அசாம் காவல்துறை டி.எஸ்.பி ஆக ஒலிம்பிக் வீராங்கனை நியமனம்;
2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா போர்கோஹெய்ன், அசாம் மாநில காவல்துறையின் டி.எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவைசச் சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். பாட்மிண்டன் போட்டியில், பி. வி சிந்து வெண்கலம் வென்றார். மேலும், குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த லாவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார்.இதனையடுத்து அசாம் அரசு, வெண்கலம் வென்ற லாவ்லினாவிற்கு டிஎஸ்பி பதவியை வழங்கியுள்ளது. இதுகுறித்து, அசாம் அரசு, ஜனவரி 11-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீராங்கனை லாவ்லினாவிற்கு, அசாம் முதல்வர் ஹிமண்டா பிஸ்வ சர்மா நியாமனக் கடிதத்தை வழங்குவார் என்று தெரிவித்துள்ளது.
23 வயதான லாவ்லினா தனது சிறுவயதில், தன் இரட்டை சகோதரிகள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதைக் கண்டு ஈர்க்கப்பட்டார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும், அசாம் மாநிலத்தின் முதல் பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்கிற பெருமையை பெற்றார் லாவ்லினா.வெல்டர்வெயிட் பிரிவில் பங்கேற்கும் இவர், 2018 மற்றும் 2019 -ம் ஆண்டில் நடைபெற்ற பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டிலும் வெண்கலம் வென்றார். பின்பு 202பும் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று, வெண்கலம் வென்ற, லாவ்லினாவிற்கு, மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
= = = = =
கடலுார் : கடலுார் எஸ்.கே.பி., காய்கறி கடை உரிமையாளர் பக்கீரான் வடலுார் தைப்பூச விழா அன்னதானத்திற்கு 50 மூட்டைகள் அரிசி, 5 டன் காய்கறிகளை வழங்கினார்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.கே.பி., காய்கறி கடை உரிமையாளர் பக்கீரான். சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இவர், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் நடக்கும் தைப்பூச விழா அன்னதானத்திற்கு 50 மூட்டைகள் அரிசி, 5 டன் காய்கறிகளை வழங்கினார்.
அவர் வழங்கிய அரிசி மற்றும் காய்கறிகளை தேவி காஸ் ஏஜன்சி உரிமையாளர் பசுவலிங்கம் கடலுாரில் இருந்து வடலுாருக்கு நேற்று அனுப்பி வைத்தார். வணிகர் சங்கத் தலைவர் முத்துக்குமரனார், எஸ்.கே.பி., காய்கறி கடை உரிமையாளர் பக்கீரான், தட்சணாமூர்த்தி உடனிருந்தனர்.
= = = = =
டில்லியில் மின்சார பஸ் இன்று (14.1.2022) அறிமுகம்
சுற்றுச் சூழலுக்கு நன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கையாக டில்லியில் முழுதும் மின்சாரத்திலேயே இயங்கும் பஸ்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.தலைநகர் டில்லியில் சுற்றுச்சூழல் அபாயம் பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.
இதை கட்டுப் பத்தும் வகையில் டில்லியில், சுற்றுச் சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 100 மின்சார பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளன. டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
குளிர் சாதன வசதி, நகரும் வகையில் கீழ்தள படிக்கட்டு உள்ளிட்ட வசதிகள் இந்த பஸ்களில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,000 மின்சார பஸ்களை டில்லியில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
= = = =
இது வேடிக்கை செய்தி (ஆனால் உண்மை) :
கிச்ச(டி)ன் கில்லாடி !!
கவுஹாத்தி :அசாமில் திருடச் சென்ற வீட்டிற்குள், 'கிச்சடி' சமைத்த திருடன், போலீசாரிடம் சிக்கிய நிகழ்வு அரங்கேறி உள்ளது. கவுஹாத்தியின் ஹெங்கராபரி என்ற பகுதியில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாததை அறிந்து கொண்ட திருடன் ஒருவன், அந்த வீட்டிற்குள் நுழைந்து உள்ளான்.
திருடச் சென்ற அவனுக்கு பசி எடுக்கவே, திருடுவதை மறந்துவிட்டு, சமையலறைக்கு சென்றுள்ளான். அங்கு உணவு ஏதும் இல்லாததால், தனக்கு பிடித்தமான கிச்சடியை சமைத்து உள்ளான்.
பூட்டிய வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை பார்த்து சந்தேகித்த அக்கம் பக்கத்தினர், திருடனை மடக்கிப் பிடித்தனர். போலீசாரிடமும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த திருடனை கைது செய்து அழைத்துச் சென்றனர். பின், சிறையில் அடைக்கப்பட்ட அவனுக்கு, போலீசார் உணவு வாங்கிக் கொடுத்தனர்.திருட வந்தவன் கிச்சடி சமைத்து சிக்கிய சம்பவம், மிகவும் வேடிக்கையாக இருந்ததாக அப்பகுதி மக்கள் புன்னகைத்தப்படி தெரிவித்தனர்.
அசாம் போலீஸ் செம கலாய் !
இந்த வினோத சம்பவம் குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட அசாம் போலீஸ், ''கிச்சடி உடல்நலத்திற்கு நல்லதுதான். ஆனால் திருட்டு வேலையில் ஈடுபடும் போது வாழ்வுக்கே தீங்கு விளைவிக்கும்" என கிண்டலாக கூறியுள்ளனர். இதற்கு நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர். ''வெற்று வயிறு பேரழிவுகளுக்கு வழிவகுக்கும்'' என்று ஒருவர் கிண்டலாக கூறியுள்ளார்.
= = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட். வணக்கம். டும்டும்டும்...
நீக்குவணக்கம் - வாங்கோ ! நல்லதே நடக்கட்டும்.
நீக்குஇன்றைய பதிவில் வெளியிட்ட செய்திகள் நன்று. கடைசி செய்தி நகைச்சுவை. தலைநகரில் மின்சார பேருந்து சில நாட்களாகவே இயங்குகிறது. அது தில்லி மெட்ரோ இயக்குவது. நேற்று தொடங்கியது தில்லி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் இயக்குவது.
பதிலளிநீக்குஎனக்கு மின் இரு சக்கர வாகனம் வாங்கவேண்டும் என்கிற ஆசை 2020 மத்தியில் அதிகமாய் இருந்தது. அப்புறம் ஆர்வம் குறைந்து விட்டது! ஹா.. ஹா.. ஹா..
நீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குதிருடன் பிடிபட்டது பாசிட்டிவ் செய்தி ஆகாது. எல்லா திருடர்களும் பிடிபடத்தான் செய்கிறார்கள். வேண்டுமானால் குவஹாத்தி விபரீத திருட்டு செய்தி எனக் கூறலாம்.
பதிலளிநீக்குஇரண்டாவது தலைநகரம் ஒன்று சுமார் 2 லட்சம் கோடியில் கட்டி அங்கு தலைநகரத்தை மாற்றலாம். அப்போது டில்லி சுத்தமாகும். எப்படி? அடிக்க வராதீங்கோ.
Jayakumar
பாசிட்டிவ் செய்தி என்று நாங்கள் கூறவில்லை. தலைப்பில் - வேடிக்கை செய்தி என்று சொல்லியிருக்கிறோம்.
நீக்கு//இரண்டாவது தலைநகரம் ஒன்று சுமார் 2 லட்சம் கோடியில் கட்டி அங்கு தலைநகரத்தை மாற்றலாம்.// இந்தப் பத்தாண்டுகளில் மோதியும் அவர் அரசும் தான் தில்லியை இப்படி மாற்றி விட்டது. அதற்கு முன்னால் தில்லியில் பேருந்துகளோ, ஆட்டோவோ, கார்களோ இல்லவே இல்லை.
நீக்குஅனைவருக்கும் வணக்கம். எ.பி.சகோதரர்களுக்கு கனுப்பொங் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி, phone Pe மூலம் ஆசீர்வாத பணம் அனுப்பட்டுமா?
நீக்கு@கௌதமன் சார், எனக்கு, எனக்கு, எனக்கு! இந்த வருஷம் தான் நான் யாருக்கும் "சீர்" கேட்டுப் பதிவு போடலை. அதுக்குக் கூட நேரம் இல்லை போங்க! அதனால் நீங்களாவே அனுப்பிச்சுடுங்க! ஒரு லக்ஷத்துக்கு ஒரு ரூபாய் குறைஞ்சாலும் வேண்டாம்.
நீக்குஎன்னுடைய பாங்க் பேலன்ஸ் தற்சமயம் அவ்வளவு இல்லை என்பதால், கோரிக்கை ஏற்கப்படவில்லை !
நீக்குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கோபத்திலே "க்" ஐ முழுங்கிட்டேன். பானுமதிக்கு மட்டும் ஃபோன் பே மூலம், எனக்குன்னா பாலன்ஸே இல்லையா? ம்ஹூம், இது கொஞ்சம் கூட பாலன்ஸ் இல்லாத கருத்து! :))))))))))))))))
நீக்குகிச்சடி கில்லாடி பாஸிடிவ் செய்தியில் வராது.
பதிலளிநீக்குஇன்னும் பத்து வருடங்களில் எல்லா நாலு சக்கர வாகனங்களும் மின்சார ஊர்திகளாகி விடும்.
வேடிக்கை செய்தி என்றுதான் சொல்லியிருக்கிறோம்.
நீக்குதானத்தில் சிறந்தது அன்னதானம்.
பதிலளிநீக்குதிரு. பக்கீரான் அவர்கள் வாழ்க வளமுடன்...
வாழ்த்துவோம் !
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்கு// டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா போர்கோஹெய்ன், அசாம் மாநில காவல்துறையின் டி.எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்..//
பதிலளிநீக்குமேலும் பல சிறப்புகளை எய்துதல் வேண்டும்...
வாழ்த்துவோம்.
நீக்குபடிச்சேன் இந்தச் செய்தியை
நீக்குஇரண்டு நாட்கள் முன்னாலேயே இந்த வார நான் படிச்ச புத்தக பகுதிக்கு
பதிலளிநீக்குகட்டுரை அனுப்பி வைக்க வேண்டுகிறோம் என்ற அறிவிப்பு வெளியிட்டீர்கள் என்றால் யாராவது
அனுப்பி வைப்பார்கள் என்று தோன்றுகிறது.
நல்ல யோசனை.
நீக்குபசி வந்தால் திருட்டும் மறந்து போகும...?!!!
பதிலளிநீக்கு:)))
நீக்குஇன்றைய செய்திகளில் கடைசி செய்தி வாசித்துச் சிரிப்பு வந்துவிட்டது! சிரிப்புத் திருடன் (மதன்?) ஜோக்ஸ் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குகீதா
:))) நன்றி.
நீக்குஇனி வரும் காலங்களில் மின் பேருந்துகள் சூரிய ஒளி பேருந்துகள் இருக்கும்தான். சூரிய ஒளிப் பேருந்துகள் கூட முயற்சி செஞ்சாகளே. ஐஐடி ப்ரொஃபஸர் சேத்தன் சிங்க் சோலாங்கி தலைமையில் உருவாக்கப்பட்ட் பேருந்தில் அந்தக் குழு விழிப்புணர்வு ஏற்படுத்த 25 நகரங்களுக்குப் பயணித்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅதன் பின் என்னாச்சு என்று தெரியவில்லை இது 2020ல்
கீதா
அப்படியா! பார்ப்போம்.
நீக்குஎங்கே என்னோட கருத்துரைகள்? காணாமல் போய்விட்டன, மறுபடி! :(
பதிலளிநீக்குஉங்களையே காணோம்னு தேடிட்டிருக்கோம். நீங்க கருத்துரைகளைப்பற்றிக் கவலைப்படறீங்களே
நீக்கு:)))
நீக்குஅனைவருக்கும் பட்டிப் பொங்கல் வாழ்த்துகள்.
நீக்குஇறுதி திருடன் செய்தி செம ரசனை.
நன்றி. :)))
நீக்குநெ.த. சாவகாசமாக் காரணம் சொல்லறேன். இப்போ நேரம் இல்லை. வேறே ஒரு வேலைக்காக இணையத்தில் வந்தேன். அது முடியணும். :(
நீக்கு"காணவில்லை" போஸ்டர் வேணா ஒட்டிப் பாருங்க நெல்லை. :)
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. கடைசி செய்தி ஜோக்காக உள்ளது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் வயிற்றை முதலில் கவனித்துக் கொண்ட திருடன் வாழ்க. பொங்கல் வேலைகளில் நேரமும், அசதியும் அதிகம் பங்கெடுத்து கொண்டால் தாமதமாக வந்துள்ளேன்.மன்னிக்கவும். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"கொண்டதால்".. இதில் தட்டச்சு பிழை வேறு சேர்ந்து கொள்கிறது.:)
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குநல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு