Lata Mangeskar : கடந்த ஞாயிறு (06-02-2022) காலமான இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார். இவர் 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். தந்தை பண்டிட் தீனாந்த் மங்கேஷ்கர் மராத்தி இசைக்கலைஞர், அம்மா குஜராத்தி. இந்தியாவின் மற்றொரு இனிய பாடகி ஆஷா போஸ்லே, லதாவின் சகோதரி தான்.
பாடத் தொடங்கியது:
1942 ஆம் ஆண்டு சினிமாவில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் வறுமையில் வாடியது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது லதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
1955-ம் ஆண்டு திலீப் குமாரின் நடிப்பில் ‘உடன் கடோலா’ என்ற இந்திப் படம் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 9 பாடல்களையும், லதா மங்கேஷ்கரும், முகமது ரஃபியும் பாடியிருந்தார்கள். பின்னர் இந்தப் படம் ‘வான ரதம்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இதில் ’எந்தன் கண்ணாளன்’ பாடலை கம்பதாசன் வரிகளில் பாடினார் லதா. பாடலுக்கு இசை நவ்ஷத்.
வெள்ளித்திரை இலக்கிய பிம்பங்கள் (KGG)
கம்பராமாயணம் : (இராமனின் மேனி அழகு)
பாடல் : 1081.
தோள் கண்டார். தோளே கண்டார்.
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்;
தடக் கை கண்டாரும். அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே.
வடிவினை முடியக்கண்டார்?-
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்.
தோள் கண்டார் தோளே கண்டார்- (அங்குள்ள மகளிருள்) இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டுகளித்து முடியாமையால் அதனால் பிற உறுப்புக்களின் அழகைப் பார்க்க இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்ட வண்ணம் இருந்தார்கள்;
தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் - வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள் போன்ற (இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு பார்க்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்;
தடக்கை கண்டாரும் அஃதே - (அவனது) பெரிய திருக்கரங்களின் அழகைப் பார்த்தவர்களும் அவ்வாறே (பிற நோக்காது) அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்;
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் - ஆகவே. வாள் போன்ற கண்களையுடைய பெண்டிருள் இராமனது திருமேனியழகினை முழுவதும் பார்த்தவர்கள் யாவர் உள்ளனர் (ஒருவருமில்லை) ;
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்- (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள். பிறசமயங்கள் கூறும் இறை வடிவங்களை நோக்காது. தம் வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல இராமனைக் காண வந்த மகளிர் (அப்பெருமானின்) உறுப்புக்கள் பலவும் நோக்காது ஓர் உறுப்பின் அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர்.
-- -- --
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
ஆண்டு: 1965
அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் எல்லா நாட்களும்
ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
இறைவன் அருள்.
எல்லோரும் இனிது வாழ அவனருள் வேண்டுவோம்.
நீக்குவாங்க வல்லிம்மா வணக்கமும் நன்றியும்.
நீக்குலதாஜிக்கு அன்பின் அஞ்சலிகள்.
பதிலளிநீக்குஇந்தக் குரலுக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறோம்.
அழகாக அவர் சரித்திரம் சொல்லி இருக்கிறீர்கள்.
பாடல்களும் அருமை.
தமிழில் அவர் குரல் இன்னும் அருமை.
மஹா வரப்ரசாதமாக அவருக்கு இந்த வாய்ப்பு அமையப் பெற்றவர்.
பூர்வ ஜன்ம சுகிர்தம் என்பார்கள்.
மிக நன்றி ஸ்ரீராம்.
நன்றி.
நீக்குநன்றி வல்லிம்மா.
நீக்குஓஹோ!!!
நீக்குபதிவிட்டது கௌதமன் ஜி தான்.
நன்றி மிக நன்றி ஜி.
வெள்ளி ஸ்ரீராம் ஸ்பெஷல் என்று
கவனிக்காமல் சொல்லிவிட்டேன். இருவருக்கும்
பாராட்டுகள்.
கீதாவும் நானும் ஒரே சம்யம் மதுரையில் இருந்திருக்கிறோம்.
சந்திக்காமல் போய்விட்டோம்.!!!!
ம்ம்ம்ம், ஆமாம், ஆனால் நான் அப்போல்லாம் பசுமலைப்பக்கம் வந்ததில்லை. டிவிஎஸ் நகரோடு சரி. எப்போவானும் திருப்பரங்குன்றம் கிரிவலம். :))))
நீக்குசுத்தானந்தரும் அந்தச் சமயம் அங்கே தான் பசுமலை ஆசிரமத்தில் இருந்திருக்கார்.
