கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு - JC
பாண்டன்பறம்பத்து கோடன் பரணி உப்பு மாங்காய்
முன்னுரை
பறம்பு : தோட்டம், வீடு. கோடன்: கோணல். பரணி: ஜாடி. உப்பு மாங்காய் : மாங்காய் ஊறுகாய்.
இக்கதை அச்சில் வெளிவந்தது 100 ஆண்டுகளுக்கு முன் (1900-1907) என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.
பாண்டன் தோட்டம் வீட்டில் கோணல் வாய் ஜாடியில் மாங்காய் ஊறுகாய்.
இந்த மாங்காய் ஊறுகாய் பிரசித்தமானது என்றாலும் இதற்கு அத்தகைய தனி ருசி உண்டாகக் காரணம் அந்த பரணி என்பது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே அந்த பரணியின் கதையை கீழே விவரிக்கிறேன்.
பாண்டன் பரம்பத்து பட்டதிரியுடைய இல்லம் பிரிட்டிஷ் பிரதேசத்தில் இருந்தது. தற்காலம் அங்கு சாமான்ய செழிப்பு உண்டெங்கிலும், ஒரு காலத்தில் அங்கு பெரும் தரித்திரம் நிலவியது. தினப்படி சாப்பாட்டிற்கு போலும் ஒன்றும் இல்லாமல் கஷ்டப்பட்ட காலம் அது.
ஒரு சீனாக்காரன், மரக்கலத்தில் பண்டங்கள் கொண்டு சென்று பிற தேசங்களில் வியாபாரம் செய்பவன், ஒரு கப்பலில் தன்னுடைய விலை மதிப்புள்ள பண்டங்களை விற்பனைக்காகக் கொண்டு செல்லும் போது கப்பல் உடைந்து கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த பலரும் நீந்தியும், தோணிகளிலும், உடைந்த கப்பலின் பலகைகளின் துணையுடனும் கரையை அடைந்தனர். அவ்வாறே இச்சீனத்துக்காரனும் ஒரு தோணியில் கையில் கிடைத்த பத்து பரணிகளை எடுத்துக் கொண்டு ஒரு விதம் கரையை அடைந்தான். அவன் கரை ஏறிய இடத்துக்கு அருகில் பாண்டன் பறம்பு இல்லம் இருந்தது.
பாண்டன் பரம்பை அடைந்த சீனாக்காரன் “இங்கு யார் உள்ளார்” என்று கூப்பிட்டான். சீனாக்காரன் கூவல் கேட்டு இல்லத்து பட்டதிரி வெளியே வந்தார். அப்போது சீனாக்கார வியாபாரி “நான் சீன தேசத்து வியாபாரி. நான் பயணம் செய்த கப்பல் இங்கு கடலில் மூழ்கி விட்டது. கூட இருந்த வேலைக்காரர்களும் இறந்து விட்டனர். பசி என்னை மிகவும் வாட்டுகிறது. ஆகவே உண்பதற்கு ஏதாவது கிடைக்குமானால் நலம்” என்று கூறினான்.
அச்சமயம் பட்டதிரியின் அந்தர்ஜனம் வீட்டில் கடைசியாக இருந்த இரண்டு நாழி அரிசி எடுத்து கஞ்சி வைத்துக் கொண்டிருந்தார். பட்டதிரி உள்ளே சென்று அக்கஞ்சியை எடுத்து வந்து சீனாக்காரனுக்கு தந்தார்.
சீனாக்காரன் கஞ்சி குடித்து தெம்படைந்தான். “தாங்கள் கொடுத்த கஞ்சியால் என் உயிர் பிழைத்தது. ஆயுள் உள்ளவரை இந்த உபகாரத்தை மறக்க மாட்டேன். இதற்கு தக்க பிரதிபலன் தற்போது தர இயலவில்லை என்றாலும் ஸ்வதேசம் சென்று திரும்பி வர முடியுமானால் பிரதி உபகாரம் கட்டாயம் செய்வேன். எனக்கு ஒரு உதவி கூட செய்ய வேண்டும். என்னுடைய பண்டங்கள் எல்லாம் நஷ்டப்பட்டு போய் விட்டன. எஞ்சியது இந்தப் பத்து பரணிகள் மாத்திரமே. இவற்றை வைத்திருந்து நான் திரும்பி வரும்போது தர வேண்டும்.” என்றும் கூறினான்.
அதற்கு பட்டதிரி “ இல்லத்தில் இடம் குறைவு. ஆயினும் இருக்கும் இடத்தில இந்த பரணிகளை வைத்துக் கொள்ளலாம். ஆட்சேபனையில்லை. பரணியில் விலை மதிப்புள்ள ஏதேனும் பண்டங்கள் இருந்தால் அதன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை. திருடர் பயமும் உண்டு. அப்படியானால் இங்கு வைக்க வேண்டாம். “
வியாபாரி: “விலை உயர்ந்த பண்டம் இல்லை. உள்ளது துவரம் பருப்பு.”
பட்டதிரி : “அப்படியானால் சரி. வைக்கலாம்.”
உடன் சீன வியாபாரி பரணிகள் பத்தையும் வாயை அடைத்து கட்டி முத்திரை வைத்து வீட்டுப் புரையில் கொண்டு வைத்தான். பட்டதிரியிடம் விடை பெற்று தன் வழியே சென்றான்.
பட்டதிரி குடும்ப தரித்திரம் தொடர்ந்தது. சில நாட்கள் சென்றபின் ஒரு நாள் உண்பதற்கு ஒன்றும் இல்லாமல் குடும்பம் பட்டினியில் வாடியது. குழந்தைகள் பசியால் அழுதனர்.
அப்போது அந்தர்ஜனம் “சீனாக்காரன் பரணியில் உள்ளது துவரம்பருப்பு என்றல்லவா சொன்னான். நமக்கு பரணியில் இருந்து கொஞ்சம் பருப்பு எடுத்து சமைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். நமக்கு சாப்பிட ஒன்றும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றும் அறியாத இப்பிள்ளைகளின் பசியாற்ற முடியாதது மிக்க விசனமாக இருக்கிறது. நேரமோ 10 நாழிகை ஆகிவிட்டது.” என்று சொன்னார்.
பட்டதிரி “சொன்னது எல்லாம் சரிதான். எனக்கும் பசி பொறுக்க முடியவில்லை. உனக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். என்றாலும் வேறு ஒருவர் நம்மை நம்பி பாதுகாப்பாக வைத்திருக்கக் கொடுத்த பண்டம், அவருடைய அனுமதி இல்லாமல் எடுப்பது சரியல்ல. இறந்தாலும் நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது அல்லவா?” என்றார்.
அந்தர்ஜனம் “இக்குழந்தைகளின் உயிரைக் காக்க நாம் கொஞ்சம் பருப்பு எடுப்பது பாபம் ஆகாது. கடன் போல் எடுக்கலாம். அந்த வியாபாரி திரும்பி வருமுன் எப்படியாவது பருப்பு வாங்கி நிறைத்துவிடலாம். அவ்வாறு முடியா விட்டாலும் நம்முடைய கஷ்டங்களை அவன் அறிந்ததால் விரோதம் கொள்ள மாட்டான். அவனும் ஒரு மனிதன் தானே. பசியின் கொடுமை அவனும் அறிந்தது தானே” என்று சொன்னார்.
இவ்வாறு வாக்கு வாதம் கொஞ்சம் முடிந்த பின் பட்டதிரி புரையில் இருந்து ஒரு பரணி எடுத்து முத்திரை நீக்கி பரணியில் இருந்து கொஞ்சம் பருப்பு எடுத்தார். அவ்வாறு எடுத்தது பருப்பு மாத்திரம் அல்ல என்று தோன்றவே கொஞ்சம் வெளிச்சத்தில் கொண்டு போய் பார்த்தார். அப்போது பருப்பு மாத்திரம் அல்ல, பருப்பு போன்ற தங்க காசுகளும் இருந்ததைக் கண்டார். ஒரு விளக்கேற்றி பரணியை பரிசோதித்த போது பரணியில் பருப்பு போன்ற தங்க காசுகள் நிரப்பி மேலே துவரம் பருப்பையும் கொஞ்சம் நிரப்பி உள்ளதைக் கண்டார். பத்து பரணிகளையும் பரிசோதித்தபோது எல்லாம் அது போன்றே இருந்தன. ஒன்பது பரணிகளையும் பழையபடி வாயை அடைத்து முத்திரை இட்டு வைத்துவிட்டு பத்தாவது பரணியில் இருந்து ஒரு பவுன் எடுத்து கொண்டு போய் விற்று அரிசியும் மற்றும் மளிகை பொருட்களும் வாங்கி வந்தார். அந்தர்ஜனம் சாப்பாடு சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்து பின்னர் தாமும் உண்டார்.
இவ்வாறு கொஞ்சம் நாள் சென்றபின் பட்டதிரி “நம்பிக்கை துரோகம் எவ்வாறோ நடந்து விட்டது. இனியும் நாம் தரித்திர வாசிகளாக இருப்பதில் பிரயோஜனமில்லை. ஆகவே இனி நாம் நன்றாக வாழ வழி நோக்க வேண்டும். வியாபாரி வருவதற்கு தாமதம் ஆகலாம். ஆகவே அவன் வருவதற்கு முன் எல்லாம் பழையபடி சரியாக்கி வைக்கலாம்” என்று எண்ணினார்.
பரணியில் இருந்து கொஞ்சம் பவுன் எடுத்து ஒரு அழகான எட்டு கட்டு மாளிகை கட்டினார்.
பின்னர் பல வயல், தோப்பு முதலியவற்றையும் வாங்கினார். அவ்வாறு அவர் ஒரு பெரிய தனவான் ஆகிவிட்டார்.
சொத்துக்களில் இருந்தது வரும் வருமானம் அவருடைய மாதாந்திர செலவுகள் போக வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் மிச்சம் தந்தது. அந்த மிச்சத்தில் தங்கக் காசுகள் வாங்கி பரணியை நிறைத்தார். எட்டு வருடத்தில் பரணியை நிறைத்து முன்னிருந்த மாதிரி அடைத்து முத்திரையிட்டு வைத்தார். அந்த பரணிகளை போன்று பத்து சின்ன சீன பரணிகளையும் வாங்கினார். அவற்றிலும் தங்க நாணயங்கள் நிறைத்தார்.
வியாபாரி பரணிகள் வைத்து விட்டு போய் பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.
அப்போது பட்டதிரி மாளிகையில் இருந்தார். விளி கேட்டு வந்து பார்த்தபோது விளித்தது பரணிகள் வைத்து விட்டுப் போன சீனத்து வியாபாரி தான் என்று கண்டார். மரியாதை செய்து அவரை உள்ளே அழைத்து வந்து ஆசனம் தந்து காரியங்கள் எல்லாம் விசாரித்தார். பின்னர் வியாபாரிக்கும் அவருடன் கூட வந்த மற்றவர்களுக்கும் ஒரு நல்ல விருந்தும் கொடுத்து உபசரித்தார்.
அவ்வாறு சிரமபரிகாரம் செய்த பின் பட்டதிரி “நான் உங்களுடைய அனுமதி இல்லாமல் நீங்கள் இங்கு வைத்த பரணியில் இருந்து கொஞ்சம் நிதி எடுத்து உபயோகித்து விட்டேன். அது தரித்திரத்தினால் ஏற்பட்ட நிர்பந்தம் தான். இச்செய்கை நியாமானதல்ல என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆகவே என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இதோ தங்களுடைய முதல், வட்டி சகிதம் உங்களுக்காக காத்திருக்கிறது” என்று கூறி வியாபாரியின் பத்து பரணிகளையும் மற்றும் அவற்றுடன் வட்டியாக காசுகள் நிறைத்த பத்து சின்ன பரணிகளையும் கொண்டு வந்து வியாபாரியின் முன்பு வைத்தார்.
அதற்கு வியாபாரி “நான் பத்து பரணிகள் மாத்திரமே வைத்தேன். இந்த சின்ன பரணிகள் என்னுடையதல்ல. இவற்றை ஏன் கொண்டு வந்து வைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டான்.
பட்டதிரி : “நீங்கள் பரணிகளைக் கொண்டு வந்து வைத்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. அதனால் எடுத்த முதலுக்கு அரைப்பங்கு வட்டி தர வேண்டியது அவசியம் அல்லவா?”
வியாபாரி : “பாதுகாக்கத் தந்த முதலை பாதுகாத்ததற்கு நான் அல்லவா கூலி தரவேண்டும். ஆகவே நான் வட்டி என்று எதுவும் வாங்குதல் நியாயமில்லை. எனக்கு வட்டி வேண்டாம்”
பட்டதிரி : “தற்போது எனக்கு எல்லாச் செலவும் போக வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் மிச்சம் கிடைக்கிறது. இங்கு காணும் எல்லா சொத்துக்களும் , இந்த மாளிகை, வயல், தோட்டம் உட்பட எல்லாம் உங்களுடைய முதல் கொண்டு உண்டானவையே. ஆகவே பிராயச்சித்தம் என்ற நிலையிலாவது இந்த சின்ன பரணிகளையும் சுவீகரிக்க வேண்டும். நிராகரித்தால் என் மனம் சங்கடப்படும்.”
வியாபாரி : “நான் இங்கு வைத்த பரணிகள் பத்தும் வைத்தது போல் சரியாக இருக்கின்றன. எனக்கு ஒரு நஷ்டமும் உண்டாகவில்லை. தங்களுக்கு கொஞ்சம் சம்பாத்தியம் உண்டானது தங்களுடைய பாக்கியமும், முயற்சியும் கொண்டு மாத்திரம் என்று சொல்லலாம். இங்கு அவ்வாறு உண்டான சொத்துக்கள் எல்லாம் தங்களுடைய சொந்த செல்வம் ஆகும். ஆகவே அந்த ‘ ப்ரம்மஸ்வம் ’ சொத்தை நான் ஒரு போதும் கைப்பற்ற மாட்டேன். இப்படி ‘ப்ரம்மஸ்வம்’ சுவீகரித்தால் என்னுடைய வியாபாரம் நசிந்து போகும். ஆகவே அது எனக்கு வேண்டாம்.”
இவ்வாறு அவர்கள் பரஸ்பரம் வாதித்து கடைசி தீர்மானம் என்ற முறையில் பட்டதிரி சின்ன பரணிகளை உள்ளே கொண்டு வைத்தார். அதன் பின்னர் அந்த வியாபாரி
பூ, பழம், வெற்றிலை, பாக்கு ஒரு தட்டில் வைத்து பிராமண தானமாக ஒரு பரணியை பட்டதிரிக்குக் கொடுத்தான். பட்டதிரி மறுத்தாலும் கடைசியில் வியாபாரியின் நிர்பந்தத்திற்கு
வழங்கி தானத்தை ஏற்றார்.
அந்த பரணி தான் கோடன் பரணி (கோணல் வாயுள்ள
பரணி).
தானம் செய்த பின்பு வியாபாரி “உத்தம பிராமணரே, இந்த பரணியின் வாய் கோணல் என்றாலும் நிறைய ஐஸ்வர்யமும் , விசேஷமும் உள்ளதாகும். இந்த பரணி இருக்கிற இடத்தில் தரித்திரம் ஒருக்காலும் உண்டாகாது. அது மாத்திரம் அல்ல. இதில் மாங்காய் ஊறுகாய் (வடு மாங்காய்? ஆவக்காய்?) இட்டால் ஊறுகாய் மறக்க முடியாத ருசியுடன் இருக்கும்.” என்று கூறி விடை பெற்று மற்ற ஒன்பது பரணிகளையும் எடுத்துக்கொண்டு கப்பலுக்குச் சென்றான்.
பட்டதிரி கோடன் பரணியில் இருந்த செல்வங்களை வேறு ஒரு பரணியில் மாற்றி இட்டு அதையும் மற்ற பத்து சின்ன பரணிகளையும் சேர்த்து ஆக பதினொன்று பரணிகளையும் மாளிகையின் நிலவறையில் கொண்டு வைத்தார். அப்பரணிகள் தற்போதும் அந்நிலவறையில் உள்ளன என்று கேள்வி.
