வியாழன், 13 ஜனவரி, 2022

ஓமிக்ரானா ?  டெங்குவா?  அவனா நீயி?

 இளையவனுக்கு சென்ற வாரம் திடீரென ஒரு இரவில் குளிர் தூக்கிப் போட, அதன் பின் இரண்டு மணிநேரம் கழித்து ஜுரம் தொடங்கியது. 

102, 103 என்று அனலடித்தது.  ஆஸ்தான மருத்துவரிடம் அலைபேசி அளவளாவியத்தில் 'வைரல் ஃபீவராத்தான் இருக்கும்.  ஆன்டிபயாட்டிக் இப்போ தேவையில்லை, டோலோ650  மட்டும் கொடுங்கள் பார்க்கலாம்' என்றார்.  

சரி என்று கொடுத்தால் மாத்திரை கொடுத்தால் ஜுரம் 100 க்கு கீழே இறங்குவேனா என்றது.  மறுபடியும் அலைபேசியதில் 'சாதாரண வைரல் ஜுரமா, 'ஸ்பெஷல் வைரஸ்' ஜுரமா, இல்லை டெங்குவா என்பது சற்று இடைவெளி விட்டுதான் பார்க்கவேண்டும்"

டெங்குவா...   ஆ...   ஆஸ்பத்திரி, முன்னெச்சரிக்கை கொரோனா டெஸ்ட், அட்மிஷன், பிளாடெலேட்ஸ், ரத்தம் ஏற்றுதல் என்றெல்லாம் மனம் அதனுடைய 35 எம் எம் திரையில் வேகமாகக் காட்சிகளை உருவாக்கி பீதியைக் கிளப்ப, 

'ரேஷஸ் இல்லை, உடம்பு வலியும் இல்லை என்கிறான்.." என்றேன்.

"எல்லா சிம்ப்டம்ஸும் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை ஸ்ரீராம்.." என்று கூறி, ஒரு குழம்பு வைக்கத் தேவையான அளவு புளியை என் வயிற்றில் கரைத்தவர்,  தொடர்ந்து "எதற்கும் கடையில் க்ளேவிரா மாத்திரை வாங்கி இரு வேளை ஒரு வாரம் கொடுத்து வாருங்கள் பார்க்கலாம்" என்றார்.


அவ்வப்போது 100 ற்கு கீழ் 99.8, 99.3 என்றெல்லாம் இறங்கிய வேகத்தில் மறுபடி 102, 101 என்று அனலடித்துக் கொண்டிருந்தது.  இடையில் பப்பாளி இலை வாங்கி அதையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இருவேளை கொடுத்தோம்.

ஒருவழியாய் இரண்டு நாட்களுக்குப் பின் ஜுரம் 98 க்கு இறங்கியது.  அப்புறம் மெல்ல நார்மல் நிலைக்கு வந்தது.

அப்போது வாட்ஸாப்பில் வந்த ஒரு செய்தியையும் வைத்து இப்படி பேஸ்புக்கில் ஒன்றைப் பகிர்ந்தேன்.

மீம்ஸ் மாதிரி ஒரு நிலைத்தகவல் பார்த்தேன்.  

'இந்தியாவில் DOLO 650 பெப்பெர்மிண்ட் மிட்டாய் போல ஆகிவிட்டது.  எல்லோரும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்று.   

 ஆபத்தான பழக்கமும் கூட.

உண்மைதான்.  அப்படிதான் நடக்கிறது.  500 மி கி என்பதே வழக்கொழிந்து போய்விடும் போல இருக்கிறது. 

ஆனால் ஒரு சந்தேகம்..

அதென்ன யாரைக்கேட்டாலும் டோலோ 650?  

Calpol 650 அல்லது Fepanil 650, அல்லது Metacin 650 எல்லாம் வேலை செய்யாதா?  இல்லை, அது இது எல்லாம் ஒன்றுதான் என்று யாருக்கும் தெரியவில்லையா?  எல்லாம் பாராசிட்டமால்தானே?

மைக்ரோ லேப்ஸ் என்ன உசத்தி? ரேன்பாக்சியோ, க்ளாக்ஸோவோ, சிட்டாடலோ, தெமிஸ் நிறுவனமோ என்ன தாழ்த்தி?  இந்த brand பெயர் மட்டும் மக்கள் மனதில் பதிந்து போனதன் மர்மம் என்ன?!!

இப்படி ஒரு நிலைத்தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.  திவாண்ணா உள்ளிட்ட இரண்டு மருத்துவர்கள், மற்றும் கேஜிஜி  உட்பட சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்திருந்தார்கள்.  எங்கள் மருத்துவரிடமும் கேட்டபோது 'எப்படியோ அது பெயர் பெற்று விட்டது.  அதனாலேயே நீங்கள் கடையில் போய்க்கேட்டால் இது எல்லாக் கடையிலும் வாங்கி வைத்திருப்பார்கள்.  மற்றவை கிடைப்பதில் சிரமம் இருக்கும்.  நானும் அதையே கேட்கிறேன்..  எல்லாம் பாராசிட்டமால்தானே, இதையே வாங்கி கொடுங்களேன்' என்றார்!

நியாயம்தான்.

இந்நிலையில் கடந்த சனி இரவு முதல் பாஸுக்கும் பெரியவனுக்கும் இதே போல பிரச்னை தொடங்கியது.  அவர்கள் இருவருக்கும் குளிர் தூக்கிப் போடாமல் ஜுரம் நேரடியாய் வந்து இறங்கியது. மருத்துவரிடம் ஆலோசித்தபோது "பின்னே?  ஒருத்தனுக்கு வீட்டுக்குள் வந்திருக்கு..  மற்றவர்களுக்கு வராமல் இருக்குமா?  மாஸ்க் போட்டுக் கொண்டு தனியாய்த்தானே இருந்தார் உங்கள் மகன்?'  என்று கேட்டார்.  

'ஆமாம்' என்றேன்.  

'அதே போலதான்.  டோலோ தோழா..'  என்றார்.  அதே போல நீங்களும் தனித்தனியாவே இயங்குங்கள்' என்றும் சொன்னார்.

'எடு டோலோ கொடு ஜோரா' என்று கொடுக்கத் தொடங்கினேன்.  இளையவன் இப்போது இருமலுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.

பாஸ், பெரியவன் இவர்களுக்கும் சளி, இருமல் இருந்தது.

அலுவலகத்திலா, வருடாந்திர அறிக்கை, வருமானவரி தாக்கல் என்று கடும் பணி நெருக்கடி.  இடையில் உடன் பணிபுரியும் பெண்ணின் பெண்ணுக்கு பிரசவம் என்று அவர் வேறு லீவ் லீவாகப் போட்டுக் கொண்டிருந்தார்.  பாஸுக்கு உடம்பு சரியில்லாத போய், இப்போது வீட்டுப் பொறுப்பும் சேர்ந்து கொண்ட நிலையில்......

செவ்வாய் மதியம் முதல் என் தொண்டை கீச்கீச் என்றது.  ஜுரம் கிட்ட வா என்றது.   இரவு குளிர்ஜுரம் என்னை தூக்கிப் போட்டு விளையாடியது.  தொடர்ந்து ஜுரம் தொடங்கியது!  காலை படுக்கையை விட்டு எழவே முடியவில்லை.  கடுமையான உடல்வலி.  டோலோவே கதி என்று யாரையும் கேட்காமலேயே சரணடைந்தேன்.

பாஸிடமிருந்து குட்மார்னிங் மெஸேஜோ, குட்நைட் மெஸேஜோ வரவில்லை என்றால் நான்கைந்து உறவினர்கள் என் மகன்களை உடனே தொடர்பு கொண்டு விடுவார்கள்.  ''அம்மாவுக்கு என்ன?  சரியாய்த்தானே இருக்கா?  ஏன் மெஸேஜ் இல்லை" என்று கேட்பார்கள்.  எனக்கு வியப்பாய் இருக்கும்.  பாஸின் உறவுத்தொடர்பு பற்றி நான் அறியும் நேரங்கள் அவை.

