சென்ற வார பதிவில் நாங்கள் சொன்னது :
அடுத்த வாரம் உங்களுக்கு ஒரு ஜோஷியம் சொல்லப் போகிறோம் - அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான் : 660 க்குள் ஒரு மூன்று இலக்க எண் (001 to 660) அப்புறம் இருபதுக்குள் ஓர் எண் (01 to 20) கருத்துரையாக பதியுங்கள். உங்களுக்கான ஜோதிடம் அடுத்த வாரம் நம் ஆஸ்தான ஜோதிடர் சொல்லுவார்.
இப்போது சில வாசகர்கள் சொன்ன எண்களுக்கு எங்கள் வாக்கிய ஜோதிட சிந்தாமணி ஸ்ரீ ஸ்ரீ வாக்கியானந்தா சொல்லியிருக்கும் ஆரூடம்.
வல்லிசிம்ஹன் :
660க்குள் ஒரு எண் 227, 20க்குள் ஒரு எண் 14
ஜோ சி வா : இந்த நேயருக்கான சுத்த வாக்கிய ஆரூடம், 'ஒளிரும் தன்மை'. ஒளிரும் தன்மை என்பது சுயம்புவான ஒளி. வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்கள் நிறைய கொண்டவர். எல்லோருமே நன்றாக வாழவேண்டும், அனைவரும் சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைப்பவர். யாருக்கும் தீங்கு நினைக்கமாட்டார். இன்சொல், மலர்ந்த முகம் இரண்டும் இவரின் அடையாளங்கள்.
ஜெயக்குமார் சந்திரசேகரன் :
600க்குள் ஒரு எண் 238, 20க்குள் ஒரு எண் 17
இந்த நேயருக்கான சுத்த வாக்கிய ஆரூடம், 'நுரை'. எந்த திரவத்தை கடைந்தாலும் மேலே தோன்றுவது நுரை. அலை கடல் ஓரத்திலும் நுரை; சோப்புத் தண்ணீரை அலசினாலும் நுரை. ஆனால் எங்கு தோன்றினும் நுரை வெண்மை நிறம். இவர் பல எண்ணங்களைத் தன்னகத்தே வைத்து, அவற்றை அலசி ஆராய்ந்து நுரை வருகின்ற வரையில் கடைந்தெடுத்துத் தெளிந்த எண்ணங்களைக் கொண்டவர். சில சமயங்களில், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பார். தான் கண்டு ஆய்ந்ததே சரி என்னும் தன் எண்ணத்தை சுலபமாக மாற்றிக்கொள்ளமாட்டார்.
Geetha Sambasivam :
ஓஓ, இந்த நம்பர் சொல்லணுமா? எல்லோரும் சொல்லி இருக்காங்களே, என்னடாப்பானு பார்த்தேன். 660க்குள்ளாக 300 20க்குள்ளாகப் பதினைந்து.
ஜோ சி வா : இந்த நேயருக்கான சுத்த வாக்கிய ஆரூடம், 'தைரியசாலி - யாராலும் வெல்லமுடியாதவர்' வாழ்க்கையில் பல தைரியமான முடிவுகளை எடுத்து, உறுதியுடன் அதை நிறைவேற்றுபவர். நண்பர்களை விட்டுக்கொடுக்கமாட்டார். சில நம்பிக்கைகளை மட்டும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவார். சில சமயங்களில் சில விஷயங்களில் ஏமாற்றம் அடைந்தாலும் அதை வெளிக்காட்டமாட்டார்.
Bhanumathy Venkateswaran :
420 & 15
ஜோ சி வா : இந்த நேயருக்கான சுத்த வாக்கிய ஆரூடம், 'எங்கும் வியாபிக்கக்கூடியவர்'. சூழ்நிலைகளுக்கேற்ப சுலபமாக தன்னை மாற்றிக்கொள்வதில் வல்லவர். சகல கலா வல்லவர். எதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம் கொண்டவர்.
Anuprem:
500, 10
ஜோ சி வா : இந்த நேயருக்கான சுத்த வாக்கிய ஆரூடம், 'கலகலப்பானவர்'. இவர் இருக்கும் இடத்தில் கலகலப்பு என்றுமே இருக்கும். எந்த சூழ்நிலையிலும் இருக்கும் நேர்மறை விஷயங்களை உடனே கிரகித்துக் கொண்டு, அதை அனுபவிப்பார். இவரை முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம்.
= = = =
ஜெயக்குமார் சந்திரசேகரன் :
1. கத்தரிக்காய் விலை எப்போது குறையும் ?
# விளைச்சல் அமோகமாக இருக்கும் போது.
& ஆற்காடு சீதாராமன் பஞ்சாங்கப்படி, சுபகிருது ஆண்டு தொடக்கத்தில் கத்தரிக்காய் விலை குறையும் என்று தெரிகிறது.
2. மார்க்கட்டில் புதிய காய் வகை ஏதாவது வாங்கி அதை எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தது உண்டா? (உ-ம் Artichoke Belgian sprouts காச்ச கிழங்கு)?
