திடீர் பானி பூரி
வீட்டிலேயே பானி பூரி செய்வது எப்படி.?
ஜெயகுமார் சந்திரசேகரன்
சூப்பர் மார்க்கெட்டிலோ அண்ணாச்சிக் கடையிலோ
வாங்கிக் கொள்ளுங்கள்.
செய்முறை விளக்கம் பின்புறம் உள்ளது
பொரித்த பூரிகள்
இனிப்புச் சட்னி
பானி
உருளைக் கிழங்கு
இல்லை. சுண்டல் சன்னா பிரீஸிரில் இருந்தது. கூடுதல் கொஞ்சம்
தக்காளி காரட் சேர்த்துக் கொண்டேன். ஒரு
பாக்கெட் இரண்டு பேருக்கு சரியாக இருந்தது.
பூரி யில் மேலே சிறிய ஓட்டை போட்டு உள்ளே கொஞ்சம் சுண்டல் சன்னாவை அடைத்து, கொஞ்சம் இனிப்புச் சட்னி விட்டு பின்னர் தாராளமாக பானி யில் முக்கியெடுத்தோ அல்லது ஊற்றியோ சாப்பிடலாம்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
வாழ்க.. வாழ்க..
நீக்குசிறப்பான திங்கட்கிழமை பதிவு..
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் பானி பூரியும் பிடிப்பதில்லை.
ஆச்சி நிறுவனத்தின் தயாரிப்புகளும் பிடிப்பதில்லை..
எனக்கும் சாட் ஐட்டங்கள் என்று சொல்லப்படும் இந்த ஐட்டங்கள் பிடிப்பதில்லை!
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குநானும் வெளியில் செல்லும் போது, பிளாட்பாரங்களில், இரு பக்கமும் குவிந்து கூட்டமாக சாப்பிடும் இந்த முறை உணவை சாப்பிட்டதில்லை. ஆனால் மகன் மருமகள், மகள் அனைவரும் இவைகளை சாப்பிடும் போது அருகில் நின்று வேடிக்கைப் பார்ப்பேன். அவர்களுக்கு இப்படி வீட்டிலேயே செய்து தரலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சாட் ஐட்டங்களில் பேல் பூரி பிடிக்கும். துபாயில் ஒரு தடவை தஹி பூரி சாப்பிட்டிருக்கிறேன். (Official lunchல் நான் சைவம் என்பதால்) மற்றபடி பல மசாலாக்கள் எனக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதால் நார்த் இன்டியன் சைட் டிஷ்ஷைக் கண்டாலே அச்சம்தான்.
நீக்குபானிபூரிக்கான பூரிகளை வீட்டிலே பொரித்து வைத்துக்கொள்வதே நல்லது. ஆனாலும் இது அத்தனை பிடிக்காது. பேல்பூரி அடிக்கடி வீட்டிலேயே பண்ணிடுவேன். அரிசிப் பொரியும் சன்னமான ஓமப்பொடியும் எப்போதுமே கைவசம் இருக்கும்.சட்னி வகையறாக்கள் சேர்க்காமல் "ஸூகா பேல்" கூடப் பண்ணிடலாம். அதிகம் மெனக்கெட்டுத் தயாரிக்க வேண்டாம்.
நீக்கு"ஆச்சி" தயாரிப்புகள் எதுவும்வாங்கினதே இல்லை. ஓர் அவசரத்திற்கு "சக்தி" தயாரிப்புகளில் மிளகாய்ப் பொடி மட்டும் எப்போதேனும் வாங்கிக் கொண்டிருந்தேன். ஜோதிஜி திருப்பூர் அதைப் பற்றிய விபரங்களை விரிவாக எழுதின பின்னர் வழக்கம் போல் சொந்தத் தயாரிப்பான மி.பொடிதான். மிளகாய்ப்பொடி எல்லாம் மிளகாய் வற்றல் வாங்கிக் காய வைத்து அரைத்து வைத்துக் கொள்வோம். எப்போதேனும் இந்தத் திடீர்த்தயாரிப்பில் சக்தி ப்ராண்ட் வாங்கினது அது கூட 100 கிராமுக்குள் தான். இப்போது நிறுத்தியாச்சு.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க.. பிரார்த்திப்போம்.
நீக்குஅடிப்படையான
பதிலளிநீக்குபூரி வீட்டிலேயே தயாரிக்கும் விதம்/ விவரம் தெரிந்தவர்கள் பதிவு செய்யலாமே!..
அதென்ன, கோதுமை மாவை பிசைந்து உருட்டி பொரித்து எடுக்க வேண்டியதுதானே..!
