புதன், 2 பிப்ரவரி, 2022

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சொலவடையின் பொருள் என்ன?

 

நெல்லைத்தமிழன் : 

நம் எந்தச் செயலுமே சிலருக்கு நல்லது சிலருக்குக் கெடுதலாக முடிகிறதே.  Reaction ஏற்படுத்தாத செயல்களுக்கு உதாரணம் கொடுங்களேன். 

$ Every action has an unwanted reaction என்றொரு புது டன் theory!

# தியானம், உடற்பயிற்சி, புத்தகம் படித்தல் இப்படி நிறையச் சொல்லலாம்.

இதைச் செய்யாமல் விட்டோமே என நீங்கள் நினைப்பது எது?  

# உடல் வலுவாக இருக்கும் போது குறைந்தபட்சம் இந்தியாவுக்குள் மட்டுமாவது பல தலங்களுக்கு சென்று வராதது. 

& எப்போதோ செய்யாமல் விட்டதைப் பற்றி - இப்போது நினைத்து என்ன பயன் என்பதால், எதையும் நினைப்பதில்லை. 

பிறருக்கு ஏற்படும் துன்பத்தைவிட சொந்தம் அல்லது தெரிந்தவர்களுக்கு ஏற்படும் துன்பம் நம்மை பாதிப்பது எதனால்?  

# அதுதான் பாசம்.

9. வெளிநாட்டுக்கே migrate ஆகும் நிலை சந்தோஷமா வருத்தமா?

# வெளிநாட்டில் சென்று நிரந்தரமாக வாழ்வது எனக்கு பிடிக்காது.

& வருத்தம். 

10. எதனால் நண்பனிடம் மனம் விட்டுப்பேச முடிகிறது? அனேகமா எந்த விதிவிலக்கும் இல்லாமல்! 

# நம்மை முழுவதுமாக அறிந்தவர்களிடம் நமக்கு வெட்கம் அல்லது கூச்சம் இருக்காது. ஒருவரிடம் ஏதோ ஒன்றைப் பேசக் கூடாது என்று நாம் நினைப்பதற்கு முக்கியமான காரணம் , இதைப் பேசினால் நம்மை அவர் மட்டமாக நினைத்து விடுவார் என நாம் நினைப்பது. உண்மையான நண்பர்களிடம் இந்தத் தயக்கம் ஏற்பட இடமில்லை.

உடலுழைப்பு கஷ்டமா இல்லை மூளையை உபயோகித்துச் செய்யும் வேலை கடினமா? ஏன் உடலுழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை?

# உடல் உழைப்புக்கு உடல் வலு,  சொல்வதைக் கேட்டு,  அறிந்து செயலாற்றும்  திறன் மட்டும் இருந்தால் போதும்.  யோசித்து செயல்பட வேண்டிய பணிகளுக்கு, அதற்கேற்ற அறிவும்,  முன் அனுபவமும்,  சாதக பாதகங்களை அலசிப் பார்க்கும் திறமையும் இருக்க வேண்டும். எனவே பின்னதில் சவால்கள் அதிகம்.

ஒரு மனைவிக்கு கணவன் செய்யும் மிகப் பெரிய உதவி என்ன? அதுபோல் கணவனுக்கு மனைவி செய்யும் மிகப்பெரிய உதவி என்ன? 

# இருவருக்கும் ஒன்றே தான். அடுத்தவருடைய கௌரவம் மற்றவர்கள் மத்தியில் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது.

சமீபத்தில் சென்றவருடத்தைய மாஸ்டர்செஃப்-ஆஸ்த்ரேலியா பார்த்துக்கொண்டிருந்தபோது, வியட்நாம் உணவாக கஞ்சி என்ற பதத்தை உபயோகித்தார். அட.. நம்ம ஊர் (கீசா மேடம் ஃபேவரைட்) வார்த்தை வருகிறதே என்று ஆராய்ந்தால், அப்புறம்தான், நம் சோழர்கள் படையெடுத்துச் சென்ற இடங்களிலெல்லாம் நம் உணவையும் கலாச்சாரத்தையும் கொண்டு சென்றிருந்திருப்பார்களே என்று தோன்றியது. இருக்கலாம் இல்லையா?  

# லாம் என்று சொன்னால் எதுவுமே லாம்தான்.

தன் பையன் நல்லவன், கெட்டவங்களோடு சேர்ந்தால் அவங்களையும் நல்லவனாக்கிடுவான் என்று ஏன் பெற்றோர்கள் எண்ணுவதில்லை, அவனோட சேர்ந்துடாதே கெட்டவன் என்று சொல்லித் தடுத்துடறாங்க?

# கெட்ட பழக்கம் எளிதில் தொற்றும் இயல்பு உடையது.

$ பன்றியுடன் சேர்ந்த கன்றும், நாருடன் சேர்ந்த மலரும் ஒன்றாகுமா ?

& பையன்களில் நல்லவன் யார், கெட்டவன் யார் என்பதை எந்த அளவுகோல் கொண்டு அளக்கிறார்கள்? 

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே..
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே.. அன்னை வளர்ப்பதிலே! 

ஜெயகுமார் சந்திரசேகர் : 

புதன் கேள்விகள் அனுப்பியிருக்கிறேன்.

கடைசியில் கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் சுஜாதா கதையின் சுட்டியை சேர்த்திருக்கிறேன். நோக்கம் நாம் பெற்ற இன்பம் எல்லோருக்கும் சென்றடையட்டும் என்பதே.உசிதம் என்றால் அதையும் பதிவில் சேர்க்கலாம். அல்லது நீக்கி விடலாம். உங்களுக்கு தோணியபடி செய்யுங்கள். 

வேதாளம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியது.

போன வாரம் புதன் கேள்வி பதில் பார்த்தேன். இந்த கோண்டு இப்படித்தான். சின்னப்பயல்தானே. பள்ளிக்கூடத்தில் ஆசிரியரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எ பி ஆசிரியர்களிடம் கேட்டிருக்கிறான். அவனுக்கு தெரியவில்லை. கூகிள் ஆண்டவருக்கே விடை தெரியாத கேள்விகளை தான் எ பி ஆசிரியர்களிடம் கேட்க வேண்டும் என்பது.

சரி இதோ என்னுடைய பாணியில் கூகிள் ஆண்டவருக்கும் விடை தெரியாத, ஆனால்  எ பி ஆசிரியர்களுக்கு மட்டுமே விடைகள் தெரியும் கேள்விகளை அனுப்பியுள்ளேன். விடைகள்  தெரிந்தும் கூறாவிட்டால் ...................கடவது.

1. எ பி யில் கேள்வி கேட்பது எதற்காக? சரியான பதில் தெரியாததாலா? பதில் தெரிந்திருந்தும் ஆசிரியர்களை சோதிக்க வேண்டும் என்பதாலா? அல்லது கேட்பவர் விளம்பரத்திற்காகவா?

# இதை கேள்விகள் கேட்போரிடமல்லவா கேட்க வேண்டும் ?

& மற்றவர்கள் என்ன நினைத்து கேட்கிறார்களோ - அது அவர்களைப் பொருத்த விடயம். நீங்க என்ன நினைத்து கேட்கிறீர்கள் என்பதை கருத்துரையில் சொன்னீர்கள் என்றால், நாங்களும், மற்றவர்களும் தெரிந்துகொள்வோம். 

2.  . எ பி ஆசிரியர்கள் எப்படி விடை கண்டுபிடிக்கிறார்கள்? நாடி ஜோதிடம் போன்று ஜோதிடத்தாலா? அனுபவத்தாலா? ஊகத்தாலா?  அல்லது ஆண்டவர் துணையாலா?

# இணையதளத்தில் கிடைப்பதை கேள்விகளாகக் கேட்பது சோம்பல் காரணமாகத் தானோ ?

& பெரும்பாலும் வருகின்ற கேள்விகள் " .. .. .. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? " வகை கேள்விகள்தான். ஆதலால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு - எங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை ஆத்மார்த்தமாக உண்மையாக உரைத்துவிடுவோம். மற்ற வகை கேள்விகளுக்கு அனுபவம், இணையம் எல்லாம் கைகொடுக்கும். 

3. கா சு சோபனா என்பது ஒருவரா? அல்லது மற்ற ஆசிரியர்கள் யாருடையாவது இரண்டாவது புனை பெயரா?

& பலர். இல்லை. 

கேள்வி கேட்கும் கோவிந்து பற்றி அறிய வேண்டுமென்றால் சுட்டி 

https://drive.google.com/file/d/1PivBNRbyjOz7e9Tx_IYHLTLCzv9s3dVu/view?usp=sharing

= = = =

 Devarajan Shanmugam : 

தனிமைக்கும் மவுனத்துக்கும் உள்ள ஆறுவித்தியாசங்கள் என்ன?

# இரண்டுக்குமிடையே ஒப்பீடு அசாத்தியம் என்று தோன்றுகிறது. 

தனிமை மௌனத்தைக் கொண்டு வரும்.

மௌனம் தவறான புரிதலுக்கு வழி வகுக்கலாம். 

மௌனம் மேற்கொள்ளப் படுவது. 

மௌனம் கோபம் அல்லது அதிருப்தியின் வெளிப்பாடு. 

தனிமை  கொடிய விளைவுகளைத் தரவல்லது. 

மௌனம் எளிதில் கலையும்.

அப்பா ! ஆறு தேறிடுச்சு !!

(அதென்ன ஆறு வித்தியாசம் ? குமுதம் எஃபெக்ட்டா !!) 

&   தனிமையில் இருப்பவர் மௌனமாக இருப்பது சகஜம். 

    தனிமையில் இருப்பவர் மௌனமாக இல்லாமல் பேசிக்கொண்டிருந்தால் -- பைத்தியம் 

     தனிமையில் இருப்பவர் மௌனமாக இல்லாமல் சத்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தால் self introspection 

      தனிமையில் இருப்பவர் மௌனமாக இல்லாமல் பாடிக்கொண்டிருந்தால் பக்தி 

          தனிமையில் இல்லாமல் குழுவில் மௌனமாக இருப்பவர் either empty vessel or full vessel !!

            தனிமையில் இல்லாமல் குழுவில் பாட்டுப்பாடியபடி அல்லது பேசியபடி இருப்பவர் இந்திய சினிமா கதாநாயகன்! 

Jaganmohan Namakkal Ramachandran : 

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சொலவடையின் பொருள் என்ன?

# எல்லா வடைக்கும் பொருள் இருக்காது என்பதே ..

பொன் என்பது ஜுபிட்டர்(குரு) கிரகம் அதன் பொன்னிற நிறத்தால் அடைந்த பெயர்.

புதன் என்பது மெர்குரி என்று அழைக்கப்படும் மற்றுமொரு கிரகம். நம்முடைய பால் வீதியில்,சூரியனை வலம் வரும் பல கிரகங்களில் இவை இரெண்டும் இந்தப்  பழமொழியின் கதா நாயகர்கள்.

சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் நீள்வட்ட பாதைகள் ஒன்றுக் கொன்று மாறுபடும். சூரியனுக்கு பக்கத்தில் புதன் கிரகம், அடுத்து வெள்ளி, அதற்கு அடுத்து பூமி, அதற்கு அடுத்து செவ்வாய், அதற்கு அடுத்து குரு என்கிற ஜுபிட்டர் என்கிற பொன் நிறம் கொண்ட பொன்னன் .கடைசியாக சனி.

நாம் ஜுபிடர் ஐயும் மெர்குரி ஐயும் மாத்திரம் இப்போது எடுத்துக் கொள்வோம்.

ஜுபிடரின் (பொன்னன் ) / மெர்குரி (புதன்) வானவியல் அடிப்படைகள் /உண்மைகள்.

சூரியனிடம் இருந்து ஜுபிடர் கிரகத்தின் தூரம் 778500000 கிலோ மீட்டர்./ புதன் தூரம் 57910000 கிலோமீட்டர்.
ஜுபிடர் கிரகத்தின் விட்டத்தின் அளவு 139820 கிலோமீட்டர் ./ புதன் கிரகத்தின் விட்டம் 4879 கிலோமீட்டர். 

சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் : ஜுபிடர் 
11 .86 வருடங்கள். ( 12 வருடம்); புதன் 88 days .

அதாவது, ஜூபிடரை ,மெர்குரியுடன் ஒப்பிடும் போது, சூரியனில் இருந்து ஜுபிட்டர் 14 மடங்கு தூரத்தில் இருக்கிறது. ஜுபிடரின் உருவம் மெர்குரியின் உருவத்தை விட 29 அளவு பெரியது.

ஜுபிட்டர் 12 வருடத்துக்கு ஒரு முறை சூரியனை சுற்ற, மெர்குரியோ வருடத்திற்கு நாலு முறை சூரியனை சுற்றுகிறது.
மெர்குரி சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியில் இதை பார்ப்பது இது கடினம். மேலும் சுற்றி வரும் தூரம் / வேகத்தால் நம் கண்களில் படும் நேரம் மிக மிக குறைவு. இதன் உருவமும் சிறியது.

ஆனால், ஜுபிட்டர் ,உருவத்தில் பெரியது, சுற்றி வரும் தூரம் /சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் -அதிகம்.

சூரியனை விட்டு மிகவும் தூரத்தில் இருப்பதால் ,சூரிய ஒளியின் தாக்கம், புதனை ஒப்பிடுகையில் குறைவு. வெறும் கண்களால் சில சமயம் ஜூபிடரை பார்க்க முடியும். புதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

ஆக, 
பொன் (தரிசனம்-கண்ணுக்கு ) கிடைத்தாலும் கிடைக்கும்.
புதன் (தரிசனம் -கண்ணுக்கு) கிடைக்காது.

(நன்றி : ஈகரை தமிழ் களஞ்சியம் ) 

= = = =
எங்கள் கொக்கி : 

இன்று தேதி 2 - 2 - 2022. 

இன்றைய கருத்துரையில் " இரண்டு" என்ற தலைப்பில், கவிதை, துணுக்கு, சுவையான சம்பவம், ஏதாவது எழுதுங்கள். 

= = = = =

படம் பார்த்து - உங்களுக்குத் தோன்றும் கருத்தை எழுதுங்க 

1) 
2) 


3) 


= = = = 

76 கருத்துகள்:

  1. காலை வணக்கம் எல்லோருக்கும்

    படம் 1. என்னது? இரண்டு என்ற தலைப்பில் கவிதை எழுதணுமா...ஹூம் இரண்டு காலுங்களை பத்தி என்னத்த சொல்ல!!! எனக்கு இன்னும் என் சாப்பாடு கோட்டாவே வந்தபாடில்ல...வெயிட் பண்ணிக்கிட்டே....இருக்கேன்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேடே !! ஒன்றையும் இரண்டையும் இணைத்து ஒரு மியாவ் கமெண்ட்!! நன்றி.

      நீக்கு
  2. படம் 3: ஹூம் எனக்குப் போட வேண்டியதை விட்டு இதக் கொடுத்தா? இத வைச்சுட்டு நான் என்ன செய்ய முடியும்? கடைக்குப் போய் வாங்கித் திங்கவா முடியும்?!!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு என்ற தலைப்பில் ஏதேனும் கவிதை, சம்பவங்கள் பேப்பரில் வந்துள்ளதா என்று காக்காய் தேடுகிறதோ?

      நீக்கு
    2. கீதா. யூரோ நோட்டு இல்லாமல் ரூபாய் நோட்டாக இருந்திருந்தால் அடுத்த படம் காக்கா பெட்டிக்கடைக்காரரிடம் அந்த நோட்டை கொடுத்து சிப்ஸ் பாக்கெட்டை காட்டும் என்பதாக இருக்கும். இந்திய காக்காய்கள் மிகவும் புத்திசாலிகள்.

       Jayakumar

      நீக்கு
    3. சுவையான கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    4. ஹாஹாஹாஹா ஜெகே அண்ணா நான் மீண்டும் வந்து சொல்ல நினைத்த கிட்டத்தட்ட அதே மீனிங்க் உங்கள் கருத்து!!!

      கூடவே கேட்க நினைத்தேன் கௌ அண்ணாவை...இது இந்தியக் காக்காயோன்னு? அதான் அதுக்கு வெளிநாட்டு நோட்டு தெரியல ஒரு பேப்பரை போய்க் கவ்விக்கிட்டு இருக்கு என்று.

      கீதா

      நீக்கு
    5. அந்தக் காக்கா கூடவே நினைக்கும்...இத்தனை நோட்டுக்கு நடுல நான் ஜெயில்ல போட்டுறாம இருக்கணும்...அதுவும் இன்டெர்நாஷனல் ஸ்காம்ல நு....காகா உஷ் நு யாரும் சொல்லமாட்டேன்றாங்களே!!

      கீதா

      நீக்கு
    6. ரொம்ப உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள் !!

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. தனிமை எப்படி கொடிய விளைவுகளைத் தரும்? தனித்திரு விழித்திரு பசித்திரு என்று வள்ளலார் கூறியிருக்கிறாரே

    பதிலளிநீக்கு
  5. எபியில் கேள்விகேட்பது - பதிலையும் கேள்வியையும் படித்தவர்கள் சிந்திக்க, அவர்களும் கேள்விகேட்க என்றிருக்கக்கூடாதா? இதைப் படித்துவிட்டுத்தானே ஜெ ச. சாருக்கு சந்தேக்க் கேள்விகள் வருது

    பதிலளிநீக்கு
  6. தியானம் உடற்பயிற்சி புத்தகம் படித்தல் - பதில் சொன்னவருக்கு அனுபவம் போதவில்லையா இல்லை முழுமையான பதில் வரவில்லையா?

    எப்போப் பாத்தாலும் தியானம் பாட்டி கதை படிக்கிறேன், ஏதோ உலக ஆணழகன் பட்டம் வாங்கப் போறவர் மாதிரி உடற்பயிற்சி செய்கிறேன்னு இருந்தா, வீட்டு வேலைலாம் நான் ஒத்தியே செஞ்சு கஷ்டப்படணுமா? பத்து நிமிஷம் ஓய்வு கிடைக்குதா இந்த மனுஷனுக்கு வாக்கப்பட்டு? காலைல நாவல் படிக்கிறேன்னு உட்கார்ந்தால்கூடப் பொறுத்துக்கலாம்.. ஏய் கமலா சூடா காப்பி கொண்டா... குளிரா இருக்குல்ல. மிளகாய் பஜ்ஜி போட்டுத் தர்றாயா, தியானத்துல உட்காரப்போறேன்..கதவச் சாத்து, டிவிஐ அணைன்னு தொடர்ந்து ஏதாவது வேலையை எனக்குக் கொடுத்துக்கிட்டே இருப்பது... இது அம்மா. அப்பா தியானத்துல உட்கார்ந்தாச்சு.. வெளில வாக்கிங் கிளம்பியாச்சு.. அக்கடான்னு புக் படிக்க உட்கார்ந்தாச்சு.. கொஞ்ச நேரம் நிம்மதி.. இது பையன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாம் பார்த்தால் - முடிவே கிடைக்காது. நாம் மற்றவர்களுக்காக எதையும் சிந்திக்காமல் இருப்பதே எப்பொழுதும் நல்லது. ஒவ்வொரு செயலையும் இதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு வருமா என்றெல்லாம் சிந்தித்தல் தேவையே இல்லை. நான் ஒருபோதும் மற்றவர்களின் செயலால் பாதிப்பு அடையமாட்டேன்.

      நீக்கு
    2. //ஒவ்வொரு செயலையும் இதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு வருமா என்றெல்லாம் சிந்தித்தல் தேவையே இல்லை. நான் ஒருபோதும் மற்றவர்களின் செயலால் பாதிப்பு அடையமாட்டேன்.// வேண்டும், வேண்டும், இந்த மனம் வேண்டும். நீங்க ஸ்திதப் ப்ரக்ஞ்சர் கேஜிஜி அவர்களே! _/\_

      நீக்கு
    3. ப்ரக்ஞ்சர்// மன்னிக்கவும். :( ப்ரக்ஞர்.

      நீக்கு
    4. புரிந்துகொண்டேன். நன்றி.

      நீக்கு
  7. //& மற்றவர்கள் என்ன நினைத்து கேட்கிறார்களோ - அது அவர்களைப் பொருத்த விடயம். நீங்க என்ன நினைத்து கேட்கிறீர்கள் என்பதை கருத்துரையில் சொன்னீர்கள் என்றால், நாங்களும், மற்றவர்களும் தெரிந்துகொள்வோம். //

    நான் ஒதுங்கி இருந்து கருத்துரை போலும் கூறாமல் சும்மா இருந்தேன். ஆனால் ஓரு சமயம் கேள்வி பதில் பகுதி வாசகர்களின் கேள்விகள் இல்லாமையால் நலிந்து இருந்தது. சரி இந்த பகுதியாக தூக்கி நிறுத்த நம்மால் ஆனதை செய்வோம என்ற நிலையில் கேள்விகளை அனுப்ப துவங்கினேன். அதற்கு ஏற்ப ஸ்ரீராம் அவர்களும் அவருடைய மெயில் அட்ரஸ் கொடுத்து உதவினார்.

    தற்போது அப்பகுதி மற்றவர்களின் கேள்விகளால் நிறைவது மகிழ்ச்சியை தருகிறது. 
    அது போலத்தான் நான் படிச்ச கதையும். எல்லோரும் எல்லாமும் வாசிக்க வேண்டும். இங்கு விடைகள் உண்டு என்பதும் அறிய வேண்டும். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. இரண்டு உயிர்கள் இணைந்தோம்.
    இரண்டும் சேர்ந்து பெற்றது மூன்று
    இரண்டாவது தலைமுறை
    இரண்டும் மூன்றும் பெற்றது ஆறு.
    இரண்டு ஆறும் சேர்ந்தால்
    அவர்களின் இரண்டாவது தலைமுறை.

    தைமாத நாட்கள் உபயம்:)

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கிய வாழ்வு தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  10. முதல் படம் பூனைக்கு மணி கட்டியாச்சு.

    இரண்டாவது படம் இந்தக் குளிரில்
    நீந்தணுமா என்ன?

    குயில் கூவிப் பணம் கொட்டியது.

    பதிலளிநீக்கு
  11. அதான் கவிஞர் நிறைய இரண்டு பாட்டுகள் எழுதியிருக்கிறாரே.எனக்கு தெரிந்த இரண்டு. 

    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?

    இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். 


    இரண்டுடன் நிறுத்திக்கொள்கிறேன். 

    பதிலளிநீக்கு
  12. படக்கருத்துகள். 

    1. ஒரு படத்தில் நடித்தவுடன் பெரிய ஸ்டார் ஆகி  விட்டதாக நினைப்பு.

    2. குண்டு சட்டியில் குதிரை. குழி பணியார சட்டியில் வாத்து குஞ்சு. 

    3. இது தான் காக்கா ஜோசியம். வரும் நோட்டுக்கு ஏற்றாற்போல் பலன்கள் சொல்லப்படும்.

    பதிலளிநீக்கு
  13. புதன் பற்றிய கேள்விக்கு நான் எதிர்பார்த்த சரியான பதில் கிடைத்து விட்டது.

    புதன் சூரியனின் அருகில் இருப்பதால் கண்ணுக்கு புலப்படாது. சூரியனின் பின்னால் ஒளிந்து கொள்ளும். அதே போன்று அதற்கு RETROGRADE motion உண்டு.

     Astronomy was my favourite subject (D plus) in my college days.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ! மகிழ்ச்சி - நன்றி.

      நீக்கு
    2. புதன் பற்றிக் கேள்வி கேட்டு அனைவருக்கும் பல நல்ல தகவல்களைக் கிடைக்கச் செய்த சிபிக்கு (ஜகன்மோகன் ராமச்சந்திரன்) மிக்க நன்றி. அவர் இதைப் படிச்சதாகத் தெரியலை. :(

      நீக்கு
  14. ஜுபிடரின் (பொன்னன் ) //

    நல்ல வேளை பொன்னார் என்று சொல்லாமல் விட்டீர்களே

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  16. 3  வது படம் கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் யுவான் என்று தெரிகிறது. மாவோ படம் போட்ட நோட்டும் இருக்கு பாருங்கள். ஆக சீனா பொருட்கள் எல்லாம் குப்பை நோட்டு உட்பட! காக்கைக்கு தான் போட லாயக்கு!

    Jayakumar

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. இன்றைய தலைப்புகேற்ற பதிலின் விளக்கமும், தனிமை, மௌனம் குறித்த தெளிவான பதில்களும் நன்றாக உள்ளது. அத்தனைக் கேள்விகளுக்கும் அருமையாக பதிலளித்த எ.பி ஆசிரியர்களுக்கும், கேள்விகளை தொடுத்தவர்களுக்கும் என் நன்றிகள்.

    ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரின் நல்ல நோக்கத்துடன் வெளியிட்ட எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய கதையையும் நேரம் கிடைக்கும் வாசித்து விடுகிறேன். இது வரை படிக்க சந்தர்ப்பம் அமையவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள்...

    பதிலளிநீக்கு
  19. சூரியனுக்கு அருகில் புதன் இருப்பதால் கண்ணுக்குப் புலப்படாது.. சூரியனின் ஒளியில் ஒளிந்து கொள்ளும் என்பது பத்தாம் வகுப்பில் படித்தது..

    மீண்டும் பள்ளிக் கூடத்துக்குள் வந்தது போல் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  20. பூனையைப் பார்த்ததும் டக்கென்று நினைவுக்கு வந்தது நம் ஏஞ்சலோட பூஸார் ஜெஸி!!!அது போல நம்ம அதிரடி...அவங்க ரெண்டு பேர் பூனையும் கறுப்பு அதுவும் ஜெஸி கொஞ்சம் இப்படி வெள்ளை கலந்து

    கீதா

    பதிலளிநீக்கு
  21. சொந்தமாக கவிதை வரவில்லை இருந்தாலும் பழைய சினிமா பாடல் ஞாபகம் வந்தது
    இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் பழைய வசந்த மாளிகை பாடல் இருக்கிறது
    ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் சிவப்பு மல்லி படம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பாடல்களை நினைவிற்குக் கொண்டுவந்ததற்கு நன்றி.

      நீக்கு
  22. மிகவும் சுவாரசியமான விஷயங்களைக் கொடுத்த கேள்வி/பதில் பகுதி. உபயோகமானதும் கூட. சுட்டிக்கு இனித் தான் போகணும்.முதல் படம் அதிரடியின் பூஸாரை நினைவூட்டியது. அடுத்த படம் டாம்&ஜெரியில் வரும் வாத்துக்குஞ்சுகளை நினைவூட்டியது. காக்கை படம் இன்னிக்கு நிறையக் காக்கை பற்றிய ஜோக்ஸ் படிச்சதை நினைவூட்டியது. முகநூலில் பாலாஜி வாசு போட்டிருக்கார்.

    பதிலளிநீக்கு
  23. தப்பே பண்ணாதபோது தண்டனை அனுபவித்தது உண்டா?

    நீங்கள் தப்புப் பண்ணலைனு நிரூபிக்கச் சந்தர்ப்பமே கொடுக்காமல் தண்டனை மட்டும் பெற்ற அனுபவம்?

    யாரானும் என்னைத் தவறாக நினைத்தால் மனம் வருந்திக் கொண்டே இருப்பேன். அதே நம்ம ரங்க்ஸ் என்றால் "விட்டுத்தள்ளு!"னு சொல்லிட்டுப் படுத்துத் தூங்கிடுவார். இது ஆண்/பெண் என்னும் பாகுபாட்டிலா? இல்லை அவரவர் மனப்போக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை "காலை கஞ்சி ரெடியானா, பேசாம சாப்பிட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்பேன். நம்ம ரங்க்ஸ் என்றால், 'இன்றைக்கு இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாம், சீரகம் இல்லையே என்றெல்லாம் சொல்லுவார். இது ஆண்/பெண் என்னும் பாகுபாட்டிலா? என்றெல்லாம் கேள்வி கேட்கலையே

      நீக்கு
    2. கேள்விகளுக்கு பதில் அளிப்போம். நன்றி.

      நீக்கு
    3. நெல்லை, சாப்பாட்டில் நொட்டுச் சொல்லுவதில் நம்ம ரங்க்ஸை மிஞ்ச ஆளில்லை. ஆகவே இதில் உங்களுக்கு ஃபெயில் மார்க் தான். :)))) கஞ்சி மட்டுமில்லை. காடரிங் சாப்பாட்டில் இருந்து ஓட்டல் டிஃபன் வரை எல்லாவற்றிலும் தரமான ருசியை எதிர்பார்த்து ஏமாந்து போவார்! :)))))

      நீக்கு
  24. தனிமை, மௌனம். கூட்டத்தில் கூடத் தனியாக இருக்கும்/இருந்த அனுபவம் எனக்கு உண்டு. அதே போல் பலரும் பேசுகையில் மௌனமாகவும் இருந்திருக்கேன். என்றாலும் மௌனம் சிறந்த மொழி இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மவுனம் சிறந்த மொழி; மற்றவர்கள் "வாயில் என்ன கொழுக்கட்டையா?" என்று கேட்காதவரை. 

      நீக்கு
    2. நான் எனக்குள் ஆழ்ந்திருப்பேன். ஆகையால் மற்றவர்கள் கேட்பது சத்தமாகக் காதில் விழுந்தாலும் மனதில் பதியாது. அம்மாதிரியான நிலை அடிக்கடி ஏற்படும்.

      நீக்கு
  25. 4. இப்போதெல்லாம் அப்பா/பிள்ளை, அம்மா/பெண் ஆகியோருக்கு நடுவேயும் பிரச்னைகள் தோன்றக் காரணம் என்ன? குழந்தைகளுக்குக் கொடுக்கும் அதீத சுதந்திரமா?
    5. முன்னெல்லாம் அப்பா தான் கண்டிப்பார்/அம்மா அரவணைப்பார் என்று சொல்வார்கள். இப்போதும் அத்தகைய அம்மாவைப் பார்க்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போதெல்லாம் அப்பா/பிள்ளை// - பிரச்சனைகளே இடையில் வராத இருவர், கோவிலில் இருக்கும் தெய்வச் சிலைகள்தாம்.

      நீக்கு
    2. கேள்விகளுக்கு பதில் அளிப்போம்.

      நீக்கு
    3. முன்னரும் இருந்தாலும் இப்போதெல்லாம் பேச்சுச் சுதந்திரம் என்னும் பெயரில் பிள்ளைகள் அப்பாவை எதிர்க்கிறார்களோ எனத் தோன்றுகிறது. அப்பா என்றால் கண்டிப்பு எனப் பெயர் உண்டு. இப்போதைய அப்பாக்கள் அப்படித்தான் கண்டிப்பாக இருக்கிறார்களா? நாங்க கண்டிச்சே வளர்த்தோம்.

      நீக்கு
  26. கேள்விகளும், பதிலகளும் நன்றாக இருக்கிறது.
    பூனை வசதி படைத்த வீட்டில் இருக்கிறது போலும், அழகான மணிமாலை கழுத்தை அணிசெய்கிறது. அதுவும் பெருமையாக நிற்கிறது.

    சீக்கீரம் குளித்து விட்டு வாங்க விளையாடலாம்

    மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் என்று தானே கண்ணதாசன் பாடினார். பணம் இருக்கும் டிராவில் குயில்கள் வாழலாம் என்று பாட வில்லையே!
    காலை வேறு கட்டி போட்டு இருக்கிறார்கள் போலவே!

    பதிலளிநீக்கு
  27. கேள்விகளும் பதில்களும் சுவாரசியம் கூடவே பயனுள்ளதாக இருக்கிறது குறிப்பாக புதன் பற்றியது.

    பூனை படத்தைப் பார்த்ததும் நம் பதிவர்கள் சகோதரிகள் ஏஞ்சல் மற்றும் அதிரா அவர்களை நினைவுபடுத்தியது.

    காகமா குயிலா? குயில் போலவும் இருக்கிறதே.. கூட பணக்காரக் காக்கையாகி/குயிலாகிவிட்டது போலும்! பேங்கிற்குச் சென்று டெப்பாசிட் பண்ணுகிறதோ!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. படம் பார்த்து கருத்து எல்லாமே ஹுரோக்களாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!