புதன், 31 அக்டோபர், 2018

புதன் 181031 தோசை ஏன் வட்டமா இருக்கு?


சென்ற வார சமையல் கேள்விக்கு, சுவையான பதில்களை அளித்த கீதா சாம்பசிவம், ரேவதி நரசிம்ஹன், துரை செல்வராஜூ, கோமதி அரசு, பானுமதி வெங்கடேஸ்வரன்
எனக்கு தெரியாத ஒரு பண்டம் என்றால், ரெசிப்பியை முழுமையாக படிப்பேன். முதல் முறை முயற்சி செய்யும் பொழுது செய்முறையில் குறிப்பிட்டிருக்கும் அளவுகளை கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே பின்பற்றுவேன். அடுத்த முறைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்வேன். "சிறப்பான பதில். ) விவரமான பதில் அளித்த ஞானி அதிரா, ஏஞ்சல் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். 


கருத்துப் பதிந்த எல்லோருக்கும் 'சமையல் சாம்ராட்' விருது பரிந்துரைத்து, ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பியிருக்கிறோம்! 

–-------
அதிரா: 

பாம்பின்கால் பாம்பறியும் என்பார்களே.. பாம்புக்குத்தான் கால் இல்லையே?:) அப்போ எதுக்கு இப்படி ஒரு பழமொழி வந்துது?...

கால் இல்லாத பாம்பு எப்படி  நகர்கிறது என்பது பாம்புக்கு தான் தெரியும் என்ற பொருளில் வந்திருக்கலாம்.

சில புத்தகப் பக்கங்களைப் புரட்டியபோது, கால் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு என்று தெரிந்தது. இந்த பழமொழியில், கால் என்ற சொல்லுக்கு, தடம் அல்லது வழி என்று பொருளாம். ஒரு பாம்பு சென்ற தடம் அல்லது வழி, இன்னொரு பாம்புக்குத்தான் தெரியுமாம்! 

பாம்புக்குக் கால் கிடையாது என்பதை முன்னோர்கள் எப்படிக் கண்டுபிடித்தனர் தெரியுமா? 

அது சட்டை மட்டும்தானே போட்டிருக்கு, டிரௌசர் போட்டுக்கொள்ளவில்லை அல்லவா ! அதனால்தான்! 



ஏஞ்சல்: 

1, மாப்பிள்ளை முறுக்கு அப்படின்னா என்ன ? முழு விளக்கம் தேவை ?

ஆளுக்கு அடையாளம் மீசை என்று நினைவு படுத்திக்கொண்டு  இதைப் பாருங்கள்.

என் சிறு வயதில், நான் மாப்பிள்ளை முறுக்கு என்றால், கல்யாண சீர் வரிசையில் வைக்கப்படும் மெகா சைஸ் முறுக்கு என்றுதான் நினைத்திருந்தேன்! 


2, உங்களை பொறுத்தவரை வாழ்வின் /வாழ்க்கையின் அர்த்தம் என்ன ? 

உங்களைப் பொறுத்தவரை என்று சொல்லிவிட்டீர்கள்.
புறப் புலன்கள் அகம் இவை இரண்டின் மூலமாகவும் அடுத்தவருக்கு ஊறு செய்யாமலும்,  தாம் மகிழ்ச்சியாகவும் இருப்பது வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்.

LIFE = Learn and Implement, Find and Encourage.

3, அனுபவங்களால் நம்மை நம் செயல்களை நியாயப்படுத்திக்கொள்ளும் நாம் பிறரிடம் மட்டும் அவர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களை இவர் இப்படித்தான் என்று எதற்கு ஜட்ஜ் செய்கிறோம் ?

தம்மைப் போல் பிறரையும் நினைப்பது தவறில்லை. நம் தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு அடுத்தவரை விமர்சனம் செய்வதைத்தான் ஏற்க இயலாது.

4, தோசை ஏன் வட்டமா இருக்கு ? யாரும் சதுர தோசை சுட முயற்சிக்கல்லியா ??

எங்கள் வீட்டுச் சின்னப் பிள்ளைகளுக்கு எல்லா வடிவங்களிலும் தோசை செய்து தருவதுண்டு.

அதிரானா மியாவ்ச்காவ் என்ற ரஷ்ய விஞ்ஞானியின் தோசைக் கதையை, (வட்ட வட்ட தோசை சுட்டு ) இன்றைய   "நம்ம ஏரியா" வலைப்பதிவில் படியுங்கள்.  

5,கோபம் இருக்கிற இடத்தில குணம் இருக்கும் என்கிறார்களே எப்படி ?? விளக்கம் ப்ளீஸ் ?

ஆறுவது சினமானவர்கள் அதன்பின் வருந்துவதைச் சொல்கிறோம்.

கோபம் இருக்கின்ற இடத்தில், கோபகுணம் இருக்கும் என்று சொல்லியிருப்பார்களோ! 

6, யாராவது உங்ககிட்ட சிகரெட் பத்த வைக்க நெருப்பு /லைட்டர் கேட்டதுண்டா ?
நாம் தம்மடிக்காத பட்சத்தில் இப்படி திடீர்னு கேட்டா எப்படி உணர்வீங்க அப்படி உணர்ந்த அனுபவம் இருக்கா ?

இல்லை. பெரும்பாலும் இவரிடம் இருக்கும் என்று அனுமானித்துக் கேட்போரே அதிகம். 

என்னிடம் நெருப்பு கேட்டவரில்லை. ஆனால், ஒரு நண்பர், தான் ஒரு சிகரெட்டை தேர்ந்தெடுத்து, வாயில் பொருத்திக்கொண்டு, கிண்டலாக, சிகரெட் பெட்டியை என் பக்கம் நீட்டினார். நான், 'நன்றி' சொல்லி, அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பிரித்து, எல்லாவற்றையும் குப்பைக்கூடையில் போட்டேன். திகைத்துப்போன அவரிடம், நான் ஒரு சிகரெட்டை ஸ்மோக் செய்ததாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்!  

7,சாப்பாட்டு ராமன் ,கும்பகர்ணன் ,நளபாக சக்ரவத்தி போன்ற நல்ல பிரச்சினை தாரா அடைமொழிகளை பட்ட பெயர்களை ஆண்களுக்கு கொடுத்து நீலி ,மந்தரை ,சூர்ப்பனகை போன்ற வில்லத்தனமான பேர்களை பட்ட பெயர்களாக பெண்களுக்கு கொடுத்ததன் பின்னணி என்ன ?

இவை அடைமொழி அல்ல. குண விசேஷம் பற்றிய குறிப்பு. கடங்காரப் பாவி என ஆண்கள் சிலரையும் மகாலட்சுமி என்று மகளிரையும் குறிப்பிடுவதும் உண்டுதானே.

8,நடிகர்களின் கட்டவுட்களுக்கு பாலூற்றுவதை அந்தந்த நடிகர்கள் சொல்லி தடை செய்ய முடியாதா ? ஏன் சொல்ல மாட்டேன்கிறார்கள் சொன்னா ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ரசிகசிகாமணிகளுக்கு இல்லையா ?

பாலபிஷேகம், 16 அடி மாலை போன்றவை நடிகர்களுக்கு அபார திருப்தி அளிக்கும். பால் பூ செலவு அவர்களதானால் கூட ஆச்சரியம் இல்லை.

9, கோழி முட்டை நீள்வட்டமா தானே இருக்கு ஆனா டீச்சர்ஸ் விடைத்தாளில் போடும் முட்டை எதுக்கு வட்டமா இருக்கு ?

சுத்த சூன்யமான விடைக்கு சுத்த  துல்யமான சுழி ? 

பாலிடெக்னிக் முதல் வருடம் படித்தபோது, என்னுடைய பௌதிக பாட ஆசிரியர், சென்டிமென்டலாக யாருக்கும் முட்டை போடமாட்டார். எல்லா விடைகளும் தவறாக இருந்தாலும், சிவப்பு மசியினால் அவற்றை அடித்துவிட்டு, இறுதியாக மார்க் போடும்போது, ஐந்து அல்லது ஆறு மார்க் (நூற்றுக்குதான்!) போட்டு, பக்கத்திலேயே "தருமம்" என்று எழுதிவைப்பார்! 

10,மறதி நல்லதா ? வரமா சாபமா ..?

மறதி என்பது என்னைப் பொருத்தவரை நல்ல வரம்தான். தேவையில்லாத, வம்பு விஷயங்களை அப்பப்போ மறந்துவிடுவேன். ஆனால், பிறர் எனக்குச் செய்த உதவிகளை மறக்கமாட்டேன். 