# கிடையாது.
& சமீபத்தில் மரவள்ளிக்கிழங்கு ஆன் லைன் ஆர்டர் செய்து (என்னவோ தோணுச்சு !) வாங்கினேன். அப்புறம் அதை என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் சுட்டு சாப்பிட்டு, கொஞ்சம் வேக வைத்து சாப்பிட்டு, கஷ்டப்பட்டு தீர்த்துக்கட்டினேன் !
3. பழுக்காத காய்கள் சில கூறவும் (உ-ம் முருங்கைக்காய்)?
# தேங்காய் பூசணிக்காய் கொத்தவரை...
& பொரிவிளங்காய்
4. bake செய்து சாப்பிடக்கூடிய காய்கள் எவை?
# சகிப்புத் தன்மை இருந்தால் கிட்டத்தட்ட எல்லாமே.
5. சைவ கொத்து ப்ரோட்டா சாப்பிட்டிருக்கிறீர்களா? எப்படி செய்வது?
# பிளேட்டில் வைத்துக்கொண்டு கையால் எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.
& சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சென்னை கடற்கரை ஸ்டேஷன் எதிரே ஹோட்டல் பிரகாஷ் என்ற இடத்தில் சாதா (சைவ) பரோட்டா சாப்பிட்டது உண்டு.
6. ஆவிகள் சத்தம் போடாது. கண்ணுக்கு தெரியாது. கண்ணுக்கு தெரியும் சத்தம் போடும் ஆவி எது?
# கொட்டாவி தான்.
$ நீராவி.
& தாராவி
7. மிதி அடி என்ற இரு வினைச் சொற்கள் சேர்ந்து மிதியடி என்ற பெயர்ச்சொல்லாகியது. இது போன்று சில உதாரணங்கள் கூறவும்.
# "இது போன்று சில உதாரணங்கள்."
நெல்லைத்தமிழன் :
# நிலைமை இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை - இறைவனுக்கு நன்றி..
& இல்லை. இன்னும் பாரக்கப்போனால் - எனக்கு சிறு வயதிலிருந்தே பசி என்ற உணர்வே எப்படி இருக்கும் என்று தெரியாது. பட்டினி கிடந்தது உண்டு.
# பழகினால் எதுவும் ஒத்துப் போகும்.
& எனக்கு வெயில் காலத்தை சமாளிப்பதை விட குளிர் காலத்தை சமாளிப்பது எளிது என்று தோன்றுகிறது. வெயில் காலத்தில் பவர் கட் வந்தால் எரிச்சலாக இருக்கும். ஆனால் குளிர்காலத்தில் பவர் கட் வந்தாலும் கவலை இல்லை.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
எ.பி. உறுப்பினர்களை பிக் பாஸ் போல ஒரு வீட்டில் 100 நாட்கள் இருக்க வைத்தால் எப்படி இருக்கும்? யார் டைட்டில் வின் பண்ணுவார்கள்?
# உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நான் பார்த்ததில்லை. அதன் நுணுக்கங்கள் சுவாரசியங்கள் எனக்கு ஊகமாகத்தான் தெரியும். சில பேரை ஒரு இடத்தில் அடைத்துவைத்து அவர்களுக்கிடையே விவாதம் சச்சரவு என்ன வருகிறது என்று பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால், எ பி ஆசிரியர்கள் / வாசகர்கள் தமக்குள் சமரசமாகப் போகும் இயல்பு கொண்டவர்கள் என்பதால், நிகழ்ச்சி இரண்டொருநாளில் காணாமல் போய் விடும்.
உள்ளத்தில் நல்ல உள்ளத்தை சித் ஸ்ரீராம் நன்றாகத்தானே பாடியிருக்கிறார்? ஏன் அவரை கழுவி ஊற்றுகிறார்கள்?
காணொளி : -
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
பதிலளிநீக்குஎழுமையும் ஏமாப்பு உடைத்து.
வாழ்க குறள் நெறி..
வாழ்க.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குதேங்காய் - பழுக்காதா?..
பதிலளிநீக்குதேங்கா பழம் என்று தானே கேட்கிறார்கள்!...
ஹ ஹ ! அது தேங்காய் மற்றும் பூ, பழம் - பூஜை பொருட்கள்.
நீக்குதெங்கம்பழம் என்பது நாலடியார்...
பதிலளிநீக்குஅப்படியா!! அப்படிப் பார்த்தால், முழு தேங்காய் மட்டையுடன் கூடியது பழம் என்றும், தேங்காய் = கொட்டை என்றும், உள்ளிருப்பது பருப்பு என்றும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
நீக்குகாரட், முள்ளங்கி..
பதிலளிநீக்குஓ.. இதெல்லாம் காய் இல்லை.. நிலத்தடி வகையறாக்கள் ஆயிற்றே!..
அதே, அதே!
நீக்குபழுத்து வறண்டு வற்றலாகி பொடிப் பொடியாய் போனாலும் பழம் (!) பெயரை விடாதது - மிளகாய்!..
