சனி, 1 ஜனவரி, 2022

2021 - எங்கள் Blog புள்ளி விவரங்கள் , இ வா ந செ + நான் படிச்ச கதை (KGG)

 

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே -- உங்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு 2022 வாழ்த்துகள்! 

எங்கள் ப்ளாக் சென்ற ஆண்டு (2021) பதிவுகள் குறித்து இன்றைய பதிவில் பார்ப்போமா! 

2021 ஆம் ஆண்டில் மொத்தம் எவ்வளவு நாட்கள் என்பதை எங்கள் பதிவுகளை வைத்தே நீங்க சொல்லிடலாம்! மொத்தம் 365 நாட்கள். சரியா? எங்களின் 2021 ஆண்டின் பதிவுகளும் 365. 

52 திங்கட்கிழமைகளில், பதின்மூன்று கிச்சன் கில்லாடிகள் வழங்கிய 52 'திங்க'ற சமாச்சாரங்கள் வெளியிடப்பட்டன, 

புள்ளி விவரங்கள் : 

திங்கட்கிழமைப் பதிவுகள்

வரிசை எண்

வழங்கிய கிச்சன் கில்லாடி

பதிவுகள் எண்ணிக்கை

1

நெல்லைத்தமிழன்

14

2

கீதா ரெங்கன்

10

3

பானுமதி வெங்கடேஸ்வரன்

6

4

சியாமளா வெங்கட்ராமன்

6

5

கீதா சாம்பசிவம்

5

6

ரேவதி நரசிம்மன்

3

7

வானம்பாடி

2

8

மாஸ்டர் கவின்

1

9

சுபாஷினி

1

10

கமலா ஹரிஹரன்

1

11

கலா கோபால்

1

12

ராதா சுரேஷ்

1

13

காமாட்சி மகாலிங்கம்

1

 திங்கள் பதிவுகளில் அதிகம் பார்வையாளர்கள் பார்வையில் பட்ட பதிவு : 

தக்காளி சாதம் - கீதா சாம்பசிவம் ரெஸிபி 

அதிக கருத்துரைகள் பெற்ற பதிவு : 

மோமோஸ் - ராதா சுரேஷ் ரெஸிப்பி 


மேற்கண்ட 13 கி கி களுக்கும் ‘Ayurveda cook book’ என்னும் ஆங்கிலப் புத்தகமும், தென்னிந்திய உணவுகள் என்னும் தமிழ்ப் புத்தகமும் அனுப்பப்படும். (எந்த மின்னஞ்சல் – email முகவரிக்கு அல்லது எந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவேண்டும் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.)

இவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் புத்தகங்களில் உள்ள செய்முறைகளைப் படித்து, சிலவற்றை செய்து பார்த்து, சாப்பிட நன்றாக இருந்தால்  (மட்டும்!) எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். புத்தகங்களில் உள்ள செய்முறைகளில் / பொருட்களில் உங்கள் விருப்பத்திற்கேற்ப சில மாறுதல்கள் செய்து, நீங்கள் எழுதலாம். 2022 ஆம் ஆண்டு சமையல் குறிப்புகளை சுவைபட எழுதுவது இனி உங்கள் கைகளில்! நன்றி. 

52 செவ்வாய்க்கிழமைகளில் பதினைந்து கதாசிரியர்கள் எழுதிய சிறுகதைகள்/தொடர்கதைகள் வெளியிடப்பட்டன. 

புள்ளி விவரங்கள் : 

செவ்வாய்க்கிழமைப் பதிவுகள்

வரிசை எண்

எழுதியவர்

பதிவுகள் எண்ணிக்கை

1

துரை செல்வராஜு

13

2

அப்பாதுரை

9

3

தன்னடக்கம் தடுக்கிறது

5

4

ஜீவி

4

5

பானுமதி வெங்கடேஸ்வரன்

3

6

கீதா ரெங்கன்

3

7

புதுக்கோட்டை வைத்யநாதன்

3

8

சியாமளா வெங்கட்ராமன்

3

9

வானம்பாடி

2

10

எஸ் ஜி எஸ்

2

11

ஆன்சிலா பெர்னாண்டோ  

1

12

அபிநயா

1

13

கீதா சாம்பசிவம்

1

14

ரேவதி நரசிம்மன்

1

15

காமாட்சி மகாலிங்கம்

1

 செவ்வாய்க்கிழமை பதிவுகளில் அதிகம் பேர் படித்த கதை :