பின்னர் ஆண்டுதோறும் கோடன் பரணியில் மாங்காய் ஊறுகாய் போடுதல் அவர்களுடைய வழக்கமாகியது. அந்த பரணியில் இருக்கும் ஊறுகாய் எத்தனை நாள் கழிந்தாலும் மாங்காயின் நிறம் மாறாமல் பசுமையாக இருக்கும். அதே போல் அந்த ஊறுகாயின் ருசியை விவரிப்பது கடினம். நாக்கு ருசி மரத்து, ஆகாரம் உண்ணாமல் இருப்பவர்களும் இந்த ஊறுகாய் துண்டு இருந்தால் போதும், மூன்று நாழி சோறு உண்டு தீர்ப்பர். அப்படிப்பட்ட ருசி அந்த ஊறுகாய்க்கு. இந்த மாங்காய் ஊறுகாய் பற்றி வேறு ஒரு கதையும் உண்டு. அது கீழே.
கொல்ல வருடம் தொள்ளாயிரத்து பதிமூன்றாம் ஆண்டு (தற்போது நடப்பது 1198) அன்றைய மஹாராஜா முறை ஜெபம் கூட்டினார். (முறை ஜபம் சுட்டி :
அந்த முறை ஜெபத்தில் கூடிய நம்பூதிரிமார் அத்தாழம் (இரவு சாப்பாடு) உண்டு கொண்டிருக்கும்போது ஒரு நம்பூதிரி அடுத்துள்ள நம்பூதிரியோடு “எடோ, அத்தாழம் கேமம் (மிகச் சிறப்பு ) அல்லே?” "இது போல் மற்றொரு விருந்து கிடைப்பது கடினம் தான். அப்படித்தானே?” என்று சொன்னார். அதைக்கேட்ட மற்ற நம்பூதிரி ”அப்படிதான், அப்படித்தான், ஆனால் பாண்டம் பரம்பத்து கோடன் பரணி உப்பு மாங்காய் ஒரு துண்டு இருந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். அந்த ஒரு குறைதான்.” என்று உரைத்தார்.
அச்சமயம் திருமனசு (மஹாராஜா) அது வழி கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் செல்வதை இவர்கள் காணவில்லை. இந்த பேச்சு மகாராஜாவின் காதுகளில் விழுந்தது. மஹாராஜா இவ்வாறு கூறிய நம்பூதிரி யார் என்றும் விசாரித்து அறிந்தார்.
இவ்வாறாகக் கோடன் பரணியில் மாங்காய் ஊறுகாய் பிரசித்தி பரவியது.. அந்த மாங்காய் ஊறுகாயை ஒரு தடவை ருசி பார்த்தால் அந்த ருசி எப்போதும் நினைவில் நிற்கும்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி ஸார் வாங்க..
நீக்குசெவ்வாய் எழுத்தாளர்களின் சுய படைப்புகளை வரவேற்று
பதிலளிநீக்குமகிழ்ச்சியுடன் வெளியிடும் நாள். கொஞ்சம் கொஞ்சமாக சில ஆண்டுகளு
கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டாண்டு கால வழக்கங்கள் மாறி வரும் போக்கு கவலை அளிக்கிறது. சுய எழுத்து முயற்சிகளுக்கு தட்டுபாடா தெரியவில்லை. எபி ஆசிரியர் குழு உண்மை நிலையைச் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.
பதிலளிநீக்குசுய படைப்புகளும் வருகின்றனதானே? மறக்கவியலா சிறுகதையும் மொழிபெயர்ப்பும் கூட வந்திருக்கின்றன. நான் சிலமுறை பழைய எழுத்தாளர்களின் கதையை டைப்பி வெளியிட்டிருக்கிறேன்.
நீக்குஇருந்தாலும்,
ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் சொந்தமாக கதைகள் எழுதி அனுப்பினால் மகிழ்வேன். எல்லோருமே ரசிப்பார்கள்.
சுயமாகவும் நான் படிச்ச கதைக்காகவும் ஏராளமாகப் படிக்கும் அவரால் முடியாததா என்ன!
ஆமாம், ஸ்ரீராம். நீங்கள் சொல்வது சரியே.
நீக்குசரியாகச் சொல்ல வேண்டுமானால் சனிக்கிழமை வெளிவரும் 'நான் படிச்ச .......' செவ்வாய்க்கிழமை பகுதியை ஆக்கிரமிச்சிருக்கு. மறுபடியும் வரப்போகிற சனிக்கிழமையும் இந்த சங்குண்ணி சமாச்சாரம் தானா என்றால் சலித்து விடும். அதனால் அடுத்து வரும் சனிக்கிழமைக்கு தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நல்லதொரு படைப்பை வாசித்து நம்மிடம் பகிர்ந்து கொள்ள ஜேஸி சாரிடம் விண்ணப்பம் வைப்போம்.