 இபப்டி எல்லாம் பேசும்போதுதான் தெரிந்தது.  கடந்த சில நாட்களாகவே சென்னையில் (மற்ற ஊர்களிலும் இருக்கலாம்)  கிட்டத்தட்ட எல்லோரும் இந்நிலையை அனுபவித்து வருகிறார்கள் என்று தெரிந்தது.  நிறைய உறவினர் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் இந்நிலைதான்.  வீட்டுக்குளேயே இருப்பவர்களைக் கூட தாக்குகிறது என்பதும் ஆச்சர்யம்.  யாரையும் விட்டு வைக்காது போல..

ஓமிக்ரானா, டெங்குவா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.  அவ்வளவுதான்.

எதற்கும் இருக்கட்டும் என்று க்ளாவிரா மற்றும் பப்பாளி இலை ட்ரீட்மென்ட்டையும் எடுத்துக் கொண்டேன்.  செவ்வாய் முழுக்க எழ முடியவில்லை.  அதே போல ஜுரம் 102, 103 என்று அலைந்து கொண்டிருந்தது.  பாஸும், பெரியவனும் எனக்கு சீனியர்கள் என்பதால் செவ்வாய்க்கிழமை அன்று அவர்கள் ஜுரத்தை 96, 97 என்று இறக்கி விட்டிருந்தார்கள்.




பொதுவாக மூன்று நாட்களுக்கும் மேல் 100 க்கு மேல் டெம்பெரேச்சர் குறையாமல் இருந்தால் மருத்துவமனையை நாடலாம், நாடவேண்டும். 



 படுத்தே இருப்பதால்தான் தலை பாரமாக இருக்கிறதோ என்று மாலை ஹாலில் சற்று அமர்ந்தேன்.  வல்லிம்மா வாட்ஸாப்பில் பேசி 'என்ன ஆச்சு, ஆளைக் காணோம்' என்று விசாரித்தார்.  

எனக்கு செவ்வாய் இரவே ஜுரம் 98 ஐக் காட்டியது.  எனினும் ஒழுகும் மூக்கும் இருமலும் படுத்துகிறது.



சென்னை :  தமிழகத்தில் பரவும் கொரோனா தொற்று, ஒமைக்ரான் வகையை சார்ந்ததா என்பதைகண்டறிவதற்கான, மரபணு பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.  தினமும் பாதிக்கப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு, ஒமைக்ரான் அறிகுறிகளே இருப்பதாலும், இதற்கான பரிசோதனை

முடிவுகள் வந்து சேருவதற்குள், அவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விடுவதாலும்,ஒமைக்ரானுக்கான மரபணு சோதனை தேவையில்லை என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது.

தமிழகத்தில் 2020 டிசம்பர் 25ம் தேதி வரை, 'டெல்டா' வகை கொரோனா வைரஸ் தாக்கம் தான் இருந்தது. இதனால், தினசரி பாதிப்பும் 600 என்ற எண்ணிக்கையிலேயே நீடித்தது.


பின், நைஜீரியாவில் இருந்து வந்த நபர் மற்றும் அவருடன் பயணித்த நபர்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர்.


தற்போது ஏற்படும் கொரோனா தொற்றில், 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்றும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா வகை தொற்றும் ஏற்படுகிறது.

ஒமைக்ரான் தொற்றை உறுதி செய்ய, மத்திய ஆய்வகத்திற்கு மாதிரிகள்அனுப்பப்பட்டு, மரபணு சோதனை முடிந்து, முடிவுகள் வருவதற்குள், நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடுகின்றனர். எனவே, ஒமைக்ரானை உறுதி செய்யும் மரபணு பரிசோதனையை நிறுத்தி விட்டோம்.அதேவேளையில், 'கிளஸ்டர்' எனப்படும், ஒரே பகுதியில் அதிகம் பாதிப்பு காணப்படும் இடங்களில் மட்டுமே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும். அப்போது தான், வேறு ஏதேனும் மாறுபட்ட தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும்.


முழுச் செய்தியையும் படிக்க லிங்க்கை க்ளிக் செய்யவும்.  இங்கு முக்கிய பகுதிகளை மட்டும் எடுத்துக் போட்டிருக்கிறேன்.


எனவே, இப்போது சளித்தொந்தரவு, லேசான இருமல் தவிர வேறு குறையில்லை மறைமூர்த்தி கண்ணா..


இந்தவகை ஜுரம் வருவது இயற்கையே நம்மை இம்யூன் செய்து விடுகிறது என்று ஒரு மருத்துவர் சொன்னதை எங்கோ கேட்டேன்.  ஒருவகையில் பார்க்கும்போது  அது சரிதானோ என்று தோன்றுகிறது.

==================================================================================================

காய்ச்சலால், 'பிளேட்லெட்' குறைவதை தவிர்க்க வழி கூறும், சித்த மருத்துவர் செல்வ சண்முகம், இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபா:
"பொதுவாகவே, நம் மண்ணில் அனைத்து வகை இலைகளுக்குமே, 'பிளேட்லெட்' அதிகப்படுத்தக் கூடிய தன்மை இருக்கிறது.
குறிப்பாக, பப்பாளி, ஆடாதோடை இலை, உடனே பிளேட்லெட்சை அதிகப்படுத்தும் சிறப்பு வாய்ந்தவை.ஒரேயொரு பப்பாளி இலையின் நரம்பை நீக்கி, அதை மிக்சியில் அடித்து சாறெடுத்து, அதனுடன் தேன் கலந்து தரலாம்.
பிளேட்லெட் குறைந்து கொண்டு வரும் சமயம் என்றால், ஒரு நாளைக்கு மூன்று முறை கூட தரலாம்.
ஆடாதோடையில் செய்த மணப்பாகு, சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கிறது. 'இம்ப்காப்ஸ்' தயாரிப்பு எனில், தரமாக இருக்கும்.
அதை, 10 மில்லி அளவுக்கு மூன்று வேளை சாப்பிடலாம். கொய்யா இலையையும் ஜூசாக்கி, தேன் கலந்து குடிக்கலாம். அதுவும் பிளேட்லெட்சை அதிகரிக்கும்.
அதேபோல், செங்காய் பதத்தில் இருக்கும் கொய்யா பழம், பப்பாளி, கிவி பழத்துக்கு இந்த குணம் உண்டு. மில்க் ஷேக் போட்டு, சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
இந்த சமயத்தில் உடலில் எனர்ஜி மிக குறைவாக இருக்கும். எனவே, காய்ந்த திராட்சை, அத்திக்காய் சாப்பிடலாம்.
தவிர, உணவில் கூட சிறுதானியங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
செரிமானத்துக்கும், உடல் கழிவுகள் நீங்க வும், மிளகு, இஞ்சி, திப்பிலியை நன்றாக கொதித்து வைத்து, அதில் பனங்கல்கண்டு கலந்து குடிக்கலாம்.
வாந்தி வந்தாலும், இது சாப்பிட்டால் சரியாகும்.
கிருமிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, பிளேட்லெட்சை அதிகப்படுத்த, வேப்பிலையை கொதிக்க வைத்துக் குடிப்பதும் சிறப்பு.
பொதுவாக, வாரம் ஒருமுறை வேப்பங்கொழுந்து, சிறு துண்டு விரளி மஞ்சள், மிளகு மூன்றையும் அரைத்து, நெல்லிக்காய் அளவு, வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே எந்த காய்ச்சலும் வராது.
தவிர, பிளேட்லெட்சை அதிகரிக்கவும், காய்ச்சலை குறைக்கவும் அனைவருக்கும் தெரிந்த விஷயம், நிலவேம்பு. இதற்கு, இரண்டு தேக்கரண்டி நிலவேம்பு பவுடரை, இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, அது, அரை டம்ளர் அளவுக்கு சுண்டும் வரை, நன்றாக காய்ச்ச வேண்டும். இப்படி நாள் ஒன்றுக்கு, இரண்டு முறை செய்து குடிக்க வேண்டும்.
இந்த சமயத்தில், மிக மிக முக்கியமானது, தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும் என்பது தான்.
தண்ணீர் போதுமான அளவில் குடித்தால் தான், மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே, சுத்தமான தண்ணீர் நிறைய குடியுங்கள்; இதன் மூலம் பிளேட்லெட், விரைவிலேயே அதிகரிக்கும்.
தினமலரிலிருந்து...

===================================================================================

பேஸ்புக் பகிர்வு ஒன்று.  

