ராமண்ணா தயாரிப்பில், வின்சென்ட் இயக்கத்தில் தோப்பில் பாசி மூலக்கதைக்கு தமிழில் மல்லியம் ராஜகோபால் வசனம் எழுத, வெளியான சோக சித்திரம் துலாபாரம்.
சாரதா, ஏ வி எம் ராஜ, முத்துராமன், நாகேஷ், சுந்தர்ராஜன் நடித்த படத்தில் பாடல்களை கண்ணதாசன் எழுத, ஜி தேவராஜன் இசை.
1968 ல் மலையாளத்தில் வெளியாகி விருதுகளை வாங்கிய படம். தமிழ் தெலுங்கு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வசூலைக் குவித்தது.
இந்தப் படத்திலிருந்து டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசீலா பாடிய சங்கம் வளர்த்த தமிழ்.. தாய்ப்புலவர் காத்த தமிழ் பாடல் இன்று முதல் பாடலாகப் பகிர்வு!
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும் - ஒரு
காலம் வரும் - நல்ல பதில்
சொல்லும் சொல்லும்..
தென்றலுக்கு சீதனமாய் தேவனவன் தந்த தமிழ்
கன்றின் குரல் கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும் - ஒரு
காலம் வரும் - நல்ல பதில்
சொல்லும் சொல்லும்..
செவ்வரி ஓடிய கண்களிரண்டினில்
சேலொடு வேலாட
இரு கொவ்வை இதழ்களும் கொத்து மலர்களும் கொஞ்சி மகிழ்ந்தாட
தெய்வ ரதத்தினை சேலை மறைத்திட சிற்றிடை தள்ளாட - நடை
சிந்து படித்தவள் பந்து பிடித்தனள் முந்தி எழுந்தாட ..
சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும் - இந்த
தேசமுற்றும் ஆண்ட கதை சொல்லும் சொல்லும்..
தோட்டத்திலே தென்னை இரண்டு முற்றித் திரண்டு
பக்கம் உருண்டு கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து
அதைத்தொட ஓடிய விழியோடொரு விழி மோதிய கணமே
எனைத் தாக்கித் தகர்த்தவை இரண்டு பக்கம் உருண்டு முற்றித் திரண்டு
எனைக் காண அழைத்திட்ட விருந்து..
சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும் - இந்த
தேசமுற்றும் ஆண்ட கதை சொல்லும் சொல்லும்..
காலமெனும் ஆற்றினிலே கையெடுத்து நீந்தி வந்து
கோடிமலர் தேடிவந்து வெல்லும் வெல்லும்
உயர் கோபுரத்தில் ஏறி நின்று
சொல்லும் சொல்லும்..
சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும் இந்தத் தேசம் முற்றும் ஆண்ட் கதை சொல்லும் சொல்லும்..
பத்தொன்பது வருடம் தாண்டி வருகிறோம். 1987 ஆம் வருடம். தேவராஜனிடமிருந்து இளையராஜாவுக்கு மாறுகிறோம்.
சங்கம் வளர்த்த தமிழிலிருந்து சங்கத்தமிழ்க் கவிக்கு வருகிறோம்! யேசுதாஸ், சித்ரா பாடிய பாடல். வாலி எழுதிய வரிகள்.
படம் மனதில் உறுதி வேண்டும். சுஹாசினி முக்கிய பாத்திரத்தில் நடித்த பாலச்சந்தர் படம். ரஜினி, விஜயகாந்த், பாடல் காட்சியில் வந்து செல்வார்கள்!
படத்தின் கதை என்று சொன்னால் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை போலதான். குடும்பம் முன்னேற மகள் தியாக தீபமாய் எரியும் படம்.
விவேக், எஸ் பி பாலசுப்பிரமணியம், ரமேஷ் அர்விந்த் போன்றோருக்கு முதல் படம். ரமேஷ் அரவிந்த் பாத்திரம் சரியாக இல்லை என்று பாலச்சந்தர் அவர் பாத்திரத்தை எடுத்து விட்டாராம். பின்னர் மறுபடி வந்து இணைந்தாராம் ரமேஷ் அர்விந்த். எஸ் பி பிக்கு தமிழில் இது முதல் படம். சுவாரஸ்யமான கேரக்டர்.
காட்சி அமைப்பும் சரி, பாடலும் சரி மிக இனிமையான ஒன்றாக அமைந்து விட்ட பாடல்களில் ஒன்று. யேசுதாஸ் குரலும், சித்ரா குரலும் பாடலில் இழை இழை என்று இழையும்.