பதிலளிநீக்குஏன்.. ஜீவி சாரே தன் படைப்புகளை அனுப்பலாமே...
நீக்கு//அடுத்து வரும் சனிக்கிழமைக்கு தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நல்லதொரு// சென்ற சனியன்று வந்த கு.ப.ரா. கதை சிறந்த தமிழ் எழுத்தாளரின் கதை தானே?
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வாழ்க.. வாங்க துரை செல்வராஜு ஸார்... வணக்கம்.
நீக்குகேட்டு வாங்கிப் போட்ட கதைப் பகுதி - கடந்த சில மாதங்களாகத் தான் சிறப்பாக இருக்கின்றது..
பதிலளிநீக்குஆஹா... நன்றி.
நீக்குஉள்ளூர் மங்குணியை விட -
பதிலளிநீக்குவெளியூர் சங்குண்ணிகள் எவ்வளவோ மேல்!..
எபி மலையாளப் பதிப்பிற்கு அச்சாரம் போடுகிறீர்களா, என்ன?
நீக்குஹா.. ஹா.. ஹா.. ஜீவி ஸார்... துரை அண்ணன் "சென்றிடுவீர் எட்டுத் திக்கும்... கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்கிறார்.
நீக்குஅதற்கு சனிக்கிழமையின் கதவுகள் தாம் விரியத் திறந்திருக்கிறதே?
நீக்குகேட்டு வாங்கியதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுதோ கேட்காமலேயே மடியில் விழும் மாங்கனிகளாய் கிடைக்கிறது. மாந்தோட்டத்தையே குத்தகைக்கு எடுத்திருக்கும் உங்களுக்குத் தெரிந்தது தானே, தம்பீ? புதுசு ஒன்றுமில்லையே.
பதிலளிநீக்குஉண்மை... உண்மை.
நீக்குஅதை ஏன் அண்ணா கேட்கின்றீர்கள்!..
நீக்குஒரு யோசனை. செவ்வாய்க் கிழமை கதைப்பகுதிக்கு மேட்டர் கிடைப்பதில் சுணக்கம் என்றால் இந்தப் பகுதிக்கு இது வரை எழுதிய எத்தனையோ எழுத்தாளர்களிடம் விண்ணப்பம் வைக்கலாம்.
பதிலளிநீக்குரிஷபன் ஸாரிடமிருந்து ஆரம்பித்து...
அவர் ரொம்ப பிஸி ஸார். பேஸ்புக்கில் அவர் வெளியிடும் கதைகளை எடுத்து இங்கு போடலாம் - அவர் அனுமதியோட
நீக்குரிஷபன் முகநூலில் வெளியிடுபவை எல்லாமே மீள் பதிவு/பகிர்வு. பெரும்பாலான கதைகள் வாராந்தரிகள் வெளி வந்தவை. இங்கே மறு பதிப்புச் செய்கிறார். எல்லாமே நன்றாக இருக்கும். அதிலும் இன்று ஒரு கதை படிச்சேன். ரொம்ப அருமைனு சொன்னால் அது வெறும் வார்த்தை.
நீக்குகத்திக்கப்பல் - அலமு ?
நீக்குநானும் படித்தேன்.
நீக்குyesssu. yessoo yessu!
நீக்குஇன்றைய கதை நன்றாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குபுதிய பிரதேசத்தின் அன்றைய கலாச்சாரத்தை அறிகிறோம்.
இருந்தாலும், நல்லா இருக்கோ, சொதப்பலா இருக்கோ... செவ்வாயில் சொந்தமாக எழுதிய கதை சிறப்பளிக்கும் என்பது என் அபிப்ராயம். தழுவலாக இருந்தாலும் தவறில்லை
எதைச் செய்தால் சரியாக இருக்கும் என்பது எபி ஆ.கு.க்குத் தான் தெரியும். உண்மை நிலவரங்களைத் தெரிந்தவர்கள். நாங்கள் விருப்பங்களை வரிசை படுத்தும் 'நம்ம விட்டு' வாசகர்கள்.