எளிமை என்று நாம் நினைப்பதெல்லாம் எளிமை அல்ல..   காந்திஜியின் ஆட்டுப்பால் எளிமை ரொம்ப ஃபேமஸ்!  

கேஜரிவால் பதவிக்கு வந்தப்ப புதிதில் அவருக்கு டெல்லியில் சின்ன வீடு ஒன்று தேடுகிறார்கள் என்று செய்தியைப் படித்து கிண்டலாக ஒரு பகிர்வு போட்டிருந்தேன்.  அதைப் படித்து KGJ போட்ட சுவாரஸ்யமான பேஸ்புக் பகிர்வு!


============================================================================================================

ஜீவி ஸார் சென்ற வருடம் எழுத்தாளர் வையவன் தன்னிடம் பேசியதாக சொல்லி இருந்தார்.



============================================================================================================

இந்தப் புத்தகத்தை இணையத்தில் தேடிப் பார்த்தேன்.  கிடைக்கவில்லை.

வ.ரா.,வின் அறுபதாவது வயது நிறைவை முன்னிட்டு, ஒரு விழா நடத்த வேண்டுமென்று தீர்மானித்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அன்று பேசிய நண்பர்கள் எல்லாரும், வ.ரா.,வை பாராட்டி, அவரது குணாதிசயங்களைப் சிலாகித்தனர். மணிவிழாவை சிறப்பாக நடத்தி, அவருக்கு பணமுடிப்பு ஒன்று அளிக்க வேண்டும் என்று கூறினர்.

ஒரு பிரபல எழுத்தாளர், 'இந்த வயதான காலத்தில், வ.ரா.வைத் தரித்திரம் பிடிக்கும்படி விடலாமா, அன்ன, வஸ்திரத்துக்கு அவரைக் கஷ்டப்பட விடலாமா...' என்று உணர்ச்சியுடன் பேசினார்.
கூட்டம் முடிந்த அரை மணி நேரத்துக்கு பின், வ.ரா.,வின் வீட்டுக்குப் போனேன். வ.ரா., உற்சாகமாக இருப்பார் என்று எண்ணினேன். அதற்கு மாறாக, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னாலேயே, ஒருவர் சென்று, ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததை சொல்லி விட்டார்.
வ.ரா.,வின் வறுமையைப் பற்றி குறிப்பிட்டது, அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகையால், சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
என்னைக் கண்டதும், 'ஏங்காணும், நான் தரித்திரன் என்பதற்காகவே, எனக்கு பணமுடிப்பு அளிக்கப் போகிறீர்களா... நான் ஒன்றும் தரித்திரன் இல்லை. இந்த உலகத்து செல்வம் எல்லாம், என்னுடையதாயிற்றே! என்னுடைய ஏழ்மைக்காக, பணம் கொடுப்பதாக இருந்தால், என்னை விட, எத்தனையோ ஏழைகள் இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுங்கள். நான் எழுத்தாளன். என் தமிழ் தொண்டுக்காக, பணமுடிப்பு கொடுப்பதாயிருந்தால், கொடுங்கள். இல்லாவிடின் வேண்டாம்...' என்று சீறினார் வ.ரா.,
—கல்கி எழுதிய, 'யார் இந்த மனிதர்கள்...'என்ற நூலிலிருந்து...
தினமலர் வாரமலர் -திண்ணை-

==========================================================================================

கவிதை என்கிற மடக்கிப்போடும் வரிகள் இல்லாமலேயே பதிவுகள் போவதில் கமலா அக்கா, பானு அக்கா, கீதா ரெங்கன் எல்லாம் கவலைப் பட்டிருந்தார்கள்!

இந்த உடல்நிலை சரியில்லாத சிரமமான நேரத்திலும் அவர்கள் கவலையைப் போக்குவது என் கடமையானது!

பேஸ்புக்கில் 'ரெற்றோ கவிதைகள்' என்கிற வினோத பக்கம் ஒன்று இருக்கிறது. கேஜிஜி என்னை அதில் சேர்த்து விட்டிருந்தார். அவரும் அங்கே அவ்வப்போது எழுதி வருகிறார். நான் அந்த தளத்தில் போட்ட கவிதை (மாதிரி) ஒன்று! கேஜிஜி(மட்டும்) யின் 'லைக்'கோடு 'அமோக வரவேற்பை'ப் பெற்றது "கவிதை"!!!

பற்றேதுமில்லாமல் வந்தேன் - வந்த 
சற்றைக்கெல்லாம் குழுமத்தில் இணைக்கப் 
பெற்றேன்.. கவனித்துப்பார்க்கையில்
மற்றோரெல்லாம் எழுதும்போது நாம் மட்டும் 
ஒற்றையாய் நிற்கிறோமே - இப்படி மனதில்
சுற்றிய எண்ணங்களை விடு !
ரெற்றோ கவிதைகள் என்றால் 
கற்றோருக்கெல்லாம் புரிகிறது
 சற்றும் உனக்குப் புரியவில்லை என்றால் 
விட்டுர்றா என்கிறது மனம்! 

================================================================================================

பட், உங்க அந்த நேர்மையும் முன்யோசனையும் எனக்குப் பிடிச்சிருக்கு!


அது சரி, இப்படி இன்னும் என்னென்ன பொங்கல் எல்லாம் கொண்டாடலாம்?!


இதை என்னன்னு சொல்வீங்க...!


மதன்னு சொன்னா ஜோக் மட்டும்தானா? அவர் கார்ட்டூன் போடலாமே.. இதுவும் ஜோ(ஷோ)க்காதான் கீது!

148 கருத்துகள்:

  1. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. @ ஸ்ரீராம்...

    // இந்த உடல்நிலை சரியில்லாத சிரமமான நேரத்திலும் அவர்கள் கவலையைப் போக்குவது என் கடமையானது! ..//

    இது தான்.. இதே தான்!..

    பதிலளிநீக்கு
  4. மதன அவர்களது கருத்துப் படத்தில் இருக்கும் - இந்தியா, பாக்.. எனும் வார்த்தைகளை எடுத்து விட்டு வேறு இரண்டு வார்த்தைகளை வைத்தேன்..

    மிகச் சரியாகப் பொருந்தி வருகின்றது..

    மதன் மதன் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு இரண்டு வார்த்தைகள் என்ன என்றும் சொல்லிவிட்டீர்கள் என்றால், போகி பண்டிகையை சந்தோஷமாகக் கொண்டாடுவோம்!

      நீக்கு
    2. அப்போ நீங்க சொல்லுங்க!

      நீக்கு
    3. வெவ்வேறு இரண்டு வார்த்தைகளாக நிறைய யோசிக்கலாமோ!

      நீக்கு
  5. உடல் நிலையை கவனித்து கொள்ளவும் ஸ்ரீராம். எல்லா இடங்களிலும் தீநுண்மி தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கவனமாக இருங்கள்.

    கவிதை, நகைச்சுவை துணுக்குகள் மற்றும் இதர பகுதிகளும் நன்று. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கவிதை, நகைச்சுவை துணுக்குகள் மற்றும் இதர பகுதிகளும் நன்று. அனைத்தையும் ரசித்தேன்.// நன்றி.

      நீக்கு
    2. நன்றி வெங்கட்.  நடுக்கடலில் நின்று கொண்டிருக்கிறோம்.  கரை எந்தப் பக்கம் என்று தெரியவில்லை.  எந்தப் பக்கமாவது கடந்துதான் ஆகவேண்டும்!!!

      நீக்கு
  6. எப்படியோ விஷக் காய்ச்சலில் இருந்து இறையருளால் தப்பித்து இருக்கின்றீர்கள்...

    மிகவும் கவனமாக இருக்கவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் பூரண நலம் அடைய வாழ்த்துவோம்.

      நீக்கு
    2. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பார்களே..   அது இதற்குப் பொருந்தும்!

      நீக்கு
  7. அன்பின் ஸ்ரீராம், உங்களுக்கும்
    நம் நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம்.

    வருங்காலம் நன்மைகள் நம்மைத் தொடரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன்

    இனிய போகி, பொங்கல் தின வாழ்த்துகளையும்
    இங்கு பதிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி. எல்லோருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமையட்டும்.