கண்ணழகி காஞ்சனா 1கண்ணழகி காஞ்சனா 2 - ஜீவி 

அதிகம் கருத்துரைகளை பெற்ற தொடர்க(வ)தை : 

ஏணிமலை - குறிப்பாக - மூன்றாவது பகுதி 

மேலே காணப்படும் கதாசிரியர்களில் பதினான்கு பேர்களுக்கு மட்டும் ‘ எங்கள் Blog தொகுத்த ‘ உங்கள் கேள்விகள் – எங்கள் பதில்கள் – தொகுப்பு 1’ புத்தகம் அனுப்பபடும். இந்தப் புத்தகம், 2022 ஆம் ஆண்டில் கிண்டில் வெளியீடாக வெளியிடப்படும்.

செவ்வாய் சிறுகதைப் பதிவுகளில், தொடர்ந்து முதல் ரேங்க் வாங்கி வருகின்ற துரை செல்வராஜு அவர்களுக்கு ஒரு சிறப்புப் பரிசும் அனுப்பப்படும். 

52 புதன்கிழமைகள் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்கள் ஆசிரியர்கள் அளித்த பதில்கள், எங்கள் கேள்விகள், உங்கள் பதில்கள் என்று வாணவேடிக்கைகள் பார்த்தோம். 

52 வியாழக்கிழமைகளில் வெட்டி அரட்டை என்று அவர் சொன்னாலும் - நமக்கு நாம் ரசித்துச் சுவைக்கின்ற மெட்ராஸ் மிக்சர் ஆக சுவைத்த கதம்ப பதிவுகள், (வெட்டி அரட்டை என்கிற வார்த்தையில் வெட்டியை நான் வெட்டி விட்டு சில மாதங்கள் ஆயின...   ஒருமுறை ஏகாந்தன் ஸார் சொன்னபின் அதை வெட்டி விட்டேன்  என்பதை இஞ்சுக்கு குறிப்பிட விரும்புகிறேன்!- ஸ்ரீராம்)

53 வெள்ளிக்கிழமைகளில் பாடலும், பதமும், உரையும் எழுதி, புள்ளி விவரங்களையும் தனது காணொளிகளும் காணக் கொடுத்து - சில நேயர் விருப்பங்களையும் நிறைவேற்றி உங்களுக்கு விருந்து அளித்தோம் - - - 'தோம்' - இல்லை - 'தார்' - ஸ்ரீராம்   

52 சனிக்கிழமைகளில் நல்ல வார்த்தை சொல்லடி ஜக்கம்மா - என்று அந்தந்த வாரங்களில் எங்கள் கண்ணில் பட்ட நல்ல செய்திகளை, உங்களுடன் பகிர்ந்துகொண்டோம். அதோடு மட்டும் நிற்காமல், நான் படிச்ச கதை பகுதியும் சில வாரங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. 

52 ஞாயிற்றுக்கிழமைகளில் ' பேசும் பட'ங்களாக,  ஞாயிறு உலா படங்களை உங்களுக்காகப் பகிர்ந்தோம். 

எங்கள் Blog படிப்பவர்கள், பங்கேற்பவர்கள், கிச்சன் கில்லாடிகள், சிறுகதை மன்னர்கள், மன்னிகள், புதன் கேள்விகள் கேட்பவர்கள், நான் படிச்ச கதை எழுதுபவர்கள், ஒவ்வொரு பதிவிலும் தயக்கமின்றி, தனக்குத் தோன்றிய கருத்துகளைப் பதிகின்றவர்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.  

மொத்தத்தில் - 

அதிக பார்வையாளர்களை ஈர்த்த பதிவு :

தடுப்பூசி போட்டுக்கொள்வோர் கவனத்திற்கு


அதிக கருத்துரைகள் பெற்ற பதிவு :

மேலும் மேலும் இவை யாவும் உங்கள் ஆதரவுடன் தொடரும். 

= = = = ==================================================================================

இ வா ந செ 

ரத்தப்போக்கு மிகவும் அதிகமாக இருந்ததால் யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில்...


ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, பெட்டமுகிலாலம் பஞ்சாயத்துக்குட்பட்ட கடம்பகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மத்தூரி, 26. எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று(டிச.,24) மாலை 5 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இவருக்கு தீராத ரத்தப்போக்கு இருந்த நிலையில் இரவு, 10 மணிக்கு கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமாருக்கு, மத்தூரி உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். கடம்பகுட்டை கிராமத்திற்கு, மலை மீது நான்கு கிலோமீட்டர் வனப்பகுதியிலேயே நடந்து சென்றால் மட்டுமே கிராமத்தை அடைய முடியும். அதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாது. அதனால் மருத்துவ குழுவினர் உடனடியாக மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களுடன் மலை மீது நடக்க துவங்கினர். ரத்தப்போக்கு அதிகமானதால் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அழைத்து சென்றனர். பாதி வழியில் டாக்டர்கள் குழுவினரை அவரது உறவினர்கள் சந்தித்தனர். 