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

==============================

இந்தவாரக் கேள்வி: 

புள்ளிவிவரம் : 

" பெரு நகரங்களில், காலை (பள்ளிக்கூட) நேரத்தில், சாலையில் சொந்தக்கார் ஓட்டிச் செல்பவர்களில் (அநேகமாக குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக ) 4 என்ற எண்ணில் முடிகின்ற நான்கு இலக்க பதிவு எண் கொண்ட சிவப்பு வண்ணக் காரை ஓட்டிச் செல்பவர்கள், பெரும்பாலும் அழகிய பெண்கள். "

என்று ஒரு புள்ளிவிவரத்தைப் படிக்கிறீர்கள். 

உடனே உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

1) சரியாக இருக்குமா என்று சோதித்துப் பார்ப்பீர்களா?

2) புள்ளிவிவரங்கள் எல்லாம் வேஸ்ட் என்று நினைத்துக் கொள்வீர்களா?

3) இதை ஆராய்ந்து பார்த்து எழுதியவர் யாராக இருக்கும் என்று யோசிப்பீர்களா?

4) அவங்கவங்களுக்கு எவ்வளவோ வேலை கிடக்கு, இதுல இது பத்தி யோசிப்பது தேவையா என்று நினைப்பீர்களா?

5) 'இந்த புள்ளி விவரத்தில் எங்கெல்லாம் தப்பு கண்டு பிடிச்சு, எழுதியவரை விமரிசிக்கலாம்' என்று ஆராய்ச்சி செய்வீர்களா?

6) இதே போலவே, வேறு ஏதாவது புள்ளி விவரம் நீங்களும் எழுத இயலுமா என்று முயல்வீர்களா?

7) இந்த ஆறு தவிர, வேறு ஏதேனும் ரியாக்ஷன் ?

==========================================

தோசை வடிவம் பற்றிய  கேள்வி போல இந்த வாரமும் யாராவது ஒரு கேள்வி கேளுங்கள். நம்ம ஏரியாவில், அதற்கு ஒரு கதை எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன். 

 ======================================

104 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் துரை அண்ணா, எல்லோருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு

  2. Vish Cornelius
    Tue, Oct 30, 11:43 PM (5 hours ago)
    to me

    He is perfectly fine. Just spoke with him.


    Vish//

    நேற்றைய பதற்றமான செய்திக்கு எல்லோரும் அது உண்மையா என்று அறிந்திட அது பொய்யாகவே இருக்கட்டும் என்று வேண்டி பல இடங்களிலும் தொடர்பு கொண்டோம் இல்லையா? நான் நண்பர் விசு அவர்களுக்கு மின் அஞ்சல் தட்டிவிட... இது நண்பர் விசு அவர்களிடம் இருந்து வந்த பதில்

    எனவே மதுரை தமிழன் நலமுடன் இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி.

    ஏதோ பூகம்பம், சுனாமி வந்து ஓய்ந்தது போன்ற ஓர் உணர்வு..

    யாராக இருந்தாலும், விளையாட்டாகவோ அல்லது வேறு வன்மமான காரணங்களுக்காகவோ, அல்லது பரப்பரப்பிற்காகவோ, எதிரியாகவே இருந்தாலும் இது போன்ற தவறான உண்மையற்ற பலரது மனதையும் பாதிக்கின்ற செய்திகளைப் பரப்பாதீர்கள் வெளியிடாதீர்கள் என்று நாங்கள் எல்லோரும் கேட்டுக் கொள்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. vic யும் விஷயம் தெரிந்து கொண்டிருப்பார் இப்போது - நம் வாயிலாக!

      நீக்கு
    2. வாழ்க வளமுடன் கீதா.
      நலமாக இருக்கிறார் என்று அறிந்து மகிழ்ச்சி.
      இப்போது மதுரை தமிழனும் பதிவு போட்டு விட்டார், மேலும் நிம்மதி.
      ஸ்ரீராம், கீதா உங்களுக்கும் நன்றி.

      நீக்கு
    3. வருடம் 1897. அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் (Mark Twain) எக்கச்சக்கக் கடனில் மூழ்கியிருந்தார். லண்டனில் எதையாவது எழுதிப் பிரசுரித்து காசு சம்பாதிக்கவேண்டும் என அவர் அல்லாடிக்கொண்டிருந்த கஷ்டகாலம். அப்போது கிளம்பியது ஒரு புரளி. மார்க் ட்வெய்ன் படுத்தபடுக்கையாக இருப்பதாக முதலில். பின்னர் அவர் இறந்துவிட்டதாக!

      அவர் காதுக்கும் எட்டியது. மார்க் ட்வெய்ன் சொன்னாராம்: என் மரணம்பற்றிய புரளி ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்டுவிட்டது (The rumours of my death have been greatly exaggerated!)

      நீக்கு
    4. ஆமாம் ஸ்ரீராம் விஐசியும் தெரிந்து கொண்டிருப்பார்...

      கீதா

      நீக்கு
    5. ஹா ஹா ஹா ட்றுத்துக்கு வீடு பூந்து அடிக்கோணும் இப்போ:) ஒரு நாளில் நம்மை என்ன பாடுபட வைத்து விட்டார்ர்... அதிலயும் எனக்கு பட்டப்பெயரே சூட்டியாச்சு எண்டால் பாருங்கோவன்:)).. நான் சொன்னேன் 50 50 ஆகத்தான் நம்பிக்கை இருக்கு இக்கதையில் என..:), இருப்பினும் மனம் நம்பாவிடினும் நிம்மதி இல்லாத நாளாகிட்டுதே நேற்று.. அதனால “50 50 cat” என அஞ்சு பெயர் சூட்டிட்டா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      பாவம் ரிஷபன் அண்ணனின் ஸ்டோரியை.. மேலால கூடப் படிக்கவில்லை.. மனம் எதிலுமே ஒட்டவில்லை.. சே..சே.. நம்மோடு கூட இருந்து நகைச்சுவையாகப் பேசித்திரிந்த ஒருவர் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டாரே என துடிச்சுது மனம்.. நல்லவேளை அஞ்சலிப்போஸ்டர் ஒட்டமுன்.. உண்மை தெரிஞ்சுபொச்சு ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))...

      //ஆமாம் ஸ்ரீராம் விஐசியும் தெரிந்து கொண்டிருப்பார்...

      கீதா//
      நான் எப்பவுமே எடுத்த எடுப்பில ஆரையும் சந்தேகமே பட மாட்டேன்..நீங்க எல்லாம் சொல்லியும் மனம் ஏற்கவில்லை ஆனா இப்போதான் சந்தேகம் வருது இந்த “விக்” என்பது ட்றுத்தான் போல கர்ர்ர்ர்ர்:)) ஹையோ சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் இருட்டடி விழப்போகுது ஜாமீஈஈஈ ஹா ஹா ஹா.. மீ கெள அண்ணனின் போஸ்டுக்கு வாறேன்:))

      நீக்கு
    6. கீதா ரங்கன் - நமக்குத் தெரியப்படுத்திய விஐசி நல்ல நோக்கத்திலேயே நமக்கு அறியத் தந்திருக்கலாம். ஆனால் இதனைக் கிளப்பிவிட்டவர்கள் நோக்கம் நல்லதல்ல.

      இருந்தாலும் கெட்டதிலும் நல்லதாக, மதுரைத் தமிழனுக்கு, நம்மைத் தேடுவதற்கும் அன்பு செலுத்துவதற்கும் இத்தனை புதிய ஆட்கள் இருக்கின்றனர் என்று அறிய ஒரு வாய்ப்பு கிடைத்ததல்லவா? எத்தனை பேர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்?

      நீக்கு
    7. மதுரைத் தமிழன் எனக்கும் மெசேஜ் அனுப்பி நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

      நீக்கு
  3. ( எனக்கு தெரியாத ஒரு பண்டம் என்றால், ரெசிப்பியை முழுமையாக படிப்பேன். முதல் முறை முயற்சி செய்யும் பொழுது செய்முறையில் குறிப்பிட்டிருக்கும் அளவுகளை கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே பின்பற்றுவேன். அடுத்த முறைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்வேன். //

    ஆஹா உங்க பாராட்டை மிஸ் பண்ணிட்டேனே!!!!! நானும் இந்தக் காட்டகரியே....மீ டூ என்று வழக்கமாக என் பதில் வரும் ஆனால் இப்ப அப்படிச் சொல்லவே தயக்கமா இருக்கு ஹா ஹா ஹா !!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கீதா ரங்கன் - நான் கவரப்படுவது படங்களால்தான். அதன் பிறகுதான் ரெசிப்பி படித்து, அது எங்கள் வழக்கத்தில் இல்லை என்றால், அதற்கு ஏற்றவாறு மாறுதல் செய்து, தயார் செய்வேன். அது என் வீட்டினருக்குப் பிடிக்கணும். பலமுறை இது 'நம்ம வழக்கமல்ல' என்று மனைவி தடா போட்டுடுவாள்.

      என் பெண் லைக் பண்ணி நல்லா இருக்கு என்று சொன்னது (அதைச் செய்தது என் மனைவி) 'கடுகோரை'. நான் இன்னும் அதனைச் செய்து சுவைத்ததில்லை. விரைவில் பண்ணணும்.

      நீக்கு
    2. நான் ரெசிபி படித்தாலும் செய்து பார்த்தாலும் அளவுகள் எல்லாம் என்னுடையதே! ஏனெனில் அதில் உள்ள அளவுகள் சமயத்தில் அதிகமாகி விடும்! ஆகவே எனக்கேற்றாற்போல் கூட்டிக் குறைப்பேன். சில சமயம் அதிலேயே என்னோட சில மாற்றங்களோடும் செய்தது உண்டு.

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் "கடுகோரை" நான் எப்போவோ செய்து பார்த்துப் போட்டேன். 2011 ஆம் ஆண்டுனு நினைக்கிறேன். http://geetha-sambasivam.blogspot.com/2011/11/blog-post_09.html

      நீக்கு
    4. ///Geetha Sambasivam31 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 4:24
      நான் ரெசிபி படித்தாலும் செய்து பார்த்தாலும் அளவுகள் எல்லாம் என்னுடையதே!///

      ஆஆஆஆ பரிசைப் பிடுங்குங்கோ பரிசைப் பிடுங்குங்கோ... இப்போ புரியுதோ கெள் அண்ணன் நாட்டைப் பார்த்துத்தான் பரிசு குடுக்கிறார்ர்... எதுவும் மாற்றாமல் செய்வேன் என்றோருக்குத்தானாமே முதல் பரிசு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... பரிசைப் பிடுங்கிக பின் எனக்கு வட்ஸப் ல் மெசேஜ் அனுப்பவும்:)..

      நீக்கு
  4. ஓஹோ. இதுதான் தோசை விஞ்ஞானமா.
    தோசை சாப்பிடும் ஆசையே விட்டுப் போகும் அளவு பதிவுகள் பார்த்து அசந்து விட்டேன்.

    இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஆராய்ச்சியே வேண்டாம்னு விட்டுவிடுவேன்.
      பள்ளிக்கூடம், பெண்கள், அழகிகள் அந்தக் கேள்வி.

      நீக்கு
    2. மதுரை தமிழன் வளமுடன் வாழட்டும்.

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஹா.. ஆமாம் வல்லிம்மா... இதுதான் தோசை அஞ்ஞானம்... சே... விஞ்ஞானம்... இனிய காலை வணக்கம்.

      நீக்கு
  5. அன்பின் Kgg, ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  6. பாம்பு ட்ரவுஸர் ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்....

    அதிரானா மியாவ்ச்காவ் // இப்ப புரிஞ்சு போச்சு நம்ம பூஸாரின் பெயர் விளக்கம்!!! ஹா ஹா இதுக்கு அப்பால வரேன்...வேலை இப்ப..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. 1. இது எளிதில் சொதித்துப் பார்க்கக்கூடியது என்பதால் அன்றே சோதித்துப் பார்ப்பேன். அதிக கார்கள் என்றால் 10ம் இல்லைனா 5ம் சாம்பிளாக எடுத்துக்கொள்வேன்.
    2. 30% சரியில்லைனா, புள்ளிவிவரங்கள் எப்போதும்போல்தான் உண்மைக்கு வெகு தூரம் என்று நினைத்துக்கொள்வேன். ஒருவேளை இது டுபாக்கூர் நியூசாக இருந்திருக்கக்கூடும் என்றும் நினைப்பேன்.
    5. வாய்ப்பு கிடைக்கும்போது இந்த புள்ளிவிவரம் சரி, தவறு என்று எது உண்மையோ அதை எழுதிவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  8. மறதி என்பது என்னைப் பொருத்தவரை நல்ல வரம்தான். தேவையில்லாத, வம்பு விஷயங்களை அப்பப்போ மறந்துவிடுவேன். ஆனால், பிறர் எனக்குச் செய்த உதவிகளை மறக்கமாட்டேன். //

    மிக நல்ல பதில்.

    பதிலளிநீக்கு
  9. //ஐந்து அல்லது ஆறு மார்க் (நூற்றுக்குதான்!) போட்டு, பக்கத்திலேயே "தருமம்" என்று எழுதிவைப்பார்!//

    நல்லா இருக்கே!

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம்
    அது பாஐக எதிர்பபாளர்களுக்கு எதிரான வலை அதில் நானும் விழுந்து உங்கள் அனைவரையும் பதட்டமடைய வைத்துவிட்டேன். புரிந்து கொள்விர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. >>> பெரு நகரங்களில், காலை (பள்ளிக்கூட) நேரத்தில், சாலையில் சொந்தக் கார் ஓட்டிச் செல்பவர்களில் (அநேகமாக குழந்தைகளை பள்ளிக் கூடத்தில் விடுவதற்காக ) 4 என்ற எண்ணில் முடிகின்ற நான்கு இலக்க பதிவு எண் கொண்ட சிவப்பு வண்ணக் காரை ஓட்டிச் செல்பவர்கள், பெரும்பாலும் அழகிய பெண்கள்.. <<<

    1) >>> 4 என்ற எண்ணில் முடிகின்ற நான்கு இலக்க பதிவு எண்.. <<<

    இந்த நான்கு இலக்க எண்ணின் கூட்டுத் தொகையைக் கொடுத்திருந்தால்
    அந்தக் காரின் ஜாதகத்தையும் அந்தக் காரிகையின் ஜாதகத்தையும் அலசியிருக்கலாம்!...

    2) >>> சிவப்பு வண்ணக் காரை ஓட்டிச் செல்பவர்கள்,.. <<<

    சிவப்பு வண்ணமோ, கறுப்பு வண்ணமோ - எதுவானாலும்
    அவை பெருமை அடைவது பெண்களாலே தான்!...

    ஆகையால், அந்த சிவப்பு வண்ணக் கார் சிறப்புடையதே!...

    3) >>> பெரும்பாலும் அழகிய பெண்கள்..>>>

    அப்ஜக்‌ஷன் யுவர் ஹானர்!...
    பெண்கள் எல்லாரும் அழகானவர்களே...

    (அறிவானவர்கள்.. அன்பானவர்கள்.. - சேர்த்து சொல்லிடலாமா?..
    அது வேணாம்.. அப்புறம் வம்பாப் போய்டும்!..)

    ஆகவே, மற்ற ஆராய்ச்சிகள்!?..

    அந்தப் பக்கமா தூக்கிப் போட்டுடுங்க சாமியோவ்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா...துரை அண்ணே உங்களுக்குத்தான் ஓட்டு அண்ணே!! செம செம ரசித்தேன்...உங்க கருத்தை!

      கீதா

      நீக்கு
    2. (அறிவானவர்கள்.. அன்பானவர்கள்.. - சேர்த்து சொல்லிடலாமா?..
      அது வேணாம்.. அப்புறம் வம்பாப் போய்டும்!..)//

      துரை அண்ணே தெகிரியமா சொல்லுங்கண்ணே! இங்கிட்டு ஆரு வம்பு பண்ணப் போறாங்கன்னேன்.....இத வம்பாகும்னு சொல்லாம சொல்லுங்கண்ணே.. இங்க வர பெண்கள் எங்கள் அத்தனை பேரோட (மெஜாரிட்டி நாங்கதானாக்கும்!!!!!) ஓட்டும் உங்களுக்குத்தேன்!!! சப்போர்ட்டுக்கு தானைத்தலைவி வேற இருக்காங்க...இன்னிக்கு என்ன அவங்களைக் காணலை இன்னும்..

      அதுவும் தேம்ஸ்லருது வரவங்க ஒவ்வொரு ஓட்டும் 100 க்கு சமானமாக்கும்!!

      கீதாக்கா என்ன ஆளைக் காணோம்..

      கீதா

      நீக்கு
    3. யப்பாடி...
      இந்த மட்டுக்கும் தப்பிச்சேன்...

      சிவப்புக் கார் ஓட்டாமல்
      சிவனே என்று நடந்தாலும்

      அழகானவர்கள்..
      அறிவானவர்கள்..
      அன்பானவர்கள்..

      இருந்தாலும் வெளியுலக நடப்புக்காக
      அப்படிச் சொன்னேன்...

      வாழ்க அழகான பெண்கள்..
      வாழ்க அழகான சிவப்புக் கார்..

      நீக்கு
    4. @துரை செல்வராஜு சார்... முதலில் நீங்கள் சொல்லியிருப்பதுதான் சரி. கீதா ரங்கனுக்காக மற்ற இரண்டு 'அ'வைச் சேர்த்திருக்கவேண்டாம். இருந்தாலும் நான் அறிந்த வரையில், பெண்கள் நம்மைவிட அறிவானவர்கள். அவர்களுக்கு இல்லாதது வெளியுலக அனுபவம். அதுவும் இப்போ வேலை பார்க்கும் பெண்களுக்கு நிறையக் கிடைக்கிறது.

      'அன்பானவர்கள்' - இது ஆய்வுக்கு உரியது. அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களுக்கு'மட்டும் அன்பானவர்கள். ஹாஹாஹா.

      'அழகானவர்கள்' - அந்த அந்த வயசுல எதுவும் அழகாத்தான் தெரியும்.

      நீக்கு
    5. //3) >>> பெரும்பாலும் அழகிய பெண்கள்..>>>

      அப்ஜக்‌ஷன் யுவர் ஹானர்!...
      பெண்கள் எல்லாரும் அழகானவர்களே...//

      ஹா ஹா ஹா அது அது:)) ஆனாலும் துரை அண்ணன் சின்ன வயசில எங்கயோ பெண்களிடம் சூப்பரா மாட்டி அடி வாங்கி இருக்கிறார்:)) ஹா ஹா ஹா அதனாலதான் பெண்களைப் பற்றிப் பேசவே பயப்படுறார்போல:)).. இதில மீ ரூஊஊஊஉ வேற களம் இறங்கியிருக்குது இப்போ:).. எதுக்கும் ஜாஆஆஆஆக்க்க்க்ர்ர்ர்தை:)) ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    6. @நெ தமிழன்
      //'அன்பானவர்கள்' - இது ஆய்வுக்கு உரியது.
      அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களுக்கு'மட்டும் அன்பானவர்கள். ஹாஹாஹா.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பெண்கள் எல்லோருமே எல்லோரோடும் அன்பா இருந்திட்டால் அது தப்பாகிடும்:).. அம்மா என்றால் மட்டுமே அன்பா இருப்போம்:))..

      @து.அண்ண்
      //அழகானவர்கள்..
      அறிவானவர்கள்..
      அன்பானவர்கள்..

      இருந்தாலும் வெளியுலக நடப்புக்காக
      அப்படிச் சொன்னேன்...///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  12. பதில்கள்
    1. வட்ட வடிவமாக வரும் புரோட்டாவை சதுரக்கல்லில் சுடுவதின் பின்னணி என்ன ?

      நீக்கு
  13. அதிரானா மியாவ்ச்காவ்//
    இதைப் பார்த்ததும் அதிராவோனு நினைச்சுட்டேன் அதுவும் மியாவ் வேற வருது....அது சரி அவங்களும் ஃபேமஸ் செஃப் அல்லோ...அதான் தோசை ஆராய்ச்சி செஞ்சுருக்காங்கனு நினைச்சுட்டேன்...

    தோசையின் கதை நம்ம ஏரியாவுல கொஞ்சம் வாசித்தேன்...இன்னும் வாசிக்கணும்...

    கோமதிக்கா தோசைப் பதிவு போட்டிருந்ததும் நினைவு வந்துச்சு......ஸ்ரீராம் கூட தோசாயணம்னு முன்னாடி வித மிதமான தோசை பத்தி போட்டிருந்தாரே....நினைவு வந்துச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
  14. மறதிக்கான பதில் சூப்பர்...நான் மறதிக்கு ரொம்ப ஃபேமஸ் எங்கள் வீட்டில். அதாவது கெட்டதை சேமித்து வைப்பதில்லை....அன்னிக்கு இப்படிப் பேசின இப்படிப் பேசின....எட்ஸற்றா எட்ஸற்றா....எனக்கு உதவியவர்களையும் உதவியையும் மறந்ததே இல்லை ஆனால் அதே சமயம் முக்கியமான விஷயங்களும் சில சமயம் மறந்து திட்டு வாங்குவதுண்டு. இந்த விஷயத்தில் மறதி என்பதை வெல்லலாம் செய்ய வேண்டுவனவற்றை முக்கியமானதை ப்ரையாரிட்டைஸ் பண்ணி லிஸ்ட் செய்து வைத்துக் கொண்டு செய்வது என்று...

    எனக்குத் தெரிந்த சிலர் உறவுகளில் உண்டு எப்படி என்றால்..."1990...ஆகஸ்ட் 20 வியாழன், 19 ஆம் தேதி...4 மனி இருக்கும் அப்ப அவ இப்படி சொன்னா..எனக்கு நல்லா நினைவு இருக்கு.நாம எல்லாரும் உக்காந்திருந்தோம்.. நீ, உன் வலது பக்கம் நான்....இடது பக்கம் அவ ஜன்னல் ஓரமா பச்சை குர்தா வெள்ளை சல்வார் கருப்பு துப்பட்டா போட்டிருந்தா என்று நொடி முதல் நினைவு வைத்துச் சொல்லும் நபர்கள்...... வருடம், மாதம் தேதி, கிழமை, மணி நொடி சொல்லி அந்த நிமிடத்தில் என் முதல் பையன் தவழத் தொடங்கினான் என்று சொல்லும் உறவினரும் உண்டு....

    நான் இவர்களை மிகவும் வியந்து பார்ப்பது வழக்கம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பிரித்து, எல்லாவற்றையும் குப்பைக்கூடையில் போட்டேன். திகைத்துப்போன அவரிடம், நான் ஒரு சிகரெட்டை ஸ்மோக் செய்ததாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்//

    ரசித்த பதில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. மதுரைத்தமிழன் நலமுடன் இருக்கிரார் என்ற செய்தி கேட்க மிக்க ஸந்தோஷம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. வட்டமாக வார்ப்பதுதான் சுலபம்.அதனால்தான் தோசை, அடை எல்லாமே வட்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாக வட்டமாக வார்க்கத் தெரியாதவர்கள் செய்யும் சதிதான் வித வித டிசைன் தோசைகள் என்று தைரியமாகச் சொல்லுங்கள் பா.வெ. மேடம். இல்லைனா, முக்கோண தோசை, வரிவரி தோசை என்று புதிது புதிதாக ஆரம்பித்துவிடுவார்கள் (வட்ட தோசை சுடத் தெரியாதவர்கள் ஹாஹா)

      நீக்கு
    2. நெல்லை....நாங்க கோன் தோசை ராக்கெட் தோசை கூடச் செய்வோமாக்கும்...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  18. //விவரமான பதில் அளித்த ஞானி அதிரா, ஏஞ்சல் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
    //

    நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ இது கொஞ்சம்கூட நல்லாவே இல்ல.. அஞ்சூஊஊஊஊஉ ஓடிக்கமோன் குளிர்ந்தாலும் பறவாயில்லை, குளிரா இப்போ முக்கியம் நல்ல குல்ட் எடுத்துக் கொண்டு வாங்கோ தேம்ஸ் கரையில உண்ணாவிரதம் ஆரம்பம்.. கர்ர்ர்:)) எங்களுக்கு ஆறுதல் பரிசாமே:).. இது திட்டமிட்டு செய்யப்படும் ஜதீஈஈஈஈஈ.. எங்களுக்கு எப்பவும் பரிசு தாறாரே இல்லை கெள அண்ணன் எப்படி மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் அதுக்கு எதிராவே பதில் சொல்லி நம்மை தேம்ஸ்ல தள்ளி விட்டிடுறார்ர்:)... இப்பவே போகிறேன் காண்ட் கோர்ட்டுக்கு:))... பிரித்தானியாவுக்கு பரிசு கொடுக்கப்படாது என இருக்கிறார்ர்:)) இப்பவே போகிறேன் மீ ரூஉ வுக்கு சே சே பழக்க தோசத்தில வந்திட்டுது சோரி:)).. காண்ட் கோர்ட்டுக்கு:)) நாட்டுக் கலவரம் ஆகப்போகுது இது:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஐயா சாமி... என்ன குடுத்தாலும் வாங்கிக்கறேன்' என்று அமைதியாகச் சொன்னால் பரிசு கிடைக்கும். 'பரிசு' என்ற உடனேயே, '58 மொபைல் எண்களை அனுப்பறேன், டாப்பப் பண்ணுங்க என்று ஆர்ப்பாட்டமாகச் சொன்னால், பரிசு தரும் ஐடியாவையே கிடப்பில் போட்டுவிட்டார் கேஜிஜி சார்...

      இப்போ யாரும் உங்களைத் தேம்ஸில் தள்ளமாட்டார்கள். டிசம்பர் கடைசி வாரம் இல்லைனா ஜனவரிலதான். அப்போதான் நீங்கள் கத்திக் குரல் எழுப்பமுடியாதபடி தண்ணீர் ஐஸ் போல் இருக்கும். எப்படி இந்த ஐடியா அதிரா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நல்லாத்தான் ஐடியாக் குடுக்கிறீங்க:)
      மக்களே சனவரி:) முடியும்வரை என்னைத் தேம்ஸ்ல தள்ளி விடும் ஐடியாவைக் கை விட்டிடுங்கோ பிக்கோஸ் மீ “கிறீஸ்” பூசிக்கொண்டெல்லோ திரிகிறேன் இப்போ:) ஹா ஹா ஹா பூசோ கொக்கோ:)..

      நீக்கு
    3. நோ அதிரா வின்டர் ட்ரெஸ் க்வில்ட் எல்லாம் போட்டு உங்களை உருட்டி விடணும்...பின்ன கௌ அண்ணன் பாவம் கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிறாரல்லோ...நீங்க காஸ்ட்லி பரிசெல்லாம் கேட்டால் கௌ அண்ணன் இனி கேள்வி பதிலே வேண்டாம்னு ஓடிப் போயிடுவாராக்கும்...

      கீதா

      நீக்கு
    4. ஹையோ கீதா:) கண் மூடித்தனமா “இந்தியா”வுக்குச் சப்போர்ட் பண்றீங்க கர்:) “பிரித்தானியா” வுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க இல்ல ஆருமே:))[ஹா ஹா ஹா நாட்டுக்கலவரம் வெடிக்கட்டும்:)]..

      உங்களுக்கு எதுவுமே தெரியாது:).. புதன் கிழமைப் பதிவுகளை மேலோட்டமாகப் படியுங்கோ ரைம் கிடைக்கும்போது:).

      நான் மாஞ்சு மாஞ்சு பதில் சொன்னேன் ஒரு தரம்[ஓட்டப்பந்தயத்தில ஆஅருமே ஓடாமல் தனியே ஓடி வெல்வதைப்போல, மீ மட்டும்தான் பதில் சொல்லிவிட்டு பரிசுக்காகக் காத்திருந்தேன்:) பவுண்ட்டில டாப்பு அப்பு மொபைலுக்கு பண்ணுவர் என:))]..

      பரிசு அறிவிக்கப்படாத கிளவிகளுக்கு.. சே..சே கேள்விகளுக்கு அதிரா பதில் சொல்லிட்டாரே என அறிவிச்சுப் போடார்ர்:)) அப்போ நான் தேம்ஸ் கரை வரைக்கும் போயிட்டேன் குதிக்க:)) பிறகு அஞ்சுதான் கூட்டி வந்தா:) இல்ல அதிரா.. குதிக்க வாணாம் அடுத்த முறை பரிசு உங்களுக்கே என:) அதை நெம்ம்ம்பி திரும்பி வந்தேன்:)).. இப்போ ஆஆஆஆஆஆஆஆறிய:) பரிசாமே நமக்கு:)) கர்ர்ர்ர்:).

      நீக்கு
  19. //கருத்துப் பதிந்த எல்லோருக்கும் 'சமையல் சாம்ராட்' விருது பரிந்துரைத்து, ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பியிருக்கிறோம்!//

    எந்த சனாதிபதி?:)) எங்கட மகிந்தா அங்கிளுக்கோ ?:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'மகிந்தா' இப்போ பிரதமர் (அதுக்கும் ரனில் விக்ரமசிங்கே இன்னும் போட்டி போட்டுக்கிட்டு இருக்காரு, சபாநாயகர் துணையோட). சனாதிபதி 'சிறிசேனா'. உங்க ஊர் அரசியலையும் நாங்க உங்களுக்குக் கத்துக்கொடுக்க வேண்டியிருக்கு.ம்ம்ம்ம்ம்

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், உண்மையைச் சொல்லப் போனால்.. எனக்குத்தான் அரசியலே பிடிக்காதே.. ஸ்கூலில் திடீரென ஒரு மாஸ்டர் வந்து கேட்டார்ர். சிலோனில டக்கு டக்கென மாற்றங்கள் வருதே என:)) அவர் முன்பு அங்கு போயிருக்கிறாராம்.. இப்போ 54 வயசாம் அவருக்கு.. சிலோன் காலத்தில ட்ரான்சிட்டில போனாராம்.. அதனால அவருக்கு ஒரு பெருமை தனக்கு சிலோன் தெரியும் எண்டு ஹா ஹா ஹா..

      அவர் இப்படி நியூஸ் படிப்பார் என எனக்கென்ன தெரியும்:) திடுக்கிட்டு விட்டேன், நல்லவேளை இந்த மகிந்த நியூஸ் மட்டும் தெரிஞ்சதால சாமாளிச்சு விட்டேன் ஹா ஹா ஹா:).

      நீக்கு
    3. //உங்க ஊர் அரசியலையும் நாங்க உங்களுக்குக் கத்துக்கொடுக்க வேண்டியிருக்கு.ம்ம்ம்ம்ம்//

      escapeeeeeeeeeeeeeeeeeeee:)

      http://www.likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

      நீக்கு
    4. பார்ரா பார்றா :) மஹிந்தா மேட்டர்லாம் பூனைக்கு தெரியுதே :)

      நீக்கு
  20. //இந்த பழமொழியில், கால் என்ற சொல்லுக்கு, தடம் அல்லது வழி என்று பொருளாம். ஒரு பாம்பு சென்ற தடம் அல்லது வழி, இன்னொரு பாம்புக்குத்தான் தெரியுமாம்! //

    ஓ.. பதிலுக்கு நன்றி.

    //பாம்புக்குக் கால் கிடையாது என்பதை முன்னோர்கள் எப்படிக் கண்டுபிடித்தனர் தெரியுமா?

    அது சட்டை மட்டும்தானே போட்டிருக்கு, டிரௌசர் போட்டுக்கொள்ளவில்லை அல்லவா ! அதனால்தான்!
    //

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் என்னா ஒரு கண்டு பிடிப்பூஊஊஊஊஊஊ:)).. இதை இப்பவே கின்னஸில பதியச் சொல்லி ட்றம்ப் அங்கிளுக்கு மனுக் கொடுக்கப் போகிறேன்ன்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  21. //4, தோசை ஏன் வட்டமா இருக்கு ? யாரும் சதுர தோசை சுட முயற்சிக்கல்லியா ??

    எங்கள் வீட்டுச் சின்னப் பிள்ளைகளுக்கு எல்லா வடிவங்களிலும் தோசை செய்து தருவதுண்டு.

    அதிரானா மியாவ்ச்காவ் என்ற ரஷ்ய விஞ்ஞானியின் தோசைக் கதையை, (வட்ட வட்ட தோசை சுட்டு ) இன்றைய "நம்ம ஏரியா" வலைப்பதிவில் படியுங்கள். ///

    என்னாதூஊஊஊஊஊஉ அதிரா மியாவ் ல விஞ்ஞானியோ அவ்வ்வ்வ் இனி விஞ்ஞானி அதிரா எனப் பெயரை மாத்திட வேண்டியதுதேன் ஹா ஹா ஹா..

    அது என்னமோ தெரியல்ல, பானுமதி அக்கா கூப்பிட்டும் நான் போகவில்லை நம்ம ஏரியா கதை படிக்க, அடுத்த கதைக்கும் போக முடியவில்லை.. ஏதோ சூனியக் கிளவியை வச்சு சூனியம் செய்ததுபோல:) அப்பக்கம் எட்டிப் பார்க்கவே மனம் வருது இல்லை.. சத்தியமா..

    இன்று எப்படியும் போய்ப் படிச்ச்சு கொமெண்ட்டும் போடோணும்...

    பதிலளிநீக்கு
  22. //
    5,கோபம் இருக்கிற இடத்தில குணம் இருக்கும் என்கிறார்களே எப்படி ?? விளக்கம் ப்ளீஸ் ?

    ஆறுவது சினமானவர்கள் அதன்பின் வருந்துவதைச் சொல்கிறோம்.//

    கண்போனபின்- சூரிய நமஸ்காரம் என்கிறீங்க? ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  23. //இந்தவாரக் கேள்வி: //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆறுதல் பரிசு கூடக் கிடைக்குமோ தெரியேல்லை இதுக்கு:) ஹா ஹா ஹா..

    //தோசை வடிவம் பற்றிய கேள்வி போல இந்த வாரமும் யாராவது ஒரு கேள்வி கேளுங்கள். நம்ம ஏரியாவில், அதற்கு ஒரு கதை எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன். //

    சந்திரன் ஏன் குளிருது? சூரியன் ஏன் சுடுது? ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ஆஹா சந்திரன் கூல் டைப் சூரியன் ஹாட் டைப் அதாவது கோபக்காரன்... ஆனாலும் கோபம் இருக்கும் குணமும் உண்டு (சூரியன் இல்லையேல் உலகில்லையே) என்று கேரக்டர்களின் பெயர் வைத்து கௌ அண்ணா கதை எழுதிவிடுவார் பாருங்க...

      கீதா

      நீக்கு
    2. கீதா அடுத்த கிளவி சே..சே.. கேள்வி:)
      பெண்கள் மட்டுமேன் சாறி உடுக்கோணும் நம் கலாச்சாரத்தில:))?.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

      நீக்கு
    3. ஹா ஹா அதிரா....இதுக்கு நானா பதில் சொல்லனும்? இல்லை கௌ அண்ணாவுக்கான கேள்வியா??!!!!!!!
      ஆனா, இதுக்கும் கதை உண்டு...சாரி பிறந்த கதை அந்தக்காலத்துல எப்படி நு சிந்துசமவெளி நாகரீகம் எல்லாம் வரும்..க்ரீக், எஜிப்ட், மெசபடோமியானு....அண்ணா எழுதிடுவார்...

      கீதா

      நீக்கு
    4. //சந்திரன் ஏன் குளிருது? சூரியன் ஏன் சுடுது? // - அதிரா - எங்கள் பிளாக்கில் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டாங்க. ஏன் எம்.ஜி.ராமசந்திரன் கட்சி குளுமையா நல்லா இருக்கு, உதயசூரியன் ஏன் மிகவும் சூடா இருக்குன்னுல்லாம் கேட்டா, அவங்க பதில் சொல்லமாட்டாங்க. சாய்ஸ்ல விட்டுடுவாங்க.

      நீக்கு
    5. //அதிரா - எங்கள் பிளாக்கில் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டாங்க. //
      ஹா ஹா ஹா கர்ர்ர்:)).

      நீக்கு
  24. சில பதில்களில் அறிவுரையும் இருந்தது... ஆலோசனையும் இருந்தது... அருமை...

    பதிலளிநீக்கு
  25. ஏன் இன்னும் கேள்வியின் நாயகியைக் காணவில்லை?!!!!!

    ரூம் போட்டு க்வெஷன் பேப்பர் ப்ரிப்பேர் பண்ணிட்டுருக்கார் போல....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ் :) கீதா ..சர்ச் போயிட்டு வந்து கேள்விகளை கேட்கிறேன் .அதெப்படி கேக்காம விடுவேனா நான்

      நீக்கு
    2. அதானே ஏஞ்சல்னா கொக்கோனா...ஹா ஹா ஹா

      அது சரி ஏஞ்சல் பூஸார் //அதிரானா மியாவ்ச்காவ், சோற்று மாக்கானைப் பார்த்து, தோசை (அப்போ அதற்கு, அதிரானா வைத்த பெயர் தோச்காவ் என்பதாகும்) செய்யும் முறை பற்றி எடுத்துக் கூறி, பரிசு பெற்றுச் செல்ல வந்திருந்தார். // (இது நம்ம ஏரியா பிட்டு. அங்கருந்து காவிக்கொண்டு வந்து!!!!)

      இதைச் சுட்டிக் காட்டி பாருங்கோ இது அதிராவாக்கும் பரிசு வேண்டி நிற்கிறேன் பாருங்கோ...எனக்கு பரிசு வேண்டும் வேண்டும்னு போராடுவாங்கனு நினைச்சேன்...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  26. எனது அறிவார்ந்த கேள்விகளுக்கு விளக்கமான பதில்கள் தந்த ஆசிரியர் குழுவிற்கு நன்றீஸ் ..நான் சர்ச்சுக்கு போயிட்டு வரேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Angel31 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:13
      எனது அறிவார்ந்த கேள்விகளுக்கு//

      பூனை தூங்கினால் எலிக்குக் கொண்டாட்டமாமே:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை:) அதிரா தெரியாமல் “அஞ்ஞானி” எனப் போட்டு விட்டதால, இப்போ தான் அறிவாளியாமே கர்ர்ர்ர்:)).. நல்லவேளை ஸ்ரீராம் கண்டுபிடிச்சுச் சொன்னதால என் இமேஜ் ஃபுல்:) டமேஜ் ஆகமுன்னம் உசாராகி:) ஞானியாகி:).. ஆச்சிரமத்துக்கே திரும்பிட்டேன்ன்:)).. ஹா ஹா ஹா..

      நீக்கு
  27. எனது அறிவார்ந்த கேள்விகளுக்கு//

    இது பூஸாரின் கண்ணில் படலியோ...புகை வரலியே இன்னும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஆஆஅ என் அறிவுக்கண்ணைத் திறந்திட்டீங்க கீதா:)).. அப்பூடியா ஜொன்னா:) கர்ர்ர்:))

      நீக்கு
  28. அதிரா உங்க கதை தான் அந்த அதிரானா....என்ன இப்படி ஒன்னுமே சொல்லாம போயிட்டீங்க...அங்க நம்ம ஏரியால ஈயாடுது....அதிரானாவை யாரும் கண்டு கொள்ளவே இல்லையோ?!!!! அதிரானாவே கண்டுக்கலை....ஓ தன்னடக்கமோ?!! ஹா ஹா ஹா ஹா...

    //மிகவும் சந்தோஷமடைந்த சோற்று மாக்கான், அதிரானாவிடம், "ரஷ்ய விஞ்ஞானியே! உங்கள் கண்டுபிடிப்பு, அதி அற்புதமானது! நிறைய பரிசுகளை, படகில் ஏற்றி, தேம்ஸ் நதி வழியாக உங்க ஊருக்கு அனுப்புகிறேன். இனி வருகின்ற ஜன்மங்களில் எல்லாம், நீவிர் விஞ்ஞானி, செஃப், ஞானி என்று போற்றப்படுவீர்" என்று புகழ்ந்துரைத்தான்.//


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது அதிராவை அங்கு யாருமே கண்டுகொள்ளவில்லையோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என் இமேஜ் ஏ டமேஜ் ஆகிடப்போகுதே:)).. சத்து நில்லுங்கோ.. கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு அங்கு களம் இறங்கப் போறேன்ன்..

      இன்னும் எந்த புளொக் பக்கமும் எட்டிப் பார்க்கல்ல.. கோமதி அகக. கீசாக்கா எல்லோரும் என்னில கொலை:) வெறியோட இருப்பினம் இப்போ ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    2. @ அதிரடி, நானே எந்த வலைப்பக்கமும் அதிகம் போகலை! நீங்க வரலைனா என்னத்தைச் சொல்றது! :P :P :P :P

      நீக்கு
  29. சதுர தோசைக்கல்லில் வட்டமான தோசைகள் வார்க்கலாம். எங்க அப்பா வீட்டில் இருந்தது. ஒரே சமயம் ஆறு தோசைகள் வார்க்கலாம். என்னோட பாட்டி அதில் தான் தோசை வார்த்துப் போடுவாராம். பின்னாட்களில் அப்பா அதை அறுத்து எங்கள் அனைவருக்கும் கொடுத்தார். நான் எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன். இப்போ நினைச்சுப் பார்க்கையில் வாங்கிட்டிருக்கலாமோனு தோணுது! ஓட்டல்களிலும் தோசைக்கல் சதுரமாகவோ நீள் சதுரமாகவோ தான் இருக்கும். அதில் தான் வரிசையாக தோசை வார்ப்பார்கள்! ஒரே சமயத்தில் நான்கு தோசைகள் வார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  30. இந்த மாதிரிப் புள்ளி விபரங்களையே பார்க்க மாட்டேன். தெரிஞ்சுண்டு என்ன ஆகப் போகிறது என்னும் எண்ணம் தான் காரணம்! போக்குவரத்து அதிகமா இருந்தால் புகை அதிகமாகி மூச்சு விட முடியலையே என்று தான் யோசிப்பேன். துரை சொல்லி இருப்பது போல் பொறுமை எல்லாம் கிடையாது!

    பதிலளிநீக்கு
  31. தோசை எல்லோருக்கும் பிடித்த உணவாக இருப்பது ஏன்?

    உங்கள் மனைவி முதல் முதல் தோசை வார்த்துப் போட்டப்போ நீங்க ரசிச்சுச் சாப்பிட்டது உண்டா? அம்மா செய்வதை விட நல்லா இருக்குனு தோணி இருக்கா? (கொஞ்சம் வம்பு)

    இட்லிக்கு ஏன் இந்த மரியாதை கிடைக்கலை? எல்லோரும் ஏன் ஒரே வகையாக இட்லி செய்கிறார்கள்?

    இப்போல்லாம் சில்லி இட்லி, பொடி இட்லி, இட்லிஃப்ரைனு வந்திருக்கே, அது பத்தி என்ன சொல்றீங்க? உங்களுக்கு இம்மாதிரிப் பாரம்பரிய உணவுகளில் மாறுதல் செய்தால் பிடிக்குமா?

    பதிலளிநீக்கு
  32. கொஞ்சம் சீரியஸா!

    சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு அனுமதி கொடுத்தது பற்றி உங்கள் கருத்து!

    சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் கள்ளக்காதல் செல்லும் என்றதும் ஆண், ஆணைத் திருமணம் செய்து கொள்வதும், பெண், பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் செல்லும் என்றது குறித்து உங்கள் கருத்து? இது சரியா? கலாசாரச் சீர்கேடா?

    கலாசாரம் மாறி வருவதில் உங்களுக்கு உடன்பாடா? மாற்றங்கள் அவசியம் என நினைக்கிறீர்களா? அப்படி எனில் ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கீசாக்கா இப்பூடி கெள அண்ணனை மாட்டி விடுவதும் ஒரு கலாச்சாரச் சீர் கேடு எனச் சொல்லிடப்போறார்:)

      நீக்கு
  33. எங்கள் குடும்பத்தில் எங்கள் அப்பாவின் மாமா ஞாபக சக்தி திலகம், அவருக்குப் பிறகு எங்கள் பெரிய மாமி, அதற்குப் பிறகு நான்தான்(தம்பட்டம் அடித்து க் கொள்கிறேன் என்று நினைக்காதீர்கள்)

    பதிலளிநீக்கு
  34. பிறந்ததிலிருந்து சர்வ சாதாரணமாக சாப்பிட்டு வரும் தோசை பற்றி இவ்வளவு விலாவாரியாக விவாதம் பண்ண முடியும் என்று நான் நினைத்ததே இல்லை

    பதிலளிநீக்கு
  35. 1) சரியாக இருக்குமா என்று சோதித்துப் பார்ப்பீர்களா?//

    யெஸ்ஸ்ஸ் நான் எதையும் ஆராயாமல் ஒத்துக்கவே மாட்டேன் ..பொதுவாவே எனக்கு ஆராய்ச்சி செய்றதில் ரொம்ப பிடிக்கும் :)

    2) புள்ளிவிவரங்கள் எல்லாம் வேஸ்ட் என்று நினைத்துக் கொள்வீர்களா?
    இல்லை அவை அவசியம் இல்லைன்னா எப்படி ஒரு விஷயத்தை நம்புவது

    3) இதை ஆராய்ந்து பார்த்து எழுதியவர் யாராக இருக்கும் என்று யோசிப்பீர்களா?
    ஹாஹா கண்டிப்பா கடலைப்போடும் ஜொள்ளுப்பார்ட்டி வேலை என்பதே என் கன்க்ளூஷன்

    அவங்கவங்களுக்கு எவ்வளவோ வேலை கிடக்கு, இதுல இது பத்தி யோசிப்பது தேவையா என்று நினைப்பீர்களா?
    இல்லை எதையும் கூர்ந்து கவனித்து உள்வாங்கி அதை வெளிப்படுத்துவது தேவையே

    //'இந்த புள்ளி விவரத்தில் எங்கெல்லாம் தப்பு கண்டு பிடிச்சு, எழுதியவரை விமரிசிக்கலாம்' என்று ஆராய்ச்சி செய்வீர்களா?//

    அது கட்டாயம் செய்வேன் பின்னே மக்களுக்கு உண்மை செய்தி போய் சேரணுமே

    ஆனா விமரிசனத்தை எழுதியவர் மனம் கோணாம செய்வேன் .

    6) இதே போலவே, வேறு ஏதாவது புள்ளி விவரம் நீங்களும் எழுத இயலுமா என்று முயல்வீர்களா?
    ஆமா எனக்கு ஒரு புது ஐடியா தோணி இருக்கு ..
    புள்ளி விவரங்கள் மனித மனங்கள் பற்றி கணக்கெடுக்க ஆசை .ஏன் இப்படி எதற்கு இப்படி செய்றாங்க என்றொரு தலைப்பில்
    7) இந்த ஆறு தவிர, வேறு ஏதேனும் ரியாக்ஷன் ?
    அது அந்த புள்ளி விவரம் சேகரித்தvaர் வயதை பொறுத்து ரியாக்ஸன் மாறும் ஹாஆஆ :)


    பதிலளிநீக்கு
  36. மதுரை தமிழன் இன்னுமொரு நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
    கண்ணதாசனுக்கு ஒரு முறை தான் இறந்து விட்டால் மற்றவர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று விபரீதமாக தோன்றியதாம், அதனால் தானே தான் இறந்து விட்டதாக புரளியை கிளப்பி விட்டாராம். கதறியபடி ஓடி வந்த எம.எஸ்.வி.யை சிரித்தபடி வரவேற்றாராம்.

    பதிலளிநீக்கு
  37. 1, /நிலா நிலா ஓடிவா ..
    நிலவுக்கு கால் இருக்கா ? ஆனா வட்ட நிலாவில் கால் தெரியலியே
    இந்த பாட்டில் சொன்னபடி நிலா எப்படி ஓடி வர முடியும் ?

    2, ஒரு ரூபா காயின் ஆகட்டும் இல்லை இரண்டு ரூபா காயின் 50 பைசா காயின் எல்லாமே ஏன் வட்டமா இருக்கு ?
    சதுர காயின்ஸ் போட யாரும் முயற்சிக்கல்லியா ?

    3, இமெயில் இல்லேன்னா sms தவறான எண்ணுக்கு நபருக்கு அனுப்பி ஞே என விழித்ததுண்டா ??

    4,நம் நாட்டிலும் திருமணங்களில் தம்பதிகள் மீது அரிசி அட்சதை போடறாங்க வெளிநாட்டிலும் அரிசி தூவும் வழக்கமுண்டு எப்படி இப்படி ஒரு ஒற்றுமை வெவ்வேறு நாட்டினருக்கு வந்தது ?

    5, காதலுக்கு கண்ணில்லைங்கிறாங்களே அப்போ காதலுக்கு காது மூக்கு வாய் இருக்கா ??

    6,வானத்தில் இத்தனை ஆயிரம் ஸ்டார்ஸ் இருக்குன்னு சொல்றதை நம்பும் மக்கள் ஈரமான பெயிண்ட் தொட வேண்டாம் என்று சொன்னா மட்டும் தொட்டு பார்த்து ஈரமா காய்ஞ்சிடுச்சான்னு உறுதி செய்வதன் காரணம் ??
    இன்னிக்கு ரெண்டு பேர் அப்படி செஞ்சதை பார்த்தேன் :)

    7, பணம் மரத்தில் காய்கிறது என்பதற்கும் அதே மரத்தின் பேப்பரில் தான் கரன்சி தயாரிக்கிறார்கள் என்பதற்கும் சம்பந்தம் இருக்கு என்பதை என்றாவது யோசிச்சிருக்கீங்களா ??


    8, நல்லது கெட்டது நல்லவங்க கெட்டவங்க சந்தோசம் துக்கம் ..இதில் இரண்டாவதா வருபவை கெட்டது ,துக்கம் இதெல்லாம் இல்லாம முதலா வரும் நல்லது சந்தோசம் இதை மட்டும் உணர அனுபவிக்க முடிவதில்லையே ஏன் ?? கெட்டது தீமை இல்லாம நல்லனவற்ற்றை உணர முடியாதா ??
    வாழ்க்கைன்னா நல்லது கெட்டது இருக்கும்னு ஆரம்பிச்சு வைச்ச முதல் ஆள் யாரா இருக்கும் ?

    9,எண்ணங்கள் எங்கிருந்து உதிக்குது ?தோணுது ஆரம்பிக்குது ??

    10, மனம் மாறினார் மனம் மாறினாள் என்று சொல்வது சரியா ? நாம் தானே மாத்தறோம் ?



    பதிலளிநீக்கு
  38. தோசை ஏன் வட்டமாக இருக்கிறது தொலைக்காட்சிகளில் விவாத பொருளாக்கி விடலாம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  39. எதுக்குமே மூலம்னு ஒண்ணு உண்டு! அப்படி இப்போ இருப்பனவற்றையெல்லாம் ஆதியில் கண்டறிந்தவர்கள் யார்? அவங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய தெளிந்த அறிவு எப்படி வந்தது?

    உதாரணமாக நெருப்பில் சமைத்தல், நீரைப் பயன்படுத்துவதுனு மட்டும் இல்லை! தத்துவார்த்தமான உண்மைகளை முதன் முதல் கண்டறிந்தவர்களுக்கு ஆதி குரு யார்?

    இஃகி, இஃகி, இப்போ ஏகாந்தனின் பதிவைப் படிச்சேனா, அதில் எழுந்த கேள்விகள்! ஆகவே உங்களுக்குத் தலை சுத்தினா அதுக்கு ஏகாந்தன் தான் முழுப் பொறுப்பு! :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை... இட்லி பண்ண அடியில் துணி வைக்கணும்னு கண்டுபிடித்தது யார், ஹஸ்பண்ட் மீதுள்ள கோபத்தில் அவருடைய நல்ல வேஷ்டியைக் கிழித்து இட்லி துணியாக உபயோகப்படுத்தியது யார் என்றெல்லாம் கேள்வி கேட்கலை கீசா மேடம்

      நீக்கு
    2. @நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கட்டிண்ட வேட்டி, உள்ளாடைகள், ப்ளவுஸ் போன்றவற்றைத் தூக்கி எறிவதே என் வழக்கம். இந்த விஷயத்தில் நான் ஓர் துணிப் புரட்சியே செய்திருக்கேன். வேட்டியானாலும் துடைக்கப் பயன்படும். மின் விசிறி, கிரைண்டர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைத் துடைக்கப் பயன்படுத்தலாம். அதிலும் ஆட்கள் வந்து வேலை செய்தால் பழந்துணி தான் கேட்பார்கள். ஆகவே அதுக்கெனத் துவைத்துத் தனியாக மடித்து வைப்போம். துண்டுகளும் அப்படிப் பயன் படுத்துவோம். ஆனால் இட்லிக்கு எல்லாம் அதற்கென விற்கும் காடாத்துணி அல்லது பாப்ளின் வெள்ளை தான் வாங்கிப் பயன்படுத்துவோம். முன்னெல்லாம் ஓரங்களில் தைத்து வைப்பேன். இப்போல்லாம் முடியறதில்லை! :(

      நான் கை துடைக்கத் தனியாகச் சின்னச் சின்னத் துண்டுகள் வாங்கி வைச்சுப்பதை ஒரு காலத்தில் எல்லோரும் கேலி செய்வார்கள். அதற்கு சோப்பெல்லாம் போட்டுத்துவைச்சும் வைச்சுப்பேன். கைப்பிடித்துணினு பேரிலே ரவிக்கையோ, புடைவைக்கிழிசலோ, பனியனோ பயன்படுத்துவதில்லை. கூசும்! என்னமோ எனக்கு அப்படி ஒரு பழக்கம் ஆரம்பத்தில் இருந்தே!

      நீக்கு
    3. இதனால் நிறையக் கேலி செய்வார்கள் தான்! ஆனாலும் சிலர் மாறிவிட்டார்கள். என் உறவினர் ஒருவர் கையாலேயே வீடு துடைக்கும் மாப் தயாரிக்கிறேன் பேர்வழினு மாப் கட்டி வரும் நீளக் குச்சியில் கீழ்ப்பாகத்தில் பழைய ஜட்டி, சாக்ஸ் எல்லாவற்றையும் அங்கே கட்டி வைத்து வீடு துடைப்பார். அவருக்கு மிகப் பெருமையாக இருக்கும். தான் ஏதோ சாமர்த்தியமாகச் செய்வதாகவும் அது யாருமே செய்யாத ஒன்று எனவும். ஆனால் எனக்கு என்னமோ சாக்ஸின் நாற்றமும், ஜட்டியின் நாற்றமும் வருவதாகத் தோன்றும். அவர் வீடு துடைக்கையில் அந்த இடத்தில் இருக்க மாட்டேன்! வேறு அறையில் போய் உட்காருவேன். :)))))))

      நீக்கு
  40. உங்களை அவங்க வீட்டு விசேஷத,துக்குக் கூப்பிடறாங்க, அங்க அவரைத் தவிர ஙேற யாரையும் தெரியாது. கூப்பிட்டவரோ, விசேஷத்தில் மேடையில் இருப்பார். அப்படிப்பட்ட விசேஷங்களுக்கு போவீங்களா? யாரையுமே தெரியாம அமர்ந்துவிட்டு வருவீங்களா, சாப்பிடுவீங்களா இல்லை ஏதேனும் சாக்கு சொல்லி போகாமல் தவிர்த்துவிடுவீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கேள்விக்கும் 2 நவம்பருக்கும் சம்பந்தம் கிடையாது? ஹி ஹி ஹி

      நீக்கு
    2. நவம்பர் 2 என்ன விசேஷம்? அது போகட்டும். அந்த மாதிரிச் சில சீமந்தங்கள், உபநயனங்கள், கல்யாணங்கள் எனப் போய் வந்திருக்கோம். நேரே மேடைக்கே போய் அங்கே அவங்களிடம் நம்ம வரவைத் தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்துவிட்டு வந்து உட்கார்ந்துப்போம். இதெல்லாம் நமக்கு ஜுஜுபி!

      நீக்கு
    3. அட, சாப்பிடுவீங்களானு கேட்டதைக் கவனிக்கலையே! நல்லா மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுத் தான் வருவோம். சமீபத்தில் கூட ஒரு கல்யாணம்! உறவுக்கு உறவுப் பெண்ணின் நாத்தனார் பெண் கல்யாணம். அவங்களை முன்னே, பின்னே பார்த்ததே இல்லை. ஆனாலும் வீட்டுக்கு வந்து கல்யாணத்துக்குக் கூப்பிட்டுப் போனாங்க! ஜம்முனு போயிட்டு காலை டிஃபன், மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வந்தோமே!

      நீக்கு
  41. பிள்ளையார் கொழுக்கட்டையைப் பார்த்துத்தான் உருளைக் கிழங்கு போண்டா தோன்றியிருக்குமா இல்லை உருளைக் கிழங்கு போண்டாவைப் பார்த,து பிள்ளையார் கொழுக்கட்டை தோன்றியிருக்குமா?

    பதிலளிநீக்கு
  42. முதல் முதல்லே பிள்ளையாருக்கு யார் கொழுக்கட்டை பண்ணிக் கொடுத்திருப்பாங்க? இப்போ ஜிஎம்பி சார் ஸ்டைலில் ஒரு கேள்வி? அது ஏன் பிள்ளையாருக்கு மட்டும் கொழுக்கட்டை? மத்தவங்களுக்குக் கிடையாதா? எனக்குத் தெரிஞ்சு இங்கே கருடாழ்வாருக்குக் கொழுக்கட்டை செய்யறாங்க! அது மாதிரிப் பிள்ளையார் இல்லாமல் மத்த எந்த உம்மாச்சிங்களுக்காவது கொழுக்கட்டை உண்டா? அட, வரலக்ஷ்மி விரதத்துக்கு இருக்கேனு எல்லாம் சொல்லப் படாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருடாழ்வாருக்குச் செய்வது கொழுக்கட்டை அல்ல. அதன் பெயர் அம்ருத கலசம். இதனை ஒருநாள் செய்து எ.பிக்கு அனுப்பணும்.

      கீசா மேடத்துக்கும் இந்த விஷயம் தெரியலை என்பதில் எனக்குப் பரம திருப்தி. ஹாஹா

      நீக்கு
    2. @ நெ.த., தெரிஞ்ச மாமியைக் கேட்டதுக்குக் கொழுக்கட்டையைத் தான் அமிர்த கலசம்னு சொல்வோம்னு சொன்னாங்க. அவங்க கோயிலோடு நீண்ட வருடங்கள் தொடர்புள்ளவர். உள்ளே வைக்கும் பூரணத்தில் மாற்றங்கள் உண்டுனு சொன்னாங்க! எதுக்கும் நீங்க செய்து அனுப்புங்க! தெரிஞ்சுக்கலாம்! நான் என்ன சகலகலாவல்லியா? எல்லாம் தெரிஞ்சு வைச்சுக்க! :)))) உணவு வகைகள் மட்டுமில்லை, எல்லாத்திலேயும் தெரியாதது, அறியாதது எத்தனையோ இருக்கு! கற்றது கைம்மண் அளவு கூட இல்லை. ஒரு சிட்டிகை தான்! :)))))

      நீக்கு
  43. அழகான பெண்கள் எனும் வரையறைக்குள் எதை வைத்து கணிப்பிட்டீர்கள் எனும் எதிர் விவாதத்தினை ஆரம்பித்து வைத்து, அன்பில் அறிவில் தாய்மையில் தம் பிள்ளைக்கு பாதுகாப்பாக செல்லும் எல்லா பெண்களும் அழகானவர்களே என முடித்து வைப்பதோடு காரில் வருவோரை விட நடந்து வருவோர் இன்னும் அழகானவர்கள் எனவும் கூறி வைப்பேன்.

    மற்றப்படி காலை நேரம் யார் எந்த காரில் எங்கே செல்கின்றார் என வெட்டியாக உட்கார்ந்து ஆராய்ச்சி செய்தவர்களுக்கு நோபமல் விருதுக்கா பரிந்துரைக்க முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1) சரியாக இருக்குமா என்று சோதித்துப் பார்ப்பீர்களா?

      2) புள்ளிவிவரங்கள் எல்லாம் வேஸ்ட் என்று நினைத்துக் கொள்வீர்களா?

      3) இதை ஆராய்ந்து பார்த்து எழுதியவர் யாராக இருக்கும் என்று யோசிப்பீர்களா?

      4) அவங்கவங்களுக்கு எவ்வளவோ வேலை கிடக்கு, இதுல இது பத்தி யோசிப்பது தேவையா என்று நினைப்பீர்களா?

      5) 'இந்த புள்ளி விவரத்தில் எங்கெல்லாம் தப்பு கண்டு பிடிச்சு, எழுதியவரை விமரிசிக்கலாம்' என்று ஆராய்ச்சி செய்வீர்களா?

      6) இதே போலவே, வேறு ஏதாவது புள்ளி விவரம் நீங்களும் எழுத இயலுமா என்று முயல்வீர்களா?

      7) இந்த ஆறு தவிர, வேறு ஏதேனும் ரியாக்ஷன் ?


      இல்லை தான் மேலே இருப்பது தான் என் ரியாக்சனாக இருக்கும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!