பதிலளிநீக்குஅட ! ஆமாம் !!
நீக்குமிளகுக்கு மாற்றாக வெளி தேசத்தில் இருந்து வந்ததால் மிளகாய்..
பதிலளிநீக்குநல்ல வேளை..இது ரொம்பவும் காரம் என்பதால் தனித் தமிழ் தும்பிகள் ஆர்வலர்கள் யாரும் இதற்குள் நுழைய வில்லை..
இல்லாவிட்டால் -
மிளகாய் என்பது மிளபழம் என்றாகி இருக்கும்..
தப்பித்தது/ தப்பித்தோம்..
:))))
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம், வாங்கோ!
நீக்குதேங்காயை தெனங்கனி (தென்னங்கனி) என்று கயிலாயத் திருப்புகழில் அருணகிரியார் குறிப்பிடுகின்றார்..
பதிலளிநீக்குஇப்போது தான் பார்த்து விட்டு வந்தேன்..
தகவலுக்கு நன்றி.
நீக்குஜோசியம் ஆரூடம் என பதில்கள் சுவையாக இருந்தன. சில பதில்கள் நகைச்சுவை.... அனைத்தையும் ரசித்தேன்... படங்கள் அனைத்தும் நன்று.
பதிலளிநீக்குஇரசித்ததற்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்குசித் ஸ்ரீராம் பாடல் இப்போதுதான் முதல்முறையாக கேட்கிறேன். சீர்காழி அவர்களின் கம்பீரம் மிகுந்த குரலில் கேட்டு பழகியவர்களுக்கு சித் ஸ்ரீராம் பாடியது பிடிக்காது தான்.... அவருக்கான பாடல் இதுவல்ல.
பதிலளிநீக்குஆம், உண்மைதான்!
நீக்குபிடிக்காமல் போகட்டும்,அது அவர்களின் பிரச்சனை. சித் ஸ்ரீராம் பாடல் கேட்கும் பொழுது சீர்காழி கோவிந்தராஜனை ஏன் நினைக்க வேண்டும்? சித் ஸ்ரீராம் இந்த பாடலை எப்படி பாடியிருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். அதற்காக ஏக வசனத்தில் தரம் கெட்ட வார்த்தைகளால் விமரிசிப்பது நியாயமா?
நீக்கு// அதற்காக ஏக வசனத்தில் தரம் கெட்ட வார்த்தைகளால் விமரிசிப்பது நியாயமா?// நியாயம் இல்லை. கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
நீக்குநான் பார்த்த வரை facebook ல கிண்டல் செய்தவர்கள்தான் அதிகம். தரம் தாழ்ந்த விமரிசனங்கள் எதுவும் (நல்ல வேளையாக) எண் கண்ணில் படவில்லை.
நீக்குஎன் கண்ணில் ..
நீக்குஜோசியம் என்றால் நடந்தவை, நடப்பவை, நடக்கப்போவது போன்ற விஷயங்களை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். பதில் குணாதிசயங்களை விவரிப்பதாக உள்ளது.
பதிலளிநீக்குகேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி.
மிதியடி போன்ற உதாரணங்கள் சில.
விளக்கு + மாறு விளக்குமாறு
குத்து + விளக்கு குத்துவிளக்கு
ஊறு + காய் ஊறுகாய்
ப. பா. க
முதல் படம் சரணாகதி
இரண்டாம் படம் : சூரிய நமஸ்காரம் செய்வது சரியில்லை.
மூன்றாம் படம் கீழே பார்க்காதீர்கள் தலை சுற்றும்.
Jayakumar
:))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குநடை+பயிற்சி = நடைப்பயிற்சி
நீக்குஆஹா !
நீக்குஎனக்கு சட்னு என்ன தோணுது பாருங்கள்.
நீக்குதா + அணி - தாவணி
:)))
நீக்குஆஹா
நீக்கு@ கௌதமன்..
பதிலளிநீக்கு// அப்படிப் பார்த்தால், முழு தேங்காய் மட்டையுடன் கூடியது பழம் என்றும்... //
இங்கு (தஞ்சையில்) மேல ராஜவீதி ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி (பங்காரு காமாக்ஷி) அம்மன் சந்நிதியில் கணுப் பொங்கல் அன்று மட்டைத் தேங்காய் சமர்ப்பிப்பது வழக்கம்
ஓ ! அப்படியா !!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஒமிக்ரான் தொற்று, கொரோனா தொற்று என்று எந்தத் தொற்றும் இல்லாத வாழ்வு வேண்டும் இறைவா.
வேண்டுவோம். உலக க்ஷேமத்திற்காக தினமும் வேண்டிக்கொண்டு வருகிறேன். முயற்சியைத் தொடர்வோம்.
நீக்குகொடுத்த எண்களுக்கு நேர்மறைப் பதில்கள்
பதிலளிநீக்குகொடுத்தது மிக மகிழ்ச்சி.
எட்டாம் நம்பரின் ஆதிக்கம் வார்த்தைகளில் தெரியும்.
