வியாழன், 30 ஆகஸ்ட், 2018

ஆஞ்சநேயரும் ஆயிரம் ரூபாயும்



நன்றி  :  இணையம்.

2013  ஆகஸ்ட் 17 இல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து.  தளத்திலும் பகிர்ந்திருக்கலாம்.  சரியாய் நினைவில்லை!  சமீப காலமாய் மீண்டும் தொடர்ந்து சனிக்கிழமைகளில் நங்கநல்லூர் பெரிய ஆஞ்சியைப் பார்த்து வருகிறோம்.  


நன்றி : இணையம்.

காலையே சென்று விடுவதால் பொங்கல்தான் கிடைக்கிறது.  புளியோதரைக்கு ஏங்குகிறது மனம்!  ஒரு முறை புளியோதரை அண்டா அண்டாவாகக் கொண்டு வந்து வைக்க, சரி..  இன்று நமக்கு புளியோதரை என்று பார்த்தால் பொங்கல் காலியாக இன்னும் ஆயிரம் பக்தர்கள் வரவேண்டும் என்கிற நிலைமையில் பொங்கல் இருப்பு இருந்தது!  

கடமையே கண்ணாக தொன்னையில் பொங்கல் வழித்துத் தருபவரிடம் ஒருமுறை வெட்கத்தையும், தயக்கத்தையும் விட்டு  "புளியோதரை எல்லாம் கொடுக்க மாட்டீர்களா?"  என்று கேட்டுவிட்டேன்!  நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை அவர்...   ச்சே...

இங்கு சென்று வந்து கொண்டிருந்த அனுபவத்தில்தான் கோவிலில் ஆயிரம் ரூபாய் தொலைக்கும் கதை உருவானது!!

ஆயிரம் ரூபாய் என்றதும் ஞாபகம் வருகிறது.  நேற்று மதியம் பொதிகையில் ஆயிரம் ரூபாய் படம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  ஒல்லியான ராகினியை விட்டு விட்டு குண்டான சாவித்ரி பின்னால் அலைந்து கொண்டிருந்தார் ஜெமினி...  முடிவு தெரியவில்லை.  நடுவில் செய்திகள் வந்தது...  தொடர்ந்து பார்க்கவில்லை!  இதுதான் ஆயிரம் ரூபாய் என்றால் மாலை அம்மா பார்த்துக்கொண்டிருந்த 'குலவிளக்கு' படத்திலும் சரோஜாதேவிக்கு ஆயிரம் ரூபாய் பிரச்னை வருகிறது!

ஆஞ்சி தரிசனம் ஒருபுறம்..   நாலுமுழ நாக்குக்கு வாராவாரம் வகைவகையான அனுபவம்!  ஆஞ்சி கோவில் சென்று வரும் வழியில் கும்பகோணம் அய்யர் மெஸ், அன்னப்ராசனம் என்று விதம் விதமான கடைகளில் சுவை பார்க்கிறோம்!

கும்பகோணம் மாமி மெஸ்ஸில் பரிமாறுபவர் டென்ஷனாகவே இருந்தார்.  இட்லி சொல்லி, 'வேண்டாம் பூரி கொண்டு வாருங்கள்' என்றால் "சொல்லி விட்டு மாற்றி மாற்றி ஆர்டர் செய்யக் கூடாது" என்றார்.  அடுத்தது என்ன என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவருக்குப் பொறுமை போய்விடும்!




இனி பழைய ஆஞ்சி பகிர்வு...   

நன்றி : இணையம்.