ரத்தப்போக்கு மிகவும் அதிகமாக இருந்ததால் யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் டார்ச்லைட் உதவியுடன் மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவரது வயிற்றில் இருந்து 200 கிராம் அளவில் உறைந்த ரத்த கட்டி மற்றும் நஞ்சு ஆகியவற்றை அகற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மூங்கிலில் தொட்டில் கட்டி மத்தூரியை மலை அடிவாரத்திற்கு தூக்கி வந்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

==============================================================

ஜபல்பூர் :மக்கள் அளித்த புகார்கள் தொடர்பாக உரிய நேரத்துக்குள் தீர்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கு தார்மீக பொறுப்பேற்று தன் சம்பளத்தை தானே, 'கட்' செய்ய உத்தரவிட்டுள்ளார், மத்திய பிரதேச மாநிலத்தின், ஜபல்பூர் கலெக்டர் கரம்வீர் சர்மா. அதிகாரிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றியதன் வாயிலாக, நாடு முழுதும் உள்ள உயர்அதிகாரிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார் இந்த 'சூப்பர்மேன்!'


ஊழல், மோசடி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அலட்சியம் என, அரசு அதிகாரிகள் குறித்து செய்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இது போன்ற செய்திகளை பார்த்துப் பார்த்து சலித்த மக்களுக்கு, சில நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆறுதலாக இருக்கும்.
இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் தான், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரின் கலெக்டராக இருக்கும் கரம்வீர் சர்மா. மத்திய பிரதேசத்தில் 2010ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வான இவர், அங்கு பல துறைகளில் திறம்பட பணிபுரிந்து வருகிறார்.





தற்போது ஜபல்பூர் கலெக்டராக உள்ளார். தலைமை நேர்மையாக இருந்தால், கீழே இருப்பவர்களும் அதுபோல இருக்க முயற்சிப்பர் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிவ் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முதல்வர் சிறப்பு பிரிவில் பொதுமக்கள் புகார் அளித்தால், அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, அங்கு காலக்கெடு உள்ளது.
ஜபல்பூர் கலெக்டர் கரம்வீர் சர்மா, இவ்வாறு வரும் புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மாதந்தோறும் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி அனைத்து துறை அதிகாரிகளுடனும் அவர், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.அப்போது, பல புகார்கள் மீது, 100 நாட்களைத் தாண்டியும் தீர்வு காணப்படாதது தெரியவந்தது. மேலும், சில அதிகாரிகள் ஆய்வு கூட்டத்திற்குக் கூட வரவில்லை. இதையடுத்து அவர், அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்தார்.கூட்டத்துக்கு வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார். புகார் மனுக்கள் மீது உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்காத பல அதிகாரிகளுக்கு, இந்த மாத சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


தொடர்ந்து மோசமாக செயல்படும் அதிகாரிகளுக்கு, சம்பளத்துடன், ஆண்டு சம்பள உயர்வையும் நிறுத்தி வைக்க பரிந்துரைத்துள்ளார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அதிகாரிகள் சரியாக செயல்படாததற்கு தார்மீக பொறுப்பு ஏற்று, இந்த மாதத்துக்கான தன் சம்பளத்தையும் நிறுத்தி வைக்கும்படி அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.'இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்' என, மாவட்ட கருவூலத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், 100 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அனைத்து புகார்களுக்கும், இம்மாத இறுதிக்குள் தீர்வு காணும்படியும் அதிகாரிகளுக்கு கலெக்டர் கரம்வீர் சர்மா அறிவுறுத்தி உள்ளார்.

அரசு அதிகாரிகள் குறித்து எதிர்மறையான செய்திகளையே பார்த்து வெதும்பி வந்த மக்கள், கலெக்டர் கரம்வீர் சர்மாவை, 'சூப்பர்மேன், நிஜ ஹீரோ' என, பாராட்டி வருகின்றனர். 'இது போன்ற அதிகாரிகள் நாடு முழுதும் இருந்தால், நாடு நன்கு முன்னேற்றம் காணும்' என்ற கருத்தையும் சமூக வலைதளங்களில் மக்கள் பகிர்ந்துள்ளனர். 