ஒன்பதாம் எண் நேருக்கு நேர் சொல்லிவிட்டு
அவஸ்தைப் படலாம்.
நாலாம் எண் விதிவழி வாழ்வு.
ஐந்தாம் எண் எல்லோருடனும் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.
ஒன்றாம் நம்பர்க்காரர்கள் ஆதிக்கமும் செலுத்தி வெற்றியும் பெறுவார்கள்.
பழைய எண் சோதிடம்:)
தகவல்களுக்கு நன்றி.
நீக்கு
பதிலளிநீக்கு.கேள்விகள் பதில்கள் வழக்கத்தைவிட சுவாரஸ்யம்.
மிக ரசித்தேன்.
முதல் பதில் ஹாஹாஹா.
ஏழாம் கேள்வி பதில் சூப்பர்ப்.:)
நன்றி, நன்றி!
நீக்குமுதல் படம். கீதோபதேசம். அர்ஜுனனுக்குப் பெண் போல தலை
பதிலளிநீக்குமுடிந்திருக்கிறது.:))))))
:))
நீக்குஹாஹாஹா ஜோகியம் இங்கு வரும் கருத்துகளை வைத்து அனலைஸ் செய்தது போல இருக்கே!!!!!!
பதிலளிநீக்குகீதா
இல்லை. இது வேறு ஓர் உபாயம் என்று சொல்கிறார் ஸ்ரீ ஸ்ரீ வா
நீக்குஆம் எனக்கும் இப்படி தோன்றியது.
நீக்குகில்லர்ஜி எந்த நம்பரை எழுதினாலும், நான், 'நீங்கள் நேர்மையாக இருக்கணும் என்று நினைப்பவர். உதவும் மனப்பான்மை. எல்லோரும் ஓரளவு ஒழுக்கத்துடன், ஒரு ஒழுங்குடன் இருக்கணும் என்று நினைப்பதால்/சொல்வதால் சிலரின் கோபத்துக்கோ/வெறுப்புக்கோ ஆளாவீர்கள். பிறருக்கு உதவுவது என்பது உங்களுக்கு இயல்பான குணம்' என்று சொன்னால், அவர் என்ன, இல்லை என்றா சொல்லப்போகிறார்? இதுவே பா.வெ வுக்கு, கலகலப்பாகப் பழகும் இயல்பு, புதிது புதிதாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வம், ரொம்ப அட்ஜஸ்டபிள் டைப் என்று சொன்னால், அவர் ஆமாம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வார்? ஸ்ரீராம் என்றால், கூச்ச சுபாவம் அதிகம், நீங்களே போய் எல்லோரிடமும் பேச மாட்டீர்கள், ஆனால் நட்பை மதிக்கும் சுபாவமும் ரகசியத்தைக் காக்கும் சுபாவமும் உண்டு, உணவு/எழுத்து/கலை போன்றவற்றின் கலாரசிகர் நீங்கள் என்று சொன்னால், நீங்க சூப்பர் ஜோசியர் என்று சொல்லாமலா விடுவார்?
நீக்குஅடக் கடவுளே. இந்த எண் ஜோசியத்தின் அடிப்படை எது என்று அடுத்த வாரம் அந்த ஜோதிடர் கூறுவார். பொறுத்திருங்கள்.
நீக்குநெல்லை - ஹாஹாஹாஹா....
நீக்குகௌ அண்ணா //அடக் கடவுளே. இந்த எண் ஜோசியத்தின் அடிப்படை எது என்று அடுத்த வாரம் அந்த ஜோதிடர் கூறுவார். பொறுத்திருங்கள்.//
ஹாஹாஹா கேஜிஜி என்பவர் தற்போது ஜோசியர் அவதாரம் எடுத்து ஜோதிட சிந்தாமணி ஸ்ரீ ஸ்ரீ வாக்கியானந்தா அடுத்த வாரம் தன் வித்தையின் ரகசியத்தை வெளியிடுவார்!!
கீதா
:)))
நீக்கு& எனக்கு வெயில் காலத்தை சமாளிப்பதை விட குளிர் காலத்தை சமாளிப்பது எளிது என்று தோன்றுகிறது. வெயில் காலத்தில் பவர் கட் வந்தால் எரிச்சலாக இருக்கும். ஆனால் குளிர்காலத்தில் பவர் கட் வந்தாலும் கவலை இல்லை. //
பதிலளிநீக்குஎனக்கும் அப்படியே
கீதா
ஆஹா ! நன்றி.
நீக்குஎ.பி. உறுப்பினர்களை பிக் பாஸ் போல ஒரு வீட்டில் 100 நாட்கள் இருக்க வைத்தால் எப்படி இருக்கும்? யார் டைட்டில் வின் பண்ணுவார்கள்?//
பதிலளிநீக்குஹாஹாஹா அக்கா இது நல்லாருக்கே!!!
நெல்லை இன்னும் எதுவும் சொல்லவில்லை போல!!
கீதா
பார்ப்போம்!