அரசாங்கம் கையகப் படுத்திய ஆஞ்சநேயரை ( ! )இன்று குடும்பத்துடன் தரிசனம் செய்தோம்!
மாட்டிய நாளில், இருபத்திரண்டு ஆண்டுகளாக ஒருவரிடம் ஒருவர் மாட்டிக் கொண்டிருக்கும் கஷ்டங்களை அவரிடம் புலம்பி விட்டு வந்தோம்! ஆஞ்ஜி புன்னகையுடன் கை கூப்பியவண்ணம் எங்களைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்! உண்டியல் வைத்திருப்பது புதிதாக இருந்தது என்று நினைக்கிறேன். "பணத்தை உண்டியலில் போடவும்...."   படிக்கும்போதே 'உண்டியலில்' என்ற வார்த்தையில் அழுத்தம் தொனித்தது!
கோதண்டராமர் சன்னதியில் இருந்த பட்டர் ஏதோ பூஜை செய்வது போலவே ஆயத்தங்கள் செய்கிறாரே என்று நின்ற கூட்டத்துடன் நாங்களும் நின்றோம். வெளியில் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் பார்த்த பட்டாச்சாரியார் நிலைமையை உணர்ந்து உடனே உள் சன்னதியிலிருந்து வெளி சன்னதிக்கு வந்து ஓரமாக சும்மா நின்று,'தான் எதுவும் செய்யப் போவதில்லை' என்று குறிப்பால் உணர்த்தினார்! நகர்ந்தோம். இந்த பட்டர்கள் எல்லாம் நியூ அப்பாய்ண்ட்மெண்ட்டா, பழைய ஆட்களேதானா என்று கோவிலின் ரெகுலர் பக்தர்கள்தான் சொல்ல வேண்டும்.
ஆஞ்ஜி உம்மாச்சி பிரம்மாண்டமாய் நின்று அருள் பாலித்துக் கொண்டிருந்தார். வலதுபக்கத் தூணில் பெரிய ஆஞ்ஜி உம்மாச்சி படம் மாட்டப் பட்டிருந்தது. அதில் பக்தர்கள் தங்கள் கையால் துளசி வைத்து பயனடைந்தார்கள். சுமார் ஒரு 23 வயது பச்சை சுடிதார் பெண்ணொருத்தி கண்களில் நீர் வடிய பரபரப்பாக சன்னிதியைச் சுற்றிக் கொண்டிருந்ததை இளையவன் சுட்டிக் காட்டினான்.
"அவள் துன்பத்துக்குக் காரணம் அவளேதான் காரணமாக இருக்கும். ஆனால் அதை அறியாமல் சுற்றுகிறாள்" என்றேன்.
"எப்படிச் சொல்றே?"
"படபடப்பாக இருக்கிறாள். பொறுமையாகப் பிரகாரத்தைச் சுற்றாமல் அவசரமாக ஒன் பாத்ரூம் வந்ததும் ஓடுவது போல வேகமாகச் சுற்றுகிறாள். அவள் வாய் அசைவதைப் பார்த்தால் மந்திரம் சொல்வது போல இல்லை.."
"அது எப்படிச் சொல்றே?"
"ஒரு யூகம்தான்.."
"சாமியைப் பாருங்க... " என்று அ(இ)டித்து விட்டு 'அடிப்ரதட்சணம்' செய்தாள் சகதர்மிணி!
வேணுகோபால ஸ்வாமி சன்னதியில் தூரத்தில் கற்பூரத் தட்டு வைக்கப் பட்டிருந்தது. தட்டில் சில்லறைகள் தென்பட்டன. இங்கும் பட்டர் செல்ஃப் சர்வீஸ் கவுண்டரில் நிற்கும் சேல்ஸ்மேன் போல ஓரமாக. அசுவாரஸ்யமாக நின்று கொண்டிருந்தார்.
அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னும் பொங்கல் அதே தரத்தில் இருந்தது ஆச்சர்யம். புளியோதரை இன்னும் நன்றாக இருக்குமாம். எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சக பக்தர் சொன்னார்.
கோவில் காவலர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு 'யார் என்ன தப்பு செய்கிறார்கள்' என்று ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
செருப்பு வைக்குமிடம் காணாமல் போயிருந்தது. அதேபோல பொங்கல் சாப்பிட்டு கைகழுவ, பக்கவாட்டில், கோவிலைச் சேர்ந்த திருமண மண்டபம் தாண்டி நடக்க வைத்திருக்கிறார்கள்.
அங்கு ஒரு வெளியாள் கைகழுவக் காத்திருந்தவர்களை லட்சியம் செய்யாமல் நான்கு 2 லிட்டர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
எதிர்த்த கடையில் வாழைக்காய் காரச் சிப்ஸும், பச்சை மிளகாய் ஊறுகாயும் வாங்கிக் கொண்டு திரும்பினோம்.


========================================================================================================

சில படங்களில் சில காட்சிகளை மறக்க முடியாது.  அப்படி சில திரைப்படங்களின் சில காட்சிகளைப் பற்றி முகநூலில் ஒருசமயம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.   அதில் ஒன்று.  இதே படத்தில் தனக்கு அப்பா சிவாஜி கொடுத்த ப்ளாங்க் செக்கை எடுத்துக் கொண்டு மகன் சிவாஜி அப்பாவைச் சந்திக்கும் இடமும்...



Image result for deivamagan sivaji images

=======================================================================================================

அனுஷ்ஷோ , தமன்ஸோ, ஹன்ஸியோ...   உங்களுக்குத் பிடித்த முகத்தை இங்கு சேர்த்துக் கொள்ளுங்களேன்....!!

ஓகே..   அடுத்த வாரம் பார்ப்போம்...

================================================================

73 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. எங்கள் ப்ளாக் நண்பர்களே உங்கள் பதிவுகளை நான் போன் மூலம் படித்து இருக்கிறேன். ஆனால், போன் மூலம் டைப் பண்ணி கருத்து சொல்வது கடினம். அதனால் இது வரை செய்தது இல்லை. இப்போது நான் ஒரு புதிய லேப் டாப் வாங்கி இருக்கிறேன் அதன் மூலம் என் உயிர் தமிழா https://enuyirthamizha.blogspot.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்து ஆதரவு தாருங்கள், நன்றி

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் ,கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  3. வியாழக்கிழமை அதுவுமாக
    ஆஞ்சநேய தரிசனம்....

    மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... ஆஞ்சநேய தரிசனம்.... இடுகையைப் படித்துவிட்டு சனிக்கிழமை காலை அங்கு சென்றால் உங்களைப் பார்க்கலாமோ என நினைத்தால்... இது பழைய செய்தி.. இப்போல்லாம் பழைய பதிவை நீங்களும் மீண்டும் பதிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? இருந்தாலும் நான் படிக்காத சம்பவம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய செய்தியில் சொல்லி இருப்பது எங்கள் திருமண நாளுக்கு சென்ற நிகழ்வு. நீல எழுத்தில் சொல்லி இருப்பது நிகழ்காலம்! ஆயினும் இரண்டு மூன்று வாரங்களாய் விட்டுப்போய் விட்டது. எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் ஊர் சென்று விட்டார்!!! அது சரி நெல்லை, கோவிலுக்கு வந்துதான் சந்திக்க வேண்டுமா என்ன?!!

      நீக்கு
    2. //இப்போல்லாம் பழைய பதிவை நீங்களும் மீண்டும் பதிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?//

      மேலும் நெல்லை... முகநூலிலிருந்து நான் பழசை எடுத்துப் போடுவது வியாழ வழக்கம்தானே? இதுவும் முகநூலில் பகிர்ந்திருந்ததுதான். நீளமாய் இருந்ததால் ஸ்க்ரீன் ஷாட் சாத்தியமில்லை. எனவே டெக்ஸ்ட் காபி!!!

      நீக்கு
    3. //கோவிலுக்கு வந்துதான் சந்திக்க வேண்டுமா என்ன?// - இன்னும் யாரையும் சந்திக்கும் வேளை வரவில்லை. கீதா ரங்கன் என்னைப் பார்த்தேன் என்று சொன்னார் (உடான்ஸ்?). அதுக்காக காலையில் சாலையில் போகும் பெண்களெல்லாம் கீதா ரங்கனா என்று பார்க்கமுடியுமா என்ன? ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தால் மட்டும் யார் ஸ்ரீராம் என்று தெரியவா போகிறது? நிழல் படத்தை வைத்துக்கொண்டு தேடினால், 'அதுக்கு நீங்க குணசீலம், ஏர்வாடி இல்ல போகணும், ஆஞ்சநேயர் இதை எப்படி சரி பண்ணுவார்' என்று பார்க்கிறவர் யாரேனும் கேட்கக்கூடாதே.

      நீக்கு
    4. ஸ்ரீராம், I am firm believer of destiny. அது இல்லாமல் ஒருவரை இந்த உலகில் இன்னொருவர் சந்திக்கவோ அல்லது பார்க்கவோ இயலாது.

      நீக்கு
    5. நெல்லை அவர்களே

      Please don't misunderstand me for writing this.

      you are your own destiny .
      your are the authour of your own troubles.உன் வாழ்வும் தாழ்வும் உன் கையிலே என்று பல் நூல்களில் படித்திருக்கிறேன்.

      ஆனால் நாம் அந்த அளவிற்கு micro level வரை ஆராய்ந்து பார்ப்பதில்லை

      Hypnotism கற்றவர்கள் இந்த உண்மையை நிரூபித்திருக்கிறார்கள்.

      whenever unfortumate things happens in our life our mind starts believing/thinking that this is our destiny.

      But upanishads strongly advise us to get out of the situation and to start thinking about the next option to get out of the situation. to continue the journey of life.

      I successfully applied this advice in many cases and came out of the most unpleasant /unbearable situations in my life.

      நீக்கு
    6. பட்டாபிராமன் சார்... உங்கள் கருத்து ஏற்கத்தக்கது. முயற்சி திருவினையாக்கும், முயற்சி இன்மை இன்மை புகுத்திவிடும். எண்ணம்போல் வாழ்வு. நேர்மறை எண்ணங்கள் நேர்மறை எண்ணங்களை ஈர்க்கின்றன. வாழ்வும் தாழ்வும் நம் கையிலே என்பது உண்மைதான் (தீதும் நன்றும் பிறர் தர வாரா). நம் முயற்சிக்குப் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் அதற்கான வேளை வரவில்லை என்று நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.

