வியாழன், 24 பிப்ரவரி, 2022

ப்ளீஸ்... கொஞ்சம் காது கொடுங்க...

 சில வயதானவர்கள் மற்றவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார்,  என்னை விட இளையவர்.  ஆனால் எனக்கு 'மேலே' இருப்பவர்!  அவர் தான் சொன்னதை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று விரும்புகிறாரே தவிர, மற்றவர்கள் பேசுவதற்கு காது கொடுக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

இவர்தான் நான் சந்தித்த உச்சபட்ச 'காது கொடுக்காதவர்'. இவர், தான் மிகவும் கலகலப்பாக பேசுவதாக நினைத்துக் கொள்பவர்.  ஆனால் ஒரு சதவிகிதம் கூட நீங்கள் சொல்லும் எதையும் காதில் வாங்க மாட்டார்.  காதில் வாங்கினால்தானே மனதில் வாங்க?

இன்று பேசியதையே மறுநாளும் வந்து முதலிலிருந்து ஆரம்பிப்பார்.  தான் செய்யவேண்டும் என்று நினைக்கும் செயல்களுக்கு அடுத்தவர் அபிப்ராயத்தைக் கேட்டுக்கொண்டே ஆனால் அதை மதிக்காமல் தான் நினைத்ததையே  செய்பவர்.  அபிப்ராயம் கேட்கிறார் என்று சொல்லமுடியாது.  அறிவிக்கிறார் என்று சொல்லலாம்!

எதிரியில்லை, பழகியவர் என்பதால் அவ்வப்போது கிளர்ந்து எழும் கோபத்தை காட்ட முடியாமல், அடக்க முடியாமல் திண்டாடுகிறேன்,  சமயங்களில் என் அதிருப்தியைக் காட்டியும் இருக்கிறேன்.

முக்கியமான விஷயத்தை சொல்லிக் கொண்டிருப்போம்.  அதை கவனிப்பது போல் தலையாட்டிக்கொண்டு ஆனால் கவனிக்காமல், நாம் பாதி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே  தான் பேச வந்தததை பேச ஆரம்பிப்பவரை என்னவென்று சொல்ல?  சரி,அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம் என்றால் அதிலும் கவனமில்லாமல் அடுத்த விஷயத்துக்கு தாவுகிறார் அல்லது, தான் எதிர்பார்த்த பதிலை தானே சொல்லிக் கொள்கிறார்.  நாமோ அதற்கு முற்றிலும் எதிராக சொல்லிக் கொண்டிருப்போம்.

சாதாரண விஷயங்களுக்கு இப்படி நடப்பதை மதிக்காமல் .சென்று விடலாம்.  முக்கியமான விஷயங்களிலும், நீண்ட கால நடைமுறைகளை. மாற்ற சாத்தியமில்லாததை மாற்றுவதாய் சொல்லிக்கொண்டு குழப்புவதையும் பொறுக்க முடியவில்லை!

முதல்நாள் நாம் சொன்னது எதுவும் மனதில் வாங்காமல் மறுநாள் அதிலேயே கேள்வி கேட்பது..  இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலையோ..

கடவுளே..  எனக்கு பொறுமையைக் கொடு..!

======================================================================================================

வாழ்க்கை என்னும் ஓ(ட்)டம் 

அருகில் வருவதும் 
விலகி தூரம் காட்டுவதுமாய்  
அவஸ்தைப்படுத்துகிறது அது 

பின்னால் துரத்தி வரும் அது 
என்னை பிடித்துவிடப் போகிறது 
என்று ஓடிக் கொண்டிருக்கிறேன் 

பக்கம் வந்துவிட்டதா என்று 
திரும்பிப் பார்த்து 
காலங்களை வீண் செய்தபடி 
இரைக்க ஓடுகிறேன் 

என்னை முந்திச் சென்றதா 
இல்லை முன்னாலும் ஒன்று 
ஓடிக் கொண்டிருந்ததா 
தெரியவில்லை 
சிலர் பிடிபட்டுவிட்டார்கள் 
பிடிபடாமல்  
இன்னும் சிலர் 
ஓடிக்கொண்டிருக்கிறார்கள் 

சமயங்களில் இணையாக 
கூடவே வருகிறது 

தவிர்க்க முடியாது என்று 
தெரிந்தாலும் 
ஓட்டத்தை ஏனோ என்னால் 
நிறுத்த முடியவில்லை 
அது 
என் கட்டுப்பாட்டிலும் 
இல்லை.

பழகி விட்ட இந்த 
ஓட்டத்தில் நிதானம் 
நின்று விட்டால் பதட்டம் 

======================================================================================================

பழைய புத்தகத்திலிருந்து இந்த படத்தை எடுத்து பேஸ்புக்கில் இப்படி எழுதி பகிர்ந்திருந்தேன்.




எத்தனை விதமாக டயலாக் எழுதலாம்?

"அங்கேயே நில்லும்மா...  மாஸ்க் போடாம ஏன் வந்தே?"

"தள்ளிப்போம்மா...   அந்த சென்ட் வாசனை எனக்கு அலர்ஜியா இருக்கு"

"ஆபீஸ்ல வந்தெல்லாம் அழக்கூடாதும்மா...   அப்பா பார்த்துக்கறேன்...  நீ வீட்டுக்குப் போ.."

"தெரியாம சொல்லிட்டேன்...   அதால எல்லாம் அடிக்கக் கூடாது...  அதைக் கீழே கால்ல போடு.."

"கேட்கற கேள்விக்கு அங்கே இருந்தே பதில் சொல்லும்மா..."

அதற்கு நண்பர்கள் கமெண்ட்டில் அளித்த பதில்கள் பின்வருமாறு...!



=============================================================================================================

ஏதோ ஒரு புத்தகத்தில் வெளியானதை தினமலரில் எடுத்து 'சொல்கிறார்கள்' என்று வெளியிடுவார்கள்.  அந்த வகையில் வெளியானது இது...  "டாக்டர்" கே ஆர் விஜயா!


நடிகை கே.ஆர்.விஜயா: 

"இந்த கொரோனா நேரத்துல இருமல், தும்மல்ன்னு வந்தாலே நாமெல்லாம் கொஞ்சம் பயந்துடுறோம். அது மட்டும் இல்ல; நம்ம பக்கத்துல இருக்கிறவங்க யாராவது ஒருமுறை தும்மினாலோ, இருமினாலோ கூட, கொரோனாவா இருக்குமோன்ற பயமும் நிச்சயமா எல்லாருக்குமே மனசுல தோணுது.

சாதாரண இருமலுக்கு மட்டுமல்ல, தொண்டை கரகரப்பா இருக்குன்னா, அது உடனே, 'கன்ட்ரோல்' ஆகறதுக்கு வெற்றிலையில், மிளகு வைத்து சாப்பிட்டால், ரொம்ப நல்லது. 10 மிளகை சாப்பிட்டு பகைவர் வீட்டுக்கு கூட போய் சாப்பிடலாம்னு சொல்வாங்க. மிளகுக்கு அத்தனை, 'பவர்' இருக்கு. வெற்றி லையுடன், மிளகை சாப்பிடும் போது, வெற்றிலையின் நன்மைகளும் சேரும்.சாதாரணமாக கூட இதை தாராளமா எடுத்துக்கலாம்.சிறு வயதில் கேரளாவின், திருச்சூர்ல இருந்த சமயம், எங்க வீட்டு தோட்டத்தில் இருந்த மரங்கள் நடுவே கண்ணாமூச்சி விளையாடுறது வழக்கம். எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு பெரிய பாறை இருக்கும். அது பின்னாடி
ஒளிஞ்சிப்போம்.

சில நேரங்களில், 'லவுட் ஸ்பீக்கரில்' பாட்டுகள் போடும் போது, அந்த பாறை மேல நின்னு 'ஸ்டேஜ்' மாதிரி நினைச்சுக்கிட்டு பரதநாட்டியம் 'டான்சர்' மாதிரி அபிநயம் பண்றதுன்னு, எங்களுடைய குழந்தைப் பருவம் அவ்வளவு ஜாலியா இருந்தது. ஆனா, இன்னிக்கு குழந்தைகள் எல்லாரும் 'மொபைல் போன், லேப் டாப்'ன்னு உட்கார்ந்த இடத்திலிருந்து எல்லாத்தையுமே செய்றதால ஆரோக்கியம் பாதிக்கப்படுது.

முக்கியமா, நிறைய பேர் ரொம்ப 'டல்'லா இருக்காங்க. இதுக்கு முக்கிய காரணம், இரும்புச் சத்து குறைவான உணவை சாப்பிடுவதுன்னு நினைக்கிறேன். அதனால, சாப்பிடும் உணவு சத்து நிறைந்ததா இருக்கான்னு சரிபார்த்து சாப்பிடறது நல்லது.குறிப்பா பெண்களும், வளரும் குழந்தைகளும், சிறு தானிய வகைகளில் ஒன்றான, கம்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இரும்புச் சத்து பூரணமா கிடைக்கறதுக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது கம்பு அடை செய்தும் சாப்பிடலாம். அதை நம் ருசிக்கு ஏற்றார் போல், முருங்கை கீரை, வெல்லம் சேர்த்து நம் சுவைக்கு தகுந்த மாதிரி சுடச்சுட கம்பு அடை செய்து சாப்பிடும் போது மனதிற்கும் சந்தோஷமாகவும், உடம்பிற்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இரும்புச் சத்துடன் புரோட்டின் கலந்த உணவும் சாப்பிடுவது நல்லது. கொரோனாவால பாதிக்கப்பட்டவங்களுக்கு உடலில் புரோட்டின் குறையறதா சொல்றாங்க; சுண்டல் சாப்பிடலாம். வாயு பிடிக்காமல் இருக்க, இஞ்சி, பூண்டு சேர்த்து சாப்பிடுறது நல்லது".
=================================================================================================

ஜோக்ஸ்....!






இரண்டு சிரிப்புகள் இரட்டையாய் இணைந்துள்ளன...!

=========================================================================================================

இந்த வார ரசனையான படம்...   சென்ற வாரம் இருந்த அதே பாட்டி அல்ல (என்று நினைக்கிறேன்!)  இந்தப் படம் பார்த்ததும் என்ன டயலாக் அல்லது என்ன சொல்லத் தோன்றுகிறது? 



163 கருத்துகள்:

  1. அல்ல்வை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் அனைவருக்கும்

    ஷோலாப்பூர் அருகிலிருந்து எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஷோலாப்பூர் தமிழரே!

      நீக்கு
    2. பண்டரிபுரமா? நன்கு நிதானமாக விட்டலனை தரிசனம் செய்யுங்கள். வரச்சே ஷோலாப்பூர் சால்வை/போர்வை/புடைவைகள்/பெண்களுக்கான சல்வார் உடைகள் என வாங்குங்க. அங்கே பக்கத்திலேயே சில/பல மைல் தூரத்தில் கோலாப்பூரும் இருப்பதால் வெல்லம் வாங்கலாம். அப்புறமாக் காய்ந்த திராக்ஷை மஹாராஷ்ட்ராவிலேயே மலிவாகக் கிடைக்கும். நாசிக் பக்கம் எனில் விலை மிகக் குறைவாக இருக்கும் என்றாலும் இங்கேயும் பரவாயில்லை. அது சரி! ஷிர்டி எல்லாம் உங்க பட்டியலில் உண்டா?

      நீக்கு
    3. வணக்கம் நெல்லை, வாங்க...

      ஷோலாப்பூர் ராஜா என்றொரு சிவாஜி பாடல் உண்டு..!  அங்கிருந்தும் கூட கடமை தவறாமல் எங்கள் பிளாக் படித்திருப்பதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு
    4. பயணத்தின் ஆரம்பத்திலேயே இதை எல்லாம் வாங்கி விட்டால் அவற்றையும் தூக்கிக் கொண்டு சுற்ற வேண்டுமே கீதா அக்கா...!

      நீக்கு
    5. எதுக்குத் தூக்கிக் கொண்டு அலையணும்? ரயில் அல்லது வேறே போக்குவரத்து சாதனத்தில் தானே போகப் போறார்? நடந்தேவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லாவற்றையும் பாக் பண்ணி சாமான்களோடு சேர்த்து வைச்சுடலாமே தங்குமிடத்தில்! அப்புறம் அங்கிருந்து கிளம்பறச்சே எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடரலாம். நாங்க பாரத் தர்ஷன் வண்டியில் போனதால் அந்த வண்டி ஸ்டேஷனிலேயே இருக்கும் என்பதால் அதிலே வைச்சுட்டு ஊரெல்லாம் சுத்தலாம். சுமக்க வேண்டாம்.

      நீக்கு
    6. அதோடு நெல்லையார் எல்லாம் முடிஞ்சு கிளம்பறச்சே வாங்கினால் போதும். :))))

      நீக்கு
    7. கோலாப்பூர் மஹால்க்ஷ்மி நிறைய செலவுக்குப் பணம் கொடுப்பாள்.
      அதனால அந்த கட்டம் போட்ட் பார்டர் போட்ட புடவைகள் எபி பெண்களுக்கு மட்டும்வாங்கி அனுப்பவும்.

      நீக்கு
    8. ஷோலாப்பூரில் இல்லையாமே.. இங்க இறங்கி கிர்ஜாப்பூர் போகணுமாம் .. யாரோ பேசிக்கறாங்க டிரெய்ன்ல

      இந்தத் தடவை விருந்தாவன்ல ரெண்டு மூணு துளசி மாலை, ஶ்ரீநாத் த்வாரகாவில் மட்டும் கிடைக்கும் zip போட்ட பை. அவ்வளவுதான் வாங்குவேன்

      நீக்கு
    9. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பண்டரிபுரத்திலேயே கிடைக்குமே!

      நீக்கு
    10. //பாக் பண்ணி சாமான்களோடு சேர்த்து வைச்சுடலாமே தங்குமிடத்தில்! அப்புறம் அங்கிருந்து கிளம்பறச்சே எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடரலாம்.//

      பழைய விளம்பரம் ஒன்று நினைவிருக்கிறதா கீதா அக்கா?

      "மூட்டை முடிச்சைக் குறையுங்கள்..
      வண்டிப்பயணம் சுகமாகும்.."

      நீக்கு
    11. //அதனால அந்த கட்டம் போட்ட் பார்டர் போட்ட புடவைகள் எபி பெண்களுக்கு மட்டும்வாங்கி அனுப்பவும்.//

      அப்போ ஆண்களுக்கு என்ன வாங்கித்தருவார்?

      நீக்கு
    12. //இந்தத் தடவை விருந்தாவன்ல ரெண்டு மூணு துளசி மாலை, ஶ்ரீநாத் த்வாரகாவில் மட்டும் கிடைக்கும் zip போட்ட பை. அவ்வளவுதான் வாங்குவேன்//

      கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டார்! ஆனால் பயங்கர வெயிட்டா இருக்கும் இல்லை அவை இரண்டும்!

      நீக்கு
    13. பண்டரீபுரம் வாய்ப்பு இன்னும் அமையலை. சின்ன வயசுலயே ஶ்ரீமகாபக்தவிஜயம் படித்துப் பரவசமடைந்திருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும்

      இப்போது பஞ்சத்வாரகா மற்றும் கோகுலம் சோம்நாத்-விராவல், ப்ரபாஸ், மதுரா, விருத்தாசலம், குருக்ஷேத்ரம். தில்லியிலிருந்து 5 இரவு புறப்பாடு

      நீக்கு
    14. விருந்தாவனை இந்த கூகுள் பயல் விருத்தாசலமா மாத்தியிருக்கான்

      நீக்கு
    15. அடடா! விட்டலனை விட்டுட்டுப் போறீங்களே! விராவல் ஸ்டேஷனில் (போனால்) நாற்றம் குடலைப் பிடுங்கும். அது இறால் பண்ணையோ என்னமோ வைச்சிருக்காங்க போல! கொஞ்ச நேரம் நிற்கக் கூட முடியாது. இப்போல்லாம் எப்படியோ! சோம்நாத் அங்கே கோயிலுக்கு வெளியே உள்ள லாக்கரில் நாமே நம் பொருட்களை வைத்துப் பூட்டிக் கொண்டு சாவியை எடுத்துக் கொண்டு தரிசனத்துக்குப் போகலாம். ப்ரபாஸப் பட்டினத்தில் கிருஷ்ணர் முக்தி அடைந்த இடத்தைப்பார்க்கையில் நம்மையும் அறியாமல் கண்ணீர் முட்டும்.

      நீக்கு
    16. தன்னடிச்சோதிக்கு எழுந்தது (மறைந்தது) விராவல்ல -வேடன் மான் அம்பு. அந்திமக் கிரியை பிரபாஸ் தீர்த்தத்தில்

      நீக்கு
    17. ஹிஹிஹி, வருடங்கள் ஆகிவிட்டதால் மறந்துட்டேன் போல! ஆனால் 2,3 முறை பார்த்திருக்கேனே! :)))) சமீபத்தில்னு எடுத்துக் கொண்டால் 2010 ஆம் ஆண்டு. அதுக்கப்புறமா ஓரிரு முறை குஜராத் போனாலும் அஹமதாபாதோடு சரி.

      நீக்கு
    18. ஆனால் அவை எல்லாம் சேர்த்துத் தானே ப்ரபாஸ க்ஷேத்திரம். அப்பாடா! ஒரு வழியா சமாளிச்சுட்டேன். :))))

      நீக்கு
  4. வீணை மீட்டும் கைகளில் ஏகே47ஆ

    காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீணை மீட்டும் !! -- ஹி ஹி அவங்க என்ன, வீணை தனம்மாள் என்று நினைத்தீர்களா?

      நீக்கு
    2. அது துப்பாக்கி வடிவில் இருக்கும் சாக்லேட்டோ!!

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம். ஸ்ரீராமின் அலுவலக டென்ஷன் புரிகிறது. அவருடைய அலுவலக சூழல் இதமாக மாற பிரார்த்திக்கிறேன்.
    கவிதை நன்றாக இருந்தாலும் எதை குறிக்கிறது என்று புரியவில்லை.
    ஜோக்ஸ் ஓகே!
    புதன் கிழமை தானே படம் பார்த்து கருத்து கேட்பீர்கள்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன் கிழமை நான் கேட்பேன். வியாழனில் அவர் கேட்பார்!!

      நீக்கு
    2. வாங்க பானு அக்கா..  வணக்கம்.   அலுவலக டென்ஷன் குறையாது.  அது அப்படியே தொடரும்.  கவிதை இந்த டென்ஷனை தான் குறிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்!  புதன் கிழமையில் கேஜிஜி படம் காட்டி கருத்து கேட்பார்.  வியாழனில் நான், வெள்ளியில் நீங்கள் படம் (காட்சி)  பார்க்க மட்டும் பார்ப்பீர்கள்! 

      நீக்கு
  6. பிறர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கும் வழக்கம் எனக்குப் பெரும்பாலும் இல்லை

    அதனால் ஶ்ரீராம் தனக்கு பொறுமையை வளர வைக்கும் சந்தர்ப்பங்களாக இவற்றை எடுத்துக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   இந்த விஷயத்தில் நான் தவறாகப் பேசிவிட்டால் மரியாதை இல்லாமல் பேசுகிறேன் என்றும் ஆகிவிடும்.  அவர் இது போன்ற ஓரிரு சந்தர்ப்பங்களில் முகத்தை ஓரிரு நாட்கள் தூக்கி வைத்துக் கொண்டிருப்பார்!  எனினும் என்னோடு பேசாமலே அவரால் இருக்க முடிந்ததில்லை!

      நீக்கு
    2. வெள்ளி என்றதும் நினைவுக்கு வருகிறது... தாண்டவம் படத்திலிருந்து 'ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடி..' பாடலை பகிரச் சொல்லி உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது கேட்டு விட்டேன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் என்றும்
    ஆரோக்கியம் குன்றாத வாழ்வு பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கியமான விஷயத்தை சொல்லிக் கொண்டிருப்போம். அதை கவனிப்பது போல் தலையாட்டிக்கொண்டு ஆனால் கவனிக்காமல், நாம் பாதி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தான் பேச வந்தததை பேச ஆரம்பிப்பவரை என்னவென்று சொல்ல? சரி,அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம் என்றால் அதிலும் கவனமில்லாமல் அடுத்த விஷயத்துக்கு தாவுகிறார் அல்லது, தான் எதிர்பார்த்த பதிலை தானே சொல்லிக் கொள்கிறார். நாமோ அதற்கு முற்றிலும் எதிராக சொல்லிக் கொண்டிருப்போம்.''

      நாம் தான் முட்டாள்.
      அந்த ஆளுக்கு வீட்டில் பிரச்சினை இருக்கலாம் ஸ்ரீராம்.

      பாவம் அவருக்கு மாடி காலி என்று பொறுத்து அனுதாபம் காட்டுங்கள்.
      வேற வழியே இல்லை. நல்ல காலம் பிறக்கட்டும்.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா... வணக்கம்.

      நீக்கு
    3. வேறு வழி இல்லை.  சிலகாலம் இப்படி குப்பை கொட்டி தான் ஆகவேண்டும்!  எனவே ஒருமுறை நாம் வெளியில் பகிர்ந்தால் கொஞ்சம் புன்னகைக்க முடியுமே என்று!

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இனி வரும் நாட்கள் அனைத்தும் பிரச்னைகள்/தொல்லைகள் இல்லாமல் அனைவரும் மன நிறைவுடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காலை/மாலை/மதிய வணக்கம்.// மதியம் - காலைக்கும் மாலைக்கும் இடையில் அல்லவா வரும்!!

      நீக்கு
    2. ஆமால்ல! அது என்னமோ காலை/மதியம்/மாலைனு வரதில்லை. காலை/மாலைனு எழுதினப்புறமா மதியம் நினைவுக்கு வரும். ஆகவே கடைசியில் சேர்ப்பேன். :))))

      நீக்கு
    3. என்ன, வரவர இதில் எல்லாம் கூட பிரச்னை!!!   வாங்க கீதா அக்கா.  பிரார்த்திப்போம்.  வணக்கம்.

      நீக்கு
  9. ஷோலாப்பூர் தமிழர் அங்கிருந்து எல்லோருக்கும்
    போர்வைகள் அனுப்புவாரா:)
    முன்பு அங்கிருந்து வரும்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நானும் சொல்ல நினைத்தேன்.

      நீக்கு
    2. அட! இது நல்லா இருக்கே! ஆனால் எங்க வீட்டில் நிறையவே இருக்கு! எல்லாமும் ஷோலாப்பூர் போர்வைகள் தான்.

      நீக்கு
    3. சென்னை வெயிலில் போர்வையா! எனக்கு தரமான தலையணைகள் எங்கே வாங்குவது என்று தெரிய வேண்டும். போர்வைகள் வேண்டாம்.

      நீக்கு
    4. தரமான தலையணைகளுக்குக் காதி பவன் செல்லுங்கள். நல்ல இலவம்பஞ்சுத் தலையணை/மெத்தைகள் கிடைக்கும். அப்போ இல்லைனாலும் நீங்க ஆர்டர் கொடுத்தால் தயாரித்து ஒரு மாதத்துக்குள்ளாகக் கொடுத்துடுவாங்க. கர்ட்டன்கள் வாங்குவதுனாலும் காதியில் வாங்கலாம்.

      நீக்கு
    5. நான் இருக்கிற இடத்துக்கு ஒரு போர்வை போதாது. ஒரு கம்பளி, ஒரு Rug,
      ஒரு கம்ஃபர்ட்டர் எல்லாம் வேணும்மா.

      நீக்கு
    6. ஹைபர் மார்கெட்டில் அல்லது ஆன்லைனில் வாங்குங்க ஶ்ரீராம். சாஃப்டா இருக்கும்

      நீக்கு
    7. காதி எல்லாம் முன்போல இருக்கிறதா என்று தெரியவில்லை.  அருகில் எங்கும் காதி கண்ணிலும் படவில்லை.  பார்க்கவேண்டும் கீதா அக்கா.

      நீக்கு
    8. ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய தலையணைகள் பத்து நாட்களில் அமுங்கி பல்லிளித்து விட்டன நெல்லை

      நீக்கு
    9. பொறுமை இல்லையோ? மாம்பலம் ரங்கநாதன் தெருவிலேயே ஒரு பெரிய காதி பண்டார் இருந்தது/இன்னமும் இருக்கலாம். அதை விட்டால் பாண்டி பஜாரில் உண்டு. எல்லாத்தையும் தாண்டினால் ஜார்ஜ் டவுனில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காதி பவன் மாடியும், கீழுமாக உண்டு. அங்கே போகலாம். சென்ட்ரல் பக்கம் ஈவ்னிங் பஜாரில் மத்திய அரசின் ஹான்ட்லூம் ஹவுஸ் உண்டு (அங்கே தான் சென்னையில் இருந்தவரை புடைவைகள் எடுப்பேன்.) அங்கே எல்லா மாநிலத்து பெட் கவர்கள், பெட் ஷீட்கள், தலையணை உறைகள் கிடைக்கும். கோ ஆப்டெக்ஸில் கேட்கவே வேண்டாம். இதற்கெனத் தனி செக்‌ஷனே இருக்கு. காதியிலேயே சரியாக் கிடைக்காது என்னும் எண்ணத்துடன் போனால் பார்த்தாலும் உங்களுக்குப் பிடிக்குமானு தெரியலை. :))))) எங்க பையர் நைஜீரியா வீட்டிற்குத் தேவையான கர்ட்டன்கள், போர்வைகள், சுவரில் மாட்டும் அலங்காரச் சித்திரங்கள் எல்லாம் இங்கே தெப்பக்குளம் அருகே இருக்கும் காதியில் தான் வாங்கிச் சென்றிருக்கிறார். 3 மாடிகள். கடைசி மாடி கைத்தறிப் புடைவைகள். அங்கேயும் நான் ஓரிரு புடைவைகள் எடுத்திருக்கேன். கர்ட்டன், சோஃபா கவர் எல்லாமும் கிடைக்கும். ரெடிமேட் ஷர்ட்டெல்லாம் பிரமாதமா இருக்கும். நாங்க இந்தப் பீத்தற இங்க்லான்டை எல்லாம் தேடிப் போவது என்பது பிள்ளை/மாப்பிள்ளை/சம்பந்தி/அண்ணா, தம்பிகளுக்காக மட்டுமே! மாமா காதியில் தான் வாங்குவார். பாத் டவல் மிகப் பெரிதாக நல்ல கதரில் கிடைக்கும்.வாங்கினால் குறைந்தது நான்கு வருஷம் வரும். காதி, கோ ஆப்டெக்ஸ் இதை எல்லாம் அலசிப் பார்த்துடுவோமுல்ல! :)))))))

      நீக்கு
    10. ஜார்ஜ் டவுனில் புஹாரிக்கு அப்புறமா, ராமகிருஷ்ணா பவனுக்குக் கொஞ்சம் முன்னாடி இருக்கோனு நினைக்கிறேன். சென்னையில் இருக்கிறச்சே போனது. பத்து வருஷங்களில் எத்தனை மாறி இருக்கோ!

      நீக்கு
    11. நானே கோ ஆப்டெக்ஸ் பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். விட்டுவிட்டேன். காதி மாம்பலத்தில் இருப்பது தெரியும். மற்ற இடங்கள் தெரியாது. ஆம், அங்கெல்லாம் அலைய பொறுமை இல்லைதான். ஆனால் அநியாயமாக எல்லா இடங்களும் நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    12. பலரும் இப்படித்தான் அரசு மூலம் குறைந்த விலையில் கிடைக்கும் விடுதிகள்/ஜவுளிக்கடைகள் எல்லாத்தையும் விட்டுட்டுத் தனியாரை நாடிச் செல்கின்றனர். ஆனால் சொல்லுவதும்/குறை கூறுவதும் என்னமோ அரசு தனியாருக்கு ஜால்ரா போடுகிறது என. கைத்தறி என்றாலே கோ ஆப்டெக்ஸ்/ஆப்கோ/காதி போன்றவை நினைவில் வரணும். ஹான்ட்லூம் ஹவுஸ் போனால் எல்லா மாநிலக் கைத்தறி/பட்டு எல்லாவற்றையும் பார்க்கலாம். கைவேலைகளுடன் கூடிய துணிகளுக்கு இம்மாதிரிக் கடைகள் தான் நம்பகத்துக்கு உரியவை.

      நீக்கு
  10. சொல்லுவதைக் காது கொடுத்துக் கேட்காத நபர் பற்றி ஶ்ரீராம் எழுதினதைப் படிக்கையிலேயே நெல்லை தான் நினைவில் வந்தார். ஹிஹிஹி! அவரே ஈங்கே எனக்கு முன்னாடியே வந்து அதை ஒத்துக்கொண்டும் விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பப் பொறுமையாக் கேட்டு என்ன செய்யப் போகிறோம்? ராக்கெட் விடற வேலையா? கவனப் பிசகு ஆபத்துன்றதுக்கு ஹாஹா

      நீக்கு
    2. ஹா..  ஹா..  ஹா...   ஆனால் கீதா அக்கா..  நான் பேசியவரை நெல்லை நான் பேசியதை எல்லாம் கவனமாகவே கேட்டார்!

      நீக்கு
    3. //ராக்கெட் விடற வேலையா? //

      மனஅமைதியுடன் வேலை பார்க்க வேண்டுமே....!

      நீக்கு
  11. துப்பாக்கி வைத்திருக்கும் பாட்டி. தற்காப்பா, போராளியா.
    பாவம் தான்.

    பதிலளிநீக்கு
  12. என் அப்பா மூணு அடி நீள மூங்கில் குச்சி வைத்திருப்பார் ஹெட்மாஸ்டரா இருந்தபோது (76) அப்போ அவர் ரூமிற்கு வரும் லேடீஸ் டீச்சர்களை அந்தக் குச்சியை நீட்டி அதற்கு அப்பால் நின்று சொல்லும்பார். கங்கா, யமுனா, இன்னொரு டீச்சர்-க்ராஃப்ட் டீச்சரா பெயர் நினைவில்லை. திருமணம் ஆகாதவங்க. எனக்கு க்ளாஸ் எடுப்பாங்க அந்த டீச்சர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைக்கிறேன்... ப்ராமின் எதிர்ப்பு அரசியல் அப்போது. ஆசிரியர்கள் கதைகட்டக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாம்

      நீக்கு
    2. தற்காத்துக் கொண்ட தலைமை ஆசிரியர்,.

      நீக்கு
    3. // ஹெட்மாஸ்டரா இருந்தபோது (76 ) //

      இப்படிப் போட்டால் தினமலர் பாஷையில் வயது என்று அர்த்தம்!  நீங்கள் சொல்லியிருப்பது வருடம் என்று நான் சரியாகவே புரிந்து கொண்டேன்!

      // கங்கா, யமுனா, இன்னொரு டீச்சர்-க்ராஃப்ட் டீச்சரா பெயர் நினைவில்லை //
      சரஸ்வதி?!!

      மகனும் அதே ஸ்கூலில் படிக்கிறானே(ரே) என்கிற எச்சரிக்கையும் இருக்கும்!!!

      நீக்கு
    4. எங்கப்பாட்ட சில குணங்கள் பார்த்திருக்கேன். அவை எனக்குக் கற்றுக் கொடுத்தது. பெண்கள் விஷயத்தில் பப்ளிக் இமேஜ் மெயின்டெய்ன் செய்வது அதில் ஒன்று

      நீக்கு
    5. தந்தையிடமிருந்து அவர் சொல்லித்தராமல் நமக்கு வரும் வழக்கங்கள் சில..  ஜீன்களாலேயே வரும் வழக்கங்கள் சில....

      நீக்கு
  13. ஶ்ரீராமைப் பார்க்க முடியலையேனு நினைச்சேன். அவருடைய வேலைப்பளு இன்னமும் அதிகமாக ஆகிறதே தவிரக் குறையற மாதிரித் தெரியலை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலை செய்யறவங்களுக்கு கூடுதல் வேலை. ஓபி அடிக்கறவங்களுக்கு கூடுதல் ரெஸ்ட் என்பது எழுதப்படாத விதி

      நீக்கு
    2. கீதா அக்கா...  எனவோ நாம் ஒன்று விட்டு ஒருநாள் காய்கறி வாங்கப் போகும்போது பார்த்துக் கொள்வது போல சொல்கிறீர்களே..!!!  ஹிஹிஹி...   நாந்தான் தினமும் வந்து ஒரு கமெண்ட்டாவது அட்டெண்டன்ஸ் போடுகிறேனே...!  ஆனால் அலுவலக டென்ஷன் மட்டுமின்றி வேறு சில விஷயங்களும் உண்டு.  என்ன செய்வது அந்தந்த நேரத்தில் அததை அனுபவித்துதானே ஆகவேண்டும்!  (தத்துவம் நம்பர் ****)

      நீக்கு
    3. // ஓபி அடிக்கறவங்களுக்கு கூடுதல் ரெஸ்ட் என்பது எழுதப்படாத விதி //

      'காதில் வாங்காதவர்' அந்த ரகம்தான்!

