திங்கள், 31 ஜனவரி, 2022

"திங்க"க்கிழமை :  முள்ளங்கி பராத்தா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

முள்ளங்கி பராத்தா

பானுமதி வெங்கடேஸ்வரன்


முள்ளங்கி பராத்தா

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - பெரியது 1 சிறியதாக இருந்தால் 3

காரப்பொடி  - 1 டீ ஸ்பூன்

தனியா பொடி  - 1 டீ ஸ்பூன்

கரம் மசாலாப் பொடி - 1 டீ ஸ்பூன்

உப்பு - 1 டீ ஸ்பூன்

கோதுமை மாவு. - 3 கப்

உப்பு  -  1/4 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.



முள்ளங்கியை தோல் சீவி, கழுவி, துருவி கொஞ்சம் உப்பு போட்டு பிசறி வைத்தால் சற்று நேரத்தில் முள்ளங்கியில் நீயெல்லாம் வெளியே வந்து விடும். 




பின்னர் முள்ளங்கியை நன்றாக பிழிந்து வைக்கவும்.  அதில் மேலே குறிப்பிட்டிருக்கும் பொடிகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.





கோதுமை மாவை இரண்டு சப்பாத்திகளாக பரத்தி ஒன்றில் முள்ளங்கி கலவையை வைத்து, அதன் மீது மற்றொரு சப்பாத்தியை வைத்து, ஓரங்களை நன்றாக அழுத்தி விட்டு, பின்னர் குழுவியினால் லேசாக பரத்தினால் உள்ளே இருக்கும் ஃபில்லிங் வெளியே வராது. 







அப்படி சீராக பரத்தப் பட்ட பரத்தாவை தோசைக்கல் அல்லது நான் ஸ்டிக் தாவாவில் மெல்லிய தீயில் அடுப்பை எரியவிட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி இரு புறமும் சுட்டு எடுக்கவும்.

இந்த முள்ளங்கி பராத்தாவை, வெண்ணெய், ஊறுகாய், ராய்த்தா என்று அவரவர் விருப்பப்படி சாப்பிடலாம்.

முள்ளங்கியில் வைட்டமின் சி,  பி,  இ மற்றும் தாது உப்புக்கள் உள்ளது. நீர்ச்சத்து, நார்சத்து நிறைந்திருப்பதால் உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் சிறந்தது. உடல் எடையை குறைக்க வேண்டுமா முள்ளங்கி நிறைய சாப்பிடுங்கள். 

நான் ஒரு முறை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட பொழுது முள்ளங்கி சாறு கொடுத்தார்கள்.

49 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நோயில்லா வாழ்வு தொடர வேண்டும் என்றும்.
    இறைவன் அருள்.

    பதிலளிநீக்கு
  2. முள்ளங்கியில் வைட்டமின் சி, பி, இ மற்றும் தாது உப்புக்கள் உள்ளது. நீர்ச்சத்து, நார்சத்து நிறைந்திருப்பதால் உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் சிறந்தது. உடல் எடையை குறைக்க வேண்டுமா முள்ளங்கி நிறைய சாப்பிடுங்கள்.///சூப்பர் குறிப்பு. நன்றி பானுமா.

    பதிலளிநீக்கு
  3. முள்ளங்கி சப்பாத்தி அருமையாகச் செய்திருக்கிறார்
    அன்பு பானும்மா.

    படங்கள், செய்முறைக் குறிப்பும் சுலபம்.
    சிறப்பான படங்கள். மிக மிக நன்றியும்
    வாழ்த்துக்களும்.

    முள்ளங்கியைப் பிழிந்து போடச் சொல்வது
    அருமை. நான் முதன்முதலில்
    செய்யும் போது அந்த முள்ளங்கியை அப்படியே
    சேர்த்து ,அது முள்ளங்கி தோசை ஆனது.
    50 வருடங்களுக்கு முன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அக்கா. //நான் முதன்முதலில்
      செய்யும் போது அந்த முள்ளங்கியை அப்படியே
      சேர்த்து ,அது முள்ளங்கி தோசை ஆனது.
      50 வருடங்களுக்கு முன்:)// இது போன்ற சொதப்பல்கள் இல்லாமல் எப்படி கற்றுக் கொள்ள முடியும்?

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. சுவையுள்ள என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி.