      //upanishads strongly advise us // - சில சமயங்களில் பாதையை நாம் அறிவதில்லை (அல்லது புலப்படுவதில்லை) அல்லவா? அதற்கும் நமக்கு, 'நமக்கு மேலான சக்தி'யின் துணை தேவையிருக்கிறது அல்லவா (அல்லது தெய்வம் மனுஷ்ய ரூபே என்பதற்கு ஏற்ப நமக்கு ஆலோசனை/வழிகாட்ட ஒருவர் தேவைப்படுகிறது அல்லவா?)

      நான் பொதுவா, ஒருவரை நம் வாழ்வில் சந்திக்கிறோம், தொடர்பு கொள்கிறோம் என்றால் அதற்கு பூர்வ ஜென்மத் தொடர்போ அல்லது வினையோ இருக்கவேண்டும் என்று நம்புவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

      உங்கள் விளக்கம் இண்டெரெஸ்டிங். எனக்கு அது பல எண்ணங்களை உண்டாக்குகிறது. நன்றி.

      நீக்கு
  5. பிடித்த முகம் என்றால் ஆரவல்லி நாயகி குமுதவர்த்தினியை சேர்க்கலாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. T.R.ராஜகுமாரியை விட்டுட்டீங்களே!...

      நீக்கு
    2. சேர்க்கக் கூடாது என்று நான் சொல்லமாட்டேன் கில்லர்ஜி!

      நீக்கு
    3. துரை ஸார்... இன்று டி ஆர் ராஜகுமாரிதான் முதலில் யோசித்தேன்!

      நீக்கு
  6. காலை வணக்கம்.

    ஆஞ்சி அனுபவங்கள் - சிறப்பு. கோவில்கள் பலவும் கமர்சியல் மயம்... TTD நடத்தும் பாலாஜி கோவில் வீட்டின் அருகிலேயே என்றாலும் அங்கே பூஜை நேரத்தில் செல்ல முடிவதில்லை. பிரசாதம் நன்றாக இருக்கும் என்றாலும் காரம் அதிகம்! அதனால் தவிர்க்க வேண்டியிருக்கிறது - குறிப்பாக புளியோதரை. இரவு நேரம் கோவில் அடைக்கும் நேரம் தான் செல்வது - பழக்கலவை பிரசாதம்! அது ஓகே!

    பிடித்த முகம் சேர்த்துக் கொள்ள வசதி - :))) அ/த படங்கள் உங்களுக்கே அலுத்து விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்டவன் முன் அனைவரும் சமம் -பழமொழி.
      அரசு முன் அனைவரும் சமம்-ஆண்டவன் உட்பட -புதுமொழி

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். ஏன் எல்லோரும் ஆஞ்சி என்று கூப்பிடுகிறீர்கள். ராம நேயன்,அனுமன். எல்லாமே சின்னப் பெயர் தானே.

      இவர் வந்த புதிதில் ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் விலகவில்லை.
      பின்புலத்தில் ஒலிதுக் கொண்டிருக்கும் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் மனதில் ஓடுகிறது.
      ஓஅரசு கட்டுப் பாடா.
      சென்னை வந்தல் ஹலோ சொல்ல வேண்டிய இடங்களில் இவரும் ஒருவர்.
      தெய்வ மகன் பிடித்த படம். கொஞ்சம் அழுகை. நடிப்பு பிரமாதம்.

      நீக்கு
    3. ஆயிரம் ரூபாய்ப் படமே ட்ராஜிக் முடிவு.

      ஜெமினி,சாவித்திரியின் தங்கை எல்லாம்
      இறந்துவிடுவார்கள். ஸாவித்திரி மீண்டும் ஆனாக்கா அந்த மடம்
      பாட ஆரம்பித்து விடுவார்.

      நீக்கு
    4. ப்ரசாதத்தில் அதிக காரமா? ஆச்சர்யம் வெங்கட்! அனுஷ் எனக்கு அலுத்து விட்டது என்று யார் சொன்னார்கள்?!!!

      நீக்கு
    5. வாங்க பட்டாபிராமன் ஸார்... உங்கள் வருகை ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.

      நீக்கு
    6. வாங்க வல்லிம்மா... குழந்தைகளிடம் ஆஞ்சி ஆஞ்சி என்று சொல்லி அதுவே பழகி விட்டது - உம்மாச்சி போல! இன்னமும் ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராம ஓடுகிறது! அரசு கட்டுப்பாடு செய்தி பழசு. அஞ்சு வருஷம் பழசு!

      நீக்கு
    7. வல்லிம்மா.. ஓ.. ஆயிரம் ரூபாய் சோக முடிவா? ராகினி ஜெமினியை வைத்துக்கொண்டு ஹார்மோனியம் வாசித்துப் பாடும் இ சுசீலா பாடல் இனிமை.

      நீக்கு
    8. ஆஞ்சி, ரங்கு எல்லாம் செல்லப் பெயர்கள் வல்லி. இதில் உள்ள நெருக்கம் ஒரிஜினல் பெயரைச் சொல்லும்போது வருவதில்லைனு எனக்குத் தோணும். :)))))

      நீக்கு
  7. வியாழன் காலை ஆஞ்சநேயர் தரிசனம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி உமையாள் காயத்ரி... நன்றி.

      நீக்கு
    2. நான் அவ்வப்போது வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறேன். நெல்லை தமிழன் அவர்களை தவிர யாருமென்னை கண்டுகொள்வது கிடையாது.

      நீக்கு
    3. பட்டாபிராமன் ஸார்.. ஆனந்தம் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டிருப்பது நீங்கள்தான் என்று நினைக்கிறேன். நெல்லைத்தமிழன் பதிவுக்கும் வேறொரு பதிவுக்கும் நீங்கள் வந்து பின்னூட்டம் இட்டது தெரியாமல் இருக்குமா எனக்கு? என் பதிவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறீர்கள் (நீண்ட நாட்களுக்குப் பின்) என்று சொல்ல வந்தேன்.

      நீக்கு
    4. உங்கள் ஊகம் சரி. ஆனந்தத்தின் மறு வடிவம் பட்டாபிராமன்.
      அது என்னுடைய மற்றொரு இணைய அஞ்சல் முகவரி.

      நீக்கு
  8. நீலமென்றால் நிகழ்காலம், கருப்பென்றால் கடந்தகாலம் என்று கலர் கோடிங் செய்து அறிவித்துவிடுவது நல்லது. மேற்கொண்டு யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்!

    //..இருபத்திரண்டு ஆண்டுகளாக ஒருவரிடம் ஒருவர் மாட்டிக் கொண்டிருக்கும் கஷ்டங்களை அவரிடம்..//
    இருபத்திரண்டையும் ஒரே சமயத்தில் கொட்டினால் அவரும்தான் என்ன செய்வார்?

    //.."சாமியைப் பாருங்க... " என்று அ(இ)டித்து விட்டு 'அடிப்ரதட்சணம்' செய்தாள் சகதர்மிணி!//
    கணவனை அடித்துவிட்டு செய்வதுதான் அடிப்ரதட்சணம் என்று தெரிந்துகொள்ளவைத்த பயனுள்ள பதிவு!

    கடைசியில், பிடித்த படத்தை ஒட்டிக்கொள்ளவா அந்த இடம்? அதைப்படிக்காமல் படத்தைப்பார்த்ததும் அடுத்தவாரம் பேய்க்கதையோ என நினைத்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்... நீலக்கருப்பு வித்தியாசம் சொல்லாமலே புரியும் என்று நினைத்தேன்! பேய்க்கதை எழுதி கூட நாளாச்சு!

      நீக்கு
  9. பதில்கள்
    1. நானும் அப்போ பார்த்ததைப் பகிர்ந்ததில்தான் எழுதி மேலே கொஞ்சம் நிகழ்காலத்தையும் சேர்த்திருக்கிறேன் சகோதரி ராஜி!

      நீக்கு
  10. அதென்னவோ தெரியவில்லை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் என்றாலே எல்லோருக்கும் பிரசாதம்தான் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக பொங்கல். நான் இரண்டொரு முறை சென்றிருக்கிறேன், பிரசாதம் கிடைத்ததா என்று ஞாபகம் இல்லை.
    இதைப் படித்தவுடன் நங்கநல்லூர் கோவில் பிரசாத வினியோகம் பற்றி காஞ்சி மஹா பெரியவர் அனுபவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாயங்காலத்தில் போனால் புளியோதரை கிடைக்கும் என்று சொல்கிறார்கள் பானு அக்கா. உங்கள் பதிவும் படித்தேன். சுவாரஸ்யம். பிரசாதமும் சுவாரஸ்யம்தானே!

      நீக்கு
  11. தெய்வ மகன் படம் முழுமையாக பார்த்ததில்லை. அதில் கடைசி பையன்,(ஜெயலலிதாவின் ஜோடி) நடிப்பு ஓவர் ஆக்ட்டிங் டு தி கோர் என்று தோன்றும். அதே போல கௌரவம் படமும் எனக்கு பிடிக்காது(கீதா அக்கா சந்தோஷமா?). தெய்வ மகன் படத்தில் வரும் 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா..'all time favourite.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெய்வமகன் படத்தில் மூன்றாவது வேடத்தை இயக்குனர் ஸ்ரீதரை ஜெராக்ஸ் செய்திருந்தாராம் சிவாஜி. படித்திருக்கிறேன். ரஷ்யத் திரைபபட விழாவுக்கு அப்போது அனுப்பப்பட்ட படம் இது என்றும் படித்த ஞாபகம்.

      நீக்கு
    2. //ஸ்ரீதரை ஜெராக்ஸ் செய்திருந்தாராம் சிவாஜி. படித்திருக்கிறேன்.// அடப்பாவமே! இதே போல வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் நாடக இயக்குனராக நடித்த பிரதாப் போத்தன், தான் கே.பாலசந்தரை இமிடேட் செய்ததாக கூறியிருந்தார்.

      நீக்கு
    3. ஜிவாஜி எல்லாப் படத்திலுமே ஓவர் ஆக்டிங் என்பது தானே நான் சொல்லுவதும், பானுமதி! இஃகி, இஃகி, இப்போவானும் ஒத்துக்கிட்டீங்களே!

      நீக்கு
  12. உங்கள் கல்யாண நாளுக்கு நங்கநல்லூர் அனுமனை பார்த்த விபரம் பதிவு போட்டது நினைவு இருக்கு.
    ஒரு அம்மா வேக வேகமாய் சுற்றியதை நீங்கள் விமர்சனம் செய்த முறை பற்றி ஜீவி சாரும் ஏன் இப்படி விமர்சனம் என்று கேட்டதும் நினைவில் இருக்கிறது. அப்போதும் புளியோதரை கிடைக்கவில்லை உங்களுக்கு தேங்காய் சாதம் என்று நினைக்கிறேன்.

    ஆஹா! நீங்கள் பழைய பகிர்வை கீழே கொடுத்து இருக்கிறீர்கள்.
    அம்மா சுற்றுவதை நான் சொல்லி இருக்கிறேன் இங்கு பொங்கல் என்று போட்டு இருக்கு நான் தேங்காய் சாதம் என்கிறேன்.

    என் கணவருக்கும் புளியோதரை தான் பிடிக்கும் இவர்களுக்கு சர்க்கரை பொங்கல் கிடைக்கும், அப்போது சொல்வார்கள் "ஒரு புளியோதரை கொடுக்க கூடாதா?"
    இவர்களுக்கு புளியோதரை செய்வதில் என்ன கஷ்டம் ? என்று கேட்பார்கள்.


    கள்ளநோட்டு ஆயிரம் ரூபாய் படுத்தும் பாடு, சாவித்திரி அதை தன் குடிசையில் ஒரு டப்பாவில் போட்டு புதைத்து வைத்து இருப்பார், புயல் மழை, வெள்ளத்தில் அதை தோண்டி எடுப்பதில் இருக்கும் கவனத்தில் தங்கை அழைப்பதை கேட்க மாட்டார்.
    தங்கை இறந்து விடுவார்.
    பணம், படுத்தும் பாடு தான் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.. நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு! அப்போ எழுதியதை இபபவும் நினைவு வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் சொவதைப் பார்த்தால் நல்லவேளை ஆயிரம் ரூபாய்ப் பட முடிவை நான் பார்க்கவில்லை என்று தெரிகிறது!

      நீக்கு
  13. ரசித்த காட்சி சிறு வயதில் அந்த படம் பார்த்த போது அழுகையாக இருந்தது.
    சின்ன வயது சிவாஜியாக நடித்த பையனும் நன்றாக நடிப்பான்.
    முகத்தை மறைத்த அனுஷ்கா.
    அவர் படம்தான் அது. முகம் தெரியாத முகத்தைப்பார்த்தால் அவர்தான் வந்து ஒட்டிக் கொள்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் படம்தான் அது. முகம் தெரியாத முகத்தைப்பார்த்தால் அவர்தான் வந்து ஒட்டிக் கொள்கிறார்.//

      இல்லை கோமதி க்கா.. இது வெறும் முகம்! ஆனால் அனுஷ் நம் மனதில் நின்று விட்டார் பாருங்கள்... அதுதான் அவர் முகமாகவே தெரிகிறது!

      நீக்கு
  14. குலவிளக்கு படம் மகா கொடுமை.கடைசியில் சரோஜாதேவி வளர்த்த செல்லம் மட்டுமே உடன் இருக்கும் என்று நினைக்கிறேன். சோகம் சோகம் .
    ஒரு பாடல் நினைவு இருக்கு " பூ பூவாய் பூத்திற்கு ஆயிரம் பூ பூமியிலே பூவிலே சிறந்த பூ என்ன பூ" அன்பு என்பார் கடைசியில் அவரை எந்த அன்பும் காப்பாற்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை....
      கடைசியில் அந்த செல்லம் மட்டுமே. மறுபடியும் அந்தப் படத்தைப் பார்க்க முடியாது...

