனாக இருந்த போது அவருடன் மரமேறி மாங்காய் பறித்ததிலிருந்து, மண்ணில் புரண்டு விளையாடி வளர்ந்த கதை வரை விரிவாகக் கூறினார். நான் வந்தவரை பார்த்தேன். அவர்பார்வையே சரியில்லை! எங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்பதை எங்களது முறைத்த விழிகளில் கண்டு கொண்டார் எங்கள் முதலாளி. வந்தவரும் எங்களை கண்டவுடன் சற்று பயந்தது எங்களுக்கு புரிந்தது. அதற்குள் என்முதுகை தட்டியப்படி "டேய் அம்மாவை அழைத்துவா! இவரை அறிமுகப்படுத்தலாம்" என்று என்னை திசை திருப்பினார். நான் மனதில்லாமல் மாடியேறி அம்மாவை அழைக்கச் சென்றேன்.
காலம் கரைந்தோடியது! அந்த சிவாவும் வீட்டில் ஒருவராகிவிட்டான். போதாகுறைக்கு எங்கள் முதலாளியுடன் இணைந்து வேலையிலும் பார்ட்னராகி விட்டானாம். (முதலாளியினஇ தையெல்லாம் அடிக்கடி எங்களுக்கு தெரிவிப்பார்.) இப்போது அவன் படுத்தும் பாடு அதிகமாகி விட்டது. யாரிடமும் பயமில்லாமல் வீட்டின் வேலையாட்களை அதிகாரம் செய்வதும், எஜமானியம்மாவிடம் உரிமையுடன் பேசுவதுமாக, "நானும் உங்கள் முதலாளிக்கு சமம்" என்பதுபோல் எங்களிடம் நடந்து கொள்வதும், எங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. என்ன செய்வது? எல்லாம் எங்கள் எஜமானர் கொடுத்த இடம் வேறு வழியின்றி அவனை பொறுத்துக் கொண்டோம்.
அன்று காலை என் முதலாளி மிடுக்கான உடை அணிந்து காரில் புறப்பட தயாரானார். வேலைக்காரர்கள் கூடவே இருபெட்டிகளை காரில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர் காரில் பயணிக்கும்போது அவருடன் நாங்களும் அவருக்குத் துணையாக சென்று பழக்கமானதால் அவரை தொடர்ந்து காரில் ஏற முற்பட்டோம். "டேய் ஜானு இரு! இரு! நீங்கள் வரவேண்டாம், நான் வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன். நீங்கள் வீட்டில் இருந்து அம்மாவை கவனித்து கொள்ளுங்கள். இரண்டு நாட்களில் வந்து விடுவேன். அதுவரை சிவாதான் உங்களுக்கு முதலாளி" என்ற படி எங்களை தவிர்த்து விட்டு அவர் காரில் ஏறி கிளம்பி சென்று விட்டார். வேறு வழியின்றி அவர் போனதிக்கை சற்று வெறித்துவிட்டு வீட்டினுள் சென்றோம்.
மறுநாள் சிவாவின் அதிகாரத்திற்கு செவி மடுத்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தோம். அன்று வழக்கத்திற்கு மாறாக எங்களிடம் மிகவும் அன்புடன் பேசினான். காலை, மதிய உணவுகள் எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் தடபுடலாக உணவகத்திலிருந்து அவன் செலவில் தருவித்து தந்தான். கொஞ்ச நாட்களாக அவனுக்கு கூழைகும்புடு போட்ட வீட்டு வேலைக்காரர்கள் அவனை புகழ்ந்து தள்ளியப்படி இருந்தார்கள். எங்களுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை; முதலாளியின் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம். இரவு வந்தது! இருகைகளில் பால் குடுவைகளை ஏந்தியப்படி சிவா வந்தான்! "டேய் ஜானு, பையா, என்ன இது இருவரும் இன்று சரியாகவே சாப்பிடவில்லை இந்த பாலையாவது குடியுங்கள்" என்ற படி அருகில் அமர்ந்து கொண்டான். அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் வாங்கி குடித்து வைத்தோம்!
விடிந்ததும் வீடு அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது. விடிந்ததுகூட தெரியாமல் விழுந்து கிடந்த நாங்கள், விழித்துக் கொண்டு துள்ளி எழுந்தோம். வேலைக்காரர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். முதலாளியம்மா சோகத்துடன் சோபாவில், சரிந்திருந்தார். என்ன வாயிற்று? ஒன்றும் புரியாமல் திரு திரு என்று நின்றிந்தபோது எங்கள் முதலாளி காரில் அவசரமாக வந்து இறங்கினார். நாங்கள் ஓடிச்சென்று அவரை அடைவதற்குள் அவர் ஹாலுக்குள் வந்துவிட்டார். அவரை கண்டதும் முதலாளியம்மா "ஓ"வென்று அழுதப்படி அவரை நெருங்கி அவர் கைகளைபிடித்தப்படி ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். நாங்கள் அருகில் வந்ததும் எங்களை முதலாளி கோபமாகப் பார்த்தார். அவரது அதீதமான கோபத்தை கண்டு அரண்டு விட்டோம்; ஒன்றும் புரியவில்லை.
பிறகுதான் தெரிந்தது! நேற்று இரவு சிவா வீட்டிலிருந்த பணத்தையும் நகைகளையும் அபேஸ் செய்து விட்டு கம்பி நீட்டி விட்ட விபரங்களை வேலைக்காரர்கள் சொல்லி சொல்லி மாய்ந்து போனதை கேட்டதும், எஜமானரின் சோகம் புரிந்தது. போலீஸ் வந்து அனைவரையும் விசாரித்து விட்டு போனதில், மேலும் சில தினங்கள் சோகத்துடனே கழிந்தது.
அன்று முதலாளி அவர் அறையில் வேலைக்காரர்களுடன் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் "சீ போங்கடா நன்றி கெட்ட நாய்களா!" என்று உரத்த குரலில் சத்தம் போட்டார். வேலைக்காரர்கள் முகத்தை தொங்க போட்டபடி வெளியேறினார்கள். நான் மெல்ல முதலாளியின் அறைக்குள் நுழைந்தேன். "வாடா பெரிய மனுஷா! உன்னையெல்லாம் நான் நம்பினேன் பாரு! வீட்டை பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டுதானே சென்றேன்! ஐயோ! என் பணம் போய் விட்டதே! உறவு என்று வந்தவன் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டானே!" என்று புலம்பியவர், "போடா வெளியே! இனி என் முகத்தில் விழிக்காதீர்கள் !" என்று கோபத்துடன் சீறியப்படி அருகிலிருந்த பிரம்பை எடுத்து எங்கள் முதுகில் ஓங்கி ஓர் அரை விட்டார்.
வலி தந்த வேதனையுடன் கண்கள் கலங்க வெளியே வந்தோம். "சிவா வந்தவுடனே நம் சந்தேகத்தை வெளி காட்டினோம். நம் முதலாளிதான் புரிந்து கொள்ளவில்லை. உறவு கதைகள் சொல்லி நம்மை அலட்சியபடுத்தினார். இவர் ஊரில் இல்லாத நேரத்தில் "பிளான் செய்து இவரை சிவா ஏமாற்றியதை இவருக்கு புரிய வைப்பதெப்படி? என்று தெரியவில்லையே?" என்று நான் என்னருகே நின்ற என் சகோதரனிடம் விழியால் கூறினேன். அவனும் அதை ஆமோதித்தப்படி தலையை ஆட்டினான். மூடிய அறை கதவை திறக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பார்த்தோம்.