நீக்குதிரு கேஜிஜி அவர்களின் இலக்கிய காட்சி மிக அருமை.
பதிலளிநீக்குராமபிரானை நேரில் பார்க்க வைத்துவிடுவார் எங்கள்
பேராசிரியை செல்வி அ. இந்திரா.
மனத்தில் பதிந்த மாவீரனை மணந்த அன்னை சீதாவின் பாக்கியம் தான் என்ன.!!
மிதிலாபுரி மக்களின் புண்ணியம் தான்
எப்படிப்பட்டது.
நடந்து வரும் தாமரைத் தடாகம், தாமரைக் காடு
என்று வர்ணிப்பார்கள்.
கம்பனுக்கு சொல் அருளிய தேவி,
நம்மையும் ராமபிரானை அவர் வழியே காட்டுகிறாள்.
மனம் நிறை நன்றி ஜி.
ரசிப்புக்கும், தகவல்களுக்கும் நன்றி.
நீக்கு''ஆன் '' படம் இந்தியில் மிகப் பிரசித்தம்.
பதிலளிநீக்குவானரதம் பாடலும் அருமை. மனதை உருக்கும்
விதமாக அப்போது ஒலிக்கும்
''எந்தன் கண்ணாளன்''
இப்பொழுதுதான் காணொளியாகப் பார்க்கிறேன்.
கம்பதாசன் வரிகள் உயிரோடு காதுகளில்
பாய்கின்றது.
நதியும், ஓடங்களும் இடம் பெறும் பாடல்கள்
நெஞ்சுக்கு மிக இதம்.
அப்படியே இந்தி வடிவம் மாறாமல்
பாடல்வரிகள் அமைந்திருப்பது மிக அழகு.
நன்றி ஸ்ரீராம்.
நன்றி.
நீக்குதேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய்
பதிலளிநீக்குசெவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன்''
இலக்கிய வரிகள்.
''கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது''
மொத்தப்பாடலும் மொத்தமும் இனிமை.
இசைக்கும் குரல்கள் பிபி ஸ்ரீனிவாசும்,
பின் தொடரும் சுசீலா அம்மாவின் ஹம்மிங்க் கும்
மனதை நிறைத்த நாட்கள் மதுரை நாட்கள்.
இதயக்கமலம், மதுரை "நியூ" சினிமாவில் ஓடிக் கொண்டிருந்தது. ரவிச்சந்திரன். கே.ஆர்.விஜயா அப்போல்லாம் பிரபலமான ஜோடி. ஜெய்சங்கர், எல்.விஜயலக்ஷ்மி போல!
நீக்கு// தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய்
நீக்குசெவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன்''// எனக்கும் பிடித்த வரிகள்.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கிப் பிரச்னைகள் குறையப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபானுமதியை எங்கே சில நாட்களாகக் காணவில்லை?
பிரார்த்திப்போம். பா வெ மத்யமரில் பிசியாக உள்ளார்.
நீக்குஅட! என்னைக் கூட தேடுகிறார்களே!!!
நீக்குஇங்கே என் மகள் வீடு மாற்றம் போவதால் அதிகப்படி வேலை, தவிர நேற்று இந்த ஏரியாவில் நெட்வொர்க் டவுன் அதனால் செல்ஃபோன் இருந்தும் பயனில்லை.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தேடமாட்டோமா என்ன? நான் மத்யமரில் கூட உங்களைப் பார்க்கலை. அல்லது உங்க பதிவுகள் என் டைம்லைனில் தெரியலை. :)
நீக்குலதா மங்கேஷ்கர் இத்தனை வருடங்கள் இருந்து இசைக்கான சேவையைத் திறம்படச் செய்து விட்டார். நன்றாகப் பாடத்தெரிந்தவர்களே ஈசனுக்கு மிக அருகே இருந்து தொண்டாற்றுவதாக எனக்குத் தோன்றும்.
பதிலளிநீக்குஆம், உண்மைதான்.
நீக்குமதுரை மணி ஐயர் வீட்டுக்கு ஒருமுறை காஞ்சி சங்கராச்சாரியார் சென்ற போது கூறிய அருளாசி வார்த்தைகள் ஞாபகத்திற்கு வருகிறது.
நீக்குஆமாம்,நினைவுக்கு வருது.
நீக்குஇதயக்கமலம் பாடல் அந்த நாட்களில் மிகவும் பிடித்த பாடல். வானொலியில் இந்தப் பாடல் போடும்போதெல்லாம் பக்கத்து வீட்டில் ரேடியோவைப் பெரிசாக வைக்கச் சொல்லிக் கேட்டுப்பேன். :))))
பதிலளிநீக்குநான் படித்த பாலிடெக்னிக்கில் 'ஆத்மநாதன்' என்றொரு எலக்டிரிக்கல் டிபார்ட்மெண்ட் லெக்சரர். பாடம் நடத்தும்போது பக்கத்து கல்யாண வீட்டிலிருந்து 'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல ' என்ற இதய கமலம் பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், " Beautiful song. Let us listen to it fully and then continue our lesson for today " என்று சொல்லி, வகுப்பில் இருந்தவர் எல்லோருடனும் சேர்ந்து பாடலை ரசித்துக் கேட்டார்.
நீக்குகேஜிஜியின் இலக்கிய ஒப்புமை மிகவும் அருமை. ராமாயணத்திலிருந்தும் மற்ற பண்டைய இலக்கியங்களிலும் பாடலை ரசிப்பது போல் அவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்துத் திரைப்படப் பாடல்களையும் கேட்க வைப்பது சிறப்பது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசிறப்பானது/ "சிறப்பது" எனத் தவறாக வந்திருக்கு. :)
பதிலளிநீக்குபரவாயில்லை. புரிந்துகொண்டோம்.
நீக்குஇனிமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குஎந்தன் கண்ணாளன்
பதிலளிநீக்குகரை மீது போகிறான்...
- பாடலை இப்போது தழ்ன் பார்க்கின்றேன்...
இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல்.
லதா அவர்களின் ஆன்மா இறை நிழலில் அமைதியுறட்டும்..
__/\__
நீக்குஆராரோ.. ஆராரோ..
பதிலளிநீக்குஇந்தப் பாடல் காட்சியையும் இப்போது தான் பார்க்கிறேன்..
இசை எல்லா
துன்பங்களையும் ஆற்றும்..
காலம் எல்லா வருத்தங்களையும் மாற்றும்..
// இசை எல்லா
நீக்குதுன்பங்களையும் ஆற்றும்..
காலம் எல்லா வருத்தங்களையும் மாற்றும்..// உண்மை.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவானத்தில் உலாவி -- மகிழ்ந்து -- கீழே வரும் வேளையில் --- கடைசியில் கம்பரசம் என்னும் கழனிப் பானையைக் கொண்டு வந்து !!!
நீக்குதேடி வந்த திங்கள்
நீக்குதிங்களில் செவ்வாய்
செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி..
அப்போதெல்லாம் தமிழ்ப் பாட புத்தகத்தில் கம்ப ராமாயண பாடல் பகுதி இடம் பெற்றிருக்கும்...
தமிழ் எனும் அமுதின் மீது ஆர்வம் மீதூறுவதற்கு இப்படிப் பட்ட திரைப் பாடல்களும் காரணம்..
சக்ரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து - என, (1968/69) படித்து மகிழ்ந்த அதெல்லாம் ஒரு பொற்காலம்..
கம்ப ரசம் படித்ததும் அப்போது தான்...
அஞ்சலி
பதிலளிநீக்கு__/\__
நீக்குஇதயக் கமலம்..
பதிலளிநீக்குபடப் பாடல்கள் அனைத்தும்
காலத்தை வென்று நிலைத்திருக்கும் வரத்தினைப் பெற்றவை..
மலர்கள் நனைந்தன
பனியாலே
என் மனதும் குளிர்ந்தது
நினைவாலே..
பொழுதும் விடிந்தது
கதிராலே - சுகம்
பொங்கி எழுந்தது
நினைவாலே...
இந்தப் பாடலுக்கு இணையாக இன்றைய டகர டப்பாக்களின் ஏதாவது ஒரு வரியைச் சொல்ல முடியுமா?..
கஷ்டம்தான்.
நீக்குசேர்ந்து மகிழ்ந்து போராடி
பதிலளிநீக்குதலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி..
- அப்போது புரியாத வரிகள்..
கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும்.. வெல்லும்!..
- என்றால் சும்மாவா!?..
அதானே!
நீக்கு@ கௌதமன்..
பதிலளிநீக்கு// கடைசியில் கம்பரசம் எனும் கழனிப் பானையைக் கொண்டு வந்து !.. //
களவும் கற்று மற.. - என்றார் ஔவையார்..
அதை படிக்கப் போய்த் தானே
இலக்கியங்களின் அருமையும் பெருமையும் தெரிய வந்தது!..
:)))
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பதிவு அருமை. திருமதி லதா மங்கேஷ்கர் பற்றிய தொகுப்பு அருமை. அவரின் நல்ல குரல் வளம் என்றும் நம் நினைவில் நிற்கும். அவர் பாடிய பாடல்களை கேட்கிறேன்.
சகோதரர் கௌதமன் அவர்களின் இலக்கிய ரசனை விமர்சன வரிகள் இராமாயண காலத்திற்கே அழைத்துச் சென்றது. அழகு என்ற வார்த்தைக்கு அர்த்தமே ராமன்தானே..! அந்த அழகான ராமனை மனக் கண்ணால் தரிசித்து ஆனந்தமடைந்தேன்.
அதற்குப் பொருத்தமான இதய கமலம் படப் பாடல் இனிமை. அந்தப் படத்தில் பிற பாடல்களும் நன்றாக இருக்கும், கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்/மகிழ்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்கு@ கௌதமன்..
பதிலளிநீக்கு//கடைசியில் கழனிப் பானையைக் கொண்டு வந்து !.. //
நல்ல வேளை...
கழு நீர்ப் பானைக்குள் கையை விடவில்லை.. நாற்றம் அதிகமாக இருந்ததால் பானையை அப்போதே போட்டு உடைத்தாயிற்று..
:)
:)))
நீக்குகழு நீர் என்ற வார்த்தை ரொம்ப சகஜமாக இலக்கியங்களில் வருவது.
நீக்குபுள் இரியப் பொங்கு
கயல்வெருவப் பூங்குவளைக்
கள் இரியச் செங்கழுனீர்
கால் சிதையத் துள்ளி..
காஞ்சிபுரத்தில் செங்கழு நீர் ஓடைத் தெரு என்றே தெரு ஒன்று உண்டு.
ஒரு வகை குவளைப்பூ/செவ்வாம்பல் எனப்படுவது உண்டு. செங்கழுநீர் ஒரே வார்த்தை. செங்கழு நீர் இல்லை.
நீக்குகொடி வகையில் பூக்கும் பூக்கள்.
நீக்குயாரும் மறக்க இயலாத பாடகி.
பதிலளிநீக்குஇன்றைய பாடலும் நன்று.
நன்றி.
நீக்குஇலக்கியப் பாடல்கள் வெள்ளித்திரையில் பகுதி நன்றாக உள்ளது. இது போன்று எத்தனை தங்கப் புதையல்களோ? மிக்க நன்றி, மகிழ்ச்சி.
பதிலளிநீக்குJayakumar
மிக்க நன்றி, மகிழ்ச்சி.
நீக்குஅத்திக்காய், காய் பாடலும் ஏதோ ஒரு சங்கப்பாடலை ஒத்திருக்கும் என்பார்கள்.
நீக்குவிடியற்காலையில் இருந்து இங்கு மழை பெய்து கொண்டு இருக்கின்றது..
பதிலளிநீக்குஇங்கேயும் அக்ஷதை போலத் தூற்றல். வானம் இன்று கண் திறக்கவே இல்லை.
நீக்குதூற்றல் - தூறல்
நீக்குஉண்மை. இதுவே தூற்றுதல் எனில் அர்த்தமே மாறிவிடும். சொல் வழக்கில் தூற்றல்/தூத்தல் என்போரும் உண்டு.
நீக்குதிருமதி லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு அஞ்சலி.
பதிலளிநீக்குஇனிய பாடல்கள்.
அவர் திருமதி இல்லை. செல்வி.
நீக்குஇலக்கிய பிம்பங்கள் என்றால்?..
பதிலளிநீக்குஅபுரி.
அசல் அல்ல - அசலின் பிம்பம்.
நீக்குஅப்போ கண்ணதாசனின் அந்த பாடலே சொந்த சரக்கில்லை என்ற
நீக்குஅர்த்தமா?
-- அட ராமா!
எடுத்தாளுதல்கள் இலக்கிய புலமையின் அடையாளம்!
குயுக்தியா யோசிக்கிறீங்க!! பிம்பம் என்றால், ஏதோ ஒன்றின் பிரதிபலிப்பு. பாடலின் சில வரிகள், இலக்கியத்தின் ஒரு சிறு துண்டை பிரதிபலிக்கிறது. அவ்வளவுதான்.
நீக்குஅசல் அல்ல என்று நீங்கள் சொன்னதினால் தான்.
நீக்குஅசல் அல்லாதது போலி.