      T.M.S. பாடல் ஒன்று மனதைப் பிழியும்...

      தாயற்ற பிள்ளைக்கு
      தாயாக நின்று நீ
      மார்பில் அணைத்தாயம்மா...
      உந்தன் தோளில் வளர்த்தாயம்மா..

      இன்று நோயுற்ற நேரத்தில்
      நாய் கட்டும் ஓரத்தில்
      பாய் இட்டு வைத்தானம்மா..
      அதையும் வாய் விட்டுச்
      சொன்னானம்மா!...

      குடும்பத்தின் தூண்களை
      இப்படித் தான் சொந்த பந்தம் எனும்
      கறையான்கள் அரித்து விடுகின்றன...

      நீக்கு
    2. இந்த பாடலும் சரோஜாதேவி இருமி கொண்டு இருப்பதும் நினைவுக்கு வந்து விட்டது. தியாகம் , விட்டுக் கொடுத்தல், சகிப்புதன்மை எல்லாம் வீண் என்று காட்டும் கதை.

      நீக்கு
    3. குலவிளக்கு படம் இரண்டு மூன்று காட்சிகள் மட்டும் கண்ணில் பட்டது. நீங்கள் சொல்லும் பாடல்காட்சி பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    4. தாயற்ற பிள்ளைக்கு பாடல் இதில்தானா துரை ஸார்... கேட்டு நாளாச்சு...

      நீக்கு
    5. அட, குலவிளக்கு படமும் பார்த்தது தான். ஜரோஜா தேவி கல்யாணம் ஆனப்புறமா நடிக்க வந்த படங்களில் ஒன்றோ? ரொம்ப ஓவர் உருக்கம். இஃகி, இஃகி

      நீக்கு
  15. அன்பு செலுத்திய நாய் இருந்தது. சிறந்த பூ அன்புதான்.

    பதிலளிநீக்கு
  16. சுவாரஸ்யமான அனுபவங்களின் தொகுப்பு. அருமை.

    /புளியோதரை இன்னும் நன்றாக இருக்குமாம்./ அப்போதிலிருந்தே ஏக்கம் போலிருக்கிறது:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளியோதரை என்றல் ஒரு ஆவல்தான்! நன்றி ராமலக்ஷ்மி!

      நீக்கு
    2. //புளியோதரை என்றல் ஒரு ஆவல்தான்! ஶ்ரீராம், ம்ம்ம்ம், இங்கே நேத்திக்குப் புளியோதரையும் கல்கண்டு சர்க்கரைப் பொங்கலும் சிரிப்பாய்ச் சிரித்தது ராத்திரி வரைக்கும். :)

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    நலமா? ஆஞ்சநேயர் படங்கள் நன்றாக உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் கோவிலில் புளியோதரை கிடைக்கும். வீட்டில் செய்வதை விட கோவில் புளியோதரை எப்பவுமே டேஸ்ட் அதிகம். பி(றர்)ர சாதம் என்பதாலோ என்னவோ..
    மைலாப்பூரில் இருக்கும் போது அருகிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு வியாழன் தோறும் செல்வோம். அப்போது அங்கும் இந்த மாதிரி வாரந்தோறும் புளியோதரை தருவார்கள்.

    சிவாஜியின் நடிப்பு அந்த படத்தில் சில இடங்களில் நன்றாக இருக்கும்.

    நீங்கள் அனுஷ்கா படத்தை போட்டு பார்த்து பழகிய எங்கள் விழிகள் நீங்களே சாய்ஸ் தந்தும் கூட வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்க ஒத்துக் கொள்ள மாட்டேனென்று பிடிவாதம் செய்கிறது. என்ன செய்வது? வழக்கம் போல் அனுஷ்காவைதான் கண்டு ரசித்தோம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா சிஸ்...

      ஒவ்வொரு கோவிலில் ஒவ்வொரு ருசியில் இருக்கும் புளியோதரை... அதனால் ஆவல். அவ்வளவுதான்!

      மைலாப்பூர் பாபா கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். என் நேரம்... அங்கும் எனக்கு வெண் பொங்கல்தான் கிடைக்கும்!

      ஆப்டிகல் இல்லுஷன் போல எல்லார் கண்ணுக்கும் அனுஷ் தெரிந்திருக்கிறார்...!

      நன்றி கமலா சிஸ்...!