      நீக்கு
  6. பானுக்கா சூப்பர் ரெசிப்பி...நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள். முள்ளங்கி ஸ்டஃப் செய்து (வேறு காய்கலவை கூட கொஞ்சம் தளர்வாக இருந்தால் இப்படி இரண்டு மெல்லிய சப்பாத்தி செய்து ஸ்டஃப் செய்து) வெளியே வராமல் அழகாக செய்துருக்கீங்க.. சூப்பர்!!!

    நீங்கள் சொல்லியிருப்பது போல் முள்ளங்கி ரொம்ப நல்லது...

    அக்கா முள்ளங்கியைத் துருவி (மாவு பிசைவதற்கு முன்னதாகவே) பிழியும் நீரை சப்பாத்திமாவு பிசையும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் இல்லையா...நான் அப்படிச் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.. பிழிந்த நீரை சேர்த்து பிசைந்தால் மாவு பிசுக்கென்று ஆகி விடுமோ என்ற பயம்.

      நீக்கு
  7. விளக்கம் அருமை முள்ளங்கி மருத்துவ நலன் கொண்டது.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு குறிப்பு! செய்முறைக்குறிப்பும் படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
  9. முள்ளங்கியில் நான் செய்வது சாம்பார் மட்டுமே மற்றவைகளில் நான் அதிகம் பயன்படுத்தியது இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் இப்போது பார்த்து விட்டீர்களே இனிமேல் முயற்சிக்கலாமே

      நீக்கு
  10. அதிகாலையில் திரு ஐயாறு காவிரியில் நீராடி விட்டு
    ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் தரிசனம்..

    இப்போது தான் வந்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் காலை நான்கு மணியில் இருந்து அம்மாமண்டபம் ரொம்பவே போக்குவரத்துடன் இருப்பதாகச் சொன்னார்கள்.

      நீக்கு

    2. 11 மணிக்கு காக்கையாருக்கு உணவு கொடுத்தேன், முதலில் வடையும் அப்பளமும் சாப்பிட்டார் காக்கையார் .

      நீக்கு
    3. @துரை செல்வராஜு: தை அமாவாசைக்கு திருவையாறு சென்றீர்களா? அங்கு காவிரி உத்தரவாஹினியாக(வடக்கு நோக்கி பாய்வதால்) அங்கு பித்ரு காரியங்கள் செய்வது விசேஷம் என்பார்கள்.

      நீக்கு
  11. நல்லதொரு சமையல் குறிப்பு..
    சுவை நிறைந்தே இருக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  12. இந்த நாள் இனிய நாளாகட்டும். புதுமையான செய்முறை ஏதேனும் வருமோனு நினைச்சேன். பல்லாண்டுகளாகச் சாப்பிடும் மூலி பராந்தா தான். இதில் மாவு பிசையும்போது கொஞ்சம் ஓமம் சேர்ப்பது உண்டு. நான் முள்ளங்கியைச் சமைத்து/அதாவது வெங்காயம் சேர்த்தோ சேர்க்காமலோ வதக்கியும் பண்ணுவேன். அப்போ முள்ளங்கி உள்ளே வேகாமல் பச்சை வாசனை வருவது போல் தோன்றாது. உ.கி.பராந்தாவுக்கும் நன்கு குழைய வைத்துடுவேன் உ.கியை. பின்னர் தாளிதங்கள்சேர்த்துக் கொத்துமல்லி போட்டுப் பூரணத்தைக் கலந்து வைத்துக் கொண்டு செய்தால் நன்றாக வரும். உ.கி. கட்டி. கட்டியாக இருக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
  13. இன்று தளத்தில் மிகுந்த காற்றோட்டம்...

    தை அமாவாசை விரதம் முடித்து காக்கைகளுக்கு சோறூட்டிய பின் தான் மற்றதெல்லாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்தரைக்கே காக்கையாருக்கு உணவு கொடுத்தாச்சு. சாப்பிட்டுப் பறந்துட்டார்.

      நீக்கு
  14. தி/கீதா சொன்னாப்போல் முள்ளங்கி நீர் வயிற்றுக்கு நல்லது என்பதால் மாவு பிசையும்போது சேர்ப்பது உண்டு. சில/பல சமயங்கள் துருவி வைத்த முள்ளங்கியையே மசாலா சாமான்களோடு சேர்த்து மாவில் போட்டுப் பிசைந்தும் பண்ணுவேன். வெந்தயக்கீரை தேப்லா போல். அதுவும் நன்றாக இருக்கும். ஆனால் முள்ளங்கியில் நீர்ச்சத்து இருப்பதால் மாவு பிசைகையில் கவனமாகப் பிசையணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடை பாயசம் ஒன்னும் கொண்டு வரவில்லையா!..

      நீக்கு
    2. நன்றி தம்பி. வடை இன்னிக்குப் பண்ணலை. பாயசம் இப்போத் தான் பையர் குடிச்சார். :)))) காலையிலிருந்து இணையப் பக்கமே வர முடியலை. இப்போத் தான் வந்தேன். நம்மவருக்கு முள்ளங்கி, முட்டைக்கோஸ், நூல்கோல், காலிஃப்ளவர், டர்னிப், பீட்ரூட் ஆகியவை ஆகாது என்பதால் இவற்றை எல்லாம் வாங்கியே சில வருடங்கள் ஆயிற்று. இப்போப் பையருக்காக மட்டும் அவ்வப்போது வாங்கறோம். முள்ளங்கியைப் போல முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றிலும் பராந்தா பண்ணலாம். ஆனால் கொஞ்சமானும் வதக்கிக்கணும். இல்லைனா உள்ளே பச்சை வாசனை வந்துடும்.

      நீக்கு
    3. //முள்ளங்கியில் நீர்ச்சத்து இருப்பதால் மாவு பிசைகையில் கவனமாகப் பிசையணும்.// யெஸ்டு

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. முள்ளங்கி பராத்தா செய்முறையும் , படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. @ கோமதிஅரசு..

    // முதலில் வடையும் அப்பளமும் சாப்பிட்டார் காக்கையார்.. //

    இங்கேயும் அப்படித்தான்..
    சோறு உடம்புக்கு ஆகாது என்று வடையைத் தான் முதலில் தேடுகின்றார்கள்..

    அப்பளம்.. மற்ற நாட்களில் வற்றல்.. அவர்கள் காட்டில் மழையோ மழை..

    பதிலளிநீக்கு
  18. முள்ளங்கிச் சாற்றை முதலிலேயே பிழிந்து மாவுடன் சேர்த்துப் பிசைவதே என்னுடைய வழக்கமும். மூலிபரோட்டா என்று நான்கூட பதிவு போட்டிருக்கிறேன். மிக்கத் தெளிவாக எழுதியிருக்கிரார் பானுமதி.இந்தப் பரோட்டாக்களே பலவிதம். அதில் இது ஒரு விதம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிமா. என் மகளும் பிழிந்த முள்ளங்கி சாறை விட்டு மாவு பிசைய லாம் என்றாள். எனக்க்குதான் கொஞ்சம் தயக்கம்.

      நீக்கு
  19. முள்ளங்கி பராட்டா நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. முள்ளங்கி பராத்தாவின் விளக்கமான செய்முறைகளும், படங்களும் அழகாக உள்ளது. முள்ளங்கியின் பலன்களை சொன்னது அருமை. இது சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும். நானும் இதைச் செய்து படங்கள் எடுத்து பகிர்வதற்காக வைத்துள்ளேன். வழக்கப்படி பதிவாக எழுத தாமதம். உங்கள் பதிவை பார்த்ததும் எடுத்து வைத்த படங்கள் நினைவுக்கு வந்தது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. @ பானுமதி வெங்கடேஸ்வரன்..

    // காவிரி உத்தர வாஹினியாக (வடக்குநோக்கி பாய்வதால்) //

    அம்மா இறையடி சேர்ந்து வருடம் இன்னும் ஆகாததால் பித்ரு காரியங்கள் செய்ய இயலாது..

    நீராடலும் அர்க்கியமும் மட்டுமே..

    மற்றபடிக்கு
    காவிரியாள் இங்கு கிழக்காகத் தானே பாய்கின்றாள்.. உத்தர் வாஹினி அல்லவே!..

    பதிலளிநீக்கு
  22. இங்கே அடிக்கடி செய்வதுதான் அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில்.

    பதிலளிநீக்கு
  23. முள்ளங்கியை துருவி பிழிந்த சாறை வைத்து மாவு பிசைந்து கொள்ளலாம்.... முள்ளங்கியின் சத்தும் வீணாகாது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!