சாதாரண அடை தான். அதிலே இளம் கொட்டை எனப்படும் பிஞ்சுப் பறங்கிக் கொட்டையை நறுக்கிச் சேர்த்து வார்த்தால் தேங்காய்க்கீற்றுகள் போலவாசனையாகவும் ருசியாகவும் இருக்கும்.
இது அடிக்கடி எங்க வீட்டில் உண்டு இதைத் தவிரவும் வாழைப்பூ, முருங்கை இலை, கீரை வகைகள், வெந்தயக்கீரை, சி.வெ. போன்றவையும் போடுவது உண்டு. அந்த நேரத்தில் எது கிடைக்குதோ அது!கீழே செய்முறைகள் கொடுத்திருக்கேன். யாரும் உதவிக்கு இல்லை. தி/கீதா எப்படியோ எல்லோரையும் செய்யச் சொல்லி வேலை வாங்கிடறாங்க. நமக்கு வேலை வாங்கற சமத்து எல்லாம் இல்லை. ஆகவே நானே செய்தது தான் எல்லாமும்!அடைக்குத் தேவையான சாமான்கள்: பச்சரிசி அரைக்கிண்ணம், புழுங்கலரிசி ஒன்றரைக்கிண்ணம். பலரும் பச்சரிசியிலேயே அடை செய்யறாங்க. ஆனால் நான் புழுங்கலரிசி சேர்ப்பேன். ஏகாதசின்னா அன்னிக்குப் பச்சரிசி அடை!
துவரம்பருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு அரைக்கிண்ணம், உளுத்தம்பருப்பு ஒரு கரண்டி, கறுப்பு உளுந்து இருந்தால் தோலோடு போடவும்.
மி.வத்தல் நான்கு, பச்சை மிளகாய் இரண்டு, உப்பு, பெருங்காயம்
அதில் பருப்புச் சேர்த்தாச்சு. பருப்புச் சேர்த்து அரைத்த கலவை கீழே!
என்னது 6 மணி ஆயிட்டும் ஆள் யாரும் வரலை. நான் 8 மணிக்கு தான் டிபன் சாப்பிடுவேன், அப்போ சாப்பிட்டுக்கிறேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம்: இப்படி செய்தால் என்ன?
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வார திங்கள், செவ்வாய், சனி, ஞாயிறு பதிவுகள் எழுதுபவர் யார் என்றும் தலைப்பு என்ன என்றும் ஒரு சிறு முன்னறிவிப்பு தரலாமே?
Jayakumar
அது என்னவோ சஸ்பென்ஸ் போயிடும்னு எனக்குத் தோணும்..
நீக்குநாளை யாருடைய பதிவு வருகிறது, என்ன டாபிக் என்பதைக்கூட எழுதிடக்கூடாது. அன்றன்றைக்குப் பார்த்துக்கொள்வதுதான் சரியாக இருக்கும்னு நினைக்கிறேன்.
நீக்குஎன்ன பெரிய்ய்ய ரகசியம்? எங்களுக்குத் தெரியாதா என்ன?
நீக்குஎன்ன கோயில்னு கூடத் தெரியும்.
நீக்குஹாஹாஹா, இன்னிக்கு என்னோட பதிவு போணி ஆகாதுனு நினைச்சேன். போகட்டும். என்னோட பதிவிலே படிச்சிருப்பாங்க. அதோட அடை ஒண்ணும் புதுசு இல்லையே!
பதிலளிநீக்குஅச்சச்சோ... பழைய அடையையா கொடுத்திருக்கீங்க?!
நீக்குசில சமயங்கள் நானும் "திங்க"ற பதிவு யாருனு கேட்டுப்பேன். நேத்திக்குத் தெரியும் என்பதால் கேட்கலை.
பதிலளிநீக்குஅவரவருக்குத் தெரியும்தானே, ஆனாலும் போன வாரம் உங்களுக்கே சஸ்பென்ஸ் ஆயிடுச்சே..
நீக்குஹா ஹா ஹா. அது சரி.. "கொஞ்சும் சலங்கை" படப்பாடல் இந்த தடவை எனக்கும் போலிருக்கிறது.:))
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கப்பதிவாக தங்களின் பறங்கி காய் அடை நன்றாக வந்துள்ளது. படங்களும், செய்முறை பக்குவங்களும் மிக அருமையாக உள்ளது. கடைசி படம் மொறுமொறுவென அடை பார்க்க அற்புதமாக உள்ளது.
அடை எங்கள் வீட்டில் அனைவருக்குமே மிகவும் பிடித்தமானது. இந்த மாதிரி பறங்கி சேர்த்து இதுவரை பண்ணியதில்லை. பாக்கி நீங்கள் சொன்னது போல் சேர்த்திருக்கிறேன் . இதையும் ஒரு தடவை சேர்த்து செய்து பார்க்கிறேன். அருமையான பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். அம்பேரிக்கா போன்ற சில நாடுகளீல் நேற்றில் இருந்து நேரம் பின்னால் போயிருக்கு. நேர சேமிப்பு என்பார்கள். நம்ம நாட்டில் அப்படி எல்லாம் இல்லை.
பதிலளிநீக்குவடகிழக்கு மாநிலங்களில் காலை சீக்கிரமாய் விடிந்து மாலை நான்கு மணிக்கெல்லாம் நன்கு இருட்டி விடும். ஆகவே நமக்கும் அவங்களுக்கும் கூட நேர வித்தியாசம் இருக்குமோனு நினைச்சுப்பேன்.
பதிலளிநீக்குஇப்போ இங்க விடிவதும் கொஞ்சம் தாமதம், மாலை சீக்கிரம் இருட்டிவிடுகிறது. நாளின் எந்தப் பகுதியிலும் நடக்க சுகமாக இருக்கு
நீக்குதலைப்பைப் படித்ததும், இரண்டு நாட்களுக்கு முன்னர், பரங்கிக்காய் வாங்கிவரும்படி மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது. இன்று வாங்கணும். ஆன்டாக்சைடாம். உடம்புக்கு நல்லதாம். சின்ன வயதில், பரங்கிக்காய் பால்கூட்டோ கரேமதோ.. இனிப்பாப வெல்லம் போட்டுச் செய்வார்கள். எனக்குப் பிடிக்கும். அதை, சிவப்பு மிளகாய் தாளிக்காமல் பண்ணச் சொல்லணும்.
பதிலளிநீக்குபரங்கி அடை செய்முறை நன்றாக இருக்கு. பரங்கி போட்டுச் செய்ததில்லை.
பதிலளிநீக்குஇப்போல்லாம் அடைனா, மி பொடி போட்டுக்கணுமே, ஒத்துக்க மாட்டேங்குதே என்பதால் பண்ணச் சொல்வது குறைவு
ஸ்டெப் பை ஸ்டெப் நன்றாகப் படம் எடுத்திருக்கிறீர்கள். இதுவே போண்டா என்றால், எண்ணெயில் கருகிவிடுமோ என்ற பயத்தில் இலுப்புச் சட்டியோடு படங்கள் எடுக்கும்போது கைகள் நர்த்தனம் ஆடியிருக்கும். ஹாஹாஹா
பதிலளிநீக்குநான் பருப்பு பெருங்காயம் தனியாக அரைப்பேன். அரிசி உப்பு மிளகாய் தனியாக அரைப்பேன். கருவேப்பிலை தனியாக அரைத்து மூன்றையும் கலப்பேன். இனி இப்படிச் செய்துபார்க்கிறேன்.
பதிலளிநீக்குசெய்முறையோடு படங்கள் போட்டு அசத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவாழிய நலம்..
திங்க"க்கிழமை : பரங்கிக்காய் அடை... ஒவ்வொரு நிலையிலும் நிதானமாக எடுக்கப்பட்ட படங்கள்..
பதிலளிநீக்குஅடைப் பதிவுக்கு மேலும் சுவையூட்டுகின்றன..
சுவையான பரங்கி அடை. அருமையான விளக்கம். நான் துருவி சேர்த்துக்குவேன். பச்சையான பரங்கிக்காய் பார்த்து அதிக நாட்களாகி விட்டன. மார்கழியில் பச்சை பரங்கிக்காய் கிடைக்கும் இல்லையா? பரங்கிக்கொட்டை என்பது பிஞ்சு பரங்கிக்காயா?
பதிலளிநீக்குஒன்று சாப்பிட்டாலே போதும் போல...!
பதிலளிநீக்குமுட்டைக்கோஸ் பொடியாக நறுக்கி போட்டு செய்தாலும் மிகவும் நன்றாக இருக்கும் பெருஞ்சீரகக்கீரை கர்நாடகாவில் மிகவும் பெயர் போனது அதுவும் இந்த அடையில் மிகவும் நன்றாக இருக்கும் உடம்பிற்கு நல்லது இந்த கதை எல்லாம் எதற்கு உங்களுடைய பதிவை பார்த்து தொடர்கிறது எனது எண்ணம் மிகவும் நன்றாக இருக்கிறது பரங்கிக்காய் அடை அன்புடன்
பதிலளிநீக்குநாங்களும் நாலரை மணி நேர வித்தியாசத்தில் இருக்கிறோம் அன்புடன்
பதிலளிநீக்குபரங்கிக்காய் அடை நன்றாக இருக்கிறது. சுரைக்காய், பரங்கிக்காய் எல்லாம் துருவி போட்டு செய்து இருக்கிறேன். இப்படி தேங்காய் பல் போல நறுக்கிப் போட்டு செய்தது இல்லை.
பதிலளிநீக்குபடங்களுடன் அடை செய்முறை நன்றாக இருக்கிறது.
அடை செய்முறை படங்கள் நன்று.
பதிலளிநீக்கு