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனை தேனிருக்க
பாதியை நான் எடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நான் அணைக்க ஆ ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ் கவியே ஏ
பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண் குயில் பாடியதோ
ஓடத்தைப்போல் நானும் ஆடதான் ஓடையும் வாடியதோ
காதலன் கை தொடத்தான் காதலன் கை தொடத்தான்
இந்த கண்களும் தேடியதோ ஆண்: நீ வரும் பாதையெல்லாம்
அங்கங்கே பார்வையை ஓடவிட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓடவிட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
பதிலளிநீக்குஉழன்றும் உழவே தலை..
குறள் நெறி வாழ்க..
வாழ்க குறள் நெறி
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்
நீக்குஅனைவருக்கும்
பதிலளிநீக்குஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..
நன்றி. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நீக்குசந்தமும் ஜதியுமாக ...
பதிலளிநீக்குஇனியதொரு பாடல்.. துலாபாரம் படப் பாடல் அப்போதே மனப்பாடம்!..
எனக்கும் பிடிக்கும். ஆனால் மனப்பாடமில்லை.
நீக்குசங்கத் தமிழ்க் கவியே..
பதிலளிநீக்குபாடலும் இனிமை.. படம் பார்த்ததில்லை...
இன்று தமிழர் திருநாள் என்று கொண்டாடுபவர்கள்
அழகினும் அழகிய தமிழையும் அதன் சீரிளமைத் திறத்தினையும் கொண்டாடுவார்களாக!..
இனிய பாடல்கள்.
நீக்குசங்கம் வளர்த்த தமிழ் பாடலைப் இங்கே பதிவு செய்த போது பிழைகள் நேர்ந்திருக்கின்றன!...
பதிலளிநீக்குசந்தம் நிறைந்த தமிழ் ஆயிற்றே!..
பிழைகளை சுட்டிக் காட்டினால் திருத்தி விடலாம். உண்மையில் பதிவிலேயே சேர்க்க நினைத்த வரிகள், "இந்தப் பாடலைக் கேட்டு கேட்டு டைப் செய்வது மிகக் கடினமாக இருந்தது" என்று.
நீக்குஅனைவருக்கும் வணக்கம். எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. வணக்கம். நன்றி. உங்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
நீக்குஅனைவருக்கும் இல்லத்தில் நற்பால் பொங்கி
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நிறையட்டும். அதன் இனிமை வாழ்வெங்கிலும் நிறைய
இறைவன் அருள்வேண்டும்.
நன்றி அம்மா. வாங்க.. வணக்கம். உங்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்.
நீக்குசங்கத்தமிழ்ப் பாடல்கள் நிறைவானவை. துலாபாரத்தில்
பதிலளிநீக்குஇள நீர் வருவது சகஜம் தானே.
கேட்பதற்கு இனிமையாக
இருந்தன.
நன்றி அம்மா.
நீக்குசங்கத் தமிழ்க் கவியே கேட்கலாம்.
பதிலளிநீக்குஇனிமை.
நன்றி அம்மா.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாளின் நல்வாழ்த்துகள். அனைவரின் இல்லத்திலும் இறையருள் பொங்கி அனைவரும் நல்வாழ்வு வாழ அந்த ஆண்டவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குஅன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குமின்னஞ்சலைக் கவனிக்கவும்...
வந்த வேகத்தில் மாற்றி விட்டேன். நன்றி.
நீக்குசங்கம் வளர்த்த தமிழ் மிகப் பிடித்த பாடல். இசை
பதிலளிநீக்குஇனிமை. மிக மிகச் சிறந்த படம் துலாபாரம்.
மனம் நிறைந்த நன்றி யும் வாழ்த்துகளும்
ஸ்ரீராம்.
முதல் பாடலை சரியான வார்த்தைகளுடன் துரை செல்வராஜூ ஸார் திருத்தி அனுப்பி இருந்ததை சேர்த்து விட்டேன் அம்மா.
நீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நன்றி..
நான்தானே நன்றி சொல்ல வேண்டும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇரு பாடல்களும் இனிமையானவை. அடிக்கடி கேட்டிருக்கிறேன். இரண்டிலுமே கதாநாயகியரின் நடிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். அவர்களும் நல்ல நடிப்பில் நம் மனதில் நின்றார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குதெய்வ ரதத்தினைச்
பதிலளிநீக்குசேலை மறைத்திட
சிற்றிடை தள்ளாட..
- ஆகா.. காவியக் கவிஞன்!..
:>))
நீக்குஇதுக்கு மேல எதுவும்
பதிலளிநீக்குஎழுத முடியாதபடிக்கு அடிச்சு தூளாக்கிட்டார் கவிஞர்..
உண்மைதான்.
நீக்குஅன்பார்ந்த அனைவருக்கும் மனமார்ந்த இனிய தைத்திருநாள்/பொங்கல் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசிதரன்
முதல்ல கீதா ரங்கன் என நினைத்து, என்ன காலையிலேயே மைக் பிடிச்சுட்டீங்க எனக் கேட்கலாம் என நினைத்தேன்.
நீக்குதுளசி சார்.. நலமா?
நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குஹாஅஹாஹாஹா நெல்லை துளசியின் கமென்டும் அவர் தங்கிலிஷ் னா மொபைலில் அதை நான் தமிழில் டைப்பி, பேப்பரில்னா தமிழில் கைப்பட எழுதி ஃபோட்டோ எடுத்து அனுப்புவதை நான் டைப்பி இங்க போடுறேன்! ராத்திரி அனுப்பியதை இங்கு போட்டாச்சு...அதனால நான் தான் மைக் பிடிச்சேன்!!!! எப்பவுமே!!
நீக்குஉங்கள் கேள்விக்கு அவர் பதில் நைட் வரும்!!!! ஹாஹாஹா இன்று அவர் பெண்ணை கண்ணூர் மெடிக்கல் காலேஜில் (அங்குதான் பெண் சேர்ந்திருப்பதால்-முதல் வருடம்) கொண்டு விட சென்று கொண்டிருக்கிறார். பெண்ணிற்கு மதியம் 1 மணிக்குள் வேக்சின் பூஸ்டர் போட வேண்டுமாம். காலேஜ் ப்ரொட்டொகோல். மற்றபடி நான் அறிந்து அவர் நலம் ஆனால் ரொம்ப பிஸி. ரப்பர் தோட்ட வேலைகள் பால் சேகரித்து ஷீட் அடித்து என்று, காலேஜ் க்ளாஸ், பணிகள்னு.
கீதா
ரப்பர் பால் எடுப்பது வரை பார்த்திருக்கேன். அதன்பிறகு எப்படி ஷீட் பண்ணுகிறார்கள்னு தெரியாது
நீக்குஇதைப் பற்றியே அவரை எழுதச் சொல்லலாமே
முதல் பாடல், லியோனி பட்டிமன்றத்தில் பலமுறை கேட்ட பாடல் (கண்ணதாசனா பட்டுக்கோட்டையா). அதனால் நினைவுக்கு வந்தது. துலாபாரத்தின் சோக கீதங்கள் இன்று எதற்கு என விட்டுவிட்டீர்கள் போலிருக்கு.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் நினைவுக்கு வரவில்லை. காணொளி கேட்டதும் பாடல் கேட்ட நினைவு வந்துவிட்டது.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். காலையிலேயே பொங்கல் ஆகியருக்கும். எனக்கு மதியம் தர்ப்பணம் என்பதால் அதற்குப் பிறகுதான் உணவு.
நான் லியோனி பட்டிமன்றம் பக்கமே போவதில்லை. இந்தப் பாடலின் கவி வரிகளுக்காகவே பாடலைப் பகிர்ந்தேன். இரண்டாவது பாடல் கவி வைகளோடு இசை நயமும்!
நீக்கு@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்கு// முதல் பாடல், ....... பட்டி மன்றத்தில் பலமுறை கேட்ட..//
நல்ல நாள் அதுவுமா!..
ஹா.. ஹா... ஹா...
நீக்குலியோனியின் இரண்டு, ஆதிகால பட்டிமன்றங்கள் தவிர மற்ற எல்லாமே தாழ்ந்த ரசனை உள்ளவரகளுக்கானது. அதனால் பிறகு அந்தப் பக்கம் போவதே இல்லை.
நீக்குஸ்ரீராம் முதல் பாட்டு கேட்டதில்லை.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் கேட்டு ரசித்த பாடல்! சொல்லாமலே தெரிந்துவிட்ட பாடல்!!!!!!!!
கீதா
நன்றி கீதா. முதல் பாடலைக் கேளுங்கள்.
நீக்குஇரண்டாவது பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஸ்ரீராம்
நீக்குகீதா
முதல் பாடல் என்று சொல்வதற்குப் பதில் இரண்டாவது பாடல் என்று வந்துவிட்டது!!
நீக்குகீதா
முதல் பாடலும் கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி ஜி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குசங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
பதிலளிநீக்குகங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும் - ஒரு
காலம் வரும் - நல்ல பதில்சொல்லும் சொல்லும்..
தென்றலுக்கு சீதனமாய் தேவனவன் தந்த தமிழ்
கன்றின் குரல் கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும் - ஒரு
காலம் வரும் - நல்ல பதில்சொல்லும் சொல்லும்..
சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும் - இந்த
தேசமுற்றும் ஆண்ட கதை சொல்லும் சொல்லும்..
பேசாமல் இந்த வரிகளை மாத்திரம் தமிழ் தாய் வாழ்த்தாக வைத்தால் என்ன?
சும்மா கிடந்த சங்கை ஊதுகிறேன் ஹா ஹாஹா.
Jayakumar
அதுக்கு கண்ணதாசன் திமுகவில் மாவட்டத் தலைவராகவும், தலைமைக்கு ஜால்ராவாகவும் இருந்திருக்க வேண்டும் ஹா ஹா
நீக்குஅது சரி ஜெயகுமார் சார்.. உங்க ஊர் கோவில்கள்ல கோவில் பெயர் ஆங்கிலத்திலாவது எழுதியிருக்க வேண்டாமா? ஜாங்கரியைப் புரிந்துகொள்வது கஷ்டம்.
நீக்குகேரளத்தில் தமிழ்நாடு போல் கோயில்களில் இருக்கும் கடவுள்களுக்கு தனிப் பெயர் இருப்பதில்லை. உதாரணமாக "செங்கமலத்தாயார் உடன் தேவநாத பெருமாள்" அல்லது "பெரியநாயகி ஸமேத பாடலீஸ்வரர்" (இவை இரண்டும் கடலூரில்) என்று விவரமாக பெயர் இருக்கும். இங்கு எல்லா சிவன் கோவிலும் மஹாதேவர் அம்பலம் தான். எல்லா பிள்ளையார் கோயிலும் கணபதி கோயில் தான். அதே போன்று இங்கு பெருமாள் கோயிலை விஷ்ணு கோயில் என்று குறிப்பிடுவார்கள். தனிப் பெயர் கிடையாது. வேறு படுத்துதல் இவை அமைந்த ஊர் பெயரை சேர்த்து.
நீக்குநீங்கள் ஒன்று கவனித்திருப்பீர்கள். சபரிமலை தவிர மற்ற சிவன் விஷ்ணு கோவில்களில் அம்மனுக்கு என்று தனி சன்னதி கிடையாது. இங்கு இருக்கும் அம்மன்கள் எல்லாம் பகவதி என்ற பெயரில் தனிக்கோயில் உள்ளவர்கள்.
இது போன்று சில காரணங்களால் கோயில்களின் பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மற்ற மொழிகளில் விளம்பரப்படுத்தவில்லை.
நீங்களே ஒன்று கவனித்திருப்பீர்கள். எல்லாக்கோவில்களையும் குறிப்பிடும்போது ஊர் பெயரையும் சேர்த்தே குறிப்பிடுவார்கள்.
திருவனந்தபுரம் திருக்கண்ணாபுரம் திருப்பாதபுரம் திருவல்லம் ஆகிய முக்கிய கோயில்களை உள்ளடக்கியது.
Jayakumar
நன்றி ஜெயகுமார் சார். ஆனால், நான் அதைக்குறிப்பிடவில்லை. திருநாவாய் ஸ்ரீமுகுந்தன், திருவல்லவாழ் ஸ்ரீவல்லபன் என்று அந்த கருவறையின் முன்பு தமிழில் மேலே எழுதப்பட்டிருந்தது. ஆனால் கோவில் முகப்பில் அது திருவல்லா, ஆரம்முளா என்று ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை. அதனால் முகப்புப் படங்கள் எடுத்துவந்தாலும், அது எந்த ஊர் என்று எனக்கு சந்தேகம் இருந்தது.
நீக்குஸ்ரீராம்ஜி, கௌதமன் சார், மற்றும் எங்கள் பிளாக் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் நாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளஸிஜி. வாழ்த்துகள்.
நீக்குகீதாக்காவை காணலியே ..என்னாச்சு
பதிலளிநீக்குகீதா
நல்ல காலத்திலேயே பண்டிகை, தர்ப்பணம், மாசப்பிறப்புனா ரொம்பவே தாமதமா வருவார்.
நீக்குஇப்போ கு கு வேற.
அதனால அவர் எப்போ வருவார் என அவருக்கே தெரியாதாயிருக்கும் ஹா ஹா
இரண்டாவதுபாடலும் கேட்டுவிட்டேன் ஸ்ரீராம். நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகீதா
ஆகமொத்தம் பொங்கல் பண்ணலை போலிருக்கு
நீக்குஎன்ன ராகம்னு சொல்லவில்லையே..!
நீக்குஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாங்க மனோ அக்கா.. நன்றியும் வாழ்த்துகளும்.
நீக்குஇனிமையான பாடல்கள்... இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி DD. வாழ்த்துகள்.
நீக்குஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.. ரொம்ப பிஸி போல.. வாழ்த்துகள்.
நீக்குஇரண்டு பாடல்களும் இனிமை.... கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி வெங்கட். வாழ்த்துகள்.
நீக்குஇனிய பாடல்கள். கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.