புதன், 23 பிப்ரவரி, 2022

எங்கள் கேள்விகள்

 

சென்ற வாரம் எங்களை யாரும் கேள்வி கேட்கவில்லை. 

எனவே - நாங்கள் ஐந்து கேள்விகள் கேட்கிறோம். 

வாசகர்கள் பதில் சொல்லவும். 

1) எல்லா குடும்பங்களிலும், பெரும்பாலும் மாமியார் - மருமகள் பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால், மாமனார் - மாப்பிள்ளை பிரச்சனைகள் அந்த அளவுக்கு இருப்பதில்லையே - இது ஏன்?

2) இன்றைய இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் 'இதனுடைய' முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அவர்களை வளர்க்கவேண்டும் - என்று நீங்கள் நினைப்பது, எதை ?

3) இன்றைய தேதியில், எந்த முன் தயாரிப்பும் இன்றி, நீங்கள் மீண்டும் இந்தக் காலத்து ஸ்கூல் ஃபைனல் பரீட்சை எழுதினால், எந்தெந்த பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும்? 

a ) ஆங்கிலம் 

b) தமிழ் 

c ) கணக்கு 

d) சமூக பாடம் 

e) அறிவியல் 

f ) வேறு ஏதாவது 

4) சமீபத்தில் நீங்கள் ரசித்துச் சாப்பிட்ட உணவு / சிற்றுண்டி எது? எங்கே? வீட்டில் தயாரித்தது என்றால், நீங்கள் தயாரித்ததா? 

5) இந்த வரிசையில், அடுத்த எண் எது? எப்படி?

             4      2        12 

              3     3        24

              7     2        42 

             9      2        ? 

= = = = =

படம் பார்த்து, கருத்து எழுதுங்க :

1) 


" ஏய் பூனைக்குட்டி - உன்னால என்னைத் தூக்க முடியுமா? "

2) 

" ஹலோ - கோழி முதலில் வந்ததா - அல்லது முட்டை முதலில் வந்ததா? - பதில் சொல்லு " 

3) 

" ஹலோ - கோழி முதலில் வந்ததா - அல்லது முட்டை முதலில் வந்ததா? - பதில் சொல்லு " 

" மக்கு, மக்கு - நான்தான் முதலில் இங்கே வந்தேன் !" 

= = = = =


127 கருத்துகள்:

  1. 01) மாமியாரும், மருமகளும் வீட்டிலேயே இருந்து கொண்டு ஒருவர் முகத்தை மறாறவர் பார்த்துக் கொண்டே இருப்பதால்...

    02) மனைவியோடு கணவனும், கணவனோடு மனைவியும் கடைசிவரை மனக்கசப்பு இல்லாமல் விட்டுக் கொடுத்து வாழணும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம்..

    நேற்று இரவு பதினொரு மணியளவில் தான் திரும்ப முடிந்தது.. காற்றினிலே - நிறைவுப் பகுதியின் கருத்துரைகளுக்கான பதில்களை இன்று காண்க..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும் அமைதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. முதல் கேள்விக்குப் பதில் சொல்லலாமானு தெரியலை. ஏனெனில் முதலில் நான் என் கருத்தைப் பதிவு செய்வது சரியானு யோசிக்கிறேன். அதான் இப்போல்லாம் ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்ட் என்பது போல் அப்புறமா வந்து விபரமாச் சொல்லிண்டு இருக்கேன். ஆனாலும் இது!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி - ஆக நீங்க உண்மை சொல்லப்போவதில்லை.

      நீக்கு
    2. நான் என்னோட கருத்தை முதல் முதல் பதிந்தால் பின்னால் வருபவர்கள் அதை ஒட்டியே அவங்க கருத்தை வெளியிடுவதாக ஒரு பேச்சு உண்டு. அதான் இப்போல்லாம் கூடியவரை அடக்கியே வாசிக்கிறேனாக்கும்! (அப்படீங்கறீங்க? ஹிஹிஹி, என்னோட ம.சா.கூவல்)

      நீக்கு
  6. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கிய வாழ்வு தொடர இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  7. சரி, சொல்லிடவா? மாமனார்/மாப்பிள்ளை தகராறு பல வீடுகளில் பார்த்திருக்கேன். மாப்பிள்ளை மாமனாரைத் தொந்திரவு செய்வதும் பணம்/காசு கேட்டுத் துன்புறுத்துவதும், அதுக்காக மனைவியை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதும்! நிறையவே உண்டு. இதோடு நிறுத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய என்பது உங்கள் அனுமானம். எல்லோரும் சம்பாதிக்கும் இந்தக் காலத்தில் மாமனார் மாப்பிள்ளை பிரச்சனைகள் எதுவும் இருப்பதில்லை.

      நீக்கு
    2. எங்கேயுமே பெரியவங்க சின்னங்களை டாமினேட் பண்ணி அவங்க வாழ்க்கையை இவங்க வாழ நினைத்தால் உரசல் நிச்சயம். யார் குடும்பத்தைப் பாத்துக்கறாங்களோ அவங்களை மத்தவங்க அனுசரிச்சுப் போகணும் , நம் போய்விட்ட அதிகாரத்தைப் பற்றி எண்ணாமல்

      நீக்கு
    3. சரி! சிலவற்றை என்னால் வெளிப்படையாகப் பேசவோ எழுதவோ முடியலை. மற்றபடி இங்கே சின்னவங்க/பெரியவங்க என்னும் concept(கருத்து?) வராது. வரவும் இல்லை. மாமனார் பெண் குடும்பத்தைப் பார்த்துக்கறது என்பது மிக அபூர்வம். இங்கே கேள்வி மாமனார்/மாப்பிள்ளை உறவைப் பற்றித் தான். சேர்ந்து இருந்து யார் பெரியவங்க என்பதைப் பற்றி இல்லை. நான் புரிந்து கொண்டிருப்பது சரியெனில் மாப்பிள்ளையை அலட்சியம் செய்யும்/செய்த/செய்து கொண்டிருக்கும் மாமனார்கள் உண்டு. அதே போல் மாமனாரை லட்சியமே செய்யாத/செய்த/செய்து கொண்டிருக்கும் மாப்பிள்ளைகள் உண்டு. அம்புடுதேன்! சுற்றி நடப்பனவற்றை நன்கு கூர்ந்து கவனிக்கணும்.

      நீக்கு
  8. மாமனார்/மாமியாரைத் தன் கூடவே வைத்துப் பராமரித்த மாப்பிள்ளைகளும் உண்டு. உதாரணம் என் தம்பி கூட அப்படித்தான் செய்தார். இருவரின் கடைசிக்காலம் வரை தம்பியிடமே இருந்தார்கள். இதெல்லாம் அவரவர் மனப்போக்கு/குடும்ப நிலையைப் பொறுத்தே என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராமரிக்க அவங்க என்ன ஆடுமாடா? இல்லை மிக்சியா? :( பாத்துக்க என்று சொல்லலாமோ?

      நீக்கு
    2. பார்த்துக்கறதுக்கு அவங்க என்ன கண்ணாடியா ??

      நீக்கு
    3. பராமரிப்பு எனில் அவங்களோட மொத்தச் செலவும். சும்மாச் சாப்பாடு போடுவது மட்டும் இல்லை. எல்லாமும்!

      நீக்கு
  9. முதல் கேள்வி.... மாமனாருக்குத் தன் மகள் வாழ்வு முக்கியம்.
    வேண்டி வேண்டி பார்த்துக் கொள்வார் மாப்பிள்ளையை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து சாப்பிட்ட சிற்றுண்டி அடை குணுக்கு.
      வெளியே போயே நாளாகிறது.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    3. சேவை, தயிர் வடை, தவலடை .... லாம் மறந்துடுத்தா?

      நீக்கு
    4. தவலடை அடுத்த மாத இறுதியில் வர இருக்கிறது என்று ஒரு பக்ஷி சொல்கிறது.

      நீக்கு
    5. @கௌதமன் ஜி! அப்படீங்கறீங்க? இஃகி,இஃகி,இஃகி. பார்ப்போம்.

      நீக்கு
  10. இளைய தலைமுறைக்கு நம்முடைய சாஸ்திர/சம்பிரதாயங்கள் பற்றிய விசாலமான அறிவு வேண்டும். அதிலும் rituals. முக்கியமாய்க் கல்யாணங்களின் முக்கியத்துவம். அதன் வைதிக சம்பிரதாயங்களின் முக்கியத்துவம். சேர்ந்து வாழ்வதின் தாத்பரியம். கணவன்/மனைவி இருவரில் உயர்ந்தவர்/தாழ்ந்தவர் இல்லை. இருவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய இரட்டை மாட்டு வண்டி தான் வாழ்க்கைனு தெள்ளத் தெளிவாப் புரிஞ்சுக்கறாப்போல் சொல்லணும். அடுத்துப் பணத்தின் அருமை. அதைத் தவிர்த்துக் குழந்தைகளின் அருமை. இன்றைய இளம் தம்பதிகள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது என்பதைக் கட்டாயமாய்ச் சொல்லிப் புரிய வைக்கணும். (நெல்லை வந்து சிரிப்பார். இதுவும் கடந்து போம்.) ஒரே குழந்தையாக இருப்பது சரியல்ல. இது அந்தக் குழந்தைக்குப் பல விதங்களிலும் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாஸ்த்ர சம்ப்ரதாயம் எனக்கே தெரியாது... இதுல அடுத்த தலைமுறையாக??

      நீக்கு
    2. ஒரு குழந்தையோடு - ஹா ஹா ஹா .. பின்ன அவங்க நிம்மதியா இருப்பது நமக்கு எப்படிப் பிடிக்கும்?

      நீக்கு
    3. ஒரே குழந்தை என்னும் முடிவால் நாம் எத்தகைய அபாயமான காலத்தை நோக்கிச் செல்கிறோம் என்பதைப் புரிந்து கொள்பவர் எவரும் இல்லை. ஆங்காங்கே என்னைப் போலச் சிலப் புலம்பிக் கொண்டிருக்கும் முட்டாள்கள் தவிர்த்து! :(

      நீக்கு
    4. சாஸ்த்ர சம்பிரதாயங்களுக்கு எனப் புத்தகம் உள்ளது. அதை வாங்கிப் படிங்க முதலி. அதில் சிலவற்றை நாம் எப்போதுமே விட்டுக்கொடுக்காமல் பின்பற்ற முடியும். அவற்றைப் பின்பற்றினாலே போதுமானது. அவரவர் குடும்ப வழக்கம் வேறே! அதே போல் ஸ்மார்த்த/வைணவ சம்பிரதாயங்கள் என்பது வேறே. ஆனால் சாஸ்திர சம்பிரதாயம் அனைவருக்குமே பொதுவானது/பிராமணரல்லாதோர் உட்பட.

      நீக்கு
  11. இளைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டியது.

    மற்ற உயிர்களை மதிக்கும் எண்ணம்.
    அன்பும்,மரியாதையும் எல்லோரிடமும்
    வைத்திருக்க வேண்டும். அன்னியர்களிடம்
    எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்கப்
    பழக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காலத்து ஸ்கூல்ஃபைனல்?

      நாங்கள் படித்த 11 ஆம் வகுப்பு என்றால்
      சொல்லலாம்.
      எங்கள் பசங்க படிக்கும் போது எட்டாம் வகுப்பு வரைதான்
      சொல்லிக் கொடுக்க முடிந்தது.

      நீக்கு
    2. மனம் திறந்த கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    3. வல்லிம்மா.. இளைய தலைமுறை இவைகளை நன்றாகவே அறிவார்கள்னு நினைக்கிறேன்.

      பெரியவங்க தான் *கருத்துரைக்கு நன்றி" என்று மட்டும் சொல்லாம அவங்க அபிப்ராயமும் சொல்லணும். சரியா?

      நீக்கு
    4. மொழிப்பாடம் கூடப் பெண்/பையருக்கு ஒன்பதாம் வகுப்பு வரை தான் சொல்ல முடிந்தது. அப்புறமாய்ச் சொல்லிக் கொடுக்க முடியலை.

      நீக்கு
  12. இந்தக்காலத்துப் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு/பொதுத் தேர்வு எனில் தமிழில் 100க்கு 200 எடுத்துடலாம். ஏனெனில் இப்போதைய தமிழ்க் கல்வி அவ்வளவு மோசம். மற்றபடி கணக்கெல்லாம் எனக்கு அப்படி ஒண்ணும் முன்னேற்றம் இல்லை. மற்றப் பாடங்களும் சிறப்பாக எழுதலாம். இப்போத் தான் சரி/இல்லை என்பதற்கு பதில் சொன்னாலே அள்ளிப் போடுவாங்களே மதிப்பெண்களை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி / இல்லை - அதற்குப் பிறகு NOTA வும் வருமோ?

      நீக்கு
    2. 100க்கு 200ஆமே!

      என்னால் மொழி இரண்டாம் தாள்கள் தவிர எதிலும் தேர்ச்சி பெற முடியாது

      நீக்கு
    3. நான் சொல்வது தமிழ் மொழிப்பாடத்தில் தேர்வு மதிப்பெண்கள் பற்றி.

      நீக்கு
  13. ஹிஹிஹி, எனக்கு நான் வைக்கும் வற்றல் குழம்புதான்( நிஜம்மான வத்தல், வெங்காயம், முருங்கை, கத்திரிக்காய், கொத்தவரை எனத் தான்களைப் போட்டுக் குழம்பு வைச்சுட்டு வெங்காய வத்தக்குழம்பு என்றெல்லாம் சொல்லக் கூடாது.) சுண்டைக்காய், மணத்தக்காளி, மிதுக்க வத்தல், அப்பளக்குழம்பு, கொத்தவரை/அவரை/கத்திரிக்காய் வற்றல் ஆகியவை போட்டு வைப்பதே வற்றல் குழம்பு. மோர்சாதத்திற்குத் தொட்டுக்கப் பிடிக்கும். வற்றல் குழம்பைச் சாதத்தில் விட்டுப் பிசைந்து சாப்பிடுவதை விட இதான் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வத்தல் குழம்பு ரெஸிபி அனுப்புங்க. நாங்களும் அதே போன்று செய்ய முயற்சி செய்கிறோம்.

      நீக்கு
    2. எனக்கும் அந்த அபிப்ராயம் இருந்தால் போர் சாதம் வத்தல் குழம்பு,. இல்லை சுடசாதம் வத்தல் குழம்பு அப்பளாம் என சாப்பிட்டிருப்பேனே. ஏன் யூடியூபில் ஆராய்ந்து போயும் போயும் தக்காளி தோசை கேட்கப்போகிறேன், அதுவும் தொட்டுக்க இல்லாமல் - என்று யாருடைய மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்குமே... அது யாராயிருக்கும்?

      நீக்கு
    3. ஹாஹாஹா, நெல்லை, இந்த யூ ட்யூபெல்லாம் ஆராய்ச்சி செய்வது மாமா தான். நேத்திக்குக் கூட ராகேஷ் ரகுநாதனின் ஏதோ ஒரு தயாரிப்பைப் பற்றிச் சொல்லிப் பாரு என்று சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு வந்ததோ அவரோட பொரிச்ச ரசம். அது ஒண்ணுமில்லை. அக்ஷயாஸ் கிச்சனில் சுப்புவின் சமையலறையில் "பொரிச்ச ரசம்" என முகநூலில் வந்ததா? உடனே எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தது நேற்றுப் பொரிச்ச ரசமே!

      நீக்கு
    4. @கௌதமன் சார், வத்தல் குழம்பு எல்லோரையும் போல் தான் வைக்கிறேன். வித்தியாசமெல்லாம் ஏதும் இல்லை. பொடி காரணமாய் இருக்கலாம். நான் நல்லெண்ணெய் தான் சேர்ப்பேன். அதுவும் காரணமாய் இருக்கலாம். வற்றல்களை நன்கு எண்ணெயில் வறுபட்டதும் எடுத்துக் குழம்பு கொதிக்கையில் சேர்ப்பேன். அதுவும் காரணமோ என்னமோ? ஏனெனில் என் மாமியாரெல்லாம் வற்றல்களை வெந்நீரில் ஊற வைச்சு அலசிட்டுக் குழம்பில் சேர்ப்பாங்க. எண்ணெயில் பொரித்தோ/வறுத்தோ போட மாட்டாங்க. அப்பளக் குழம்புக்கும் நான் தனியாக அப்பளத்தைப் பொரித்து வைத்துக் கொண்டு (அவ்வப்போது ஒரு விள்ளல் அப்பளத்தை உள்ளே தள்ளிக் கொண்டு) குழம்பு கொதிக்கையில் சேர்ப்பேன்.

      நீக்கு
    5. சுவையான தகவல்களுக்கு நன்றி. வத்தக்குழம்பு எல்லோரையும்போல் செய்தாலும் - சில வாசகர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால், ஒருமுறை செய்முறை எழுதுவதில் தவறு இல்லை. அழல் அமுதத்தைவிட இது பெட்டர் !!

      நீக்கு
    6. அப்படீங்கறீங்க? சரி. பார்க்கலாம். கல்சட்டியும் காரணமாக இருக்கலாம். மாவு கரைத்து ஊற்ற மாட்டேன். இப்படி எல்லாம் சின்னச் சின்னக் காரணங்கள்.

      நீக்கு
  14. அடுத்த கேள்விக்குப் பதில் 66? நான் கணக்கில் ரொம்பவே வீக் என்பதால் சிரிக்காதீங்க யாரும். தப்பானால் அதுக்கு உண்டானதைக் குறைச்சுக் கொண்டு பொற்கிழியை அளிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிக்கவில்லை. ஆனால், எப்படி என்று விவரிக்கவேண்டும்.

      நீக்கு
    2. ஹை! விவரிச்சாத் தான் பரிசா? அது ஒண்ணுமில்லை. முதல் விடைக்கும் இரண்டாவதுக்கும் 12 கூட்டி இருக்கு. அடுத்து மூன்றாவது அந்தப்பனிரண்டோடு ஆறு சேர்த்துப் பதினெட்டுக் கூட்டி இருப்பதால் நான் இப்போ இன்னும் ஆறு சேர்த்து 24 போட்டுக் கூட்டினேன். 42+24=66. மறுபடியும் சொல்றேன். சிரிக்காதீங்க. ஒன்பது கூட்டணுமோனு கூட நினைச்சேன். 42+27= 69 இப்படியும் யோசிச்சேன். ஆனால் 69 odd number. எனக்குச் சமமான எண்களே பிடிக்கும் என்பதால் 66 ஐத் தேர்ந்தெடுத்தேன்.

      நீக்கு
    3. நல்ல விளக்கம். ஆனால் விடை தவறு!

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏமாத்திட்டீங்களே!

      நீக்கு
  15. படங்களெல்லாம் அழகு. கோடி துக்கம் போகும் குழந்தை முகத்தில் என்பார்கள். குழந்தைகளைப் பார்த்தாலே மனம் நிறையும். அதிலும் தொலைக்காட்சியில் உட்வர்ட்ஸ் விளம்பரப் பாப்பா (பையரா?) சிரிக்கும் அழகு, மனதைக் கொள்ளை கொள்ளும்.
    சேவல் எல்லாம் பார்த்து வருஷங்கள் ஆகிவிட்டன.
    குட்டி நாய், குட்டிக் கோழிக்குஞ்சு இரண்டும் நட்பாக இருக்கா?

    பதிலளிநீக்கு
  16. படங்கள் அத்தனையும் அழகு.
    பாப்பா ரொம்ப செல்லம்

    பதிலளிநீக்கு
  17. அத்தனை அழகுச் செல்லங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  18. 1. பழங்கால மருத்துவம்/இப்போதைய மருத்துவம் இரண்டில் எது சிறந்தது?

    2. சித்தா/ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தியது உண்டா?

    3. ஆயுர்வேதம்/சித்தா போன்றவற்றிலும் அறுவை சிகிச்சை முறை உண்டு. சஸ்திர சிகிச்சை என ஆயுர்வேதத்தில் சொல்கிறார்கள். சித்தாவில் என்ன பெயர்னு தெரியலை. ஆனால் பிரபலம் அடையவில்லை. இன்றைய ஆயுர்வேத மருத்துவர்களில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உண்டா? கேள்விப் பட்டிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. பதில் அளிப்போம்.
      (பின்னூட்டத்தில் எங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பும் மற்ற வாசகர்கள், அதை இங்கே பதியாது, எனக்கோ அல்லது ஸ்ரீராமுக்கோ அனுப்பி வைக்கவும். இங்கு பின்னூட்டங்களில் அளிக்கப்படும் பதில்கள் அதிகம் பேரை சென்றடையாது - ஆனால் அதை எங்கள் அடுத்த வார பதிவில் மெயின் பதிவாக வெளியிட்டால், எங்கள் blog, மின்நிலா மூலம் அதிகம் பேர் படிக்க வாய்ப்பு. )

      நீக்கு
    2. இந்த வேலையைப் பண்ணுவது நான் மட்டுமே ஹிஹி

      நீக்கு
    3. இந்தக் கேள்விகளைக் கேட்டுவிட்டு அலோபதி மருத்துவர் அப்பாயின்ட்மென்டுக்கு லேட்டாயிடுச்சுனு கிளம்பிப் போயிட்டாங்களா? ஆளைக் காணோம்

      நீக்கு
    4. இல்லை, பெண் வாட்சப்பில் அழைத்ததால் போயிட்டேன். ஏற்கெனவே அவளுக்கு ஒரு வருஷத்துக்குக் கிட்டத்தட்ட வயிற்றுப் பிரச்னை! இன்னும் சரியாகலை. கட்டுப்பாடான உணவு எனில் ரொம்ப ரொம்ப ரொம்பக் கட்டுப்பாடுகள். சாதம் அரைக்கிண்ணம் தான் சாப்பிடலாம். அதுவும் வெள்ளை அரிசிச் சாதம். ப்ரவுன் அரிசி ஜீரணம் ஆகாதாம். காய்கள் எல்லாம் எண்ணினாற்போல்! பால், பால் பொருட்கள் கூடாது. பிரச்னையே பால் பொருட்களினால் என்கிறார்கள். மோர்/ சூப், பருப்புக்கடைந்த நீர் மிளகு, ஜீரகம் சேர்த்து, க்ரீன் தேநீர் என்று தான் குடிக்கணும். இந்தக் கஷ்டம் போதாதுனு இப்போ மாப்பிள்ளை ஜாகிங் போகையிலே தடுக்கி விழுந்து வலக்கை மணிக்கட்டில் எலும்பு முறிவு. எட்டு வாரங்களுக்குக் கட்டுப் போட்டுக்கொண்டிருக்கணுமாம். நேற்று அந்தத் தகவல் வந்திருந்ததால் ராத்திரி அழைத்தோம். அவங்க மருத்துவமனையில். அதான் இப்போக் காலையில் (அவங்களுக்குச் செவ்வாய் இரவு) கூப்பிட்டாள். க்ணினியை ஷட் டவுன் கூடப் பண்ணாமல் போயிட்டேன்.

      நீக்கு
    5. அட ஆண்டவா... இது என்ன புது பிரச்சனை? விரைவில் சரியாகப் ப்ரார்த்திக்கிறேன்

      நீக்கு
    6. புதுசெல்லாம் இல்லை. ஆரம்பத்தில் பெண் கஷ்டப்படுவதைச் சொல்லிண்டு தான் இருந்தேன். பின்னாடி ரொம்பவே புலம்பலா இருக்கோனு நிறுத்திட்டேன். கடந்த மே மாதம் ஆரம்பிச்சது. அதிலிருந்து பத்து நாளைக்குள்ளாகச் சரியாகி இருக்க வேண்டியது நீண்டு கொண்டு போகிறது. இங்கே வரச் சொல்லிக் கூப்பிட்டோம். கொரோனா காலகட்டம். டிக்கெட் விலை எக்கச்சக்கம் என்பதால் வர முடியலை. பெரிய பெண் வேறே கல்லூரிப் படிப்பு! நாங்களும் போக முடியலை. அதே கொரோனா. பயணச்சீட்டு விலை மிக மிக அதிகம்.அதோடு நானும் 3 மாசத்துக்கும் மேல் படுத்துட்டேன். :(

      நீக்கு
    7. எல்லோரும் விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்.

      நீக்கு
  19. 4. சென்னை மாம்பலத்தில் நிச்சயதார்த்த மாலை டிபனில் போட்டு சதுர அல்வா. மூணு சாப்பிட்டேன் ஹிஹி

    நொந்து ஞானாம்பிகா-பாண்டிபஜார் அசோகா அல்வா சாப்பிட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) கருத்துரைக்கு நன்றி. (நொந்தது என்பது நொந்து ஆகிவிட்டதா?)

      நீக்கு
  20. 1) எல்லா குடும்பங்களிலும், பெரும்பாலும் மாமியார் - மருமகள் பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால், மாமனார் - மாப்பிள்ளை பிரச்சனைகள் அந்த அளவுக்கு இருப்பதில்லையே - இது ஏன்?

    1. மாமனார் குடுமி மாமியார் கையில். மருமகன் குடுமி மருமகள் கையில். 2. மாமியாருக்கு ஒரு மாமியார் இல்லாததாலும் மருமகளுக்கு ஒரு மருமகள் இல்லாததாலும் தான். இருந்தால் மாமியார் மருமகள் ஆகிவிடுவார். அதே போல் மருமகள் மாமியார் ஆகி விடுவார்.

    2) இன்றைய இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் 'இதனுடைய' முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அவர்களை வளர்க்கவேண்டும் - என்று நீங்கள் நினைப்பது, எதை ?

    ஒன்றும் இல்லை. ஏதாவது சொல்லப்போய் மொக்கப்பட்டம் வாங்க வேண்டாம்.
     
    3) இன்றைய தேதியில், எந்த முன் தயாரிப்பும் இன்றி, நீங்கள் மீண்டும் இந்தக் காலத்து ஸ்கூல் ஃபைனல் பரீட்சை எழுதினால், எந்தெந்த பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும்?
      
    பரீட்சையே எழுத மாட்டேன். காரணம் ஸ்கூல் பைனல் என்பது பாடப் புத்தகங்களின் அடிப்படையில் தான். அல்லாது பொது அறிவு பரீட்சை இல்லை.

    4) சமீபத்தில் நீங்கள் ரசித்துச் சாப்பிட்ட உணவு / சிற்றுண்டி எது? எங்கே? வீட்டில் தயாரித்தது என்றால், நீங்கள் தயாரித்ததா? 

    சிரிக்காதீங்க. பாஸ்தா தான். வீட்டில்தான். பாஸ்தாவை வேக வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வோக்கில் கொஞ்சம் எண்ணெய்  விட்டு பச்சை பட்டாணி வதக்கி கொஞ்சம் knorr schezwan சாஸ், டொமட்டோ சாஸ் போட்டு பாஸ்தாவையும் போட்டு பிரட்டி எடுத்து  சாப்பிட்டேன். நன்றாக   இருந்தது.

    கடையில் பதர்ப்பேணிக்கு உண்டான இனிப்பு பூரி கிடைத்தது. 35ரூபாய்க்கு 5. வாங்கி கொஞ்சம் பால் சீனி போட்டு ஊறவைத்து சாப்பிட்டேன். divine

    5) இந்த வரிசையில், அடுத்த எண் எது? எப்படி?

    72,  (9 X 9)  - 9. 

    படக்கருத்துகள் 

    நான் வெளியிலே போறேன். நீ வேண்டாம்.

     கண்ணில் தூசி விழுந்திருச்சா?அம்மாவை காணாமா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரமான, விளக்கமான கருத்துரைக்கு நன்றி. 4 ரெஸிபி எழுதி அனுப்புங்கள். 5 சரி.

      நீக்கு
    2. இங்கே எங்க குடியிருப்பு வளாகத்தில் எங்க குடியிருப்புக்கு எதிரே இருக்கும் குடியிருப்புக்காரர்களின் முதல் பெண்ணுக்கு மாமியார்/அவருக்கு மாமியார்னு இன்னமும் இருக்காங்க. எல்லோரும் சேர்ந்தே இருக்காங்க. நடுவில் அந்தப் பெண் வேலை நிமித்தம் ஒரு ஆறு மாசம் சென்னை வந்தப்போ அந்தப் பெண்ணின் மாமியார்/மாமனார், தன் மாமியார்/மாமனாரைப் பார்த்துக்க வேண்டி "பெண்"களூரிலேயே தங்கிட்டாங்க. அந்தப் பெண்ணிற்குத் துணையாக (2வயசுப் பையர் இருப்பதால்) அவ்வப்போது இங்கே இருந்து இந்த மாமியும்/மாமாவும் போய்த் தங்கிட்டு வருவாங்க. மாப்பிள்ளை சனி.ஞாயிறு சென்னை வருவார் மனைவி/குழந்தையோடுஇருக்க. அங்கே அப்பா/அம்மாவும் வயசானவங்க, தாத்தா/பாட்டியையும் பார்த்துக்கணும் என்பதால் அவர் அங்கேயே இருந்தார்.

      நீக்கு
    3. இது போல இன்னும் 2,3 குடும்பங்கள் எனக்கு/எங்களுக்குத் தெரிஞ்சு இருக்கிறார்கள்.

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. கேள்விகள் நன்றாக இருக்கிறது.
    படங்களும் அதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் வாசகங்களும் அருமை.

    கேள்விகளுக்கு வரும் பதில்களை படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  23. அப்பாவுக்கும், கணவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரை சமாளிக்கும் சாமர்த்தியம் பெண்களுக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது.. பெண்களால உள்ளூர்ல ஓணான் பிடிக்க முடியாது.. ஆனால் உளுந்தூர்பேட்டைல ஒட்டகம் பிடிக்க முடியும்.

      நீக்கு
    2. எல்லாப் பெண்களும் சாமர்த்தியசாலி அல்ல. மாட்டிக் கொண்டு முழிக்கும் பெண்களும் உண்டு. அவதிப்படும்/பட்டுக்கொண்டிருக்கும் பெண்களும் உண்டு. சமாளிப்பவர்களும் உண்டு.

      நீக்கு
    3. நெல்லை பழமொழி சொன்னால் சரியாக சொல்லுங்கள். உளுந்தூர்பேட்டையில் ஏது ஒட்டகம்?ஓமானில் ஒட்டகம் பிடிக்க முடியும் என்று சொல்லுங்கள். நான் ஓமானில் இருந்திருப்பதால் கொஞ்சம் பொறுத்தமாக இருக்கும்.

      நீக்கு
  24. கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் டிஸ்டிங்ஷன் வாங்கி விடலாம்.
    வேறு ஏதாவது என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் வைத்துக் கொள்ளலாமா? Program எழுத தெரியாது. Word documentல் எப்படி ஃபார்மெட் பண்ணுவது? போன்ற கேள்விகள் கேட்டால், தூள் கிளப்பி விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அப்படியா! கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. இவங்க என்ன நினைக்கறாங்க ஸ்கூல் எக்ஸாம் பத்தி? பொது அறிவுக் கேள்விகள்தான் இருக்கும் என்றா? அல்லது இவங்க வீட்டுப் பசங்க எபி படிக்க மாட்டாங்கன்னு தைரியமா?

      நீக்கு
    3. @நெல்லை: ஹாஹாஹா! நாம் பாட்டுக்கு எழுதி விட்டோமே.. சயின்ஸ் எல்லாம் எழுத முடியுமா? என்று நினைத்தேன். நம் ஸ்கூல் சிலபஸ் பெரிதாக மாறவில்லை. அதுவும் ஸ்டேட் போர்டு நீர்த்துப் போய் கிடக்கிறது.படித்தவை பெரும்பாலும் நினைவில் இருக்கிறது. கெமிஸ்ட்ரியில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி எழுதி விடுவேன். மற்றபடி சரித்திரம், பூகோளமெல்லாம் மாறப்போகிறதா என்ன? தமிழ் இலக்கணத்தில் தேமா,புளிமா எல்லாம் நினைவில் இருக்கின்றன.

      நீக்கு
  25. நம்மை போர் என்றுதான் சொல்வார்கள் ஆனாலும் நம்முடைய பாரம்பரிய சிறப்பை சொல்ல வேண்டும்.
    சில விஷயங்களில் இளைஞர்கள் அலட்சியமாக இருப்பது போல் தெரிகிறது. காலப்போக்கில் அது சரியாகி விடும். பெரும்பாலும் தேளிவாகத்தான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் மனசுக்கு ஆறுதலான பதிலை பானுமதி கொடுக்கிறாங்க. ஆனாலும் பெரும்பாலானோர் அலட்சியமாகவே இருக்காங்க.

      நீக்கு
  26. இன்று காலையில் நான் செய்த கீரை மிளகூட்டலோடு வெண்டைக்காய் புளிப்பச்சடி. மாலையில் அக்கா பெண் செய்த அருமையான சால்னாவோடு சப்பாத்தி. சால்னா ரெசிபி எ.பி.க்கு நான் எழுதி அனுப்புவதாக இருக்கிறேன். வேறு யாரும் எழுதக் கூடாது சொல்லிட்டேன் ஆமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரமாக எல்லாத்தையும் எழுதி அனுப்பி விடுங்க.

      நீக்கு
    2. நினைத்தேன்... ரெண்டு வருஷம் முன்னால் பரோட்டா ரெசிப்பி போடும் போதே சால்னா ரெசிப்பி மெதுவாகத்தான் வரும்னு ஹாஹா

      நீக்கு
    3. நான் சால்னாவெல்லாம் எழுத மாட்டேன். நிச்சயமாச் சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு சால்னாவென்றால் என்னவென்றே தெரியாது. பார்த்ததும் இல்லை/சாப்பிட்டதும் இல்லை.

      @அது சரி நெல்லை, பரோட்டா எனில் இல்லை இல்லை BHUபுரோட்டா எனில் சால்னா தானா>
      உண்மையான பராட்டா/பராந்தாவுக்கு ஆலு மட்டர், கடாய் பனீர், மடர் பனீர், பனீர் பாலக் தால் மகானினு எதை வேணாலும் தொட்டுக்கலாம்.

      நீக்கு
  27. படம் 1. அம்மா கூப்புடுறாங்க பாரு

    படம் 2. குப்பையை கிளறும் பொழுது கண்ணில் தூசி விழுந்துட்டதா?

    படம் 3. வாங்க மகா ராணி..

    பதிலளிநீக்கு
  28. நேற்று கருத்து கூற முடியாததால் இன்று எழுதுகிறேன். துரை செல்வராசு அவர்களின் கதை மூன்று வாரங்கள் தான் படித்தேன். எனக்கு அமானுஷ்யம், பாம்பு போன்ற விஷயங்களில் கொஞ்சம் பயம், அதனால் தொடரவில்லை. படித்தவரை புதிய களத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயும் கூறலாம். பதிவு வெளியான 6 நாட்கள் வரை கருத்துரைகளை வெளியிட தடங்கல் ஏதும் இல்லை. அதற்குப் பின் பதியப்படும் கருத்துகளுக்கு அப்ரூவல் வேண்டியது இருக்கும்.

      நீக்கு
    2. முன்னாடியே சொன்னீங்க. நீங்க பார்க்கும் படங்களில் இல்லாத பயங்கரங்களா இதில் இருக்கும்? என்னமோ போங்க! எனக்கென்னமோ அமானுஷ்யம், ஆவி, பேய், குட்டிச்சாத்தான் இதிலே எல்லாம் ஆர்வம் அதிகம். இதுக்காகவே என்டமூரியின் நாவல்களை விரும்பிப் படிச்சிருக்கேன். அதிலும் "துளசிதளம்" "மீண்டும் துளசி" இரண்டுமே!

      நீக்கு
  29. 1) விட்டுக் கொடுப்பது (கால்கள் போல) இருந்தால், யார் - யாரிடமும் பிரச்சனை வராது...

    4) எதையும் ரசிக்காமல் ரசனையுடன் சாப்பிடுவதால் பிரச்சனையில்லை...!

    2*) + 3) = 5

    * திருக்குறள் கணக்கியல்...

    பதிலளிநீக்கு
  30. காற்றினிலே..
    குறுந் தொடரின் நிறைவுப் பகுதிக்கு வந்த கருத்துரைகள் பலவற்றிற்கும் பதில் அளித்திருக்கின்றேன்..

    ஒரு சிலவற்றுக்கான விளக்கங்கள் தஞ்சையம்பதியில் வெளியாகும்..

    அனைவரது அன்பினுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  31. கேள்விகள் அதற்கான பலரின் பதில்கள் என சிறக்கிறது
    ஒரு நாளுக்கு 3_4 மணி நேரம் மின்சாரம் கட் இரவிலும் உண்டு.:(.

    பதிலளிநீக்கு
  32. ஆனால், மாமனார் - மாப்பிள்ளை பிரச்சனைகள் அந்த அளவுக்கு இருப்பதில்லையே - இது ஏன்?//

    உண்டு! இதனால் பெண்களுக்கு அவஸ்தைகளும் வரும் தான் ஒரு சிலர் சமாளித்துக் கடந்துவிடுகிறார்கள். சிலர் கஷப்படுவார்கள்

    2) என் பிறந்தவீட்டிலேயே கூட எதுவும் எங்களுக்குச் சொன்னதில்லை. பெரிய கூட்டுக் குடும்பம். இப்படித்தான் என்றெல்லாம் எதுவும் சொன்னதில்லை. வளர்த்தவிதம் படிப்பு படிப்பு படிப்பு...வீட்டு வேலை வீட்டு வேலை.....அதுவும் பெண்கள் வீட்டு வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும் படித்து வேலைக்குச் சென்று தங்கள் காலில் நிற்க வேண்டும். வேறு எதுவும் போதித்ததில்லை. நாங்களாகப் பார்த்து ஓ இப்படிச் செய்வார்கள் போலும் என்று தெரிந்து கொண்டது. அப்பாவின் அம்மாவும் கூட தான் பின்பற்றினாலும் சொல்லிக் கொடுத்ததில்லை ஆனால் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். சிறு வயதில் சில ஸ்லோகங்கள் அவ்வளவே. புகுந்த வீட்டில் பழக்கவழக்கங்கள் உண்டு. சொல்லிக் கொடுத்தாங்க. இப்படிச் செய்வாங்க என்றெல்லாம்.

    எனக்குச் சிறு வயதுப் பழக்கம் இல்லாததால் என் மகனுக்கும் நான் சொல்லிக் கொடுத்ததில்லை. பார்த்துத் தெரிந்து கொண்டதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்ணை அண்டி இருக்கும் தகப்பனார்கள் மாப்பிள்ளைகளிடம் படும் பாடு! சொல்லவே முடியாது! இதைப் பற்றி வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை போலும். :(

      நீக்கு
  33. கணக்கு தவிர மற்றது கோடிட்ட இடம் நிரப்புக, மேச் த ஃபாலோயிங்க், ஒரு மார்க் 2 மார்க் ஓகே...என்றாலும் இப்போதைய சிலபஸே வேற நான் அறிந்தவரையில். எனவே நான் கண்டிப்பாக எதிலும் பாஸாக மாட்டேன். படிச்சாலே பாஸாவது கஷ்டம் எனக்கு!!! அப்படியிருக்க முன் தயாரிப்பு இல்லாம ஹிஹிஹி..நோ சான்ஸ்! ஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  34. 4) வெளிச்சாப்பாடு நஹின். பீச் சுண்டல்!! அதாங்க நிலக்கடலை வேக வைத்து காய் போட்டு சலாட்!

    5) ஆ !! எக்ஸாம் டைம் ஓவர் ஆயிடுச்சே பெல் அடிச்சுட்டாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  35. வாசகர் கேள்விகள் இல்லாத வாரம்! கேட்டுக் கேட்டு வாங்க வேண்டியதாகி விட்டதோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!