மனமும் உடலும் சோர்வடைய கால்கள் தள்ளாடியது. "முதலாளி, கவலை வேண்டாம்! நீங்கள் இழந்த செல்வங்கள் போலீஸ் உதவியுடன் உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்துவிடும். சிவாவிற்கு, அவன் உங்களுக்கு செய்த துரோகத்திற்கு, அவனுக்கு தகுந்த தண்டனையும் கிடைக்கும். அவன் அன்று மயக்க மருந்து கலந்த பாலை எங்களுக்கு கொடுத்து குடிக்க வைத்து தைரியமாக திருடி சென்ற விபரங்களை அவன் வாயலேயே ஒப்புக் கொள்வான். அப்போதாவது நீங்கள் எங்களை புரிந்து கொள்வீர்கள்! அந்த உண்மையை இப்போது உங்களிடம் விபரமாக கூற எங்களுக்கு வாயில்லை, ஏன்னென்றால் நாங்கள் உங்களை போல் வாய்பேச முடியாத "ஆனால்" நன்றியுள்ள உண்மையான நாய்கள். எங்களால் உங்களை விட்டு பிரிந்திருக்க முடியாது. மனிதர்களை கடிந்து கொள்ளும் போது "நன்றி கெட்ட நாய்களா!" என்று சொல்லி நீங்கள் எங்களை அவமான படுத்தினாலும் எங்கள் நன்றி எந்நாளும் மாறாதது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை நாங்கள் உங்களை விட்டு விலகமாட்டோம்." என்று மனதுக்குள் எங்கள் பாஷையில் பேசிக் கொண்ட நாங்கள் அந்த அறையின் வாசலில் படுத்துக் கொண்டோம்.
ada
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதாக்கா.. நான் உண்மையிலேயே கவனிக்கவில்லை! மன்னிச்சுக்கோங்க...!
நீக்குada...
நீக்குஅட...
நான் ஏதோ பருப்பு அடை, கீரை அடை... அப்படின்னு நெனைச்சிட்டேன்.....
// நான் ஏதோ பருப்பு அடை, கீரை அடை... அப்படின்னு நெனைச்சிட்டேன்..... //
நீக்குஅடடடடடா...
ஹா.. ஹா... ஹா...
இப்போத் தான் நாலு நாட்கள் முன்னால் சிறுதானிய அடை! இப்போதைக்கு இல்லை! :)
நீக்குவாழ்க..
பதிலளிநீக்குபத்தியாய் வராமல் உரைநடைக்கவிதை பாணி?
பதிலளிநீக்குஆமாம், தவிர்க்க முடியாமல்...
நீக்குபொருபொருவென மைசூர்பாகு வராமல், முன்பதமாய் தட்டில் கொட்டினால், நான்தான் வித்தியாசமாய் இப்படிச் செய்தேன் என்று சொல்லிக்கொள்வதில்லையா? (நன்றி நெல்லைத்தமிழன்!) அது போல!
krrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குநல்ல சுவையான உதாரணம். இப்படியும் வைத்துக் கொள்ளலாம்.. "மேக்கப்" சரியில்லாத நடிகர்கள் நடித்த கதையாய் நான்தான் அனுப்பி வைத்து விட்டேன். நானே நடுவில் ஒரு தடவை "பேக்கப்" வேறு சொன்னேன். இருப்பினும்,படம் (கதை) கலைஞர்களின் முயற்சியால் வெளிவந்து விமர்சனங்களையும் பெற்று விட்டது. ஹா ஹா ஹா ஹா நன்றி. நன்றி.
அன்பின் ஸ்ரீராம் கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஇந்த பத்தி பத்தியாய் வந்திருப்பதை சரி செய்ய முடியவில்லை. கமலா சிஷ்டரும் இரண்டு மூன்று முறை வெவ்வேறு வகையில் அனுப்பினார். ஆனாலும் இப்படித்தான் வந்தது. சரி, இதுவும் ஒரு ஸ்டைல், இப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்!
நினைச்சேன், இது செல்லங்கள் பேசிக்கொள்வது என! ஆனாலும் சில செல்லங்கள் எஜமானர் இல்லாமல் வேறொருவர் கொடுக்கும் உணவைச் சாப்பிடாது. எங்க மோதி அப்படித் தான். நானோ, என் பெண்ணோ கொடுத்தால் தான் சாப்பிடும். இல்லைனா முகர்ந்து பார்த்துட்டு நகர்ந்துடுவான்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
நீக்குகதையை ரசித்தமைக்கு நன்றி.
/செல்லங்கள் எஜமானர் இல்லாமல் வேறொருவர் கொடுக்கும் உணவைச் சாப்பிடாது/
இந்த விஷயம் எனக்குத் தெரியாது சகோதரி. இரண்டாவதாக இந்த கதை நான் வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் எழுதியது. அது கதைகள் முற்றிலும் சரியாக எழுத வராத தருணங்கள். சஸ்பென்ஸாக இருக்குமென்று நினைத்து எழுதினேன். ஆனால் அனைவரும் இதை முதலிலேயே செல்லங்கள் கதை என அனுமானித்தது என் தோல்வியை சுட்டிக்காட்டி விட்டது வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாம் பழக்கும் விதம் கமலா! எங்க மோதி புதுசா யாராவது வந்தா குரைத்தால் அவங்களைத் தொட்டுக்கொண்டே மோதியிடம் ஃப்ரன்ட், ஃப்ரன்ட்! என்போம். மாறி மாறி எங்களையும் புது நபரையும் பார்த்துவிட்டு வாலைச் சுருட்டிக் கொண்டு படுப்பான். அப்படி ஏதும் நாங்க சொல்லலைனா குரைப்பு அடங்காது! விடாமல் குரைப்பான்! அதே போல் யாரேனும் கொடுத்தால் சாப்பிடக் கூடாது என்பதையும் பழக்கினோம். பின்னர் வந்த நாட்களில் கொஞ்சம் சிரமமாகப் போனதால் நான், என் கணவர், எங்க பையர் எப்போவானும் மாமியார் உணவு கொடுப்போம். பொண்ணு கல்யாணம் ஆகிப் போனதிலே இந்த மாற்றங்கள் செய்ய வேண்டியதாப் போச்சு!
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குமீள் வருகை தந்து தங்களது அனுபவங்கள் வாயிலாக நிறைய கருத்துக்களை கூறியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி. உண்மையிலேயே சொல்கிறேன்.
அனுபவங்களிலும் சரி, பொதுவான விஷயங்கள், சாஸ்திர சம்பிரதாயம்,மற்ற பிற விஷயங்களிலும் தங்களிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.பொறுமையாக எல்லாவற்றையும் நன்றாக மனதில் பதியும்படி விவரித்து அழகாக சொல்லுகிறீர்கள். இத்தனை நாட்களாக உங்களை மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்படுகிறேன். இனி தங்களின் எழுத்து வன்மைக்காக தங்கள் பதிவுகளை விடாமல் தொடர்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிரிராமுக்கு நான் வந்திருப்பது தெரியுதா இல்லையா? துரைக்கும் தெரியலையா? ஙே!!!!!!!!!!!!
பதிலளிநீக்கு//சிரிராமுக்கு//
நீக்குகிர்ர்ர்ர்ர் சொல்லமாட்டேன் போங்க.. அழுராமாய் இருப்பதற்கு சிரிராம் பெட்டர்!!
அனைவருக்கும் காலை வணக்கம். கமல்ஜியின் சாரி கமலாஜியின் கதையா? வருகிறேன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குகமல்ஜியின் கதை படித்து கருத்துக்கள் தாருங்கள். தங்கள் கருத்துரைகள் என் எழுத்துக்களை மேன்மையாக்கும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல கதை....
பதிலளிநீக்குநன்றிக்கு வித்தான செல்லங்கள்...
ஆனாலும், விதி வசத்தால் -
நன்றி கெட்ட நாய்களும் இருக்கின்றன..
வணக்கம் சகோதரரே
நீக்குநல்ல கதை என்றமைக்கு என்றுடைய மகிழ்ச்சிகள் .
/நன்றிக்கு வித்தான செல்லங்கள்...
ஆனாலும், விதி வசத்தால் -
நன்றி கெட்ட நாய்களும் இருக்கின்றன/
உண்மை.. இந்த விலங்கினை தவிர்த்து சில மனித விலங்குகளும் விதியினால் உதாரணமாகி போகின்றனர்.
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான கதை நண்பரே...!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஅருமை என்ற பாராட்டிற்கு நன்றிகள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான கதை. அன்பு சகோதரி கமலா ஹரிஹரன்
பதிலளிநீக்குசொன்ன விதம் வித்தியாசமாக இருந்தது.
செல்லங்கள் எப்பொழுதும் மாறு வதில்லை. முதலாளிகளை மறப்பதில்லை.
வாழ்த்துகள் கமலா மா. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.
வணக்கம் சகோதரி
நீக்கு/சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தது.
செல்லங்கள் எப்பொழுதும் மாறு வதில்லை. முதலாளிகளை மறப்பதில்லை/
அதனுடைய நன்றி மறவாமையை குறித்துதான் என் மனதில் தோன்றிய கதையை உருவாக்கினேன். ரசித்துப் படித்து பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடிக்கும் போதே வளர்ப்பு செல்லங்கள் என்று தெரிந்து விட்டது.
கதையை வேறு மாதிரி முடித்து இருக்கலாம். விசுவாசிகள் என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி.
தந்திரமாய் பாலை குடிக்காமல் தப்பித்து சிவாவை இரண்டும் ஒரு வழி செய்து ஓட வைத்து விசுவாசிகள் என்று எஜமானிடம் நல்ல பெயர் வாங்கி இருக்கலாம்.
அருமையாக எழுத வருகிறது கமலாவிற்கு அதனால் சொன்னேன் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
வணக்கம் சகோதரி
நீக்கு/படிக்கும் போதே வளர்ப்பு செல்லங்கள் என்று தெரிந்து விட்டது.
கதையை வேறு மாதிரி முடித்து இருக்கலாம். விசுவாசிகள் என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி./
படிக்கும் போதே தெரிந்து விட்டதா? இது பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதியது. கடைசிவரை செல்லங்கள் என தெரியாமல் இருக்குமென்று தான் நினைத்து எழுதினேன்.
உண்மைதான் சகோதரி... தங்கள் எண்ணப்படி மாற்றி அமைத்திருந்தால் பெயர் பொருத்தமாக இருந்திருக்கும். நு நினைத்ததுண்டு செய்யவில்லை.. ஸ்ரீராம் சகோதரர் என்னிடம் "கதை நீங்களும் அனுப்பலாம்" என்றவுடன் இதை எடுத்து அனுப்பி விட்டேன். அப்போது சரி ஏதும் பார்க்கவில்லை.
/தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்./
இதில் தவறாக எடுத்துக்கொள்வதற்கு என்ன இருக்கிறது சகோதரி. தங்கள் அனைவரின் கருத்துக்கள் என் எழுத்துக்களை திருத்தி மென்மேலும் செம்மையாக்குமென நான் ஆவலுடன் இன்னமும் எழுதிக் கொண்டே உள்ளேன். தங்கள் அன்பான கருத்துக்களை ஏற்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
வணக்கம் சகோதரரே
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் அருமை என்ற பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களைப் போன்ற பதிவர்களின் பாராட்டுரைகள் எனக்கு மிகவும் பெருமையை தருகிறது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மையில் இப்படித்தான் நடக்கிறது காவல் நாய்களை ஏமாற்றி அல்லது கொன்று போட்டுவிட்டு கொள்ளையடித்து போவது நடக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
நீக்குதங்கள் மீள் வருகைக்கு நன்றி.
தாங்கள் சொல்வது உண்மைதான். இது போன்ற சம்பவங்கள் சிலசமயம் நிஜ வாழ்விலும் நடக்கின்றன.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்ல கதை. கமலா ஹரிஹரன் அவர்களுக்குப் பாராட்டுகள்.
வணக்கம் சகோதரரே
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
நல்ல கதை என்று ரசித்து படித்து சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதையில் நடப்பதைப் போல் ஜெயல்லிதா திரும்பி வருவாரானால், அவரது விசுவாசிகளை ந்ன்றாக அடையாளம் காண முடியுமே.. வீட்டையும் முன்னிருந்ததுபோல நன்றாக வைத்துக்கொள்ள முடியுமே...
பதிலளிநீக்குவாழ்த்துகள் கமலா ஹரிஹரன்.
பி.கு: எதுவானாலும் தயங்காம எழுதுங்கன்னு ஶ்ரீராம் எ.பியில் சொல்லியிருப்பதால் இதை எழுதியிருக்கிறேன்.
வணக்கம் சகோதரரே
நீக்குஇயற்கை விதிகளை மீற முடியுமா? அப்படியே ஜெயலலிதா திரும்பி வந்தாலும், அவருக்காகவே வாழ்ந்த உண்மையான விசுவாசிகள் மிகுந்த சந்தோஷமடைவார்கள்.அதை பார்த்து அவரும் சந்தோஷமடையலாம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
மனதில் தோன்றிய கருத்தை எழுதலாம் தவறில்லை.என்று சுதந்திரமளித்த எ.பி யும் நம் நாட்டைப் போன்று ஒரு வல்லரசுதான். இந்த கருத்து சுதந்திரத்தை நானும் ஏற்கிறேன். தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வித்தியாசமாக கதை - அருமை...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
வித்தியாசமான கதை என ரசித்துப் படித்து பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தொடக்கத்திலேயே புரிந்து விட்டது இரண்டு பைரவர்கள்தான் கதை சொல்லி வருகின்றார்கள்.
பதிலளிநீக்குதிருடனை அவர்களுக்கு தெரிந்து இருந்தாலும் வாயில்லித ஜீவன்கள் என்ன செய்யும் ?
கதை தந்த சகோவுக்கு வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரரே
நீக்குதங்களுக்கும் தொடக்கத்திலேயே புரிந்து விட்டதா சகோ. புரியாமல் கடைசி வரை இருக்குமென்றுதான் இப்படி முயற்சித்தேன். இது வலைதளம் ஆரம்பித்த புதிதில் எழுதியது. இன்னமும் விபரமாக எழுதும் ஆற்றல் முழுதாக வரவில்லை என நினைக்கிறேன் .
இருப்பினும் ரசித்த மனதுடன் படித்து கருத்துகளும், வாழ்த்துகளும் தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களது கருத்துக்கள் என் எழுத்தை செம்மையாக்குகின்றன. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வேறுபட்ட விதத்தில் கதை...கதை கல்கண்டாய் வருகிறது கமலா அவர்களுக்கு...நன்றி கமலா.
பதிலளிநீக்குஇதை அனைவருக்கும் தந்த ஶ்ரீராம் அவர்களுக்கும் நன்றி
வணக்கம் சகோதரி
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி
வேறுபட்ட விதத்தில் கதை உள்ளதென கூறியது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
தங்களுடைய அன்பான கருத்துரைகள் என்றும் திகட்டாத கல்கண்டாகவே என் எழுத்துக்களை வளமாக வைத்திருக்கும் எனவும் நம்புகிறேன். தாங்களும் தொடர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.
இதை அனைவரும் படிக்குமாறு வாய்ப்பளித்த சகோ ஸ்ரீராம் அவர்களுக்கு நானும் மறுபடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வித்தியாசமான கதை ரசித்தேன்....அருமை..
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி
வித்தியாசமான கதையென கூறி, ரசித்துப் படித்து பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் அனைவருக்கும்
பதிலளிநீக்குகாலையிலேயே (ஏழு மணியளவில்) நான் எழுதியது எ. பி யில் வந்திருப்பதை பார்த்து விட்டேன். உடனே வந்து நன்றிகள் கூற இயலவில்லை. இன்று நாக சதுர்த்தி கொஞ்சம் அதற்கான வேலை பளுவில் (கிச்சனில்) சுற்றுகிறேன்.பலன் கொஞ்ச நேரத்தில் டைனிங் டேபிளில், அப்புறம் வயிற்றில், சுற்றுதல்தானே வாழ்க்கையே... தயை கூர்ந்து அனைவரும் மன்னிக்கவும். கருத்துரையிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கதையை வெளியிட்ட சகோ ஸ்ரீ ராம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். மதியம் வந்து அனைவருக்கும் நன்றிகள் சொல்கிறேன். தயவுடன் என் தாமதத்தை பொறுத்துக் கொள்ளவும். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எப்படியும்கதைக்கலாம் அல்லவா
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
தங்களைப் போன்றோர் என் கதைக்கு வந்து கருத்திடுவது எனக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உள்ளக் கிடக்கையை யாரிடம் எப்படிச் சொல்வது? தவித்துப் போன பைரவர்கள். கதை அழகானது. அன்புடன்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
/உள்ளக் கிடக்கையை யாரிடம் எப்படிச் சொல்வது? தவித்துப் போன பைரவர்கள். கதை அழகானது. /
கதை அழகானது என ரசித்துக்கூறி பாராட்டியமைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
தங்களைப் போன்ற அனுபவசாலிகள் என் கதைக்கு கருத்திடுவது மிகுந்த மகிழ்வை தருகிறது. நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆவ்வ்வ்வ் இன்று காலை வந்து புளொக் திறந்து கதை படித்துப் பாதியிலேயே ஒரு அவசர வேலையாக எழும்பிப் போனேனா.. இப்போதான் வர முடிஞ்சுது... ஒரு போஸ்ட் இரு நாட்கள் இருக்குமாயின் கொஞ்சம் றிலாக்ஸ் ஆக கொமெண்ட்ஸ் போடலாம், இது பாதி நாளுக்குள் பதில் போடாவிட்டால் உள்ளே போய் விடும், நமக்கும் ஆர்வம் குறைஞ்சிடும்.. சரி அது போகட்டும்.. இன்று கமலா சிஸ்டரின் ஸ்டோரி... அதெதுகு பாதியாக கட் பண்ணி இருக்கு, அதிலும் எழுத்துக்கள் சின்னன் பெரிதாக இருக்கு.. எங்கள் புளொக்கின் மூணாவது:) ஆசிரியர் ஓவர் பிசியாக இருப்பது மட்டும் புரியுது:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊ:).
பதிலளிநீக்கு//ஒரு போஸ்ட் இரு நாட்கள் இருக்குமாயின் கொஞ்சம் றிலாக்ஸ் ஆக கொமெண்ட்ஸ் போடலாம், //
நீக்குதினசரி ஒரு பதிவு போடுவதால் வாசகர்களுக்கு ஏற்படும் சிரமம் அது அதிரா... புரிகிறது.
சில இடங்களில் நடந்திருக்கும் சம்பவங்கள்தான், தொகுத்து நல்ல கோர்வையாக்கி ஒரு குட்டிக் கதையாக வெளியிட்டு விட்டீங்க.. “கெடுகுடி சொற் கேளாது”.. என ஊரில் ஒரு பழமொழி சொல்லுவினம், அப்படித்தான் இக்கதையில் வரும் முதலாளியின் நிலைமையும்... அவரின் மனதில ஏதோ ஒன்று ஆட்கொண்டு விட்டது, அதுவும் ஒரு வித போதைதானே, அதனால சிவாவை முழுமையாக நம்பி ஏமாந்து விட்டார்.
பதிலளிநீக்குஅதுக்காக யாரையும் நம்பாமல் வீட்டுக்குள் சேர்க்க முடியாது, நாம் நம்பித்தான் நடக்கோணும், நம்பிக்கைக்கு துரோகம் இழைச்சிட்டால் அவர்களை நிட்சயம் காலம் கடந்தாவது தெய்வம் கேட்கும்.
வணக்கம் அதிரா (சகோதரி)
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையை நன்கு படித்து ரசித்து கருத்திட்டிருப்பதற்கு என் மனமுவந்த மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்ற வாக்கு என்றைக்கும் பொய்யாகாது. நல்ல உதாரணத்தோடு கூறியிருக்கிறீர்கள்.
இன்றுக்குள் பதிலளிக்க வேண்டியதால் மதியத்திலிருந்து பிஸியாக உள்ளேன். தங்கள் கூற்று உண்மைதான். நானும் ஆமோதிக்கிறேன். அனைவரும் வந்து என் கதைக்கு கருத்து சொல்லியிருப்பது மகிழ்வளிக்கிறது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆஆ திரும்படியும் வேதாளம் முருங்கில ஏறின கதையாப்போச்சே என் கதை:)...
நீக்குவணக்கம் அதிரா
நீக்குஇதில் வேதா யார்? முருங்கை யார்? ஹா ஹா ஹா ஹா...பந்தியில் எல்லோருக்கும் சமமாக உணவு பறிமாற வேண்டுமல்லவா? அதன் பின் அவரவர் விருப்பம் போல் கேட்டு சாப்பிடலாம்.. ஓ கேவா...
மீள் வருகைக்கு நன்றி.
கதை நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையை படித்தமைக்கும், ரசித்து நன்றாக இருப்பதென பாராட்டியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வித்தியாசமாக முயன்றிருக்கிறீர்கள். மேலும் எழுத எழுத மொழியும், யுக்தியும் வசப்படும்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/மேலும் எழுத எழுத மொழியும், யுக்தியும் வசப்படும்./
சிறந்த ஆலோசனைக்கு என் பணிவான நன்றிகள். தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என் எழுத்தார்வத்தை மிகவும் சிறப்பாகும் என நம்புகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல கதை. இந்தக் கதையை வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்கு