நீக்குஎன் இயல்வு, பத்து நிமிடங்களுக்கு மேல் யாரிடமும் பேச மாட்டேன். வீட்டிலும், மற்றவர்கள் இருக்கணும் என எதிர்பார்ப்பேனே தவிர, பேசணும், சேட்டர் பண்ணணும் என எதிர்பார்க்க மாட்டேன், அவர்கள் பேசினாலும் சில நிமிடங்களில் மௌனம்தான்.
நீக்குஎன்னால் அமைதியாக (ஏதாவது வேலை செய்துகொண்டு) நாட்கணக்கில் இருக்க முடியும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குசித் ஸ்ரீராம் நன்றாகத்தான் பாடியிருக்கிறார். பதிலில் சொல்லியிருப்பது போல் கேட்டும் பழகிப் போன குரல் பதிந்துவிட்டால் பிடிக்காமல் போயிடும்...
பதிலளிநீக்குசித் ஸ்ரீராம் குரல் வித்தியாசமான குரல். மிகச் சிறு வயதிலிருந்தே படித்து வளர்ந்தது அமெரிக்காவில் என்பதால் உச்சரிப்பு சிலருக்குத் தெரியலாம்... ஆனால் தெளிவாகத்தான் உச்சரிக்கிறார். இங்கிருக்கும் சிலரே சொன்ன என்பதை ஷொல்லி என்று உச்சரித்துப் பாடுவதை விட!!!!!
கீதா
:))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குஜோசியம் சொல்லிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது.
பதிலளிநீக்குநன்றி, ஜோ சார்பில்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.
இதுவரை வந்த கருத்துரைகளின் அலசல்கள் நன்றாக உள்ளது.
எப்போதும் அடிக்கும் வெய்யிலை விட, குளிர் காலம் மட்டுமான குளிரை தாங்கி விடலாம் என்றுதான் நினைக்கிறேன்.
ஜோதிட பலன்களின் கணிப்பு அருமை. சித் ஸ்ரீராம் பாடலை இனிதான் கேட்க வேண்டும். ஒருவரின் பிரசித்திபெற்ற பாடல் மனதுக்குள் அசையாது நின்று விட்டால், அதை மாற்றுவது கடினந்தான்.
படம் 1. தயவு செய்து என்னை கைவிட்டு விடாதே..!!
படம் 2. அடாடா.. இந்த கால்களும் நம்மை கைவிட்டு விடும் போல் இருக்கிறதே..!!
படம் 3.யார் கை விட்டாலும் ஓம் என்ற மந்திரத்தை விடாது கூறு. என்(இறைவன்) கை எப்போதும் உனக்கு சிரமங்கள் ஏதுமின்றி உன்னை தாங்கும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு//தயவு செய்து என்னை கைவிட்டு விடாதே..!!// - ஒரு ஆண் பெண் என்றால் உடனே காதல், ஏற்றுக்கொள், ஜாலி - இதுதான் நினைவுக்கு வரவேண்டுமா?
நீக்குதன் நண்பனுக்கு உடம்பு சரியில்லை என்றோ அல்லது அவன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றோ அவன் பகிர்ந்துகொள்ளும்போது, உடனே தன் bagஐ அவனிடம் கொடுத்துவிட்டு, அங்கேயே மண்டியிட்டு ப்ரார்த்திக்கிறாள் என்று ஒரு சிந்தனை யாருக்குமே வரலையே....
எல்லாம் ஜொள் பார்ட்டி என்று சொல்லலை...ஆனால் ஆண் பெண் என்றால் அங்கே காதல் என்று நன்றாகவே நம் மனதில் பதிந்துவிட்டது போலிருக்கு ஹா ஹா
வித்தியாசமான சிந்தனை. முயன்றால் ஒரு கதையாக டெவலப் செய்யலாம்!
நீக்குஹா.ஹா.ஹா.
நீக்கு/தன் நண்பனுக்கு உடம்பு சரியில்லை என்றோ அல்லது அவன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றோ அவன் பகிர்ந்துகொள்ளும்போது, உடனே தன் bagஐ அவனிடம் கொடுத்துவிட்டு, அங்கேயே மண்டியிட்டு ப்ரார்த்திக்கிறாள் என்று ஒரு சிந்தனை யாருக்குமே வரலையே.../
தங்களுடையது மிகவும் நல்ல சிந்தனை. நான் அந்தப் பையன் கையிலிருக்கும் பையை முதலில் பார்க்கவில்லை. அந்தப் பெண்ணின் முகபாவம் வருத்தத்தை மட்டும் காண்பித்தது. அந்த முகபாவத்தில் ஏதும் பிரச்சனைகள் போலும் என்ற எண்ணத்தில் அந்த வார்த்தைகள் பிறந்து விட்டது.