பதிலளிநீக்கு//ஹா.. ஹா.. ஹா.. ஜீவி ஸார்... துரை அண்ணன் "சென்றிடுவீர் எட்டுத் திக்கும்... கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்கிறார்.//
பதிலளிநீக்குவெளியூர் பசுவுக்கு ஊட்டுவதற்கு முன்பாக
உள்ளூர் காக்கைகளுக்கு இன்னொரு வாய் உண்ணக் கொடுங்கள்..
- என்கின்றேன்!..
உள்ளூர் காக்கைகள் வீட்டைச் சுற்றிக் கொண்டு கிடப்பவை..
பதிலளிநீக்குஅதனால் அவற்றின் மகத்துவம் தெரிய வில்லையோ!..
அதற்குத் தான் பரம்பு மலை உதாரணத்தை சமீபத்தில் சொன்னேன்.
நீக்கு@ ஜீவி அண்ணா
பதிலளிநீக்கு//செவ்வாய் எழுத்தாளர்களின் சுய படைப்புகளை வரவேற்று..//
அதெல்லாம் அந்தக் காலம்..
தற்சமயம்
சற்றே விலகி இரும் பிள்ளாய்!..
முன்பேயும் சிலமுறை இந்த பிரஸ்தாபங்கள் வந்திருக்கின்றன. சங்கடமாகவும் இருக்கிறது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. நெருங்கியவர்கள் மனம் வருத்தப்படும் போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. முதலில் இருந்த புரிதல் இப்போது சற்றே விலகி இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய முடியும் என்று கூடிய மட்டும் விரைவில் பார்க்கிறேன்.
நீக்குஎத்தனை வருத்தங்கள், பாருங்கள். ஜெஸி ஸார் சமீபத்தில் வருத்தப்படிருந்தாரே பார்த்தீர்களோ?
நீக்குஅவர் பட்ட வருத்ததை
நானும் பட்டிருக்கிறேன். அதனால் அந்த வருத்தம் எனக்கும் உடன்பாடே
.
இதைப்பற்றி எழுத நினைக்கிறேன். இனி யார் வந்து இதைப் படிக்கப்போகிறார்கள் என நினைத்ததால் எழுதவில்லை. வாய்க்கும் சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
நீக்குஜீவி அண்ணா அவர்களுக்கு விருப்பம் இருந்தால் - வருக..
பதிலளிநீக்குஎனது தளத்தில் விரிவுரை என்றொரு கதை (சம்பவம்) வெளியாகியிருக்கின்றது..
என்னைப் பொறுத்தவரை திரு ஜேகே அவர்கள் அளிக்கும் மலையாள மொழிபெயர்ப்புக் கதைகள் புதுமையானதாகவும் அருமையாகவும் சுவாரசியமாகவும் உள்ளன. இப்படியும் ஒரு எழுத்து இருக்கு என்பதையே அவர் மூலம் தான் அறிய முடிந்தது. எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது நல்லது தானே? இதைத் தவிரவும் திரு ஜேகே அவர்கள் சனிக்கிழமைகளில் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களின் கதைகளைச் சுட்டியோடு பகிர்ந்து கொள்கிறார். எல்லாமே எஸ்ரா தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகளுக்குள் வருபவை. மாற்றி மாற்றி வந்தால்/வருவதால் படிப்பதில் ஆர்வமும் கூடுகிறது. வித்தியாசமான இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇருக்கும் பிள்ளாய் என்பதே சரி. சில நாட்களில் விலகல் விகலும்.
பதிலளிநீக்குஅவசரம் என்றால் கைகொடுக்கும்
ஆபத்துதவிகள் நம்மில் நிறைய.
சட்டென்று பா.வெ. என் நினைவுக்கு வருகிறார்.
அவர் போன்ற கதைகள் எழுதத் தெரிந்தவர்கள்
இதையெல்லாம் வாசித்தாலே உதவுவார்கள்.
* சில நாட்களில் விலகல் விலகும். ஆபத்துமாகிக் கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஉள்ளூர் காக்கை ஓயாமல் சத்தம் போடக் கூடாது!..
பதிலளிநீக்குஹாஹாஹா... அர்த்தமுள்ள கருத்து
நீக்குநல்ல கதை...
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கிறது. கோணல் வாயுள்ள பரணியின் விளக்கமும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு"மாதா ஊட்டா சோறை மாங்காய் ஊட்டும்" என்பார்கள்.
மாங்காய் கதை நன்றாக இருக்கிறது.
இன்றைய கதை அருமை! கோடன் பரணி மாங்காய் ஊறுகாய் ருசிக்க ஆவல் எழுகிறது!
பதிலளிநீக்குஊறுகாய் விற்பன்னர்கள் யாரும் "ஊறுகாய்க்கு ஜாடி தேவை. ஜாடியில் இருக்கும் ஊறுகாய் தான் சுவை மிகுந்தது, அகிலும் காயும் ஜாடியும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருக்க வேண்டும். " என்று இதுவரை பின்னூட்டம் எழுதவில்லையே ஏன்?
பதிலளிநீக்குJayakumar
எங்க வீட்டிலே எல்லாம் ஊறுகாய்க்குக் கல்சட்டி தான் பயன்படுத்தினோம். பீங்கான் கிண்ணங்கள் அப்போதெல்லாம் வெண்மையான நிறத்தில் விளிம்பில் வேறு வண்ண பார்டரோடு கிடைக்கும். அதில் குமுட்டியில் வெந்நீர் போட்டுக் காஃபிக்கு ஃபில்டரில் ஊற்றியது உண்டு. தேநீர் தயாரித்தது உண்டு. அந்தச் சுவையும் மணமும் இப்போ இல்லை.
நீக்குகதை சுவாரஸ்யமாக இருந்தது.
பதிலளிநீக்குகோடன் பரணி மாங்காய் ருஜியோ ருசி அருமையான கதை அன்புடன்
பதிலளிநீக்குகதை நன்று
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகோடன் பரணி மாங்காய் ஊறுகாய் கதை மிகவும் நன்றாக உள்ளது. அத்தனைப் செல்வங்கள் வந்த பின்னும், பட்டத்திரிக்கும், அந்த வியாபாரிக்கு உள்ள நேர்மை, களங்கமில்லாத நல்ல உள்ளம், சத்தியமான குணநலன்கள் படிக்கும் போதே மனதுக்கு திருப்தியாக உள்ளது. அந்த நல்ல உள்ளம் காரணமாக அந்த மாங்காயும் மணம் வீசி கெடாமல் வாழ்ந்திருந்து புகழை அடைந்து அவருக்கும் புகழ் ஈட்டி தந்திருக்கிறது. இப்படியான கதைகளை படிக்கும் போது மனதுக்கு உற்சாகமாகவும், திருப்தியாகவும் உள்ளது. கதை பகிர்வுக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எபியை புதிது புதிதான பகுதியில் அறிமுகப்படுத்த முடியுமா பாருங்கள். ரிஷபன் ஸார் மாதிரி செவ்வாய் பகுதியை முக நூலில் பகிர்ந்து புது வாசகர் மத்தியில் உலா விடுங்கள். வாலாயமாய் வாசிக்கிற வாசகர் மத்தியில் புதிது புதிதாய் வாசகர்கள் வந்து பின்னூட்டமிட்டால் அது புதுவிதமான ரசனைகளை எபிக்கு அறிமுகப்படுத்தும்.
பதிலளிநீக்குசெவ்வாய்ப் பதிவு மட்டுமில்லை; எல்லா தினத்துப் பதிவுகளையும் திரு கௌதமன் தவறாமல் முகநூலில் பகிர்ந்து வருகிறார் பல நாட்கள்/வருஷங்கள் என்று சொல்லலாமோ?
நீக்குஎனக்கு ஜேசி அவர்களின் கதை மொழி பெயர்ப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது. சொந்தப் படைப்பாக இல்லாதது குறை அல்ல. யாரோ ஒருவரது சொந்தப் படைப்புதானே.
பதிலளிநீக்குபின்னூட்டங்களுக்கு மறுமொழி கொடுக்காதது என்னவோபோல் இருக்கிறது. ஶ்ரீராமாவது பதிலளித்திருக்கலாம்.
பதிலளிநீக்குபின்னூட்டங்கள் சுவாரசியமாயும் கேள்விகளை எழுப்பக்கூடியதாயும் இருப்பதால் சொன்னேன்.
பதிலளிநீக்கு