நீக்குபுளிச்ச தண்ணீர் பூரிக்கான கைப் பக்குவம் வேறு என்று நினைக்கிறேன்..
நீக்குஇல்லை. ரவை+மைதா+கோதுமை மாவு கலந்து பிசைந்து கொஞ்சம் ஊற வைத்துக்கொண்டு சின்னச் சின்ன பூரிகளாக இட்டுக்கொண்டு ஒரு முள்கரண்டியால் அதில் சில கட்டங்கள் அல்லது ஓட்டைகள் போட்டூ நன்கு மொறுமொறுவெனப் பொரித்து எடுக்க வேண்டும்.
நீக்குபுளித்த தண்ணீரெல்லாம் விடுவது இல்லை. புளியை எலுமிச்சை அளவு எடுத்துக்கரைத்துக் கொண்டு வடிகட்டி அந்த நீரில் உப்பு, மிளகாய்ப் பொடி போட்டுக் கொதிக்க விட்டுக்கொஞ்சம் குற்கும்போது வேண்டிய வெல்லத்தூளும் சேர்த்துக்குழம்பு பதத்துக்குக் கீழேஇறக்கி ஜீரகத்தை வெறும்வாணலியில் வறுத்துப் பொடி செய்து அதில் சேர்க்கணும். இந்தச் சட்னியை ஆறு மாதங்களுக்குக்குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். தேவைப்படும் எடுத்து கெட்டியாக வேண்டுமெனில் அப்படியே அல்லது நீர்க்க வேண்டுமெனில் நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.
நீக்குபச்சைச்ச ட்னி/புதினா+கொத்துமல்லி+பச்சை மிளகாய்+இஞ்சி+உப்பு+சின்ன உருண்டை புளீ வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு கெட்டியாகவே வைச்சுக்கலாம். ஒரு வாரம் இருக்கும். தேவைப்படும்போது எடுத்துக்கரைத்தோ அப்படியேவோ பயன்படுத்திக்கலாம்.
துரை அண்ணா நான் வீட்டில் செய்வ்துண்டு....இனி செய்யும் போது முடிந்தால் படம் எடுத்துப் போடுகிறேன். இருப்பதையே இன்னும் எபிக்கு அனுப்பவில்லை. 4,5 இருக்கின்றன படங்கள் மட்டும். செய்முறை எழுதவில்லை இன்னும்.
நீக்குரவை நிறைய கொஞ்சம் மைதா - இது பைண்டிங்கிற்கு, (கொஞ்சம் கார்ன்ஃப்ளார் இது சேர்த்தும் செய்யலாம் சேர்க்காமலும் செய்யலாம்) கொஞ்சம் பப்பட்கார் அல்லது சோடா உப்பு பூரி பலூன் போன்று உப்பி வருவதற்கு - நான் பல சமயம் இது கலக்காலமலேயே செய்வதுண்டு. சின்ன சைஸ் பூரிகளாகச் செய்து பொரிக்க வேண்டும்.
இங்கு சிரோட்டி ரவை கிடைப்பதால் அதில் மைதா கூடக் கலக்காமல் சிரோட்டி பொரிப்பதற்குப் பிசைவது போன்று பிசைந்து செய்தாலும் மிக நன்றாக வருகிறது.
கீதா
கீதாக்கா நீங்கள் சொல்லியிருக்கும் விதம் பாப்டி என்று நினைக்கிறேன். பாப்டிக்கு ரவை சேர்ப்பதில்லை மைதா. முள் கரண்டியால் குத்தினால் பூரி உப்பாதே. பானி பூரிக்கு உப்பினால்தானே நடுவில் ஓட்டை போட்டு உள்ளே ஸ்டஃப் செய்யும் சாமான் வைக்க முடியும்.
நீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.
நீக்குநலமா? எப்படியிருக்கிறீர்கள்? நீங்கள் வராமல் பதிவுகள் சோபிப்பதில்லை. வீட்டில் அனைவரும் நலமா? நீங்கள் வந்தது மகிழ்வாக உள்ளது. தொடர்ந்து பதிவுகளுக்கு வர வேண்டுகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் செய்முறையாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் தயாரிப்பில் பானி பூரி படங்களுடன் நன்றாக வந்துள்ளது. கூடுதலாக தக்காளி, கேரட் சேர்த்தால் மிகவும் சுவையாக.இருக்கும். அதுபோல் வித்தியாசமாக உ. கி பதிலாக சென்னா சுண்டல். இது போலவே செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு அவருக்கும், உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உருளைக்கிழங்கு வேக வைத்துத்துண்டங்கள்+கொகடலைச் சுண்டல். இரண்டுமே சேர்த்துப் போடலாம். முளை கட்டிய பயறும் சேர்க்கலாம்.
நீக்குஇன்றைய ரெசிபி பற்றிய பலவிதமான தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி. இதுவரை நான் இந்த மாதிரியெல்லாம் வீட்டில் செய்ததில்லை. இனி தங்கள் ஆலோசனைகளின்படி செய்து பார்க்கிறேன். நன்றி.
நீக்குஒரு சமயத்தில் இந்த புளிச்ச தண்ணி பூரி எனக்கும் பிடித்துத் தான் இருந்தது..
பதிலளிநீக்குஅதை தயாரிக்கும் முறை என்றொரு காணொளியைப் பார்த்ததில் இருந்து விலகி விட்டேன்..
வளைகுடா நாடுகளில் உணவின் தரத்துக்கு 100% உத்தரவாதம் உண்டு..
பதிலளிநீக்குவிற்பனைக்கான உணவுப் பொருட்கள் சரியில்லை என்று கண்டறியப் பட்டால் - அது உடனடியாக குப்பைத் தொட்டிக்குத் தான்..
மறுபேச்சுக்கு இடமின்றி உணவகம் இழுத்து மூடப்படும்.. குற்றத்தைப் பொறுத்து அதில் சம்பந்தப்பட்ட வர்கள் இருப்பதும் நாட்டை விட்டு விரட்டப்படுவதும் முடிவெடுக்கப்படும்..
உணவகத்தில் தொழிலாளர்களுக்கு பத்து மாதங்களுக்கு ஒருமுறை கட்டாய மருத்துவப் பரிசோதனை உண்டு.. தவறினால் சிறை தண்டனை..
இங்கெல்லாம் அப்படி இல்லையே!..
இந்த பூரி கோதுமை ரவையில் (பாம்பே ரவை) செய்யப்படுவது. கோல்கப்பா என்று பெயர். வீட்டில் செய்வது கடினம். இது மெஷினில் வடகம் போன்று ஒரே அளவில் உண்டாக்கப் படுகிறது. பாணி இல்லாமல் தயிர் விட்டு தஹி பூரி என்று சாப்பிடுவர். அது இன்னும் சுவையாக இருக்கும்.
பதிலளிநீக்குஇதில் இருக்கும் முக்கிய ஈர்ப்பு இனிப்பு, புளிப்பு, எரிப்பு, உப்பு என்ற சுவைகளை ஒன்றாக நாக்கில் படியவிட்டு ஒரு sting கொடுக்கும்.
Jayakumar
பாணி இல்லை, பானி! நீர் எனப் பொருள். இதில் சேர்க்கும் சட்னி வகைகள் நீர்க்க இருக்கும். தஹி பூரியிலும் மசாலாக்கள் இதே போல் சேர்த்த பின்னர் மேலே கெட்டித்தயிர் (ஏட்டை எடுக்காமல் இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்.) விட்டுக் கொடுப்பார்கள். கோதுமை ரவையில் எல்லாம் செய்வதில்லை. கோதுமை ரவை பெரும்பாலும் தலியா என்னும் கஞ்சி தயாரிப்புக்கும் சில சமயம் கிச்சடி செய்யவும், பெரும்பாலும் க்ஷீரா என்னப்படும் வெல்லம்+நெய் சேர்த்த பிரசாதம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
நீக்குஜெகே அண்ணா அது கோதுமை ரவை இல்லை.....
நீக்குகீதா
இதில் இருக்கும் முக்கிய ஈர்ப்பு இனிப்பு, புளிப்பு, எரிப்பு, உப்பு என்ற சுவைகளை ஒன்றாக நாக்கில் படியவிட்டு ஒரு sting கொடுக்கும். //
நீக்குஆம் அது கருப்பு உப்பு பயன்படுத்துவதால் தனி ஃப்ளேவர் வரும்.
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.
பதிலளிநீக்குதிரு ஜயக்குமார் அவர்களின் பானி பூரி
அருமையாக வந்திருக்கிறது. அவர் சொல்வது சரியே.
ரெடிமேட் பூரிகள் கிடைப்பதால், மற்றவை தயாரிப்பது
சுலபமாகிறது.
முன்பு போல ருசிக்க முடிவதில்லை,
சிறு வயதுக்காரகளும் ,குழந்தைகளும் மிக விரும்புவார்கள்.
பாக்கெட்டிலேயே 4 பொருட்கள் இருக்கும், அவற்றின் படம் விட்டு போய் விட்டது, அவையாவன. 1. பூரி 2. புதினா, கொத்தமல்லி சட்னி பவுடர், 3. பேரிச்சம் பழம் இனிப்பு புளி பேஸ்ட், மற்றும் 4. சாட் மசாலா.
நீக்குJayakumar
ஆமாம் அண்ணா ஹெச் டி எம் எல் செக் செய்தேன் இப்படம் மட்டும் அப் லோட் ஆகாமல் வெறும் கட்டமாக இருந்தது,
நீக்குஸ்ரீராமிற்குச் செய்தி அனுப்பியுள்ளே அவர் பிஸி என்று நினைக்கிறேன்
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குதிடீர் பானி பூரி கடைகள் இங்கு அதிகம் இருக்கிறது. எல்லா கடையிலும் கூட்டம் அலைமோதும்.
பதிலளிநீக்குவீட்டிலிலேயே செய்து சாப்பிடுவது நல்லதுதான்.
மருமகள், மகள் செய்வார்கள் சாப்பிட்டு இருக்கிறேன்.
செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது.
என் வீட்டில் அனைவருக்கும் பானி பூரி வகையறா மிகவும் பிடிக்கும். எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது.
பதிலளிநீக்குஆச்சி பிராண்டை நான் வெறுக்கிறேன். சக்தி அல்லது வடமாநில பிராண்டுகள்தாம் நான் உபயோகிப்பது.
எளிதான செய்முறை... வீட்டில் செய்து சாப்பிடலாம்...
பதிலளிநீக்குஎளிதான செய்முறை... வீட்டில் செய்து சாப்பிடலாம்...
பதிலளிநீக்குமிகவும் எளிமையானதாக இருக்கிறதே...
பதிலளிநீக்கு@ நெல்லை
பதிலளிநீக்கு// ஆச்சி பிராண்டை நான் வெறுக்கிறேன்..//
அருமை.. அருமை..
ஜெகே அண்ணா! அட உங்களிடம் இருந்தும் ஒரு திங்க பதிவு, நீங்களும் இனி எழுதலாமே. அதுவும் இப்போது நீங்கள் இருவர்மட்டுமே இல்லையா...அப்படிச் சிம்பிளாகச் செய்யும் சில உணவுவகைகளை இப்படி எழுதலாமே.
பதிலளிநீக்குசூப்பர். படங்களும் உள்ளே அடைக்கும் பதார்த்தங்களும் சூப்பர். அடி பொளி!!!
எனக்கு மிகவும் பிடிக்கும். சாட் எதுவும் வெளியில் சாப்பிடுவதில்லை வீட்டிலேயே தயாரித்து - பானி பூரிக்கான பூரி முதல் வீட்டிலேயே தயாரித்துச் செய்வதுண்டு.
படங்கள் மற்றும் ஷார்ட் அன்ட் ஸ்வீட்!!! ஒரு வரி விளக்கம் எல்லாம் நல்லாருக்கு.
கீதா
இங்கு பங்களூரில் கிடைக்கும் சிரோட்டி ரவையில் மைதா சேர்க்காமலேயே பூரி செய்வது நல்ல க்ரிஸ்பாக நன்றாக வருகிறது. பிசைந்து தேய்ப்பதில்தான் இருக்கிறது டெக்னிக்!
பதிலளிநீக்குகீதா
சென்ற வார ஞாயிறிலிருந்து வர நினைத்து டைம் ஷெட்யூல் செய்ய மிகவும் சிரமமாக இருப்பதால் செய்ய முடியாமல் இன்று இடையில் இறங்கியாச்சு. இனியும் தொடர்ந்து வர முடிகிறதா என்று முயற்சி செய்ய வேண்டும்...
பதிலளிநீக்குநெல்லை இரு விசாகப்பட்டினப் பதிவுகள் போட்டு முடித்த பிறகு மற்ற பதிவு போடுகிறேன். அது கோர்வையாக எழுத வேண்டுமே....சரியாக எழுத வேண்டுமே....எப்படியும் உங்களுக்கு 60 ஆவதற்குள் போட்டுவிடுவேன்!!!!!!!!!!!!!!!ஹிஹிஹிஹி.
"எனக்கு 60 ஆவதற்கு இன்னும் 59 வருடங்கள் 11 மாதங்கள் இருக்கு" என்று சொல்லக் கூடாதாக்கும்!!!!
கீதா
அருமை
பதிலளிநீக்குசாப்பிட்டிருக்கிறேன். இதில் சேர்ந்திருக்கும் சட்னி காரணமாக இருந்தால் எனக்குப் பிடிக்கும்.
பதிலளிநீக்கு