      நீக்கு
  18. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் மிக பிரபலம் அருள் நிறைய கிடைக்கட்டும்

    பதிலளிநீக்கு
  19. ஆஞ்சநேயர் ஆசியுடன் எழுதப்பட்ட பதிவு சுவாரஸ்யம். நாமக்கல்லில் ஆஞ்சநேயர் வடைமாலை வடையைப் பார்த்து ஆசைப்பட்டதுண்டு சுவைத்ததும் உண்டு. அடுத்த முறை இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்கையில் தங்களுக்கு புளியோதரையும் ஆஞ்சநேயர் அருளும் கிடைக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரி... தப்பா எடுத்துக்காதீங்க முத்துசாமி சார்.... உருவம் பெரியதாக இருப்பதால் அங்கு சாற்றப்படும் வடை, பிரசாதம் என்ற அளவில்தான் கொள்ளத்தக்கது. கீழ்த்திருப்பதியில் (அல்லது மேல் திருப்பதியில், ஆனால் அங்கு கிடைப்பது சுலபமல்ல) 6 ரூபாய் ஒரு வடை பிரசாதம். அது நன்றாக இருக்கும். அப்படி இல்லைனா, சின்னதா இருக்கற ஆஞ்சநேயர் கோவில்களில் சாற்றப்படும் வடையும் நன்றாக இருக்கும். (திருவல்லிக்கேணி வடையும் பிரசாதம் என்ற வகையில்தான் சேரும்..ஹாஹாஹா)

      நீக்கு
    2. ரெண்டு நாட்களாய்ச் சாப்பாடே பிரசாதம் தான். உங்களைத் தான் நினைச்சுக் கொண்டிருந்தேன். நெ.த.

      நீக்கு
  20. முகப்பேர் சந்தான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கொடுக்கும் சாம்பார் சாதம் சாம்பாரே பிடிக்காத எனக்குக் கூட ரொம்பப் பிடிக்கும். அதே போல் வேலூர் ஸ்ரீபுரத்திலும் கொடுக்கும் சாம்பார் சாதம் நன்றாக இருக்கும். ஆனால் அங்கே ரொம்பவே ஏதோ அவங்க கொடுத்துத் தான் நாம் சாப்பாடையே பார்க்கிறோம் என்பது போல நடத்துவாங்க! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்னவோ சாம்பார் சாத பிரசாதங்கள் ருசிப்பதில்லை கீதாக்கா...!

      நேற்று ராஜி ஸ்ரீபுரம் பதிவு வெளியிட்டிருக்கிறார்கள்.

      நீக்கு
  21. மேல்கோட்டை போயிருக்கறச்சே பட்டாசாரியாரிடம் முன் கூட்டியே சொல்லி சாம்பார் சாதம், தயிர் சாதம் பண்ணித் தரச் சொல்லிச் சாப்பிட்டோம். சாப்பிட வயிற்றில் இடம் தான் இல்லை. அருமையா இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகுமாரின் 60 க்கு போகும்போது தஞ்சைக்குஅருகில் உள்ள ஒரு கோவிலில் சொல்லி வைத்திருந்து சாப்பாடாகவே சாப்பிட்டோம். அண்ணன்கோவில் என்று நினைவு. நன்றாயிருந்தது.

      நீக்கு
  22. ஆயிரம் ரூபாயும் தியேட்டரில் பார்த்தோம். சென்ட்ரல் தியேட்டரோ? நினைவில் இல்லை. தெய்வமகனும் சென்ட்ரல் தியேட்டரில் தான் பார்த்தோம். அந்தப் படத்துச் செல்ல மகனாக நடித்த ஜிவாஜியைப் போல் தலை அலங்காரம் மாத்திண்டவங்க நிறையப் பேரைத் தெரியும். அதோடு ஷ்டைல்னு நினைச்சுட்டு ஒரு நடை நடப்பார் பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சகிக்காது! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷ்டைல் இல்லக்கா... அந்தப் பாத்திரத்துக்குத் தேவை அந்த நடை. பணக்கார அலட்சியம். நான் ரசித்தேன். அதேபோல திரிசூலம் படத்தில் திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே என்று ஒரு பாடல் வரும். அதன் ஆரம்பத்தில் தாளம் ஆரம்பிக்கும்போது ஒரு நடை நடபாப்பார் பாருங்கள்.... ரசிப்பேன்!

      நீக்கு
    2. ரசிப்பேனே தவிர, அவர்கள் போல தலைமுடி மாத்திக்கறது, ட்ரெஸ் போடுவது எல்லாம் செய்ய மாட்டேன்!

      நீக்கு
  23. நங்கநல்லூர் ஆஞ்சியை 2012 ஆம் ஆண்டில் பார்த்தது தான். பொங்கல் தான் கிடைச்சதுனு நினைக்கிறேன். அப்புறமா அந்தப் பக்கமே வரலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சென்னையிலேயே இருப்பதால் அடிக்கடி பார்க்கிறோம்...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!