படம் 3 க்குரிய கருத்தில் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளது. ஆனால், அனைவருமே இறுதியில்தான் அதை உணர்வோம். இதிலும் உணரும் சமயத்தில்,உயிரற்ற உடலாகி பிரச்சனைகள் அடுத்தப் பிறவிக்காக காத்திருக்க ஆரம்பித்து விடும். ஹா ஹா. நன்றி.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநெல்லை ஆண் பெண் என்றால் அப்படியான சிந்தனை வர வேண்டும் என்றில்லை எனப்தை நான் அப்படியே ஏற்கிறேன். உங்கள் கருத்து சூப்பர். ஏனென்றால் எனக்கு ஆண் நண்பர்கள் நிறைய உண்டு முன்பு கல்லூரி காலத்தில். அதனால் என் சிந்தனையும் இதே தான்.
நீக்குஆனால் இந்தப் படம் அப்படிச் சொல்லவில்லை. பேகை எதுக்கு அவன் கையில் கொடுக்கணும்? தரையில் வைத்துவிட்டு மண்டியிட்டு அழலாமே...இதில் பாடி லேங்குவஜ் அப்படி இல்லாததால் தான் நார்மலான கருத்து
கீதா
என்னா கீதா ரங்கன்(க்கா). நீங்க ஒருத்தரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கணும்னா, கையில் உள்ளதை அவர் கையில் கொடுத்துவிட்டா மன்னிப்பு கேட்பீர்கள்? பையை கீழே வைத்துவிட்டுத்தானே மன்னிப்பு கேட்பீர்கள். எதுக்கு அழணும்? சரி..அழுதாலும் பையை அவன் கையில் கொடுத்துவிட்டா அழுவாள்?
நீக்குஎன்னதான் யோஜிக்கிறீங்களோ
ஜோசியம் சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்தால்... உட்டாலக்கடி ஜோசியமாக இருக்கிறதே.. கர்ர்ர்ர்ர்ர்ர்!
பதிலளிநீக்கு:))) என்ன உட்டாலக்கடி !! ??
நீக்கு1. என்னைக் கை விட்டால் பரவாயில்லை, என் பையை விட்டு விடு.
பதிலளிநீக்கு2. யோகா செய்யும் பொழுது லேசாக வளைந்தால் நடனம்.
3. உள்ளங்கையில் வைத்து தாங்குவது என்பது இதுதானோ?
:)) கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇதுதான் யோகா செய்யும் உடையா?
நீக்கு:)))
நீக்குஇதுதான் யோகா செய்யும் உடையா?//
நீக்குபாருங்க கௌ அண்ணா, ஜோசியர் ஸ்ரீ ஸ்ரீ வாக்கியானந்தா கரெக்ட்டாதன் சொல்லியிருக்கிறார்!!!
கீதா
1. இரண்டு சின்னப் பசங்க....காதலரோ இல்லை லைசன்ஸ்டோ....ஏதோ பிரச்சனை...அந்தப் பையன் மிரட்டறான் போல...யப்பா கையெடுத்துக் குடும்பிடறேன் விட்டுருப்பா...ன்னு..(லைசென்ஸ்ட்னா காட்சியே ஊல்டாவா இருந்திருக்குமோ!!!!!!)
பதிலளிநீக்கு2. நடனப் பயிற்ச்சி. என்ன அப்படிப் பார்க்கறீங்க? நான் செய்யறது சரிதானுங்கோ!
3. ஃபோட்டோஷாப் - நான் உன்னைக் கையில வைச்சுத் தாங்கறேன்னு சொன்னாலும் நீ இறங்கிப் போகப் பார்க்கறியே!!
கீதா
பயிற்சி - இடையில் ஒற்று ச் வந்துவிட்டது டைப்பும் போது!!
நீக்குகீதா
அதனால் என்ன பரவாயில்லை. மின்நிலா இதழில் பிரசுரிக்கும்போது சரியாக செய்துவிடுகிறேன். கருத்துரைக்கு நன்றி.
நீக்குமிக்க நன்றி அண்ணா
நீக்குகீதா
பூசணிக்காய் தாவரவியலின்படி பழமாக்கும்!!!!
பதிலளிநீக்குகீதா
அப்படியா!!
நீக்குஅதுக்காக உங்க வீட்டுக்கு வரும்போது வெத்தலை பாக்கு பழம் தர்றேன்னுட்டு, பூசனிக்காயை வச்சுத் தந்துடாதீங்க. என்னால கொண்டுபோக முடியாது. அதுக்குப் பதிலா முத்தல் பூசணி வாங்கி, காசி அல்வா செய்துதந்தால் சாஸ்திரப்படி வெத்தலை பாக்கு பழம் கொடுத்தமாதிரி ஆயிடும்
நீக்குஇது நல்ல யோசனை!
நீக்குநெல்லை ஹையோ சிரித்து முடியலை....விவிசி!!!
நீக்குகீதா
அடடே ஆரூடம் நல்லாத்தான் இருக்கு...
பதிலளிநீக்குஎட்டும் எட்டும் ஏழு...! (8+8=7)
?
நன்றி.
நீக்குபாட்டு ரொம்ப நல்லா பாடியிருக்கார். ஆனால் பின்னணில கர்ணன் படம் வச்சதுதான் சரியில்லை. அவங்களே படத்தையும் பாடலையும் நினைவுபடுத்தியதால்தான் நிறைய எதிர்ப்புக்குரல்கள் எழுந்திருக்கலாம்.