      நீக்கு
    4. அது என்னமோ இணையத்தில் சிநேகிதர்களுடைய எழுத்தைப் பார்க்கையில் அவங்களையே நேரில் பார்க்கிறாப்போல் இருக்கே! அதான் பார்க்கமுடியலைனு சொன்னேன். ஹிஹிஹி!

      நீக்கு
    5. நன்றி கீதா அக்கா..   கமலா அக்கவைத்துதான் காணோம்.  அவர் உடல்நிலை இன்னும் முற்றிலும் சரியாகவில்லை போல...

      நீக்கு
    6. ஆமாம். உங்களில் யாருக்கேனும் அவர் தொலைபேசி எண்/மெயில் ஐடி தெரிந்திருந்தால் விசாரிக்கலாம்.

      நீக்கு
    7. தொலைபேசி எண் கீதா ரெங்கன் அறிவாரோ என்னவோ...    மெயிலில் இன்று   விசாரித்திருக்கிறேன்.

      நீக்கு
  14. முகநூலிலும் அந்தப் படமும் அதற்கு வந்த கருத்துக்களையும் படிச்சேன். ஜோக்ஸ் எல்லாமும் ஏற்கெனவே பார்த்திருக்கேன். கே.ஆர்.விஜயா சொன்னதாக வந்திருப்பது திருச்சிப் பதிப்பு தினமலரில் எல்லாம் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ திருச்சி பதிப்பில் - எந்த நடிகை சொல்வதை போடுவாங்க!

      நீக்கு
    2. நல்லவேளையா அதெல்லாம் வரதில்லை. பேராசிரியர் நாகசாமி போன்றவர்களின் கட்டுரைகள் செவ்வாயன்று வந்து கொண்டிருந்தது. இப்போல்லாம் வரதில்லை. அவரே இல்லையே! ஆனாலும் ஏதேனும் பலனுள்ள தகவல்கள் ஒரு பக்கத்தில் கொடுப்பாங்க.

      நீக்கு
    3. //ஜோக்ஸ் எல்லாமும் ஏற்கெனவே பார்த்திருக்கேன்//

      குமுதமா, விகடனா?

      திருச்சி பதிப்பு தினமலர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.  வாரமாலரும்.  அதில்தான் ஜவர்லால் எழுதிய கட்டுரை, ரஞ்சனி அக்கா கதை எல்லாம் வெளியானது.

      இங்கு தினமலரில் பகிர்ந்து இருந்தாலும் இது வேறு பத்திரிகையில் வந்தததை திருடி எடுத்து போடுவார்கள்.  ஆனால் அந்தப் பத்திரிகைக்கு க்ரெடிட் தரமாட்டார்கள்.

      நீக்கு
    4. // ஏதேனும் பலனுள்ள தகவல்கள் ஒரு பக்கத்தில் கொடுப்பாங்க. //

      ஹிந்து தமிழ் (இணையதிசை)  அபப்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் சமஸ் வெளியேறியதாலா என்னவென்று தெரியவில்லை, இப்போது மகாமோசம்.  Bore!  செய்திகளையே சுவாரஸ்யமாக தருவதில்லை.

      நீக்கு
    5. தினமலர் வாரமலர்/பெண்கள் மலர்/சிறுவர் மலர்/ ஆன்மிக மலர் எனப் புத்தகங்களாக வந்து கொண்டிருந்ததை நிறுத்திட்டுக் கடைசி 3 பக்கங்களை அந்தந்த நாட்களுக்கு உரிய மலராக அறிவித்து விடுகிறார்கள்.

      நீக்கு
    6. இங்கு அந்த புத்தகங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது இன்னமும்.

      நீக்கு
  15. உணவு அட்வைஸ் பண்ணறவங்க யாராவது அதைக் கடைபிடிக்கறாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி -- attica gold company விளம்பரங்களில் வருகின்ற தமன்னா அங்கே, தான் அடகு வைத்த நகைகளை மீட்க அப்ளிகேஷன் கொடுப்பாரா!!

      நீக்கு
    2. // உணவு அட்வைஸ் பண்ணறவங்க யாராவது அதைக் கடைபிடிக்கறாங்களா? //

      மற்றவர்களுக்கு சொல்லி தங்கள் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். பொதுவாக விளம்பரங்கள் பார்த்து நான் எதுவுமே வாங்கியதில்லை.

      நீக்கு
    3. அவளைப் பிடிக்காம போனதற்கு அந்த விளம்பரமும் ஒரு காரணம். அது வந்தாலே சேனல் மாத்திடுவேன் (இன்னொண்ணு அப்பாஸ் மாதிரி விளம்பரங்கள்)

      நீக்கு
    4. ஹா.. ஹா.. ஹா...


      பிடித்த விளம்பரங்கள், கடுப்பேற்றும் விளம்பரங்கள் என்று எழுதி ஒன்று பாதியில் நிற்கிறது!

      நீக்கு
  16. துப்பாக்கி வைச்சிருக்கும் பாட்டியின் வெறுப்பு அனைத்தும் முகபாவத்தில் வெளிப்பட்டிருக்கிறது. என்ன காரணமோ? துப்பாக்கியும் கையுமாக இந்த வயசில்! பாவம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசையை அழுத்தவே அந்த விரல்களுக்கு தெம்பிருக்காது போல...  கொப்பளிக்கிறது முகத்தில் வெறுப்பும் கோபமும்..

      நீக்கு
  17. கடைசி படத்திற்கு என்னுடைய கமெண்ட் : " இது என்னடா - இந்த கொசு அடிக்கிற பேட் இவ்வளவு கனமா இருக்கு? நேத்து இருந்த பேட் எங்கே போச்சு! "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்னடா - இந்த கொசு அடிக்கிற பேட் இவ்வளவு கனமா இருக்கு? நேத்து இருந்த பேட் எங்கே போச்சு!// ஹாஹாஹா!

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. வாழ்க்கை பற்றிய கவிதை வாழ்வின் யதார்த்தத்தைச் சொன்னாலும் எல்லோரும் மகிழ்ச்சியைத் தேடி ஓடுவதையும் அது கிடைக்காததால் அதைத் துரத்திக் கொண்டு செல்கிறார்களோ எனவும் நினைக்கத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் யாரைத் துரத்துகிறார்கள் என்பதை பற்றியே தனிக்கவிதை எழுதலாம்!  சந்தோஷம் கிடைக்கும்போது அதை நினைபப்தில்லை நாம்.  அதன் தற்காலிகம் மட்டும் மனதில் நிற்கிறது!

      நீக்கு
  20. பேசுவதை விட கேட்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
    காது கொடுங்க என்ற தலைப்பு அருமை.

    காது கொடுத்து கேட்காதவர்களிடமிருந்து கடவுள் காப்பாற்றத்தான் வேண்டும், வேறு வழி இல்லை. பொறுமையும், நம்பிக்கையும் வையுங்கள். சரியாக்கிவிடுவார் இறைவன்.

    கவிதை மிக அருமை.

    //பழகி விட்ட இந்த
    ஓட்டத்தில் நிதானம்
    நின்று விட்டால் பதட்டம் //

    வாழ்க்கை ஓடி கொண்டு இருந்தால் தான் நல்லது.
    நின்று விட்டால் நீங்கள் சொல்வதுதான் நடக்கும்.

    தினமலர் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  21. //பழைய புத்தகத்திலிருந்து இந்த படத்தை எடுத்து பேஸ்புக்கில் இப்படி எழுதி பகிர்ந்திருந்தேன்.//

    அதற்கு வந்த வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    நகைச்சுவை பகிர்வுகளும்அருமை.

    கடைசி படம் தேவை பட்டால் ஆயுதம் தாங்குவேன் என்கிறார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராமின் கவிதை கனவு போல இருக்கிறது.
      ஓடிக் களைக்கும் போது ஒன்று சேரும் எல்லாம்.
      வாழ்த்துகள் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. மதன் படம் ஹைய்யோ. ஒற்றைக் கண் மனிதனா!!!!!!!:))))))

      நீக்கு
    3. (1)  இந்த வயதிலும் என்னை ஆயுதம் தூக்க வச்சுட்டீங்களேடா..   

      (2)  என் பேரனுக்கு எதிரா நானே ஆயுதம் தூக்கும் நிலை வந்து விட்டதே...

      சும்மா எனக்குத் தோன்றிய இரண்டு வசனங்கள் கோமதி அக்கா.

      நீக்கு
    4. ஒன்று சேரும் நேரம் எல்லாம் சென்று விடுமோ என்கிற பயம்தானே ஓடவைக்கிறது அம்மா?!!  (கொஞ்சம் குழப்பி வைப்போமே!!)

      நீக்கு
    5. // மதன் படம் ஹைய்யோ. ஒற்றைக் கண் மனிதனா!!!!!!!:)))))) //

      ஆனால் காது மட்டும் இரண்டு!

      நீக்கு
    6. அது சரி. யாருமே தனித்தனியாக ஜூஸ் குடிக்கும் இரண்டு தலை மனிதனைப் பார்க்கலை போல! :)))))

      நீக்கு
    7. எனக்கு அஞ்சான் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
  22. இரட்டைக் கார்ட்டூனும் சிறப்பு. :)
    அனைத்துப் பகுதிகளும் பதமாக வந்த பதிவு. பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஸ்ரீறாஆம்.

    பதிலளிநீக்கு
  23. கே ஆர் விஜயா இன்னும் கருத்து சொல்கிறாரா.
    நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரிடம் கருத்து கேட்பவர்கள் இன்னமும் இருக்காங்களா?

      நீக்கு
    2. அம்மா...   யாரோ வேலைமெனக்கெட்டு அவரிடம் சென்று கேட்டிருக்கிறார்கள்.  மேட்டர் கிடைக்காத நிருபர்!

      நெல்லை...   யாரும் கேட்கவில்லை என்பதால்தான் இங்கும் பகிரப்பட்டிருக்கிறது!  இன்று இந்த 'கேட்காத' பிரச்னை பெரிய பிரச்னையாக இருக்கும் போலவே...!!!!

      நீக்கு
  24. அவர் காது கேட்காதவராக இருக்கலாம். அவர்கள் தான் ஒரு வார்த்தையை மட்டும் கேட்டுவிட்டு  அதைப்பற்றியே பேசுவார்கள். அது முக்கியமான வார்த்தை ஆக இருக்காது. நான் இது போல் சம்பந்தம் இல்லாமல் பேசியது உண்டு. எனக்கு காது கேட்காது. ஆனால் மற்றவர் குறிப்பால் சைகையால் பொருளை காட்டும்போது சரியான தடத்திற்கு வந்து விடுவேன். அல்லது டிரம்ப் அண்ணாச்சி போலவும் இருக்கலாம். டிரம்ப் அண்ணாச்சி போன்றவர்கள் யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு எல்லாம் தெரியும் ஏன் என்றால் நான் தலைவன் என்ற நம்பிக்கை உடையவர்கள்.

    நீங்கள்  மட்டும் ஓடுவதைப்பற்றி சொல்லும்போது (கவிதை) இடையில் ஏன் இந்த வரிகள்?

    சிலர் பிடிபட்டுவிட்டார்கள் 
    பிடிபடாமல்  இன்னும் சிலர் 
    ஓடிக்கொண்டிருக்கிறார்கள் //


    வாழ்க்கை என்பதும் காலமே.
    கால ஓட்டம் நிற்பதில்லை 
    கூடவே ஓடுவதையும் 
    தவிர்க்க முடியவில்லை. 
    ஆடும் வரை ஆட்டம் 
    ஓடும் வரை ஓட்டம். 
    வாழ்க்கை எனும் ஓடம்
    வழங்குகின்ற பாடம்
    மறக்க ஒண்ணா வேதம்

    வேலைப்பளு ஜோக் நீங்களே உங்களைக் கேலி செய்வது போன்று எனக்கு தோன்றியது. 

    இப்போது இருக்கும் ஹிஜாப் தர்க்கத்தில் பாட்டி கதையில் ஏ கே 47 போன்ற போட்டோக்கள் அவசியம் தானா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அனுமானம்... மனதில் வயதாகிவிட்டவர்கள் கடுமையான காது பிரச்சனை உள்ள வயதானவர்கள் தங்கள் உலகத்தில் துரதிருஷ்ட வசமாகத் தங்கிவிடுவதால் கிளிப்பிள்ளையா ஆயிடறாங்க பாவம்

      நீக்கு
    2. இல்லை JC ஸார்..  அவர் காது கேட்காதவர் இல்லை.  என் அம்மாவிடமும், என் மாமியாரிடமும் காது கேட்காத அவர்கள் அனுபவத்திப் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு.

      // வேலைப்பளு ஜோக் நீங்களே உங்களைக் கேலி செய்வது போன்று எனக்கு தோன்றியது //
      ஹா..  ஹா..  ஹா...   தற்செயலாகக் ஆகியில் இந்த வாரம் அதுதான் கிடைத்தது.  அதுதான்!

      ஹிஜாப் தர்க்கம் உண்டாக்கப்பட்ட ஒன்று.  அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.  இது பொழுதுபோக்கு தளம்.

      நீக்கு
    3. அருமை ஜெயக்குமார் ஸார்.

      (வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை இங்கே இ.பி.ன்னு ஒண்ணு இருக்கு.
      ஞாபகம் இருக்கில்லையோ?)

      நீக்கு
  25. கதையில் என்பதை கையில் என்று திருத்தி கொள்ளவும். 

    பதிலளிநீக்கு
  26. // விருந்தாவனை இந்த கூகுள் பயல் விருத்தாசலமா மாத்தியிருக்கான்..//

    வட பாரத சுற்றுலாவுக்குள் எங்கேயிருந்து கிழமலை/ பழமலை (விருத்தாசலம்) வந்தது என்று நினைத்தேன்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :>))


      கூகுள் பயல் நம் விருத்தாந்தங்களை அலசி ஆராய்ந்து கையில் வைத்துக்கொண்டு அதற்குத்தக்கவாறு மாற்றி விடுகிறான்.  

      "தமிழ்நாட்டுக்காரராச்சே..  இவருக்கு எதற்கு விருந்தாவன்?  விருத்தாச்சலமாயிருக்கட்டும்!"

      நீக்கு
    2. காலை 5;30 க்கு இந்தப் பதிவைப் படித்ததும் தலை சுற்றல்..

      எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்களுக்கு மத்தியில் நாம் வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றோம்!..-என்று..

      நீக்கு
    3. நன்றி. ஆயினும் நீங்கள் சொல்லுமளவுக்கு இன்றைய பதிவில் ஒன்றுமில்லை. உங்கள் ஆன்மீக பதிவுகளை பார்க்கும்போது எனக்கும் இப்படித் தோன்றும்.

      நீக்கு
  27. // பிடிபடாமல் இன்னும் சிலர்
    ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் //

    அவங்க யாரு..ன்னு இன்னும் தெரியலை...

    பதிலளிநீக்கு
  28. இன்றைய பதிவும் நன்று.

    எதையும் கேட்காத மனிதர் - சிலர் இப்படித்தான். ஒன்றும் செய்வதற்கில்லை!

    பதிலளிநீக்கு
  29. சிலர் அதிகாரம் இருப்பதால் இப்படியே பேசுவார்கள்.

    ஓர்தினம் பதவி இல்லாமல் போகும் போது உலகம் புரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதவி இல்லாவிட்டாலும் இவர்களால் இவர்களை மாற்றிக்கொள்ள முடியாது ஜி.  அதற்கு முன்னரே அவர் அப்படிதான் இருந்தார்!

      நீக்கு
  30. ஸ்ரீராம் உங்கள் கஷ்டம் புரிகிறது. முக்கியமானது இல்லை என்றால் தவிர்த்திடலாம் நீங்கள் சொல்லியிருப்பது போல்.

    முக்கியமான விஷயங்களில் ஒருவர் பேசும் போது லிசனிங்க்/கவனித்துக் கேட்பது மிக மிக முக்கியம். இல்லை என்றால் தவறான முடிவுகள் அலல்து தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்.

    இது ஒரு கலை. அலுவலக விஷயங்களுக்கும் சரி வீட்டில் முக்கியமான விஷயங்களுக்கும் சரி முழுவதும் கேட்ட பிறகு தான் நாம் சொல்வதைச் சொல்ல வேண்டும். இல்லை குறுக்கிட வேண்டும் என்றால் ஒரு சாரி சொல்லிட்டு ....ஒரு இதுவும் ஒரு பெர்சனாலிட்டி டெவலப்மென்ட். மிகவும் அவசியமான ஒன்று. உங்கள் அலுவலக இந்த நபரை போன்று பார்த்திருக்கிறேன் அனுபவமும் உண்டு.!!

    நிஜமாகவே உங்களுக்குப் பொறுமைதான். உங்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளுக்கு நடுவே இதுவும்......என்ன சொல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. பழகி விட்ட தொல்லைகளில் ஒன்று! ஆனால் அவர் என்னைக் குறை சொல்வார்! வாங்க கீதா...

      நீக்கு
  31. பழைய புத்தகத்திலிருந்து இந்த படத்தை எடுத்து பேஸ்புக்கில் இப்படி எழுதி பகிர்ந்திருந்தேன்.//

    என் மனதுள் எழுந்தது எல்லாம் பெரும்பாலும் அங்க வந்திருச்சே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலதுக்கு சிரித்துவிட்டேன்...

      கீதா

      நீக்கு
    2. ஓரளவு இனி எதுவும் டயலாக் யோசிக்க முடியாதோ என்று யோசிக்கும்போதே அவ்வளவு கமெண்ட்ஸ் வந்தன.

      நீக்கு
  32. அது கே ஆர் விஜயாவே இதைச் சொல்லியிருக்கிறாரா அல்லது படம் மட்டும் போட்டு தினமலர் தொகுத்துச் சொல்லியிருப்பதா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் நான் செலெக்ட் செய்தேன்.  டாக்டர் கே ஆர் விஜயா என்று நான் தலைப்பிட்டதால்!  அவர் சொல்லி இருப்பதை தினமலர் வேறெங்கிலிருந்தோ எடுத்து போட்டிருக்கிறது.

      நீக்கு
  33. ஜோக்ஸ் ரசித்தேன்...அதுலயும் "நான் சாதாரண நிகழ்ச்சிகளைப் படமெடுப்பதில்லை'' - ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அப்போதே அப்படி யோசித்திருக்கிறார்.  அப்போதே அந்த அளவு இருந்திருக்கிறது!

      நீக்கு
  34. கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம். உங்கள் மனத்தின் வெளிப்பாடு! போன பதிவில் உள்ள போனா கேள்விகள் பயமுறுத்தும்னு வெளிய நின்னீங்க இப்ப ஓட்டம் ஓடுறீங்க!!!

    எங்கே நிம்மதி எங்கே நிம்மதி!! அந்த இடத்தைத் தேடி ஓடுறீங்க....!

    உங்க பின்னாடிதான் நானும் ஓடி வந்துட்டுருக்கேன்!! ஹாஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ப்ளீஸ் கொஞ்சம் காது கொடுங்க..' என்று பின்னாலேயே ஓடி வருகிறீர்களோ...!

      நீக்கு
  35. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்

    பதிலளிநீக்கு
  36. ஆபீஸ் வேலைகளுடன் மேலாளர் தலையிடி வேறு.

    மதன் ஜோக்ஸ் ரசனை.

    பாட்டி அம்மா 'நீ சுடு முன் நானே சுட்டுவிடுவேன்' என்ற வீரா வேசத்தில் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  37. ‘காது கொடுக்காத’ மனிதர்கள் பலர் உண்டு. கவிதை நன்று. சுவாரஸ்யமான தொகுப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!