      நீக்கு
    2. வாங்கம்மா... .. நன்றி. வணக்கம்.

      நீக்கு
  8. அடடே இவர்தான் வையவனா. மிக மிக நன்றி ஸ்ரீராம்.
    இவர் எழுத்து மிகப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா அம்மா...  ஜீவி ஸார் மேலதிகத் தகவல்கள் தரக்கூடும்..

      நீக்கு
  9. காலை வணக்கம் ஸ்ரீராம்.

    இன்று உங்கள் பதிவு...பார்த்து உடல் நலன் பார்த்து ஓய்வு எடுத்து முடியும் போது பதில் கொடுங்க போதும். உடல்நலன் அதுதான் முக்கியம்.

    கவிதை கண்ணில் பட்டுவிட்டது. எதுகை மோனை முயற்சி!? ரசித்தேன் ஸ்ரீராம்.

    ரெற்றோ என்றால் பழைய முறைப்படி அதாவது புதுக்கவிதை எல்லாம் ஆக்ரமிக்கும் முன் எழுதப்பட்ட சந்தக் கவிதைகளோ?!!

    வருகிறேன். கமலாக்கா சுட சுட இட்லி கொடுத்தும் நான் தாமதமானதால் இட்லி ஆறிப் போய்க் கொண்டிருக்கிறது!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

      தாங்கள் என் பதிவுக்கு வந்து சிறப்பித்தமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இட்லி ஆறினாலும் ருசி தரும் என்பது நீங்கள் அறியாததா? எனினும், உடன் பதிவுக்கு வந்ததற்கு மனதாற நன்றியை இங்கும் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. உடம்பு சரியில்லாமல் இருக்கும் நிலைக்கு நானும் கமலா அக்கா வீடு சென்று இட்லி சாப்பிட்டு விட்டு வந்து விட்டேன் கீதா..  ரெற்றோ வார்த்தைக்கு என்ன அர்த்தமோ, எங்கிருந்து எதற்காக பிடித்தார்களோ!

      நீக்கு
    3. ஹாஹாஹா...ஹைஃபைவ் ஸ்ரீராம்...காலையில் சொல்ல நினைத்து ...ஸ்ரீராம் உங்க உடம்புக்கு ஏற்றாற் போல கமலாக்கா வீட்டுல இட்லி போய் சாப்பிட்டு வாங்கன்னு ...விட்டுப் போச்!!

      கீதா

      நீக்கு
    4. ஆனா பாருங்க..  அவங்களும் மிளகாய்ப்பொடிதான் வச்சு கொடுத்தாங்க...

      நீக்கு
    5. நன்றி ஸ்ரீராம் சகோதரரே. நன்றி கீதாரெங்கன் சகோதரி. இருவரின் கருத்துக்களும் அருமையாக இருந்தது.அனைத்திற்கும் என்னால்தான் உடனே பதிலளிக்க இயலவில்லை ஆளுக்கு ஒன்றாக நீ..ண்..ட பதில் தந்து விட்டு வைகுண்டம் செல்ல ஆயத்தமாகி விட்டேன். மன்னிக்கவும். நன்றி.

      நீக்கு
  10. ஊரில் எந்தக் காய்ச்சல் வந்தாலும் உங்க வீட்டுக்கு வந்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறது போலிருக்கிறது:(

    என்ன கஷ்டம்டா இது கடவுளே.

    நல்ல யோசனையோடு செயல் பட்டு இருக்கிறீர்கள்.
    மிக வருத்தம் ஆனால் நீங்கள் அனைவரும்
    பத்திரமாக வெளியில் வந்ததற்க்கு இறைவனுக்கு மிக மிக நன்றி.
    உங்களிடம் பேசிய பிறகு
    என் உறவுகளில் ஆறு பேருக்கும், நட்பில் ஒருவருக்கும்
    ஒமிக்ரான் வந்தாச்சு.

    ஐந்து நாட்கள் கணக்காமே!!!
    இன்று தொலைபேசிய நட்பு மிகப் பெரிய தலைவலியில்
    இருந்தார். எப்போது இந்த வருத்தங்கள் தீருமோ
    தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோதனைக் காலம் இந்த மகரசங்கராந்தியுடன் முடிவுக்கு வரட்டும்.

      நீக்கு
    2. ஆமாம் மா. நீங்களும் நலமுடன் இருங்கள்.

      நீக்கு
    3. நமக்கு ருசி காண்பித்து இப்படிதான் இருக்கும் பரவாயில்லையா என்று கேட்கிறது போல...  ஊர் முழுக்க சென்னையில்  இந்தத் தொந்தரவைத்தான் சொல்கிறார்கள்..

      "சார்..  எப்படி இருக்கீங்க?"

      "ஓகே சார்..  தொண்டைதான் கரகரவென்கிறது..  உடம்பு வலி.. ஜுரம்...  "

      நீக்கு
  11. திரு கேஜி ஜவர் அவர்களின் பதிவை
    படித்த நியைவு இருக்கிறது. நல்ல சுவையான நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் ரெற்றோ கவிதை நன்றாக இருக்கிறது!!!
    ரெட்டிரோவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் குழுவிற்கு 'ரெற்றோ கவிதைகள் ' என்றுதான் பெயர் வைத்துள்ளார்கள்.

      நீக்கு
    2. ரெற்றோவை வைத்தே வார்த்தைகள் அமைத்தேன்.  அவ்வளவுதான்.  சிறப்பாக எல்லாம் இருக்காது அம்மா.   இது சும்மா கவிதை எங்கேன்னு கேட்டவர்களுக்கு உவாங்கட்டிக்கு..

      நீக்கு
  13. பதில்கள்
    1. எனக்கும் அந்த செய்தி புதிது!

      நீக்கு
    2. ஜேசுதாஸ் நிச்சயம் அந்தமாதிரி சொல்லக்கூடியவர்தாம். இன்னொரு தயாரிப்பாளர், அவர் பாடல் பாடும்போது , ரெக்கார்டிங் தியேட்டரில் அவரைப் பார்த்து (தயாரிப்பாளர் எனத் தெரியாமல்), கண்டவங்களெல்லாம் ரெக்கார்டில் தியேட்டருக்குள் வரக்கூடாது, போங்க வெளியே என்று விரட்டினாராம் ;பிறகு நடந்தது நெகிழ்ச்சியான விஷயம்)

      நெல்லை சபாவில் கர்நாடக்க் கச்சேரி செய்யவந்தபோது, சினிமாப் பாடல்களை விருப்பப் பாடலாக துண்டுச் சீட்டு அனுப்பியவர்களிடம் எரிந்துவிழுந்தார்.

      நீக்கு
    3. அவருடைய நல்ல குணங்கள் எளிமையும் வியப்புக்குரியவை

      நீக்கு
    4. ஆமாம் அம்மா..  யேசுதாஸ் 90 களில் விகடனில் தந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.  பேட்டி எடுத்தவர் டிவிஜி என்று நினைவு.

      நீக்கு
    5. ஆமாம் நெல்லை யேசுதாஸ் சட்டென கோபப்படக் கூடியவர்.

      நீக்கு
  14. நீங்கள் சொல்லி இருக்கும் மருத்துவக் குறிப்புகளை

    பாதிக்கப் பட்டவர்களுக்கும் அனுப்புகிறேன்.
    அவர்களுக்குப் படிக்கத் தெம்பு தான்
    வேண்டும்.
    நலம் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் பெறட்டும்.  ஒருவருக்கான மருத்துவக் குறிப்புகள் அடுத்தவருக்குப் பொருந்தும் என்று சொல்ல முடியாது.  க்ளெவிரா மாத்திரைகள் ஜாக்கிரதைக்கு எடுத்துக் கொண்டது.  டெங்குவாக இருந்தால் ப்லாடெலேட்ஸ் எண்ணிக்கைக்காக..   டோலோ காமன்! பப்பாளி இலை சிலருக்கு டயரியாவைத் தரலாம்.

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

    என்னவோ சோதனையான கால கட்டங்கள் தொடர்கின்றன. உங்கள் பதிவை படிக்கையில் மனம் அவ்வளவு வருத்தப்பட்டது. உங்கள் அனைவரின் உடல் நிலையை பத்திரமாக கவனித்துக் கொள்ளவும். விரைவில் பூரணமாக குணமடைய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இத்தனை இடரையும் இடையிடையே நகைச்சுவை கலந்து பகிர்ந்துள்ளீர்கள். இந்த நகைச்சுவை எண்ணமே நம் பிணிகளை கொஞ்சம் இலகுவாக்கும் என நானும் இப்படித்தான் நம்புவேன். இருப்பினும் உங்கள் உடல் நிலையையும், வீட்டில் மற்றவர்களின் உடல் நிலையையும் நன்றாக கவனித்துக் கொள்ளவும்.

    உங்கள் கடந்த இருவார தேடல் பகுதி வியாழன்களில் உங்கள் கவிதையை காணவில்லையே .! இந்த வாரம் வந்திருக்கும் என நினைத்து வந்தேன். ஆனால் முதல் பகுதி படித்து வந்ததில் மனதை கவலையுறச் செய்து விட்டது. ஆனால், இந்நிலையிலும் எங்களுக்காக உங்கள் கவிதையை கண்டதும் உண்மையிலேயே சந்தோஷமடைந்தேன்.

    /இந்த உடல்நிலை சரியில்லாத சிரமமான நேரத்திலும் அவர்கள் கவலையைப் போக்குவது என் கடமையானது! /

    இரு வாரங்களாக கவிதையை காணவில்லையே என்ற குறைபட்ட எங்களுக்காக உங்கள் கவிதையை தங்களது இத்தனை உடல்நலக் குறைவிலும் நினைவாக எடுத்துப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை.

    கவிதை அழகான சொற்களின் இணைப்பில் அற்புதமாக உள்ளது. படித்து ரசித்தேன். நன்றி.

    மீதி பகுதிகளையும் பிறகு படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை அற்புதமாக உள்ளது என்று நீங்கள் சொல்வது உங்களுக்கு என்மீது இருக்கும் அன்பைக் காட்டுகிறது...  'பாவம் உடம்பு வேற சரியில்லாமல் இருக்கிறான்' என்று...  ஹா..  ஹா..  ஹா...

      சிலசமயம் சோதனைகளை ஆரம்ப கட்டத்திலேயே கடந்துவிடுவது நல்லது என்று கூட தோன்றும்!

      நீக்கு
    2. அப்படியெல்லாம் இல்லை. எனக்கு உண்மையிலேயே நன்றாக இருந்தது. ஏனெனில் இந்த அளவுக்கு கூட என்னால் யோசிக்க இயலாது.

      நீக்கு
  17. ஶ்ரீராம், அவர் வயிற்றில் இருந்த புளியை எனக்கு இடம் மாற்றிவிட்டாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா...   சென்னையில் இது திக்கெட்டும் புகழ்பரப்பிப் பரவிக்கொண்டிருக்கிறது நெல்லை..  மற்ற ஊர்களில், குறிப்பாக பெங்களுருவில் எப்படி என்று நீங்கள் எல்லாம்தான் சொல்லவேண்டும்!

      நீக்கு
    2. இங்கயும் அவேர்னெஸ் இருக்கிறது.. ஆனால் கூட்டம் சொல்லி மாளலை. வெளிலயே போகக்கூடாதுன்னு பசங்க சொல்றாங்க (பையனுக்கு வேற வழியில்லை. நான் வளாகத்துலயே இருக்க பிரியப்படாதவன். ஒரு நடை வெளியில் போய்விடுவேன்,)

      இன்று கே ஆர் மார்க்கெட் சென்றிருந்தேன் (இந்த மஞ்சக்கொலை வாங்கத்தான். நான் இப்படிப் போனதைச் சொன்னால் அவங்க லைக் பண்ணமாட்டாங்க). இந்த ஊர்ல மஞ்சக்கொலை மட்டும் ஒரு நாள் வந்துட்டு அப்புறம் வராது.

      நேற்று இரண்டு கரும்பு 40 ரூபாய் விலையில் வாங்கினேன் (ஒரு கரும்பு 20 ரூ)

      நீக்கு
  18. உங்களனைவருக்கும் குணமாகிக்கொண்டு வருகிறது என்பது நல்ல சேதிதான்.

    நான் இந்த டோலோ கொடுத்ததை உபயோகிக்கவே இல்லை (மாநகராட்சி ஓசி இரண்டாவது டோஸ் போட்டு ஒரு ஸ்ட்ரிப்பும் முன்பு தந்தார்கள்).

    நல்ல நேரம். எளிமையான பாராசிட்டமால். விலை அதிகமுள்ள மருந்து தேவைப்பட்டிருந்தால் என்னவாயிருக்கும் ஏழை ஜனங்களுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாநகராட்சியில் எளிமையான பாராசிட்டமால் தான் தருவார்கள். டோலோவா கொடுத்தார்கள்?

      நீக்கு
    2. அதைத்தான் கொடுத்தார்கள் (டோலோ.. தேவைனா உபயோகிங்க என்று. நான் மாத்திரைகளை உபயோகிக்க கொஞ்சம் பயப்படுவேன். அதனால் தொடவே இல்லை)

      நீக்கு
  19. மருத்துவ குறிப்புகள் நன்று...

    உண்டென்றால் அது உண்டு...
    இல்லை என்றால் அது இல்லை...
    இல்லை என்றால் அது இல்லை...

    அது = கதையும் உண்டு, விதையும் உண்டு = கவிதை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. நான் கூட ஓமிக்ரானோ என்று பார்த்தேன்!

      நீக்கு
  20. @ கௌதமன்..

    // வேறு இரண்டு வார்த்தைகள் என்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால், .. //

    அவை நிதர்சனமான வார்த்தைகள் தான்..

    ஆனாலும்!?..

    அப்புறமாக இதற்கு க்ளூ கொடுக்கின்றேன்.. நீங்களே பொருத்திப் பார்த்து மகிழுங்கள்..

    உண்மையை உரக்கச் சொல்வதற்கும் ஆபத்தான கால கட்டம் இது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சொல்கிறீர்கள்?  புரிந்தது!  அப்போ அது அந்த வார்தைகளாகத்தான் இருக்கவேண்டும்!

      நீக்கு
    2. அதுவா? ஓகே (ஆமாம் - அந்த அதுதான் எது என்று சொல்வாரா அவந்திகா ?? )

      நீக்கு
  21. தற்போது எங்கும் ஒமைக்ரான் ஆட்டம் அதிகமாக பீதியை கிளப்புகிறது கவனம் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படுத்துகிறது ஜி...  உடம்பு களைப்பாகிப் போகிறது.

      நீக்கு
  22. போகியில் பழையதை எரிப்பது - யாரிடமேனும் நமக்கு கோபமோ, குறையோ, வருத்தமொ, பகையோ, பொறாமையோ எந்த எதிர்மறையாக இருந்தாலும் அதை எல்லாம் எரித்துவிட்டு மனதை புதிதாக்கிக் கொள்வோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // யாரிடமேனும் நமக்கு கோபமோ, குறையோ, வருத்தமொ, பகையோ, பொறாமையோ எந்த எதிர்மறையாக இருந்தாலும் அதை எல்லாம் எரித்துவிட்டு மனதை புதிதாக்கிக் கொள்வோம்.// சூப்பர்.

      நீக்கு
  23. கேஜிஜ அவர்களின் இந்த அனுபவம் பற்றி முன்னர் ஒரு வியாழன் பதிவு என்று நினைக்கிறேன் சொல்லியிருந்த நினைவு. இப்படி எஃப்பி படத்துடன் இல்லாமல்...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஆமாம் எளிமை என்று நாம் நினைப்பது எளிமை அல்ல. அதற்கான கேஜிஜ வின் அனுபவம் மூலம் சொன்னது சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஓமைக்ரான், டெங்கு - எது என்று உறுதி செய்து கொள்ளச் சொன்ன தகவல் பயனுள்ளது ஸ்ரீராம். இப்ப டெங்குவும் கூடவே நுழைஞ்சுருக்கோ?

    இந்தக் குயில் காக்கையின் கூட்டில் முட்டை இடுவது போல!!!! ஹாஹா

    என்னவோ போங்க. நீங்கள் எல்லாரும் இப்ப ஓகே என்பதே இதமாக இருக்கிறது.

    தகவல்கள் எல்லாமே நன்று. ஸ்ரீராம், க்ளெவிரா ஸ்டாக் வைச்சுக்கச் சொல்றீங்க!! ஓகே டன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது டெங்கு காலம் கீதா... கொசுக்களின் ராஜ்ஜியம். அவர்கள் நேரத்தில்தான் ஓமி நுழைந்திருக்கிறது!

      நீக்கு
    2. ஓ அப்ப ஓமிதான் குயிலு...என்னவோ போங்க

      சும்மா சாதாரணமா கடுகு மிளகாய் தாளிக்கும் போது இருமினாலே..அல்லது தொண்டையை காரினாலே..ஓ மை மி/மீ? என்று ஃபோபியா பரவலாக!! ஹாஹாஹாஹா

      கீதா

      கீதா

      நீக்கு
    3. தனக்கு ஓமி வரும் என்று யாரும் நம்புவதில்லை!

      நீக்கு
    4. ஆமாம் அதுவும் உண்மைதான்....ஆனா இங்கு ரியாக்ஷன் ரொம்பவே அதாவது தற்காப்பு கேடயங்கள்! நடவடிக்கைகள்!!

      கீதா

      நீக்கு
  26. ஆனால் ஒருவருக்கு சொல்லப்படும் மருந்து மற்றவர்களுக்குப் பொருந்தாது. ஒவ்வொருவரின் உடல் நிலை ஒவ்வொருமாதிரி கூடவே இலவச இணைப்புகளும் இருப்பதால்!!!

    ப்ரான்ட் எதுவானா என்ன ஸ்ரீராம் பாரசிட்டமால்...இதுக்குதான் ஜெனரிக் னு சொல்லப்பட்டாலும் ப்ரான்ட் தான் தலை தூக்கி நிற்கிறது!! என்ன செய்ய?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெறும் பாரா 500  எம் ஜிதான்.  நாம் அதை மீறி 650 ல் சென்று கொண்டிருக்கிறோம்!

      நீக்கு
  27. நானும் பாஸ் போலத்தான் ஸ்ரீராம். என்னிடமிருந்து காலோ, மெசேஜோ இல்லை என்றால் எனக்கும் உடனே வந்துவிடும் ஆர் யு ஒகே? என்னாச்சு என்று.

    நானும் அதே போல!!!! உறவு நட்பு என்று!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... குட். எப்படி எல்லாம் கம்யூனிகேஷன் உதவுகிறது பாருங்கள்.

      நீக்கு
  28. உடல் நலத்தை கவனித்து கொள்ளவும் ஸ்ரீராம் நலமாகிவிட்டதே என்ற அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் முடிந்த வரை சத்துள்ள உணவுவகைகளை ப்ழங்களை சாப்பபிட்டு வாருங்கள். வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே, நன்றி மதுரை. இன்னும் முற்றிலும் குணமாகவில்லை.

      நீக்கு
  29. வீட்டுக்குளேயே இருப்பவர்களைக் கூட தாக்குகிறது என்பதும் ஆச்சர்யம். யாரையும் விட்டு வைக்காது போல..//

    அப்படி இருக்காது ஸ்ரீராம்...வீட்டிற்கு உதவி செய்ய வருபவர்கள் இருக்கலாம், கொரியர், காஸ் சிலிண்டர் கொடுப்பவர் ...அடுத்த வீட்டினர்... இப்படி ஏதேனும் ஒன்று போதுமே...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. இந்தவகை ஜுரம் வருவது இயற்கையே நம்மை இம்யூன் செய்து விடுகிறது என்று ஒரு மருத்துவர் சொன்னதை எங்கோ கேட்டேன். ஒருவகையில் பார்க்கும்போது அது சரிதானோ என்று தோன்றுகிறது.//

    ஆமாம் ஸ்ரீராம்....மகனும் சொல்கிறான் இம்யூனிட்டி குறையும் போது இப்படி வந்து நம் இம்யூன் சிஸ்டமை வலுவாக்கும் ஆனால் இம்யூனிட்டி ரொம்பக் குறைவாக இருந்தால்தான் சிவியர் அண்ட் மார்ட்டாலிட்டி என்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை முடிந்தவரை ட்யூட்டி பார்த்து விடுகிறது.

      நீக்கு
  31. சித்த, இயற்கை வைத்தியக் குறிப்புகள் நல்லாருக்கு. பயனுள்ளதுதான் என்றாலும் அவரவர் உடலையும் ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளையும் அனுசரித்து ஒத்து வருகிறதா என்று பார்த்து சாப்பிடலாம்.

    எனக்கு நிலவேம்பு கஷாயம் எனக்கு சர்க்கரை அளவுக்கும் உதவுகிறது. இன்ஃபேக்ட் கொரொனா வந்து போன பிறகு இப்போல்லாம் காலையில் சாப்பிட்டு ஒரு 3, 4 மணி நேரத்தில் (மாத்திரை எடுக்கலைனாலும்) சுகர் குறையத் தொடங்கும் தெரிந்ததும் உடனே ஏதேனும் சாப்பிட்டுவிடுகிறேன். வேலை செய்து கொண்டிருந்தால் சுகர் நல்ல கன்ட்ரோலில் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. வையவன் பற்றிக் கேள்விவைபட்டு கதைகள் தேடினேன் கொஞ்ச நாள் முன்னர். ஒன்றுமே அகப்படவில்லை இன்னும் தேட வேண்டும்

    வ ரா வியக்க வைக்கிறார். ஒவ்வொரு எழுத்தாளரின் வறுமை பார்க்கும் அவர்களது சுயமரியாதையைக் கேட்கும் போதும் வாசிக்கும் போதும் டக்கென்று நினைவுக்கு வருபவர் பாரதியார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  33. இரு ஜோக்ஸ் ரசித்தேன். மதன் கார்ட்டூன் செம.

    தாஸேட்டன் - ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  34. // ஒவ்வொரு எழுத்தாளரின் வறுமை பார்க்கும் அவர்களது சுயமரியாதையைக் கேட்கும் போதும் வாசிக்கும் போதும் டக்கென்று நினைவுக்கு வருபவர் பாரதியார். //

    கொஞ்சம் விளக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  35. @ ஸ்ரீராம்..

    // அவந்திகா!.. ஆ..//


    யாருங்க அந்தப் பொண்ணு?..
    புதுசா இருக்காங்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமன்னா பெயர் பாஹுபலியில் அவந்திகாத்தானே!

      நீக்கு
    2. ஓ.. அதெப்படி மறந்து போச்சு!?..

      நீக்கு
    3. அதுதானே?  இருங்கள்..  நெல்லையிடமே சொல்கிறேன்...!

      நீக்கு
    4. நாராயணன் நாமத்தை ப்ரஹலாதனைவிட ஹிரண்யகசிபு நிறைய தடவை நினைவில் இருத்தியமாதிரி.....

      எனக்கும் மறந்துவிட்ட அந்த 'அவந்திகாவை' எதிர்முகாம் நினைவில் வைத்திருப்பது அதிசயம்தான் ஹா ஹா

      நீக்கு
    5. "எதிர்முகாம்"

      ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு

  36. கொஞ்ச நாளாய் காணவில்லை எனும்போது நீங்கள் மகனுக்கு பெண் தேடி ஓரோர் ஊராக சுற்றுகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் சொன்ன கதை சோகக்  கதை. சொன்ன விதம் நகைச்சுவை. இதுவே D D அவர்களின் நகை பற்றிய ஆராய்ச்சியின் பாதிப்பு என்று நினைக்கிறேன். இடுக்கண் வருங்கால் நகுக!

    கோமைக்கிரான் டெல்டா டெங்கு இம்மூன்றையும் விளக்கியது அருமை. 
    வந்து வந்து நீங்களும் ஒரு வைத்தியர் ஆகிவிட்டீர்கள். RIMP  என்று ஒரு வால் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் இலவச ஆலோசனை கூறலாம். 

     " பற்றற்று " கவிதை (எஸ் ஒப்புக்கொள்கிறேன்) ரமணி சாரின் வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும் என்ற கவிதையை நினைவு படுத்தியது. இந்த வார ஊறுகாய் இதுவே. 


    ஜோக்குகள் வழக்கம் போல்.

    வையன் பற்றி ஒன்றும் தெரியாது. விளக்கமாக அறிமுகப்படுத்தியிருக்கலாம். 

    எளிமை என்றும் ரசம் சாதம் என்றபோது பாரதி தாசன் அவர்களை பற்றிய கதை ஒன்று நினைவில் வந்தது. அவரும் நண்பர்களும் ஒரு பெரிய ஹோட்டலில் மதிய உணவு உண்ணும்போது ரசம் பரிமாறப்படவில்லை.  கவிஞருக்கு ரசம் கட்டாயம் வேண்டும். வெயிட்டரைக் கூப்பிட்டு ரசம் கொண்டு வர சொன்னார். ஆனால் அப்படி ரசம் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார். கவிஞர் " ஒரு கிளாஸ் சூடு நீரில் கொஞ்சம் பெப்பர் பவுடர், சால்ட், டொமட்டோ சாஸ், கார்லிக்  போட்டு கலக்கி கொண்டு வா " என்று கூறிவிட்டார். இதுவே ரசம்!

     சரியாகிவிட்டது என்று பொங்கல் வேலைகளை அதிகம் செய்யவேண்டாம். கொஞ்சம் ஒய்வு தேவை.

    ஜெயக்குமார் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் ஊராய் சென்று எங்கே பார்க்கப் போகிறேன்?  இருந்த இடத்திலிருந்தேதான் தேடிக்கொண்டிருக்கிறேன்!  இன்னும் அமையவில்லை!

      பற்றற்று கவிதை என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி!

      வையவன் பற்றி ஜீவி ஸார் சொல்வார்.  அவர்தான் யாரும் தடத விஷயம் படி எழுத விரும்புவார்!

      பாரதிதாசனின் ரசம் ரசம்!  ரசமில்லாத உணவு விடுதியா?  ரசமாயில்லையே!

      இன்னமும் கூட முற்றிலும் குணமாகவில்லை.  எனினும் அளவோடு பொங்கல் கொண்டாடப்படும்.  நாளை முதல் பணிக்கும் போகப்படும்!

      நீக்கு
    2. ஶ்ரீராம் அரை வைத்தியர் தானே! ஆகவே தாராளமாய்ச் சொல்லலாம்.

      நீக்கு
  37. சுலபமாகச் செய்யக்கூடிய எளிய உணவு..

    நிறைய தடவை நான் எளிமையாச் செய்யட்டும் என்று நினைத்துச் சொல்வதைச் செய்ய நிறைய நேரமாகவும், நான் இப்போல்லாம் என்ன இருக்கு, இந்த ஆப்ஷனுக்கு எவ்வளவு நேரம்/வேலை எடுக்கும், இது பெட்டரா என்று கேட்டு எது சுலபமோ அதைப் பண்ணச் சொல்வேன்.

    பையன் 9-10 மணிக்கெல்லாம் ஏதேனும் கேட்பான். மனைவி சுலபமாகச் செய்ய நினைத்ததையோ/செய்திருப்பதையோவிட ஏதேனும் புதிதாகக் கேட்பான். நானாவது அவள் வேலையை சுலபமாக்கலாம் என்றுதான்.

    இது இருந்தால்தான் எனக்கு உணவு முழுமைபெறும் என்றால் அது இனிப்பாக இருந்தது முன்பு. இன்றுகூட வைகுண்ட ஏகாதசிக்கு கோவிலில் லட்டு கொடுத்தார்கள். 1/4 லட்டு சாப்பிட்டு, ஏன் சாப்பிட்டோம் என்று நினைத்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசம் பற்றிய JC ஸார் கமெண்ட்டுக்கு பதில் என்று நினைக்கிறேன்.  சென்ற ஞாயிறு நான் கூட எளிமையாய் சமையல் செய்யப் புகுந்து மறுபடி மாட்டிக்கொண்டேன்.  பாஸுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் ரசம் போதும் என்று முடிவெடுத்தோம்.  எனக்கு அலுவலகப்பணி வேறு இருந்தது.  கறி செய்ய வேண்டுமே என்றதும் சேனைக்கிழங்கு இருந்தது.  அதை எடுத்து நெருக்கலாம் என்று தொடங்கி சரி, எளிதாக இருக்க குக்கரில் "லேசாக" வைத்து எடுத்து நறுக்குவோம் என்று வைத்து....   ராமா...   மறுபடி பழைய கதையாகி விட்டது.  மகன்கள் என்னவோ ரசித்தார்கள்!

      நீக்கு
    2. மனைவி 8 மணிக்கு மகனுக்கு உணவு தயார் செய்ய நினைத்து என்னை சாதம் வைக்கச்சொன்னாள். நான் 30 நிமிடங்களில், சாதம், புளிசேரி, சேனைக் கறி வேக வேகமாகச் செய்தேன் (அவளுக்கு உதவியாக இருக்கட்டும் என்றும்). அதன் பிறகு நடைப்பயிற்சிக்குச் சென்றேன். ஆனாப் பாருங்க..இந்த மாதிரி உதவி செய்யும் அன்று, எப்போதும்போல, மகன் ஆபீஸுக்கு மட்டம் போட்டுட்டான் Work from Homeனு அவனுக்கு சொல்லிட்டாங்களாம்

      நீக்கு
    3. எனக்கு எப்போதும்போல கறி என்று செய்யவே தோன்றாது.  எதையாவது வித்தியாசம் காட்ட நினைப்பது என் பலவீனம்.  அது வேலையை இழுத்து விடும்!  சமயங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியாது அல்லது உணரப்படாது!

      நீக்கு
    4. சேனைக்கிழங்கை அரிசி களைந்த இரண்டாம் கழுநீரில் வேக வைத்தால் நன்றாக வேகும். காரவும் செய்யாது. நான் எந்தக் காயையும் குக்கரில் வைப்பதில்லை. உ.கி.பட்டாணி, கொ.க. தவிர்த்து.

      நீக்கு
  38. //நாம் நினைப்பதெல்லாம் எளிமை அல்ல.. // - உண்மை... அந்த அந்த பொசிஷன்ல இருப்பவங்க, தங்கள் செயல்களில் எளிமையாக இருந்துகொண்டு, உடை/பயணம் போன்றவற்றில் அந்த அந்தப் பதவிக்குரியவைகளைக் கடைபிடித்தால் எல்லாம் சுகமாக இருக்கும்.

    ராஜீவ் காந்தி, தான் எளியவன் என்று காட்டுவதற்காக திடுமென கூட்டத்தின் அருகில் சென்று கைகொடுப்பது போன்றவையும்... இன்னொரு தடவை, தன் உடைகளைத் தான் ஹோட்டல் அறையில் (பெங்களூரில்) தோய்த்துக்கொண்டாராம். அதைப்பார்த்த குண்டுராவ், இவர் எதற்கு இதனைச் செய்யணும்? அந்த நேரத்தில் வேறு முக்கிய வேலைகளைப் பார்க்கலாமே என்று நினைத்தாராம்.

    பதவியில் இருந்துகொண்டு, நான் எளிமை என்று இருக்கநினைப்பவர்கள், மதிய உணவு நேரத்தில் ஹோட்டலுக்குச் சென்று, எனக்கு எளிமையாக இட்லி சாம்பார் கொடுத்தால் போதும் என்று சொல்வதைப் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இதுபோன்ற எளிமையை முதலில் செய்தவர் ராஜீவ்தான்.  அதுவே அவருக்கு எமனானது.  என்ன எளிமையோ...

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ராஜீவுக்கு முன்னால் ராஜாஜி, காமராஜ்,பக்தவத்சலம் போன்றோரும் எளிமையாக இருந்தவர்களே! கடைசி வரை காமராஜ் வாடகை வீட்டில் தான் இருந்தார். ராஜீவ் பெரிய இடத்துப்பிள்ளை, வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறந்தவர் என்பதால் அவருக்குப் பாராட்டுகள்/விளம்பரம்.

      நீக்கு
  39. ஸ்ரீராம்... உங்களுக்கும் குடும்பத்துக்கும் இந்த வேரியண்ட் வந்துள்ளது என்பது கொஞ்சம் கவலையும் வருத்தமுமாக இருக்கிறது.

    இருந்தாலும், உங்கள் nature of workஐ மனதில் கொண்டு, முதலிலேயே வந்து அது ஒழிந்துவிட்டால் நல்லதுதான். நிம்மதியாக ஆபீஸ் வேலையை நீங்கள் பார்க்கலாம்.

    முழுமையான மாஸ்க் ஒன்றுதான் நன்று என்று தோன்றுகிறது. எங்கள் வளாகத்திலும் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சாச்சு. பல 'அறிவில்லாத ஜென்மங்கள்', பில்டிங்குக்கு உள்ளதான் என்று நினைத்துக்கொண்டு லிஃப்டில் மாஸ்க் போடுவதில்லை அல்லது தாலி மாதிரி வாய்க்குக் கீழ வச்சிருக்காங்க.

    பதிலளிநீக்கு
  40. //இந்த வேரியண்ட்//

    அதுதானா என்று தெரியாது.  நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன அவ்வளவுதான்.  நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை.

    ஒருமுறை வந்தால் மறுபடி வராதா?  தெரியாது!  அதற்கான எதிர்ப்பு சக்தி உடம்பில் வந்திருக்குமா?  அது போதுமா?  தெரியாது.  மாஸ்க் போடுவதை நிறுத்த முடியாது.  இன்னமும் நிறைய அறிவிலிகள் மாஸ்க் போடாமல் வருவது முதல் மூக்கை மூடாமல், வாயை மூடாம, கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு அல்லது தொளதொளவென்று போட்டுக்கொள்வது என்றெல்லாம் கடுப்பேற்றுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் நலமாகப் பொங்கல் கொண்டாடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன். நீங்க வரலைனதுமே எனக்கு உடம்பு சரியில்லையோ என்றே தோன்றியது.

      நீக்கு
  41. மீண்டும் அனைவருக்கும் ஜுரமா? இப்போது எல்லோரும் நலமாகி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். விரைவில் நலபெற வாழ்த்துக்கள்.
    சென்னையில் இருக்கும் உறவினர்களுக்கு காய்ச்சல்.
    கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. எங்கும் போக பயமாக இருக்கிறது.

    ஊரிலிருந்து வந்து மகன் , பேரனுக்கும் , எனக்கும் உடம்பு சரியில்லை. உறவினர்கள் வீடுகளில் அவர்கள் செய்யும் உபசாரத்தால் வயிறு சங்கடம் செய்கிறது. இப்போது பரவாயில்லை சரியாகி கொண்டு வருகிறது. நல்லபடியாக அவர்கள் ஊர் திரும்ப வேண்டும் என்பது இப்போது என் கவலை, பிரார்த்தனை.

    சித்த மருத்துவர் செல்வ சண்முகம், இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபா அவர்கள் குறிப்புகள் பயனுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா.  இப்போது அனைவருக்கும் தேவலாம்.  இன்றும் விடுப்பில்தான் இருக்கிறேன்.  நாளை பணியில் இணைவேன்.  

      உங்கள் மகன், பேரன், மற்றும் உங்களுக்கும் உடல்நிலை  சரியாக எங்கள் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. ஆமாம், இங்கேயும் எங்களுக்கும் மகன், மருமகள், குஞ்சுலு மூணு பேரும் நல்லபடியாக ஊர் திரும்பணும் என்பதே பிரார்த்தனை.

      நீக்கு
  42. உங்கள் கவிதை மற்றும் பதிவில் இடபெற்றவை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  43. @ அன்பின் நெல்லை..

    // எனக்கும் மறந்துவிட்ட அந்த 'அவந்திகாவை' எதிர்முகாம் நினைவில்.. ..//

    ஆர்ப்பரித்து வருகின்றாள்..
    அக்கினி என வருகின்றாள்!..

    வேற யார்..
    அவந்திகா தான்!..

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம் உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  45. எளிமை விஷயத்தில் கலாம் ஐயாவை மிஞ்ச முடியாது. இடம் பொருள் ஏவல் தெரிந்து கொடுப்பதை சாப்பிடுவார். அசைவம் சாப்பிட மாட்டார். காலை நாயர் ஹோட்டலில் ஆப்பம் பால் அல்லது புட்டு பழம் சாப்பிட்டுவிட்டு மதியம் சாதாரண ஆபீஸ் கேன்டீனில் மதிய சாப்பாடு என்று இருந்தவர். அவருக்கு பிடித்த உணவு தயிர் சாதம். எல்லோரும் கலாம் ஐயர் என்று கூப்பிடுவதும் உண்டு. ஆனால் சேஷன் மட்டும் எப்போதும் அவரை முழுப்பெயரில் கூப்பிடுவார்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாம் அவர்களின் எளிமை யாருக்கு வரும். காமராஜ், கக்கன் காலங்களின் அற்புத மிச்சம் அவர்.

      நீக்கு
  46. உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் அனைவரும் விரைவில் பூரணமாகக் குணம் அடையப் பிரார்த்தனைகள்!

    பதிலளிநீக்கு
  47. ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான வியாழன் பதிவு. உடம்பு முடியாவிட்டாலும் செய்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள்!
    கவிதை செம!
    மூக்கில் குத்து, முதுகில் குத்து... ஹாஹாஹ!


    பதிலளிநீக்கு
  48. புதிய கொரோனா ஓமிக்ரானா உங்களுக்கும் உங்கள் வீட்டிலுள்ளோருக்கும் வந்திருக்கிறது? இப்போது குறைந்துள்ளதும் தெரிகிறது. இருந்தாலும் உடலநலம் முக்கியம் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய எனர்ஜி கிடைத்துவிடும். தெரிந்த வட்டத்தில் நான் அறிவது உங்களுக்கு வந்திருப்பது பற்றிதான்.

    கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. தகவல்கள் பயனுள்ளவை.

    துளசிதரன்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளசி ஜி.  முடிந்தவரை கவனமாக இருந்தும்...

      நீக்கு
  49. உங்கள் கவிதை அருமை. ரசித்தேன். ரெற்றோ - ரெற்றோ என்றால் பின்னோக்கிய என்று பொருள். நேயர் விருப்பத்தை உங்களின் உடல் சுகவீனத்திற்கிடையிலும் நிறைவேற்றியது உங்களின் ஈடுபாட்டைச் சொல்கிறது.

    சித்த மருத்துவக் குறிப்புகள் பயனுள்ளவை. இவற்றுள் சில வீட்டில் பின்பற்றப்படுகிறது.

    ஜோக்குகள், மதன் அவர்களின் கார்ட்டூன் எல்லாமும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா? பின்னோக்கி என்று பொருளா? சரி. நன்றி துளசி ஜி.

      நீக்கு
    2. எல்லோரும் உடல்நலம் கவனித்துக் கொள்ளுங்கள் எங்கள் பிளாக் யாவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் அன்புடன்

      நீக்கு
  50. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவில் மற்ற பகுதிகளும் அருமை.நகைச்சுவைகள் நன்றாக உள்ளது. முன்யோசனை ஜோக் நன்றாக உள்ளது.

    சகோதரர் நெல்லைத் தமிழர் உங்களிடமிருந்து இரவல் வாங்கிய புளி கரைசல் காலை என் வயிற்றிலும் வந்து கரைத்தது. ஏனெனில் எனக்கு இரண்டு நாளாக ஜலதோஷம். காலை எழுந்தவுடன் ஒரே தும்மலும், தடுமனுமாக இருக்கிறது. உங்கள் பதிவை படித்ததும், (என்னதான் உங்களுக்கு தைரிய வார்த்தைகள் உரைத்தாலும்..) வயிற்றில் கரைசல் வேலை செய்தது. எப்படியோ தலைக்கு குளித்து நாராயணனை (வீட்டில்தான்) சேவித்து மற்ற வேலைகளை செய்தேன். இப்போது பரவாயில்லை. என் பதிவுக்கு வந்து கருத்துகள் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உடன் பதில் தர முடியாமைக்கு மன்னிக்கவும். நன்றி.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். நாளைய உத்திராயண புண்ய காலத்திலிருந்து அனைவருக்கும் நன்மைகள் பிறக்க ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  51. ஸ்ரீராம் இப்பொழுது நலமாகி இருப்பார் என நம்புகிறோம். ஜோக்ஸ் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!