பிம்ப்ம் என்பதற்கு அதற்கான அசல் இருக்க வேண்டும்.
நீக்குஹி ஹி நான் இலக்கணம், இலக்கியம் எல்லாவற்றிலும் ஃபெயில் மார்க்தான் எப்பவும். அதனால் மன்னிச்சு விட்டுடுங்க.
நீக்குகண்ணதாசனுக்கும் இதெல்லாம் புதுசல்ல.
நீக்குஅவர் காலத்தில் கரீம் என்பவர் தமிழ் சினிமா என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் இலக்கிய திருட்டு என்ற தலைப்பில் இந்த மாதிரி வாராவாரம் எழுதி வருவார். கட்டுரையின் இறுதிப் பகுதியில் கவிஞர் தூக்குமாட்டிக் கொள்வரா என்று முடிப்பார்.
இலக்கியங்களில் காணப்படும் அருமைகளை எடுத்தாண்டு அதன் தொடர்பாக தன் சிந்தனையை ஓட்டுவது திருட்டு அல்ல என்று தெரியாது அவருக்கு. பாவம்.
அது பிம்பமும் அல்ல. சில அருமையான இலக்கிய வரிகள் நமக்குக் கிளர்ர்தும் தொடர் சிந்தனை அது.
இந்த வரியிலிருந்து இதை நான் எடுத்துக் கொண்டேன் என்று மறைக்காது நமக்கும் தெரியப்படுத்திய துணிச்சல் மிக்கக் குழந்தை மனம் கொண்டவராய் இருந்தவர் கண்ணதாசன்.
தோள் கண்டேன் தோளே கண்டேன்
பதிலளிநீக்குசரி...
தோளிலிரு கிளிகள் கண்டேன் --
என்றது தான் கண்ணதாசனின் முத்திரை!
ரசம் என்றால் ரசம்.
விரசம் என்றால் விரசம்.
அவரவர் மனப்போக்குப்படி..
அவரவர் மனப்போக்குப்படி.
நீக்குகௌ அண்ணா திரைப்படப் பாடல்கள், இலக்கியம் என்று டாக்டரேட் வாங்கிடுவீங்க போல!!! ஆராய்சி அருமை. அழகாகப் பொருத்தமான பாடல்.
பதிலளிநீக்குலதா மங்கேஷ்கர் அவர்களுக்கு அஞ்சலிகள்!
கீதா
நன்றி.
நீக்குலதாமங்கேஷ்கர் அவர்களின் இசை இறைவனை ஆராதிக்கட்டும்!
பதிலளிநீக்குபாடல்கள் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன். நன்றாக இருக்கின்றன. வெள்ளித்திரை இலக்கியப் பகுதி சிறப்பாக இருக்கிறது. கம்பராமாயணப்பாடலைச் சொல்லி திரைப்படப் பாடலைச் சொன்னதும் கேட்டிராத பாடல்!
துளசிதரன்
நன்றி.
நீக்குநல்லதொரு பாடகி. அவரது குரல் என்றென்றும் நிலைத்திருக்கும்.
பதிலளிநீக்கு"உரன் கடோலா’ - உடன் கடோலா.... இந்த ஹிந்தி வார்த்தைக்கு Flying machine என்ற அர்த்தம். பல இடங்களில் இருக்கும் Ropeway ஹிந்தியில் உடன் கடோலா என்று அழைக்கப்படுகிறது.
தகவலுக்கு நன்றி.
நீக்குலதா மங்கேஷ்கரின் பாடல்கள் அவ்வளவாக கேட்டதில்லை. எனவே அவருடைய மறைவு பெரிதாக பாதிக்கவில்லை. லதா மங்கேஷ்கர் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது மீரா பஜன்ஸ். அப்போதெல்லாம் விவிதபாரதியில் காலை 7:30க்கு சங்கீத் சரிதா வில் வரும்.
பதிலளிநீக்குஇதயக்கமலம் பாடலும் சரி, அதன் மூலமான ராமாயண பாடலும் சரி இனிமை. இ.க.வில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅவருக்கும் முன்னால் சுமன் கல்யாண்பூர் என்பவர். மிக இனிமையான பாடல்கள். எனக்கும் அவ்வளவாகப் பாதிப்பு இல்லை. வயதாகிக் கஷ்டப்படாமல் போய்ச் சேர்ந்தார்களே என்பது தான் என் கருத்து. மீரா பஜன் என்றால் எனக்கெல்லாம் எம்.எஸ். அம்மா தான்.
நீக்கு