===========================================================================================================================================




நான் படிச்ச கதை - KGG - அன்புக்கோர் அண்ணன்! 

அக்பர் - பீர்பால் குறித்துக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அக்பர் குழந்தையாக இருந்தபோது, வேறு ஒரு பெண்ணிடம் பால் அருந்தி வளர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் உண்டு. அக்பர் ஒரு பேரரசராக வளர்ந்த பிறகு, தனக்குப் பால் கொடுத்த அன்னைக்கு ஒரு கிராமத்தையே எழுதிக் கொடுத்தார். ஆனால், அந்தப் பெண்ணின் மகன் ஊதாரியாகச் சுற்றித் திரிந்து எல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார். ஒரு நாள் அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

'சக்கரவர்த்திக்கு என் அன்னைதான் பால் கொடுத்தார். அவர் எனக்குக் கடமைப்பட்டவர். ஒரு வகையில் அவர் எனக்குச் சகோதரர் முறை, நான் ஏதாவது கேட்டால், அவரால் மறுக்க முடியாது!' 

இந்த எண்ணம் தோன்றியதால் அவர் அக்பரைக் காண வந்தார். அக்பரும் அவரை வரவேற்று மரியாதை செய்து, அனைவருக்கும் தன் சகோதரர் என்று அறிமுகப்படுத்தி அரண்மனையில் தங்கவைத்தார். அவரும் அரச உடைகள் அணிந்து, பல கூட்டங்களில் கலந்துகொண்டார். ஆனால், அவருக்கு எதுவுமே புரியவில்லை.

சில வாரங்கள் சென்றன. அவருக்கு இன்னொன்றும் தோன்றியது ' என்னைச் சுற்றி நல்லவர்கள் யாரும் இல்லாததால்தான் எனக்குச் சிரமங்கள் வந்தன. அக்பரைச் சுற்றி அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் மேலாக பீர்பால் இருக்கிறார். அக்பர் சிறந்து விளங்க இதுதான் காரணம். பீர்பால் போல ஒருவர் உடனிருந்தால் நானும் சிறந்து விளங்குவேன்' என்று நினைத்தார். அக்பரிடம் சென்று, "உங்களுடன் பீர்பால் இருப்பதால் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள். உங்களுடன் பலர் இருக்கிறார்கள். எனவே, என்னுடன் பீர்பாலை அனுப்பிவையுங்கள்!" என்று கேட்டார். 

அவரைத் தனது மூத்த சகோதரராக அக்பர் கருதியதால் எதுவும் மறுத்துச் சொல்ல இயலவில்லை. எனவே அக்பர், "நீங்கள் பீர்பாலை அழைத்துச் செல்லுங்கள்" என்று சொன்னதோடு, மாலையில் அவையிலும் அதனை அறிவித்தார். 

ஒரு முட்டாளோடு போக நேர்வதை உணர்ந்த பீர்பால், "உங்கள் அண்ணனுக்கு அறிவார்ந்த துணை அவசியம்தான். எனக்கு ஒரு யோசனை. அவரோடு என் அண்ணனை அனுப்பிவைக்கிறேன்" என்றார். 'பீர்பாலே இவ்வளவு அற்புதமான மனிதராக இருந்தால், அவரது சகோதரர் இன்னும் அற்புதமானவராக இருப்பார்' என்று கருதிய அக்பரின் அண்ணன் அதற்குச் சம்மதித்தார்.  அக்பருக்கும் மகிழ்ச்சி! 

மறுநாள் வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடு ஆனது. பீர்பால், ஒரு காளை மாட்டுடன் வந்தார். ஆச்சரியமடைந்த அக்பரிடம் சொன்னார்: " இதுதான் என்  அண்ணன். நாங்கள் இருவரும், ஒரே தாயிடம்தான் பால் அருந்தினோம்!" என்று. 

( எல்லோரும் சிரிச்சு, மகிழ்ச்சியாக இருங்க! Happy new year!) 

(இந்தக் கதையை நான் படித்தது, " ஒரு விநாடி புத்தர் " என்னும் புத்தகத்தில். 'சத்குரு ஜக்கி வாசுதேவ்' அவர்களின் உரைகளை 'கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா' அவர்கள் மொழிபெயர்த்து எழுதியுள்ளார். 27 கட்டுரைகளைக் கொண்ட அந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே இது போல பல கதைகள் உள்ளன. கதைகளை உள்ளடக்கிய கட்டுரைகளும் அருமையாக உள்ளன.)  

= = = =

106 கருத்துகள்:

  1. நல்லவர் தம் நலம் நிறைக
    நல்லறமும் தான் பொலிக..
    நல்லருளும் துணை வருக
    நாடெங்கும் வளம் பெறுக..

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இன்றையை தொகுப்பில் காட்டுக்குள் மருத்துவம்.

    மனிதநேயம் மிளிர்கின்றது..

    பதிலளிநீக்கு
  4. இவ்வருடமும் செவ்வாய்க் கிழமை சிறுலதைகளில் முதலிடம்..

    அனைத்தும் எபியின் அன்பினால் ஆயிற்று..

    நன்றி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

      நீக்கு
  6. இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  7. மேற்கண்ட 13 கி கி களுக்கும் ‘Ayurveda cook book’ என்னும் ஆங்கிலப் புத்தகமும், தென்னிந்திய உணவுகள் என்னும் தமிழ்ப் புத்தகமும் அனுப்பப்படும். //

    மிக்க நன்றி எபி!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் புத்தகங்களில் உள்ள செய்முறைகளைப் படித்து, சிலவற்றை செய்து பார்த்து, சாப்பிட நன்றாக இருந்தால் (மட்டும்!) எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். புத்தகங்களில் உள்ள செய்முறைகளில் / பொருட்களில் உங்கள் விருப்பத்திற்கேற்ப சில மாறுதல்கள் செய்து, நீங்கள் எழுதலாம். 2022 ஆம் ஆண்டு சமையல் குறிப்புகளை சுவைபட எழுதுவது இனி உங்கள் கைகளில்! நன்றி. //

    ஹாஹாஹாஹா நிச்சயமாக முயற்சி செய்வோம். நாங்க அப்படியே எல்லாம் செய்திட மாட்டோமுல்ல!!! ஹிஹிஹிஹி...

    நன்றாக வந்தால்// இது அவரவர் டேஸ்டைப் பொருத்து!!

    என் அருமை அண்ணன்/தம்பி இந்த நெல்லை இருக்காரே!!!! அவரை இங்க வைத்துக் கொண்டு கிச்சன்ல பரிசோதனை செய்யச் சொல்றீங்களே!!! ஹாஹாஹா

    ஹப்பா புது வருடத்தில் முதலில் நான் நெல்லையை வம்புக்கிழுத்தாச்சு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... இருங்கள்.. காத்திருங்கள்.. கோயிலுக்கெல்லாம் சென்று வந்து விட்டு வந்து பதிலளிப்பார்!

      நீக்கு
    2. நெ த மேடைக்கு வரவும்!!

      நீக்கு
    3. நெத வரமாட்டார்!! நான் ராத்திரி தூங்கிய பிறகு வருவார் இங்கு!!!!

      அவர் கேக் செய்வதில் பிஸியாம். இன்று ஒரு நாள் மட்டும் வருடம் முழுவதற்கும் சேர்த்து ஸ்வீட் சாப்பிட அனுமதி கிடைத்ததால்!!!!!!!! ஸ்வீட் எடு கொண்டாடு என்று!!!

      கீதா

      நீக்கு
    4. கீதா ரங்கன்க்கா நிறைய செய்துபார்ப்பாங்க. ஆனால் முக்காலுக்குமேலும் டிராஃப்டில் போட்டுவிட்டு, ஆறு மாதம் கழித்து அனுப்புவாங்க.

      இன்னொருத்தர், காத்திருந்து காத்திருந்து வேரியேஷன்ஸ் மட்டும் எழுதுவாங்க. ஆனால் செஞ்சுபார்த்து எழுத மாட்டாங்க.

      நீக்கு
    5. திருவித்துவக்கோட்டில் செய்திருந்த அரவணைப் பாயசம் பிரசாதம் (அங்கல்லாம் டின்ல போட்டுத் தருவாங்க) 115 ரூ. வாங்கினேன். சூப்பரோ சூப்பர். ஆனால் அங்கே செய்திருந்த உன்னியப்பம் பிரசாதம் சுமார்.

      குருவாயூர்லலாம் இப்போ ஆன்லைன்ல பதிவு செய்தால்தான் தரிசனமாம். அங்க போனால் ஸ்பெஷல் தரிசனத்துக்கு 1000 ரூபாயாம். எப்படியோ எங்களுக்கு அங்க இருந்த மேனேஜர், அனுமதி கொடுத்தார். இங்கயும் அரவணைப் பிரசாதம் வாங்கினேன் (அதுக்குப் பெயர் நெய் பாயசம்)

      திருநாவாய் என்ற ஊரிலும் அரவணைப் பிரசாதம் வாங்கினேன்.

      திருவனந்தபுரத்தில் கொரோனா காரணமாக, அரவணைப் பிரசாதம் செய்து விற்பது நிறுத்திவிட்டாங்க.

      கேரளக் கோவில்களில் பிரசாதம்லாம், நிஜமாகவே கடவுளுக்குப் படைத்துவிட்டு (அங்கேயே செய்யப்படுவது) அதை விற்பனை செய்கிறார்கள். நம்ம ஊர்லதான் காண்டிராக்ட் விடற வேலை (சபரிமலை மட்டும் எக்ஸெப்ஷன்)

      நீக்கு
    6. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    7. கௌ அண்ணா பாத்தீங்களா நான் சொன்னாப்ல நான் தூங்கினப்புறம் இந்த நெல்லை வந்திருக்கிறார்!!!!!

      நேத்து பிரசாதம்ன்ற பெயர்ல ஏதாச்சும் ஸ்வீட்டு செஞ்சு சாப்பிட்டிருப்பார்....பிரசாதம் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால்!!!! (இந்த பாயின்ட் எங்கருந்து பொறுக்கினேன் என்பது ரகசியம்!!!!)

      நெல்லை நேற்று என்ன ஸ்வீட்டு?!!! தி ப வுக்கு வருமா?

      கீதா

      நீக்கு
  9. திங்க - 10? ஆ அது போல கதை 3? எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது! நினைவில் இல்லை என்பதால்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏😊

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. புத்தாண்டே வருக,
      புதுப்பொலிவு தருக!

      நீக்கு
  11. இன்றைய பாசிடிவ் செய்திகள் இரண்டுமே அருமை!
    கரம்வீர் சர்மா போல ஜில்லாவுக்கு ஒரு கலெக்டர் இருந்தால் நம் நாடு எங்கோ போய் விடும்.

    பதிலளிநீக்கு
  12. புள்ளி விபரங்கள் ரசிக்க வைத்தது.

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. நான் படித்த கதை//

    ஹாஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. எபி மேலும் மேலும் பதிவுகளுட்ன வளர்ந்திடவும் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கும் மற்றும் இங்கே வருகை தரப்போகும் நண்பர்கள்.நண்பிகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். நோய்/நொடி இல்லாமல் மக்கள் அச்சம் தவிர்த்துக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆரோக்கிய வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  16. பரிசுகளுக்கு மிக்க நன்றி. அது சரி, அது என்ன? கே.வா.போ.க. எழுதினவங்க கணக்கு 15. ஆனால் நீங்க பதினான்கு பேருக்கு மட்டுமே பரிசு கொடுக்கறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆனால் எனக்குக் காரணம் தெரியுமே! இஃகி,இஃகி,இஃகி,இஃகி! ரொம்ப நாளாச்சு இல்லையோ தமிழில் சிரிச்சு! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்து வார தொடர் வதை எழுதியவருக்கு பரிசு கிடையாது என்று ஆசிரியர் குழு முடிவு செய்துவிட்டது !!

      நீக்கு
  17. நல்ல செய்திகளுக்கும் மனித நேயம் மிக்க மருத்துவக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அமோகமாக ஆரம்பித்திருக்கும் எங்கள் ப்ளாகின் புத்தாண்டுக்கு இனிய
    காலை வணக்கம். அனைவரும் தொற்றில்லாமல் என்றும் நலமுடன் ஆனந்தத்துடன்
    இருக்க இறைவன் அருள் செய்ய வேண்டும்.
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்/.

    பதிலளிநீக்கு
  19. எங்கள் ப்ளாகின் புள்ளி விவரங்கள் அதிசயிக்க வைக்கிறது.
    பத்திரிக்கை நடத்துவதே ஒரு சாதனை.
    அதில் இவ்வளவு விவரங்களையும் குறித்து வைத்து இன்று பதிவிட்டிருக்கும் உங்கள்
    உழைப்புக்கு வந்தனமும் நன்றியும்.

    அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல கதைகளைத் தரும் அன்பின் துரை செல்வராஜுவுக்கும் , மற்றும் எல்லோருக்கும்
    மனம் நிறை நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  20. கதை அருமை...

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  21. பதிவிட்டவர்களுக்குப் பரிசு அனுப்புவது
    மிக மகிழ்ச்சி தருகிறது.
    முதன் முதலில் கௌதமன் ஜி
    புத்தகப் பரிசைக் கொண்டுவந்து கொடுத்ததும் நினைவில். 10
    வருடங்கள் இருக்குமா.இருக்கலாம்.
    நன்றி கௌதமன் ஜி. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  22. நல்ல நாளில் நல்ல செய்திகளைக் கொடுத்ததற்கு இன்னோரு நன்றி.

    படிக்க வருபவர்கள் அனைவருக்கும் மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். புள்ளி விபரங்களுடன் பரிமளிக்கும் எ.பி க்கு சிறப்பான வாழ்த்துகள். எ.பி மேலும்,மேலும், நாளும் முன்னேறி என்றுமே புதுப் பொலிவுடன் திகழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இன்றிலிருந்து எவ்வித மனக் கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக ஒவ்வொரு நாளும் அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. சான்றிதழும், பரிசுகளும் ஒவ்வொருவருக்கும் வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வருகிறோம். இன்றைக்குள் எல்லோருக்கும் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! எங்கள் பிளாக்கிற்கு வந்து படிக்கத் தொடங்கி, எழுத்தினை தொடரும் ஆர்வம் பெற்றேன். கதையும், ரெசிபியும் அனுப்பிட ஊக்கமளித்த எங்கள் ப்ளாக் குடும்பத்திற்கு நன்றி! பரிசுக்கும், பாராட்டுக்கும் நன்றி!
    தீநுண்மி காலத்தில், மனதிற்கு இதமும், தன்னம்பிக்கையும் அளித்த அனைவரது பதிவுகளுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  26. எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கும் குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    புள்ளி விவரங்கள் அசத்தல். ஆசிரியர் குழுவினரின் உழைப்பும், வாசகர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. வரும் ஆண்டுகளில் மென்மேலும் எங்கள் ப்ளாக் சிறப்பாக இயங்க நல்வாழ்த்துகள்!

    இ வா ந செ: மருத்துவக் குழுவினரின் சேவை மகத்தானது.

    /கலெக்டர் கரம்வீர் சர்மா.. நாடு முழுதும் உள்ள உயர்அதிகாரிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார்/ உண்மை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

      நீக்கு
  27. @ வல்லியம்மா...

    // அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல கதைகளைத் தரும் அன்பின் துரை செல்வராஜுவுக்கும் , மற்றும் எல்லோருக்கும்
    மனம் நிறை நன்றியும் வாழ்த்துகளும்.. //

    நன்றியம்மா...

    பதிலளிநீக்கு
  28. பரிசு கிடைத்துவிட்டதே!!

    மிக்க நன்றி எபி ஆசிரியர்களுக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  29. எபி புள்ளி விவரங்கள் பிரமிப்பு!

    அத்தனையும் திரட்டி கணக்குப் போட்டு!! பரிசும் கொடுத்து!! யம்மாடியோவ்!!!

    நன்றியுடன் வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. அதிகாரிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றியதன் வாயிலாக, நாடு முழுதும் உள்ள உயர்அதிகாரிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார் இந்த 'சூப்பர்மேன்!'//

    கரம்வீர் சர்மா என்பதை கர்மவீரர் சர்மா எனலாம்! இப்படியானவர்களைக் காணும் போது மனம் மகிழ்கிறது.

    பாராட்டுகள்!

    மருத்துவக்குழுவின் சேவை மிக மிக உயரிய செயல். பாராட்டுகளுடன் வாழ்த்துகளும்

    கீதா

    பதிலளிநீக்கு
  31. பதிவுகள் குறித்த விவரங்கள் நன்று. இந்த வருடமும் எங்கள் பிளாக் வித்தியாச பதிவுகள் தொடரட்டும். பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். எங்கள் பிளாக் ஆசிரியர்கள், குடும்பத்தினர், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  32. அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    எங்கள் ப்ளாக்ஸ் சிறப்பாக தனது பணியை தொடர்வதற்கு வாழ்த்துகள். தொடர்ந்தும் சிறப்பான பகிர்வுகளை வணங்கட்டும் .

    உரிய நேரத்தில் திறம்பட இயங்கிய மருத்துவகுழுவை போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  33. பொதுவாக statistics பொய்யுடன் ஒப்பிடப்படும். ஆனால் இந்த வார புள்ளிவிவரங்கள் உண்மையானவை (அரசின் புள்ளி விவரங்கள் ஆக இல்லாததால்!)  
    பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டுகள். 

    நேர்மையான அதிகாரிகள் நிலைப்பதில்லை. அசோக் கெம்கா, ராஜு நாராயணசாமி, சகாயம் என்று உதாரணங்கள் கூறலாம். அரசியல் வாதிகள் பழி வாங்குதலில் முன் நிற்பவர்கள். 

    படிச்ச கதை புடிச்ச கதை ஆகிவிட்டது. 

    ஸ்ரீராம் கொஞ்சம் ஒதுங்க கவ் சார் இடத்தை நிரப்பவுது நன்று. கடைசி வரை கா சு யாரென்று சொல்லாமல் ஒரு சஸ்பென்ஸ். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிசயிக்க வைக்கிறது எங்கள் பிளாக் இன் புள்ளி கணக்கும் பரிசுகள் விவரமும் ஆசிரியர் குழுவினர் அவர்களுக்கும் எல்லா எங்கள் பிளாக் வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் எனக்கும் பரிசுகள் கொடுத்ததற்கு மிக்க சந்தோஷமும் நன்றியும் யாவருக்கும் மிக்க நன்றி அன்புடன்

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  34. தாங்கள் அனுப்பி வைத்த மின்னஞ்சல் கண்டேன்..
    மிக மகிழ்ச்சி கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  35. தங்களது தமிழ்ப் பணி என்றென்றும் தொடர்வதற்கு வேண்டிக் கொள்கிறேன்...

    என்னையும் சிறப்பித்ததற்கு
    நெஞ்சார்ந்த நன்றி..
    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
    2. அன்பின் வாழ்த்துரைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
    3. எல்லோருக்கும் வாழ்த்துகள். நன்றி.

      நீக்கு
  36. //தக்காளி சாதம் - கீதா சாம்பசிவம் ரெஸிபி // - இதுல ஏதோ உள்குத்து இருக்கு. அதிகப் பார்வையாளர்கள் அவர் எழுதிய வெந்நீர் தயாரிக்கும் செய்முறைக்குத்தான் இருந்திருக்கணும்

    பதிலளிநீக்கு
  37. கே.வா.போ.க.வில் அப்பாதுரையின் பங்களிப்பு 9 என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஒன்பது வாரங்களாக? ஒன்பது கதைகளாக?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரங்கள் தருகிறேன், சற்று நேரத்தில் .

      நீக்கு
    2. 8 கதைகள், ஒன்பது வாரங்கள். முக்தி கதை மட்டும் இரண்டு பாகங்கள். எல்லாமே மறக்கவியலா சிறுகதைகள் வரிசையில் எழுதப்பட்டவை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  38. வாழ்த்துக்கள்!
    கிகி பெயர் நன்றாக இருக்கிறது :-). (அடிக்காம விட்டாங்களே)

    கதைகளுக்கு படம் வரைந்தவருக்கும் தன்னடக்கம் தடுக்கிறதா? இருந்தாலும் பலே.

    பதிலளிநீக்கு
  39. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ,

    பதிலளிநீக்கு
  40. எங்கள் ப்ளாக் புள்ளி விவரங்கள் அருமை .
    பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    எல்லோரையும் எழுத வைத்து பரிசுகள் பாராட்டுக்கள் வழங்கியது மகிழ்ச்சி
    மேலும் பல புதுமைகள் தொடர வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. கவினுக்கு வாழ்த்துகள். பரிசு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளோம்.

      நீக்கு
    2. நன்றி பார்க்கவே இல்லை. கவின் வந்து இருக்கிறான் அவனுடன் வெளி இடங்களுக்கு உறவினர்களை பார்த்து வருவதால் பார்க்கவில்லை.
      இப்போதுதான் பார்த்தேன். பயனுள்ள புத்தகங்கள்.
      பேரன் உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னான்.
      மகிழ்ச்சியாக இருக்கிறது.
      மீண்டும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

      நீக்கு
  41. புள்ளிவிவரங்களும், பரிசளிப்பும் பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. உங்கள் பணி சிறப்பு!

    இ வா ந செ - இரண்டுமே அருமையான செய்திகள்.

    பீர்பால் கதையை ரசித்தேன்.

    கீதாவுக்கும் பரிசுகள் கிடைத்ததாகச் சொன்னார். மிக்க மகிழ்ச்சி.

    பரிசுகள் கிடைத்த எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!