பதிலளிநீக்குகரெக்ட்.
நீக்கு//கர்ணனின் நல்ல உள்ளத்தை சீர்காழி மட்டுமே பாட வேண்டும் என்று சிலர் நினைக்கலாம்// - இந்தத் தலைமுறைக்கு சீர்காழி என்பது ஒரு ஊர் என்பதுமட்டுமே தெரியும். சித் ஸ்ரீராம் போன்றவர்கள் நல்ல பாடல்களை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதைக் குறை சொல்பவர்களுக்கு வேறு வேலை கிடையாது என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குஇந்தத் தலைமுறை சித் ஸ்ரீராம் குரலை ஆஹா ஓஹோ என்று போற்றுவதைக் கண்டிருக்கிறேன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇந்தத் தலைமுறை சித் ஸ்ரீராம் குரலை ஆஹா ஓஹோ என்று போற்றுவதைக் கண்டிருக்கிறேன்.//
நீக்குஹை அப்ப எனக்கு உங்க பேத்தி வயசுதான்!!!!
கீதா
:))
நீக்குமருமகளுடைய ரசனையிலேயே தானும் இருக்கணும்..அப்போதான் இடைவெளியே இருககாதுன்னு இப்பவே சிந்திச்சு, அடுத்த தலைமுறைக்குப் பிடிப்பதையே கேட்டு, அடுத்த தலைமுறை உணவையும் பழக்கப்படுத்திக்கிட்டு.......
நீக்குஎன்னால் இந்த மாதிரியெல்லாம் திட்டம் போட்டு வேலை செய்யமுடியாது சாமீ..
அதுக்காக 'பேத்தி வயசு'ன்னு சொல்லிட்டீங்களே...அப்போ கீசா மேடம் இன்னும் பத்து வருடங்கள் கழித்துத்தான் பிறக்கணும் போலிருக்கு
:))
நீக்கு//கச்சேரியில் சினிமாப் பாடல்களை ரசிக்காத கூட்டம் ஒன்று உண்டு.// - எனக்கு, எந்த வாய்ப்பு கிடைத்தாலும் குறையொன்றுமில்லை பாடலைப் பாடி ஜல்லியடிப்பவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. வேற பாட்டே இவங்களுக்குக் கிடைக்கலையா என்று தோன்றும். நூற்றுக்கணக்கான தடவை, வெவ்வேறு நிகழ்வுகளில் பலர் பாடி, அந்தப் பாடலை விட்டுடுங்கப்பா என்று சொல்லத் தோன்றும்.
பதிலளிநீக்கு:)) ஓஹோ! குறை ஒன்று இங்கே இருக்கு கண்ணா !!
நீக்குஎனக்கு, எந்த வாய்ப்பு கிடைத்தாலும் குறையொன்றுமில்லை பாடலைப் பாடி ஜல்லியடிப்பவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. வேற பாட்டே இவங்களுக்குக் கிடைக்கலையா என்று தோன்றும். நூற்றுக்கணக்கான தடவை, வெவ்வேறு நிகழ்வுகளில் பலர் பாடி, அந்தப் பாடலை விட்டுடுங்கப்பா என்று சொல்லத் தோன்றும்.//
நீக்குநெல்லை ஹைஃபைவ் ஹைஃபைவ்!!! இன்னிக்குக் காலைலதான் பானுக்காவும் நானும் பேசிய போது இதைச் சொல்லிக் கொண்டிருந்தோம் அக்காவுக்கும் உங்க கருத்து நானும் அப்படியே டிட்டோ...போர்!!!
கீதா
ஆரூடம் சொன்னவர் இப்படிச் சொல்லியிருப்பார். அந்த நபர் ஏதேனும் நம்பர்கள் சொல்லியிருந்தால்....இது யாருக்கானா ஆரூடமாக இருக்கும் என்று சொல்லுங்கள்...!!!!
பதிலளிநீக்குஇந்த நேயருக்கான சுத்த வாக்கிய ஆரூடம் - தைரியமாகத் தன் எதிர்க்கருத்துகளையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். பாராட்டுதல் அபூர்வம் என்றாலும் பாராட்டினால் அது சரியாக இருக்கும். கலைத்திறமை உடையவர். சாப்பாட்டில் ஆர்வம் உள்ளவர் என்பதோடு வீட்டில் கிச்சன் கில்லாடியாகத் திகழும் திறமையும் ஆர்வமும் உள்ளவராக இருப்பார். படங்கள் நன்றாக வரைவார். மற்றவர்களைக் கலாய்த்து வாருவதில் இவரைச் சுற்றி கலகலப்பு இருக்கும். நேர்மையானவர் என்பதால் வார்த்தைகள் சில சமயம் கடுமையாக இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் மனதளவில் நல்லவர். சில சமயம் இவரது சிந்தனைகள் வித்தியாசமாக இருக்கும். சிக்கனக்காரராகவும் இருப்பார்.
கீதா
ஹா.ஹா.ஹா. சூப்பர். இது சந்தேகமில்லாமல் அவர்தான்.. தங்கள் ஆரூடத்தை ரசித்தேன்.நன்றி.
நீக்குஇருங்க - அவர் இதைக் கண்டுபிடிக்கிறாரா என்று பார்ப்போம்!!
நீக்குஜோதிட சிந்தாமணி ஸ்ரீ ஸ்ரீ வாக்கியானந்தா சொல்கிறார் - அவருக்குத் தெரிந்தாலும் தெரிந்தது போல் வெளியில் காட்டிக் கொள்ளும் பழக்கம் இருக்காது, சில விஷயங்களில். பதில் சொல்வதற்கு நிறைய யோசித்துப் பதில் சொல்வார். சரியான பாயிண்டைப் பிடிப்பதற்குக் கொக்கு போல் தவமிருப்பார்!வயதான பிறகும் கூட அவருக்கு மேற்கொண்டு படிக்கும் சரஸ்வதி, ஹயக்ரீவர் கடாக்ஷம் இருக்கிறது. ஆன்மீக நாட்டம் இருந்தாலும் ஒரு ஒல்லி இடையுடைய பெண்ணை அவ்வப்போது சிலாகிப்பது தெரிந்தாலும் தற்போது குறைந்திருப்பதாக இந்த நம்பர் அப்படிச்சொல்கிறது.
நீக்குகீதா
ஆஹா ! பிச்சு உதறிட்டீங்க !!
நீக்குஎன் பெண், என் ஆபீஸ் பார்ட்டிக்கு மற்றும் சிறிய அவுட்டிங்குக்கு வந்திருந்தாள். அங்க, என் ஆபீஸைச் சேர்ந்தவர்கள் எனக்குத் தரும் மரியாதை, ரொம்பவே பவ்யமாகப் பேசுவது என்பதையெல்லாம் பார்த்து, வீட்டுக்கு வந்தபிறகு, இவ்வளவு மரியாதையா உங்களுக்கு, என்று என்னுடைய இன்னொரு பக்கத்தைப் பார்த்து சிலாகித்தாள்.
நீக்குமனைவியின் சைடில், பெரும்பாலானவர்கள், 'அவரா..ரொம்ப கலகலப்பு. ரொம்ப நல்லவர்.. ஸ்வீட்லாம் சூப்பரா பண்ணுவார். பந்தா இல்லாத டைப். வீட்டுக்கு மாப்பிள்ளை என்ற பந்தாவே கிடையாது' என்றெல்லாம் சொல்வார்கள்.
மனைவியின் இன்னொரு ரிலேஷனின் பெண் (என் பெண் வயது), ரொம்ப ஜாலி டைப் நீங்க, உங்களைப் பார்த்தபோது கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்று தோன்றியது என்றெல்லாம் சொல்லுவாள்.
மனைவியிடம் கேட்டால் ஹா ஹா. 'நரி வலம் போனா என்ன இடம் போனா என்ன' கதைதான்.
ஆபீஸுல... என்னிடம் (ஒரு காலத்தில்... பிறகு நானே என்னை மாற்றிக்கொண்டேன்) வந்து பேசுவதற்கு கொஞ்சம் அஞ்சுவார்கள். யாருக்கும் வளைந்துகொடுக்கமாட்டேன். கம்பெனிக்கு மட்டும்தான் உண்மையா இருப்பேன்.
ஒரு மனிதனுக்குப் பல முகங்கள். அவன் உண்மை முகம் யாருக்குத் தெரியும்?
நல்ல அலசல். (கடைசி வரி அடுத்த புதனுக்கான கேள்வியா?)
நீக்குபகிர்வு ரசனை.
பதிலளிநீக்கு1) உன்னுடன் வருமுன் இறைவனிடம் பிரார்த்தனை :)
2) இதுதான் புது நடனம்.
3) என் கைகளில் தாங்கிக் கொள்வேன்.
அடப்பாவீ....ஓடிப்போகிறார்கள் என்று முடிவே செய்துவிட்டீர்களா? பார்த்தால் விடலைப் பசங்க மாதிரி இருக்கே... ஹா ஹா
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குமுதல் படம் - எதற்காக இப்படி பொது வெளியில் ஒரு சீன்? ஒரு வேளை ஏதேனும் ஷார்ட் ஃபில்ம் ஷூட்டிங்காக இருக்குமோ?
பதிலளிநீக்குஇரண்டாவது படம் : நடனமும் நல்ல உடற்பயிற்சிதான்
மூன்றாவது படம் : ஏதோ ஒரு பெரிய சிலை. அச்சிலையின் கையில் அப்பெண் அமர்ந்து ஃபொட்டோ எடுத்துக் கொள்கிறார்.
துளசிதரன்
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎன்னளவில் உங்கள் ஜோசியம் பொருந்தி வந்தாலும் சில நம்பிக்கைகளைக் கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுவேன் என்பதைத் தான் ஏற்க முடியவில்லை. ஏனெனில் அப்படி ஏதும் இல்லை. யோசிக்கிறேன் எதுக்கும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு